உங்களின் நிலை புரிகிறது. என்னடா நல்லா எழுதிக்கிட்டு இருந்த (அப்படியா ?) ஸ்வாமி திடீருனு பின்நவீனத்துவம் பத்தி எழுதராறே ஏதாவது பிரச்சனையானு. கடந்த ஆறு மாதமா இணைய வலைதளத்தில் உலாவுகிறேன். அனேகருக்கு பின்நவீனத்துவ மோகமும், புதிதாக எழுத்து அமைப்பு இருக்கவேண்டும் என்றும் எழுதுகிறார்கள்.
ஒருவருக்கும் உதவாத புனைவு, கட்டுடைத்தல் எனும் பெயரில் ஆபாசமே எஞ்சி நிற்கிறது. பின்நவீனத்துவம் என்றால் என்ன ? என ஒரு சில வரிகள் அத்தகைய எழுத்தாளர்களிடம் கேட்டால் சரியான விளக்கம் கொடுக்க முடியுமா என தெரியவில்லை. இதில் உச்சகட்டம் நான் லீனியர் ரைட்டிங் எனும் பெயரில் கோர்வை இல்லாமல் பத்தியாக எழுதுகிறார்கள். கேட்டால் இது தான் போஸ்ட்மார்டன் ...புரியலையே என்றால்...உனக்கு பத்தாது என்கிறார்கள்.
நவீனமாக எழுதுகிறோம் என இவர்கள் நினைப்பதும், சமூகம் முற்போக்காக இல்லை என நினைத்து கட்டுடைப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் பின்நவீனத்துவ எழுத்தை எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை படித்ததும் எனக்கு இரண்டு நாள் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. ஒருவித பரிதவிப்பு நிலைக்கு சென்றேன். அந்த புத்தகத்தை என்னால் கீழே வைக்கவும் முடியவில்லை. பின்நவீனத்துவம் என்றவுடன் பாலியல் சார்ந்தும், பால் உறவு சார்ந்தும் தான் எழுத வேண்டும் என்ற நிலையையும் கட்டுடைத்து அவர் ஆன்மீகத்தில் பின்நவீனமாக்கி எழுதி உள்ளார். தற்கால புதிய தலைமுறை பின்நவீனர்கள் இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்.

உங்களுக்காக அந்த புத்தகத்திலிருந்து சில பத்திகள்....
கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது....
இல்லாத ஒரு நகரில் நல்ல வீரர்களாகிய மூன்று ராஜகுமாரர்கள் இருந்தனர். அந்த மூவரில் இரண்டு பேர் பிறக்கவே இல்லை; மூன்றாமவர் கர்ப்பத்திலே வாசம் செய்யவில்லை. மிகவும் சிறப்பான பொருளை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் வெளிக் கிளம்பினர். அப்போது ஆகயத்தில் பழங்கள் நிறைந்த மரங்கள் கண்டனர். சுவை மிகுந்த அக்கனிகளை புசித்து பசி ஆறிய பிறகு, கரையில் அலைகள் மோதிக்கொண்டிருந்த மூன்று நதிகளை கண்டனர். அவற்றில் இரண்டு நதிகளில் சிறதளவும் தண்ணீர் இல்லை. மற்றதோ வறண்டு கிடந்தது. அங்கு குளித்த, விளையாடி, தாகம் தீர நீரை பருகினார்கள். பிறகு அந்த நாளின் முடிவில் இனிமேல் நிறுவப்பட போகின்ற நகரத்தை அடைந்தனர்.
அங்கே மூன்று அழகிய இல்லங்களை கண்டனர். ஒரு வீடு சுவரும்,தூண்களும் இல்லாது இருந்தது; மீதி இரண்டும் கட்டப்படவே இல்லை. அவர்கள் குடிபுகுந்த வீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட மூன்று பாத்திரங்களை கண்டனர். இரண்டு துண்டு துண்டாக உடைந்து இருக்க, மூன்றவது பொடிப்பொடியாக இருந்தது. அந்த பாத்திரத்தில் மூன்று படி குறைந்த மூன்று படி அரிசியை எடுத்து உணவு சமைத்தனர். அந்த அன்னத்தை வாய் இல்லாத அந்தணர் அனேகருக்கு அளித்து, மிகுதி இருந்ததை உண்டனர். பிறகு மூவரும் புறப்பட்டு....
இப்படியாக செல்லுகிறது கதை. கண்ணை கட்டுதா? ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் நானூறுக்கும் மேற்பட்ட கதைகள். வெறும் மனக்கிளர்ச்சிக்காகவோ, வேடிக்கை விடுகதைக்காகவோ சொல்லப்பட்ட கதைகள் அல்ல. ஒவ்வொன்றும் ஞானம் வழங்கும் கருத்துக்கள் நிறைந்தது.
மேலும் இந்த கதை ஒரு தாய் தனது மகனுக்கு சோறு ஊட்டும் பொழுது சொன்னாளாம். இப்படியாக பின்நவீனம் சொல்லுகிறது அந்த புத்தகம். பின்நவீனத்துவம் எப்படி இருக்கிறது?
படித்துவிட்டீர்கள் அல்லவா உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
இது என்ன புத்தகம் ? யார் இயற்றியது?
என தேதி இல்லாத நாளில், மணி இல்லாத நேரத்தில் சொல்லுகிறேன்.