Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, June 8, 2023

செங்கோல்..! செங் - கோள்


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.


சிவனை வணங்கும் ஒருவருக்கு நவக்கிரகங்கள் கேடு செய்யாது என துவங்கும் கோளரு பதிகத்தை பாடி மதுரை ஆதீனகர்த்தா செங்கோலை பிரதமருக்கு வழங்கினார். செங்கோல் பெற்ற நாள் முதல் செம்மையான ஆட்சி மலர்ந்ததோ இல்லையோ பல சர்ச்சைகள் புறப்பட்டு வந்தவண்ணம் இருக்கிறது.


 தமிழ்நாட்டின் ஆதீனங்கள் ஒன்றிணைந்து சென்ற வாரம் பிரதமருக்கு அளித்த செங்கோல் தற்பொழுது சர்ச்சைக்கோலாக மாறி இருக்கிறது. அப்படி என்ன சர்ச்சை என்றால் செங்கோல் வழங்கப்பட்ட பிறகு இருநூறு பேரை பலி கொண்ட ரயில் விபத்து நிகழ்ந்தது. இதற்கு காரணம் அந்த செங்கோல் தான் என்கிறார்கள். விவாதங்கள் எத்திசையிலும் பறக்கிறது. 


பல ஜோதிடர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவர்களின் அறிவை தொலைக்காட்சி விவாதங்களில் சிதற விடுகிறார்கள். நிமித்தம் சரியில்லை, ஏதோ இறைவன் ரயில் விபத்தால் சொல்ல துடிக்கிறார். அடுத்த தேர்தலில் மோடி பிரதமராக மாட்டார் அதனால் செங்கோலை இனி அவர் கண்களால் பார்க்கக்கூடாது என இப்படி பலவகையான விவாதங்கள் மற்றும் வியாக்கியானங்கள்.


செங்கோல் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமா? கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் விரிசல், தனியார் சரக்கு ரயில் தடம் புரண்டது என ரயில் வண்டி பிரச்சனையாக கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. 


செங்கோலை பிரதமரிடம் கொடுத்தார்களா இல்லை ஏதேனும் ரயில் தண்டவாளத்தில் நெம்புகோலாக கொடுத்தார்களா என ஐயம் ஏற்படும் அளவுக்கு ரயில் விபத்து சர்ச்சைகளை சுமந்துகொண்டு இருக்கிறது செங்கோல்.


செங்கோல் என்பது இத்தகைய விளைவை ஏற்படுத்துமா என சாஸ்திரங்களின் வாயிலாக பார்ப்போம். முதலில் செங்கோல் என்பது ஆட்சியாளர்களின் அடையாளமாக இருக்கிறது. மன்னராட்சி காலத்தில் அதிகாரத்தின் அடையாளமாக, அரசன் செல்ல முடியாத சூழலில் செங்கோலை மன்னனாக பாவித்து முடிவுகள் எடுப்பார்கள். மக்கள் ஆட்சிகாலத்தில் மேயர் முதல் நீதிபதிகள் வரை அவர்களின் அடையாளச்சின்னமாக இருந்தாலும் அவர்களுக்கு இணையாக செங்கோலை பயன்படுத்த முடியாது.


தமிழ் நாட்டின் மேல் பற்றுக்கொண்ட பிரதமர் ஆதீனங்கள் கொடுத்த ஒரு மரியாதையை பெற்றுக்கொண்டார் என்ற அளவிலேயே இதை பார்க்க வேண்டும். பிரதமர் பதவி ஏற்கும் விழாவில் இத்தகைய செங்கொல் அளிக்கப்பட்டால் அதற்கு ஒருவகை முக்கியத்துவம் உண்டு என கருதலாம். புதிய பாராளுமன்றத்தில் இருக்கும் மற்றும் ஒரு அலங்காரப்பொருள் என்பதை தவிர செங்கோலுக்கு வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லை. 


பல கோவில்களில் மரியாதை ஏற்பதற்காக பரிவட்டம் கட்டியதால் ஊர் பெரியவருக்கு முடி உதிர்ந்து வழுக்கையானது என கிராமத்தில் பேசுவதற்கு சமமானது செங்கொல் நாட்டில் தீமைகளை ஏற்படுத்துகிறது என பேசுவது. கோவிலுக்கு செல்லும் ஊர் முக்கியஸ்தருக்கு செய்யும் மாலை மரியாதையை போன்றது செங்கோல் என்பதை தவிர அதில் அர்த்தம் கொள்ள ஏதும் இல்லை.


செங்கோல் ரயில் விபத்துக்கு காரணம் என பல ஜோதிடர்கள் விவாதிப்பதை பார்க்க முடிகிறது. மதுரை ஆதீனம் அவர்கள் கோளரு பதிகம் பாடி செங்கோலை பாரத பிரதமருக்கு வழங்குகிறார். ஜோதிடர்  கண்ணோட்டத்தில் பார்த்தோம் என்றால் கோளரு பதிகம் பாடிய பின் கோளாரு வந்திருக்க கூடாது. திருஞான சம்பந்தருக்கும் , சம்பந்தரின் வழிவந்த ஆதீன கர்த்தருக்கும் தெரியாத புதிய மெய்யறிவு ஜோதிடர்களுக்கு இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.


ஜோதிட சாஸ்திரத்தில் முண்டேன் ஜோதிடம் என்ற ஒரு வகை உண்டு. இயற்கை சீற்றங்கள், குழு மரணங்கள் (group death) , பேரிடர் இவற்றை முன்பே கணிக்க உதவும் ஜோதிட வகையாகும். 


செவ்வாய் விபத்துக்கான கிரகம், சூரியன் அரசை குறிக்கும் கிரகம், குரு ஆட்சியாளர்களை குறிக்கும். இப்படி ஒன்பது கிரகங்களும் ராசிமண்டலத்தில் இருக்கும் அமைப்பை கொண்டு ஒரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிர்கால பலனை சொல்லும் தன்மை முண்டேன் ஜோதிடத்திற்கு உண்டு. 


புதன் என்ற கிரகம் ரயில் பெட்டி மற்றும் ரயில் போக்குவரத்தை குறிக்கும்.   ஜூன் இரண்டாம் தேதி  ராகு கேது என்ற தீய விளைவுகளை ஏற்படுதும் கிரகங்களுக்கு இடையே புதன் என்ற கிரகம் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறது. ராகு கேது மற்றும் புதன், சந்திரன் ஆகியவை மேஷ துலா ராசிகளில் ஒன்றிணைந்த காலத்தில் ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்தது. இத்தகைய கிரக சஞ்சாரம் செங்கோல் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நிகழும். 

 

ஜூன் 8ஆம் தேதி வரை ரயில் சார்ந்த விபத்து செய்தி நமக்கு கிடைத்த வண்ணம் இருக்கும். பெரிய விபத்துகளுக்கு சாத்தியம் இல்லை என்றாலும் புதன் மேஷ ராசியை விட்டு நீங்கும் வரை தண்டவாளம் பாதுகப்பு குறைந்தே இருக்கும். ஜூன் 13ஆம் தேதி முதல் சந்திரன் மீண்டும் ராகு கேதுவுக்கு இடையே நுழைகிறார். இந்த முறை புதன் மேஷ ராசியில் இருந்து நகர்ந்துவிடுவார் அதனால் ரயிலில் விபத்து நடக்காது. ராகு கேதுவுக்கு இடையே சந்திரனுடன் குரு அமர்வதால் விமான விபத்துக்கள் ஹெலிகாப்டர்கள் விபத்து நடக்கும் வாய்ப்பு உண்டு. அரசியல் தலைவர்கள் விபத்தில் சிக்க நேரலாம். இதற்கும் செங்கோல் காரணம் என கிடைத்த கேஸ் எல்லாம் எளியவர்கள் மேல் எழுதுவதை போன்றது இது.


இரவு பகல் எப்படி இயல்பானதோ அது போல கிரகங்களின் நல்ல மற்றும் தீய பலன்கள் சமூகத்திற்கு நன்மையும் தீமையையும் கலந்தே அளிக்கிறது. ஜோதிட ரீதியாக கிரகங்கள் என்ற நவகோள்கள் விபத்துக்கு காரணமே தவிர செங்கோல் அல்ல..! காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததை போல என்பார்கள் இது குருவி உட்கார பலாப்பழமே விழுந்தது போன்று இருக்கிறது.


தமிழக ஆதீனங்கள் கொடுத்த செங்கோல் டில்லியில் பிரதமார் வாங்கினார் என்றால் ஒடிசாவில் எப்படி விபத்து நடக்கும் என கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 

 

அரசியல் மற்றும் ஜாதீய காழ்புணர்வு ஆகியவையே இத்தகைய சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. செங்கோல் என்பது ஒரு காரணம் மட்டுமே. இதில் ஜோதிடர்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.





சர்வதேச யோக தினம் 2023

 


Thursday, June 1, 2023

ஜோதிட பலன்

ஆறு வயதில் கற்றுக்கொள்ளத் தொடங்கிய ஜோதிட சாஸ்திரம் என்னுடன் வளர்ந்த சகோதரனைப் போன்றது. பன்னிரெண்டாம் வயது முதல் என் தந்தையுடன் இணைந்து பலன்களைச் சொல்லத் தொடங்கினேன். ஜாதகப்பலன் சொல்லுவது என்பது பல ஆண்டுகளாக என்னுடன் பயணித்துவரும் ஒரு திருப்பணி. பலன்கள் கேட்பவருக்குத் தன் வாழ்க்கையில் நடைபெறுவதை முன்பே அறிந்துகொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சி பெரிது. ஜோதிடருக்கு சரியான முறையில் வழிகாட்டுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி பலமடங்கு பெரிது. பலர் தலைமுறைகளாக என்னிடம் ஜோதிட வழிகாட்டுதல் கேட்டுப் பயன்பெறுகிறார்கள்.

ஜோதிட பலன் சொல்லுவதைத் தவிர ஆயிரக்கணக்கான ஜோதிட மாணவர்களை உருவாக்கி இருக்கிறேன். ஜோதிடத்தைக் கற்றுக்கொடுப்பதை மட்டும் 22 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் தொழில் முறை ஜோதிடம் பார்ப்பவர்கள். அந்த மாணவர்aகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் ஜோதிடத்தை நான் தொழில் முறையில் பார்ப்பது இல்லை.

மாதத்திற்கு இரண்டு ஜாதகங்களைப் பார்ப்பது என்பதே முடியாது எனத் தவிர்த்துவிடுவேன். என்னிடம் ஆலோசனை பெறப் பல மாதங்களாகக் காத்திருப்பவர்கள் உண்டு. அவர்களைக் காக்க வைப்பது வேதனையைக் கொடுத்தாலும் ஆன்மீகப்பணிகளுக்கு இடையே அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது என்பது பெரும் சவாலான விஷயம்.

 எதற்காக இத்தனை பெரிய கதைகளைச் சொல்லுகிறேன் தெரியுமா?

தற்சமயம் ஓம்கார ஆலயப்பணிகள் நடைபெற்றுவருகிறது. ஆலயத்திற்கு நன்கொடை பெறும் நோக்கில் அனைவருக்கும் ஜோதிட ஆலோசனைகள் அளிக்க இருக்கிறேன். ஜோதிட ஆலோசனை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் நடைபெறும்.

 முன்பதிவு செய்து எனது ஆலோசனையைப் பெற்று அதன் மூலம் ஆலயத்திருப்பணிக்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஆலோசனை பெறத் தனித்தனி நேரம் அமைக்கப்பட்டுள்ளது. வசிக்கும் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப நேரத்தைத் தேர்வு செய்யலாம்.

ஜோதிட ஆலோசனையைப்பற்றி முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. ஆலயத்திருப்பணி செய்யும் நோக்கத்தில் மட்டுமே ஜோதிட ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது.  ஆலயப்பணிகளின் அடுத்த நகர்வு காலத்திற்குப் பிறகு ஜோதிட ஆலோசனைகள் அளிப்பது நிறுத்தப்படும். இந்தக் குறுகியகாலத்தில் சாஸ்திர ரீதியாக ஜோதிடப் பலன்களை அறிந்துகொண்டு ஆலயப்பணிக்கு உங்களது நன்கொடைகளை அளியுங்கள்.  

 

முன்பதிவுக்குத் தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி : 9944233355 (WhatsApp முன்பதிவு மட்டும்)

மின்னஞ்சல் : swamiomkar@gmail.com

Wednesday, May 10, 2023

இலவச ஜோதிட பயிற்சி - அனைவரும் கற்றுக்கொள்ளலாம்


ஜோதிட சாஸ்திரம் என்பது அனைவருக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சாஸ்திரம். சாஸ்திர பயிற்சியை கடந்த 23 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.

பல்வேறு தேசங்கள், பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரம் கொண்டவர்களுக்கு ஜோதிடத்தை சரியாக கற்றுக்கொடுத்து- அவர்கள் ஜோதிட பலன் சொல்லும் அழகை கண்டு ரசித்திருக்கிறோம். ஜோதிடமே தெரியாத ஒருவர் சில நாட்களில் ஜோதிடம் கற்று முழு பலன்களையும் துல்லியமாக பலன் சொல்லும் பொழுது நாம் அடையும் ஆனந்தத்திற்கு இணை ஏதும் இல்லை.


ஜோதிட பயிற்சியை பல்வேறு தளங்களில் பயிற்றுவித்த அனுபவம் கொண்டது நமது ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை.


முதலில் நேரடியான பயிற்சி அளித்தோம். 2003ஆம் ஆண்டில் கோவை வட்டாரத்தில் மட்டும் இயங்கும் சிறிய கேபிள் டீவி சேனலில் பயிற்சி அளித்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம். பிறகு விடியோ கேசட்டாகவும், DVD வடிவிலும் பயிற்சி அளித்தேன்.

நீங்கள் கண்டுகளிக்க 2009 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கில வீடியோவை இங்கே அளிக்கிறேன்.


தமிழ் வீடியோ

ஆங்கில வீடியோ

பலருக்கு வீடியோ இயக்குவது மற்றும் குடும்ப உறுப்பினர்களை சமாளித்து டிவியை வென்று எடுப்பது வரை பல பிரச்சனைகள் இருந்தன. 2009 ஆம் ஆண்டு பெரிய தொழில் நுட்பங்கள் கைவரப்பெறாத நிலையில் வீடியோ வடிவில் வெளியிட்ட DVD சுமாரான தயாரிப்பாக இப்பொழுது தெரிகிறது. ஆனால் அன்று அது மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் பலர் அதனால் ஜோதிட பயிற்சி பெற்றார்கள்.


2005ஆம் ஆண்டுக்கு பிறகு இணையம் பரவலான பிறகு Skype மூலம் பயிற்சிகள் அளித்தோம். அதனால் பலர் பயன்பெற்றார்கள். இருந்தாலும் தொழில் நுட்ப வசதிகள் பொருத்து இவையாவும் முயற்சியாகவே இருந்தன. ஒலி ஒளி மற்றும் கற்றுக்கொடுக்கும் வசதி குறைவாக இருந்தது. பலருக்கு இணையம் என்பது புதியது என்பதாலும் ஆன்லைன் பயிற்சி என்பது 2005ஆம் ஆண்டுகளில் பிரபலம் ஆகவில்லை.


மார்ச் 2023ஆம் வருடம் ஜோதிட பயிற்சி ZOOM தொழில்நுட்பத்தில் ஆன்லைனில் பயிற்றுவித்தோம். மிகவும் வசதியான சூழலும் ஒலி, ஒளி தரம் மேம்பட்டும் இருந்தது. பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கும் நல்ல வேகமான இணைய வசதி மற்றும் நவீன தொலைபேசி என தற்சமயம் சாத்தியப்பட்டு இருக்கிறது.

யூடியூப் தளத்தில் முழு பயிற்சியும் பதிவு செய்து உள்ளோம். இனி நீங்கள் விட்டில் இருந்தபடியே ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம். மீண்டும் மீண்டு பயிற்சியை கண்டு நினைவில் வைத்துக்கொள்ளலாம்.  

பன்னிரெண்டு வகுப்புகள் கொண்ட பயிற்சி வீடியோ இனி ஒவ்வொன்றாக வெளிவரும்.


ஜோதிட சாஸ்திரத்தில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் மூடநபிக்கைகள் களைந்து சிறப்பான பயிற்சி இது.

வாருங்கள் ஜோதிடம் பயில்வோம்.

ஜோதிட வகுப்பு முதல் பகுதி
ஜோதிட வகுப்பு பகுதி இரண்டு


சாஸ்திர பயிற்சியை இலவசமாக அளிப்பது என்பது சரியான விஷயம் இல்லை என்பது எனது கருத்து. 


உங்களுக்கு பயிற்சி பயனுள்ளதாக இருந்தால் 9944133355 என்ற எண்ணுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு கட்டணம் அனுப்பி வையுங்கள்.


எங்கள் ஆன்மீக பணி மற்றும் ஆலய பணிகளுக்கு இந்தட் தொகை பயன்படுத்தப்படும். வேறு வகையில் நன்கொடை அளிக்க விரும்பினால் 9944 1 333 55 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.


சாஸ்திர பயிற்சிகள் நம்மை இணைத்திருக்கட்டும்.

Thursday, April 27, 2023

உள்ளம் பெரும் கோவில்…!

இறையாற்றலை உணர எண்ணற்ற தருணங்களும் சூழலும் உலகில் உள்ளன. தெய்வீக ஆற்றல் ஒவ்வொரு அணுவிலும் பரம அணுவாக நிறைவது. எங்கும் நீக்கமற நிறைந்து இருந்தாலும் ப்ராண வாயுவை அவசியம் இருப்பவர்களுக்கு ஒரு கலனில் அடைத்துக் கொடுப்பது வழக்கம். ப்ராண வாயுக் கலன்களைப் போலவே நமது கலாச்சாரத்தில் கோவில்களின் செயல்பாடுகள் இருக்கிறது. கடலில் பயணம் செய்யக் கப்பல் உதவுவது போல ஆன்மீகக் கடலில் ஆலயங்கள் செயல்படுகின்றன.

நமது நாத கேந்திராவில் ஆதிநாதரின் அருளால் ஆலயப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நாத பாரம்பரியக் கட்டடக்கலையின் வடிவில் ஆலயம் அமைய இருக்கிறது. கேதாரம் மற்றும் பத்ரி போன்ற நாத பாரம்பரியக் கோவில்கள் இமாலயத்தில் அதிகம். அதைப்போல தென்னகத்தில் ஆதிநாதரின் ஆலயத்தை அமைக்கும் இமாலயப்பணியை மேற்கொண்டிருக்கிறோம்.



 

ஆதிநாதரின் அருள்மழை பெறும் இவ்வாலயம் வருங்காலத்தில் தென்கேதாரம் என அழைக்கப்பட இருப்பது. இங்கு ஓம் என்ற ஒலியை உணரும் வகையில் அமைக்கப்படும் ஒரு சன்னிதானமும் சக்தியின் பத்து மஹாரூபங்களை வெளிப்படுத்தும் மற்றொரு சன்னிதானமும் அமைய உள்ளது.

 இறைவன் முன்பு ஒரு காலத்தில் ஆலயத் திருப்பணிக்குத் தங்கக் காசை அளித்தவர் அல்லவா? அவ்வாறு இன்றும் எங்களுக்கு அருள் செய்கிறார். சாஸ்திரங்களின் வாயிலாக நிதியை உருவாக்கும் ஆற்றலை இறைவன் எமக்கு அருளி இருக்கிறார். ஆனாலும் எங்களது நிதியை மட்டும் கொண்டு உருவாகும் ஆலயம் ஆங்கார வடிவமாக உருவாகக்கூடும். ப்ரணவத்தின் வடிவம் என்பது அனைவருக்குமானது. ஓம்கார ஆலயம் என்பது பொது வடிவம் பெற வேண்டும்.


 

ஓம்கார ஆலயத்தை நிர்மாணிப்பதில் நீங்களும் பங்குபெறலாம். எளிய வடிவில் அதே நேரம் ஆற்றல் மிகுந்த ஆலயத்தை நிர்மாணிப்பது என்ற வரலாற்று நிகழ்வில் உங்களையும் இணைத்துக் கொள்ளலாம்.

பெரும் நிதியை அளிப்பவர்கள் கோவிலின் கல்வெட்டில் நீங்கா இடம் பிடிப்பார்கள். அதன்மூலம் அவர்களின் தர்மம் அடுத்த தலைமுறையினருக்கு முன் உதாரணமாகத் திகழும். நிதி அளிப்பவர்கள் ஜோதிடம் மற்றும் யோக சாஸ்திர ரீதியாகப் பல்வேறு உதவிகளையும் பெறுவார்கள்.

 

உங்களது நன்கொடைகளால் ஆலயப் பணிகளை மேம்படச் செய்யுங்கள்.

 

தியானிக்கும்

ஸ்வாமி ஓம்கார்

 

வங்கித் தகவல்கள் :

Ac Name : Omkaranath
Account No : 1917155000001188
Bank and Branch : KVB, Kanuvai, Coimbatore
IFSC Code : KVBL0001917



Thursday, March 2, 2023

ஆன்லைன் ஜோதிட கல்வி அவசியமா?

பெரும் தொற்று நேரத்தில் தவிர்க்க முடியாத வழியாக இருந்தது ஆன் லைன் பயிற்சி. எனக்கு என்றுமே சாஸ்திர கல்வியை ஆன்லைன் வழியில் கொடுப்பதில் உடன்பாடு இல்லை. நேரடியாக படிப்பதற்கு மட்டுமே சாஸ்திரம் என்பதில் எனக்கு உறுதியான செயல்பாடு இருந்தது. வாகனம் ஓட்டுவதற்கும், நீச்சல் அடிப்பதற்கும் எப்படி ஆன்லைனில் படிக்க முடியாதோ அது போலவே சாஸ்திரங்களான யோகா மற்றும் ஜோதிடம் ஆகியவையும் ஆன்லைன் வழியில் படிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

யோக பயிற்சியில் உங்களின் உடல் மற்றும் மனம் மட்டும் செயல்படுவதில்லை. ப்ராணன் என்ற உயிர்சக்தியில் யோக ஆசிரியர் செயல்பட வேண்டி இருக்கிறது. பல வருடங்களாக அமெரிக்க தாக்கத்தால் பலர் ஆசனங்கள் மற்றும் ப்ராணாயாம பயிற்சியை ஆன்லைனில் வழங்குகிறார்கள். ஒரு புறம் பெரும்பாலும் தன்னை காட்சி பொருளாக காட்டும் மனம் கொண்ட யோக அசிரியர்கள். மறுபுறம் கற்றலின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாத மாணவர்கள் இணையும் புள்ளி இது. இதனால் யோக சாஸ்திரம் நீர்த்து அவர்களின் வாழ்க்கையில் செயல்படாமல் போகும் என்பது எனது அனுபவம்.

இவர்கள் சாஸ்திர பயிற்சியை அவர்களின் ஆன்மீக வாழ்க்கையின் உச்சத்தை அடைய பயில்கிறார்கள் என சொல்லவில்லை. குறைந்தபட்சம் உடல் எடை குறைக்க, மனம் அமைதி பெற இவர்கள் பெறும் யோக பயிற்சி உலகியல் ரீதியாக இவர்கள் எதிர்பார்க்கும் இலக்கை கூட அடைய முடியவில்லை என்பதே நிதர்சனம்.

ஆன்மீக உயர் உன்னத நிலையை அடைய விரும்பும் மாணவன் நேரடியாக குருவை கண்டடைவான். அவனின் தேடல் அவனின் லட்சியத்தை காட்டும் என சமாதானம் செய்துகொள்ளலாம். விளைவு சாஸ்திரங்கள் வேலை செய்வதில்லை என்ற அவப்பெயரை சுமந்து அதிஉன்னதமான சாஸ்திரங்கள் வலம்வரும் சூழலில் வாழ்கிறோம். இன்று மட்டும் அல்ல என்றுமே யோக சாஸ்திரத்தை ஆன்லைனில் பயிற்சி அளிக்க நான் தயாராக இல்லை.

ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவு சார்ந்த தளத்தில் வேலை செய்யும் சாஸ்திரமாகும். இங்கே யோகம் போல ப்ராணனோ விளைவோ பிரச்சனை இல்லை. சரியான வகையில் அறிவு அளிக்கப்பட வேண்டும்.

ஜோதிட சாஸ்திரம் எல்லா காலத்திலும் பெரும் அவப்பெயருடனே வலம் வரும் வகையில் ஆசிர்வதிக்கப்பட்டது. சில காரணங்களால் பலருக்கு புரிந்துகொள்ள முடியாத வகையில் ஜோதிட சாஸ்திரம் கையாளப்பட்டதால் கற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஜோதிடத்தின் மேல் அவதூறு கூறுவார்கள். இது பல நூற்றாண்டுகளால நடைபெறும் வழக்கமாகும். ஜோதிடம் எப்பொழுதும் முட்களை சுமந்தே நடக்கிறது. கடந்த அரைநூற்றாண்டாக அறிவிலிகள் பலர் ஜோதிடத்தை கற்றுக்கொள்ளாமலே பகுத்த அறிவு என அவதூறு பரப்பினார்கள்.

தற்காலத்தில் ஜோதிட சாஸ்திரம் டெலிக்ராமிலும் வாட்ஸப்பிலும் பயிற்சி அளிக்கப்பட்டு மிகவும் இழிநிலைக்கு எடுத்துசெல்லபட்டு இருக்கிறது. மலிவான பயிற்சி மற்றும் கவனத்தால் சாஸ்திரங்களின் குரல்வளைகள் நசுக்கபட்டு இருக்கிறது.

ஆன்லைன் என்ற பெயரில் போகிற போக்கில் கவிழ்த்தப்படும் இத்தகைய அராஜகத்தை எதிர்த்து வந்தேன். நேரடி வகுப்பில் இணையும் மாணவர்கள் பெரும்பாலும் இத்தகைய டெலிகிராமின் மாணவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சாஸ்திரத்தை பயிற்சி அளிப்பதை விட அவர்கள் தவறாக கற்றதை அழிப்பது பெரும் வேலையாக இருக்கிறது.

குறை அறிவு என்பது அறிவில்லாத நிலையை காட்டிலும் ஆபத்தானது. இத்தகைய சூழலில் நான் ஆன்லைன் ஜோதிட வகுப்பு எடுப்பதில் எதிர்ப்பாக இருந்தாலும் மறுபுறம் புற்றீசல் போல குறை அறிவை வழங்குபவர்கள் அதிகரித்தவண்ணம் இருக்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தை மலிவாக கற்றுக்கொடுப்பவர்களை விமர்சனம் செய்வதைவிட சரியான முறையில் பயிற்சி அளிக்கவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எது சரி என காண்பிக்கப்படும் பொழுது தவறுகள் தானாக விடைபெறும். ஓரு விளக்கு பல ஆண்டுகள் இருக்கும் இருளை விரட்டுவதை போல சரியான பயிற்சி என்பது குறை அறிவுகளை களையும் என்பது உறுதி.

இனி வரும் காலத்தில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை பயிற்சிகளை ஆன்லைன் வழியாக கற்றுக்கொள்ளலாம். ப்ரணவ பீடம் அதற்கு சரியான வழியினை காட்டுகிறது


எப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது?

  •  முதலில் மூன்று வார பயிற்சி.
  • இதில் தேர்ச்சி பெறும் நபர்கள் மேலும் தனித்துவமான பயிற்சி வழங்கப்படும்.
  • பயிற்சியின் நோக்கம் ஓர் ஜாதகத்தை கையில் கொடுத்தால் துல்லியமாக பலன் சொல்ல வைப்பது.
  • ஜோதிடம் என்றால் என்ன என தெரியாதவர்களை கூட பயிற்சியின் முடிவில் துல்லியமான பலன் சொல்லும் ஜோதிடர்களாக இருப்பார்கள்.
  • சரியான வகையில் முறைபடுத்தபட்ட ஜோதிடசாஸ்திரத்தை பயிற்சியாக அளிக்கிறோம். நம்பிக்கையை பரப்புவது அல்ல நோக்கம். அறிவு சார்ந்த அனுபவங்களை அளிக்கிறோம்.
  • ஆன்லைன் பயிற்சி வீடியோவாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும். மீண்டும் மீண்டும் பார்த்து அவர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்ளலாம்.
  • பயிற்சிக்கு பிறகு ஒவ்வொரு ஞாயிறு அன்று நடைபெறும் மாணவர்கள் ஜோதிட கலந்தாய்வில் கலந்துகொண்டு மேலும் அவர்களை பட்டைதீட்டிக்கொள்ளலாம்.
  • பயிற்சிக்கு பிறகு தனிப்பட்டவகையில் ஆசிரியர்களுடன் இணைந்து மேலும் கற்றவைகளை ஆழப்படுத்தலாம்.



ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை அளிக்கும் பயிற்சி என்பது இன்று முளைத்த காளனை போன்ற கல்வி அல்ல. ஆலமரம் போன்று பெரும் பாரம்பரியத்தின் ஓர் கிளை என்பதை உணரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பயிற்சி ஆகும்.



நீங்கள் தயாரா?