Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, June 1, 2009

எழுத்துப் பிறவி

னது ஹோண்டாய் அக்ஸண்ட் காரை மிகவேகமாக சாலையில் ஓடவிட்டான் திலீபன். “திலி என்ன அவசரம் உனக்கு” என்றால் அருகில் அமர்ந்திருந்த அவனது அலுவலகத் தோழி சரண்யா.

இருபத்தி ஐந்து வயது சுறுசுறுப்பான தேகம் கொண்ட இளைஞன் திலீபன். அவனைவிட இரண்டு வயது இளையவள் சரண்யா. இருவரிடமும் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. திலீபன் எங்கே சென்றாலும் அவனுடன் ஒட்டுக்கொண்டு வருவது சரோ என அழைக்கப்படும் சரண்யாவின் பழக்கங்களில் ஒன்று.


“சரோ உனக்கு தெரியாது என்னோட பிரச்சனை. தினமும் ராத்திரி தூங்க முடியறது இல்லை. காலையில ஆபீஸ் வந்தா பாஸ் ஓட பிரஷர். நான் நானாக இல்லை.”


“நீ சொல்லறது விசித்திரமா இருக்கு திலி. ஸ்டில் ஐ காண்ட் பிலீவ் இட்.”


“சொன்னால் புரியாது சரோ. கண்ணை மூடினால் எனக்கு போன ஜென்ம விஷயங்களா தெரியுது. எங்க அம்மா - எனக்கு குழந்தையா தெரியறாங்க. நம்ம பாஸ் போன ஜென்மத்தில் எனக்கு மனைவியா இருந்திருக்காரு. அவரை மனைவியா பார்க்கறதா இல்லை பாஸா பார்க்கறதானே குழப்பம். ஒரே நேரத்தில் ரெண்டு வாழ்க்கை வாழ முடியுமா சொல்லு?”


“திலி இந்த கம்யூட்டர் காலத்தில போன ஜென்மம் இந்த ஜென்மம் எல்லாம் நம்பிக்கிட்டு இருக்கியா?”


“எஸ்னு சொல்லறதை தவிர வேற விளக்கம் இல்லை சரோ. என்னை நம்பு. எனக்கே முழுசா ஒன்னும் தெரியல. முழுசா தெரிஞ்சுக்கத்தான் நானும் நீயும் அந்த சாமியாரோட ஆசிரமத்திற்கு போறோம்.”


பச்சை பட்டு விரித்த புல்வெளிகள் வரவேற்க அந்த ஆசிரமத்தில் நுழைந்தது கார்...நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்த ஆசிரமத்தின் நடுவே பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டிருந்தது.
கைகள் கூப்பிய நிலையில் பெரிய கட்-அவுட்டில் சாமியார் சிரித்துக்கொண்டிருந்தார்..

புத்த பிக்‌ஷு போல இருந்த ஒருவர் இன்முகத்துடன் கரம் குவித்து வரவேற்றார். அவரின் தோள்பட்டையில் “In Silence" என எழுதி இருந்தது. அனுமதி சீட்டை பார்த்ததும் மெல்ல பின்தொடருமாறு சைகை காட்டிவிட்டு முன்னே நடந்தார்.

பிரம்மாண்ட கதவுடன் கூடிய ஒரு கருங்கல் கட்டிடத்திற்கு அழைத்து சென்று ஒரு அறையில் அமர்த்தினார். சுவரில் வெண் தாடியுடன் ஆனந்த சிரிப்பில் சாமியாரின் தத்துவங்கள் எழுதிய புகைப்படங்கள் மாட்டப்படிருந்தது. சில மணித்துளிகள் இடைவெளியில் சிறிய சலசலப்பிற்கு இடையே படத்தில் இருந்தவர் ஒரு நீண்ட வெள்ளை தாடியுடன் தரையை உரசும் அங்கியுடன் உள்ளே வந்தார்.

இவர்கள் முன் அமர்ந்து கண்களை மூடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். திலீபனும் சரண்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
மெல்ல கண்களை திறந்து இருவரையும் ஆழமாகப் பார்த்துவிட்டு திலீபன் மேல் கண்களை நிலைபடுத்தினார்.

“தம்பி, போனஜென்ம விஷயங்களால மனசு ரொம்ப சஞ்சலப்படுதா?” என்றார்.


இருவரும் இதை சற்று எதிர்பார்க்கவில்லை. திலீபன் ஆமோதிப்பதை போல தலையாட்டினான்..


அவர் தொடர்ந்தார்...“தம்பி. எந்த ஒரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் இருக்கு இல்லையா. எப்பவோ ஒரு செயலை செஞ்சுருக்கீங்க இப்ப அது எதிர் செயலை செய்யுது. உன்னோட போன ஜென்ம கர்மாதான் உன்னை இப்படி சங்கடப்படுத்தும். ஏதோ நிராசை இருக்கு... ” என்றார் அமைதியாக.


“ஒன்னும் புரியலை சாமி. போன ஜென்ம விஷயங்கள் அறைகுறையாத்தான் தெரியுது. ஒருத்தரை பார்த்தா அவங்களுக்கும் எனக்கு போன ஜென்ம பந்தம் என்னானு புரியுது. ஆனா மேற்கொண்டு தெரிஞ்சுக்கிறதுக்குள்ள நிகழ்காலத்திற்கு வந்துடறேன். எனக்கு இதிலிருந்து விடுதலைகொடுங்க. பல நாட்களா இதில் சிக்கி இருக்கேன்.”


“கவலைப்படாதீங்க. உங்களோட ஜென்மாந்திர பந்தம் என்னானு தெரிஞ்சுக்குங்க அதை பூர்த்தி செஞ்சா போதும். நான் உங்களுக்காக ப்ரார்த்தனை செய்யறேன். என் தகப்பன் இருக்கான் அவன் பார்த்துப்பான்”


பொருமை இழந்தவளாக வேறு திசையில் பார்த்தாள் சரண்யா..


“ஏன்னம்மா என்ன ஆச்சு”?


“சாமி.. இந்த விஞ்ஞான காலத்தில இதெல்லாம் நம்ப முடியல. திலிக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுது? இது போன ஜென்ம சிக்கல் மாதிரி தெரியல மனநிலையில் ஏதோ பிரச்சனையோனு சந்தேகம்.”


“விஞ்ஞான கண்ணோட்டத்தில் இதை எல்லாம் நம்ம முடியாதுமா... மீன் குஞ்சுக்கு யார் நீந்த கத்துக்கொடுத்தா? ஆட்டுக்குட்டி பிறந்தவுடனே துள்ளி ஓடுதே இது எப்படி? எந்த ஒரு பிறப்புக்கும் பிறந்த உடனே சில குணம் இருக்கும். இது எல்லாம் ஒரு ஜென்மத்தில் செஞ்சதை மீண்டும் செய்யுது. அது போல மனித பிறப்புக்கு எதுவும் இல்லை. காரணம் மனுஷன் விழிப்புணர்வோட பிறக்கும் ஜீவன். அவனுக்கு குணம் ஏற்பட்டா அவனால வாழமுடியாது. திலிபனுக்கு விழிப்புணர்வு நிலையில் அவனோட போன ஜென்ம சமஸ்காரம் தடுத்து இழுக்குது. அதனால அவனோட நிகழ்கால வாழ்க்கை பாதிக்குது..”


“சாமி திலீக்கு மட்டும் இது எப்படி தெரியுது? எனக்கு ஏன் தெரியல?”


“நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்னு பகவத்கீதையில் பகவான் சொல்றார். பாகவதத்தில ஒரு உபகதை இருக்கு. ஒரு முனிவர் காட்டில் வாழ்ந்துக்கிட்டு இருக்கார். கடைசி காலத்தில ஒரு மான் அவர்கிட்ட அடைக்கலம் ஆகிடுது. மானை பிரியமோட வளர்க்கிறார்.

இறக்கும் தருவாயில அந்த மானை நினைச்சுக்கிட்டே பிறக்கிறதால அவர் அடுத்த ஜென்மத்தில மானாவே பிறக்கிறார். இறக்கும் போது நம்மோட கடைசி எண்ணம் எதுவோ அதுவாவே அடுத்த பிறவி எடுப்போம். இதைத்தான் புராணங்களும் சொல்லுது. நீ மார்டனா வளர்ந்த பொண்ணு அதனால நம்பிக்கை இல்ல...உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தா உங்க போன ஜென்மத்தை உங்களுக்கு காட்டறேன்”

தனக்குள் இருக்கும் பிரச்சனைக்கு விடையைத்தேடி ஒரு அமானுஷமான முயற்சிக்கு தயாரானான் திலீபன். சரண்யாவின் தயக்கத்தை பார்த்த திலீபன் கண்களால் கெஞ்சினான்.அவளின் மெளனம் சம்மதமானது.


“சரி சாமி. நாங்க ட்ரை பண்ணரோம்”


சாமியார் இருவரையும் அருகில் இருக்கும் தியான அறைக்கு கூட்டி சென்று கண்களை மூடி அமரவைத்தார்.. சில நிமிடங்கள் அமைதியாக கரைந்தது..

இருவரின் புருவ மத்தியில் தனது விரலால் மெல்ல அழுத்தினார் ..
பல எண்ணங்களால் சிதறி இருந்த அவர்களின் மனம் ஒரு ராட்டினம் போல சுழன்று ஒரு புள்ளியில் அடங்கியது.... அடங்கிய புள்ளி வெடித்து பல்வேறு காட்சிகளாக விரிவடைந்தது....

---------------------------------------------------------------------------

ன்ணா ஒங்களத்தான்... நான் மாடா மனுஷியா காட்டுகத்து கத்தறேன் ஒரு வார்த்த பதில் பேஷரேளா? வீட்டுக்கு வெளிய உங்க நாய் கத்தறது.... இங்கே நான் கத்தறேன் ....அவ்வளவுதான் வித்தியாசம்...எல்லாம் என்னோட தலைவிதி...”

“இப்போ என்னடி என்னை பண்ண சொல்றே?” . வீட்டுக்குள் வந்த நாய் அவன் கால்களை சுற்றி வளையவந்தது.

“இப்போ என்ன பண்ணனும் அத்தான் எல்லாமே பண்ணிட்டேளே.. நல்ல சர்க்கார் உத்தியோகம்னு சொல்லி உங்களுக்கு என்னை கொடுத்தா.. கல்யாணம் ஆன அடுத்த வாரமே...என் தோப்பனார் முகத்தில கரியை பூசினாப்போல ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேள். வீட்டுக்கு ஒரு பைசா கொடுக்க துப்பில்லை. கதை எழுதறேன், கவிதை எழுதறேன்னு என் ப்ராணனை வாங்கறேள்.. உங்களை கல்யாணம் பண்ணின அஞ்சு வருஷத்தில இதோ இடுப்புல இருக்கே இது ஒன்னுதான் மிச்சம்... மாமனார் காசில சாப்பிடரோம்னு ஒரு தோஷமும் உங்களுக்கு தோனலை. போனமாசம் அவரையும் பகவான் அழைச்சுண்டுட்டான். விடிஞ்சா கடங்காரன் ஒவ்வொருத்தனா வந்து வாசல்ல நிக்கறான்...நாண்டுண்டு சாகலாம்னு இருக்கு”


நாண்டுண்டு சாகலாம்னு இருக்கு... என்ற கடைசி வார்த்தைகள் தீனதயாளின் காதுகளில் ரீங்காரமிட்டது...


பாதி புகைத்து அணைத்த சிகரெட்டை மீண்டும் எடுத்து பற்றவைத்தான்...


என்ன செய்ய...யுத்த நடக்கறது...பத்திரிகைகளுக்கு காகிதமே பிரிட்டீஷ் அரசாங்கம் ரேஷனில் தான் கொடுக்கறா... இந்த லக்‌ஷணத்தில் என் கதை வெளியிட பத்திரிகை முன் வந்து, பிறகு அவர்கள் சன்மானம் அனுப்பினால் குடும்ப்பத்தை ஓட்டனும். எத்தனை வருடம் தான் இந்த முயற்சியில் இருப்பது? நேற்றுகூட பத்திரிகைகளில் இருந்து கதைகள் திரும்ப வந்துடுத்து. இனி தபால் செலவுக்கு கூட பைசா இல்லை. கல்கி மாதிரி வாரனும்னு திலி என்றெல்லாம் பேரை மாத்தி வைச்சு பார்த்தாச்சு... பச்... என்னத்தை சொல்ல ஒரு மனுஷாள் மதிக்கறாளா? புலவன் வாழ்க்கை புலராதுனு சொல்லுவா அதுமாதிரிதான் இருக்கு..


ஒரு முடிவு எடுத்தவனாக...தனது மேஜையை மேல் தேடினான்... பேனா வைக்கும் பெட்டியில் ஐந்தணா இருந்தது. தனது சட்டையின் கைமடிப்பில் வைத்துக்கொண்டு கடைவீதிக்கு புறப்பட்டான். அவனது நாய் அவனை பின் தொடர்ந்தது..


கொஞ்சம் அரிசியும், வாசம் இல்லாத கெமிக்கல் விஷமும் வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். அரிசியை விட விஷம் விலை ஜாஸ்தியாக இருப்பதை நினைத்து விரக்தியாக சிரித்துக்கொண்டான்.


பையை திண்ணையில் அமர்ந்திருந்தவள் முன் வைத்தான்.. “என்ன துரை அரிசியேல்லாம் வாங்கிண்டு வந்திருக்கேள்? தெவசத்துக்கு போனா இன்னும் கூட கிடைக்குமே.. சரி இன்னைக்கு கஞ்சியாவது கிடைக்கட்டும்..”


உலை கொதித்துகொண்டிருந்தது... தீனதயாளின் மனமும் தான். தனது குழந்தையை குளிப்பாட்டும் மனைவியை பார்த்தான்.. மனது மேலும் ரணமானது...மெல்ல நடந்து அடுப்புக்கு அருகில் சென்று விஷத்தை கலந்தான்...


எத்தனையோ கதைகள் எழுதி அதை வெளியிட முயற்சி செய்தும் ஒன்னும் பலன் இல்லை...இவளை போல வைர அட்டிகைக்கும் பட்டு சேலைக்குமா ஆசைப்பட்டு எழுதினேன்? சமூக கோவம்... இலக்கியத்தில இருக்கிற ஆசை.. நாலுபேரு என்னை ஒரு கதாசிரியன்னு சொல்லனும்.. இதை தவிர என்ன வேணும்?
சமூகத்தை திருத்த கதை எழுதனும்னு நினைச்சேன். சமூகமே என்னை புறக்கணிக்கும் போது இந்த சமூகத்தில ஏன் வாழனும்...

நங்... கஞ்சியை ஊற்றிய தட்டு இவன் முன் விழுந்தது.....“இந்தாங்கோ இதை குடிச்சுட்டு ஜம்முனு கதை எழுதுங்கோ..”


மனைவியும் குழந்தையும் கஞ்சியை குடிப்பதை பார்த்தான்... தனக்குள் எந்த சலனமும் ஏற்படாதது அவனுக்கு ஆச்சரியத்தை தந்தது...


அமுதத்தை குடிப்பது போல மெல்ல மெல்ல ரசித்து குடிக்க ஆரம்பித்தான்.... கண்கள் சொருக ஆரம்பித்தது... பார்வை இருண்டது..
கைகளில் இருந்து அந்த தட்டு தவறி கீழே விழுந்தது....வெட்டப்பட்ட காட்டு மரம் போல சரிந்தான்.

சிதறிய கஞ்சியை அவன் வளர்க்கும் நாய் சரோஜினி எனும் சரோ சுவைக்க துவங்கியது...

---------------------------------------------------------

“திலி என்ன ஆச்சிரியம் சண்டே ஆனா குளிக்காம சோம்பேறியா பெட்டுல படுத்திருப்பியே.. வாட் ஆர்யூ டூயிங் மேன்..”

“கதை எழுதறேன் சரோ”

“வாவ்.. என்ன இது. உலக மக்களே இங்கே பாருங்க... சாப்ட்வேர் ப்ரொபெஷனல் கதை எழுதறார்”


“சரோ எப்ப பார்த்தாலும் உனக்கு கிண்டல் தான். இண்டர்நெட்ல உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதை போட்டி வைச்சுருக்காங்க. அதில பார்டிசிபேட் பண்ண போறேன்”


“எனது போட்டியா... யூ ஆர் கிரேஸி திலி ? . முதல்ல எழுத கத்துக்கோ அப்பறம் போட்டிக்கு போகலாம்.”


“ இப்போதான் ஆரம்பிச்சுருக்கேன்.. நான் தான் ஏற்கனவே நிறைய எழுதி பார்த்திருக்கேனே..” என அவளை பார்த்து கண் சிமிட்டினான் திலீபன்.


“திலி...அப்போ நான் என்ன செய்ய எனக்கு போர் அடிக்கிதே..”


“உனக்கு வேணா பிஸ்கட் வாங்கிதறவா ?” என்ற திலீபனை விரட்ட தொடங்கினாள் சரண்யா...


மேஜை மேல்.. “தனது ஹோண்டாய் அக்ஸண்ட் காரை மிகவேகமாக சாலையில் ஓடவிட்டான் திலீபன். ..” என எழுதபட்ட காகிதம் காற்றில் படபடத்தது...


---------------
[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதை போட்டிக்காக எழுதபட்டது]

டிஸ்கி : ஸ்வாமி இது உங்களுக்கு தேவையா? நீங்க கதை எழுதி போட்டிக்கு எல்லாம் போலாமா? என கேட்பவர்களுக்கு விளக்கம் வரும் பதிவில். இப்போதைக்கு கதை எப்படி இருக்கு என்ற நடுநிலையான விமர்சனத்தை கூறவும்.

38 கருத்துக்கள்:

கோபால் said...

very nice

வினோத் கெளதம் said...

Gud1..

Raju said...

நல்ல இருக்குங்க சுவாமி. வாழ்த்துக்கள்.

நானும் எழுதியிருக்கேன்.

yrskbalu said...

stil you are beleving - peoples reading short stories?

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு வேற ஒன்னு புரியுது

:)

அது ஒரு கனாக் காலம் said...

ஒரு முடிவோட தான் கோதாவுல இறங்கி இருக்கீங்க ... வாழ்த்துக்கள்

Sanjai Gandhi said...

நல்லா இருக்கு ஸ்வாமி.. ஆனா லைட்டா கொயபுது.. :(

.. இதுக்குப் பேர்தான் வாழைபழத்துல ஊசி ஏத்தறதா ஸ்வாமி? :))

Anonymous said...

நல்ல கதை சுவாமி! வெற்றி பெற வாழ்த்துக்கள். கதையில் குறிபிட்ட சாமியார் எங்கேயோ பார்த்து கேள்வி பட்ட மாறி இருக்கு! ஹி ஹி !

Cable சங்கர் said...

நல்ல ஐடியா.. ஆனா எங்கயோ கொஞ்சம் மிஸ்ஸிங் சாமிஜி..

Cable சங்கர் said...

/stil you are beleving - peoples reading short stories?//

பாலுசார்.. என்னுடய கதைகளை பதிவிடும் போது வழக்கமாய் என்னுடய் வேறு பதிவுகளூக்கு என்ன வருமோ அதே அளவு சிறுகதைகளுக்கும் வரும் சார். அதனால் நிறைய பேர் படிக்கிறார்கள். என்றே தோன்றுகிறது.

அமர பாரதி said...

கதை நன்றாகவே இருக்கிறது ஸ்வாமி.

மதி said...

கத நல்ல இருக்கு ஆனா கொஞ்சம் புரியல....

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோபாலா,

திரு வினோத் கெளதமன்,

திரு ராஜூ,

உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrsbalu,

எனக்கு தெரிந்து வலையுலகில் அனேகர் சிறுகதை எழுதுகிறார்கள். சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
அதை படித்து விமர்சனம் செய்ய பெரிய கூட்டமே உண்டு.

துணிக்கடையில் இனிப்பு விற்பதை போல, இந்த வலைதளத்தில் சிறுகதை இருக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதனால் அவர்கள் வரவில்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

எது புரிஞ்சுது.. :)

புரிஞ்சா எலக்கியம் இல்லனு பேசிக்கிட்டாங்க..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்திர ராமன்,

நன்று உங்கள் வாழ்த்துக்களுக்கு...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சஞ்சய்,

.//நல்லா இருக்கு ஸ்வாமி.. ஆனா லைட்டா கொயபுது.. :(

.. இதுக்குப் பேர்தான் வாழைபழத்துல ஊசி ஏத்தறதா ஸ்வாமி? :))//

எனக்கு சில பழமொழிகள் புரியல.. வாழைப்பழத்தில ஏன் ஊசி ஏத்தனும்? ஊசி ஏத்தி ஏன்ன பண்ண போறிங்க? :)) இந்த கொங்கு நாட்டு தங்கங்களே இப்படித்தாம்பா

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்,

கதையை படிச்சா அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது :))

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சங்கர்,

நீங்க என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறீங்க :)

ஏதோ ஆர்வ கோளருல எழுதினது. நீங்களும் “கொஞ்சம்” அப்படீனு அடக்கமா சொல்லீட்டீங்க. முடிஞ்சா உங்க பாணியில இதை எழுதுங்க..

//பாலுசார்.. என்னுடய கதைகளை பதிவிடும் போது வழக்கமாய் என்னுடய் வேறு பதிவுகளூக்கு என்ன வருமோ அதே அளவு சிறுகதைகளுக்கும் வரும் சார். அதனால் நிறைய பேர் படிக்கிறார்கள். என்றே தோன்றுகிறது.//

பத்திரிகை உலகமே வலைதளத்தில் இருக்கும் சிறுகதையைத்தான் வெளியிடறாஙனு சொல்லுங்க... உதாரணம் ஆனந்தவிகடன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமரபாரதி,
உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும்
நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதி,

//கத நல்ல இருக்கு ஆனா கொஞ்சம் புரியல....//

என்னையும் இலக்கியவாதி ஆக்கீட்டீங்களே...:)

உங்கள் வருகைக்கு நன்றி.

geethappriyan said...

சாமீ,
கதை இன்றைய பின் நவீனத்துவ(அப்படின்னா?) எழுத்தாளர்களை விட நன்றாகவும் படிப்பவர் புரிந்துகொள்ளும் படியும் உள்ளது,.அப்புறம் கதையில் வட்டார வழக்கோ ,வறுமையோ,கோரமோ,விளிம்பு நிலையோ(அப்படின்னா?),காமரசமோ,பிகமியோ , யாரையேனும் சாடும் குசும்போ இல்லை , முக்கியமாக யாரும் பைத்தியமாகஆகவில்லை,ஆகவே மீண்டும் ஒருமுறை எழுதிப்பார்கவும்.
ஒரு வேண்டுகோள்:-
நாங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் வரப்போகும் பண்டிகைகள்,முக்கிய திதிகள்,விரத நாட்கள் பற்றி குறிப்பிட்டேர்கள் என்றால் (அதற்கென ஒரு பெட்டி ஒதுக்கினால் நாங்கள் பயன் பெறுவோம்)கோடி நன்றிகள்.
நிறைய பேர் அமாவாசையிலும் பிரதோஷ நாட்களிலும் கூட மாமிசம் தின்று விடுகின்றனர்,அப்புறம் தீபாவளிக்கு கூட எண்ணெய் தேய்த்து குளிக்க மாட்டேன் என்கின்றனர். உங்கள் வலையில் இதுபோன்ற தகவல்கள் வந்தால் அனைவருக்கும் காட்ட ஏதுவாயிருக்கும்.
நன்றிகள் பல.
கார்த்திகேயன்
அமீரகம்.

Raju said...

சுவாமி

ஒரு க்வேச்டியன். ஒரு ஆந்த்ரா நண்பர் வீட்டிற்க்கு சனிக்கிழமை சென்றேன். அவர்கள் எனக்கு மதிய உணவில் மாமிசம் பரிமாறினார்கள். எங்கள் வீட்டில் இது மாதிரி இல்லை. இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு. சரியா தவறா? உணவில் என்ன பிரிவினை? முதலிலேயே அவரும் கேட்கவில்லை! பரிமாறிய பின் வேண்டாம் என்று சொன்னால், ஒரு மாதிரி இருக்கும்.

பின்னொரு சமயம், இதை பற்றி நண்பரிடம் சொல்லிவிட்டேன். அவரும் கண்டுக்கொள்ளவில்லை.

Karmegaraja said...

ஐயா கதை நல்லாத்தான் இருக்கு! நீங்க ஆரம்பிச்ச ஜோதிட பாடம் என்ன ஆச்சு? ஆறு வகுப்பு நடத்தீட்டு இப்படி சும்மா விட்டுட்டா எப்படி?

Sanjai Gandhi said...

ஸ்வாமி. இதே மாதிரி நண்பர் அதிஷா ஒரு கதை எழுதி இருக்கார்
http://www.athishaonline.com/2009/06/blog-post_02.html

கோவைக்காரங்க எல்லாம் ஒரே மாதிரி யோசிப்பிங்களோ? ;))

11ஆம் தேதி அவர் தங்கைக்கு கோவையில் திருமணம். நீங்கள் வந்தே ஆகனும்னு அடம்புடிக்கிறார். அழைப்பதற்கு உங்கள் தொலைபேசி என் தந்துவிடவா?

Athisha said...

சாமி நான் இப்போதான் படிக்கேன்.. கதை சூப்பர்.. என் கதை மாதிரி இருக்குனுலாம் சொல்ல மாட்டேன்.. நம்ம கதை மாதிரி இருக்கு.. ;-))))))


ஜீன் 11 தங்கை திருமணம் கட்டாயம் வரவும். உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருப்பேன். பதிவர்கள் நட்பு சம்பிரதாயப்படி பின்னூட்டத்தில் அழைச்சாச்சு

பட்டாம்பூச்சி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கார்த்திகேயன்,

விரதநாட்கள் பற்றி எழுத சொல்லி இருக்கிறீர்கள். முயற்சிக்கிறேன்.

இணந்த மாமிசம் மாட்டர் நான் எழுதினால் பார்ப்பன துரோகி என்றோ பார்ப்பன புகழ் பாடுகிறேன் என்றோ பெரிய கலவரம் ஆகும் பரவாயில்லையா? :)

திரு ராஜூ,

மாமிசம் சாப்பிடவேண்டும் சாப்பிட வேண்டாம்.. இவை தான் நாம் எடுக்க வேண்டிய முடிவுகள்.

ஒரு உயிரை பலிவாங்க நாள் கிழமை தேவையில்லை. உருவாக்கவே நாள்கிழமை பார்க்கவேண்டும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கர்மேக ராஜ்,

சில வாரங்களில் அதிரடி வகுப்புகள் ஆரம்பம் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அதிஷா,

வைஸ் மேன் திங்க் அலைக் -னு சொல்லுவாங்க... எனக்கு வைஸ் ஆகல.. உங்களுக்கு :) ?

(எ)உங்கள் தங்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சஞ்சய்,

அவர் கதை சூப்பராக இருந்தது. காரணம் இந்த கதை மாறி இருக்கறதால :)


11ஆம் தேதி கோவையில் ஒரு சின்ன பதிவர் சந்திப்பை ஏற்படுத்தலாம் என நவயுக கவிஞர் சஞ்சய்க்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

(எப்படி எல்லாம் புகழ வேண்டி இருக்கு :) ).

Raju said...

ஸ்வாமி ஓம்கார்!

---- அருமையான பதில் ------ நன்றி!

தமிழ்ப்பிரியா said...

All The Best Swamy!!!

கார்மேகராஜா said...

இதனால்தான் எனது பெயரை தமிழில் மட்டுமே எழுதுகிறேன்! சின்ன திருத்தம்- எனது பெயர் கார்மேகராஜா.

இன்னும் இரண்டு பேர் இவ்வாறு அழைத்தார்கள் என்றால் எனது பெயர் எனக்கே மறந்துவிடும்!

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி தமிழ்ப்பிரியா,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கார்மேகராஜா,
பிழைக்கு மன்னிக்கவும்.

தேனான தமிழில் எழுதுங்கள் வீணான ஆங்கிலம் எதற்கு :)

யஜூர் வேதத்தில் முக்கியமாக விளக்கப்பட்டவரின் பெயர் உங்களுடையது.உங்கள் பெயர் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கதை...வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

ரெண்டாவது பாதி சூப்பரு ;)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சாமிஜி ;)