Friday, June 22, 2012
குரு பூர்ணிமா 2012
விளக்கம்
அனுபவம்,
ஆன்மீகம்,
குரு பூர்ணிமா,
செய்தி,
விழா
Thursday, June 7, 2012
தென்கைலாய திருப்பயணம் - 2012
அருள்நிறைந்த ஆன்மாக்களுக்கு,
ஆன்மீக ஆன்பர்களுக்காக ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் பல்வேறு ஆன்மீக பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை, காசி மற்றும் பல்வேறு இடங்களுக்கு எங்களுடன் பயணித்து ஆன்மீக அமுதை சுவைத்தவர்கள் பலர். அதன் அடிப்படையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலைப்பயணம் திட்டமிட்டுள்ளோம்.
தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரிமலையில் இறையருளால் பயணித்து உங்களின் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
வரும் ஜூன் மாதம் 23,24ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) இரு நாட்கள்மலைப்பயணம் இருக்கும்.
தென்கைலாய பயணத்தில் தியானம், பஜன் மற்றும் மந்திர ஜபம் ஆகியவை நடைபெறும். சக்தி வாய்ந்த குகைகளில் தியானம் மற்றும் ப்ரார்த்தனைகளை செய்யலாம்.
இதற்கான கட்டணம் : உங்களின் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் மட்டுமே...!
இப்பயணம் ப்ரணவ பீடம் அறக்கட்டளை சார்ப்பில் நடத்தப்படுவதால் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அறக்கட்டளை சார்ந்தது.
எல்லோரும் கலந்து கொள்ளலாமா? -இப்பயணம் எளிமையானது அல்ல என்பதால் சில கட்டுப்பாடுகள் உண்டு.
1) இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்
2) ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் கொண்டவர்கள்
3) பெண்கள்
4) அதிக தூரம் நடக்க முடியாதவர்கள் அல்லது மலைபயணம் கடினம் என எண்ணுபவர்கள்.
மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை.
23ஆம் தேதி மாலை ப்ரணவ பீடம் அறக்கட்டளையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் (24ஆம் தேதி) மாலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைதல் என்பதே அடிப்படை திட்டம்.
இருபது நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதனால் ஜுன் 15ஆம்
தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.
முன்பதிவு செய்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு தனிமடலில், எடுத்து வர வேண்டிய பொருட்கள் மற்றும் பிற விஷயங்களை அனுப்பி வைக்கிறோம்.
நீங்கள் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் இப்பயணத்தில் பங்குபெற நினைக்கிறீர்களா? இப்பயணத்திற்கான போக்குவரத்து செலவு மற்றும் உணவு ஆகியவற்றை நீங்கள் நன்கொடையாக அளிக்கலாம்.
நம்முள் இருக்கும் இறையருளை இயற்கையின் திருநடனத்தால் உணர வாருங்கள்...!
விளக்கம்
ஆன்மீகம்,
தென்கைலாயம்,
பயணம்
Subscribe to:
Posts (Atom)