குழந்தை இன்மை என்பது நமக்கு புதிதாக வந்த பிரச்சனை இல்லை. பல காலமாக இருக்கிறது. ஆனால் தற்சமயம் அதன் விகிதம் அதிகரித்திருக்கிறது என்பதையே நான் இங்கே சுட்டிக்காட்டி வருகிறேன். நம் இதிகாசங்கள் மற்றும் புராணங்களை எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. மேலும் செயற்கை கருத்தரிப்பு, சோதனைக் குழாய் குழந்தைகள் என பல்வேறு சான்றுகள் இருக்கிறது.
தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிள்ளை பெற்றார் என்றும் காந்தாரி கெளரவர்களை பெற்ற வழிமுறையும் தற்கால செயற்கை கருத்தரிப்புக்கு நேரடியாக தொடர்புகொண்டது. குழந்தை பேறு அடைய நான்கு உடல்களும் முழுமை நிலையில் இருக்க வேண்டும் என்றேன். தம்பதியினருக்கு மொத்தம் எட்டு உடல்களும் முழுமை அடைய வேண்டுமாயின் அதற்கு தற்காலத்தில் ஒரே தீர்வு யோக பயிற்சியும் யோக நிலை சார்ந்த உணவு பழக்கமும் ஆகும்.
ஆனால் பலருக்கு யோக முறை பயிற்சியால் குழந்தை பிறப்பு ஏற்படுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. யோகா செய்தால் அனைவரும் காமத்தை விடுத்து துறவி ஆகிவிடுவார்கள் என்ற தப்பான கருத்து நிலவி வருகிறது.
யோகா என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். நம் உடல் மற்றும் மனம் இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுவது யோகம் என அழைக்கப்படுகிறது. இயல்பு மனிதனை விட யோக பயிற்சி செய்பவர்கள் தான் தன் செய்யும் பணியில் ஆழ்ந்து உணர்வுடன் செயல்பட முடியும்.
யோகம் செய்யக்கூடிய ஒருவர் தன் பணியாக எதை முன்னெடுக்கிறாரோ அதில் அவர் அற்புதமாக செயல் ஆற்றுவார். அப்படி இருக்க, யோக பயிற்சி செய்யும் ஒருவர் ஆன்மீகத்தை நாடினால் அதில் அவர் மேல்நிலைக்கு வருவார். குடும்ப வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டால் அதில் அவர் மேல்நிலைக்கு வருவார். தன்னை எப்பணியில் இணைக்கிறோமோ அதில் முழு விழிப்புணர்வுடன் பிறருக்கு முன்னுதாரணமாக செயல்பட யோகா மிக உன்னதமான வழியாகும்.
இவ்வாறு விழிப்புணர்வற்று நம்மக்கு கிடைக்கும் உணவு பொருட்களையும், சீரற்ற வாழ்க்கை நிலையும் இருந்து வாழ்ந்தால் குழல் இனிது யாழ் இனிது என்றே சொல்ல வேண்டி வரும். மழலையின் சொல்லை கேட்க வாய்ப்பு இருக்காது.
தற்கால வாழ்க்கை சூழலில் இக்குறைபாடு பெருகிவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆன்மீகத்தில் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நிலைக்கு ஏற்ப குழந்தை செல்வம் என்ற இன்பம் கைவரப்பெற்றேலே அடுத்து முக்தி என்ற முழுமையான நிலைக்கு நாம் செல்ல முடியும்.
தனிமனித ஆன்மீக முன்னேற்றத்திற்காக செயல்படும் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை குழந்தையின்மைக்கு தீர்வாக செயல்பட திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தம்பதிகள் இணைந்து மூன்று நாள் முழுமையான யோக பயிற்சி மற்றும் வாழ்வியல் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையில் திட்டமிட்டுள்ளோம். ஸ்வாமி ஓம்கார் அவர்களின் நேரடி பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் முழுமையான விழிப்புணர்வுடன் குழந்தை பிறப்பை அனுகி மேம்பட உதவியாக இருக்கும்.
இத்தகைய பயிற்சி தனிப்பட்ட பயிற்சியாகவும் தனிச்சூழலிலும் நடத்த இருக்கிறோம். அதனால் இதன் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் செயற்கை கரு சோதனைக்கு செலவு செய்வதை விட மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும் மேலும் பக்க விளைவு 100 சதவிகிதம் இருக்காது. வாழ்நாள் முழுவதும் உங்களில் உடல், மனம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும்.
உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள் பிற தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த பயிற்சியை கொடுக்க ஏன் நாங்கள் முன்வந்தோம்?
(கரு உருவாகும்)