Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 14, 2009

வேதகால வாழ்க்கை பகுதி - 12

நம் வாழ்க்கையில் நிறைய நன்மை கொடுக்கும் காரியங்களை நமக்கு தெரிந்தாலும் அவற்றை பின்பற்ற முடியாது. உதாரணம் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை சொல்லலாம். நமக்கு சுற்றுசூழலுக்கும் ஒவ்வாத காரியங்கள் பலவற்றை மன உறுத்தல் இல்லாமல் நம்மால் செய்ய முடிகிறது. அது போன்றுதான் வேதகால வாழ்க்கை முறையும். மரம் நமக்கு என்ன செய்கிறது, பசு நமக்கு கொடுக்கும் நன்மைகள் என்ன என அனைவருக்கும் புரிந்தாலும் அவற்றை வளர்க்க முயலமாட்டோம்.

மனித குணம் எப்பொழுதும் புலன் இன்பத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது. ஒருவருக்கு சுவையான உணவு இருக்கும் இடம் தெரிந்தால் அதை பெற அவர் பல காரணம் கூறுவார். அதே போல தானக்கு நன்மை என தெரிந்தும் சில காரியங்களை செய்ய நாம் பல காரணம் கூறி தட்டிக்கழிப்போம்.

பின்வரும் காரணங்கள் பலர் வேதகால வாழ்க்கை பின்பற்ற முடியாது என கூறும் காரணங்கள்.

மரம் வைக்க என் வீட்டில் இடம் இல்லை. நான் அப்பார்ட்மெண்டில் இருக்கிறேன். வெளிநாட்டில் வசிக்கிறேன் அதனால் நீங்கள் கூறும் மரங்கள் இங்கே இல்லை. பசு மாடு எங்கள் ஊரில் தடை. பசுமாடு வளக்கும் அளவிற்கு என் வீட்டில் வசதியான இடம் இல்லை. மேலும் பசுவை பராமரிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது.

முதலில் மரம் வளர்க்கும் முறையை பார்ப்போம்.

அனேகமாக நகரங்களில் மே ப்ளவர் மரங்கள் போன்ற மரங்களையே வீதிகளில் நடுகிறார்கள். இதன் காரணம் அவற்றிற்கு பராமரிப்பு குறைவு என்பதும், வேகமாக வளருவதும் ஒரு காரணம்.

மே-ப்ளவர் மரங்கள் ப்ராண சக்தி மிகவும் குறைவான மரங்கள். இவை புளியமரம் போல ப்ராணனை நம்மிடமிருந்து பறிப்பதில்லை என்பதும், நல்ல நிழல் மற்றும் காற்று தரும் மரம் என்பது ஆறுதலான தகவல்கள்.

ஆனால் இம்மரங்களுக்கு பதில் வன்னி, வேப்பம், பூவரசு, மரமல்லி போன்ற மரங்கள் வைத்தால் மிகவும் சிறப்பான சூழல் அமையும். உங்கள் பிறந்தநாள், மண நாள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் உங்கள் வீட்டின் அருகில் மரம் நடலாம். இதற்கு மரம் நடுவிழா என விளம்பரம் செய்ய தேவையில்லை.

இம்மரங்களின் கன்றுகள் அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கும். இவற்றை வாங்கி நட்டுவிட்டு நீர்விட்டீர்கள் என்றால் சில நாட்களில் துளிர்த்துவிடும்.

தினமும் சென்று தண்ணீர் ஊற்ற சிரமமா? தென்னை நார்களை மரகன்றின் அடியில் போட்டு நீர் ஊற்றுங்கள் மூன்று நாட்களுக்கு இது தாங்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஊற்றுங்கள். இப்படி இரு வாரங்கள் பார்த்தால் போதுமானது. பிறகு அந்த கன்று மரம் ஆகும் வரை தன்னை தானே பார்த்துக்கொள்ளும்.

இதற்கும் சிரமம் இருந்தால் மற்றொரு யோசனை இதோ.

பெரிய மரங்களின் கன்றுகளை வாங்கி சிறிய தொட்டியில் வளர்த்துங்கள். வீட்டின் உள் அறையில் கூட வளர்த்தலாம், அல்லது விட்டின் முன்புறம் அழகு செடிபோல வளர்க்கலாம். அதிகபட்சம் 8 முதல் 10 மாதங்களுக்குள் நன்கு வளரும். பிறகு அந்த செடியை வேறு நிலபகுதியில் வைத்துவிட்டு, அதே தொட்டியில் அம்மரத்தின் புதிய கன்றையோ அல்லது வேறு மரத்தின் கன்றையோ வளர்த்தலாம். இம்முறை வீட்டிலும் உங்கள் அலுவலக சூழலிலும் பின்பற்றலாம்.

இவ்வாறு செய்வதால் மரங்கள் பெருகுவதும், நம்மை சுற்றி நல்ல ப்ராணன் இயங்குவதற்கும் ஏதுவாக இருக்கும். நான் வேலை செய்யும் சூழல் குளிரூட்டபட்ட இடம், அதில் மரம் வளர்க்கலாமா என கேட்டால், மரத்தை சிரமப்படுத்தாதீர்கள் என கூறுவேன். நீங்களும், மரமும் ப்ராணன் அமுங்கிய நிலையில் குளிரூட்டபட்ட அறையில் இருப்பதை நினைக்கவே மனம் கலங்குகிறது.

உங்களுக்கும் மரம் வளர்க்க வேறு யோசனை இருந்தால் சொல்லுங்களேன்.

அடுத்து பசு. பசுவிற்கு ப்ராணன் அதிகம் என்றேன். ஆனாலும் அவற்றை நகரத்தில் வளர்த்துவது சிரம் அதிகம் உண்டு. பசுவை காருடன் (மகிழுந்து-car) ஒப்பிட்டு நோக்கினால் சில விஷயங்கள் புரியும்.

இரண்டுக்கும் நான்கு கால் இருக்கு என அபத்தமாக ஆரம்பிக்க வேண்டாம் :)

நம் வீட்டில் கார் நிறுத்த இடம் இல்லை என்பதாலும், அப்பார்ட்மெண்டில் வசித்தாலும் கார் வாங்காமல் இருக்கிறோமா? அது போல நமக்கு விருப்பம் இருந்தால் பசு வாங்கலாம். சில நண்பர்களுடன் இணைந்து பசுவும், காளையும் வாங்கி ஒரு பொதுவான இடத்தில் வைக்கலாம்.

கார் வாங்கி அவற்றை பொதுவான பார்க்கிங்கில் நிறுத்துகிறோம் அல்லவா அது போலத்தான். பொது பார்க்கிங்கிற்கு மாதம் சில ரூபாய் செலவிடுகிறோம். அத்தொகை ஒரு பசுமாட்டை பராமரிக்க போதுமானது.

அவற்றை பராமரிக்க ஒருவரை நியாமிக்கலாம். ஒரு 6 மாதம் முதல் 8 மாதம் வரை இவற்றிற்கு செலவு செய்தால் பிறகு பசுமாடு தன்னையும் தன் கூட்டத்தையும் பராமரிக்கும் செலவை சம்பாதிக்கும். அதன்மூலம் கிடைக்கும் பால் மற்றும் இதர விஷயங்கள் உங்களுக்கு உபரியாக கிடைக்கும்.

கார் வாங்கி சில வருடங்கள் கழித்து மற்றொரு கார் கிடைக்குமா? ஆனால் பசுவாங்கினால் சில வருடங்களில் பல்கிபெருகும்.

சுத்தமாக பராமரித்தால் பசுமாட்டிற்கு நல்லது. எந்த மாநகராட்சியும் இதற்கு தடை சொல்லாது. பசு மாடு கறவை முடிந்தாலும் அதில் ப்ராணன் உண்டு என்பதால், பால் கொடுக்காவிட்டாலும் பசுவால் பயன் உண்டு.

பசுவை உண்ணுவது தவறு என சொல்லும் அளவிற்கு நான் வள்ளலாரின் வழிவந்தவன் அல்ல. ஆனால் உயிர்வதை என்பதை கொண்டாலும், ஒரு உயிர்வதை செய்வதால் நம் உடலில் ஏற்படும் சில ப்ராண தடுமாற்றத்தையும் கருத்தில் கொண்டு தவறு என்கிறேன்.

சிலர் கேட்கிறார்கள் பசுமாடு இயற்கையாக இறந்து யாராவது பார்த்து இருக்கிறார்களா என்று, குரங்கின் இயற்கையாக இறந்த உடலை கூடத்தான் யாரும் பார்த்ததில்லை. அதற்காக குரங்கு சாப்பிடுபவர்கள் அதிகம் என கூறமுடியாது.

அடிமாடிற்கு பசுவை அனுப்புவது தவறு. ஆடு போல இறைச்சிகாக வளர்த்தி கொல்லுவது கூட அனுமதிக்கலாம். பசுவை கேரளாவில் எப்படி இறைச்சிக்காக வெட்டுகிறார்கள் என நேரில் ஒருமுறை பார்த்தால் அசைவம் சப்பிடுபவர்களுக்கும் மன நிலை தடுமாறும். பசுவின் இறைச்சி மென்மையாக இருக்க வேண்டும் என்று அவற்றை பயமுறுத்தி, பசு இருக்கும் அறையில் பட்டாசு வெடித்து அவற்று மிரள செய்து வெட்டுவார்கள்.

அதன் இரத்தம் சூடாகி, இருதயம் படபடப்புடன் இருக்கும் பொழுது வெட்டினால் இறைச்சி மிகவும் மென்மையாக இருக்குமாம். நினைத்துபாருங்கள் உங்கள் விரோதிக்கு இப்படி பட்ட சாவு வந்தால் கூட அனுமதிக்க மாட்டீர்கள் தானே?

தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அடிமாடாக செல்லும் காட்சியக் காணும் நகரத்தில் நான் வசிப்பது நான் எப்பொழுதோ செய்த பாவம்தான். பல நல்லுள்ளங்களின் உதவியுடன் கறவை முடிந்த பசுவையும், முதிர்ந்த காளைகளையும் பராமரிக்கும் கோசாலையை சிலர் கோவையில் ஏற்படுத்தியுள்ளனர். கோவையை விட்டு சில கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்தில் இந்த சூழல் இருக்கிறது. சில நூறு மாடுகள் பராமரிக்கபட்டு வந்தது. அடிமாடுகளாக சென்ற பாதிமாடுகள் இதில் அடக்கம். இதில் கொடுமை என்ன வென்றால் சில மாதங்களுக்கு முன் இதிலிருந்து மாடுகளை சிலர் களவாடி சென்று இறைச்சியாக்கிவிட்டார்கள்.

பிற உயிர்களை துன்புறுத்தி நம் உயிரை களங்கப்படுத்தாமல், நமக்கும் இயற்கைக்கும் நன்மை கொடுத்து வாழும் வாழ்க்கைதானே வேதகால வாழ்க்கை?

நான் வேதகால வாழ்க்கை பற்றி கூறுகிறேனே நான் வேதகால வாழ்க்கை முறைக்கு என்ன செய்தேன் ? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(......வேதம் ஒலிக்கும்)

6 கருத்துக்கள்:

Self Realization said...

swamji your thoughts are very good..Please don't answer to all people questions including me.

Ask them to write a vedic life history in their blogspot...
They don't have that much skill swamji...

They will not use there own senses..but they criticize others.

They are all fools..don't waste your time...swamji..

Don't stop this postings for any one...

They are contradict not only with u but also god and nature...

நிகழ்காலத்தில்... said...

பட்டாசு வெடித்து உடல் இளகி பசு வெட்டப்பட்டாலும், வெட்டும்போது பயத்தில் இயல்பாக உடல் இறுகித்தானே உயிர் பிரியும்.

அதன் தாக்கங்கள் உடலில் சதையில் இருக்கத்தானே செய்யும், அதை உண்ணும்போது நம் பிராணனில்/உடலில் என்ன பாதிப்பு வரும்??

ரங்கன் said...

வணக்கம் சுவாமிஜி

எங்கே அடுத்த பகுதி வராதோ என நினைத்தேன்.

நகரத்தில் பசு வளர்ப்பு பற்றி புதிய யோசனை சொல்லி இருக்கின்றீகள் நன்றி. ஒரு முறை நான் மருத்துவரின் இடத்தில் இருக்கும்போது தொலைக்காட்சியில் ஆடு உணவுக்குப் பயன்படுத்தும் முறயை காண்பித்தனர். அதிர்ந்துபோனேன். பின் இருக்கைய்லிருந்து 'யா அல்லா' என்று ஒரு குரல் அலறியது. திரும்பினேன். ஒரு இஸ்லாமியப் பெண்மணி. அவர் முகத்தில் பார்த்த வேதனையை என்னால் இன்றும் மறக்க முடியவல்லை. அவர் மாமிசம் உண்பதை அடியோடு விட்டிருப்பார் என நினைக்கின்றேன்.

தொடர்க உங்கள் பதிவுகள்.

Sabarinathan Arthanari said...

நன்றி

Unknown said...

nallaa karuthu

ஷண்முகப்ரியன் said...

மதமும்,அறிவியலும் வெறும் செத்த கருத்துக்களாக,DOGMAக்களாக ஆகும் போதெல்லாம் பிரச்சினைகள் வெடித்தே தீரும்.

உயிருள்ள கவிதைகளாகப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் அனுபூதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என இறையருளை இறைஞ்சுகிறேன்.

மனதினைக் கடந்து,அறிவினைத் தாண்டி உள்ள பேருண்மைகளைத் தரிசிக்க மனதையும்,அறிவையுமே பயன்படுத்த வேண்டும் என்பது நமது விதி.

அது வாய்க்க வல்லாருக்கே நீங்கள் சொல்வது புரியும் என நினைக்கிறேன்.

'where is the wisdom we have lost in our knowledge?'
where is the knowledge we have lost in our informations?'

and

WHERE IS THE LIFE WE HAVE LOST IN OUR LIVING?''

T.S.ELIOT.