Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Monday, April 28, 2025

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை : வேதகால ஞானத்தின் நவீனப் பயணம்

பழமையான வேதகால அறிவையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும் இன்றைய வாழ்வியலோடு இணைக்கும் ஒரு சிறந்த முயற்சியாக ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக, ஸ்வாமி ஓம்கார் அவர்களின் தலைமையில், இந்த அறக்கட்டளை ஜோதிடம், யோகம் மற்றும் வேதகால வாழ்வியல் முறைகளை பரப்பி வருகிறது. கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் இயங்கும் இந்த அமைப்பு, ஆன்மீகத்தையும் நடைமுறை வாழ்வையும் இணைக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.


ஜோதிடம்: விதியை அறியும் விஞ்ஞானம்

ஜோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளால் மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்யும் ஒரு பழமையான அறிவியல். ப்ரணவ பீடம், இந்த அறிவியலை ஆழமாகவும், பயன்பாட்டு முறையிலும் கற்பிக்கிறது.

சிறப்புப் பாடத்திட்டங்கள்:

  • அடிப்படை ஜோதிடம் (வேதகால ஜோதிடம், நாடி, உயர் நட்சத்திர ஜோதிடம்)

  • சிறப்பு ஜோதிடத் துறைகள்:

    • மருத்துவ ஜோதிடம் (நோய்களுக்கான கிரக பலன்கள்)

    • வேளாண் ஜோதிடம் (பயிர்களுக்கான சரியான நேரம்)

    • பங்குச்சந்தை ஜோதிடம் (பொருளாதார முன்னறிவிப்புகள்)

  • நாடி ஜோதிடம், ஜெய்மினி ஜோதிடம் போன்ற பாரம்பரிய முறைகள்

இங்கு பயின்ற மாணவர்கள், ஜோதிடத்தை ஒரு தொழிலாகவும், ஆன்மீகப் பயணமாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.


யோகம் சாஸ்திரம்: உடல், மனம், ஆத்மாவின் ஒருங்கிணைப்பு

யோகம் என்பது பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் வழியாக ஆன்மீக உயர்வை நோக்கிய ஒரு பயிற்சி. ப்ரணவ பீடம், நாத சம்பிரதாயத்தின் அடிப்படையில், கோரக்க நாதர் மரபைப் பின்பற்றி ஹத யோகம் கற்பிக்கிறது.

யோகப் பயிற்சிகள்:

  • ஹத யோகம் (உடல் வளைவு திறன் மற்றும் மன உறுதி)

  • பால யோகம் (குழந்தைகளுக்கானது)

  • ஸ்ரீ யோகம் (பெண்களுக்கான சிறப்புப் பயிற்சிகள்)

  • கர்பகால யோகம் (கர்ப்பிணிப் பெண்களுக்கானது)

யோக ஆசிரியர் பயிற்சி:

  • ஒரு மாதம், ஆறு மாதம் மற்றும் ஒரு வருட பயிற்சிகள்

  • ஹத யோகம், நாத யோகம், தத்ரா யோகம்

இந்தப் பயிற்சிகள், யோகத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற உதவுகின்றன.


நாத கேந்திரா: வேதகால வாழ்வியல் 

2017-ல் உருவாக்கப்பட்ட நாத கேந்திரா, வேதகாலத்தின் தற்சார்பு மற்றும் ஆன்மீக வாழ்க்கை முறையை மீண்டும் உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது.

முக்கிய திறன் பயிற்சிகள்

வேதகால வேளாண்மை (இயற்கை விவசாயம்)
சூரிய ஒளி மின்சாரம் (சூரிய ஆற்றல் பயன்பாடு)
வேதகால உணவுமுறை (ஆரோக்கியமான உணவுகள்)
கணினி தொழில்நுட்பம் 
தியானம் & ஆன்மீக வளர்ச்சி

இங்கு, ஆன்மீகம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இணைந்து, தற்காலத்திற்கான முழுமையான வாழ்வியல் அமைகிறது.

 ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் பயிற்சி விவரங்கள்

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை, ஜோதிடம், யோகம் மற்றும் வேதகால அறிவை ஒருங்கிணைத்து, மனிதர்களை உள்ளார்ந்த ஆன்மீக வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிறது. நாத கேந்திரா போன்ற ஒருங்கிணைந்த ஆன்மீக சூழல் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க உதவுகின்றன. மனிதன் தன்னை உயர்மனித நிலைக்கு மேம்படுத்த இத்தகைய சூழல் உதவுகிறது.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் அனைத்து பயிற்சிகளும் நாத கேந்திரா என்ற ஒருங்கிணைந்த ஆன்மீக சூழலில் நடைபெறுகின்றன. கோவை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் நகர அலுவலகத்திலும் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதன் கன்யாகுமரி கிளையிலும் ஜோதிடம் மற்றும் யோகம் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இத்தகைய பயிற்சிகளை மதம், இனம், வயது, ஆண்-பெண் வேறுபாடுகள் இன்றி அனைவரும் கற்றுக்கொள்ளலாம். கல்வியில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்குமானது இப்பயிற்சிகள். நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.

மாதாந்திர பயிற்சி அமைப்பு:

  • மாதத்தின் முதல் வாரம்: சிறப்பு ஜோதிட பயிற்சிகள்

  • இரண்டாம் வாரம்: திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

  • மூன்றாம் வாரம்: ஆன்மீகப் பயிற்சிகள்

வருடம் முழுவதும் இப்பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு முறை நடைபெறும் பயிற்சி மீண்டும் நடைபெறுவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். சில சிறப்புப் பயிற்சிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுகின்றன. முழு வருடத்திறகான பயிற்சி அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது

யோகா வித்யா – பயிற்சி திட்டங்கள்

  • 1 மாத யோகா பயிற்சி – அக்டோபர்

  • 6 மாத யோகா பயிற்சி – ஜூலை

  • 1 வருட யோகா பயிற்சி – டிசம்பர்

சிறப்பு யோகா பயிற்சிகள்

  • ஹத யோகா2 மாதங்களுக்கு ஒருமுறை

  • பால யோகா (குழந்தைகளுக்கான யோகா)ஏப்ரல் / மே மாதம்

பயிற்சியில் இணைவதற்கு வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யலாம். வாட்ஸ் அப் எண் - 9944 1 333 55, 9944 2 333 55.

மின்னஞ்சல் : swamiomkar@gmail.com 

 

 

 


Thursday, June 1, 2023

ஜோதிட பலன்

ஆறு வயதில் கற்றுக்கொள்ளத் தொடங்கிய ஜோதிட சாஸ்திரம் என்னுடன் வளர்ந்த சகோதரனைப் போன்றது. பன்னிரெண்டாம் வயது முதல் என் தந்தையுடன் இணைந்து பலன்களைச் சொல்லத் தொடங்கினேன். ஜாதகப்பலன் சொல்லுவது என்பது பல ஆண்டுகளாக என்னுடன் பயணித்துவரும் ஒரு திருப்பணி. பலன்கள் கேட்பவருக்குத் தன் வாழ்க்கையில் நடைபெறுவதை முன்பே அறிந்துகொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சி பெரிது. ஜோதிடருக்கு சரியான முறையில் வழிகாட்டுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி பலமடங்கு பெரிது. பலர் தலைமுறைகளாக என்னிடம் ஜோதிட வழிகாட்டுதல் கேட்டுப் பயன்பெறுகிறார்கள்.

ஜோதிட பலன் சொல்லுவதைத் தவிர ஆயிரக்கணக்கான ஜோதிட மாணவர்களை உருவாக்கி இருக்கிறேன். ஜோதிடத்தைக் கற்றுக்கொடுப்பதை மட்டும் 22 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் தொழில் முறை ஜோதிடம் பார்ப்பவர்கள். அந்த மாணவர்aகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் ஜோதிடத்தை நான் தொழில் முறையில் பார்ப்பது இல்லை.

மாதத்திற்கு இரண்டு ஜாதகங்களைப் பார்ப்பது என்பதே முடியாது எனத் தவிர்த்துவிடுவேன். என்னிடம் ஆலோசனை பெறப் பல மாதங்களாகக் காத்திருப்பவர்கள் உண்டு. அவர்களைக் காக்க வைப்பது வேதனையைக் கொடுத்தாலும் ஆன்மீகப்பணிகளுக்கு இடையே அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது என்பது பெரும் சவாலான விஷயம்.

 எதற்காக இத்தனை பெரிய கதைகளைச் சொல்லுகிறேன் தெரியுமா?

தற்சமயம் ஓம்கார ஆலயப்பணிகள் நடைபெற்றுவருகிறது. ஆலயத்திற்கு நன்கொடை பெறும் நோக்கில் அனைவருக்கும் ஜோதிட ஆலோசனைகள் அளிக்க இருக்கிறேன். ஜோதிட ஆலோசனை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் நடைபெறும்.

 முன்பதிவு செய்து எனது ஆலோசனையைப் பெற்று அதன் மூலம் ஆலயத்திருப்பணிக்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஆலோசனை பெறத் தனித்தனி நேரம் அமைக்கப்பட்டுள்ளது. வசிக்கும் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப நேரத்தைத் தேர்வு செய்யலாம்.

ஜோதிட ஆலோசனையைப்பற்றி முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. ஆலயத்திருப்பணி செய்யும் நோக்கத்தில் மட்டுமே ஜோதிட ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது.  ஆலயப்பணிகளின் அடுத்த நகர்வு காலத்திற்குப் பிறகு ஜோதிட ஆலோசனைகள் அளிப்பது நிறுத்தப்படும். இந்தக் குறுகியகாலத்தில் சாஸ்திர ரீதியாக ஜோதிடப் பலன்களை அறிந்துகொண்டு ஆலயப்பணிக்கு உங்களது நன்கொடைகளை அளியுங்கள்.  

 

முன்பதிவுக்குத் தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி : 9944233355 (WhatsApp முன்பதிவு மட்டும்)

மின்னஞ்சல் : swamiomkar@gmail.com

Monday, December 31, 2018

2019ஆம் ஆண்டின் வருட பலன்


வருட பலன் அறிதல் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பகுதியாகும். ஜோதிட புத்தாண்டாக ஏப்ரல் 14ஆம் தேதி வரும் சித்திரை 1 ஆம் தேதி தான் வருடபலன் பார்க்கப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் கிரிகேரியன் காலண்டர் என்கிற ஆங்கில காலண்டர் பயன்பாட்டில் இருப்பதால் 2019ஆம் ஆண்டுக்கே வருடப்பலன் இங்கே தொகுக்கப்படுகிறது.
1 ஜனவரி நடு இரவு 00:00 மணிக்கு ஜாதகம் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். லக்னம் கன்யா லக்னமாக இருந்தாலும்,  வருட கிரகம் குரு முதல் வீடாக கொண்டே பலன்பார்க்க வேண்டும்.

2019ஆம் ஆண்டு என்ன நிகழும்?

நன்மைகள்
  • புதிய கல்வி மற்றும் புதிய கல்வி சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • மாநில ஆட்சி மாற்றம் நிகழும்
  • மத்திய ஆட்சி தொடரும்.
  • புதிய அரசியல் கொள்கைகள் உருவாகும். சட்ட திருத்தங்கள் நடைபெறும்.
  • பெண்கள் நாகரீக தாக்கத்தால் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவார்கள்.
  • விவசாயம் மற்றும் வளர்ச்சி சிறக்கும்
  • புதிய மருத்துகள் கண்டறியப்படும்.
  • அணுக்கொள்கை மற்றும் அணு உலை சார்ந்த பாதுகாப்பு உறுதியாகும்.
  • ஆன்மீக பயணங்களில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
  • இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு உலகலாவிய பட்டங்கள் கவுரவங்கள் கிடைக்கும்.


தீமைகள்
  • ஆன்மீக இடங்களில் தீவரவாத தக்குதல்கள் நிகழும்
  • பொது இடங்களின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல் உருவாகும்.
  • பிரபலமான கலைத்துறை சார்ந்த ஒருவரின் இறப்பு நிகழும்.
  • நெருப்பு சார்ந்த இயற்கை சீற்றம் மூலம் குழு மரணம் நிகழும்.
  • போலியான தகவல் பரப்பும் செய்தி நிறுவனங்கள் மக்களின் முன் தலைகுனிவார்கள்.
  • போக்குவரத்து கட்டணங்கள் உயரும்.
  • பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும்.


Thursday, April 20, 2017

இணைய வழி குருகுல பயிற்சி

நமஸ்காரம்

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை மற்றும் ஸ்வாமி ஓம்கார் ஃபவுண்டேஷன் - (இந்தியா) இணைந்து இணைய வழி குருகுலபயிற்சியை துவங்குகிறது.


இதன் மூலம் இண்டர்நெட் வழியாக ஆன்மீக கல்வி, ஜோதிட பயிற்சிகள் மற்றும் சாஸ்திர கல்விகளை கற்றுக்கொள்ளலாம். ஆறு மாதம் மற்றும் ஒருவருட பயிற்சிகள் கொண்ட சிறந்த பாடத்திட்டம் கொண்ட பயிற்சிகள்.


பயிற்சியை பற்றிய முக்கிய குறிப்புகள்
  • நேரடியாக ஸ்வாமி ஓம்கார் அளிக்கும் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம்  வெள்ளிக்கிழமை  ஜோதிட பயிற்சி வகுப்புகள்.
  •  இரண்டாம் மற்றும் நான்காம் மாதம் வெள்ளிக்கிழமைகளில் ஆன்மீக வகுப்புகள்.
  • நேரம் : இரவு 9 மணி முதல் 11 மணி வரை - இரண்டு மணி நேரம்.
  •  உயர் நட்சத்திர ஜோதிடத்தில் அடிப்படை முதல் ஜாதக பலன் அறியும் வரை தெரிந்துகொள்ளலாம்.
  •  ஆன்மீக வகுப்பில் திருமந்திரம், பதஞ்சலி யோக சூத்திரம், விஞ்ஞான பைரவ தந்த்ரா, தியான வகுப்புகள் மற்றும்  ஆன்மீக சூட்சமங்களை தெரிந்துகொள்ளலாம்.
  •  பயிற்சி மொழி - தமிழ் மற்றும் ஆங்கிலம்.
  •  வயது வரம்பு - 16 முதல் ஆர்வம் உள்ள வரை
  •  இணைய வழி குருகுல பயிற்சி தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அல்ல. பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கானது. தமிழகத்தில் வசிப்பவர்கள் நேரடி பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
  • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் பயிற்சி பல மாணவர்கள் ஒன்றிணைந்து கற்றுக்கொள்ளும் வகுப்பறை பயிற்சியாகும். இது ஒரு இணைய வகுப்பறை. தனி நபர் வகுப்பு (One to One) வகுப்புகளும் கோரிக்கைக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்.
  •  பயிற்சியில் இணையும் அனைவருக்கும் பயிற்சி சார்ந்த 5 மணி நேர வீடியோ இலவசமாக அளிக்கப்படும்.
  •  இப்பயிற்சி தவிர பிற தலைப்புகளிலும் பயிற்சிகள் நடைபெற உள்ளன.
  •  பயிற்சிக்கு பின் சுய பரிசோதனை களம் அமைத்து தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும்.
  • நாதகேந்திரா என்ற ஆன்மீக சூழலை மேம்படுத்தும் நோக்கில் இவை கட்டணப்பயிற்சியாக அமைய இருக்கிறது.
  • கட்டணம் மற்றும் இதர விளக்கம் வேண்டுமெனில் swamiomkar@gmail.com மின்னசலிலோ அல்லது 9944233355 என்ற வாட்சப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


பயிற்சிகள் மே மாதம் 12ஆம் தேதி முதல் துவங்குகிறது.

இணைய வழி குருகுலபயிற்சியில் இணைய அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்.

Thursday, December 10, 2015

ரங்கராஜ் பாண்டேயின் கேள்விக்கு எங்கள் பதில்..!


கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் சென்னை பேரிடரை ஜோதிட ரீதியாக அலசும் வகையில் சென்ற வாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் திரு.ரங்கராஜ் பாண்டே சில கேள்விகளை முன் வைக்க பிரபல ஜோதிடர் ஷெல்வி பதில் அளித்தார்.  இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் அடிப்படையானது மேலும் தர்க்க ரீதியாக பொதுமக்கள் கேட்க விரும்பிய கேள்விதான். நெறியாளர் பாண்டேயின் கேள்விகள் மிகவும் ஆய்வு செய்து கேட்கப்பட்டதல்ல. ஆனால் யதார்த்த ஜோதிடர் ஷெல்வியின் பல பதில்கள் தெளிவாக இல்லாமலும் மேலும் ஜோதிடத்திற்கு முரணாகவும் இருந்தது.

கேள்விக்கான பதில்கள் பலருக்கு சாஸ்திர உண்மையை சொல்லும் என்பதாலும் தெளிவு கிடைக்கும் என்பதாலும்  அக்கேள்விகளை எனது ஜோதிட மாணவர்களிடம் கொடுத்து பதில் அளிக்க சொன்னேன். அவர்களின் பெரும்பாலனவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்கள். அவர்கள் அளித்த பதில் இங்கே தொகுத்துள்ளேன்.


கேள்வி பதில்


1. இயற்கை பேரழிவுகளை தலைவிதியா? நிர்வாகத்தின் அலட்சியமா?

இது தலைவிதியோ அலட்சியமோ இல்லை. இது வானிலையின் இயற்கை செயல்.சூரியனை நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றி வருவது நமக்கு தெரியும். நீள் வட்டப்பாதையில்ஒரு பக்கம் சூரியனிலிருந்து தள்ளியும் ஒரு பகுதி அருகிலும் இருக்கும். அருகில் இருக்கும் சூழலில்கோடை காலமும், சூரியனின் வெப்பமும் அதிகமாக இருக்கும், தள்ளி இருக்கும் சூழலில் குளிர்காலமும் சூரியனின் தாக்கம் குறைந்தும் இருக்கும். இதை நாம் எப்படி வானிலை நிகழ்வு என சொல்லுகிறோமேஅது போல பூமிக்கும் சனிக்கு இடையே இருக்கும் இடைவெளியை பொருத்தும் பூமியில் வானிலை மாற்றம் நிகழும். பூமி சூரியனை சுற்றி வர நமக்கு ஒருவருடம் ஆகிறது அதனால் குளிர் மற்றும் கோடை காலம் நமக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரும். ஆனால் சனி பூமி ஆகியவற்றின் சுழற்சி 30 வருடம் எடுத்துக் கொள்ளுகிறது.
 
இதனால் சுமார் 15 வருடம் ஒரு முறை அதிக மழையும் , வறட்சியும் ஏற்படும். இடைக்கடார் சித்தரின் பாடல்கள் பரவலாக ஜோதிடத்தில் பயன்படுத்துவதில்லை, மன்மத வருஷம் மாரி உண்டு என அவர் சொல்லுவது பஞ்சாங்கத்தின் முன்னால் ஒரு பொது பலனாக இருக்குமே தவிர அவை கண்டிப்பாக நடக்க வேண்டும் என்பதில்லை. இந்த பொதுப்பலனும் சனியின் தன்மையும் இணையும்காலத்தில் அவை மிகச்சரியாக நடக்கும்.

முண்டேன் ஜோதிடம் என்ற பிரிவு ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு. அவை சமூகம் மற்றும் மக்கள் சார்ந்த பலன் சொல்லும் பகுதியாகும். அவ்வாறு முண்டேன் ஜோதிடம் கற்றவர்களால் இயற்கை பேரிடர், நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் கூற முடியும்.

2. 60 வருடத்திற்கு ஒரு முறை இதே பிரச்சனை வருமா?

அவை பொதுப்பலன் சனி நீர் ராசி சம்பந்தப்பட்டு, குரு+சூரியன் ஆகியவை இணைந்தால் தான் இவை நடக்கும்.  

60 வருடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் கட்டாயம் 10 வருடத்திற்கு ஒரு முறை சனி நீர் ராசி சம்பந்தப்படும் எனவே அது மன்மத வருடமாக இல்லை என்றாலும் நடக்கும். 2004 டிசம்பர் சுனாமி, 2015 இப்பொழுது அடுத்தது 2026 செப்டம்பர் என  நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.

இதுக்கு எதுக்கு கூகுள்..!


3.மழை வருடா வருடம் வருதே, இதற்கு எதற்கு ஜோதிடம்?

மழை வருடா வருடம் வரும் என சொன்னாலும் இனி வரும் காலத்தில் 2017 முதல் 2020 வரை சனி நெருப்பு ராசியான தனுசில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் 2014 முதல் 2017 வரை இருந்த மழையின் அளவை விட மிகவும் குறைவாக இருக்கும். 2018 ஆண்டு மழை இல்லாமல் பொய்க்கும். முன்பு சொன்னது போல பூமிக்கும் சனிக்கு இடைவெளி பெருகுவதால் இவை நடைபெறுகிறது.

4. மன்மத வருடத்தில் இயற்கை பேரழிவு நடக்கும்னு நம்பரீங்க?

எந்த வருடமும் அழிவு பேரழிவு என சொல்லிவிட முடியாது. கிரகங்களின் சுழற்சியே அதை முடிவு செய்கிறது. 2017 வரை சனி விருச்சிக ராசியில் இருக்கும்

அப்படி இருக்க அது வரை சில பேரழிவு விஷயங்கள் நடைபெறும். ஜனவரி முதல் வாரம் ராகு/கேது பெயர்ச்சி உண்டு. அது மட்டுமே வைத்து சொல்லிவிட முடியாது. ராகு சனி உடன் சம்பந்தப்படும் பொழுது 2016 ஆம் ஆண்டு மார்ச், மே மாதங்கள் மனித செயலால் குழு மரணங்கள் நிகழும்.

5. கார்த்திகை பிறகு மழை இல்லை, கர்ணனை மீறிய கொடை இல்லை.  அப்பொழுது எப்படி?


கார்த்திகைக்கு பிறகு தான் மழை இல்லை. அதாவது மார்கழி மாதம். நாம் பேசும் இக்காலத்தில் கார்த்திகை முடியவில்லை. மேலும் இத்தகைய பழ மொழிகள் ஜோதிடம் இல்லை. அதனால் ஜோதிட சார்ந்த கேள்விகளை கேளுங்கள்.

6. இந்த கார்த்திகைனு சொல்றீங்களே... நம் நாட்டுக்கா? தமிழ் நாட்டுக்கா?

சனியும் சூரியனும் விருச்சிக ராசியில் 13 ஆம் டிகிரியில் சென்றார்கள். சூரியன் சனியின் டிகிரியை நெருங்க நெருங்க நவம்பர் 20ஆம் தேதியிலிருந்து சென்னை பாதிக்கப்பட்டது. காரணம் சென்னையின் ரேகாம்சம் 13 டிகிரி. சனி விருச்சிக ராசியில் பயணம் செய்ய செய்ய பல டிகிரியில் மாற்றம் அடையும் அது குறிக்கும் ரேகாம்ச இடங்கள் எல்லாம் பாதிக்கப்படும்.

7. 2016 தை வரை, ஜனவரி 29  வரை கவனம் தேவை. தமிழன், தமிழக முதலமைச்சர், தமிழகம் எல்லாம் கவனமாக இருக்க வேண்டுமா? இனியும் பேரிடர் நடக்கலாமா?

இனி பேரிடர் தமிழகம் சார்ந்து இல்லை. ஆனால் இந்தியாவில் உண்டு. தமிழகத்தில் குழு மரணம், போராட்டத்தை ஒடுக்கும் பொழுது மரணம் ஆகியவை நடைபெறும்.

8. ஒரு ஐம்பது வருஷமா நீர் நிலை, கடவுள் வணங்காம இருந்திருப்பமா? அப்போ பேரழிவு இப்பதான்னே நடக்குதா? அதுக்கு முன்னாடி நடந்ததே இல்லையா?

முன்பே சொன்னது போல வானிலை மாற்றங்கள் கிரக சுழற்சிக்க ஏற்ப நிகழும். நீங்கள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் இயற்கை அதன் வேலையை செய்யும்.
 
சூரியனை நீங்கள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் எப்படி ஒளி கொடுக்குமோ அது போலவே இது. ஜோதிட சாஸ்திரம் எதையும் வணங்க சொல்லுவதில்லை. மதங்கள் தான் இறைவனை வணங்கு இல்லை உனக்கு தீயவை நடக்கும் என பயத்தினால் பக்தியையும் மதத்தையும் வளர்க்கிறது. ஜோதிடத்தை மதம் போன்று மலிவாக மாற்றம் செய்ய வேண்டாம் என வேண்டுகிறேன்.

9. உங்கள் கருத்துப்படி பேரழிவு நடந்தே தீரும் இது விதி இல்லையா?
முன்பே சொன்னது போல இது விதி அல்ல, இயற்கை சுழற்சி. குளிர்காலம் வரும் என தெரிந்து கம்பளி உடை வாங்குவது போல, நிகழ்வுகளை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படலாம். அதை புரிந்து கொண்டு செயலாற்றவே ஜோதிடம் சாஸ்திரம் நமக்கு உதவுகிறது. எதையும் மாற்றவோ, இது தான் விதி என உங்களை தாழ்தவோ ஜோதிடம் செயல்படுவதில்லை. அது ஒரு முன்கூர் (ஃபோர்காஸ்டிங் டூல்) கருவி.

10. இதுக்கு பரிகாரம் இருக்கா?

இது ஒரு கருவி இதனால் அளவிட மட்டுமே முடியும். ஆன்மீகம் , இறையா ப்ரார்த்தனைகள் மாற்றம் செய்யலாம். ஆனால் கிரகத்தை வணங்குவதாலோ அல்லது கிரகம் சார்ந்த தேவதைகளை ப்ரார்த்தனை செய்வதோ ஜோதிட சிந்தாந்தத்தில் இல்லை.

[சனி சார்ந்த பரிகாரம். சனி - சூரியன் சம்மந்தப்பட்டா ஆஞ்சனேயரை வணங்க வேண்டும் - என திரு,ஷெல்வி - கூறுகிறார்]
சக்கரை வியாதி இருக்கும் ஒருவருக்கு சக்கரை சாப்பிடுங்கள் என சொல்லுவதை போன்று ஒரு தவறான வழிகாட்டுதல் இது.  சனி மற்றும் சூரியன் என்ற இரு

கிரகத்தால் தான் இத்தகைய பிரச்சனை நடைபெறுகிறது. அப்படி இருக்க அவர்களை வணங்குவது சரியாக வருமா என சிந்திக்க வேண்டும். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகும் என நான் சொன்னால் நீங்கள் இளநீர் அருந்துதல் , உடலை குளிர்விக்க முயலவேண்டுமே தவிர கோடையில் வெப்பத்தை கொடுப்பது சூரியன் தான் என கூறி வெளியில் சென்று சூரியனை வணங்கினால் வெப்பம் குறையுமா?

11. இதை செய்தால் ஆஞ்சனேய ப்ரீதி நீங்கள் சொல்வதை போல செய்தால்  ஜனவரி 29 வரை நடக்கும் பேரழிவு தடுக்கலாமா?

ஜோதிடமும், ப்ரார்த்தனையும் வேறு வேறு.

வானிலை அறிக்கை போல சூழலை சொல்லுவது மட்டுமே ஜோதிடத்தின் வேலை. அதன் ப்ரீதி, பரிகாரம் ஆகியவை தர்ம சாஸ்திரம் மற்றும் ஆன்மீக அடிப்படையில் சொல்லப்படுகிறது.

12. பரிகாரம் செய்வதன் மூலம் மிகப்பெரிய தாக்கம் தவிர்க்க முடியும் என்றால் ஜோதிட பலன் தவறாகிவிடும். ஜாதகம் உண்மையாக இருந்தால் பரிகாரம் பொய்யாகிவிடும். பரிகாரம் உண்மையாக இருந்தால் ஜோதிட பலன் பொய்யாகிவிடும். இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

அதனால் தான் இவை இரண்டும் வேறு வேறு என்கிறேன். ஆனால் இவை இணையும் ஒரு புள்ளி ஒன்று உண்டு. ஜோதிடம் என்பது பரிசோதனை நிலையம் போன்று உங்கள் ஜாதகம் ஆராய்ந்து இது இப்படி இருக்கிறது என சொல்ல மட்டுமே முடியும். மாற்றம் செய்ய மருத்துவர் போன்று ஆன்மீகவாதிகள் தேவை. அவர்கள் மாற்றம் செய்தபின் தேடினால் ஜாதக பலனும் மாறுபடும். இதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ஜோதிடத்தின் எல்லையை புரிந்து கொள்ளுங்கள்.

[ திருஞான சம்பந்தரே கோளரு பதிகம் கொடுத்திருக்கார் அதை படித்தால் கிரக கோளாரு நீங்கும் - என திரு,ஷெல்வி கூறுகிறார்.]
ஆம் உணமைதான்... ஆனால் நமக்கு பார்வதி தேவி 3 வயதில் ஞானப்பால் கொடுத்திருந்தால், நாமும் பக்தியில் திருஞானசம்பந்தரை போல இருந்தால் கோளாரு பதிகம் வேலை செய்யும். நீங்கள் அப்படியா என முடிவு செய்து கொள்ளுங்கள்.

13. பரிகாரம் செய்தால் விபத்தே நடக்க கூடாது. பரிகாரம் செய்தால் விபத்து காலில் மட்டும் அடுபட்டு செரியாகும் என்பது உணமையா?
ஜோதிடத்தில் பரிகாரம் இல்லை. அது அளவீட்டு கருவிதான். ஒருவருக்கு விபத்து நடக்கும் என கிரகம் சொல்லுகிறது என்றால் அவர் ஆன்மீக வழியில் ஈடுபட்டால் முற்றிலும் தவிர்க்க முடியும்.  நாகாஸ்திரம் ஏவப்பட்ட நிலையில் அர்ஜுனன் தப்பித்தார் அல்லவா அது போல. பகவான் கிருஷ்ணன்  நாகாஸ்திரத்தை நிறுத்தவில்லை அவர் தேரையே தாழ்த்தினார். பகவானாக இருந்தாலும் உங்களை காப்பாற்றுவார், ஆனால் இயற்கையை தடுக்க மாட்டார்.

14. 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 200க்கு மேல் இறந்திருக்கார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரே ராசியா? ஒரு கிரக அமைப்பா? ஒரே ஜாதகமா?

ஆம் இதில் சந்தேகம் என்ன. ஒரே ராசியாக, ஒரே ஜாதகம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இறப்பை கொடுக்கும் கிரக அமைவுகள் [ மாரக பாதக ஸ்தான இணைவுகள்] ஒன்று போல இருக்கும்.

இறப்பு என்பது நமக்கு ஒரு வித மன ரீதியாக நெகிழ்ச்சி கொடுக்கும் செயலாக இருப்பதால் இப்படி கேள்வி வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 200 குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருக்கும் பொழுது , இறப்பும் சாத்தியமே. 

ஜோதிடத்தை பொருத்தவரை இறப்பு / பிறப்பு / கல்வி/ திருமணம் / குழந்தை பேறு என அனைத்தும் நிகழ்வு தான் இதில் செண்டிமெண்டுடன் பார்த்தால் இறப்பு ஒருவித மன அழுத்தத்தை தருகிறது. ஒரு முகூர்த்த நாளில் சென்னையில் மட்டும் 300க்கும் அதிகமான திருமணம் நடக்கும். அதெப்படி ஒரே நாளில் 300 திருமணம்? அனைவருக்கும் ஒரே ராசியா என கேள்வி நமக்கு ஏன் எழவில்லை என சிந்திப்பது நல்லது.


15. சனியால கூட்டு மரணம் ஏற்படும் இந்த ராசியில் சஞ்சரிக்கு பொழுது ஏற்படும்னு சொல்றீங்க.. இது இங்கே தமிழகத்தில்..சென்னையில் நடக்கும் என குறிப்பிட்டு சொல்ல முடியுமா? இது எப்படி எந்த ஊரில் விஜயவாடாவா? டெல்லியா எப்படி தெரிந்து கொள்வது?

சனியின் டிகிரி , சூரியனின் டிகிரி அவற்றை முடிவு செய்யும் என சொன்னேன். ஊரின் ரேகாம்சம் அதனுன் இணைந்து செயல்படும். அதைவைத்தே முண்டேன் ஜோதிடத்தில் சொல்லுவார்கள். இதை தவிர பல நுட்பமான விதிகளும் உண்டு. நம்மை விட வெளி நாட்டினர் முண்டேன் ஜோதிடத்திலும், லோக்கேஷனல் அஸ்ராலஜி என்ற இடம்சார் ஜோதிடத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

16. டெல்லி குஜராத்தில் குழு மரணம் நடக்கும் என்பதை எப்படி சொல்லுகிறீர்கள்?

என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. காரணம் கிரகங்களின் ரேகாம்சம் குஜராத், டெல்லியை சுட்டிக்காட்டுவதில்லை.

[தலைவர்கள் / பிரதமர் ஜாதகத்தை வைத்து முடிவு செய்ததாக திரு.ஷெல்வி கூறுகிறார். மேலும் தலைவர் ஜாதகம் உண்மை இல்லை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.

ஒரு ஜோதிடர் தன் கையில் இருக்கும் ஜாதகம் சரியா என பார்க்க தெரிந்திருக்க வேண்டும். ஜாதக தகவல் சரி இல்லை என்றால் தகவலை ஜோதிட ரீதியாக கண்டரிந்து சரி செய்யதெரியவேண்டும். அதை விடுத்து கொடுக்கபட்ட ஜாதகம் தவறாக இருந்தால்  நான் என்ன செய்வது என கேட்பது ஜோதிடம் முழுமையாக கற்ற அறிவை குறிக்காது ]

17. இந்தியாவுக்கு ஜாதகம் போடுவீர்களா? நரேந்திர மோடி ஜாதகம் வைத்து இந்தியாவுக்கு சொல்லுவீர்களா?
18. மாநிலத்திற்கும் ஜாதகம் உண்டா?
19. அந்திர மாநில முதலைமைச்சர் ஜாதகம் சிறப்பா இருக்கு, ஆனா அங்க 100 பேருக்கு ஜாதகம் சரியில்லை என்றால் என்ன  நடக்கும்?
20. சந்திரபாபு நாயுடு ஜாதகம் நாட்டுக்கே பேசுமா?
21. இந்தியாவை ஆள்வது நரேந்திர மோடி என சொல்லி அவர் ஜாதகத்தை பார்ப்பீர்களா? அல்லது ஜனாதிபதியின் ஜாதகம் பேசுமா?
24. ஆள்பவர் ஜாதகமா? இந்தியாவின் பெயர் ராசியா? சுகந்திரம் அடைந்த தேதியா எதைவைத்து சொல்வீர்கள்?

22. முருகேசன் ஜாதகத்தில் தொழில் சரி ஸ்தானம் இல்லை. மனைவி கையெழுத்தில் தொழில் நடக்கும் என்றால் தொழில் கையெழுத்து போடுவது ஜாதகம் மூலமே நடக்கும் அல்லவா?


மேற்கண்ட அனைத்தும் ஜோதிடத்திற்கு முரணான செயல்.
 
விம்சோத்தரி தசா என்பது 120 வருடம் கொண்ட காலக்கணக்கு. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை கொண்டு ஜாதகம் ஆராய்வதாக கொண்டால், 120 வருடத்திற்கு மேல் இந்தியா இருக்காதா என கேள்வி வரும். அமெரிக்க நாடு தோன்றி 200 வருடங்கள் ஆகிவிட்டது. அமெரிக்கா உருவான தினத்தை கொண்டு ஜாதகம் கணித்திருந்தால் பலன் 120 வருட தசா தீர்ந்த நிலையில் இப்பொழுது வருமா என சிந்திக்க வேண்டும். அப்படியானால் பிரிட்டீஷ் அரசுக்கு எப்படி ஜாதகம் போடுவது? அவர்கள் யாரிடம் இருந்தும் சுகந்திரம் பெறவில்லை. தோற்ற நாள் கிடையாது. அப்படியானால் பிரிட்டனுக்கு ஜாதகமே கிடையாதா?

ப்ரசன்ன ஜோதிடம் என்ற முறையிலேயே இதை பார்க்க வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் அந்த நாடு, மாநிலம் மற்றும் குழுவுக்கு செயல்படாது.
இதை புரிந்துகொள்ள சரியான முறையில் முண்டேன் ஜோதிடம் கற்று கொள்ள வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவின் ஜாதகம் ஆந்திர மக்களுக்கு செயல்படும் எனபது ஜோதிடத்திற்கு முரணான தகவல்.
 
ஒரு பஸ் ட்ரைவர் இருக்கிறார். அவருக்கு இன்று மாரக தசா நடக்கிறது மரணிக்க போகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். 53 பயணிகள் பஸ்ஸில் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் இறப்பு இல்லை என ஜாதகம் சொல்லுகிறது என வைத்துக்கொள்வோம். பஸ் ட்ரைவர் ஜாதகம் தான் பேசும். அவர் போனால் அனைவரும் இறந்துவிடுவார்கள் என்பதை போன்ற முட்டாள் தனமான ஆய்வு இது.

பிரதமர்கள், முதலமைச்சர்கள் ஜாதகம் மக்களுக்கு நடக்கும் என்றால் சில பிரதமர்கள் கொல்லப்படும் பொழுது நாட்டு மக்களும் அவர்களுடன் சேர்ந்து இறந்திருக்க வேண்டும் அல்லவா?

தலைவர்கள் ஜாதகம் அவர்களின் தனிப்பட்ட பதவி, நிர்வாகம் கட்சி சார்ந்த செயல்பாடு இவைகளையே காட்டும். மக்களின் ஜாதகம் தான் அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. மக்களின் வாழ்வும் அதன் தரமும் உயரும் என இருந்தால் அதன் தாக்கம் தலைவர்களின் செயலில் அது வெளிப்படும். இதற்கு தலைவர்களின் ஜாதகம் ஒத்துழைக்கும்.

என் ஜாதகத்தில் (பத்தாமிடம்) தொழில் ஸ்தானம் சரியில்லை என்றால் என் மனைவி ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் சரியாக இருக்கிறது என ஜோதிடம் சொன்னால் என் மனைவி பெயரில் தொழில் செய்வது என்பது தற்கால நடைமுறையில் இருக்கிறது. ஆனால் உணமையில் இது ஒரு மனரீதியான தீர்வு தானே தவிர உணமையான தீர்வு அல்ல.

என் தொழில் நன்றாக இல்லை தொழில் நன்றாக இருக்கும் ஒருவரின் பெயர் தொழிலை நடத்தும் என்றால் நான் முக்கேஷ் அம்பாணி பெயரில் தொழில் செய்துவிட்டு போகலாமே..!

என் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் சரி இல்லை , என் மனைவுக்கு தான் சரியாக இருக்கும் என்றால் நான் தொழிலை மனைவியிடம் நடத்த சொல்லிவிட்டு வீட்டில் சும்மா இருப்பது நல்லது. அதைவிட்டுவிட்டு பெயரை மட்டும் மாற்றி கையெழுத்து போடும் அதிகாரம் கொடுத்துவிட்டால் தொழில் மாறாது. காரணம் தொழில் முடிவு எடுப்பது நீங்கள் தான். கிரகங்கள் உங்களின் மனதில் இயங்கி முடிவை எடுக்க செய்யும். யார் கையெழுத்திட்டால் என்ன, தவறான முடிவு எடுத்தால் தொழில் என்ன ஆகும் என சிந்தியுங்கள்.

23. ஜோதிடம் ஒரு கணிதம் என்றால் ஏன் ஜோதிடருக்கு ஜோதிடர் ஏன் மாறுகிறது? 2 ம் 2ம் 4 என்றால் எல்லாரும் ஒன்று தானே சொல்ல வேண்டும்?

ஆம் ஒன்று தான் சொல்ல வேண்டும். சரியாக படித்த ஜோதிடர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள். எங்கள் ஜோதிட பயிற்சியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாகவே பலன் இருக்கும் முரண்படாது.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நடக்கும் எங்கள் அறக்கட்டளையின் ஜோதிட ஆய்வு வகுப்புக்கு வாருங்கள் அனைவரும் ஒரே பதிலை அளிப்பதை காணலாம்.

[ திரு.ஷெல்வி சொல்லுகிறார் -ஒரே காலேஜில் படித்த மருத்துவரே வேறு வேறு மாத்திரை கொடுப்பாங்க.. ]

ஜோதிடர் மருத்துவர் போன்றவர் அல்ல. அவர்கள் இரத்த பரிசோதகர்களை போன்ற ப்யோடெக்னாலஜிஸ்ட்கள். ஒவ்வொரு ரத்த பரிசோதனையும் வெவ்வேறு தகவல் தந்தால் ஒத்துக்கொள்வீர்களா? ஒன்றாக படிக்கவில்லை என்றாலும் ரத்த பரிசோதகர்களின் முடிவுகள் முரண்படாது.  மருத்துவர்க்கு தேவையான ஆய்வு தகவல் கொடுப்பது தான் இவர்கள் வேலை மருத்துவம் பார்ப்பது அல்ல..!

நாம் யார் என்ன செய்கிறோம் என்ற அடிப்படை விஷயத்திலேயே குழப்பம் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.


25. நீங்கள் ஒரிஜினல் மத்தவங்கள் எல்லாம் போலியா?

சரியான சாஸ்திர அறிவு கொண்டவர்கள் ஒரிஜினல் சுயநலத்திற்காக, பணத்திற்காக மற்றும் பிரபலத்திற்காக ஜோதிடம் பயன்படுத்தினால் போலி என கூறலாம்.

26. அடுத்த முதல்வர் யார் என பொட்டுல் அடிச்ச மாதிரி சொல்லனும்? ஒவ்வொருவர் ஒன்னு சொன்னா சரியா வருமா?

சரியாக ஜோதிட அறிவும் கல்வியும் இருந்தால் பொட்டில் மட்டுமல்ல பூவில், கம்மலில், ஜடையில் என அனைத்திலும் அடித்து சொல்லலாம். :)

27. அரைகுறை ஜோதிடர் நாட்டுக்கு கேடு அல்லவா?
அரைகுறை அறிவு ஜோதிடத்தில் மட்டுமல்ல அனைத்திலும் பிரச்சனையே.

28. ஆள் ஆளுக்கு ஒரு பதில் சொன்னா யாரை நம்புவது?
உங்களுக்கு எந்த பலன் சரியாக இருக்கிறதோ / வாழ்க்கையில் நடக்கிறதோ அதை நம்புவது நல்லது.

29. இதுக்கு சக்சஸ் ரேட் இருக்கா?

ஒவ்வொரு ஜோதிடருக்கும் இருக்கிறது. அவர்களில் ஜோதிட அறிவை பொருத்து மாறும். அனுபவத்தை பொறுத்து மாறாது. சிலர் சொல்லுவார்கள் நாம் 30 வருடமாக ஜோதிடம் பார்க்கிறேன். நான் 40 வருடமாக பார்க்கிறேன். அதனால் சக்சஸ் ரேட் அதிகம் என சொல்லுவது சரி அல்ல.

ஐந்து வருடத்தில் ஒரு பசுமாடு பால் கொடுக்க துவங்கிவிடும். 15 வருடம் ஆனாலும் காளை பால் தராது. 15 வருடம் புல் தின்ற அனுபவம் உண்டு என பால் கறக்க முயற்சி செய்ய கூடாது..! பால் தேடி செல்வது பசுவா காளையா என்பதில் முதலில் உங்களுக்கு தெளிவு வேண்டும்.

30. திருக்கணிதம், வாக்கியம் இதில் எது சரி?
வாக்கியம் என்பதும் திருக்கணிதம் என்பதும் வட மொழி பெயர்களே. வாக்கியம் என்பது பொதுவான கணக்கு. திருக்(Drig) - என்பது திசையை குறிப்பிடுவது. திசை சார்ந்து கணிப்பது திருக்கணிதம்.

வான மண்டலத்தில் உள்ள கிரகத்தின்  நிலையை ஒவ்வொரு நாளுக்கும் முன்கூட்டியே கணித்து வைப்பது தான் பஞ்சாங்கம். பூமியின் நிலையில் இருந்து

சந்திரன் எங்கே இருக்கிறது என கணிப்பதாக வைத்துக் கொள்வோம். பூமியின் விட்டத்திற்கும் சந்திரனின் விட்டத்தை கணக்கிட்டால் நீங்கள் வாக்கிய

பஞ்சாங்கம் செய்கிறீகள் என  அர்த்தம். பூமியில் சென்னையை / டெல்லியை மையமாக கொண்டு சந்திரன் எங்கே இருக்கிறது என கணித்தால் அது

திருக்கணிதம். ரேகாம்சம் / அட்சாம்சம் என்பவை திசை சார்ந்தது.

வாக்கியம் பொதுவாக கணிக்கப்பட்டதால் வாக்கிய கிரக மாற்றம் திருக்கணித கிரக மாற்றத்திற்கு சில நாள் வித்தியாசம் வரும். ஆனால் முற்றிலும் முரண்படாது. உதாரணமாக சனி வாக்கிய பஞ்சாங்கம் பிரகாரம் மேஷத்தில் இருக்கிறது என்றால், திருக்கணிதம் தனுசில் இருக்கிறது என சொல்ல மாட்டார்கள். இன்னும் துல்லியமாக மேஷத்தில் எங்கே இருக்கிறது உங்கள் ஊரின் அடிப்படையில் சொல்லுவார்கள்.

பொது நிகழ்வுகளுக்கு வாக்கிய பஞ்சாங்கம் பார்க்க வேண்டும். உதாரணமாக கோவில் திருவிழா, ஊரில் பொதுவாக கட்டிடம் கட்ட ஆகியவைகள் வாக்கிய பஞ்சாங்கத்தில் முடிவு செய்ய வேண்டும். தனிமனித நிகழ்வுகளுக்கு திருக்கணிதம் படி முடிவு செய்ய வேண்டும். நாம் எந்த ஊரில் வசிக்கிறோமே அதை பொருத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி விழாக்கள் கோவிலில் நடைபெறுவதால் வாக்கிய பஞ்சாங்கத்தில் முடிவு செய்வார்கள். ஏன் என்றால் இது அனைவருக்கும் பொழுதுவான நிகழ்வு.

[ திரு.ஷெல்வி சொல்லுகிறார் - திருத்தி அமைக்கபட்ட வாக்கியம் பஞ்சாங்கம் திருக்கணிதம். வாக்கிய பஞ்சாங்கம் என்றும் திருத்தி அமைக்கப்பட்டது இல்லை. ரிஷிகள் காலத்தில் இருந்தே அப்படி தான் இருக்கிறது. இது ஒன்றே போதும் இவரின் ஜோதிட தெளிவை அறிய.]

31. திருத்தப்பட்டது தானே செல்லும்? ஏன் வாக்கியம் இன்னும் நிலுவயில் இருக்கிறது?
திரு. பாண்டேயின் இந்த கேள்வி மிகச்சரியானது. மேலே நான் சொன்ன விளக்கம் பெற்றால், திரு.பாண்டே இந்த கேள்வி கேட்கமாட்டார். என்ன செய்ய, ஜோதிடத்தின் அடிப்படையான பஞ்சாங்கத்திலேயே குழப்பம் என்றால் திரு.பாண்டே என்ன செய்வார்?

31. ஜனவரி 8 முதல் தேர்தல் சூடு பிடிக்கும்? சரியா?

திரு.ஷெல்வி அவர்கள் -ராகு கேது பெயர்ச்சி அதனால் சூடு பிடிக்கும் என்கிறார். ராகு-கேது பெயர்ச்சி புத்தக விற்பனை வேண்டுமானால் சூடுபிடிக்கும்.

மார்ச் முதல் வாரம் சூடு பிடிக்கும் ஜனவரியில் ஒன்றும் பிடிக்காது. ராகு சிம்ம ராசியில் பிரவேசித்தவிடன் சூரியனின் நட்சத்திரத்தை கடக்கும் வரை தேர்தல் விஷயங்கள் நடைபெறாது. சுக்கிரன் நட்சத்திரத்திற்கு சென்றதும் நடைபெறும்.


32. அடுத்த முதல்வர் யார்? அதிமுக, திமுகா, மக்கள் நல கூட்டணி எது வெற்றி பேரும்?

என் குருஜி ஸ்வாமி ஓம்கார் 2015 அர்ஜண்டினா அதிபர் தேர்தல் பற்றி எழுதி இருந்தார். ஜோதிடத்தில் சொல்வது எளிது.வேறு ஊராக இருந்தால் ஜோதிடத்தில் தெரிந்து கொள்ள தலையை உடைத்துக்கொள்ளலாம். கடந்த 20 வருடங்கள் யார் ஆட்சி செய்கிறார்கள் என பாருங்கள். அடுத்த முதல்வர் யார் என கணித்து தெரிய வேண்டியது இல்லை.

33. எனது கேள்வி தனி நபர் பற்றி இல்லை. கட்சி யார் என கேட்கிறேன்.

கூட்டணியுடன் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அதாவது தி.மு.க. என்கிற கட்சி. முதல்வர் யார் என நீங்கள் கேட்காததால் கேள்வியை சாய்ஸில் விடுகிறேன்.

35. பேரிடர் தவிர்க்கனும்னா ப்ரார்த்தனை செய்யனும் சரியா?

ப்ரார்த்தனை எப்பொழுதும் செய்ய வேண்டும். பேரிடர் வந்தாலும் சரி பேரானந்தம் வந்தாலும் இறைவனை வணங்க வேண்டும். அதைத்தான் நம் சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

-----------------------------------------------------------

இச்சமயத்தில் திரு. ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் ஜோதிடத்தை ஒரு பொருட்டாக எடுத்து அதை தொலைகாட்சி விவாதமாக்குவதை வரவேற்கிறேன். அதே சமயம் திரு.யதார்த்த ஜோதிடர் போன்ற ஜோதிடர்கள் பிரபலமடைவதற்கு மட்டும் இல்லாமல் பிறருக்கு சரியாக வழிகாட்டவும் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.  

Saturday, November 1, 2014

சனிப்பெயர்ச்சி பலன் 2014

சனி  நவம்பர் 2 ஆம் தேதி முதல் விருச்சிக ராசிக்கு செல்கிறார். அவர் இன்னும் இரண்டரை வருடம் அந்த ராசியில் இருப்பார். ஜோதிடத்தில் ஒரு கிரகம் மட்டும் வைத்து பலன் சொல்வது முட்டாள் தனமான விஷயம். ஆனால் கோச்சார பலன்களில் ஒரு சதவிகிதமாவது இது வேலை செய்யும். சனி தசா அல்லது சனி புக்தி ஏதேனும் ஒன்று நடப்பவர்களாக இருந்தால் சனி அதிக வேலைகளை செய்வார்.

தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் எங்கும் சனிப்பெயர்ச்சி பலங்கள் தான். சரி நாமும் சுருக்கமாக சனிப்பெயர்ச்சி பலன் சொல்லுவோமே என கிளம்பிவிட்டேன். சனிப்பெயர்ச்சி பலன்கள் ஒரு வரியில் உங்களுக்காக....

மேஷம் - தொழில் சுனக்கம், சிறு விபத்தால் காலில் காயம்

ரிஷபம் - வழக்கு, சட்ட சிக்கல், மண வாழ்க்கையில் சஞ்சலம்

மிதுனம் - உடல் நலமின்மை, நாள்பட்ட வியாதி, சிறப்பான வேலையாட்கள்

கடகம் - குழந்தைகளால் சங்கடம், ஆன்மீக நாட்டம், வேலை இழத்தல்

சிம்மம் - சொத்து சார்ந்த விவகாரங்கள் , வாகன பழுது

கன்னி - உடன் பிறந்தவர்களுடன் பிணக்கு, பூர்வீக சொத்தில் மேன்மை

துலாம் - வரவு செலவு தாமதம், புதிய கடன், உறவினர்கள் சேர்க்கை

விருச்சிகம் - வாழ்க்கை துணைவர் வழி உறவினர்களால் சிக்கல், மன
உளைச்சல்

தனுசு - வசிப்பிடம் மாற்றம், வருமானத்திற்கு அதிகமான செலவு

மகரம் - மன மகிழ்ச்சி, எதிர்ப்பார்ப்புகள் தாமதத்துடன் பூர்த்தி ஆகும்

கும்பம் - நல்ல பெயர், பதவி உயர்வு, பொருளாதார மேன்மை

மீனம் - தந்தை உடல் நலம் குறைதல், ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம்


இவை சனிக்கிரகத்தால் ஏற்படுவது....

குரு அருளும், இறைவனின் அனுகிரகம் இருந்தால் சனி கிரகம் ஒன்றும் செய்யாது.

Tuesday, July 8, 2014

புரபசர் லூஸ்னோஸ்கியும் அரை இறுதி கால்பந்தாட்டமும்

ஜெர்மனியின்  தென்பகுதியில் உள்ள சிறிய கிராம பூங்காவில்  மாலைநேர இருளில் கைகளை இறுக கட்டிக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். கோடைக்காலம் என்றுதான் பெயர் குளிர் எலும்பை அசைத்துப்பார்த்தது.

ஏதோ யோசனையில் பூங்காவின் கடைசி பக்க புல்வெளிக்கே வந்துவிட்டேன். திரும்ப வீடுவரை செல்ல ஐந்து கி.மீ நடக்க வேண்டும். குறுக்கு வழி என்றால் பக்கவாட்டில் உள்ள மலைகுன்றை தாண்டினால் போதும் இரண்டு கி.மீ சென்றுவிடலாம். மெல்ல மலைக்குன்றில் ஏறத்துவங்கினேன்.

இதயம் வாய்க்கே வந்துவிடும் அளவுக்கு மூச்சுவாங்கியது. எப்பொழுதும் குறுக்குவழியில் பாதி வந்தவுடன் தான் நேர்வழியே தேவலாம் என தோன்றும். கொஞ்சம் தளர்வாகி நடக்கலாம் என சுற்றும் நோட்டம் விட்டேன்.

குன்றின் மேல் ஒரு கருப்பு நிற பழைய கோட்டை கண்ணில்பட்டது. பாதி செதிலம் அடைந்து உட்புற கற்கள் தெரிய ஒரு திகில் உணர்வுடன் காட்சி அளித்தது.  அந்த கோட்டையை உள்ளே பார்க்கும் நோக்கில் சென்றேன்.

வவ்வால் எச்ச நாற்றமும் கருகிய முடியின் வாசனையும் கலந்த மணம் கோட்டையில் பரவி இருந்தது. மெல்ல சுற்றியும் நோட்டம் விட்டேன். எங்கும் மாலை நேர அரை இருள் கவ்வி இருந்தது. பக்கவாட்டில் உள்ள அறையில் மங்கிய வெளிச்சம் தெரியவே பழைய கோட்டையில் யாராக இருக்கும் என தூணில் மறைந்து கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தேன்.

பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்நியன்பட பாணியில் கருப்பு அங்கி அணிந்து சிலர் கையில் துடைப்பம் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களின் முகம் சரியாக தெரியாத வண்ணம் அங்கி மறைத்து இருந்தது. அறை தீப்பந்தத்தால் ஒளி ஊட்டப்பட்டு இருந்தது.

அறையின் மறு பக்க திறப்பில் சலசலப்பு கேட்டது. அறையில் அங்கி அணிந்த அனைவரும் "புரபசர் லூஸ்னோஸ்கி" என கோஷ்மிட்டார்கள்.

சாலையை கூட்டும் துடைப்பத்தை ஸ்கூட்டர் போல  காலுக்கு இடையே வைத்து காற்றில் பறந்துவந்தார் புரபசர் லூஸ்னோஸ்கி.

அனைவரையும் பார்த்து கையசைத்துவிட்டு "இன்று நான் நம் மாய மந்திர உலகிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இன்று நடக்கும் (ஜூலை 8) பிரேசில் - ஜெர்மனி கால்பந்தாட்ட போட்டியில் ஜெர்மனி தோல்வி அடையும். இரண்டாம் பகுதியில் முல்லர் அடிக்கும் கோல் வீணாக போகும்.  நாளை (ஜூலை 9)நடக்கும் போட்டியில் அர்ஜண்டினாவின் அதிரடியை காணலாம்.மிஸ்ஸி மிஸ் செய்வதில்லை" என சொல்லி துடைப்பத்தில் அமர்ந்து பறந்தார். அறையில் இருந்த அனைவரும் திசைக்கு ஒருவராக துடைப்பத்தில் பரந்தனர். தீப்பந்தம் தானாக அணைந்தது.

வேக்குவம் க்ளீனர் கண்டறிந்த விஞ்ஞான காலத்திலும்  துடைப்பத்தில் பறக்கும் இவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே வீடுவந்தேன்.

Saturday, May 18, 2013

ப்ராணாயாமமும் ஜோதிடமும்

கடந்த ஞாயிறு அன்று திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் ஜோதிட ஐபெரும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் அடியேன் ஆற்றிய சிற்றுரையின் தொகுப்பு உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ராணாயாமம் என்ற தலைப்பில் ஜோதிட மாநாட்டில் ஆற்றிய உரை இதோ :


Sunday, April 15, 2012

நந்தன வருஷம் நல்லா இருக்குமா?

ஜோதிட சாஸ்திரத்தில் வருஷ ஜாதகம் என்ற முறையில் ஒவ்வொரு வருடமும் எப்படி இருக்கும் என்று பார்க்கும் வழக்கம் உண்டு. தமிழக சித்தர் மரபில் பெரிய வருஷாதி நூல் என்ற நூலில் தமிழ் வருடம் அறுபதுக்கும் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வெண்பா வடிவில் எழுதப்பட்ட அப்பாடல்களில் அந்த வருடம் எப்படி இருக்கும், மழை மற்றும் வேளாண்மை பற்றிய தகவல்கள் இருக்கும். ஆனால் நாகரீகம், நகரமயமாக்கல் என்று நம் வாழும் சூழலை நாம் சூறையாடிவிட்ட பின் இயற்கையை பற்றி கூறப்பட்ட அப்பாடல்கள் தற்சமயம் பயன்படுமா என தெரியவில்லை.

வேத ஜோதிடத்தின் அடிப்படையில் இவ்வருடம் எப்படி இருக்கும் என முதலில் பார்ப்போம்.

மேஷ ராசியில் குரு,சூரியன், ரிஷபத்தில் கேது- சுக்கிரன், சிம்மத்தில் செவ்வாய், துலா ராசியில் சனி வக்ரத்தில், மகரத்தில் சந்திரன், மீனத்தில் புதன் இருக்க இவ்வருடம் பிறந்திருக்கிறது.இக்கிரக அமைப்பால் நமக்கு ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்

1) அரசியலில் மாற்றம் உண்டாகி மந்திரிகள் மற்றும் தலைமை பீடத்தில் இருப்பவர்களின் அதிகாரம் மாற்றப்படும். ஊழல்வாதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபடுவார்கள்.
2) மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டு பகிர்மானம் ஓரளவு சீராகும்
3) விளையாட்டு அரங்கில் இந்தியா கவனிக்கப்படும் நாடாக அமையும்.
4) பொருளாதார வீக்கம் சீராகும்.
5) வெளிநாட்டு முதலீடுகள் பங்களிப்புகள் உயரும்.
6) ஆன்மீக தேடலும் ஆன்மீக சேவை அதிகரிக்கும்
7) உதவும் மனப்பான்மையும் சேவைகள் அறக்கட்டளை பணிகள் விரிவடையும்.

கிரகத்தால் இவ்வருடம் ஏற்படும் தீமைகள் என்ன என பார்ப்போம்

1) வேளாண்மை குறையும். மழை, நிலத்தடி நீர் அளவு குறையும்.
2) பெண்களுக்கு பாதுகாப்பின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மிகும்.
3) கலாச்சார தன்மைகள் வேறுபட்டு இளைஞர்கள் தடம் மாறுவார்கள்.
4) இயற்கை சீற்றங்கள் குறிப்பாக நில அதிர்வு மற்றும் குண்டு வெடிப்பு மூலம் குழு மரணம் நிகழும்.
5) புதிய வகை தொற்று நோய்கள் பரவும்.
6) மக்களின் உரிமைகள் பாதிக்கும் புதிய அடக்கு முறை சட்டங்கள் இயற்றப்படும்.
7) அதிக பொருளாதார ஆசை காட்டும் நிதி நிறுவன மோசடிகள் பெருகும்.

ராசி பலன் எழுதுவதில் என்றும் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை. ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் தனித்துவமானது. இறைவனின் படைப்பு அப்படிபட்டது. ஒவ்வொருவருக்கும் அவர் அவர் ஜாதகமே பலனை அளிக்கும். இந்திய மக்கள் அனைவரையும் 12 ராசிகளுக்குள் பிரித்து பலன் சொல்லுவது முட்டாள்தனம் அல்லவா?. இருந்தாலும் 12 ராசிகளின் பலன்களை சுருக்கமாக இங்கே தருகிறேன். சொல்லப்பட்ட பலனில் 1% உங்கள் வாழ்க்கையில் நடந்தாலே அது மிகப்பெரிய வெற்றி. 

மேஷம் : வேலை-இடமாற்றம், நல்ல வருமான சேர்க்கை, வாழ்க்கை துணைவருடன் பிரச்சனை
ரிஷபம் : உடல் நலத்தில் சிக்கல், கோர்ட் வழக்கு, புதிய சொத்துக்கள் சேர்க்கை, பயணம்
மிதுனம் : புதிய தொழில், புகழ், குழந்தைகளால் பிரச்சனை, சபலத்தால் மதிப்பு இழத்தல்
கடகம் : உடல் புத்துணர்வு, புதிய தொடர்புகள், அரசு சார்ந்த உதவி, அதிகாரம்.

சிம்மம் : ஆன்மீக பயணம், உடல் நலமின்மை, பொருளாதார தேக்க நிலை, தைரிய குறைவு
கன்னி : திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணைவரை பிரிதல்- கருத்து வேறுபாடு, அரசு சார்ந்த சிக்கல், கடல் தொல்லைகள்.
துலாம் : வருமான வளர்ச்சி, புதிய திட்டங்கள், தாய் வழி சொத்து சேர்க்கை, உடல் நலமின்மை
விருச்சிகம் : தொற்று நோய், சிறந்த தொழில் வளர்ச்சி, இடமாற்றம், பெரியோர்கள் மூலம் உதவி பெறுதல்

தனுசு : ஆன்மீக ஈடுபாடு, குழந்தைகள் மூலம் வளர்ச்சி, சோம்பல் அதிகரிப்பு, கண் நோய்
மகரம் : வாழ்க்கை துணைவர் மூலம் வளர்ச்சி, தகவல் பிழையால் இழப்பு, பூர்வீக சொத்தில் மாற்றம்.
கும்பம் : அரசு சார்ந்த உதவி, தொழிலில் / வேலையில் மறைமுக எதிரிகள், வழக்கில் தோல்வி, நம்பிக்கை இன்மை
மீனம் : உடல் எடை குறையும், பொருளாதாரம் அளவுக்கு அதிகமாக பெருகும், கெட்ட சகவாசம் ஏற்படும், பழிச்சொல் விழும்.

டிஸ்கி :
மேற்கண்ட பொதுப்பலன்களும் தனி ராசிகளின் பலன்கள் மனித அறிவு கொண்டு ஜோதிடனால் கணிக்கப்பட்டது. இறையருளினால் மெய்ஞான துணை கொண்டு ப்ரார்தனை செய்தால் இவை பொய்த்துப்போகும்.

Wednesday, October 12, 2011

தேவ பிரசன்னம் - பகுதி 8

கடவுளுடன் நேரடியாக மனிதன் உரையாட தேவப்பிரசன்னம் ஓர் வழி என முன்பு கூறினேன். இறைவனே நேரடியாக கோவில் எத்தகைய சூழல் அமைக்க வேண்டும் என சொல்லுவது மிகவும் சிறப்பல்லவா? தமிழக கோவில்களில் ஆகம சாஸ்திரம் என்று கோவில் நிர்மாணம் செய்யும் சட்டம் உண்டு. இச்சாஸ்திரம் தற்சமய தமிழக கோவில்களில் 30 சதவீதம் கூட கடைபிடிப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது.

கேரள கோவில்களில் ஆகமம் வேலை செய்யாது. பரசுராமரின் வழி வந்தவர்கள் மந்திர, தந்திர பாதைகளில் செல்வதால் அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தை தேவப்பிரசன்னம் என்ற முறையில் பயன்படுத்துகிறார்கள். தேவப்பிரசன்னம் என்பதே ஒரு தாந்ரீக முறை தான்.

தாந்த்ரீக முறைகளில் எப்பொழுதும் ஒரு குறை இருக்கும். சராசரி மனிதன் உண்மையான தாந்த்ரீகரை கண்டாலும் போலியானவரை கண்டாலும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது. நம் ஆட்களுக்கு மோடி மஸ்தானும் தாந்த்ரீகன் தான், செய்வினை செய்பவனும் தாந்த்ரீகன் தான்- இவர்கள் இருவருமே தாந்த்ரீகர்கள் இல்லை என்பதே நமக்கு தெரியாது.

இதுபோலவே கோவிலில் பிரசன்னம் பார்ப்பவர்கள் எல்லோரையும் நாம் தேவப்பிரசன்னம் பார்ப்பவர்கள் என முடிவு செய்கிறோம்.

சபரி மலை மற்றும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் நடந்த பிரசன்னம் உண்மையா?

டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத சீசன் நடைபெறும். அப்பொழுது பிரபலமாகாத சில பாடகர்கள் சபாக்களுக்கு தாங்களே காசு கொடுத்து அல்லது சிபாரிசு மூலம் கச்சேரி செய்வார்கள். இதனால் தங்களுக்கு புகழ் வெளிச்சம் கிட்டும் என்பது அவர்களின் எண்ணம். அப்படி செய்தாலும் திறமை இருப்பவனையே உலகம் பேசும். திறமையற்றவனை அத்தருணத்தில் பேசும் அப்புறம் உலகம் மறந்துவிடும்.

அதுபோலத்தான் சிலர் சிபாரிசின் பேரிலும், பணம் மூலமும் இக்கோவில்களில் பிரசன்னம் பார்த்தார்கள். அனைத்தும் வீணானது. கோவில் நிர்வாகத்தின் கோளாரால் வந்த வினை. தேவனுக்கு பிரசன்னம் பார்க்கச் சொன்னால் ஜெயமாலாவிற்கு பிரசன்னம் பார்க்கிறார்கள் நம் ஜோதிட மேதைகள்.ஒரு மாநில முதல்வருக்கு ஜோதிடம் பார்த்தவர் என்பதற்காக அவருக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும் அறிவு வந்துவிடுமா? கோவிலின் பெயரும், ஜோதிடரின் பெயரும் கெட்டது தான் மிச்சம். திருவனந்த புரத்திலும் கோவில்காரர்களின் முடிவே அங்கே தேவப்பிரசன்ன பலனாக கூறப்படுகிறது. நமக்கு தேவனா முக்கியம்? புதையல் தானே முக்கியம்...!

இவர்கள் செய்யும் தவறுகள் நீண்டு கொண்டே செல்லுகிறது... முடிவு இறைவனின் கையில்...

கேரளாவில் இன்றளவும் பல்வேறு இடங்களில் தேவப்பிரசன்னம் சிறப்பாக செயல்படுகிறது. பிரபலமான கோவில் என்றால் குருவாயூரை உதாரணமாக கூறலாம். அங்கே தேவப்பிரசன்னம் வைக்கப்பட்டால் அப்பலன்களை சொல்ல ஒரு திருமண மண்டபத்தை எடுத்து அதில் ஐநூறுக்கும் மேம்பட்ட ஜோதிடர்கள் கலந்து ஆலோசிப்பார்கள். நன்றாக ஜோதிடம் தெரிந்த ஆட்கள் அங்கே இருந்தாலே தலை வெடித்துவிடும். ஒவ்வொருவரும் சாஸ்திரத்தை கரும்பு சக்கை பிழிவதை போல பிழிந்து எடுப்பார்கள். இப்படி பட்ட நிகழ்வுகளை பார்த்து பழகி பங்கெடுத்தவர்களுக்கு தேவப்பிரசன்னம் என்ற பெயரில் போலியாக செய்பவர்களை கண்டால் என்ன தோன்றும்?

நம் சாஸ்திரங்களை இன்றும் நாம் இழந்துவிடவில்லை. வரும் காலத்தில் நம் சந்ததியினருக்கு வழங்க நாம் ஒரு சதவிகிதமேனும் முயல வேண்டும்.

ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்பில் தேவப்பிரசன்னம் மூலம் கோவிலின் ஆற்றலை மேம்படுத்தும் செயல் செய்துவருகிறோம். நீங்கள் சார்ந்த கோவில்களுக்கு ஏதேனும் தேவப்பிரசன்னம் மூலம் உதவி வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள். இறையாணையாக ஏற்று உதவுகிறோம்.

-பிரசன்னாகியது-

Monday, October 3, 2011

தேவப்பிரசன்னம் - 7

கோபம், மோகம், தாபம் மற்றும் பொறாமை போன்ற குணங்கள் நம் இயற்கை இயல்பு இல்லை. எப்பொழுது ஒருவரின் அஹங்காரத்தை நீங்கள் அவமதிக்கிறீர்களோ அப்பொழுது கோபம் என்பது அஹங்காரத்தின் பதிலாக இருக்கும். அஹங்காரத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடும் பொழுது மோகம் ஏற்படும். அஹங்காரத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிடில் தாபம் ஏற்படும். அஹங்காரம் தனக்கு கிடைத்ததை பிற அஹங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பொறாமை ஏற்படும். பார்த்தீர்களா இந்த அஹங்காரம் எத்தகை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இயல்பில் ஆனந்தமான நமக்கு இந்த அஹங்காரத்தாலேயே குழப்பங்கள் கூடுகிறது.

தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிடக்குழுவினர் ஆன்மீகத்தைவிட ஆணவம் அதிகமாக இருந்தது. தாங்கள் கணித்தவை தவறாகுமா என ஒரு மிதப்பு அவர்களிடம் இருந்தது. அந்த ஆணவக்கோட்டையின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்தார் அந்த பொதுநபர்.

“தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது?” என கேள்வியை மட்டும் அவர் எழுப்பவில்லை.. ஜோதிடர்களின் ஆணவத்தையும் தட்டி எழுப்பிவிட்டார்.

தன் நிலையை மறந்து அந்த ஜோதிட குழு தலைவர், “அதிகப்பிரசங்கி தனத்திற்கு இது இடமல்ல. சாஸ்திரங்கள் பயின்ற எங்களுக்கு உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்ய நேரம் இல்லை” என கூறி முகத்தை திருப்பிக்கொண்டார்.

“சாஸ்திரம் உங்களுக்குள் சென்றதும் உங்களையே மறந்துவிடும் நீங்கள்.. எங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியுமா?”என கூறிய அந்த நபர் பின்பு தொடர்ந்து பேசத் துவங்கினார்....

“பிரசன்னத்தில் 8ஆம் வீட்டில் ராகு அமர்ந்து 10ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இதை எப்படி விதவைப்பெண் அசுத்தம் செய்தாள் என கணித்தீர்கள்.? 10ஆம் வீடு தலைமை பூஜாரியை (மேல்சாந்தி) குறிக்கும். அப்படியானால் அவர் 8ஆம் வீட்டில் உள்ள ராகுவுடன் தொடர்பு கொள்கிறார். ஆக ராகு என்ற விதவைக்கு களங்கம் மேல் சாந்தி தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் மாற்றி சொல்லுகிறீர்கள். சில நாட்களுக்கு முன் சூரிய உதய கால பூஜை முடிந்ததும் ஒரு விதவை பெண் மேல் சாந்தியிடம் அர்ச்சனை செய்ய வந்தார். காலையில் விதவையை சந்திப்பதா? என நினைத்து அவரை அவமதித்துவிட்டார் மேல்சாந்தி. இச்செயலே பிரசன்னத்தில் வெளிப்பட்டிருக்கிறது.இறைவன் முன் அனைவரும் சமம் அல்லவா? மேல் சாந்தியிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்” என ஒரே மூச்சில் முழங்கிவிட்டு அசுவாசமானார்.

அனைவரின் பார்வையும் மேல்சாந்தி மேல் திரும்பியது. உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவர் ஜோதிட குழுவினரின் முன் கைகூப்பி நின்றார். அவரின் தலை கவிழ்ப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதை காட்டியது.

தங்களுக்கு தெரியாத விஷயத்தை அற்புதமாக சுட்டிகாட்டியவரை நோக்கி திரும்பினார் அங்கே வெற்றிடமே இருந்தது. அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள்.

விதவைப் பெண்ணை அவமதித்த செயலுக்கு பிராயச்சித்தமாக அப்பெண்ணை கோவில் தலைவராக்கி தினமும் அவளுக்கே முதல் மரியாதை செய்தார்கள்.

ஜோதிடர்களும் தங்கள் தவறு செய்தால் தலையில் அடித்து சொல்லித்தர ஒருவர் இருக்கிறார் என மனம் மகிழ்ந்தார்கள்...

தேவப்பிரசன்னம் என்பது இறைவனுடன் உறவாடும் ஒரு செயல் என்பதால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஒவ்வொரு ஷணமும் அதியம் நிறைந்தது. இக்கருத்தை அனுபவித்தாலே புரிந்துகொள்ள முடியும்.

சாமீ...இவ்வளவு அதிசயம்னு சொல்றீங்களே அப்ப சபரிமலையில நடந்த தேவப்பிரசன்னம்... திருவனந்தபுரத்தில நடந்த தேவப்பிரசன்னம் பத்தி சொல்லுங்க... அது எல்லாம் உண்மையா?

ஹீ..ஹி...ஹீ...

(பிரசன்னமாகும்)

Saturday, September 17, 2011

தேவப்பிரசன்னம் - பகுதி 6

ஜாதக சக்கரத்தில் பன்னிரெண்டு வீடுகள் இருப்பது நீங்கள் பார்த்திருக்கலாம். மனிதனுக்கு பன்னிரெண்டு வீடுகளில் ஏற்படும் பலன்களை ஜோதிடர் ஆய்வு செய்வார். லக்னம், தனம், தைரியம், சுகம் என பல்வேறு தன்மைகளில் ஜோதிடம் மனித வாழ்க்கையை பன்னிரெண்டு வகையான அடிப்படையில் பிரிக்கிறது.

மனிதவாழ்க்கையை போலவே தேவப்பிரசன்னத்தில் பன்னிரெண்டு வீடுகள் கோவிலின் தன்மையை இவ்வாறு குறிக்கும்

முதல் வீடு - கோவிலில் இருக்கும் இறைவனின் தன்மை
இரண்டாம் வீடு - கோவிலின் பொருளாதர நிலை
மூன்றாம் வீடு - பிரசாதம் செய்பவர் அல்லது மடப்பள்ளி
நான்காம் வீடு - கோவிலுக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் அலங்கார பொருட்கள்
ஐந்தாம் வீடு - இறை அருள் இருக்கும் தன்மை (சாநித்யம்)
ஆறாம் வீடு - கோவிலில் நடக்கும் தவறான செயல்கள்.
ஏழாம் வீடு - பக்தர்கள், கோவிலில் வழிபடுபவர்கள்
எட்டாம் வீடு - கோவிலில் நடக்கும் திடீர்செயல்கள் மற்றும் அசுத்தம்
ஒன்பதாம் வீடு - கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்
பத்தாம் வீடு - கோவில் பூஜாரி, மேல் சாந்தி
பதினோராம் வீடு - கோவிலில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள்
பன்னிரெண்டாம் வீடு - கோவிலில் இருக்கும் பழமையான பொருட்கள் மற்றும் பாரம்பரிய தன்மை

இக்கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்திருக்கும் கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப பலன் கூறுவார்கள்.

சரி மனிதனுக்கு பார்க்க ஜாதகம் இருக்கும். இறைவனுக்கு எப்படி பார்ப்பது? இறைவனுக்கு ஜாதகம் கிடையாதே? அவன் பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில் இருப்பவன் ஆயிற்றே என உங்களுக்கு தோன்றலாம். அதனால் தான் பிறப்பு ஜாதகம் பார்க்காமல் பிரசன்ன முறையில் கணிக்கப்படுகிறது. அதனால் இதற்கு தேவப்பிரசன்னம் என்கிறோம்.

தேவப்பிரசன்னம் செய்ய முதலில் யாகங்கள் செய்து, ஜாதக சக்கரத்தை கோவிலின் வடக்கு பகுதியில் வரைந்து கொள்வார்கள். பிறகு இறைவனை ஜாதக சக்கரத்தின் மையத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அச்சமயம் கோவில் கருவறையை பூட்டிவிடுவார்கள். இறை ஆற்றல் ஜாதக சக்கரத்தில் இருக்கும் அதனால் கருவறையை மூடிவிடும் சம்ப்பிரதாயம் உண்டு.

ஓம் என ஒரு பக்கம் எழுதப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு காசு, சில பூக்கள் மற்றும் அக்‌ஷதை இவற்றை ஒரு குழந்தையின் கையில் அளிப்பார்கள். கூட்டத்தில் உள்ள 11 வயதுக்கு உட்பட்ட குழந்தையாக தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து 12 ராசி கட்டங்களில் ஏதேனும் ஒரு ராசிகட்டத்தில் வைக்க சொல்லுவார்கள். மூன்று முறை ராசி கட்டத்தை வலம் வந்து அந்த குழந்தை எந்த ராசியில் கையில் உள்ள காசை
வைக்கிறதோ அதுவே லக்னம் என கொள்ளப்படும்.

காசு இருக்கும் ராசி முதல் வீடாக கொண்டு பண்ணிரண்டு ராசிகளின் பலன்களை கிரகிப்பார்கள். இச்செயலை ஒரு பல ஜோதிடர்கள் கொண்ட குழு செய்வார்கள்.இவ்வாறு ஒரு கோவிலில் ஜோதிடர்கள் தேவப்பிரசன்னம் பார்க்கும் பொழுது எட்டாம் இடத்தில் ராகு என்ற கிரகம் இருந்து, அந்த கிரகத்தை பத்தாம் வீட்டில் உள்ள கிரகத்துடன் தொடர்பு கொண்டதால் கோவிலில் அசுத்தம் நடைபெற்றுள்ளது என முடிவு செய்தார்கள்.

ராகு என்ற கிரகம் அமர்ந்து அது பெண் ராசியாக இருந்ததால் விதவை பெண் ஒருவரால் இவ்வகை அசுத்தம் நடைபெற்றிருக்கும் என்று முடிவு செய்து அதை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்கள். மேலும் கோவில் நிர்வாகிகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் இக்கூட்டத்தில் இருக்கும் விதவைப்பெண்கள் யாரேனும் இவ்வாறு அசுத்தம் செய்திருந்தால் மனம் உவந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

திடீரென அக்கூட்டத்திலிருந்து வந்த ஒருவர், ஜோதிடக்குழுவை பார்த்து. அது எப்படி நீங்கள் விதவை பெண்ணால் அசுத்தம் என கூற முடியும்? என கேட்டார். பார்க்க ஒரு சாதாரண குடியானவன் இப்படி கேள்வி கேட்டதும் குழம்பினார்கள் ஜோதிடர்கள். உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா என கேட்டனர்.

அந்த குடியானவர் சொன்னார் ,

“தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது?”

(பிரசன்னமாகும்)

Tuesday, August 30, 2011

தேவப்பிரசன்னம் பகுதி 5

தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை மிகவும் வித்தியாசமானது. பல்வேறு வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தழுவி பார்க்கப்படும் ஜோதிட முறையாகும். சாதாரண மனிதனுக்கே ஜோதிடம் பார்க்க ஜோதிடர் எத்தனையோ சூத்திரங்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது அல்லவா? அப்படிப் பார்த்தால் கடவுளுக்கே ஜோதிடம் பார்க்க எவ்வளவு ஆற்றலுடன் பார்க்க வேண்டும் என யோசித்துப் பாருங்கள்.

ஜோதிடரிடம் நாம் ஆருடம் பார்க்க செல்லும் பொழுது நாம் வரும் நேரத்தை கொண்டு அவர் கிரகங்களை கணிப்பார். நாம் அவரின் இடம் விட்டு அகன்றதும் ஜோதிடர் நம்மை பற்றிய விஷயங்களை விட்டு அடுத்தவருக்கு ஜோதிடர் பார்ப்பார்.

ஆனால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்கள் ஜோதிடத்தை கோவில்களில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்பதி நியதி. எளிமையாக சொல்லுவதானால் மனிதன் ஜோதிடரை தேடி செல்ல வேண்டும், தேவப்பிரசன்னத்தில் ஜோதிடர் கடவுளை தேடிப்போக வேண்டும்...!

கோவிலை நோக்கி பிரசன்னம் பார்க்க வீட்டை விட்டு கிளம்பும் நேரம், அச்சமயம் நடக்கும் சம்பவங்கள் (நிமித்தம்) துவங்கி கோவிலில் பிரசன்னம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேரும் வரை ஜோதிடர் அனைத்தையும் குறிப்பு எடுத்துக்கொள்வார். அவர் வீடு முதல் வீடு வரை நடந்த நிகழ்வுகள் கோவிலில் ஏற்பட்ட ஆருடம் இவை அனைத்தையும் ஒன்றினைத்து அடுத்த நாள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.

இதில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவெனில் தேவப்பிரசன்னம் குழுவாகத்தான் பார்ப்பார்கள் என்றேன் அல்லவா? அவ்வாறு குழுவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் வீடு முதல் வீடு வரை நிகழ்வுகளை கவனிப்பார்கள். வெவ்வேறு ஊரில் இருந்து வந்து செல்லும் ஜோதிடர்களுக்கு, அடுத்த நாள் அனைவரும் கூடி விவாதிக்கும் பொழுது எல்லோருக்கும் நடந்த சம்பவம் மிகச்சரியாக ஒன்று போலவே இருக்கும். அனைவரும் பார்த்தது, கேட்டது, பேசியது என ஏதோ புரோக்கிராம் செய்தது போல இருக்கும்...!

நிமித்த அடிப்படையில் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருப்பதை கொண்டு இயற்கை அனைவருக்கும் பொதுவாக ஏதோ ஒரு கருத்தை கூற விரும்புகிறது என கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள்.

கோவிலுக்கு செல்லும் பொழுது நடக்கும் நிகழ்வுகள் இறந்தகாலத்தையும், கோவிலில் கிடைக்கும் பிரசன்னம் நிகழ்காலத்தையும், கோவில் முதல் வீடு வரை வரும் நேரம் நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தையும் குறிக்கும் என்பது தேவப்பிரசன்னத்தின் அடிப்படை சூத்திரமாகும்.

உதாரணமாக கோவிலுக்கும் செல்லும் நேரத்தில் அசிங்கமான அருவெறுப்பான விஷயங்களை காண நேர்ந்தால் கோவிலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவமானங்கள் நடந்து உள்ளது என்று குறித்துக்கொள்வார்கள். கோவிலில் கிடைக்கும் பிரசன்னத்தின் விடை முன்பு நடந்த செயலால் தற்சமயம் இறைநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது எவ்வாறு இருக்கிறது என்பதை உணர முடியும். பின்பு வீட்டிற்கு வரும் சூழல் நடக்கும் சம்பவங்கள் இனிவரும் காலத்தில் இறை நிலை கோவிலில் எவ்வாறு மேம்படுத்த முடியும் அல்லது நிலைபடுத்த முடியும் என்பதை காட்டும்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாள் பிறகு இரு நாட்கள் எடுத்துக்கொண்டு ஜோதிட குழு விவாதம் செய்யும். பிறகு அவர்கள் செய்த ஆய்வை பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே வெளியிட வேண்டும் என்பது நியதி. கோவில் நிர்வாகத்திடமோ அல்லது கோவில் சார்ந்த ஆட்களிடமோ பிரசன்ன பலன்களை தனியே கூறக்கூடாது. அவர்களையும் பொதுமக்களுடன் நிற்க சொல்லியே கூற வேண்டும் என்பது தேவப்பிரசன்னம் கூறும் நியதியாகும்.

ஜோதிடர்கள் குழு கூறும் பலன்களை பொதுமக்களுக்குள் அமர்ந்திருக்கும் ஜோதிடம் தெரிந்தவர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். அதற்கு ஜோதிட குழு தக்க பதில் கூற வேண்டும்.

நாங்கள் தேவப்பிரசன்னமே பார்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் என ஆணவம் இல்லாமல், பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு மிகப்பணிவுடன் பதில் கூற வேண்டும்.

லக்னத்தில் இவ்வாறு கிரகம் இருந்ததற்கு இன்ன பலன் என நீங்கள் கூறுகிறீர்கள் ஏன் இப்பலன் இவ்வாறு இருக்கக்கூடாது என ஒருவர் கேள்வி எழுப்பினால், ஏன் அவ்வாறு செயல்படாது என மிகவும் தன்மையாக விளக்க வேண்டும்.

உனக்கு ஜோதிடம் எந்த அளவு தெரியும்? இதையெல்லாம் கேள்வி என்று கேட்கிறாயா என அவர்களை கேட்கும் அதிகாரம் ஜோதிடர்களுக்கு இல்லை..! ஏன் என்றால் தேவப்பிரசன்னம் என்ற பணி செய்ய வந்தவர்களே தவிர அவர்கள் இறைவன் கிடையாதே..!

ஒரு முறை தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிட குழு ஒரு தவறு செய்துவிட்டது. அத்தவறு மிகவும் முட்டாள் தனமானது. ஆனால் மனிதர்கள் தங்கள் மூளையால் கண்டுபிடிக்க முடியாத சிக்கல் கொண்டது..! ஜோதிடக்குழு பொதுமக்களின் முன்னிலையில் பலன் விளக்கும் பொழுது அதை ஒருவர் கண்டறிந்து ஜோதிடர்களை சரியாக்கினார்.

மனிதனால் கண்டறிய முடியாததை ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் வேறு யாராக இருக்க முடியும்?

(பிரசன்னமாகும்)

Sunday, August 28, 2011

தேவப்பிரசன்னம் பகுதி 4


“அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!” என அந்த ஜோதிடர் கூறியவுடன் ஊர் மக்கள் திகைத்தார்கள்.

நீங்கள் வெளியூரை சேர்ந்தவர் கொடி ஏற்றும் பொழுது ஏதேனும் விபரீதம் நடந்தால் எங்கள் ஊருக்கு அது அவப்பெயராக ஆகிவிடும். மேலும் சாஸ்திரம் கற்ற உங்களுக்கு விபரீதம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

“நானாக இம்முடிவை எடுக்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்தியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இறைவனின் சன்னிதியில் நடக்கும் இறப்புக்கு ஒரு விடையை நாம் கண்டறிய வேண்டும். என்னை கொடியேற்ற அனுமதியுங்கள்” என ஜோதிடர் கூறினார்.

திருவிழா கொடியேற்றும் நாளும் வந்தது. கோவில் புதுபொலிவுடன் காட்சியளிக்கப்பட்டது. ஊர் மக்கள் பக்தியுடனும் ஒருவித பய உணர்வுடன் குழுமி இருந்தனர். கோவிலின் உள்ளே கொடி பூஜை செய்யப்பட்டது. செண்டை மேழம் முழுங்க, துந்துபிகளும் கொம்பும் ஒலிக்க கொடி கோவிலின் பலிபீடம் அருகே கொண்டு வரப்பட்டது.
கொடியேற்றும் தருணம் வந்தது. மேழம் உச்ச நிலையில் வாசிக்கப்பட்டது. கொடிமரத்தையும் கொடியையும் ஜோதிடர் விழுந்து வணங்கினார்.

வணங்கி எழுந்தவர் கொடியேற்றாமல் திடிரென செண்டை மேழம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒரு முதியவரின் இரு கைகளை பிடித்துக் கொண்டார். மங்கள ஒலியுடன் இருந்த கோவில் திடீரென நிசப்தமாகியது.

என்ன நடக்கிறது என மக்கள் புரியாமல் பார்க்க.. ஜோதிடர் அந்த முதியவரை பார்த்து கேட்டார், “ஏன் இப்படி செய்கிறீகள்? இறைவன் சன்னிதிக்கு முன் ஏன் இந்த விபரீதம்? உண்மையை இறைவன் முன்னால் கூறுங்கள்”

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர் பெருங்குரல் எடுத்து அழுதார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த முதியவர் உண்மையை கூறத் துவங்கினார்.


“இக்கோவிலில் சிறுவயது முதல் நான் மேழம் வாசிக்கிறேன். என் பன்னிரெண்டு வயது முதல் செண்டை மேழம் கற்று வந்தேன். செண்டை தாளத்தில் ஒருவிதான வாசிப்பு முறையை என் குருவிடம் கற்றேன். . செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார். இசையின் மூலம் தற்காப்பு கலையை ரகசிய பயிற்சியாக கற்றுக்கொண்டேன். என் சிறிய வயதில் அதை சோதிக்க எண்ணி இக்கோவில் கொடியேற்றத்தில் பயன்படுத்தினேன். என் வாசிப்பால் ஒரு விளைவு ஏற்படுவதை கண்டு எனக்குள் ஒருவித பெருமிதம் அடைந்தேன்.

யாரும் இதை கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் இங்கே செய்து பார்த்தேன். என் வாசிப்பே பலரது மரணத்திற்கு காரணமாக இருந்தது. இனி இதுபோல செய்ய மாட்டேன், இனிவரும் காலத்தில் யாருக்கும் இம்முறையை கற்றுக்கொடுக்க மாட்டேன். இறைவனும் ஊர்மக்களும் என்னை மன்னிக்க வேண்டும். ” எனக் கூறு ஊர் மக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.

அவரை தவிர்த்து பிறர் வாசிக்க, கொடியேற்றப்பட்டது. திருவிழா துவங்கியது. ஜோதிடரின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள். இது எப்படி சாத்தியம் என வியப்புடன் ஜோதிடரிடம் கேட்டார்கள்.

“தேவப்பிரசன்னம் வைக்கும் பொழுது சத்ருஸ்தானம் மற்றும் அபஸ்தானம் என்னும் இடத்தில் மாந்தியுடன் சனி என்ற கிரகம் அமர்ந்து கேடு பலனை அளித்து வந்தது. சனி அமர்ந்த ராசி காற்று ராசி இவைகளை முடிவு செய்து பார்க்கும் பொழுது முதிய வயதுடைய(சனி) மேழம்(காற்று-ஒலி) வாசிக்கும் ஒருவரால் அமங்கலம் ஏற்படுகிறது என்பதை கண்டுகொண்டேன். உதய லக்னத்திற்கு சனி நான்காம் இடத்தில் இருந்தது என்பதையும் குறித்துக் கொண்டேன்.

கொடியேற்றும் நாளில் பலிபீடத்தின் அருகே நின்று வாசித்தவர்களில் ஒரு முதியவர் நான்காவது நபராக நின்று வாசித்துக் கொண்டிருந்தார். அவர் இச்செயலுக்கு காரணம் என பிரசன்ன ரீதியாக முடிவு செய்து கண்டறிந்தேன்” என்றார்.

பதினைந்து வருடத்திற்கு பிறகு ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினார்கள்.

தேவப்பிரசன்னம் என்பது ஒரே ஒரு ஜோதிடர் மட்டும் பார்க்கப்படும் ஜோதிடம் அல்ல. குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். மேலும் அந்த ஜோதிடர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் சாஸ்திரம் நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.

இக்குழுவுக்கு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் பிரசன்ன ஜாதகத்தில் கண்ட விஷயங்களை நான்கு நாட்கள் விவாதிப்பார்கள் பிறகே கருத்துக்களை வெளியிடுவார்கள்.

மேற்சொன்ன சம்பவத்தின் பொழுது நானும் ஜோதிடக்குழுவில் ஒரு நபராக இருக்கும் அனுபவம் வாய்க்கப்பெற்றேன். தேவப்பிரசன்னம் என்னும் சாஸ்திரத்தை கற்றும் அதை அனுபவ ரீதியாக உணர்ந்தும் கொண்டதாலேயே உங்களுடன் இக்கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிகிறது.

சரி...தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது? படிபடியாக விளக்குகிறேன்..

(பிரசன்னமாகும்)

Tuesday, August 23, 2011

தேவப்பிரசன்னம் பகுதி 3

தென்னிந்தியாவில் கேரள கட்டுமான முறைக்கும் தமிழக முறைக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள். கோவில்களின் கூறை தமிழகத்தில் கற்களால் கட்டப்பட்டால் கேரளாவில் ஓடு கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். பூஜை விதிகள் ஒன்றாக இருந்தாலும் ஆகமம் என்ற நிலை கேரளாவில் வேறு தமிழக கோவில்களில் வேறாக அமையும்.

இதற்கு காரணம் பரசுராமர் கேரளாவை உருவாக்கி அதன் பூஜா முறைகளை நிர்ணயம் செய்தார் என புராணங்கள் கூறுகிறது. அவ்வாறு நிர்ணயம் செய்யும் பொழுது இதற்கு முன் இருக்கும் செயல் முறைகளில் சில மாற்றங்கள் செய்தார். பிற்காலத்தில் பூஜா முறைகளில் சந்தேகம் வந்தாலோ அல்லது கோவிலின் இறை நிலை அமைப்பை மேம்படுத்துவதற்கு ஆலோசனை தேவைப்பட்டால் யாரிடம் கேட்பது?

இறைவனிடத்திலேயே கேட்டுக்கொண்டால் பிரச்சனை தீர்ந்தது அல்லவா? இறைவனுடன் ஐம்புலன் கொண்டு பேசுவது என்பது அனைவருக்கும் சாத்தியம் அல்ல. மேலும் ஒருவர் நான் இறைவனிடம் பேசிவிட்டேன் இப்படித்தான் செய்யச்சொன்னார் என பொய் கூறவும் வாய்ப்பு உண்டு.

இதனால் இறைவனுடன் பாமரனும் உரையாட பரசுராமரால் ஊக்குவிக்கப்பட்ட முறையே தேவப்பிரசன்னம்..!

கோயில் நடை முறைகளில் இறைவனின் ஆற்றல் அங்கே நிலை நிறுத்தப்படுகிறது. இறையாற்றல் எல்லா இடத்திலும் இருந்தாலும், வழிபாட்டு ஸ்தலங்களில் முழுமையாக குவிக்கப்பட்டு மக்கள் முழுமையாக உள்வாங்கும் தன்மையில் அமைக்கப்பட்டது.

இவ்வாறு மக்கள் உள்வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது அங்கே நிறுவப்பட்டுள்ள இறையாற்றல் முழுமையாக குவிக்கப்படாமல் இருந்தாலோ கோயில் இருந்து பிரயோஜனம் இல்லை அல்லவா? அச்சூழலில் தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டு இறையாற்றல் நிலை நிறுத்த என்ன செய்ய வேண்டும் ? ஏதேனும் யாகங்கள் அல்லது மந்திர ஜபம் செய்ய வேண்டுமா என முடிவு செய்யப்படும்.

கேரளக் கோவில்களில் தெய்வீகத்தன்மை நிறைந்திருக்க இதுவும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

கோயில் திருவிழாவிற்கு முன் ஒவ்வொரு வருடமும் தேவப்பிரசன்னம் பார்க்கும் முறை வழக்கத்தில் உண்டு. இன்றும் பல கோவில்களில் பார்க்கப்படுகிறது. தேவப்பிரசன்னம் மூலம் ஜோதிடர்கள் பல்வேறு விஷயங்களை மக்களுக்கு இறையாற்றல் மூலமாக கணித்து சொல்லி இருக்கிறார்கள்.

தேவப்ரசன்னத்தின் தன்மையை உணர ஓர் உண்மை சம்பவத்தை கூறுகிறேன். தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒரு பிரபல கோவிலில் விசித்திரமான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அங்கே திருவிழாவிற்கு முன் கொடி ஏற்றம் நடைபெறும் சமயம் கொடி ஏற்றுபவர் சுருண்டு விழுந்து இறந்துவிடுவார்...!

இதனால் திருவிழா நடக்காமல் தடைபடும். அடுத்த சிலவருடம் கழித்து மீண்டும் முயற்சி செய்வார்கள். அவ்வாறே கொடி ஏற்றுபவர் இறந்துவிடுவார். ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு மரணம் பார்த்த பிறகு அந்த கோவிலுக்குள் செல்லவே அனைவரும் பயந்து ஒதுங்கினார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் மக்கள் மீண்டும் திருவிழா கொண்டாட முன் வந்தார்கள். அதற்கு முன் சிலரின் வழிகாட்டுதலில் தேவப்பிரசன்னம் பார்த்துவிடுவது நல்லது என முடிவு செய்தார்கள். தெய்வம் தங்கள் மேல் கோபமாக இருக்கிறது போல என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆர்வமாய் இருந்தார்கள்.

தேவப்பிரசன்னம் பார்க்கும் நாளும் வந்தது. தேவப்பிரசன்னம் பார்த்து விட்டு அந்த ஜோதிடர்கள் குழு தலைவர் சொன்னார் “ அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!”

கிராம மக்கள் திகைத்தார்கள். உங்களை போல....

(ப்ரசன்னமாகும்)

Saturday, August 20, 2011

தேவப்பிரசன்னம் - பகுதி 2

தேவப்பிரசன்னம் என்பதில் இரண்டு வார்த்தைகள் உண்டு. முதல் வார்த்தை தேவம் மற்றது ப்ரசன்னம். தேவம் என்றால் தெய்வீகம் என அர்த்தப்படுத்தலாம். தெய்வீகம் என்ற சொல்லை விளக்குவதை விட உணர்ந்தால் மட்டுமே புரியும். ப்ரசன்னம் என்ற வார்த்தையை விளக்குவது எளிது.

ப்ரசன்ன என்ற வடமொழி சொல்லுக்கு கேள்வி என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு ப்ரசன்ன என மொழி பெயர்க்கலாம். வேதத்தில் உள்ள ஒரு உபநிஷத்தின் பெயர் ப்ரசன்ன உபநிஷத். கேள்விகளால் தூண்டப்பட்டு இறை உண்மை விளக்கப்படுவதால் உபநிஷத் இப்பெயர் பெற்றது.

ஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் நம் முன் வரும் பொழுது “என்னப்பா உனக்கு பிரச்சனை” என பேச்சு வழக்கில் கேட்பார்கள் அல்லவா? அதுபோல வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை ஜோதிடர்களிடம் கூறும் பொழுது அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு பலன் சொல்லும் ஜோதிட சூட்சமத்திற்கு பிரசன்னம் என பெயர்.

பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்க்கையின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல், ஒரு கேள்வி அக்கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரகத்தை வைத்து ஒரு ஜாதகம் பார்ப்பது என்பதே ப்ரசன்ன ஜோதிடம் என்பதாகும்.

ஒரு கேள்விக்கு ஒரு ஜாதகம் என்றேன் அல்லவா? அடுத்த கேள்வி கேட்கும் பொழுது முன்பு இருந்த ஜாதகத்தை விட்டு புதிய கேள்வி கேட்ட நேரத்தில் மீண்டும் ஜாதகம் கணிப்பார்கள். ஆக கேள்வி வர வர ஜாதகம் மாறும்..!

பிறந்த நேரத்தை கொடுத்தாலே ஜாதகம் கணித்து பதில் சொல்லலாமே ஏன் ஒவ்வொரு கேள்விக்கு ஜாதகம் போட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். வெளிப்படையாக கூறவேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பிறப்பு ஜாதகத்தில் பலன் கூற முடியாது. ஆம் இது முற்றிலும் உண்மை. உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்.

நான் வீடு வாங்குவேனா என கேட்டால் பிறப்பு ஜாதகத்தில் கூறிவிடலாம். ஆனால் நான் கும்பகோணத்தில் வாங்குவேனா இல்லை கோளப்பாக்கத்தில் வாங்குவேனா என கேட்டால் ப்ரசன்னம் தான் ஒரே வழி.

எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா என கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும், இதுவே எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. பிரசன்ன ரீதியாகவே பார்க்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலே கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றிப்பெறும் என கேள்வி எழுந்தால் இரு அணியில் விளையாடும் 22 நபர்களின் ஜாதகத்தை கணித்தா பலன் கூற முடியும்? அவ்வாறு செய்தால் மேட்சே முடிந்துவிடும். இதெற்கெல்லாம் பயன்படுவது பிரசன்ன ஜோதிடமே ஆகும்.

இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால் பிரசன்ன ஜோதிடத்தில் கூற முடியாததே எதுவும் இல்லை, அனைத்துக்கும் ஜோதிட பலன் கூற முடியும்.

பிறப்பு ஜாதகத்தில் பிறந்த நேரம் தவறாக இருக்கலாம். நமக்கும் துல்லியமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரசன்னம் என்பது நீங்கள் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தை துல்லியமாக கூற முடியும். அதனால் பலனும் துல்லியமாக வரும்.

மின்சாரம் எப்பொழுது வரும்? கையில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் என்ன? நாணயத்தை சுண்டினால் தலை விழுமா பூவா? இவை எல்லாம் பிரசன்னத்தில் முன்பே கூற முடியும். அதுவும் பொதுவாக இல்லை. மிக மிக துல்லியமாக, மைக்ரோ அளவில் கூற முடியும்.

பிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். கேரள ஜோதிடம் புகழ்பெற்று இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்...!

பிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது. பராசரர், வராஹ மிஹிரர், காளி தாசர் இவர்கள் எல்லாம் பிரசன்ன ஜோதிடத்தில் திறன்மிகுந்தவர்களாக இருந்தவர்கள்.

இப்படிப்பட்ட மிக சக்தி வாய்ந்த பிரசன்ன ஜோதிடத்துடன் இறை சக்தி இணைந்தால் அதன் பெயர் தேவப்பிரசன்னம்...!

தேவப்பிரசன்னம் எப்படி பார்க்கப்படுகிறது?
(ப்ரசன்னமாகும்)