வருட
பலன் அறிதல் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பகுதியாகும். ஜோதிட புத்தாண்டாக ஏப்ரல்
14ஆம் தேதி வரும் சித்திரை 1 ஆம் தேதி தான் வருடபலன் பார்க்கப்படுகிறது. ஆனால் தற்காலத்தில்
கிரிகேரியன் காலண்டர் என்கிற ஆங்கில காலண்டர் பயன்பாட்டில் இருப்பதால் 2019ஆம் ஆண்டுக்கே
வருடப்பலன் இங்கே தொகுக்கப்படுகிறது.
1
ஜனவரி நடு இரவு 00:00 மணிக்கு ஜாதகம் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். லக்னம் கன்யா லக்னமாக
இருந்தாலும், வருட கிரகம் குரு முதல் வீடாக
கொண்டே பலன்பார்க்க வேண்டும்.
2019ஆம் ஆண்டு
என்ன நிகழும்?
நன்மைகள்
- புதிய கல்வி மற்றும் புதிய கல்வி சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- மாநில ஆட்சி மாற்றம் நிகழும்
- மத்திய ஆட்சி தொடரும்.
- புதிய அரசியல் கொள்கைகள் உருவாகும். சட்ட திருத்தங்கள் நடைபெறும்.
- பெண்கள் நாகரீக தாக்கத்தால் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவார்கள்.
- விவசாயம் மற்றும் வளர்ச்சி சிறக்கும்
- புதிய மருத்துகள் கண்டறியப்படும்.
- அணுக்கொள்கை மற்றும் அணு உலை சார்ந்த பாதுகாப்பு உறுதியாகும்.
- ஆன்மீக பயணங்களில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
- இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு உலகலாவிய பட்டங்கள் கவுரவங்கள் கிடைக்கும்.
தீமைகள்
- ஆன்மீக இடங்களில் தீவரவாத தக்குதல்கள் நிகழும்
- பொது இடங்களின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல் உருவாகும்.
- பிரபலமான கலைத்துறை சார்ந்த ஒருவரின் இறப்பு நிகழும்.
- நெருப்பு சார்ந்த இயற்கை சீற்றம் மூலம் குழு மரணம் நிகழும்.
- போலியான தகவல் பரப்பும் செய்தி நிறுவனங்கள் மக்களின் முன் தலைகுனிவார்கள்.
- போக்குவரத்து கட்டணங்கள் உயரும்.
- பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும்.