Thursday, March 24, 2011
பழைய பஞ்சாங்கம் 24-03-2011
Monday, March 21, 2011
தாய் மரம் - விதையின் வளர்ச்சி...! - பகுதி 4
Thursday, March 3, 2011
தாய் மரம் - விதையின் வளர்ச்சி...! - பகுதி 3
உங்களின் வசிப்பிடம் அல்லது தொழில் இடங்களில் மேற்கண்ட மர வகைகளை இட வசதிக்கு ஏற்ப நடவு செய்யலாம். நம் பிறந்த நாள் அல்லது திருமண நாட்களுக்கு பிறருக்கு பரிசாக வழங்கலாம். இதன் மூலம் வாங்குபவர்களுக்கு நன்மையாகவும், கொடுக்கும் உங்களுக்கு புண்ணியமாகவும் இருக்கும்.
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே பள்ளிகள் இருந்தால் அனுமதி பெற்று மாணவர்களுக்கு மரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மேற்கண்ட மரங்களை நட ஏற்பாடு செய்யலாம். அரசு பள்ளிகளில் தற்சமயம் பசுமை படை என்ற பிரிவு சாரணர் இயக்கம் போல அமைந்திருக்கிறது. அப்படையை பயன்படுத்தினால் உங்களில் பகுதி பசுமையாகும். சிறப்பாக செயல்பட்டு மரம் நட்டு வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுக்களையும், மதிப்பெண்னும் வழங்கி ஊக்குவிக்கலாம்.
மரம் நடுவதற்கு ஏதேனும் அடிப்படை வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டுமா?
ஆம்.
தாய் மரங்கள் தன்னை தானே ஆதரித்துக் கொள்ளும் வலிமை வாய்ந்தது. ஒரு முறை நீங்கள் நடவு செய்தால் அம்மரம் வளர்ந்து தன்னை தானே விதைகளாக்கி பல்கி பெருகிவிடும். அதனால் முதன் முறை நாம் மரம் நடும் பொழுது அக்கறையுடனும் நற்சிந்தனையுடனும் நட வேண்டும் என்பது முக்கியம்.
மரம் நடுவதற்கு சில முக்கிய அடிப்படை விஷயங்கள்
- மரம் நடும் குழி குறைந்த பட்சம் இரண்டடி ஆழம் ஒன்றரை அடி அகலம் இருத்தல் அவசியம்.
- பொடியாக்கிய சாண வரட்டி, காய்ந்த இலை சருகுகள் எறித்த சாம்பல் கலவை ஆகியவற்றை குழியில் இட்டு அதன் பிறகு மரக்கன்றை நட வேண்டும். தேவைப்பட்டால் மண் புழு உரம் அல்லது மக்கிய குப்பைகளை மரக்கன்று நட்ட இடத்தில் சேர்க்கலாம்.
- மரக்கன்றின் அடிப்பகுதியில் தேங்காய் நார் கொண்டு சுற்றி மூடி நீர் ஊற்றுவதன் மூலம் அதிக நீர் சத்து கொண்ட சூழலை உருவாக்கி மரகன்று காய்ந்து போகாமல் காக்கலாம்.
- ஒன்றுக்கு மேற்பட்ட மரக்கன்று நடுவதாக இருந்தால் குறைந்த பட்சம் பத்து அடி அதிகபட்சம் 30 அடி தொலைவு இருத்தல் அவசியம்.
- கட்டிட சுவர் அல்லது மதில் சுவர்களுக்கு அருகே நடவு செய்யாமல் குறைந்த பட்சம் 5 அடி தொலைவில் நடவு செய்தல் நலம்.
அவ்வளவு தான்…. இனி நீங்கள் புறப்படலாம்
பசுமை புரட்சி உங்களின் கைகளால் துவங்கட்டும்.
இத்தொடரை படிப்பவர்கள் மேற்கண்ட அட்டவணையில் ஒரு தன்மையிலாவது மரக்கன்று நடுவேன் என உறுதிமொழி எடுத்து மறுமொழியிட்டால் மகிழ்வேன். அதை கடைபிடித்து புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பினால் உங்களின் வாழ்க்கையில் ம(ர)றக்க முடியாத பரிசு ஒன்றை தருவேன்…!
(விதை முளைக்கும்)