Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label சந்திராயன். Show all posts
Showing posts with label சந்திராயன். Show all posts

Wednesday, October 22, 2008

சந்திராயன் - என்ன நடந்தது?

எனது முந்தைய பதிவில் சந்திராயன் செயற்கைகோள் பற்றி ஜோதிட ஆய்வு செய்திருந்தேன்.

அதன் முடிவில் குறிப்பிட்டதை போல 6மணிக்கு மேல் 8 மணிக்குள் செயற்கை கோள் ஏவப்பட்டது. ஜோதிட ரீதியான ஆய்வு சரியாக வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கால நிலை காரணமாக சிறிது தாமதம் ஆனாலும் செயல் வெற்றியடைந்தது பாராட்டவேண்டிய விஷயம்.

தினமலர் செய்தி : தினமலர்.காம்

சென்னை: உலகே வியக்கும் வகையில் சந்திராயன்-1 செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. புதன் கிழமை காலை சரியாக 06- 20 மணிக்கு சந்திராயன்- 1 செயற்கை கோளை ஏந்திய பிஎஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்தது. இது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், நிலவை நோக்கி் குறிப்பிடத்தக்க பயணத்தைத் துவக்கி இருக்கிறோம்; இன்னும் 15 நாளில் அதன் பயணம் இறுதி கட்டத்தை எட்டும்.

நிலவிற்கு ஆளில்லா செயற்கைக்கோள் அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியான சந்திரயான்-1 திட்டத்தின் "கவுன்ட்-டவுண்' ஸ்ரீஹரிகோட்டாவில் 20ம் தேதி காலை துவங்கியது. 49 மணி நேர "கவுன்ட்-டவுண்' பிறகு திட்டமிட்டபடி இன்று காலை 6.20 மணிக்கு சந்திராயன் - 1 செயற்கோளை தாங்கியவாறு பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.


மேலும் தகவல்கள் மற்றும் படங்களுக்கு இங்கே சுட்டவும்


நமது வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் விஞ்ஞானிகளின் 5 வருட கடின உழைப்பை மறக்க செய்யும் என நம்புவோமாக.

Monday, October 20, 2008

சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படுமா ?- ஓர் ஜோதிட ஆய்வு

செயற்கைகோள் வரலாற்றில் இந்தியா அடுத்த இலக்கை தொடும் நிகழ்வு நடக்க இருக்கிறது.

22 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஏவப்படும் செயற்கைகோள் சந்திரனுக்கு சென்று ஆய்வு நடத்த இருக்கிறது. விஞ்ஞானமும் கணினி பயன்பாடும் வளர்ந்த இந்த காலத்தில் நவீன மனிதர்கள் என்பவர்கள் ஜோதிடம் சாஸ்திர போன்றவற்றை நம்புவதில்லை. ஜோதிட சாஸ்திரம் நமது செயல்கள் அனைத்தையும் முன்னரே தெரிவிக்கும் ஓர் கருவியாகும்.
விண்வெளி ஆய்வு மற்றும் அதிக பொருளாதாரம் சார்ந்த ஆய்வுக்கு முன்னர் ஜோதிட ரீதியாக ஆய்வின் வெற்றியை முடிவு செய்தால் பலசிக்கல்களை தவிர்க்க முடியும்.


சந்திராயன் செயற்கைகோளுக்கு ஜாதகம் பார்க்க போகிறீர்களா என நீங்கள் கேட்பது புரிகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆருடம் எனும் பகுதியை கொண்டு ஆய்வு செய்ய போகிறேன். கிருஷ்ண மூர்த்தி பத்ததி எனும் ஜோதிட முறை துல்லியமானது என நிரூபணம் செய்யப்பட முறை. இந்த முறையை ஜோதிட கருவியாக கொண்டு எனது ஆய்வு துவங்குகிறது.


சந்திராயன் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமா?
நாள் :20-அக்டோபர் - 2008

நேரம் : காலை 10:55
இடம் : கோவை.

ஆருட எண் : 29.
(கணிக்கப்பட்ட ஜாதகம் கீழே தரப்பட்டுள்ளது)


ஆய்வு :

லக்னம் ரிஷபராசியில் அமைகிறது. லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தை பார்ப்பதால், கேள்வியின்
தன்மை சரியானதே என்றும், உண்மையாக கேட்கப்பட்ட கேள்வி என்றும் கூறலாம். செயல் வெற்றி அடையுமா என பார்க்க 1,6,11 ஆம் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். முக்கிய வீடாக லக்னம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

லக்னத்தின் உபநட்சத்திராதிபதி சந்திரன்.
அவர் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளார். ராகு 1,6,11 ஆம் வீடுகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. ராகு சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பதாலும் அதன் உப நட்சத்திர அதிபதியும் சுக்கிரனாக இருப்பதாலும் சுக்கிரன் இங்கு முக்கியத்துவம் பெருகிறார்.


சுக்கிரன் 1,6க்கு அதிபதியாகி 7ஆம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார். லக்ன உபநட்சத்திராதிபதி சந்திரனை, 11ஆம் பாவகத்தின் அதிபதி குரு பார்வை செலுத்துவது நன்மையை கொடுக்கும்.

குருவின் நட்சத்திரத்தில் யாரும் இல்லை என்பது முக்கியமான அம்சம். மேலும் குரு 1,6,11க்கு
நேரடி குறிகாட்டி. சனி லக்னத்தை பார்வை செலுத்துவதும், குருவுடன் திரிகோணத்தில் அமர்ந்திருப்பதும் சில சிக்கல்களை ஏற்படுத்தும்.


ஆய்வு முடிவு :

22 ஆம் தேதி சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்படும். ஆனால் சில காரணங்களால் காலதாமதம் ஆகும். சின்ன தடங்கலுக்கு பிறகு வெற்றி கிடைக்கும். ஆறு மணிக்கு மேல் எட்டு மணிக்குள் துலாம் லக்னத்தில் சந்திராயனை வெற்றிகரமாக பிஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தும். இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்வோம்.


உங்கள் கருத்துக்கள், கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது.