Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, March 2, 2023

ஆன்லைன் ஜோதிட கல்வி அவசியமா?

பெரும் தொற்று நேரத்தில் தவிர்க்க முடியாத வழியாக இருந்தது ஆன் லைன் பயிற்சி. எனக்கு என்றுமே சாஸ்திர கல்வியை ஆன்லைன் வழியில் கொடுப்பதில் உடன்பாடு இல்லை. நேரடியாக படிப்பதற்கு மட்டுமே சாஸ்திரம் என்பதில் எனக்கு உறுதியான செயல்பாடு இருந்தது. வாகனம் ஓட்டுவதற்கும், நீச்சல் அடிப்பதற்கும் எப்படி ஆன்லைனில் படிக்க முடியாதோ அது போலவே சாஸ்திரங்களான யோகா மற்றும் ஜோதிடம் ஆகியவையும் ஆன்லைன் வழியில் படிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

யோக பயிற்சியில் உங்களின் உடல் மற்றும் மனம் மட்டும் செயல்படுவதில்லை. ப்ராணன் என்ற உயிர்சக்தியில் யோக ஆசிரியர் செயல்பட வேண்டி இருக்கிறது. பல வருடங்களாக அமெரிக்க தாக்கத்தால் பலர் ஆசனங்கள் மற்றும் ப்ராணாயாம பயிற்சியை ஆன்லைனில் வழங்குகிறார்கள். ஒரு புறம் பெரும்பாலும் தன்னை காட்சி பொருளாக காட்டும் மனம் கொண்ட யோக அசிரியர்கள். மறுபுறம் கற்றலின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாத மாணவர்கள் இணையும் புள்ளி இது. இதனால் யோக சாஸ்திரம் நீர்த்து அவர்களின் வாழ்க்கையில் செயல்படாமல் போகும் என்பது எனது அனுபவம்.

இவர்கள் சாஸ்திர பயிற்சியை அவர்களின் ஆன்மீக வாழ்க்கையின் உச்சத்தை அடைய பயில்கிறார்கள் என சொல்லவில்லை. குறைந்தபட்சம் உடல் எடை குறைக்க, மனம் அமைதி பெற இவர்கள் பெறும் யோக பயிற்சி உலகியல் ரீதியாக இவர்கள் எதிர்பார்க்கும் இலக்கை கூட அடைய முடியவில்லை என்பதே நிதர்சனம்.

ஆன்மீக உயர் உன்னத நிலையை அடைய விரும்பும் மாணவன் நேரடியாக குருவை கண்டடைவான். அவனின் தேடல் அவனின் லட்சியத்தை காட்டும் என சமாதானம் செய்துகொள்ளலாம். விளைவு சாஸ்திரங்கள் வேலை செய்வதில்லை என்ற அவப்பெயரை சுமந்து அதிஉன்னதமான சாஸ்திரங்கள் வலம்வரும் சூழலில் வாழ்கிறோம். இன்று மட்டும் அல்ல என்றுமே யோக சாஸ்திரத்தை ஆன்லைனில் பயிற்சி அளிக்க நான் தயாராக இல்லை.

ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவு சார்ந்த தளத்தில் வேலை செய்யும் சாஸ்திரமாகும். இங்கே யோகம் போல ப்ராணனோ விளைவோ பிரச்சனை இல்லை. சரியான வகையில் அறிவு அளிக்கப்பட வேண்டும்.

ஜோதிட சாஸ்திரம் எல்லா காலத்திலும் பெரும் அவப்பெயருடனே வலம் வரும் வகையில் ஆசிர்வதிக்கப்பட்டது. சில காரணங்களால் பலருக்கு புரிந்துகொள்ள முடியாத வகையில் ஜோதிட சாஸ்திரம் கையாளப்பட்டதால் கற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஜோதிடத்தின் மேல் அவதூறு கூறுவார்கள். இது பல நூற்றாண்டுகளால நடைபெறும் வழக்கமாகும். ஜோதிடம் எப்பொழுதும் முட்களை சுமந்தே நடக்கிறது. கடந்த அரைநூற்றாண்டாக அறிவிலிகள் பலர் ஜோதிடத்தை கற்றுக்கொள்ளாமலே பகுத்த அறிவு என அவதூறு பரப்பினார்கள்.

தற்காலத்தில் ஜோதிட சாஸ்திரம் டெலிக்ராமிலும் வாட்ஸப்பிலும் பயிற்சி அளிக்கப்பட்டு மிகவும் இழிநிலைக்கு எடுத்துசெல்லபட்டு இருக்கிறது. மலிவான பயிற்சி மற்றும் கவனத்தால் சாஸ்திரங்களின் குரல்வளைகள் நசுக்கபட்டு இருக்கிறது.

ஆன்லைன் என்ற பெயரில் போகிற போக்கில் கவிழ்த்தப்படும் இத்தகைய அராஜகத்தை எதிர்த்து வந்தேன். நேரடி வகுப்பில் இணையும் மாணவர்கள் பெரும்பாலும் இத்தகைய டெலிகிராமின் மாணவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சாஸ்திரத்தை பயிற்சி அளிப்பதை விட அவர்கள் தவறாக கற்றதை அழிப்பது பெரும் வேலையாக இருக்கிறது.

குறை அறிவு என்பது அறிவில்லாத நிலையை காட்டிலும் ஆபத்தானது. இத்தகைய சூழலில் நான் ஆன்லைன் ஜோதிட வகுப்பு எடுப்பதில் எதிர்ப்பாக இருந்தாலும் மறுபுறம் புற்றீசல் போல குறை அறிவை வழங்குபவர்கள் அதிகரித்தவண்ணம் இருக்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தை மலிவாக கற்றுக்கொடுப்பவர்களை விமர்சனம் செய்வதைவிட சரியான முறையில் பயிற்சி அளிக்கவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எது சரி என காண்பிக்கப்படும் பொழுது தவறுகள் தானாக விடைபெறும். ஓரு விளக்கு பல ஆண்டுகள் இருக்கும் இருளை விரட்டுவதை போல சரியான பயிற்சி என்பது குறை அறிவுகளை களையும் என்பது உறுதி.

இனி வரும் காலத்தில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை பயிற்சிகளை ஆன்லைன் வழியாக கற்றுக்கொள்ளலாம். ப்ரணவ பீடம் அதற்கு சரியான வழியினை காட்டுகிறது


எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது?

  •  முதலில் மூன்று வார பயிற்சி.
  • இதில் தேர்ச்சி பெறும் நபர்கள் மேலும் தனித்துவமான பயிற்சி வழங்கப்படும்.
  • பயிற்சியின் நோக்கம் ஓர் ஜாதகத்தை கையில் கொடுத்தால் துல்லியமாக பலன் சொல்ல வைப்பது.
  • ஜோதிடம் என்றால் என்ன என தெரியாதவர்களை கூட பயிற்சியின் முடிவில் துல்லியமான பலன் சொல்லும் ஜோதிடர்களாக இருப்பார்கள்.
  • சரியான வகையில் முறைபடுத்தபட்ட ஜோதிடசாஸ்திரத்தை பயிற்சியாக அளிக்கிறோம். நம்பிக்கையை பரப்புவது அல்ல நோக்கம். அறிவு சார்ந்த அனுபவங்களை அளிக்கிறோம்.
  • ஆன்லைன் பயிற்சி வீடியோவாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும். மீண்டும் மீண்டும் பார்த்து அவர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்ளலாம்.
  • பயிற்சிக்கு பிறகு ஒவ்வொரு ஞாயிறு அன்று நடைபெறும் மாணவர்கள் ஜோதிட கலந்தாய்வில் கலந்துகொண்டு மேலும் அவர்களை பட்டைதீட்டிக்கொள்ளலாம்.
  • பயிற்சிக்கு பிறகு தனிப்பட்டவகையில் ஆசிரியர்களுடன் இணைந்து மேலும் கற்றவைகளை ஆழப்படுத்தலாம்.



ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை அளிக்கும் பயிற்சி என்பது இன்று முளைத்த காளனை போன்ற கல்வி அல்ல. ஆலமரம் போன்று பெரும் பாரம்பரியத்தின் ஓர் கிளை என்பதை உணரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பயிற்சி ஆகும்.



நீங்கள் தயாரா?