Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, December 20, 2008

ருத்ராக்ஷம்

ருத்ராக்ஷம்
-உயிருள்ள ஜடப்பொருள்

உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில் செயல்படுகிறது. இயற்கையனவை மற்றும் செயற்கையனவை என இரு பரிமாணங்களில் செயல்படும் நிகழ்வுகள் உலக இயக்கத்திற்கு மூலமாக அமைந்துள்ளது. வேதாந்தம் இதையே புருஷத்துவம் மற்றும் ப்ரகிருதி என விளைக்குகிறது. இருவகையன செயல் அனைத்து நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது என்பது பலருக்கு தெரியாது. வேதாந்த உண்மையான இந்த இரு செயல்களை புரிந்துகொண்டோமேயானால் இயற்கையின் செயல்படுகளை புரிந்துகொள்ளமுடியும்.

இயற்கையின் தன்மை சாஸ்வதமானது. இயற்கை என்பது உருவக்கப்பட்டது அல்ல இயற்கை என்னும் சொல் இருக்கிறது, இருந்தது மற்றும் எப்பொழுதும் இருக்கும் என்பதயே குறிக்கும். ப்ரகிருதி என்பது செயற்கை தன்மையை குறித்தாலும், இது தற்காலிகமானது மற்றும் இதன் உருவாக்கத்திற்கு மூலம் புருஷத்துவமே ஆகும்.



அறிவியலை எடுத்துக்கொண்டோமானால் சக்கரம் கண்டுபிடித்தது என்பதுதான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு என கூறமுடியும் . சக்கரத்தின் செயல்கள், வடிவம் மற்றும் தன்மை இயற்கையில் உள்ள பொருளை சார்ந்து இருப்பதை அறிவோம்.செயற்கை என்பது இயற்கையின் பிரதிபிம்பம் என கூறலாம். ஆனால் இயற்கை தன்னிகரற்றது.

ஆயுர்வேதத்தில் இந்த உலகம் மூன்று முக்கியமான குணத்தால் இயங்கிவருகிறது என கூறுவார்கள். முக்குணத்தை (தோஷங்கள்) வாத, பித்த, கப குணம் சொல்லுவதை கேள்விப்பட்டுள்ளோம். இந்த
இயற்கையன மூன்று குணங்கள் மனித உடலில் சமநிலை தருவதால் நோய் ஏற்படுவதாக ஆயுர்வேத சாஸ்திரம் கூருகிறது. மனித உடலில் தோஷத்தில் ஏதவது ஒன்று ஓங்கி நிற்கும்.

இயல்பான மூன்று தோஷங்கள் புருஸார்த்தம் (இயற்கையானது) என்றும் மனித உடலில் ஏற்படும் தோஷ ஏற்றத்தாழ்வுகள் ப்ரகிருதித்துவம் (செயற்கையானது) என்றும் வகைபடுத்துகிறார்கள். உபவேதமானஆயுர்வேதத்தில் வேதாந்த சாரமான புருஷ, ப்ரகிருதி தத்துவம் செயல்படுவதற்கான சான்றை விளக்கியுள்ளேன்.

நமது வாழ்க்கையில் இயற்கை,செயற்கை தத்துவம் எவ்வாறு செயல்படுகிறது என பார்ப்போம். மனித உடல் என்பது இயற்கை யின் படைப்பு, இதை புருஷார்த்தம் என கூரலாம் . ஆணும் பெண்ணும் இணைந்து உருவாக்கும் பொழுது புருஷத்துவம் கொண்ட மனித உடல் ப்ருகிருதித்துவம் பெருகிறது. நமது இயற்கையான (புருஷார்த்த) குணம் என ஒன்று உண்டு. ஆனால் சமூக நடத்தைக்காக நாம் உருவாக்கிய குணதிசயங்கள் ப்ருகிருதித்துவம் எனும் செயற்கைத் தன்மையை சாரும். நான் கூறும் இது போன்ற உதாரணங்களால் புருஷத்துவம் மேலானது ப்ருகிருதித்துவம் கீழானது என எண்ணுதல் கூடாது. புருஷத்துவமும், பிருகிருதித்துவமும் இணைந்தால் மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இயங்கும்.

இறைதன்மையை விளக்கும் மதங்கள் இயற்கை தன்மையான புருஷத்துவமே மூலம் என கூருகிறார்கள். புருஷத்துவமே அனைத்து
விஷயங்களுக்கும் ஆதாரமானது என்பது அனைத்து மதத்தின் விளக்கம். அதனால் தான் சில மதங்கள் ஒரே கடவுள் எனும் கொள்கையை கொண்டுள்ளது. பாரதத்தில் தோன்றிய மதங்கள் மட்டுமே புருஷ-ப்ருகிருதி இணைவே உண்மையான இறை நிலை என ப்ரகடனப்படுத்தியது. புருஷ நிலையை சிவன் என்றும்,ப்ருகிருதி நிலையை சக்தி என்றும் விளக்கினார்கள். சிவன் ஆண் தன்மை சக்தி பெண் தன்மை என விளக்க காரணம் சிவநிலை என்பது அசைவற்றது, சக்திநிலை என்பது அசையக்கூடியது.(இயங்கும் தன்மை) என்ற வேறுபாட்டால் தான்.

சிவ-சக்தி நிலை என்பதை சீனர்கள்(யாங்-யன்)
என வகைப்படுத்தினார்கள். இயற்கையில் செயற்கை தன்மையும், செயற்கையில் இயற்கைத் தன்மையும் கலந்துள்ளது என்பதன் கருத்தே யாங்-யன் தத்துவம் ஆகும். இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் அமைந்துள்ளன. பருத்தி என்பது இயற்கையன ஒரு தாவரம், இதை பயிரிட்டு,நூலாக்கி ஆடை அணிதல் என்பது செயற்கையான செயல்பாடு.

இயற்கையான பருத்தியில் எதிர்காலத்தில் உருவகப்போகும் ஆடையும், ஆடையில் இயற்கையான பருத்தியும் கலந்திருப்பது சிவசக்தி நிலையை குறிக்கும். இதனால்தான் சக்தி வழிபாடு செய்பவர்கள் அதிக ஆடை அணிகலன் அணிவதும், இயற்கையான சிவநிலையில் இருப்பவர்கள் ஜடாமுடியுடன் நிர்வாணமாக இருப்பதும் ஆன்மீக இயல்பாக இருக்கிறது.

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல்
அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும்.
ப்ரபஞ்சத்தின் படைப்புத் தன்மை புருஷ தன்மையிலிருந்து துவங்குகிறது. புருஷ தன்மை என்பது இயக்கமற்றது. புருஷத் தன்மைக்கு கால தேச வித்தியாசம் இல்லை. பிரகிருதிக்கு கால பரிமணமும் உண்டு. பிறந்த குழந்தை புருஷ தன்மையில் தேச, கால வித்யாசம் இன்றி இருக்கிறது. வளர்ந்த மனிதன் புருஷ நிலையில் இருந்து பிரகிருதி நிலைக்கு மாற்றமடைந்து தனக்குள் கால மற்றும் தேச வித்தியாசத்தை அடைகிறான்.

ப்ரகிருதி நிலையை அடைந்த மனிதன் மீண்டும் புருஷத்துவத்தை அடையவே மீண்டும் ஜபம், தியானம் மற்றும் யோகம் எனும் ஆன்மீக வழிகள்
உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும்.

சைவ சம்பிரதாயத்தில் மட்டும் ருத்ராஷம் பயன்படுத்துவதாக அனைவரும் நம்புகிறார்கள். ஆனால் சனாதான தர்மம் என அழைக்கப்படும் பாரத
தேசத்தின் அனைத்து ஆன்மீக மார்க்கமும் ருத்ராஷத்தை பயன்படுத்திய சான்றுகள் உண்டு. குறிப்பாக ருத்ராஷத்தை மட்டும் நான் இங்கு விளக்க காரணம் உண்டு. பிற ஆன்மீக வஸ்துக்களை காட்டிலும் ருத்ராஷத்தை பற்றி நிறைய முரண்பாடான தகவல்கள் உலவுகிறது. தெரியவேண்டிய விஷயம் மறைக்கப்பட்டும், தேவையற்ற விஷயங்கள் உண்மையாக்கப்பட்டும் மக்களிடையே குழப்பத்தை உண்டு செய்கிறது. இந்த தெய்வீகம் நிறைந்த ருத்ராஷத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதனாலேயே ஏற்பட்டது.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது.
இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை. மேலும் ருத்ராஷத்தை பயிர் செய்து விளைவிக்க முடியாது. ருத்ராஷ மரக்கன்று நம் தோட்டத்தில் வளர்க்கும் பொழுது இயல்பான வளர்சியையோ, ருத்ராஷத்தின் வடிவத்தையோ பெறுவதில்லை. நேபாள தேசத்தில் பெரும்பாலும் ருத்ராஷ மரத்தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட அதை ஒரு இயற்கையான வன பகுதியாக வைத்திருக்கிறார்கள். நேபாளத்திற்குப் பிறகு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ருத்ராஷம் இயற்கையாக கிடைக்கிறது.

ருத்ராஷத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக
தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று. சாதாரண ஒரு மரத்தின் விதையில் என்ன ஆற்றல் இருக்க முடியும் என எதிர்வாதம் செய்பவர்கள் கேட்பதுண்டு.

மணல் துகள்கள் மூலம் செய்யப்பட்டு தாமிர கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறியின் சில்லு(Chip)
வேலை செய்வதையும், உலகின் பல கிலோ மீட்டர் தூரம் இடைவெளியில் இருக்கும் இருவரையும் தொடர்பு கொள்ள செய்வதை நாகரீக மக்கள் நம்மில் அனேகர் உண்டு. உயிரற்ற மணல் இது போன்ற செயலை செய்யும்பொழுது உயிருள்ள தாவரவிதை ஏன் இதைக்காட்டிலும் அதிக செயல்களை செய்ய முடியாது ? என சிந்திப்பதில்லை.

கணிப்பொறி சிப்பை மட்டும் கையில் வைத்திருந்தால் அது வேலை செய்யாது. அதற்கு தேவையான இணைப்புகள்,
மின்சாரம் வழங்கி தகுந்த நிபுணர்களை நியமித்தால் அவர்கள் அந்த கணிப்பொறி சிப்பை வேலை செய்ய வைப்பார்கள். அது போல சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.

அப்படி பட்ட
ருத்ராஷத்தை பற்றி சிறிது விரிவாக காண்போம்.
(தொடரும் )
பகுதி இரண்டு விரைவில்..

11 கருத்துக்கள்:

rameshbabublogger said...

நல்ல தொடக்கம். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கொத்து புரோட்டா,

உங்கள் வருகைக்கு நன்றி.

திங்கள் அன்று அடுத்த பகுதி வெளிவரும்.

வடுவூர் குமார் said...

சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.
ஸ்வாமி,கையில் வைத்து என்ன பண்ணப்போகிறோம்??விதண்டாவததுக்காக கேட்கவில்லை.
ருத்ரக்ஷம் பற்றி பெரிதாக சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை.அடுத்த பதிவில் என்ன வருகிறது என்று படித்துவிட்டு சொல்கிறேன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நல்ல தகவல்கள். நன்றி. மேலும் படிக்க ஆர்வமாய் உள்ளேன்.

Expatguru said...

வடுவூர் குமார் கூறியுள்ளதை போல முதலில் நானும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தேன். எனது தாயார் நேபாளத்து சென்று வந்த போது கொடுத்தார் என்று ஒரு ருத்ராக்ஷத்தை நான் கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன்.

ஒரு முறை வீட்டுக்கு வந்த எனது நண்பரிடம் இதை பற்றி விவாதித்து கொண்டிருந்த போது ஒரு எலுமிச்சை, ஒரு உருளைக்கிழங்கு மற்றும் ஒரு பூண்டை உள்ளேயிருந்து கொண்டு வரச்சொன்னார். முதலில் எலுமிச்சையை மேடையில் வைத்து அதற்கு மேல் எனது ருத்ராக்ஷத்தை ஒரு 5 சென்ட்டிமீட்டர் உயரத்தில் தொங்கவிட்டார். என்ன ஆச்சரியம்! ருத்ராக்ஷம் படு வேகமாக தானே இடமிருந்து வலமாக சுற்ற துவங்கியது. பிறகு, அதே போல பூண்டின் மேல் தொங்க வைத்த போது வடமிருந்து இடமாக சுற்ற ஆரம்பித்தது. உருளைக்கிழங்கின் மேல் தொங்க வைத்த போது அப்படியே இருந்தது. இடமிருந்து வலமாக சுற்றுவது positive energy என்றும் வலமிருந்து இடமாக சுற்றுவது negative energy என்றும் அவர் கூறினார். அதனால் தான் நம் உடம்புக்கு சாத்வீகமான உணவையே உண்ண வேண்டும் என்று கூறினார்.

இந்த அனுபவத்துக்கு பிறகு அந்த ருத்ராக்ஷத்தை மேலும் பரீட்சித்து பார்க்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதை அணிந்தது முதல் எனது சிந்தனையில் தெளிவும் மனதில் பக்தியும் அமைதியும் குடிகொண்டுள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.

நல்ல பதிவை வெளியிட்டமைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்.

உங்கள் வருகைக்கு நன்றி.

அடுத்த பதிவின் முடிவு வரிகளில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சக்தி பிரபா,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு Expatguru,

நீங்கள் சரியாகவே சோதித்து இருக்கிறீர்கள்.

ருத்திராட்சத்தின் மிக எளிய உபயோகங்களில் அதுவும் ஒன்று.
வனங்களில் ரிஷிகள் தவ வாழ்க்கை மேற்கொள்ளும் பொழுது ருதிராட்க்‌ஷத்தை கையில் வைத்திருப்பார்கள். வனத்தில் இருக்கும் பழங்களை சப்பிடும் முன் அதில் ருத்திராட்சத்தை வைத்து பார்ப்பார்கள். வலமாக சுற்றினால் சப்பிடலாம் என முடிவு செய்வார்கள்.

இப்பொழுது தெரிகிறதா ரிஷிகள் ஏன் ருத்திராட்சத்தை உடல் முழுவதும் அணிகிறார்கள் என்று?

கால்கரி சிவா said...

ஸ்வாமி என்பது உங்களின் பட்டமா அல்லது இயற்பெயரா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கால்கரி சிவா,

ஸ்வாமி என்பது எனது நிலை. பெயர் அல்ல.

உங்கள் வருகைக்கு நன்றி

Unknown said...

"ருத்ராக்ஷம்" -ற்குள் ஏதோ விஷயம் உள்ளது தெரியும் என்ன என்பதற்காக காத்திருக்கிறேன் உங்களது கருத்து வெகு இலகுவாகவும் சாமர்த்தியமாகவும் உள்ளது மகிழ்ச்சி