Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Showing posts with label வேதகால வாழ்க்கை. Show all posts
Showing posts with label வேதகால வாழ்க்கை. Show all posts

Thursday, December 14, 2017

வேளாண்மை பஞ்சாங்கம்- 2018

 நம் கலாச்சாரத்தில் உருவான ஜோதிட நூல்கள் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த கருத்துக்களை கொண்டது. குறிப்பாக எப்பொழுது விவசாய பணி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி எவ்வகை பயிர்கள் லாபம் தரும் என்பது வரை குறிப்புக்கள் உண்டு. தமிழில் வருட பாடல் பாடிய இடைக்கடார் சித்தர் பாடல்களில் கூட இந்த வருடம் மழை பொழியுமா, வறட்சி நிலவுமா என்ற விவசாய குறிப்பை காணலாம். நம் நாடு விவசாய நாடு என்பதாலும் முன்காலத்தில் விவசாய பணிகள் மிக முக்கிய பணிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் தற்காலத்தில் ஜோதிடத்தின் விவசாய விதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு திருமணம், காது குத்து என நல்ல நேரம் பார்க்க பயன்படுத்துகிறோம். ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்ற விவாதம் தவிர்த்துவிட்டு பொதுவாக சொன்னால் ஜோதிடம் ஒரு வானிலை அறிவிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தினசரி காலண்டரில் கூட ‘சந்திரனின் வடகோடு உயர மழை பெய்யும்’ என்ற வாசகம் காணலாம்.  அது போல நம் நன்மைக்கும் வானிலை அறிந்து வேளாண் செய்யும் வகையில் பஞ்சாங்கம் தயாரித்துள்ளேன்.

வேதகால வேளாண்மை என்ற கருத்தியலின் ஒரு பகுதி வேளாண் ஜோதிடம். தற்காலத்தில் பயோ டயனமிக் - உயிர் ஆற்றல் விவசாயம் என்ற பெயரில் பஞ்சாங்கம் மேலை நாட்டினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதில் சந்திரனின் முழு நிலவு, அமாவாசை மட்டுமே கருத்தில் கொண்டு 15 நாட்கள் வரும் திதியின் அடிப்படையிலும் சில ஜோதிட கருத்துக்களுடனு அமைகிறது. ஆனால் நமது பஞ்சாங்கத்தில் நாள், வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதி ஆகிய பஞ்ச அங்கங்களை பயன்படுத்தும் முறைகளை நம் சாஸ்திரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

கம்ப்யூட்டர் யுகத்தில் பஞ்சாங்கம் வைத்து விவசாயமா என சிந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உயிராற்றல் விவசாயம் மற்றும் மேலை நாட்டு பஞ்சாங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தால் ஆதரவு பெற்ற ஒன்று. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் தானே நாம் நம்புவோம்? தற்சமயம் ப்ரணவ பீடத்தில் வேளாண்மை பஞ்சாங்கம் அமெரிக்க நாடுகள், அஸ்திரேலியா , பூட்டாண் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரணவ பீடத்தின் வேளாண் பஞ்சாங்கம் சாஸ்திர ரீதியாக தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் உயிராற்றல் விவசாயம் பரவலாகும் பொழுது அனைவருக்கும் கிடைக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வந்தாலும் விவசாயிகளுக்கு மட்டுமே தனிச்சுற்றாக அனுப்பி வந்தோம். தற்சமயம் பலர் விவசாய ஆர்வலர்களாக இருக்கிறார்கள், தங்கள் வீட்டின் மாடியில் பயிர் செய்கிறார்கள். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வருட (ஹேவிளம்பி -விளம்பி) வேளாண் பஞ்சாங்கத்தை இலவச டவுன்லோடு செய்யுமாறு வழங்குகிறோம்.

வேளாண்மை பஞ்சாங்கம் 2018


இலவச வேளாண்மை பஞ்சாங்கத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல நீங்களும் ஒரு கருவியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 
வேளாண்மை நமது உயிர் ஆதாரம்.
 
வேதகால வேளாண்மை பற்றிய எழுதிய கட்டுரைகளை படிக்க - வேதகால வேளாண்மை

Sunday, April 24, 2016

வேளாண்மை பஞ்சாங்கம்- 2016-2017

 நம் கலாச்சாரத்தில் உருவான ஜோதிட நூல்கள் பெரும் பகுதி விவசாயம் சார்ந்த கருத்துக்களை கொண்டது. குறிப்பாக எப்பொழுது விவசாய பணி செய்ய வேண்டும் என்பதில் துவங்கி எவ்வகை பயிர்கள் லாபம் தரும் என்பது வரை குறிப்புக்கள் உண்டு. தமிழில் வருட பாடல் பாடிய இடைக்கடார் சித்தர் பாடல்களில் கூட இந்த வருடம் மழை பொழியுமா, வறட்சி நிலவுமா என்ற விவசாய குறிப்பை காணலாம். நம் நாடு விவசாய நாடு என்பதாலும் முன்காலத்தில் விவசாய பணிகள் மிக முக்கிய பணிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் தற்காலத்தில் ஜோதிடத்தின் விவசாய விதிகளை கவனமாக தவிர்த்துவிட்டு திருமணம், காது குத்து என நல்ல நேரம் பார்க்க பயன்படுத்துகிறோம். ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை அல்லது நம்பிக்கை என்ற விவாதம் தவிர்த்துவிட்டு பொதுவாக சொன்னால் ஜோதிடம் ஒரு வானிலை அறிவிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தினசரி காலண்டரில் கூட ‘சந்திரனின் வடகோடு உயர மழை பெய்யும்’ என்ற வாசகம் காணலாம்.  அது போல நம் நன்மைக்கும் வானிலை அறிந்து வேளாண் செய்யும் வகையில் பஞ்சாங்கம் தயாரித்துள்ளேன்.

வேதகால வேளாண்மை என்ற கருத்தியலின் ஒரு பகுதி வேளாண் ஜோதிடம். தற்காலத்தில் பயோ டயனமிக் - உயிர் ஆற்றல் விவசாயம் என்ற பெயரில் பஞ்சாங்கம் மேலை நாட்டினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதில் சந்திரனின் முழு நிலவு, அமாவாசை மட்டுமே கருத்தில் கொண்டு 15 நாட்கள் வரும் திதியின் அடிப்படையிலும் சில ஜோதிட கருத்துக்களுடனு அமைகிறது. ஆனால் நமது பஞ்சாங்கத்தில் நாள், வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதி ஆகிய பஞ்ச அங்கங்களை பயன்படுத்தும் முறைகளை நம் சாஸ்திரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

கம்ப்யூட்டர் யுகத்தில் பஞ்சாங்கம் வைத்து விவசாயமா என சிந்திப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உயிராற்றல் விவசாயம் மற்றும் மேலை நாட்டு பஞ்சாங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தால் ஆதரவு பெற்ற ஒன்று. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் தானே நாம் நம்புவோம்? தற்சமயம் ப்ரணவ பீடத்தில் வேளாண்மை பஞ்சாங்கம் அமெரிக்க நாடுகள், அஸ்திரேலியா , பூட்டாண் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரணவ பீடத்தின் வேளாண் பஞ்சாங்கம் சாஸ்திர ரீதியாக தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் உயிராற்றல் விவசாயம் பரவலாகும் பொழுது அனைவருக்கும் கிடைக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

2007ஆம் ஆண்டு முதல் தயாரித்து வந்தாலும் விவசாயிகளுக்கு மட்டுமே தனிச்சுற்றாக அனுப்பி வந்தோம். தற்சமயம் பலர் விவசாய ஆர்வலர்களாக இருக்கிறார்கள், தங்கள் வீட்டின் மாடியில் பயிர் செய்கிறார்கள். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வருட (துன்முகி) வேளாண் பஞ்சாங்கத்தை இலவச டவுன்லோடு செய்யுமாறு வழங்குகிறோம்.

இலவச வேளாண்மை பஞ்சாங்கத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல நீங்களும் ஒரு கருவியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 

வேளாண்மை நமது உயிர் ஆதாரம்.

 
வேதகால வேளாண்மை பற்றிய எழுதிய கட்டுரைகளை படிக்க - வேதகால வேளாண்மை

Monday, November 24, 2014

வேதகால வேளாண்மை பகுதி 2

பஞ்ச அங்கங்கள் என கூறப்படும் வாரம், நட்சத்திரம் யோகம் , திதி மற்றும் கரணம் என்பவையே பஞ்சாங்கம் என்பதாகும். பஞ்சாங்கம் என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை வானமண்டலத்தில் இருக்கும் இடமும் அவை பயணிக்கும் இடைவேளி கொண்டு கணிக்கப்படுபவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக இன்று பெளர்ணமி என திதியின் வரிசையில் கூறினால் சூரியன் சந்திரன் இருவரும் 180 டிகிரியில் எதிர் எதிராக இருக்கிறார்கள் என அர்த்தம்.

 நட்சத்திரத்தில் அஸ்வினி என கூறினால் இன்று சந்திரன் முதல் ராசியான மேஷத்தில் ராசிமண்டலத்தில் பயணிக்கிறார் என பொருள் கொள்ளவேண்டும்.  இந்த ஐந்து விஷயங்களில் வாரம், நட்சத்திரம் ஆகியவற்றை சென்ற பகுதியில் பார்த்தோம். இப்பொழுது யோகம் என்பதை விவரிக்கிறேன்.

யோகம் என்ற வார்த்தையே இதன் செயலை உணர்த்தும். நல்லதொரு முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நட்சத்திர யோகத்தை பயன்படுத்துவது சிறந்தது. இந்த நட்சத்திர யோகம்  என்பது பஞ்சாங்கத்தில் காணப்படும் யோகத்தைக் காட்டிலும் வித்தியாசமானது. 

சூரியன் , சந்திரன் இவற்றின் இணைவால் 15 திதிகள் கிடைக்கின்றன. இதை மேலும் பகுக்கும் பொழுது 20 யோகங்கள் கிடைக்கிறது. யோகத்தைப் பகுத்தால் வருவது கரணம். ஆனால் வேதகால வேளாண்மைக்கு கிழமை, நட்சத்திரம், திதி, நட்சத்திரம் யோகம் இவைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். யோகம் , கரணம் ஆகியவை மிகவும் குறுகிய கால அளவீடுகள் என்பதால் இதை பயன்படுத்துவதில்லை. மேலும் திதியை பிரதானமாக பயன்படுத்துவதால் திதியின் உட்பிரிவான யோகம்,கரணத்தை உபயோகிப்பது இல்லை.  ஆனால் பழைய வேளாண்மை ஜோதிட குறிப்பில் அனைத்தும் பயன்படுத்தி வந்தனர். முகூர்த்த சூடாமணி மற்றும் பிருஹத் ஜாதகத்தில் இருக்கும் குறிப்புகள் ஒரு விவசாயி முழுமையான ஜோதிடனாக இருந்தான் என்பதை காட்டுகிறது. 

அன்றைய வாழ்வியல் சூழலில் பள்ளி கல்வியில் ஜோதிடம் / வான சாஸ்திரம் ஒரு பாடமாக இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.  ஆகையால் இங்கே நான் குறிப்பிடுவது வேதகால வேளாண்மையின் முழு தகவல் அல்ல. ஆனால் ஒன்றும் தெரியாமல் உயிரற்ற வேளாண்மை செய்வதற்கு வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதியை வைத்து பல அதிசயங்களை செய்யலாம்.

நட்சத்திர யோகம்  என்பது ஒரு குறிப்பிட்ட (வாரம்) கிழமையில் வரும் நட்சத்திரத்திற்கு இடையே உள்ள இணைவையும் மேன்மையையும் காட்டும். நட்சத்திர யோகங்களில் முக்கியமானது அமிர்த , சித்த , மரண யோகங்கள் இவற்றைக் கொண்டும் வேளாண் பணிகளை செய்யலாம்.

அமிர்த யோகம் :

"மிருதம் " எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு இறப்பு என்று பொருள். "அமிர்தம்" என்றால் இறவா (இறப்பற்ற நிலை) என்று பொருள். எனவே இந்த நாளில் உரமிடுதல் பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற பணிகளைச்  செய்யலாம். 

சித்த யோகம் :

நினைத்த காரியத்தில் வெற்றியடைவதை "காரிய சித்தி" அடைதல் என்பார்கள். 

சித்தி அடைந்தவர்கள் சித்தர் என அழைக்கபடுவார்கள். நமது எண்ணம் நிறை வேற இந்த நாளை பயன்படுத்துவது சிறந்தது.  இந்த நாளில் நீர் பாசன முறையை திட்டமிடுதல் , வேளாண் பணிகளை திட்டமிடுதல் மற்றும் விதைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

மரண யோகம் :

"மரணம்" என்பது இங்கு இறப்பை குறிப்பதில்லை. இந்த நாள் கேடு பலனை கொடுக்கும் என்பது மூடநம்பிக்கை எனலாம். மரணம் என்பது தவறானவற்றை வெளியேற்றுவதை குறிக்கும். களை எடுத்தல், தோட்டத்தை சீர் செய்தல், செடிகளை செதுக்குதல்  ஆகிய கழிவு பணிகளை மரண யோகத்தில் செய்யலாம்.

திதி :

சூரியனும், சந்திரனும்  சூரிய மண்டலத்தில் இணையும் புள்ளியையும், இடைப்பட்ட பாகையையும் குறிப்பது திதி. பஞ்சாங்கத்தில் இருக்கும் பஞ்ச அங்கங்களில் திதிக்கு என சில முக்கியத்துவங்கள் உண்டு.

புராண காலங்களில் கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்தார் என்றும் ராமர் நவமியில் பிறந்தார் என்றும் திதியை சிறப்பித்து கூறுவார்கள். இதன் மூலம் திதியின் முக்கியத்துவத்தை அறியலாம். திதிகள்  மொத்தம் 15, அமாவாசை துவங்கி பௌர்ணமி வரையிலும் - பௌர்ணமி  துவங்கி அமாவசை வரையிலும் 30 நாட்களுக்கு திதிகள் இருமுறை வருகின்றன. இந்த இருகாலங்களும் முறையே சுக்கில பட்சம் (வளர்பிறை)  மற்றும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) எனலாம். திதிகளும் அதற்குறிய வேளாண் பணிகளும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.


வேளாண் பணிகளை மேற்கண்ட வரிசையிலேயே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தேவைக்கு ஏற்றது போல திதி வரும் நாளில் செய்தால் நல்லது. சஷ்டி, பஞ்சமி , தசமி, சதுர்தசி இந்த நாட்களில் உரமிடுதல் அவசியம். அமாவசை நாளில் பயிர்களுக்கு அதிகமாக நீர் உற்றுவதும் , பயிர்களுக்கு பௌர்ணமி அன்று நீர் ஊற்றாமல் இருப்பதும் நன்று. ஏகாதசி நாளில் பூமிக்கு அடியில் விளையும் (கிழங்கு- கடலை) பயிர்களை மட்டுமே பாதுகாக்க வேண்டும். பூமிக்கு மேலே விளையும் பயிர்களை ஏகாதசி அன்று பண்படுத்தினால்  பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். 

இன்று கூட அமாவாசை நாளில் பெரும்பாலும் வேளாண்மை பணிகளுக்கு விடுமுறை விடுவது நம் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. இது ஏன் என பலருக்கு தெரிவதில்லை. உண்மையில் நம் முன்னோர்கள் பஞ்சாங்க நுணுக்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான சான்றே இது. பெளர்ணமி அன்றும் அனேகமாக ஒவ்வொரு மாதமும் வழிபாட்டு நாளாக வருவதால் விடுமுறையாக அமைந்துவிடும். உதாரணமாக சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம் என அனைத்து மாதமும் பெளர்ணமியும் வழிபாட்டுக்கு உரிய நாளாகி விவசாய பணிகளுக்கு விடுமுறையாகி விடும். ஆக அமாவாசை பெளர்ணமி அன்று பூமியின் ஈர்ப்பு விசை ஏற்ற தாழ்வில் இருக்கும் என்பதே விடுமுறைக்கான காரணம்.

செடிகளை சீரமைத்தல், களை எடுத்தல் ஆகிய வேளாண் பணிகளுக்கு  திரியோதசி திதி  சிறந்த நாள்.  மேற்கண்ட தகவல்களைக் கொண்டு சிறந்த முறையில் வேதகால வேளாண்மையை செயல்படுத்த முடியும். கிரக ஆற்றல் இலவசமாக கிடைக்கும் ஒன்று, இதை தக்க முறையில் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையிலிருந்து வேதகால வேளாண்மை எனும் புதிய பரிமாணத்திற்கு மாற்றம் அடையுங்கள். உங்கள் வேளாண்மை யுக்தியை புதிய பாதையில் அமைத்து உலகை வளமாக்குங்கள்.

Wednesday, November 19, 2014

வேதகால வேளாண்மை - பகுதி 1

ஜோதிட சாஸ்திர குறிப்புகளை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இத்தொடரை எழுதுகிறேன். எதிர்காலத்தில் விவசாயம் பெரும் தொழிலாகவும், தேவையாகவும் இருக்கும் என்பது பலரும் உணரக்கூடிய ஒன்று. இக்கட்டுரையில் எளிய வகை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஜோதிட சாஸ்திரத்தை தொகுத்துள்ளேன். அனைத்து மக்களுக்கும் புரியும்படியாக விவசாய விஷயங்களை எளிமையாக கொடுத்துள்ளேன். வேதகால வேளாண்மை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.அதில் மேலும் ஆழமாகவும் விவசாய குறிப்புகளுடனும் தகவல்கள் இருக்கும். 

பழங்காலம் தொட்டு ஜோதிடமும் முஹுர்த்த சாஸ்திரமும் விவசாயத்திற்காகவே கண்டறியப்பட்டது. நம் ப்ரணவ பீடத்தில் 2007ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு என தனியே பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். வேளாண்மை பல்கலைகழகத்தில் இது பாடமாகவும் இருக்கிறது. 

இந்த வருடம் பகுத்தறிவு கொண்டவர்கள் என கூறும் பலர் வேளாண்மை பல்கலைகழகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர் என கேள்விபட்டேன். நம் கலாச்சாரத்தை  இழிவுபடுத்த மேலை நாட்டின் கலாச்சாரத்தை தாங்கிபிடிக்கும் பகுத்தறிவாளிகள், மேலை நாட்டில் பல வருடமாக BIO Dynamics என பஞ்சாங்கம் கொண்டு விவசாயம் செய்கிறார்களே? அதற்கு மாநாடு வேறு உலகாளாவிய அளவில் நடக்கிறதே? அதற்கு என்ன விளக்கம் சொல்லுவார்கள்? இச்செயலை பார்த்தால் இவைகள் எல்லாம் வேறும் வெறுப்பறிவு பகுத்தறிவல்ல என்பது தெளிகிறது. இதனால் உண்மையை தெளிவுபடுத்தவே இந்த கட்டுரை தொடர். 
----------

ஜோதிட சாஸ்த்திரத்தை பல துறைகளில் பயன்படுத்தினாலும், தற்சமயம் வேளாண் துறையில் பயன்படுத்துவது குறைவே. இயற்கையில் கிடைக்கும் ஆற்றல்களை உபயோகித்து விவசாயம் செய்யும் முறையில் கிரக ஆற்றலை கொண்டும் விவசாயம் செய்யலாம். நம் முன்னோர்கள் இந்த ஆற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்கு சான்றுகள் உண்டு.

இயற்கை விவசாயம் என்பது இயற்கையில் உள்ள சக்தியை , உயர் நிலையில் பயன்படுத்தி விளைச்சல் காண்பது என்கிறார்கள். நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சி கொல்லியைக் காட்டிலும் இயற்கையான பஞ்சகவ்வியம் மற்றும் தசகவ்வியத்தைக் கொண்டு வளப்படுத்துகிறார்கள். இந்த சிறப்பான முறையுடன், வேதத்தின் கண் எனக் கூறப்படும் ஜோதிட சாஸ்த்திரத்தையும் இணைத்து பயன்படுத்தினால் புதிய பரிமாணத்திற்கு வேளாண்துறை செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஜோதிட சாஸ்த்திரத்தை இயற்கை விவசாயத்துடன் இணைத்து பயன்படும் இந்த முறை "வேதகால வேளாண்மை"  எனலாம்.

ஜோதிடத்தை பயன்படுத்துவது என்றவுடன் கிரக ஆற்றலை மட்டும் பயன்படுத்துவது என நினைக்க வேண்டாம். ராசி மண்டலம், நட்சத்திர மண்டலம் மற்றும் இதர ஜோதிட குறியீடுகளான திதி, யோகம் என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பிரபஞ்ச ஆற்றலை முழுமையான முறையில் வேளாண்மைக்கு பயன்படுத்தும் சூட்சுமங்களை பின்வரும் பகுதிகளில் காண்போம்.

மேல்நாட்டில் சிலர், கிரக ஆற்றலை வேளாண்மைக்கு பயன்படுத்துகிறார்கள். இதற்கு "Bio-Dynamic" முறை என அழைக்கிறார்கள். இது முழுமையான முறை இல்லை. காரணம் , இந்திய ஜோதிட முறையைத் தவிர வேறு எந்த ஜோதிடமுறையிலும் நட்சத்திரங்கள்  எனும் கோட்பாடு இல்லை . நட்சத்திரங்கள் இல்லை என்றாலே திதி மற்றும் ஏனைய பஞ்சாங்க நுணுக்கங்கள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் மேல்நாட்டினர் திதியை முழுமையாக பயன்படுத்தாமல் அமாவாசை, பௌர்ணமியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். மேலும் சனி, ராகு/கேதுவுடன் சந்திரனின் இணைவை ஆராய்கிறார்கள். இந்த முறையை பயன்படுத்தினால் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வேளாண் செயல்களைச் செய்ய முடியும்.


பஞ்சாங்கம்:

பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம். கிமு 5000  வருடத்திற்கு முன்பே பஞ்சாங்கம் கணிக்கும் முறை இருந்ததற்கு சாட்சிகள் உண்டு.  வேத சாஸ்திரத்தின் தோற்றத்தை காலம் எனும் பரிமாணத்தில் அடக்க முடியாது. அத்தகைய  தோற்றமும் முடிவும் இல்லாதது என  கூறப்படும் வேத சாஸ்திரத்தில் அதர்வண வேத பிரிவின் கீழ் "கணிதா" (Ghanitha) எனும் பகுதி  உள்ளது. இதில் கோள்களின் நிலையை துல்லியமாக கணிக்கும் பஞ்சாங்க கணிதம் கூறப்பட்டுள்ளது. வருடத்திற்கு பல கோடி செலவழித்து நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கோள்களின் நிலையை , வெள்ளைதாளும் - எழுதுகோலும் கொடுத்தால் நமது நாட்டு பஞ்சாங்க கணிதர்கள் சில மணி நேரத்தில் கணித்து விடுவார்கள்.

பஞ்சாங்கம் எனும் வடமொழி சொல்லை , ஐந்து அங்கங்களை பற்றி கூறும் நூல் என மொழிபெயர்க்கலாம். வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகியவையே இதன் பஞ்ச அங்கங்கள் அகும். நமது முன்னோர்கள் பஞ்சாங்கத்தை பயன்படுத்தி வேளாண்மை 
செய்து வந்தார்கள். இந்த முறையை எளிமைப்படுத்தி  நவீன கால வேளாண்மைக்கு ஏற்றவாறு அளித்துள்ளேன். ஜோதிடத்தில் கூறப்படும் கிரகம், நட்சத்திரம், திதி, யோகம் இவற்றை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த பத்து வருடங்களாக பஞ்சாங்கம் கணித்து வெளியிடுகிறோம். 

கிரகம் :

சூரிய மண்டலத்தில் நவகிரகங்கள் சுற்றிவருவது நமது பள்ளி நாட்களில் அறிந்தது தான். இதில் சூரியன் முதல் சனி வரை 7 கிரகங்கள் உருவமாகவும் , ராகு - கேது அருவமாகவும் (உருவமில்லாமல்) சூரிய மண்டலத்தில் உலா வருகிறது. இதை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே கணித்த  நம் முன்னோர்கள் , நவகிரகத்தின் செயல்பாட்டிற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 கிரகங்கள் சூரியன் முதல் சனி வரை ஆட்சிசெய்கிறது. ராகு - கேதுக்கள் தனி ஒரு நாளை ஆட்சி செய்யாமல் ஏழு நாட்களிலும் சக்தியை வழங்குகிறது. சமஸ்கிருதத்தில் கிழமைகளை "வாரம்" என அழைப்பார்கள். வாரநாட்கள் அனைத்தையும் சமஸ்கிருதத்தில் கிரகப்பெயரால் சோம வாரம், மங்கள் வாரம் (திங்கள் கிழமை - செவ்வாய் கிழமை) என அழைக்கிறார்கள். ஒரு கிரகம் குறிக்கும் கிழமையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். 

உதாரணமாக திங்கள் கிழமை அன்று சந்திரனின் அலைவரிசை அதிகமாக இருக்கும்.   

வடமொழி காலண்டர், ஆங்கில காலண்டர் மற்றும் தமிழ் காலண்டர் அனைத்திலும் வார நாட்கள் அனைத்தும் ஒன்று போல  இருப்பதைக் கொண்டு கிரகத் தாக்கத்தின் முக்கியதுவத்தை அறியலாம். இதனை அறிந்த முன்னோர்கள் , அந்த கிரகம் குறிக்கும் வேலையை அதன் ஆற்றல் உள்ள கிழமையில் செய்து வந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என நிருபித்தனர். சனி - நீர் தன்மை கொண்ட கிரகம். அதனால் சனிக்கிழமை உடலில் நீர் சத்து அதிகரித்துக் காணப்படும். எனவே சனிக்கிழமைகளில் ஆண்களுக்கு எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்றார்கள். இதனால் நீர் தன்மையும் - எண்ணெய் தன்மையும் கலக்காமல் , தோல் பகுதி கழிவுகளை எண்ணெய் வெளியேற்றிவிடும். ஆனால் சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று இதைச் செய்தால் சூரியன் உஷ்ணத்தை குறிப்பதால் எண்ணெய் தோல்பகுதியில் இணைந்து கழிவாக மாறி நோய் உண்டாக்கும். 

கிரகங்கள் உடலில் இது போன்ற விளைவை ஏற்படுத்துவது போல தாவரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கிழமையின் அடிப்படையில் தாவரங்களை பராமரிப்பது அவசியம். கிரகங்கள் குறிக்கும் கிழமைகளும் அன்று செய்ய வேண்டிய வேளாண் பணிகளும்  பின்வருமாறு,


வேளாண் செயல்களுக்கு மட்டுமல்லாமல் பயிரிடப்படும் தாவர வகைகளும் கிரகம் சார்ந்து இருந்தால் நல்ல விளைச்சலைத் தரும்.

கிரகங்கள்  பயிர்வகைகள்

சூரியன் தானியம், கோதுமை
சந்திரன் அரிசி வகைகள்
செவ்வாய் மூலிகைச் செடிகள்
புதன் அவரை- துவரை, பருப்பு வகைகள்
குரு பழங்கள் , சதைபற்றுள்ள காய்கறிகள்
சுக்கிரன் பூக்கள், பழங்கள்
சனி கிழங்கு வகைகள் , தென்னை , எண்ணெய் வித்துக்கள்

கிரகத் தன்மைக் கொண்டு செய்யப்படும் செயல் வீணாகாது. மேலும் சில கிரகங்கள் மற்ற கிரகத்தின் தன்மைக்கு எதிர் தன்மை வாய்ந்தது. எனவே ஒரு கிரகம் ஆட்சி செய்யும் நாளில் அதற்கு எதிரான தன்மை உள்ள பணிகளையோ , பயிர்வகைகளையோ செய்தால் வேளாண்மை பாதிக்கும். உதாரணமாக செவ்வாய் அன்று செய்ய வேண்டிய பணிகளை வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ செய்தால் பயிர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புண்டு.  ஒரு கிரகத்திற்கு எதிர் தன்மை உள்ள கிரகம் எது என தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமில்லை. அதற்கு பதிலாக அந்த கிரகம் குறிக்கும் செயலை மட்டும் செய்தாலே மேன்மை கிடைக்கும்.

நட்சத்திரங்கள்

பிரபஞ்சத்தில் 27 நட்சத்திர கூட்டங்கள் உண்டு. இந்த நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களைக் கொண்டே கிரகங்கள் இயங்குகின்றன. எனவே கிரகங்களை காட்டிலும் நட்சத்திரங்களின் ஆற்றல் மிக முக்கியமானது. மின்சார பல்புகள் மின்னாற்றலில் இயங்குவதைப் போல கிரகம் , நட்சத்திர ஆற்றலில் இயங்குகிறது. எனவே நட்சத்திர ஆற்றலைக் கொண்டு வேளாண் செயல்களை செய்தால் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும். 

நட்சத்திரங்கள் 27 நட்சத்திர கூட்டங்களாக பிரபஞ்சத்தில் அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் ( 9X3=27 நட்சத்திரங்கள்) ஆட்சி செய்கின்றன.  கிரகங்களின் செயல்பாடுகளை  கொண்டு வேளாண் பணிகளை செய்ததைப் போல , நவகிரகங்கள் அதன் தாக்கத்தை இந்த நட்சத்திரங்களுக்கு அளிப்பதால் , விவசாய பணிகளை மேலும் சிறப்பாக செய்யலாம். நட்சத்திரங்களின் மூலம் கிரகங்கள் 

செயல்படுத்தும் வேளாண்மை பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


       வார நாட்களைக் கொண்டு வேளாண்மையை செய்யும் பொழுது ராகு - கேதுவின் செயல்களை முழுமையாக பயன்படுத்த முடியாது. ஆனால் நட்சத்திரங்களைக் கொண்டு வேளாண் பணிகளை செய்தால் ராகு - கேதுவை பயன்படுத்த முடியும். கிழமைகளை பயன்படுத்தும் பொழுது ஏழு தன்மைகள் மட்டுமே கிடைக்கும். கிழமையுடன் நட்சத்திரத்தை யும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதிக கிரக அமைப்புகள் ( 27 நட்சத்திரம் X 7 வார நாட்கள் = 189) கிடைக்கும்.  

உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை , உத்திரம் , உத்திராடம் வந்தால் சூரியன் சம்மந்தப்பட்ட வேளாண் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். நட்சத்திரங்களுக்கும் கிழமைகளின் அதிபதிகளுக்கும் எதிர் - எதிர் தன்மை கிடையாது. உதாரணமாக செவ்வாய் கிழமையில் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம்- விசாகம் - பூரட்டாதி அமைந்தால் செவ்வாய்க்கு உண்டான உழுதல், செடியை செதுக்குதல் போன்ற பணிகளையும் குருவுக்கு உண்டான விதைத்தல் , விதையை ஊர வைத்தல் , பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற இரு கிரகத்தின் வேலையையும் செய்யலாம். ஆகவே நட்சத்திரங்களையும் கிழமைகளையும் பயன்படுத்தும் பொழுது அதிகமான நற்பயன்களைப் பெற முடியும்.

(தொடரும்)

Friday, February 3, 2012

புற்றுநோய் விழிப்புணர்வு யோக பயிற்சி..!


நவநாகரீகம் என்ற பெயரிலும், உலகமயமாக்கல் என்ற பெயரிலும் நாம் பெற்ற பலன்கள் ஏராளம். ஆனால் நாம் இழந்தது ஒன்றே ஒன்று தான். அதன் பெயர் ஆரோக்கியம்..!

முன்பு நம் வீட்டில் அதிகபட்சமாக கேஸ் அடுப்பில் உணவு சமைப்போம். தற்சமயம் மைக்ரோவேவ் அவன் இருந்தால் தான் மதிப்பு என ஆகிவிட்டது.

என் குழந்தை கப் நூடுல்ஸ் தான் விரும்பி சாப்பிடுவான் என சொல்லுவதால் பல தாய்மார்கள் நவீன தாய்மார்களாக ஜொலிக்கிறார்கள்,

எலுமிச்சை அடங்கிய சோப் பாரில் தான் நாம் பாத்திரம் துலக்குவோம். அதே சமயம் எண்ணை பிசுக்கு போக அலுமினிய கம்பிகள் கொண்ட ஸ்க்ரபர்கள்.

இதனால் நாம் வரவேற்பது என்ன தெரியுமா? புற்றுநோய்...! 

புற்றுநோய் வந்தப் பிறகு “நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என புலம்புகிறார்கள்.

அடிப்படையில் உங்கள் வாழ்க்கை தன்மையால் நீங்களே உங்கள் உடலுக்கு பாவம் செய்து விட்டீர்கள் என அப்பொழுது பதில் சொல்லி பிரயோஜனம் இல்லை..

இத்தகைய வாழ்வியல் குறைபாடுகள் அகற்றி நல்ல யோக பயிற்சியுடன் முழுமையான ஆரோக்கியம் பெற நேசம் மற்றும் ப்ரணவ பீடம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

உங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆரோக்கிய குடும்பம் என்ற நிலையை அடையுங்கள்.

அனுமதி இலவசம்
வாழ்வியலில் சிறிது மாற்றம் செய்து புற்றுநோயை விரட்டுங்கள்...!  

Monday, April 18, 2011

மெய்ஞான கல்வி


தற்கால கல்வி முறைகள் நமக்கு விஞ்ஞானத்தை வளர்க்கிறது. நம் அடிப்படை தேவையான உடை, உணவு மற்றும் உறைவிடங்களை உருவாக்க உதவுகிறது. இவை அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் நடைபெறும் வளர்ச்சிகளாககும். உண்டு, உறங்கி மற்றும் இனப்பெருக்கம் செய்து இறந்து போகும் இவ்வாழ்க்கை அனேகமாக வெளிமுக செயல்களையே முன்னிறுத்துகிறது.

அக முகமாக நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழிகளை கற்றுக்கொடுக்கும் மெய்ஞான கல்வியை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை.

நம்முள் இருக்கும் இறையருளை தரிசித்து அதன் பயனாக நம்மை சுற்றி இருக்கும் இறையருள் நிறைந்த விஷயங்களை உணரும் கல்வி முறையே மெய்ஞான கல்வியாகும்.
நம்மில் பலருக்கு ஆன்மீக கல்வியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பினும் அதை முறையாக கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் பல்வேறு தடைகள் இருக்கிறது. நம் வாழ்க்கை முறை முழுமையான ஆன்மீக பாதையில் இல்லாததால் ஆன்மீகத்தை நம் வாழ்க்கையில் இணைத்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி என்றுமே மனதில் மேல் ஓங்கி நிற்கிறது.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை நவீன காலத்திற்கு ஏற்ப மெய்ஞான கல்வி எனும் ஆன்மீக கல்வியை அனைவருக்கும் வழங்க இருக்கிறது.

மெய்ஞான கல்வியின் சிறப்புகள் என்ன?

  • வாழ்க்கை சூழல் எப்படி இருந்தாலும் முழுமையாக ஆன்மீக சூழலை பெறும் வாய்ப்பு

  • கற்றுக்கொடுக்க முறையான பயிற்சி அமைப்பு

  • ஆண்டு கணக்கில் படிக்கும் தன்மை இன்றி குறுகிய கால பயிற்சி முறை

  • நடைமுறை வாழ்க்கைக்கு விஞ்ஞான ரீதியாக ஆன்மீகத்தை பயன்படுத்தும் முறைகள்

  • இயல்பு வாழ்க்கையில் மாற்றம் ஏதும் செய்யாமலேயே ஆன்மீக உயர்நிலைக்கு செல்லத்தக்க பயிற்சிகள்

ப்ரணவ பீடத்தின் மெய்ஞான கல்வி சென்ற பிப்ரவரி மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

பயிற்சிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வார இறுதியில் நடைபெறும். கோவையில் இருக்கும் ப்ரணவ பீடத்தின் நகர மையத்தில் பயிற்சிகள் நடைபெறும்.

பயிற்சிகளுக்கு கட்டணம் உண்டு. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கே பயிற்சி அளிக்கப்படும்.

உங்களுக்கு ஆன்மீக கல்வி கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். பயிற்சி பற்றிய விளக்கம் அடங்கிய தகவல் நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பயிற்சி ஆன்மீக ரீதியாக வெளிப்படையாக கற்றுக்கொடுக்காத பயிற்சிகள் என்பதால் அனைவருக்கும் அனுமதி கிடைக்க வாய்ப்புகள் குறைவு. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறோம்.

அதனால் உங்களுக்கு முழுமையான ஆர்வமும் என்னிடம் நேரடியாக கற்றுக்கொள்ளும் ஆவல் இருந்தால் மட்டும் மின்னஞ்சல் அனுப்புங்கள். மெய்ஞான கல்வியை பற்றி வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் விளக்கம் அளிக்கிறேன். இதை தவிர்த்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணாக்க முயலும் கேள்விகளையும் மின்னஞ்சலையும் தவிர்த்தால் நலம்.


தகவல் ஏடு பெற மின்னஞ்சல் அனுப்பும் முகவரி : swamiomkar@gmail.com
சப்ஜெக்டில் “மெய்ஞான கல்வி” (அல்லது) “Vedic Education" என குறிப்பிடவும்.

Tuesday, May 4, 2010

மரம் வெட்டி மாநாடு கொண்டாடுவோம்..!


சுப்பாண்டியும் நானும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு நிகழ்ச்சிக்காக பயணம், குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் சுப்பாண்டி வாகனம் செலுத்த துவங்கினான்.எங்கள் வசிப்பிடத்திலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் சென்று இருப்போம் மிகப்பெரிய வாகன நெரிசல். நீண்ட தூரத்திற்கு வாகனம் நெருக்கடியில் நின்று இருந்தது. கோவையில் சில சாலைகள் தவிர பிற இடங்களில் வாகன நெரிசல் காண முடியாது.

நாங்கள் சென்று கொண்டிருந்தது கோவை நகரிலிருந்து வெளிப்புறம் இருக்கும் சாலை. இடையர்பாளையம் மற்றும் வடவள்ளி என்ற இரு ஊர்கள் சந்திக்கும் நான்கு முனை சாலைகள். இந்த சாலையில் என்றுமே இவ்வாறு நெரிசல் இருந்தது இல்லை. இது போன்ற வாகன நெரிசல் எதற்கு என தெரியவில்லை.

பொருமை இழந்த சுப்பாண்டி விஷயம் என்ன என விசாரிக்க சென்றான். அங்கே இருந்த ஒரு முதியவரிடம் என்ன விஷயம் என நான் கேட்டேன்.

முதியவர் கலங்கிய குரலுடன், “சாமீ...இடையர்பாளையம் வடவள்ளி சந்திப்பில் இருக்கிற நூறு வருஷ அரசமரத்தை வெட்டிக்கிட்டு இருக்காங்க. செம்மொழி மாநாட்டுக்கு ரோடு அகலப்படுத்தி கோபுர லைட் போடராங்களாம். வீணா போனவங்க.” என்றார்.

எனக்கு ஏதோ நெருக்கமானவர்கள் இறந்தால் ஏற்படும் துக்கத்தை போல தொண்டையை அடைத்தது. அதுக்குள் சுப்பாண்டி வந்து சேர்ந்தான்.

“சாமீ செம்மொழி மாநாட்டுக்கு ரோடு போடறாங்களாம். அது தான் டிராபிக் ஜாம்” என்றான்.

சரியாக விசாரிக்காமல் வந்த சுப்பாண்டி மேல் கோபம் வந்தது. இருக்கும் துக்கத்தில் இவன் தொல்லை வேறு என்று.. வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சாலையின் சந்திப்புக்கு சென்றோம்.அங்கே நூறுவருட மரம் படுகொலைச் செய்யப்பட்டிருந்தது.

கோபமும் துக்கமும் இயலாமையும் ஒன்று சேர்ந்து என்னக்கு தடுமாற்றத்தை உண்டு செய்தது.

சினிமாவில் காட்டும் பஞ்சாயத்து காட்சியில் வருவது போல திண்ணை கட்டப்பட்ட அரசமரம். பலர் ஓய்வாக அமரவும், நான்கு வழிச்சாலையின் ஒதுக்கு புறமாகவும் இருந்த இம்மரம் இப்பொழுதுஇல்லை.

நூறு வருட அரசமரத்தை வெட்டி, ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்று இருக்கிறார்கள். மரம் இருப்பதால் வேகத்தடை போல செயல்பட்டது பலர் மெதுவாக வந்து சென்ற சாலை எதிர்காலத்தில் விபத்துபகுதியாக மாறும்.

மரத்தின் கிளைகளை வெட்டி விட்டு உயரத்தை குறைத்து பிறகு இவர்களின் மேம்பாட்டு பணியை செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் வேருடன் சாய்த்திருக்கிறார்கள். நூறுவருட மரத்தை ஒரு மணி நேரத்தில் வெட்டி விடலாம். ஆனால் நூறு வருடம் முயற்சித்தாலும் அதே மரத்தை வளர்க்க முடியுமா?

சுப்பாண்டியிடம் இப்படி புலம்புக்கொண்டே வந்தேன். வேறு வழியாக சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தோம். நிகழ்சி முடித்து வரும் வழியில் மீண்டும் அதே இடத்தை கடக்க வேண்டி இருந்தது.

வெட்ட பட்ட மரம் மற்றும் அந்த சாலை அனைத்தும் வெறுமையாக காட்சி அளித்தது.

“மரம் தாவரம்னு எப்பவுமே பேசறீங்களே சாமி, மரம் அப்படி என்ன கொடுக்குது?” என்றான் சுப்பாண்டி.

“சுப்பு. விருக்‌ஷ ஆயுர்வேதம் என்ற சாஸ்திர நூல் மரம் 150 பலன்கள் மனிதனுக்கு மட்டும் கொடுப்பதாக சொல்லுது. நம்ம சும்மா விரல் விட்டு எண்ணினாலே பல பலன்கள் வரிசைப்படுத்தலாம். காய், கனி, நிழல், நீர், மழை, பறவைகளுக்கு வீடு, அதன் மூலம் இயற்கை சுழற்சி, மரச்சாமான்கள், சுத்தமான காற்று, மருத்துவ குணம் கொண்ட சூழல், மன அமைதி, மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீர் மேம்பாடு செய்தல், பல நுண்ணுயிர்கள் பெருக்குதல், சூழலில் வெப்பத்தை குறைத்தல், ப்ராணனை மேம்படுத்துதல். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். தாவரம் தாய் மாதிரி சுப்பு என்றேன்” என்றேன்.

எங்கள் அறக்கட்டளையின் வாசலை வந்து அடைந்ததும் நான் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே செல்ல நடக்கையில் பின்னாலிருந்து சுப்பாண்டியின் குரல்...

“சாமி மரத்தை பத்தி ஒரு சந்தேகம்....”

என்ன என்பதை போல பார்த்தேன்.

“மரம் சீ.டி படிக்குமா?” என்றான்.


Monday, November 16, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 13

வேதகால வாழ்க்கை என்ற இத்தொடரை துவங்கும் பொழுது கூறினேன் மனிதர்கள் அனைத்தையும் முன் முடிவுடனே அனுகுகிறார்கள் என்று. இதன் காரணம் நீங்கள் இப்பகுதியை படித்தால் விளங்கும்.

வேதகால வாழ்க்கை என்பது ஒரு தத்துவம் போல மேஜையில் அமர்ந்து கணினியில் செய்யும் கற்பனை விஷயம் அல்ல. இதற்கு நீங்கள் கொஞ்சம் உடல் உழைப்பு செய்ய வேண்டும்.

உங்கள் வாழ்க்கை சூழல் பிரகாசம் ஆக நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் என்ன தவறு? நவீன அறிவியல் என்ற பெயரில் பலர் கண்டுபிடிப்புகளால் பூமியின் சூழலையும், மனித மனங்களையும் அசுத்தமாக்குகிறார்கள். நவீன கண்டுபிடிப்புகள் தேவையை பொருத்தே கண்டறியப்படுகிறது. ஆனால் அதன் பின்விளைவுகள் மிகவும் கொடூரமானவை.

வாகனங்களுக்கு பெட்ரோல் பயன்படுத்தும் பொழுது நமக்கு தெரியாது ஓசோனில் ஓட்டைவிழும் என்று. அது போலவே செல்போன் பயன்படுத்தும் பொழுது அதன் கதிர்வீச்சால் பல பறவையினங்கள் மலடான விஷயம் என சொல்லிக்கொண்டே போகலாம். நான் நவீன விஞ்ஞானத்திற்கு எதிரானவன் அல்ல. சுயநலம் மட்டுமே மண்டிகிடக்கும் விஞ்ஞான யுக்திகளுக்கு எதிரானவன். உங்களின் குடை உங்களுக்கு செளகரியமாக இருக்கும் பொழுது அதன் கம்பி பிறர் கண்களை குத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

வேதகாலத்தில் இருக்கும் கண்டுபிடிப்புகள் பின்விளைவுகளை கொண்டது அன்று. மிருகத்தோலை பயன்படுத்திய ரிஷிகள் அவற்றை அப்படியே விட்டுவிட்டு சென்றாலும் சிலவருடங்களில் அது இயற்கையுடன் கலந்துவிடும். ஆனால் நீங்கள் பயன்படுத்திய சிப்ஸ் பாக்கெட்டை பல்லாயிரகணக்கான வருடம் சென்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு எடுப்பார்கள்.

பலவரலாற்று அறிஞசர்களுக்கு வேதகாலத்தை பற்றி சான்றுகள் கிடைக்காதது இதனால்தான். அவர்கள் பயன்படுத்திய, உருவாக்கிய விஷயங்கள் அனைத்தும் இயற்கையுடன் இணைந்தவிஷயங்கள். அவர்கள் காலத்திற்கு பிறகு எளிமையாக இணைந்துவிட்டது.

சில வேடிக்கை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். பிராணிகள் விடும் ஏப்பத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதாம் அது உலக வெப்பமயமாதலுக்கு காரணமாம். அவர்கள் உரையாற்றிய அரங்கில் இருக்கும் குளிர்சாதனம் வெப்பமயமாதலுக்கு காரணம் இல்லையா? அவர்கள் வந்த வாகனமும், விமானமும் உலக வெப்பமயமாதலுக்கு காரணம் இல்லையா?

பசு ஏப்பம் விட்டதும், கங்காருவின் வேண்டாம்.....விடுங்கள்.

விஞ்ஞானிகளுக்கு ஏதோ ஒரு
காரணம் வேண்டும். சிலர் உலக வெப்பமடைதல் என்ற விஷயத்தையே எதிர்கிறார்கள். காரணம் உலக சுழற்சியில் இது இயல்பு என்கிறார்கள்.

பூமி தோன்றிய நாளில்
வெப்பமாவும், பிறகு குளிர்ந்து உறை பனியாக இருந்தது. அப்படிபட்ட பனி உருகி வட, தென் துருவத்தில் மட்டும் இருக்கிறது. இடைபட்ட பகுதியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருகிய பனி எந்த மிருகம் விட்ட ஏப்பம் என கேட்க தோன்றுகிறது.

வேதகால வாழ்க்கை என்ற விஷயத்தை நான் ஒரு எழுத்துவடிவில் எழுதவில்லை.
செயல்வடிவில் கடந்த 5 வருடங்களாகவும். உணர்வு நிலையில் பலவருடங்களாகவும் கொண்ட விஷயம். கோவை வேளாண்மை பல்கலைகழகத்துடன் இணைந்து வேதகால வாழ்க்கை மற்றும் வேளாண்மையை மேற்கொண்டு சிறந்த விவசாய முறை என்ற ஆய்வை சமர்ப்பித்துள்ளேன்.


நீலகிரி தோட்டகலைத்துறையும், வேளாண்மை பல்கலைகழகமும் நான்கு முனைவர்களை கொண்டு இம்முறையை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் வேளாண்மையில் இம்முறை ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். எனது கள அனுபவம், ஆன்மீக ஆனுபவத்தாலும் வேளாண் துறை மாணவர்களுக்கு இம்முறையை வருடத்திற்கு மூன்று கருத்தாய்வு நடத்தி வெளிப்படுத்துகிறேன்.

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி பட்டறையும், விவசாய அலுவலர்களுக்கு இதன் அடிப்படையும் விளக்குகிறேன். இவை அனைத்தும் பல்கலைகழகம் வாயிலாக மட்டுமே செய்கிறேன். இது போக சில தனியாரின் நிலங்களுக்கு வேதகால வேளாண்மை முறையில் வேளாண்மை செய்ய உதவி வருகிறேன்.

வேதகால வேளாண்மை தவிர, ’நட்சத்திர வனம்’ என்ற பெயரில் 27 நட்சத்திரத்திற்கான மரங்களை சிறிய தோட்டமாக நட்டு அப்பகுதி ப்ராணனை மேம்படுத்திவருகிறேன். இது ஒரு இலவச சேவையாக செய்துவருகிறேன். இது மனிதகுலத்துக்கான சேவையாக செய்துவருகிறோம். நீங்கள் இதில் இணைந்து எங்களுடன் பணியாற்ற விருப்பம் இருந்தாலும் கூறவும்.

உங்கள் பகுதியில் சிறிய நிலப்பரப்பு இருந்தால் கூறுங்கள், நாங்கள் இலவசமாக நட்சத்திரவனம் ஏற்படுத்தி தருகிறேம்.

ஊசியிலை காடுகளில் வளரும் 27 நட்சத்திர மரங்களை கண்டரிந்து உதகையில் நட்சத்திர வனம் ஏற்படுத்தி உள்ளேன். அதன் செய்தி இதோ சுட்டி.

எனது வேதகால பணிகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். கல்லூரி மாணவர்களிடம் இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். விரைவில் வேதகாலம் மலரும்.

ஆம் வேதகாலம் என்பது முன்காலத்தில் இருந்தது அல்ல. சக உயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல், முழுமையான ப்ரபஞ்ச ஆற்றலுடன் வாழும் வாழ்க்கையை நாம் இனிமேல்தான் உருவாக்க வேண்டும்.

முன்காலத்தில் சிலரால் மட்டுமே பின்பற்றபட்ட வேதகாலத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு நாமும் அந்த ஒளியில் கலந்து மேம்படுவோம்.

(நிறைவு)

Saturday, November 14, 2009

வேதகால வாழ்க்கை பகுதி - 12

நம் வாழ்க்கையில் நிறைய நன்மை கொடுக்கும் காரியங்களை நமக்கு தெரிந்தாலும் அவற்றை பின்பற்ற முடியாது. உதாரணம் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை சொல்லலாம். நமக்கு சுற்றுசூழலுக்கும் ஒவ்வாத காரியங்கள் பலவற்றை மன உறுத்தல் இல்லாமல் நம்மால் செய்ய முடிகிறது. அது போன்றுதான் வேதகால வாழ்க்கை முறையும். மரம் நமக்கு என்ன செய்கிறது, பசு நமக்கு கொடுக்கும் நன்மைகள் என்ன என அனைவருக்கும் புரிந்தாலும் அவற்றை வளர்க்க முயலமாட்டோம்.

மனித குணம் எப்பொழுதும் புலன் இன்பத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது. ஒருவருக்கு சுவையான உணவு இருக்கும் இடம் தெரிந்தால் அதை பெற அவர் பல காரணம் கூறுவார். அதே போல தானக்கு நன்மை என தெரிந்தும் சில காரியங்களை செய்ய நாம் பல காரணம் கூறி தட்டிக்கழிப்போம்.

பின்வரும் காரணங்கள் பலர் வேதகால வாழ்க்கை பின்பற்ற முடியாது என கூறும் காரணங்கள்.

மரம் வைக்க என் வீட்டில் இடம் இல்லை. நான் அப்பார்ட்மெண்டில் இருக்கிறேன். வெளிநாட்டில் வசிக்கிறேன் அதனால் நீங்கள் கூறும் மரங்கள் இங்கே இல்லை. பசு மாடு எங்கள் ஊரில் தடை. பசுமாடு வளக்கும் அளவிற்கு என் வீட்டில் வசதியான இடம் இல்லை. மேலும் பசுவை பராமரிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது.

முதலில் மரம் வளர்க்கும் முறையை பார்ப்போம்.

அனேகமாக நகரங்களில் மே ப்ளவர் மரங்கள் போன்ற மரங்களையே வீதிகளில் நடுகிறார்கள். இதன் காரணம் அவற்றிற்கு பராமரிப்பு குறைவு என்பதும், வேகமாக வளருவதும் ஒரு காரணம்.

மே-ப்ளவர் மரங்கள் ப்ராண சக்தி மிகவும் குறைவான மரங்கள். இவை புளியமரம் போல ப்ராணனை நம்மிடமிருந்து பறிப்பதில்லை என்பதும், நல்ல நிழல் மற்றும் காற்று தரும் மரம் என்பது ஆறுதலான தகவல்கள்.

ஆனால் இம்மரங்களுக்கு பதில் வன்னி, வேப்பம், பூவரசு, மரமல்லி போன்ற மரங்கள் வைத்தால் மிகவும் சிறப்பான சூழல் அமையும். உங்கள் பிறந்தநாள், மண நாள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் உங்கள் வீட்டின் அருகில் மரம் நடலாம். இதற்கு மரம் நடுவிழா என விளம்பரம் செய்ய தேவையில்லை.

இம்மரங்களின் கன்றுகள் அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கும். இவற்றை வாங்கி நட்டுவிட்டு நீர்விட்டீர்கள் என்றால் சில நாட்களில் துளிர்த்துவிடும்.

தினமும் சென்று தண்ணீர் ஊற்ற சிரமமா? தென்னை நார்களை மரகன்றின் அடியில் போட்டு நீர் ஊற்றுங்கள் மூன்று நாட்களுக்கு இது தாங்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஊற்றுங்கள். இப்படி இரு வாரங்கள் பார்த்தால் போதுமானது. பிறகு அந்த கன்று மரம் ஆகும் வரை தன்னை தானே பார்த்துக்கொள்ளும்.

இதற்கும் சிரமம் இருந்தால் மற்றொரு யோசனை இதோ.

பெரிய மரங்களின் கன்றுகளை வாங்கி சிறிய தொட்டியில் வளர்த்துங்கள். வீட்டின் உள் அறையில் கூட வளர்த்தலாம், அல்லது விட்டின் முன்புறம் அழகு செடிபோல வளர்க்கலாம். அதிகபட்சம் 8 முதல் 10 மாதங்களுக்குள் நன்கு வளரும். பிறகு அந்த செடியை வேறு நிலபகுதியில் வைத்துவிட்டு, அதே தொட்டியில் அம்மரத்தின் புதிய கன்றையோ அல்லது வேறு மரத்தின் கன்றையோ வளர்த்தலாம். இம்முறை வீட்டிலும் உங்கள் அலுவலக சூழலிலும் பின்பற்றலாம்.

இவ்வாறு செய்வதால் மரங்கள் பெருகுவதும், நம்மை சுற்றி நல்ல ப்ராணன் இயங்குவதற்கும் ஏதுவாக இருக்கும். நான் வேலை செய்யும் சூழல் குளிரூட்டபட்ட இடம், அதில் மரம் வளர்க்கலாமா என கேட்டால், மரத்தை சிரமப்படுத்தாதீர்கள் என கூறுவேன். நீங்களும், மரமும் ப்ராணன் அமுங்கிய நிலையில் குளிரூட்டபட்ட அறையில் இருப்பதை நினைக்கவே மனம் கலங்குகிறது.

உங்களுக்கும் மரம் வளர்க்க வேறு யோசனை இருந்தால் சொல்லுங்களேன்.

அடுத்து பசு. பசுவிற்கு ப்ராணன் அதிகம் என்றேன். ஆனாலும் அவற்றை நகரத்தில் வளர்த்துவது சிரம் அதிகம் உண்டு. பசுவை காருடன் (மகிழுந்து-car) ஒப்பிட்டு நோக்கினால் சில விஷயங்கள் புரியும்.

இரண்டுக்கும் நான்கு கால் இருக்கு என அபத்தமாக ஆரம்பிக்க வேண்டாம் :)

நம் வீட்டில் கார் நிறுத்த இடம் இல்லை என்பதாலும், அப்பார்ட்மெண்டில் வசித்தாலும் கார் வாங்காமல் இருக்கிறோமா? அது போல நமக்கு விருப்பம் இருந்தால் பசு வாங்கலாம். சில நண்பர்களுடன் இணைந்து பசுவும், காளையும் வாங்கி ஒரு பொதுவான இடத்தில் வைக்கலாம்.

கார் வாங்கி அவற்றை பொதுவான பார்க்கிங்கில் நிறுத்துகிறோம் அல்லவா அது போலத்தான். பொது பார்க்கிங்கிற்கு மாதம் சில ரூபாய் செலவிடுகிறோம். அத்தொகை ஒரு பசுமாட்டை பராமரிக்க போதுமானது.

அவற்றை பராமரிக்க ஒருவரை நியாமிக்கலாம். ஒரு 6 மாதம் முதல் 8 மாதம் வரை இவற்றிற்கு செலவு செய்தால் பிறகு பசுமாடு தன்னையும் தன் கூட்டத்தையும் பராமரிக்கும் செலவை சம்பாதிக்கும். அதன்மூலம் கிடைக்கும் பால் மற்றும் இதர விஷயங்கள் உங்களுக்கு உபரியாக கிடைக்கும்.

கார் வாங்கி சில வருடங்கள் கழித்து மற்றொரு கார் கிடைக்குமா? ஆனால் பசுவாங்கினால் சில வருடங்களில் பல்கிபெருகும்.

சுத்தமாக பராமரித்தால் பசுமாட்டிற்கு நல்லது. எந்த மாநகராட்சியும் இதற்கு தடை சொல்லாது. பசு மாடு கறவை முடிந்தாலும் அதில் ப்ராணன் உண்டு என்பதால், பால் கொடுக்காவிட்டாலும் பசுவால் பயன் உண்டு.

பசுவை உண்ணுவது தவறு என சொல்லும் அளவிற்கு நான் வள்ளலாரின் வழிவந்தவன் அல்ல. ஆனால் உயிர்வதை என்பதை கொண்டாலும், ஒரு உயிர்வதை செய்வதால் நம் உடலில் ஏற்படும் சில ப்ராண தடுமாற்றத்தையும் கருத்தில் கொண்டு தவறு என்கிறேன்.

சிலர் கேட்கிறார்கள் பசுமாடு இயற்கையாக இறந்து யாராவது பார்த்து இருக்கிறார்களா என்று, குரங்கின் இயற்கையாக இறந்த உடலை கூடத்தான் யாரும் பார்த்ததில்லை. அதற்காக குரங்கு சாப்பிடுபவர்கள் அதிகம் என கூறமுடியாது.

அடிமாடிற்கு பசுவை அனுப்புவது தவறு. ஆடு போல இறைச்சிகாக வளர்த்தி கொல்லுவது கூட அனுமதிக்கலாம். பசுவை கேரளாவில் எப்படி இறைச்சிக்காக வெட்டுகிறார்கள் என நேரில் ஒருமுறை பார்த்தால் அசைவம் சப்பிடுபவர்களுக்கும் மன நிலை தடுமாறும். பசுவின் இறைச்சி மென்மையாக இருக்க வேண்டும் என்று அவற்றை பயமுறுத்தி, பசு இருக்கும் அறையில் பட்டாசு வெடித்து அவற்று மிரள செய்து வெட்டுவார்கள்.

அதன் இரத்தம் சூடாகி, இருதயம் படபடப்புடன் இருக்கும் பொழுது வெட்டினால் இறைச்சி மிகவும் மென்மையாக இருக்குமாம். நினைத்துபாருங்கள் உங்கள் விரோதிக்கு இப்படி பட்ட சாவு வந்தால் கூட அனுமதிக்க மாட்டீர்கள் தானே?

தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அடிமாடாக செல்லும் காட்சியக் காணும் நகரத்தில் நான் வசிப்பது நான் எப்பொழுதோ செய்த பாவம்தான். பல நல்லுள்ளங்களின் உதவியுடன் கறவை முடிந்த பசுவையும், முதிர்ந்த காளைகளையும் பராமரிக்கும் கோசாலையை சிலர் கோவையில் ஏற்படுத்தியுள்ளனர். கோவையை விட்டு சில கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்தில் இந்த சூழல் இருக்கிறது. சில நூறு மாடுகள் பராமரிக்கபட்டு வந்தது. அடிமாடுகளாக சென்ற பாதிமாடுகள் இதில் அடக்கம். இதில் கொடுமை என்ன வென்றால் சில மாதங்களுக்கு முன் இதிலிருந்து மாடுகளை சிலர் களவாடி சென்று இறைச்சியாக்கிவிட்டார்கள்.

பிற உயிர்களை துன்புறுத்தி நம் உயிரை களங்கப்படுத்தாமல், நமக்கும் இயற்கைக்கும் நன்மை கொடுத்து வாழும் வாழ்க்கைதானே வேதகால வாழ்க்கை?

நான் வேதகால வாழ்க்கை பற்றி கூறுகிறேனே நான் வேதகால வாழ்க்கை முறைக்கு என்ன செய்தேன் ? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(......வேதம் ஒலிக்கும்)

Friday, November 13, 2009

வேதகால வாழ்க்கை பகுதி - 11

ப்ரபஞ்ச சக்தி பல தாவரங்கள் வழியாகவும், பசுவின் வழியாகவும் மனிதர்களுக்கு ஊடுருவுகிறது என்பதே நான் முன்பு சொன்ன கருத்து. இவை இரண்டும் இல்லாத சூழலில் மனிதனின் மனம், உடல் மற்றும் ஆன்மா நிலைதடுமாறிய நிலையிலேயே இருப்பான். தாவரம் இல்லாத சூழலில் வாழமுடியாத காரணத்தால் அவன் வாழும் சூழலில் இருக்கும் சில தாவரங்கள் மனிதனுக்கு தேவையான குறைந்தபட்ச ஆற்றலை கொடுத்துக் கொண்டிருக்கும். யானைபசிக்கு சோளப்பொறி போல மனிதனுக்கு தேவையான ஆற்றலில் இவை சில துளிகளே. இயற்கையாக விளைந்த தாவரங்கள் இருக்கும் சூழலில் மனிதன் இருக்கும் பொழுது அவனுக்கு பூரணமான ப்ராணன் நிலைகொள்வதால் மனம், உடல் மற்றும் ஆன்மாவில் ஏற்றம் பெறுகிறான்.

நம் மக்களுக்குள் எப்பொழுதும் ஒரு பகுத்தறிவாளி ஒளிந்திருப்பார். எல்லாவற்றிற்கும் சான்று கேட்கும் அந்த விஞ்ஞானி மேற்கண்ட வரிகளுக்கும் கேட்கலாம். விஞ்ஞான கருவிகளைக்காட்டிலும் நம் வாழ்க்கை சம்பவங்கள் துல்லியமானது.

அவற்றை சான்றாக பார்ப்போம். நீங்கள் சுற்றுலா செல்லுகிறீர்கள் என கொள்வோம். நீர் விளையாட்டுக்கள் உள்ள இடம், எழில் மிகு கட்டிடங்கள் உள்ள இடம் ஆகியவற்றிற்கு செல்லுவதற்கும், வனங்களில் சுற்றுலா செல்லுவதற்கும் சில வித்தியாசம் உண்டு அல்லவா?

வனப்பிரதேசத்தில் சில நாட்கள் உலாவி வந்தால் மனதில் இனம் புரியத நிறைவு வருகிறது அல்லவா? நீர் கேளிக்கை பூங்காக்களில் ( water theam park) எத்தனையோ விளையாட்டால் வராதா ஒரு நிறைவு ஏன் வனத்தில் வருகிறது?

காரணம் வனங்களில் இயற்கையாக அமைந்த ப்ராண ஆற்றல்கள்தான். ப்ராண சக்தி முழுமையாக இயங்குவதால்தான் வனங்களில் உயிர்களில் உருவாக்கமும் வளர்ச்சியும் தடைபடாமல் இருக்கிறது. மனிதன் ப்ராணனால் பூரணத்துவம் அடைகிறான் என்பதை இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

திருப்பூரில் இருக்கும் அன்பர்கள் கோவை வந்தால் ஒருவித புத்தணர்ச்சி அடைவார்கள். இதன் காரணம் திருப்பூரைவிட கோவையில் தாவரங்களின் எண்ணிக்கை அதிகம். இக்கருத்தை படிக்கும் திருப்பூர் ’வாசி’கள் கருத்து கூறினால் தன்னியனாவேன்.

இயற்கையாக வனங்கள் ப்ராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து எளிமையாக மாற்றம் செய்கிறது. ஆனால் செயற்கையாக உருவாக்கும் மரங்கள் முழுமையாக செயல்படுவது இல்லை. வனத்தில் உலாவருவதற்கும் பூங்காவில் உலாவருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு அல்லவா?

செயற்கையாக நாமும் வனங்களை உருவாக்கலாம். நம் வீட்டிலும் நமக்கு தெரிந்த இடங்களிலும் இவற்றை செய்ய முடியும். அதற்கு நம்மிடையே ப்ராண சக்தியை முழுமையாக கொடுக்கும் மரங்கள் எவை தெரிந்திருக்க வேண்டும்.

ப்ரபஞ்ச சக்தியை முழுமையாக உள்வாங்கி ப்ராணனாக மரங்கள் மாற்றி அளிக்கும் சக்தி கேந்திரம் அல்லவா?

அத்தகைய ப்ரபஞ்ச ஆற்றல் எங்கிருந்து வருகிறது? காஸ்மிக் கதிர்கள் என்பது நம் ப்ரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வருகிறது.

நட்சத்திரம் மண்டலம் என்பது 27 வகையான நட்சத்திர கூட்டங்கள். பிரபஞ்சத்தில் வெறும் 27 நட்சத்திரம் மட்டும் அல்ல. நட்சத்திரங்கள் கோடிக்கனக்கான அளவில் இருந்தாலும் அவற்ற 27 வகையாக வரிசைப்படுத்தலாம். ( ஒன்பது கிரகங்கள் அதன் மூன்று குணங்கள் : 9X3= 27)

நட்சத்திர ரீதியாக சாஸ்திரத்தில் பிரிக்கப்பட்ட விருட்சங்களில் பட்டியல் இந்த சுட்டியில் உண்டு.

நட்சத்திர விருட்சங்களை இயற்கை வேளாண்மை முறையில் வளர்த்தால் மட்டுமே செயல்படும். அவ்வாறு வளர்க்க பஞ்சகவியம் மற்றும் ப்ராண சக்தியை ஊட்டும் செயலுக்கும் பசு மாடுகள் அவசியம்.

1980க்கு முன் நம் நாட்டில் விவசாயிகள் அனைவரும் பசுவை பயன்படுத்திவந்தனர். அதனால் விவசாயம் செழிப்பாக இல்லாவிட்டாலும் தேவையான அளவு கிடைத்துவந்தது. பசுவையும் காளையையும் ஒழித்து, டிராக்டர், பூச்சிகொல்லி ரசாயனம் என துவங்கியதும் இன்று தேவையான உணவு பொருட்கள் கிடைக்காத தட்டுப்பாட்டில் இருக்கிறோம்.

இங்கே முக்கியமான ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இரும்பு என்ற உலோகம் ஒரு கடத்தி மற்றும் ப்ராணனை நம் உடலை விட்டு வெளியேற்றும் ஒரு தாது. வரலாற்று அறிஞர்களில் காலகணக்குபடி இரும்பு,செம்பு, தங்கம் என உலோகத்தை வைத்து மனிதனின் சமூக காலத்தை கண்டறிகிறார்கள். இரும்பு பயன்பாடு மனிதனுக்கு தெரிந்து இருந்தும் விவசாயத்தில் நேரடியாக நிலத்திற்கும், விதைகளுக்கும் தொடர்பு கொள்ளும் பொருட்களை அவன் இரும்பால் உருவாக்கவில்லை கவனித்தீர்களா? உழுவதற்கு ஏர் மரத்திலும், விதைகலயங்கள் மண் மற்றும் மூங்கில் கூடையாகவும் பயன்படுத்தினார்கள். மூங்கில் கூடையிலும் சாணம் மொழுகப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க...!

நம் உடலில் மின்சக்தி உண்டு என்பது தெரியும். விதை மற்றும் மண்ணில் உள்ள மின்சக்தியும் அயனியாக்கமும் நம் கைகளில் அவற்றை தொடுவதன் மூலம் பாதிப்படையும். விளைச்சல் குறையும். உலோகங்கள் கடத்தி என்பதால் விவசாயத்திற்கு அதிகமாக கடத்திகளை பயன்படுத்துவதில்லை.

தற்காலத்தில் டிராக்டர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் அனைத்து கலயங்களும் இரும்பில் இருக்கிறது.

ஜோதிடத்தில் இரும்பை சனி என்ற கிரகம் குறிக்கும். அதனால் தான் சொல்லுகிறேன் தற்கால விவசாயத்திற்கு ‘இரும்பு’ பிடித்துவிட்டது.

ஆஸ்திரேலிய விவசாயிகள் மர சக்கரம் மற்றும் மர கலப்பை கொண்ட டிராக்டரை பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள். பசுவையும் காளையும் வைத்து மர கலப்பையில் விவசாயம் செய்தவன் முட்டாளா? நீங்கள் முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

நான் அப்பார்மெண்டில் வசிக்கிறேன் மரமும், பசுவும் என்னால் வளர்க்க முடியுமா?
நகரத்தில் பசு வளர்க்கும் வசதி உண்டா?
பசுவினால் உலகம் வெப்பமடைதல் ஆகிறதாமே?
பசுவினால் கேடு ஏற்பட்டு உலகம் அழியும் அபாயம் உண்டா?
பசுமாட்டை உபயோகம் முடிந்ததும் இறைச்சிக்காக வெட்டுகிறார்களே?

போன்ற கேள்விகளுக்கு அடுத்த பகுதியில் விளக்கம் பார்ப்போம்.


(....வேதம் ஒலிக்கும்)

டிஸ்கி : கடந்த சில தினங்கள் ஸ்ரீசக்ர புரியில் இருந்ததால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. எங்கள் ஸ்ரீசக்ர புரி பயணம் சிறப்பாக அமைந்தது. அதில் ஒரு பிரபல பதிவர் எங்களுடன் கலந்துகொண்டு எங்கள் பயணத்தை சிறப்பித்தது குறிப்பிடதக்கது. அதைபற்றிய கட்டுரை சுப்பாண்டி வாயிலாக விரைவில் வெளிவரும். :)

Friday, November 6, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 10

வேதகால வாழ்க்கை என்பதில் மூன்று இயற்கை உயிர்கள் சுழற்சி முறையிலும் ,பரஸ்பரமும் பகிர்ந்து வாழ்ந்தல் அவசியமாகிறது. பிரபஞ்ச சக்தியை முழுமையாக மரங்கள் பெறுவதற்கு மரங்கள் மிகவும் ஊட்டச்சத்துடன் வாழவேண்டும். மரங்களின் ஊட்டத்தை பெறுக்க பசுவின் மூலம் ஏற்படும் பஞ்சகவ்யம் மிகவும் தேவையான ஒரு விஷயம்.

பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவையாகும். பஞ்சகவ்யம் இருந்தால் தான் மரம் வளரும் என்பது அல்ல. மரங்கள் செறிவுடன் மிகவும் திறன்வாய்ந்த ப்ரபஞ்ச ஆற்றல் மையங்களாக இருக்க இந்த ஊட்டம் தேவைபடுகிறது. பசு மிகவும் ஆற்றல் வாய்ந்த ப்ராண கேந்திரம் என தெரிந்துகொண்டோம்.

அது போல பஞ்சகவ்யத்தை கொண்டு வளர்ந்த மரங்கள் பசுவுக்கு இணையான ஆற்றல் ஏற்படுத்துகிறது. காரணம் மரம் தனது உயிர் சக்தியை பசுவின் ஆற்றல் மூலமே பெறுகிறது. இவ்வாறு வளர்க்கபட்ட தாவரங்கள் பசு இவை அனைத்தும் சமமான சக்தியை கொண்டு நம்மை சுற்றி பல சக்தி மையங்களை ஏற்படுத்தும்.

தொடர்ந்து தடையில்லாத பிரபஞ்ச சக்தி நம்மில் ஊடுருவ வாழ்ந்துவந்தால் வேறு என்ன நமக்கு வேண்டும்?

பஞ்சகவ்ய பொருட்களை நான் பட்டியலிட்டவுன் அதில் அப்படி என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். பஞ்சகவ்யம் என்பது மரத்திற்கு போடும் உரமாகவும், ஊட்டமளிக்கும் தாவர உணவாகவும் பார்க்கப்படுகிறது.

உண்மையில் பஞ்சகவ்யம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஊட்ட சத்து. மனிதர்களுக்கு ஆயுர்வேதத்தில் சக்தியை பெற மருந்தாக வழங்கப்படுகிறது. என்னது பசுவின் சிறுநீரும், சாணமும் மருந்தா என நீங்கள் நினைக்கலாம். ஆம் மருந்து தான். அதுவும் சரிவிகிதத்தில் பசுவினால் கிடைக்கும் பொருட்களை கலந்தால் அவை உயிர்சக்தியை வளர்க்கும் ஒரு அருமருந்து.

பஞ்சகவ்யத்திற்காக தனியாக பசுமாடு வளர்க்கப்பட வேண்டும். இப்பசு ஒரு முறை மட்டுமே கன்று ஈன்றதாக இருக்க வேண்டும். அடுத்த முறை கன்று ஈன்றால் அவற்றை தவிர்த்து புதிய பசுவை பயன்படுத்த வேண்டும். பஞ்சகவ்யத்திற்காக பயன்படுத்தப்படும் பசுக்கள் புல் மற்றும் இயற்கையாக வளர்ந்த தாவரத்தை மட்டுமே உண்ண வேண்டும் என பஞ்சகவ்யம் தயாரிக்கும் பசுவை தயாரிக்கவே கொஞ்சம் சிரமம் எடுக்க வேண்டும்.

பஞ்சகவ்யம் தயாரிக்க என்றவுடன் ஒரு வாளியை எடுத்து ஒரு வாளி சாணம், ஒரு வாளி சிறுநீர் என அளந்து கலக்கிவிடக்கூடாது. பஞ்சகவ்யம் கலப்பதற்கு என சில விகிதாச்சாரம் உண்டு. மேலும் பஞ்சகவ்ய பொருட்களுடன் உபகவ்யம் என்ற வெல்லம், துளசி மற்றும் வேப்ப எண்ணெய் இவற்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும்.

தற்கால விவசாயிகள் பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 முதல் ரசாயன உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுற்றச்சூழல், தாவரம் மற்றும் மண் தன் தன்மையை இழந்துவருகிறது. இவை நேரடி பாதிப்புகள். இது தவிர ரசாயனம் இருக்கும் விளைநிலத்தில் ப்ராண சக்தி பரவுவது தடுமாற்றம் ஏற்படுகிறது. ப்ராண சக்தி புலம் மிகவும் குறுகிவிடுகிறது. இத்தகைய விளைநிலங்களில் வளரும் உணவு பொருட்களை உண்பதால் நம் உடலில் ப்ராணனில் அளவும் மிகவும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

பசுமை புரட்சிக்கு பின் புற்றுநோய் ஏற்படுவதன் அளவும், குழந்தையின்மையும் அதிகரித்து வருகிறது. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பயணிக்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியான ஒரு சூழலை சந்தித்தேன். அந்த கிராமத்தின் ஓவ்வொரு வீட்டிலும் ஒரு புற்றுநோயாளி இருக்கிறார். அவர்களுக்கு புற்றுநோய் பற்றி சரியாக தெரியவில்லை. கிராம ஆர்வலருடன் நான் சென்று அவர்களை சந்தித்தேன். தற்சமயம் அவர்கள் சற்று புற்றுநோய் பற்றிய விஷயங்கள் தெரிந்து வாழ்கிறார்கள்.

அவர்களுக்கு புற்று நோய் வரக் காரணம் என்ன தெரியுமா? தேயிலை தோட்டத்தில் தெளிக்கும் ரசாயன உரங்கள் மண்ணில் கலந்து தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் சங்கமிக்கிறது. அந்த ஓடை நீரைத்தான் அந்த கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். யாரோ செய்யும் ரசாயன உர வியாபரத்தாலும், விவசாயத்தாலும் ஒரு கிராமமே பாதிக்கப்பாட்டுள்ளது.

உண்மையில் அந்த கிராம வாசிகள் போல நாமும் ஒருவிதத்தில் பாதிக்கபட்டு இருக்கிறோம். ரசாயன பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்த உணவு பொருட்கள் வேண்டும் என கேட்கிறார்கள்.

ஆனால் நாம் பல கப்பல்களில் ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ரசாயன உரத்தால் கொல்வதற்கு பதில் ஒரு அணுகுண்டை அவர்கள் நம்மீது ஏவினால் சந்தோஷப்படுவேன்.

இதுவே இயற்கை முறையில் பஞ்சகவ்யம் மற்றும் இதர இயற்கை முறை விவசாயம் செய்தால் இப்படி பட்ட நிலை இல்லை. ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வாழ்க்கைக்கு பசுவும், இயற்கை விவசாயமும் அவசியம் ஆகிறது.

ரசாயன உரம் அவ்வளவு கொடியதா என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம். ஒரு விவசாயி ரசாயன உரத்தை தாவரங்களுக்கு தெளிக்கிறார், அப்படி தெளிக்கும் நேரத்தில் ஒரு கைப்பிடி அந்த உரத்தை எடுத்து சாப்பிட்டால் என்ன ஆவார்?

ஆனால் பஞ்சகவ்யத்தை ஒருவர் பயிருக்கு செலுத்தும் பொழுது அதை ஒரு கைப்பிடி எடுத்து உண்டாலும் ஒன்றும் ஆகமாட்டார். மாறாக நல்ல உடல் நலமும் , ஆன்ம பலமும் பெறுவார்.

தாவரங்கள் நம்மை விட அதிக பலம் கொண்டவை என்பதற்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தும். விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை தெளித்தாலும் மனிதனை போல் உயிர்விடாமல் அதற்கு எதிராக போராடி உயிர்பெறுகிறது தாவரம். தாவரங்களை ஒரு உயிராக பார்க்காமல் வியாபார பொருட்களாக பசுமை புரட்சியாளர்கள் பார்த்தார்கள். அதன் விளைவு நீங்களும் நானும் தரமான விவசாய பொருட்கள் கிடைக்காமலும், கொள்ளை விலையில் அரிசியையும் பருப்பையும் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மை போன்ற ஒரு உயிர் என விவசாயி நினைத்தால் அன்று முதல் தன்னையே தியாகம் செய்ய தாவரங்கள் தயாராகாதா? விவசாயிக்கு ஏற்படும் இந்த எண்ணம் தானே தாவரத்திற்கு தேவையான முக்கிய ஊட்டசத்து? ரசாயனத்தை கொடுத்ததற்கு பன்மடங்கு அந்த தாவரம் திரும்ப நமக்கு என்ன கொடுத்தது என நடைமுறையில் காண்கிறோம். இது மாற்றத்திற்கான நேரம்.


வேதகால வாழ்க்கை முறையை எளிமையாக விளக்கும் ஒரு படம்.

இப்படத்தில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். தாவரமும், பசுவும் பரஸ்பரம் கொடுத்துக்கொள்கின்றன. ஆனால் மனிதன் பெற மட்டுமே செய்கிறான்.

ப்ராண சக்தியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் பெரியவன் என்ற மனித அஹங்காரம் நொருங்கிவிடும். எல்லா மரங்களும், பசுக்களும் வேதகால வாழ்க்கை சுழற்சிக்கு பயன்படுத்த முடியுமா என்றால்....

இல்லை என்றே கூறவேண்டும்.

புளிய மரம் போன்றவை ப்ராணனை குறைக்கும் என்று கூறினேன் அல்லவா? அப்படியானால் எவை பயன்படுத்த தகுந்தவை? அடுத்த பகுதியில் பார்ப்போம்

(.... வேதம் ஒலிக்கும்)

Wednesday, November 4, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 9

உயிரினங்களில் பல வகை இருந்தாலும் சில வகை உயிர்களுக்கு மட்டும் பிரபஞ்ச ஆற்றலை உள்வாகும் சக்தி அதிகம். பசுவகைகள் அனைத்துக்கும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் சக்தி அதிகம். இது மாட்டினம் மற்றும் எருமை இவை அனைத்துக்கும் பொதுவானது.

பசு நமக்கு என்ன கொடுக்கிறது என கேட்டிருந்தேன். உண்மையில் பசு நமக்கு பால், சாணம் கொடுக்கிறது என கூறி இருந்தீர்கள். பசு நூறு மரத்திற்கு சமம் என கூறி பின்னும் பால் சாணம் கொடுக்கும் ஒரு விலங்காகவே இதை பார்த்தால் என்ன செய்வது?


பிரபஞ்ச ஆற்றல் மரங்கள் மேல் இறங்கும் பொழுது அவ்வாற்றலை ப்ராண சக்தியாக மாற்றுகிறது அல்லவா? இது 1:1 என்ற விகிதத்தில் தான் மாற்றும். ஆனால் பசுக்கள் 1:100 என்ற விகிதத்தில் மாற்றம் செய்யும்.

மனித மனம் எப்பொழுதும் சில விஷயங்களை ஒரே வரிசையில் சிந்திக்கும். ஒரு மனிதன் ரோஜாப்பூவில் இருந்து தனக்கு ஒரு ஆற்றல் கிடைக்கிறது என நினைத்தால் முதலில் அவற்றை கடித்து தின்று ஜீரணம் செய்வான். மனிதன் ஜீரணம் மூலமே உடல் சக்தி பெற முடியும் என்ற எண்ணம் கொண்டவன். தற்காலத்தில் இருக்கும் நவீன மனிதன் வரை இது தொடர்கிறது.

சரியான யோக பயிற்சி (ப்ராணாயமம்) மூலம் உடல் சக்தியை பெற முடியும். உணவு மற்றும் நீர் அருந்துவதால் உடலில் கிடைக்கும் வலிமையை அவ்வாறு உணவு உற்கொள்ளாமலேயே இவ்வகை பயிற்சிகள் கொடுக்கும். தாவரத்தில் இருக்கும் உயிர்சக்தி நம் உடலில் உணவாக சென்று ஜீரணம் நடைபெற்று பின்பு உடலில் சத்தாக மாற்றம் அடையும் நீண்ட வழிமுறையை மாற்றி நேரடியாக உயிர்சக்தியை பெறும் ஆன்ம பயிற்சிகளை செய்பவர்கள் பலர். இவர்களை யோகிகள் என்பார்கள்.

சராசரி மனிதன் இப்பயிற்சி செய்வது கடினம். அவனுக்கு பிற வாழ்வியல் விஷயங்கள் இருப்பதால் மரம் மூலமும் பசு மூலமும் தான் உயிர்சக்தியை பெற முடியும். தாவரங்களில் வாழ்நாள் மற்றும் இனபெருக்கத்திற்கும், பசுவின் வாழ்நாள் மற்றும் இனபெருக்கத்திற்கும் மிக வித்தியாசம் உண்டும். பசுவின் வாழ்நாளும், இனபெருக்க அளவும் தாவத்தை விட குறைவு. அதனால் மனிதன் பசுவை பயன்படுத்தினாலும் நீண்டகாலம் அதன் மேம்பாட்டை அனுபவிக்க முடியாது.

குறைந்த காலமே வாழ்ந்தாலும் பசு மரங்களை விட அதிகமான நன்மைகளை நமக்கு தருகிறது என்பதும் உண்மை.

ப்ராண சக்தி ஐந்து விதமான உட்பிரிவு கொண்டது என பார்த்தோம். அது போல ப்ராண சக்தியை வெளிப்படும் தாவரம் மற்றும் பசு இவைகள் வெளிப்படுத்தும் செயல்களும் ஐந்து தன்மையை சார்ந்தே இருக்கிறது.

இலை, தண்டு, கிளை, பூ, கனி என தாவரமும், சாணம்,சிறுநீர்,பால், தயிர் மற்றும் நெய் என பசுமாடும் தங்கள் செயலால் ப்ராணனை அடையாளப்படுத்துகிறது. தாவரம் மற்றும் பசு கொடுக்கும் ஐந்து பொருட்களை உண்டு வாழ்ந்தால் மனிதன் ப்ராண சக்தியை பெறமுடியும் என பலர் நினைக்கிறார்கள். உண்மையில் தாவரம் மற்றும் பசுக்களுடன் இணைந்து வாழ்ந்தாலே போதுமானது. அவை கொடுப்பதை உண்ண வேண்டும் என கட்டாயம் இல்லை. இது தான் வேதகால ரகசியம்.
இராமேஸ்வரத்தில் பின்புறம் வழிபட பூஜா ஸ்டேண்டுடன் நிற்கும் பசு. :)

சிலர் பசுவை உண்பது பாவம் என்றும் சிலர் உண்ணலாம் தவறில்லை என்றும் வாதம் செய்கிறோம். அவற்றை சற்று விளக்கமாக பார்ப்போம். பசு மனிதகுலத்திற்கு நன்மை கொடுக்கிறது என நினைப்பதால் தான் சிலர் உண்ணக்கூடாது என்றும், உணவாக உற்கொண்டால் உடல் பலம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் பசுவின் உடலில் ஒன்றும் இல்லை. பசு பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி வெளியிடும் தன்மை மட்டுமே அதன் உடல் செய்கிறது. இவ்வாறு செய்யும் உடல் பகுதிகள் பசுமாட்டிடம் மட்டுமே உண்டு, காளையில் இல்லை.

இதை உணராமல் சிலர் பசுவை பின்பக்கமாக வழிபடுவது, சிலர் வெட்டி விழுங்குவதும் வேடிக்கையான விஷயம் அல்லவா?. ATM மிஷினில் பணம் கிடைக்கிறது என்பதற்காக அந்த மிஷினே பணம் அச்சடிக்கிறது என நினைக்கும் அறிவிஜீவிகள் இவர்கள். மிஷினை விடுங்கள் வங்கியை பாருங்கள்..!

தோடர்கள் என்ற பழங்குடியினம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் நீலகிரி மற்றும் தென் கர்நாடகவில் வாழும் ஒரு பழங்குடியினர். இவர்கள் எருமையை தெய்வமாக வணங்குகிறார்கள். எருமையை கொல்லுவது மற்றும் அவற்றை கொண்டு உழுவது என அனைத்தும் பாவம் என்பது இவர்களின் வாதம். மண்ணை கூட தோண்ட மாட்டார்கள் காரணம் மண் என்பது தாய்க்கு சமம் என்பது இவர்களின் எண்ணம். தாவர உணவை உண்டு வாழும் உலகின் ஒரே பழங்குடியினர் என இவர்களை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள் தாவரத்திலிருந்து ஆற்றலை பெறுவதற்கும் எருமை பசுவின் மூலம் வழிபாடு செய்வதற்கும் கற்று வைத்திருக்கிறார்கள்.
ஊட்டி தோடர்கள் இயற்கை கோவில் முன்புற தோற்றம்

பசுவை வழிபடுங்கள் என நான் கூறவில்லை. மரங்களை வழிபடுங்கள் என்றும் கூறவில்லை. காரணம் வேதகால வாழ்க்கை என்பது வழிபாடு,மதம் மற்றும் இனத்தை தாண்டிய விஷயம்.

பிற இயற்கை உயிர்களாகிய பசு மற்றும் தாவரத்திற்கும் உங்கள் வாழ்க்கை முறைக்கும் தொடர்பு உண்டு அதனால் அதை மதியுங்கள் என கூறுகிறேன்.

அதனால் தான் இந்த பகுதி ஒன்பது வரை எந்த மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தும் நான் வேதகால வாழ்க்கையை விளக்கவில்லை.இனி வரும் காலத்தில் மனிதன், பசு மற்றும் தாவரம் இவை மூன்றும் இணைந்து எப்படி வேதகால வாழ்க்கை முறையாகிறது என பார்ப்போம்.

(...வேதம் ஒலிக்கும்)