Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 10, 2023

இலவச ஜோதிட பயிற்சி - அனைவரும் கற்றுக்கொள்ளலாம்


ஜோதிட சாஸ்திரம் என்பது அனைவருக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சாஸ்திரம். சாஸ்திர பயிற்சியை கடந்த 23 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.

பல்வேறு தேசங்கள், பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரம் கொண்டவர்களுக்கு ஜோதிடத்தை சரியாக கற்றுக்கொடுத்து- அவர்கள் ஜோதிட பலன் சொல்லும் அழகை கண்டு ரசித்திருக்கிறோம். ஜோதிடமே தெரியாத ஒருவர் சில நாட்களில் ஜோதிடம் கற்று முழு பலன்களையும் துல்லியமாக பலன் சொல்லும் பொழுது நாம் அடையும் ஆனந்தத்திற்கு இணை ஏதும் இல்லை.


ஜோதிட பயிற்சியை பல்வேறு தளங்களில் பயிற்றுவித்த அனுபவம் கொண்டது நமது ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை.


முதலில் நேரடியான பயிற்சி அளித்தோம். 2003ஆம் ஆண்டில் கோவை வட்டாரத்தில் மட்டும் இயங்கும் சிறிய கேபிள் டீவி சேனலில் பயிற்சி அளித்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம். பிறகு விடியோ கேசட்டாகவும், DVD வடிவிலும் பயிற்சி அளித்தேன்.

நீங்கள் கண்டுகளிக்க 2009 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கில வீடியோவை இங்கே அளிக்கிறேன்.


தமிழ் வீடியோ

ஆங்கில வீடியோ

பலருக்கு வீடியோ இயக்குவது மற்றும் குடும்ப உறுப்பினர்களை சமாளித்து டிவியை வென்று எடுப்பது வரை பல பிரச்சனைகள் இருந்தன. 2009 ஆம் ஆண்டு பெரிய தொழில் நுட்பங்கள் கைவரப்பெறாத நிலையில் வீடியோ வடிவில் வெளியிட்ட DVD சுமாரான தயாரிப்பாக இப்பொழுது தெரிகிறது. ஆனால் அன்று அது மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் பலர் அதனால் ஜோதிட பயிற்சி பெற்றார்கள்.


2005ஆம் ஆண்டுக்கு பிறகு இணையம் பரவலான பிறகு Skype மூலம் பயிற்சிகள் அளித்தோம். அதனால் பலர் பயன்பெற்றார்கள். இருந்தாலும் தொழில் நுட்ப வசதிகள் பொருத்து இவையாவும் முயற்சியாகவே இருந்தன. ஒலி ஒளி மற்றும் கற்றுக்கொடுக்கும் வசதி குறைவாக இருந்தது. பலருக்கு இணையம் என்பது புதியது என்பதாலும் ஆன்லைன் பயிற்சி என்பது 2005ஆம் ஆண்டுகளில் பிரபலம் ஆகவில்லை.


மார்ச் 2023ஆம் வருடம் ஜோதிட பயிற்சி ZOOM தொழில்நுட்பத்தில் ஆன்லைனில் பயிற்றுவித்தோம். மிகவும் வசதியான சூழலும் ஒலி, ஒளி தரம் மேம்பட்டும் இருந்தது. பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கும் நல்ல வேகமான இணைய வசதி மற்றும் நவீன தொலைபேசி என தற்சமயம் சாத்தியப்பட்டு இருக்கிறது.

யூடியூப் தளத்தில் முழு பயிற்சியும் பதிவு செய்து உள்ளோம். இனி நீங்கள் விட்டில் இருந்தபடியே ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம். மீண்டும் மீண்டு பயிற்சியை கண்டு நினைவில் வைத்துக்கொள்ளலாம்.  

பன்னிரெண்டு வகுப்புகள் கொண்ட பயிற்சி வீடியோ இனி ஒவ்வொன்றாக வெளிவரும்.


ஜோதிட சாஸ்திரத்தில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் மூடநபிக்கைகள் களைந்து சிறப்பான பயிற்சி இது.

வாருங்கள் ஜோதிடம் பயில்வோம்.

ஜோதிட வகுப்பு முதல் பகுதி
ஜோதிட வகுப்பு பகுதி இரண்டு


சாஸ்திர பயிற்சியை இலவசமாக அளிப்பது என்பது சரியான விஷயம் இல்லை என்பது எனது கருத்து. 


உங்களுக்கு பயிற்சி பயனுள்ளதாக இருந்தால் 9944133355 என்ற எண்ணுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு கட்டணம் அனுப்பி வையுங்கள்.


எங்கள் ஆன்மீக பணி மற்றும் ஆலய பணிகளுக்கு இந்தட் தொகை பயன்படுத்தப்படும். வேறு வகையில் நன்கொடை அளிக்க விரும்பினால் 9944 1 333 55 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.


சாஸ்திர பயிற்சிகள் நம்மை இணைத்திருக்கட்டும்.