Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, August 29, 2012

ஸ்ரீசக்ர புரி ஆன்மீக பயணம் 2012


ஸ்ரீ சக்ர புரி என்ற திருவண்ணாமலைக்கு ப்ரணவ பீடம் சார்பாக ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 6,7 ஆம் தேதிகளில் ( வியாழன்,வெள்ளி ) இரண்டு நாட்கள் பயணம் இருக்கும்.

திருவண்ணாமலையில் ஆன்மீக அதிர்வுகொண்ட இடங்களை தரிசிப்பது அங்கே தியானிப்பது முக்கிய நோக்கமாக கொண்டு பயணம் செய்ய இருக்கிறோம்.

பயணக்கட்டணம் 4500/- ரூபாய். இதில் தங்கும் இடம், மூன்றுவேளை உணவு, நகரத்தின் உள் பயண செலவுகள் ஆகியவை அடங்கும்.

20 நபர்களுக்கு மட்டுமே இடம் உண்டு. இப்பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

இது சுற்றுலா அல்ல, ஆன்மீகப்பயணம் என்பதை மனதில் கொள்ளுங்கள். தியானம் மற்றும் ஆன்மீக உணர்வு உணர முயற்சி செய்பவர்களுக்கானது என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

விருப்பம் உள்ளவர்கள் swamiomkar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து முன்பதிவு செய்யவும். முன்பதிவு செய்தவர்களில் இருந்து 20 நபர்களை தேர்ந்தெடுத்து அழைத்து செல்லுவோம்.

Monday, August 13, 2012

குழல் இனிது யாழ் இனிது - பகுதி 7


ஆன்மீக விழிப்புணர்வு கொடுக்கும் அறக்கட்டளையான ப்ரணவ பீடம் எதற்காக குழந்தை பேறு கொடுக்கு பயிற்சியை நடத்த வேண்டும் என சிலர் கேட்கிறார்கள்.

இது வேண்டுதல் நிறைவேற்றும் நிகழ்ச்சியோ அல்லது குழந்தை வரம் கொடுக்கும் நிகழ்ச்சியோ அல்ல. செயற்கை ரசாயன முறையை தவிர்த்து முழுமையான இயற்கை வழி முறைகளில் குழந்தை பேறு பெற்று அதன் மூலம் நம் உடலையும் சமூகத்தையும் மேம்பட்ட நிலையில் வைத்துக்கொள்ளுதல் என்பதே இதன் நோக்கம்.

குழந்தை பெறுதலால் சமூகம் எப்படி மேம்படும் என்ற கேள்வி எழலாம். செயற்கை முறையில் பிறக்கும் குழந்தை தன்னுடைய இயற்கை செயல்பாட்டில் இருக்காது. அதீத செயல் நிலை (ஹைப்பர் ஆக்‌ஷன்) மற்றும் கவனிக்கும் திறனில் சிறிது குறை இருக்க செய்யும். இது அறிவியல் ஆய்வில் கண்டறியப்படவில்லை. ஆனாலும் பல செயற்கை கரு குழந்தைகளை கவனித்த பின் கண்ட உண்மை இது. இவ்வாறு இருக்க இத்தகைய குழந்தைகள் சமூகத்தில் பெருகினால் நிலை எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

ஒருபுறம் புற்றீசல் போல செயற்கை கரு மையங்கள் உருவாகி வருகிறது. மறுபுறம் இயற்கைக்கு மாறான வாழ்க்கை சூழலால் குழந்தையின்மை பெருகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டே ப்ரணவ பீடம் சார்ப்பில் "சந்தான யோகா" என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

குழந்தை பிறப்பை வடமொழியில் ‘சந்தானம்’ என அழைக்க காரணம் என்ன தெரியுமா? நம் சந்ததியினரை இந்த சமூகத்திற்கு தானமாக கொடுப்பதால் தான். இதன் மூலம் உடல் மற்றும் மனம் முழுமையான ஆரோக்கியம் கொண்ட சமூகத்தை உருவாக்கலாம்.யோகம் என்றால் அடைதல் மற்றும் ஒன்றிணைதல் என அர்த்தம். குழந்தை செல்வத்தை அடைவதே சந்தான யோகம் என்கிறோம்.

சந்தான யோகா நிகழ்ச்சியில் நடைபெறும் முக்கிய செயல்களை இங்கே சுருக்கமாக அளிக்கிறேன்.

  • ஜோதிட ரீதியாக தம்பதியினரின் ஜாதக ஆய்வு செய்து குழந்தை பேறு பற்றி விளக்குதல்
  • ஆன்மீக ரீதியாக மற்றும் மந்திர / யந்திர சாஸ்திர ரீதியான உதவிகள் செய்தல்.
  • ஆரோக்கிய உணவு மற்றும் உடல் நல விழிப்புணர்வு பெறுதல்
  • நம் கலாச்சாரம் காட்டும் குழந்தை பாக்கிய வழிகள்
  • யோக மற்றும் தியான சிகிச்சைகள்


வரும் காலங்களில் ‘சந்தான யோகா’ வகுப்புகள் நடைபெற இருக்கிறது. உங்களின் விருப்பத்தை மின்னஞ்சல் செய்தால் மேலும் விளக்கம் பெறலாம்.

இவ்வளவு பகுதிகளாக எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தாமதமாக பகுதிகள் வெளியிட்டாலும் உங்களின் ஆதரவு தொடர்ந்தது. மிக்க நன்றி. சந்தானம் என்ற நல்ல குழந்தை செல்வத்தை பெற்று முழுமையான வாழ்க்கை வாழ இறையருளை வேண்டுகிறேன்.