ஜெர்மனியின் தென்பகுதியில் உள்ள சிறிய கிராம பூங்காவில் மாலைநேர இருளில் கைகளை இறுக கட்டிக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். கோடைக்காலம் என்றுதான் பெயர் குளிர் எலும்பை அசைத்துப்பார்த்தது.
ஏதோ யோசனையில் பூங்காவின் கடைசி பக்க புல்வெளிக்கே வந்துவிட்டேன். திரும்ப வீடுவரை செல்ல ஐந்து கி.மீ நடக்க வேண்டும். குறுக்கு வழி என்றால் பக்கவாட்டில் உள்ள மலைகுன்றை தாண்டினால் போதும் இரண்டு கி.மீ சென்றுவிடலாம். மெல்ல மலைக்குன்றில் ஏறத்துவங்கினேன்.
இதயம் வாய்க்கே வந்துவிடும் அளவுக்கு மூச்சுவாங்கியது. எப்பொழுதும் குறுக்குவழியில் பாதி வந்தவுடன் தான் நேர்வழியே தேவலாம் என தோன்றும். கொஞ்சம் தளர்வாகி நடக்கலாம் என சுற்றும் நோட்டம் விட்டேன்.
குன்றின் மேல் ஒரு கருப்பு நிற பழைய கோட்டை கண்ணில்பட்டது. பாதி செதிலம் அடைந்து உட்புற கற்கள் தெரிய ஒரு திகில் உணர்வுடன் காட்சி அளித்தது. அந்த கோட்டையை உள்ளே பார்க்கும் நோக்கில் சென்றேன்.
வவ்வால் எச்ச நாற்றமும் கருகிய முடியின் வாசனையும் கலந்த மணம் கோட்டையில் பரவி இருந்தது. மெல்ல சுற்றியும் நோட்டம் விட்டேன். எங்கும் மாலை நேர அரை இருள் கவ்வி இருந்தது. பக்கவாட்டில் உள்ள அறையில் மங்கிய வெளிச்சம் தெரியவே பழைய கோட்டையில் யாராக இருக்கும் என தூணில் மறைந்து கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தேன்.
பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்நியன்பட பாணியில் கருப்பு அங்கி அணிந்து சிலர் கையில் துடைப்பம் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களின் முகம் சரியாக தெரியாத வண்ணம் அங்கி மறைத்து இருந்தது. அறை தீப்பந்தத்தால் ஒளி ஊட்டப்பட்டு இருந்தது.
அறையின் மறு பக்க திறப்பில் சலசலப்பு கேட்டது. அறையில் அங்கி அணிந்த அனைவரும் "புரபசர் லூஸ்னோஸ்கி" என கோஷ்மிட்டார்கள்.
சாலையை கூட்டும் துடைப்பத்தை ஸ்கூட்டர் போல காலுக்கு இடையே வைத்து காற்றில் பறந்துவந்தார் புரபசர் லூஸ்னோஸ்கி.
அனைவரையும் பார்த்து கையசைத்துவிட்டு "இன்று நான் நம் மாய மந்திர உலகிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இன்று நடக்கும் (ஜூலை 8) பிரேசில் - ஜெர்மனி கால்பந்தாட்ட போட்டியில் ஜெர்மனி தோல்வி அடையும். இரண்டாம் பகுதியில் முல்லர் அடிக்கும் கோல் வீணாக போகும். நாளை (ஜூலை 9)நடக்கும் போட்டியில் அர்ஜண்டினாவின் அதிரடியை காணலாம்.மிஸ்ஸி மிஸ் செய்வதில்லை" என சொல்லி துடைப்பத்தில் அமர்ந்து பறந்தார். அறையில் இருந்த அனைவரும் திசைக்கு ஒருவராக துடைப்பத்தில் பரந்தனர். தீப்பந்தம் தானாக அணைந்தது.
வேக்குவம் க்ளீனர் கண்டறிந்த விஞ்ஞான காலத்திலும் துடைப்பத்தில் பறக்கும் இவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே வீடுவந்தேன்.