பெண்களும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளீர்கள். பெண்கள் சதாசர்வகாலமும் அணிவது சாத்தியப்படுமா? குறிப்பிட்ட சில தினங்களில்பெண்களுக்கு negative energy அதிகமாய் இருந்தால், அப்பொழுதும் கூட பெண்கள்ருத்ராஷம் அணிதல் தகுமா?
பெண்கள் ருத்ராஷத்தை விட துளசிமாலை அணிவது சரியென்று பலர் கூறுகின்றனரே. துளசிமாலையும் எப்பொழுதும் அணிய பயன்படுத்தலாமா?
நான் துளசிமாலை வைத்திருக்கிறேன். சில நேரம் ஜபம் செய்யும் போது மட்டும் எடுத்து ஜபம் செய்துவிட்டு பின் பூஜையறையில் வைத்துவிடுவேன்.
ஜபிக்கப்பட்ட மாலையல்லாது இன்ன பிற மாலைகள் வெறும் அணிகலனுக்கு ஒப்பு என்று கூறியுள்ளீர்கள். இப்படிப் பட்ட ருத்ராஷமோ, துளசிமாலையோ எப்படி பெறுவது.
அவசரமில்லை. நேரம் இருக்கும்போது என் வினாக்களுக்கு விடையளியுங்கள். தொந்தரவுக்கு மன்னிக்க. நன்றி.
சகோதரி சக்திபிரபாவுக்கு,
உங்கள் கேள்வி அனைவருக்காகவும் கேட்கபட்டதாக கொண்டு விரிவான விளக்கத்தை இப்பதிவில் இடுகிறேன்.
பெண்கள் ”ஆன்மீக” பொருட்களை பயன்படுத்த எந்த காலத்திலும் எந்த தடையும் இல்லை. ”மத” பொருட்களை பயபடுத்தவே தடை உண்டு.
நீங்கள் சொல்லுவதை போல “negative energy" தவறு என்றால், அந்த எனர்ஜி இல்லாமல் நானும் நீங்களும் தோன்ற முடியுமா? அது தாய்மையின் அடையாளம். ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல.
அபாணா எனும் பிராண சக்தி அதிகமாக வெளிப்படுவதால் அந்த நிலையைல் பெண்களுக்கு வேலை கொடுக்காமல் ஓய்வு கொடுத்தார்கள். தள்ளி வைக்கவில்லை.
கேரளாவில் பகவதி கோவில்களில் மாதம் மூன்று நாட்கள் அம்மனுக்கு இதே போன்ற சடங்குகள் செய்யபடுவது உங்களுக்கு தெரியுமா? குருதி பூஜை என சொல்லபடும் இந்த பூஜை பரவலாக அனைவரும் அறியாதது. மேலும் சுயம்புவாக இருக்கும் பகவதி அம்மன் பெண்களை போல இயற்கையாகவே இந்த நிலைக்கு ஆட்படுவதாக சொல்லுகிறார்கள்.
மாதவிலக்கு என்னும் சொல்லாடலை நான் வெறுக்கிறேன். மாத ஓய்வு என சொல்லலாம். இக்காலத்தில் பெண்களுக்கு உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக அதிக தளர்ச்சி இருக்கும். அதை காக்க ருத்திராட்சம் அணியலாம். தவறில்லை.
ஆன்மீகத்தில் பெண்களின் உண்மையான நிலை என ஓர் பதிவிட்டு விளக்க எனக்கு எண்ணம் உண்டு. ஆனால் சில காரணத்தால் அதை தவிர்த்து வருகிறேன்.
இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்,மனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம்.
துளசி மாலை அணிவதில் தவறில்லை. அதுவும் சக்திவாய்ந்த பொருள் தான். ருத்திராட்சத்திற்கு மாற்றாக துளசிமாலை என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. ஆனால் துளசி மாலைக்கு என்று தன் சக்தி உண்டு.
எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டு, வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்?
ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஆன்மீக குரு, ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம், மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது.
அடிப்படை மூல மந்திர ஜபம் இவ்வாறு குருவிடம் இருந்து பெற்று மேம்மட்டவுடன், பிற மந்திரங்களை ஜபம் செய்ய நாம் அதிகாரம் பெறுகிறோம். அப்பொழுது நாமாகவே முடிவு செய்யலாம்.