Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, December 5, 2008

பங்கு சந்தையும் ஜோதிடமும்

பங்கு சந்தையும் ஜோதிடமும்
- மாயையின் முழு ரூபம்

உலகில் மக்கள் ஒரே நோக்கத்தில் பயக்கிறார்கள். அவர்கள் பொருள் சேர்க்கை மற்றும் காமம் எனும் பாதையே அவர்களில் இலக்கு என்கிறார் ஆதிசங்கரர். பஜ கோவிந்தம் சுலோகத்தில் இதை குறிப்பிட்டு இவை அழியக்கூடியது என்கிறார். கோவிந்தனை பாடி அழியாத நிலையை அடைவது இதை விட எளிது என்கிறார்.ஆனால் இன்றைய உலக மக்களிடையே இதை சொன்னால் ஆதிசங்கருக்கு கிடைத்த மரியாதை கிடைக்காது. ஏசு நாதருக்கு கிடைத்த கடைசி மரியாதையே கிடைக்கும். ஆனால் மனிதன் தற்சமயம் இருக்கும் மாய நிலையை வைத்து பார்க்கும் பொழுது இது போன்ற பொருளாசை மற்றும் உடலாசையிலிருந்து விடுதலை அடைய கட்டுப்பாடு விதிப்பது , மேலும் பல தவறுகளை சமூகத்தில் செய்ய தூண்டும். இதை செய்யாதே செய்யாதே என சொல்ல சொல்ல தானே மனிதன் மீண்டும் மீண்டும் செய்கிறான்?

ஞான மார்கத்திற்கு செல்ல பல வழிகள் உண்டு.நமது பாரத மண் பல ஞானிகள் அவதரித்த அவதார பூமியாகும். தன் உடலை வருத்தி கடவுளின் சொரூபத்தை அறிவது என்பது ஞான மார்கத்தின் ஓர் வழியாக இருந்தாலும், பொருள் தேடி மனதின் சமஸ்காரத்தின் தேவைகளை பூர்த்தி செய்து பின்பு கடவுளை அடைவது மற்றொரு வழியாகும். பொருள் தேடி கடவுளை அடைவது நடக்கக்கூடிய காரியமா என உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்? இதே வியப்பு ஓர் பத்திரிகையாளருக்கு ஏற்பட்டு, என்னிடத்தில் கேள்வியை கேட்டார்.

பத்திரிகையாளர் : ஆன்மீகவாதிகள் ஆசையை விடு,பொருள் சேர்க்கையை செய்யாதே எனும் பொழுது நீங்கள் பங்கு சந்தை மேலும் பல வழிகளில் சம்பாதிக்கும் வழிகளை கூறுவதன் காரணம் என்ன?

ஸ்வாமி ஓம்கார் : மனித குலம் பொருள்சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் மனதில் திட சங்கல்பத்துடன் செயல்படுகிறது. இதை கட்டுப்படுத்த கூறினால் விரக்தியான மனப்பான்மையும் மேலும் கர்ம சமஸ்காரங்களும் அதிகரிக்கும். அவர்கள் பிறவியெடுத்த கர்மா பொருள்சேர்ப்பது என்றால் அந்த கர்மா நிறைவடைய உதவி செய்வது தவறல்ல. மேலும் கௌதம புத்தர், புரந்தரதாசர், ஜனக மஹாராஜா, பட்டினத்தார், தாயுமானவர் மற்றும் சைதன்யர் இவர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்த ஞானிகள் என்பது உங்களுக்கு தெரியும். என் வழிகாட்டுதலில் உள்ளவர்களை பக்தர்களாக்கும் கடமை மட்டுமல்ல அவர்களை ஞானிகளாக்குவதே எனது எண்ணம். ஆகவே உங்களில் இருக்கும் புத்தனை காண என்னிடம் வழி உண்டு...!

கலியுகத்தில் ஞான மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இது ஓர் வழி என உங்களுக்கு புரிந்திருக்கும். நமது உலக கடமைக்காக மட்டும் பொருள் சேர்த்து மற்ற நேரங்களில் மனதில் இறை உணர்வை நிலை நிறுத்தினால் , ஆன்மீக உயர்வடையோம். ஆனால் பொருள் சேர்த்து அதன் மூலம் கர்மங்களை அதிகரிக்காமல் இயன்றளவு தர்மம் செய்வது, பிறர் பொருளுக்கு அதிக ஆசை படாமல் இருப்பது அவசியம்.

சிலர் ஆசை படாதே அல்லது ஆசை படு என மக்களுக்கு கூறுகிறார்கள். ஆசை படுவதற்கோ அல்லது ஆசை படாமல் இருப்பதற்கோ எந்த வழியையும் அவர்கள் கூறுவதில்லை. செல்வந்தன் ஆசைபடாமல் இருப்பதும் ஏழை ஆசைபட வேண்டும் என்பதும் எனது எண்ணம். எல்லோரும் ஆசை படாதீர்கள் என கூறுவது ஏழைக்கு பொருந்தாது. இது ஆண்மை குறைவுள்ளவன் பிரம்மச்சரிய விரதம் இருப்பதும், வறுமையில் இருப்பவன் ஏகாதசி விரதம் இருப்பதாக சொல்வதற்கு சமம். ஆக பொருள் சேர்ப்பது சமூகத்திற்கும், இயற்கைக்கும் எதிராக இல்லாதவரை நல்லது தான்.

மேலும் தேவை பூர்த்தியானதும் மனதில் ஓர் வெறுமை உண்டாகும். நான் எங்கிருந்து வந்தேன், நான் யார் என கேள்வி எழும் இந்த விசாரம்(கேள்வி) ஞான மார்கத்தின் முதல் படி. ஓர் வைசியன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது அவனது தர்மம். அவனிடத்தில் தத்துவங்கள் உதிர்ப்பது முட்டாள் தனம். இங்கு வைசியன் என நான் குறிப்பிடுவது வியாபாரம் செய்பவர்களைதான்.

ஓர் சந்தையில் வியாபாரம் செய்வது போன்றது தான் பங்கு சந்தை. ஆனால் இங்கு வாடிக்கையாளர்களை நீங்கள் நேரில் பார்க்க முடியாது. உங்கள் முதலீடு வளர்ந்ததும் , அதை கொண்டு பயனடைகிறீர்கள். ஜோதிடத்திற்கும் பங்கு சந்தைக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் நட்சத்திரங்களின் சக்திக்கு உட்பட்டு செயல்படும் பொழுது பங்கு சந்தையும் அதில் பங்கு கொள்பவர்களும் இதில் அடக்கம் என்பதை மறந்து விட கூடாது. ஜோதிடம் மூட நம்பிக்கை, துல்லியமான பலன்கள் ஜோதிடத்தில் கூற முடியாது எனும் எண்ணம் மக்களிடையே பரவிகிடக்கிறது. ஜோதிடத்தை

உங்களால் நிரூபிக்க முடியுமா? என என்னிடத்தில் கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் எண்ணம் எனக்கு வந்தது. வேதகால விஞ்ஞானமான ஜோதிடத்தின் உண்மையை நிரூபிக்க பங்கு சந்தையை தேர்ந்தெடுத்தேன். காரணம் அதிக ஏற்ற இறக்கங்களும், வியாபார அனுபவம் வாய்ந்தவர்களால் கூற முடியாத பங்கு சந்தையை துல்லியமாக கூறுவது சவாலான விஷயம். ஜோதிடம் மூலம் காலையில் கூறப்படும் பலன் பங்கு சந்தை முடிவடைந்ததும் மாலையில் தெரிந்துவிடும். ஒரே நாளில் ஜோதிடம் என்ற உண்மை ரூபிக்கப்பட்டு விடும். மேலும் நஷ்டமடைபவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

எனது இந்த கருத்தை பல பத்திரிகைகள் பாரட்டியுள்ளன. ஜோதிடம் மூலம் பங்கு சந்தையை காண்போம். பிறப்பு ஜாதகத்தில் 2,6,10,11 ஆம் வீடுகளுடன் 5 ஆம் பாவ உபநட்சத்திரம் ன்ற நட்சத்திரம் தொடர்பு கொண்டு மேலும் 10ஆம் பாவ உபநட்சத்திரம் 5ஆம் பாவத்தை குறிகாட்டினால் அவர்கள் பங்கு சந்தை மூலம் பலன் அடைவார்கள். ராசியில் துலா ராசி , கிரகத்தில் குரு மற்றும் புதன் பங்கு சந்தையை குறிக்கும். 2,5,10,11 ஆம் பாவங்கள் தசா புக்தி காலத்தில் ஜாதகர் நல்ல பலனை அடைவார்.

ஓர் சில நிறுவனங்களில் முதலீடு செய்து பயனடைய முடியுமா என்பதை பிரசன்ன முறையில் நிர்ணையம் செய்வதே சிறந்தது. பிரசன்ன ஜாதகத்தில் 6 ஆம் பாவ உப நட்சத்திரம் 2,6,11 குறிகாட்டினால் முதலீடு வளரும் என்பதையும்,5,8,12 யை குறிகாட்டினால் முதலீடு நஷ்டமடையும் என அறியலாம். பங்கு சந்தையில் பல வகையான றுவனங்கள் பங்கு கொள்கிறது. பெட்ரோல், தொலை தொடர்பு என நிறுவனங்களின் தொழில் பிரிவுகள் வேறுபடுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பான முன்னேற்றம் பெறும் வியாபார பிரிவு( sector) சந்திரனை கொண்டு முடிவு செய்யலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திராதிபதி வியாபார பிரிவை நிர்ணையம் செய்கிறார். கிரகங்கள் குறிக்கும் வியாபார பிரிவுகள் சிலவற்றை காணலாம்.

கிரகம்-----------------------------------தொழில் பிரிவு
சூரியன் / செவ்வாய்
----------------மருந்து பொருட்கள்
குரு / புதன்
-----------------------------வங்கி
சுக்கிரன் / புதன்
------------------------கம்யூட்டர்
புதன்
--------------------------------------தொலை தொடர்பு
கேது / சந்திரன்
------------------------எரிவாயு
சந்திரன்
--------------------------------- சிமெண்ட்
செவ்வாய் / சுக்கிரன்
-----------------ஆட்டோ மொபைல்
சனி/சந்திரன்/யுரைனெஸ்
---------பெட்ரோலியம்
சனி / நெட்டியூன்
----------------------மது
சனி/செவ்வாய்
------------------------உரம்

இது போன்ற கிரகத்தின் தன்மையை கொண்டு வியாபார பிரிவில் முதலீடு செய்யலாம். மேலும் பங்கு சந்தை இயற்கை சீற்றங்களையும் , அரசியல் மாற்றத்தையும் பொருத்து மாறுபடும். ஜோதிடத்தில் உலக நிகழ்வுகளை கணிக்க தெரிந்த ஜோதிட அறிஞர்களுக்கு பங்கு சந்தை கணிப்பது எளிது. சிறிது பங்கு வர்த்தக அறிவும் , முழு ஜோதிட ஞானமும் இருந்தால் பங்கு சந்தை உங்கள் வங்கி கணக்கை உயர்த்தும். இந்த ஜோதிட விதிகளை கொண்டும் , கடவுளின் அனுகிரகத்தாலும் உங்கள் பங்கு வர்த்தகம் சிறக்க வாழ்த்துகிறேன்.


7 கருத்துக்கள்:

Ramesh said...

Swami Omkar,

I am interested.

Vinodh said...

Vanakkam Swamiji,

Very nice blog....

i have one doubt...

On what basis we can select prasna lagna? whether we want to select the Market opening time or Suryodhaya time?

Regards
Vinodh.K
Coimbatore

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரமேஷ் அவர்களுக்கு,

உங்கள் ஆர்வத்திற்கும்,வருகைக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வினோத்,

சந்தை துவங்கும் நேரத்தை லக்னமாக எடுக்கலாம். அல்லது நாம் கணிக்கும் நேரத்தை லக்னமாக எடுக்கலாம்.

அதை ஆருடமாக கொண்டு பலன் சொல்லலாம்.

Vinodh said...

///ஸ்வாமி ஓம்கார் said...
திரு வினோத்,

சந்தை துவங்கும் நேரத்தை லக்னமாக எடுக்கலாம். அல்லது நாம் கணிக்கும் நேரத்தை லக்னமாக எடுக்கலாம்.

அதை ஆருடமாக கொண்டு பலன் சொல்லலாம்.///

Thank you Swamiji.... for clarifying my doubt....

Regards
Vinodh.K
Coimbatore

ramana said...

Iam intrested

www.pottal.blogspot.com said...

My date of birth is 02 Feb 1979 at 10.30 PM at Tuticorin.Can I Get Suceess in Stock market as a trader.- P Radha Krishnan