Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 18, 2020

Friday, February 21, 2020

அர்க் என்னும் அமுதம் பகுதி 3


உலகின் முக்கியமான இரண்டு கலாச்சார மனிதர்களுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. அந்த உண்மை என்ன என்றால் பசுவிற்கு பிரபஞ்ச ஆற்றல் வெளிப்படுத்தும் சக்தி உண்டு என்பது தான். பொன் முட்டையிடும் வாத்தை தினமும் ஒரு பொன் முட்டை எதற்கு என அதை அறுத்த கதை போல பசுவின் ஆற்றலை தினமும் எப்படி கிரகிப்பது என தெரியாதவர்கள் அதை மாமிசமாக உட்கொள்ள துவங்கினார்கள். அறிவியல் அறிவு பெற்ற கலாச்சாரத்தினர் பசுவின் அருகே அமந்து மந்திர ஜபம் செய்தனர். ஆர்க் உருவாக்கி பருகினர். இதனால் பசு நீண்ட காலம் சக்தியை அவர்களுக்கு அளித்தது. மீண்டும் சொல்கிறேன் பசு இரண்டு கலாச்சாரம் கொண்டவர்களிடம் கிடைத்தது. ஆனால் அதன் மூலம் சக்தியை பெரும் தொழில்நுட்பம் ஒரு கலாச்சாரத்திற்கு மட்டுமே கிடைத்தது. 

பசுவின் சிறுநீர் கொண்டு கோ ஆர்க் தயாரிக்கப்படுகிறது. வெளிநாட்டில் ஒரு நாள் கோ அர்க் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். பசுவின் மாமிசத்தை உண்ணும் அந்த நாட்டினர் கோ அர்க் பற்றி கேட்டதும் ஏதோ கேட்க கூடாததை கேட்டது போல அதிர்ச்சியானார்கள். தினமும் மாட்டின் சிறுநீரகம் குடல் மற்றும் சதைகளை சமைத்து சாப்பிடும் நீங்கள் சிறுநீரை வெறுப்பது எதனால் என சிந்திக்கவேண்டும். 

காலை சூரிய உதயத்திற்கு முன் பசுக்களிடம் இருந்து சிறுநீர் சேகரிக்கப்பட்டு, சில மணி நேரத்திற்குள் அர்க் தயாரிக்கப்பட வேண்டும். டிஸ்டிலேஷன் என்ற முறையில் குளிர் நீர் மேலும் , நெருப்பு கீழேயும் இருக்கும் பாத்திரத்தில் பசுவின் சிறுநீர் வைக்கப்படுகிறது. நூறு டிகிரி கொதி நிலைக்கு வந்ததும் ஆவியாகி அந்த குளிர் நீரின் விளைவால் மீண்டும் குளிர்விக்கப்பட்டு நீராவியாக இருந்தது தூய்மையான கோ அர்க்காக வடியத்துவங்கும். தற்காலத்தில் டிஸ்டிலேஷன் என்ற முறை பெரும்பாலும் மது தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. 

வேதகாலத்தில் இம்முறைகள் மது தயாரிக்க பயன்படவில்லை. மாற்றாக ஒரு பொருளின் சத்துக்களை மட்டும் சேகரிக்க பயன்படுத்தினார்கள்.  மதுவால் தனிமனிதனுக்கு ஏற்படும் தீமைகள் நமக்கு தெரிந்த விஷயம் தான். கோ அர்க் போன்ற ப்ராண சக்தி மிக்க பொருட்கள் மனிதனை கீழ் நிலைக்கு தள்ளுவதில்லை. ஆன்மீக உயர் நிலைக்கு ஏற்றம் செய்கிறது.

இந்தியாவில் பல இடங்களில் கோ அர்க் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட / சுத்தமாக காய்ச்சிய பசுவின் சிறுநீர் கோ அர்க் என அழைக்கப்படுகிறது. நாதகேந்திரா என்ற வேதகால வாழ்வியலில் சூழலில் தயாரிக்கப்படும் கோ அர்க் மிகவும் உன்னதமானது.

நாதகேந்திராவில் உருவாக்கப்படும் முறையின் முக்கியத்துவங்களை கூறுகிறேன்.

  • டிஸ்டிலேஷன் என்ற வேதகால முறையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
  • இந்திய பசுக்களில் இருந்து சிறுநீர் சேகரிக்கப்படுகிறது
  • சுதந்திரமாக திரிந்து மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களிடம் அதிக சக்தி நிலை உண்டு என்பதால் கோ அர்க் இப்பசுகளின் மூலம் பெறப்படும் சிறுநீரில் தயாரிக்கிறோம்.
  • மேய்ச்சல் மூலம் புற்கள் மற்றும் தாவரங்கள் மட்டுமே உண்ணும் பசுக்கள் இதன் ஆதரமாக உள்ளது.
  • சூழ் கொண்ட பசுக்கள்(கருவுற்ற) மூலம் தயாரிக்கப்படும் கோ அர்க் மிகவும் சக்தி கொண்டதாக இருக்கும். நாதகேந்திராவில் பசுக்களின் சூழ் காலத்தை கருத்தில்  கொண்டு சிறுநீர் சேகரிக்கப்படுகிறது.
  • ப்ரபஞ்ச ஆற்றலில் தாக்கம் அதிகம் உள்ள நட்சத்திரங்கள், திதிகளில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
  • பல முக்கியத்துவம் கொண்டு உருவாக்கப்படுவதால் குறைந்த அளவே தயாரிக்க முடிகிறது.


பிற இடங்களில் கிடைக்கும் கோ அர்க் , நாதகேந்திராவில் உள்ள கோ அர்க் இரண்டையும் அருகில் வைத்து பார்த்தாலே வித்தியாசம் தெரியும். 


கோ அர்க் பயன்படுத்தும் முறை:

  • காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 15(ml) மில்லி லிட்டர்  கோ அர்க் அருந்த வேண்டும்.
  • நேரடியாக அருந்த முடியாதவர்கள் 30ml  நீருடன் கலந்து அருந்தலாம். 
  • பிறகு ஆன்மீக பயிற்சிகள் அல்லது உங்கள் தினப்படி வேலைகளை செய்யலாம்.
  • ஒரு வேளை உட்கொண்டால் போதுமானது. மிகவும் சோர்வாக இருப்பவர்கள் அல்லது உடல் தளர்ச்சியாக உணர்பவர்கள் இரண்டு வேளை உட்கொள்ளலாம். 


ஆன்மீக சாதன செய்பவர்கள் ஒரு முறை கோ அர்க் அருந்தி பயிற்சி செய்தால் ஏற்படும் சக்தி அதிர்வை நிச்சயம் உணர்வார்கள். 

நாதகேந்திராவில் கிடைக்கும் கோ அர்க் பெற இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும். 9443538751

Wednesday, February 19, 2020

அர்க் என்னும் அமுதம் பகுதி 2


பசுவின் சிறுநீரில் அதிக ப்ராண சக்தி இருக்கிறது என்பதை பல்வேறு வகையில் நாம் ஆய்வு செய்ய முடியும். ஏதோ ஒரு கருவியை வைத்து ஆய்வு செய்வதை விட நம் உட்கொண்டு நம் சக்தி நிலையில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் உணர்லாம். ஒரு மணி நேரம் தொடர்ந்து ப்ராணாயாம பயிற்சி செய்த பிறகு மனமும் உடலில் எவ்வளவு புத்துணர்வுடன் இருக்குமோ அத்தகைய புத்துணர்வை கோஅர்க் குடித்தவுடன் உணர முடியும். ஆன்மீக சாதகர்கள் தினமும் அருந்துவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியை மிக விரைவாக அதிகரிக்க உதவும்.  நம் உடலின் ப்ராண சக்தியை புறப்பொருளான கோ அர்க் கொண்டு தூண்டுவது என்பது ஆன்மீக மரபில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையாகும். 

ப்ராண உடலில் ஏற்படும் தடுமாற்றம் நமக்கு உடலில் நோயாகவும் மனதில் சிந்தனை குறைபாடு மூலமும் வெளிப்படுகிறது. யோக பயிற்சிகளான ஆசனம், ப்ராணாயாமம் போன்றவை செய்வதன் மூலம் ப்ராண உடலை நிர்வகிக்கலாம். ப்ராண உடல் நன்றாக இருப்பதால் நோய் வராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் யோக பயிற்சின் நோக்கம் நோய் இல்லாமல் இருப்பது அல்ல. பதஞ்சலி அஷ்டாங்க யோகத்தில் சொல்வதை போல சமாதி என்ற உயர் ஆன்மீக நிலையை நோக்கி செல்வதே யோக பயிற்சியின் நோக்கமாகும். ஆனால் இங்கே சிலர் யோக பயிற்சியை தெரபி போன்ற நிலையில் மருந்தாக பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். முதுகுவலியா தனுராசனம் செய், ஆஸ்துமாவா ப்ராணாயாமம் செய் என தற்காலத்தில் யோகாவை சிகிச்சை பொருளாக்கி மருந்தாக வியாபாரம் செய்கிறார்கள். உடல் நோய் குணமாவது  ப்ராண உடல் சமநிலை அடைவதால் ஏற்படும் நன்மைகளில் ஒன்று, இதுவே யோகத்தின் நோக்கம் இல்லை. 

யோக மரபு அறியாமை என்ற நோயை தீர்க்கும் மருந்து , நம் தெளிவற்ற வாழ்க்கை முறையால் உடலில் ஏற்படும் நோய்க்கு மருந்து அல்ல. தற்சமயத்தில் யோக முறை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறதோ அதுபோலவே கோஅர்க் மருத்தாக மட்டும் பார்க்கப்படுகிறது..!

நவீன அறிவியலில் பாக்டீரியா போன்ற ஏதோ ஒன்றை ஆய்வு செய்து கோ அர்கில் எதிப்பு சக்தி அளிக்கும் பாக்டீரியா அதிகம் இருக்கிறது சொல்கிறார்கள். உடலில் இருக்கும் செல்லில் புதிய சக்தியை அளித்து இறந்த செல்களை புதுப்பிக்கிறது என ஆய்வு செய்திருக்கிறார்கள். இதுவா கோ அர்கின் பலன்?

கோ- அர்க் என்ன தான் செய்யும்?

கூறுகிறேன் கேளுங்கள்...

  • தினமும் கோ அர்க் அருந்துவதால் உடல் மற்றும் மனம் உயர் அதிர்வு நிலைக்கு செல்கிறது. 
  • நீங்கள் இயல்பு மனித நிலையில் இருந்து அடுத்த பரிணாமம் கொண்ட மனிதனாக மாற்றம் அடைய துவங்குவீர்கள்.
  • சித்தனை திறன் மிகவும் புதிய வடிவில் இயங்கும்
  • இயற்கை பகுதிகளான நம்மை சுற்றி இயங்கும் அனைத்தும் நம்மில் ஒரு பகுதியாக உணர்வோம்.
  • சோர்வு குறைந்து உடல் மிகவும் ஆற்றலுடன் இருக்கும். தூங்கும் நேரத்தில் ஆழ்ந்த தூக்கமும், பிற நேரத்தில் மிகவும் விழிப்புடனும் இருப்பீர்கள்.
  • உடலில் ப்ராண சக்தி அதிகரிப்பதால் கவன சிதறல் இருக்காது, ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • ப்ராண உடலில் விழிப்புணர்வு நிலை உருவாகிறது , இதனால் அதிக நேரம் சுஷ்மணா நாடி வேலை செய்யும்.


இத்தகைக பயன்மிக்க கோ அர்க் எப்படி தயாரிக்கப்படுகிறது?
எங்கே கிடைக்கும்?

அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோம்.

Tuesday, February 18, 2020

அர்க் என்னும் அமுதம்


புராணங்களில் ஒரு காட்சி வரும். மேரு மலையை மத்தாக கொண்டு பாற்கடலை கடையும் காட்சி தான் அது. ஒரு புறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் கடைந்து அதிலிருந்து அமுதம் எடுப்பார்கள். அமுதம் அல்லது அமிர்தம் என்றால் இறப்பற்ற நிலை என பொருள். அசுரர்களுக்கு அவை கொடுக்கப்பட்டால் இறப்பற்ற நிலையில் பலருக்கு துன்பம் விளைவிப்பார்கள் என அமுதம் தேவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதாக நாம் புராணங்களில் காணலாம். 

புராணங்களில் குறிப்பிடும் விஷயங்கள் மேருண்மையை எளிய வடிவில் குறியீடுகளாக சொல்பவை ஆகும். உதாரணமாக சந்திரனுக்கு 27 மனைவிகள் என்றும் ஒரு மனைவி வீட்டில் ஒரு நாள் இருப்பார் என்றும் கூறுகிறது புராணங்கள். இதன் அடிப்படையை உணராமல் மேலோட்டமாக பார்த்தால் சந்திரன் பல பெண்களை மணந்தவர் என அர்த்தம் கொள்வோம். உண்மையில் சந்திரன் தினமும் ஒரு நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரங்களை வானத்தில் கடக்கிறார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இவ்வகையான பெரும் உண்மைகளை கதை வடிவில் நமக்கு கடத்துவது புராணம். 

இந்த பாற்கடலை கடையும் தன்மை அதுபோல ஒரு குறியீடு  என அறிந்துகொள்ள வேண்டும். பெளதீகமான எந்த ஒரு பொருளின் உள்ளேயும் ஒரு சக்தி உண்டு. அந்த சக்தியை சில தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரகிக்கும் திறன் மனித இனம் பெற்றிருந்தது. எந்த ஒரு பொருளையும்  நீராவியாக்கி வடிகட்டும் திறனை இந்த பாற்கடல் விஷயத்துடன் ஒப்பிடலாம். இதற்கு அர்க் முறை என பெயர். 

நெருப்பில் ஒரு பொருளை காய்ச்சி அதன் நீராவியை குளிர்வித்து அதன் சத்தை மட்டும் எடுக்கும் முறையை அர்க் செய்தல் என்பார்கள். வேதகாலத்தில் ரிஷிகள் ஒரு பொருளை உட்கொள்ளும் பொழுது அதன் சக்தியை மட்டும் கிரகிக்கும் தன்மையை அறிந்து இருந்தார்கள். அவர்கள் கட்டறிந்த முறையே இந்த அர்க் ஆகும். 

நெருப்பு அசுரர்கள் போன்ற அழிக்கும் தன்மை கொண்டது, குளிர்விக்கும் நீரானது தேவர்கள் போன்றது. இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இரண்டுக்கும் இடையே அமுதம் உருவாகிறது. 

பசுவின் சிறுநீரில் பிரபஞ்ச ஆற்றல் எனும் ப்ராண சக்தி அதிகமாக இருக்கிறது. சிறுநீர் ஸ்தூலமான பொருள் , ப்ராணன் சூட்சமமானது. பசுவின் சிறுநீர் (கோமியம்) அர்க் எனும் முறையில் அதன் உட்பொருளான ப்ராணனை மட்டும் தனியே பிரித்தெடுத்து கசடுகளை நீக்கினால் நமக்கு அமிர்தமாக கிடைப்பது கோ அர்க் எனும் திரவம்.

பசுவின் சிறுநீரில் பல நுண்பொருட்கள் மற்றும் உப்புகள் உண்டு அவை அர்க் முறையில் நீங்கி நமக்கு மிகவும் தூய்மையான திரவம் நீர் போன்று அதன் சக்தி மட்டும் கிடைக்கிறது. நவீனமாக சொல்வது என்றால் ஒரு லிட்டர் சிறுநீரில் 10 மில்லி லிட்டர் சக்தி இருப்பதா கொண்டால்  தினமும் நமக்கு 30 மில்லி லிட்டர் சக்தி வேண்டும் என்பதற்காக மூன்று லிட்டர் பசுவின் சிறுநீர் குடிக்க முடியாது அல்லவா? அதனால் அந்த 30 மில்லி லிட்டர் அளவு காய்ச்சி அதன் சக்தியை மட்டும் வெளியே எடுத்து வைத்தால் அதுவே கோ அர்க்.

வேதகாலத்தில் அதிகமாக பயன்படுத்தபட்ட கோ அர்க் எனும் இந்த பானம் நாளைடைவில் நம் கலாச்சாரத்தில் இருந்து காணாமல் போனது. மேலும் பல அசுரர்கள் இந்த அமிர்தத்தை குடித்ததும் இந்த திரவம் நம் கலாச்சாரத்திலிருந்து காணாமல் போகக்காரணம் என புரிந்துகொள்ளவேண்டும். 

மனித உடல் ஐந்து தளத்தில் செயல்படுகிறது. ஒவ்வொரு தளமும் கோசங்கள் என அழைக்கப்படுகிறது. அதில் சக்தி உடல் என்ற ப்ராண உடலை கோ அர்க் நேரடியாக தூண்டுகிறது. தினமும் கோ அர்க் குடிப்பதனால் ப்ராண உடல் இயல்பை விட பத்து மடங்கு அதிகமாக வேலைசெய்யும்.

என்ன பசுவின் சிறுநீரை குடிக்கனுமா? 
இது குடிச்சா புற்று நோய் குணமாகும்னு சொல்றாங்களே...?

இப்படி பல்வேறு கேள்விகள் நம்மிடம் உண்டு அவற்றை அடுத்த பகுதியில் விளக்குகிறேன்.

Monday, January 27, 2020

மஹாயாகம் 2020 நிகழ்வு

நமது மாணவர் ஒருவர் 10 ஜனவரி 2020 அன்று நடந்த மஹா யாகத்தில் கலந்துகொண்டு அனுபவங்களை விவரிக்கிறார்.


இதுவே நாங்கள் நேரடியாக கலந்து கொண்ட முதல் மஹாயாகம். சுவாமிஜியின் ஆசிகளோடு மஹாயாகத்துடன் 2020க்குள் காலடி எடுத்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சுவாமிஜியின் சொற்களில் மஹாயாகம் - "இறையுனர்வை உணரும் ஒரு உன்னத வேள்வி. மார்கழி மாதம் பௌர்ணமி திருநாளில் ஒரு லட்சத்து எட்டு முறை பஞ்சாட்ச்சர மந்திரடத்துடன் மஹாயாகம் நடைபெறுகிறது. தனிமனிதனின் ஆன்மீக முன்னேற்றம், வாழ்க்கைவளம், மனத்தெளிவினை பெற்று மேலோங்கி வாழ வழிவகுக்கும் ஓர் சிறந்த நாள்"




                  
காலை ஆறரை மணிக்கு மஹாயாகம் நிகழ்ச்சி ஆரம்பமானது.முதலில் யாகசாலையில் விநாயகரை எழுந்ததருளச் செய்தார் சுவாமிஜி. பிறகு யாகசாலைக்கு ஒருபுறம் அமைந்திருந்த கூடாரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தார் சுவாமிஜி. அடுத்ததாக யாகசாலைக்கு இன்னொருபுறம் அமைந்திருந்த கோசாலையில் வீற்றிருந்த ஒரு பசு மற்றும் கன்றுகுட்டிக்கு கோபூஜை செய்துவிட்டு அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பசுக்கள் சூழ்ந்த கிருஷ்ணன் தூப தீபாராதனை செய்தார் சுவாமிஜி. கோபூஜை என்றவுடன் சுவாமிஜி கர்ம தந்த்ராவில் விழுப்புணர்வூட்டிய நமது கர்மாவை மாற்றம் செய்யும் விருஷ்ஷிகதானம், கோதானம் நினைவில் வந்து சென்றது.

மீண்டும் யாகசாலைக்கு வந்து தசமஹாவித்யா போன்ற அமைப்பில் இருந்த பத்து புள்ளிகளில் விளக்கேற்றி, கலச பூஜை மூலமாக எல்லா நதிகளையும் கலசங்களில் ஆவாகனம் செய்து பிறகு குரு பூஜை செய்தார் சுவாமிஜி. பிறகு தந்வந்திரி மந்திரம், மஹா மந்திரம் உட்பட பல மந்திரங்கள் ஓதப்பட்டபின் 100,008 எண்ணிக்கை கேட்டதைக் கொடுக்கும் பஞ்ச்சாட்சர மந்திர ஜெபத்தை ஆரம்பித்தார் சுவாமிஜி.

யாகசாலைக்கு ஒரு பக்கத்தில் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்த கூடாரத்தில் யாகசாலைக்கு இரு புறமுமாக மந்திர சாஸ்திரம் கற்ற சகோதர, சகோதரிகள் சுவாமிஜியுடன் பஞ்ச்சாட்சர மந்திரத்தை ஜெயித்தார்கள். சகோதரர்கள் நாத கேந்திராவில் கொடுக்கப்பட்ட தூய வெள்ளை வேஷ்டியும் மேல்துண்டும் போர்த்திக்கொண்டும், சகோதரிகள் தங்க ஜரிகையிட்ட தூய வெள்ளை சேலை உடுத்திக்கொண்டும் பஞ்ச்சாட்சர மந்திரம் ஜெபம் செய்தது நேர்த்தியாகவும், ஆன்மீக ஒழுங்குடனும், அந்த சூழ்நிலையின் இறைத்தன்மையை மேலும் மெருகூட்டுவதாகவும் இருந்தது.

யாகசாலைக்கு இன்னொரு பக்கத்தில் இருந்த கூடாரத்தில் மற்ற ஏனைய சகோதர சகோதரிகள் சுவாமிஜியுடன் பஞ்ச்சாட்சர மந்திரத்தை ஜெயித்தார்கள். இப்படி ஜபம் செய்து கொண்டிருந்தபோது ஒவ்வொருவராக சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பிரசாதமும் வழங்கப்பட்டது.

மஹாயாகம் என்ற நிகழ்வு தாந்திரீக முறைப்படி அன்றி வேதகால முறைப்படி செய்யப்படுவதால் எல்லோரும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பக்கத்து கூடாரங்களில் இருந்த நாத கேந்திராவின் கடைகளில் வேண்டியவற்றை வாங்கிக்கொண்டோம். 

முதல் கூடாரம் வருகையை பதிவு செய்யும் இடம் மற்றும் நன்கொடை வழங்கும் இடம். இரண்டாவது கூடாரம் நாத கேந்திராவின் மூலிகை பொருட்கள், மூலிகை சோப், மூலிகை பற்பொடி மற்றும் மூலிகை எண்ணெய்  போன்றவை விற்பனையில் இருந்தன. மூன்றாவது கூடாரத்தில் நாத கேந்திரா டி சர்ட், ஜபமாலைப்பைகள் போன்றவை விற்பனையில் இருந்தன. நான்காவது கூடாரத்தில் சுடச்சுட டீ, காப்பி வழங்கப்பட்டது.


இன்னுமொரு கூடாரத்தில் மஹாயாகம் சிறப்பாக பூர்த்தியான பிறகு, நாதகேந்திராவின் calenderகள் வினியோகிக்கப்பட்டன.

ஏன் இதை விவரமாக சொல்கிறேன் என்றால், எங்களில் பலர் முழு நேரமாக மஹாமந்திர ஜபம் செய்கையில், இங்கிருந்த volunteers மஹாயாகத்தில் கலந்துகொண்ட சிறிது நேரம் தவிர்த்து, மற்றும் சிற்றுண்டி சாப்பிட்ட சிறிது நேரம் தவிர்த்து, காலை 6.30 மணியிலிருந்து மாலை சுமார் 4.30 மணி வரை, கடமையே கண்ணாய், உதட்டில் எப்பொழுதும் புன்னகையுடன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சேவையை சிறந்த கர்ம வீர்ர்களாய் குரு சேவையாய் மிக சிறப்பாக செய்தார்கள். அடுத்த தடவை குருசேவை செய்ய இறையருளும் குருவருளும் அருள்புரிய வேண்டும்.

மறுபடியும் கூடாரத்திற்கு வந்து அமர்ந்து பஞ்ச்சாட்சர மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தோம். பதினொன்றறை மணி போல் சுவாமிஜி யாகசாலையில் இருந்து எழுந்து வந்து சிவலிங்கத்திற்கு ஒரு 30-45 நிமிடங்களுக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார்.

முதலில் பால் அபிஷேகம். பிறகு நீரால் சுத்தப்படுத்தி அடுத்து விபூதி, குங்குமம், சந்தனம் போன்று பல பொருட்களால் அபிஷேகம் செய்து பன்னீர் அபிஷேகத்தோடு நிறைவு செய்து, அலங்காரம் பண்ணி, தீபாராதனை காட்டி மீண்டும் யாகசாலைக்கு வந்தார் சுவாமிஜி. மந்திர ஜபம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. யாகம் நிறைவு பெறுவதற்கு சற்று முன்பாக, எல்லோரும் வரிசையில் நின்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட யாக பொருளை யாக குண்டத்தில் சேர்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.



சுமார் ஒரு மணியைப்போல் 100,008 பஞ்ச்சாட்சர மந்திர ஜபம் பூர்த்தி அடைந்த உடன், சுவாமிஜி யாக குண்டத்திற்கு தீபம் காட்டி பிறகு சிவலிங்கத்திற்கும் தீபாராதனை காட்டிய பிறகு மஹாயாகம் பூர்த்தி அடைந்தது.

பிறகு எல்லோரும் வரிசையில் நின்று சுவாமிஜின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொண்டு தீர்த்தம் வாங்கிக்கொண்டோம்.

கலச பூஜை மூலமாக எல்லா நதிகளையும் கலசங்களில் ஆவாகனம் செய்து பிறகு அது தீர்த்தமாக கொடுக்கப்படும்போது நோய்நாசினியாய் செயல்படுகிறது. மேலும் ஜலம் மந்திரங்களால் சக்தியூட்டப்பட்டபிறகு மாற்றமடையும் தன்மைகளைப்பற்றி சுவாமிஜி முன்பே விளக்கி இருக்கிறார்.

பிறகு எங்களில் பலர் அங்கேயே அமர்ந்து குரு மந்திர ஜபம் செய்தோம்.
பின்னர் மதிய உணவு. 3.30 மணியைப்போல கோ தானத்திற்கு பெயர் கொடுத்தவர்கள் கோதானம் செய்தனர்.
4-5.30 சிறார்களின் நிகழ்ச்சி
5.30-7 சுவாமிஜின் சத்சங்கம்
7 இரவு உணவு, நிகழ்ச்சி நிறைவு.

நாதகேந்திராவில் இருந்த முழு நேரமும் மனம் லேசாக, அமைதியாக இருந்ததை உணர முடிந்தது. அங்கே ஒன்று குவிக்கப்பட்ட இறையாற்றல் எல்லா திக்குகளிலும் தெய்வீகத்தண்மையை படரவிட்டது போன்று தோன்றியது. சுவாமிஜியின் ஆசிகளுடன் அங்கு வியாபித்திருந்த இறையாற்றலையும் உள்வாங்கிக்கொண்டு நாதகேந்திராவிலிருந்து கிளம்பினோம்.

எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய குருவருளுக்கும், இறையருளுக்கும் கோடி நன்றிகள்.

அன்புடன்
ரா.தி. (RT)

அடுத்த மஹாயாகம் 2020 டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும்.