Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 28, 2009

இசையும் இறைவனும்

இசை என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய அர்த்தம் உண்டு. சராசரியாக இசை என்ற வார்த்தையை ஒலி என்றும் பாடல்கள் என்றும் பயன்படுத்துகிறோம். இசை என்பதன் மூல அர்த்தம் இணங்குவது, ஆனந்தம் கொள்வது என்பதாகும்.

திருவள்ளுவரும் இசைபட வாழ்தல் என்கிறாரே அப்படி என்றால் பாடிகொண்டே வாழ்வதை குறிப்பதில்லை. பிறருக்கு தர்மம் செய்வதன் மூலம் மனநிறைவுடன் ஆனந்தமாக வாழ்வதை இசைபட என்கிறார். பிறர் போற்ற வாழ்வது என இத்திருக்குறளுக்கு அர்த்தம் போதிக்கபடுகிறது. சான்றோர்கள் பிறருக்கு தானம் செய்து பெருமை தேடிக்கொள் என கூறி இருக்கமாட்டார்கள்.

இசை என்பது ஒருவித யோக முறை. யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். இறைநிலையுடன் ஒன்றிணைந்து இரண்டற கலப்பதற்கு இசை என்ற யோக முறை மிக முக்கியமானது.

இசை என்றவுடன் அதை பற்றி சில விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இசை என்பது மொழிகளை கடந்தது, மதங்களையும்... ஏன்.. மனித நிலையையும் கடந்தது.

இங்கே இசை என நான் குறிப்பிடுவது வார்த்தைகள் கொண்டு உருவாக்கபட்ட பாடல்களின் வடிவம் அல்ல. சங்கீதத்தில் ஆலாபனை என கூறுவார்களே அது போல வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறக்க நிலையே ஆலாபனை.

இசை என்பது இறைவனின் வடிவம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். இசை என்பதை நாதம் என பொருள் பட கூறுகிறார்கள். ப்ரணவம் இறைவனின் நாத வடிவம். முதலில் நாதம் பிறகே அனைத்து படைப்புகளும் விரிந்தது.

நாதம் என்ற ப்ரணவத்தின் கூறுகளான ஆ - உ- ம என்ற ஒலிகளின் மூலமே அனைத்தும் வெளிப்பட்டது. நம் மொழிகள் கலாச்சாரம், சிந்தனை அனைத்தின் உள்கட்டமைப்பும் இந்த ஒலியாலேயே விவரிக்க முடியும்.

நான் கூறிய ப்ரணவ மந்திரம் என்ற கருத்து ‘இந்து மதத்தின்’ கூறுகள் அல்ல. வேதம் என்ற ஆன்மீக நிலை இந்து மதம் என்ற வடிவம் கொண்டவுடன் தன் சுயத்தை இழந்து விடும் அபாயத்தை உணர்ந்து தன்னை மதத்திலிருந்து விடுவித்துக்கொண்டது.

எங்கே ஆன்மீகம் மத வடிவம் எடுக்கிறதோ அங்கே இசை என்ற நாதம் தன்னை விடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறது என்பது என் புரிதல். பாரத தேசத்தில் தோன்றிய ஞானிகள் இசையுடன் தங்களை மிகவும் ஒன்றிணைத்து கொண்டே இருந்தனர். மீரா, புரந்தர தாசர், ஞான சம்பந்தர் மற்றும் ஏனைய ஞானிகளை வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம்.

இசை என்ற பாடல் வடிவம் சன்யாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விலக்கபட்டு இருக்கிறது. சன்யாசிகள் பாடல், நடனம் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றில் மூழ்கக் கூடாது என கூறுவதன் காரணம் அவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதுதான். சன்யாச நிலை என்ற சூன்ய நிலையில் தோன்றிய மதங்கள் இசையை விலக்கின.

உலகின் சில மதங்கள் கூட தவறுதலான புரிதலால் இசையை விலக்கிவிட்டது.

சமணம்,இஸ்லாம் மற்றும் சில கிருஸ்துவ பிரிவுகள் இதில் அடக்கம்.

நாதத்தை (ஓசையை) பெட்டியில் அடைக்கமுடியாது என்பதை போல மதத்தால் இசையை அடக்க முடியாது. அதனால் தான் மதங்கள் இவ்வாறு விலக்கினாலும் ஞானிகள் இறைவனுடன் கலக்கும் பொழுது இசையை ஒரு பாதையாக தேர்ந்தெடுத்தனர். இதனால் இஸ்லாமிலிருந்து சூஃபியும், சமணத்திலிருந்து ஜென் என்ற ஞான மார்க்கங்கள் கிளைத்தன.

நாதமே கடவுளின் வடிவம் என்றால் மதத்தில் இருந்து நாதம் வெளியேறிவிட்டது என்றால் அப்பொழுது மதத்திற்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

இசைவடிவில் இறைவனை காண முற்பட்டால் உலக சமுதாயம் ஒரே இறைவனை காண முடியும்.

மதங்களை கடந்த ஆன்மீகம் அவசியமானது. மதங்களையும் உருவங்களையும் கடந்த இறைநிலையே முழுமுதற் கடவுளான பிரம்ம நிலை என்கிறார் திருமூலர்.

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

-----------------------------------------திருமந்திரம் - 105

ஒரு இசை வடிவத்தை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால் அந்த இசை உங்களை ஈர்த்தது என்பதல்ல. உங்களுக்குள் இருக்கும் இறைநிலை ஒலிவடிவில் இருக்கிறது. அந்த ஒலி தன்னை போன்ற இசைவடிவை வெளியில் இருந்து ஈர்த்தது.

உங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் நிலைக்கேட்ப இசை உங்களை ஈர்க்கும். நீங்கள் மிகவும் கடினமான தன்மையில் இருந்தால் கடினமான இசையும், மிகவும் மென்மையாக இருந்தால் மெல்லிசையும் உங்களை கவரும். எளிமையாக சொன்னால் நீங்களே இசைதான். வெளியே கேட்கும் இசை உங்கள் உள் இசையை தூண்டுவதற்காத்தான்.

மதம்- இசை - இறைவன் என நிறைய பேசிவிட்டோம். உங்களுக்கு ஒரு சின்ன போட்டி...

கீழே இருக்கும் 2 நிமிட ஒலிக் கோப்பில் மதம் சார்ந்த புனித ஒலி இருக்கிறது. இந்த ஒலியை முழுமையாக கேட்டு அது எந்த மதம் சார்ந்தது என கூறுங்கள்.
Sound of religion....

விடையுடன் அடுத்த பதிவில் சந்தி
க்கிறேன்.

22 கருத்துக்கள்:

Shakthiprabha (Prabha Sridhar) said...

அன்புள்ள ஸ்வாமிஜி,

இந்து மதத்தில் சொல்லப்படும் சமஸ்க்ருத ஸ்லோகங்களில் ஒலிவடிவாகத் தான் தோன்றுகிறது. ஆனால் வார்த்தைகள் தெளிவாக இல்லாததால், சமஸ்க்ருதமா எனத் தெரியவில்லை. மேலும், இவ்வளவு எளிமையானதை நீங்கள் போட்டியாக வைத்திருக்க மாட்டீர்கள். ஆகவே, நிச்சயமாக வேறு ஒரு மதத்தில் ஓதும் குரல் ஆக இருக்கலாம். இஸ்லாமிய மதமாக இருக்கலாம். அல்லது சிக்கிய மதம் zoarashtrianism இப்படி ஏதேனும் கூட. தங்களின் விடை வரும் வரை ஆவலுடனும் பொறுமையுடனும் எதிர்நோக்குவோம் :)

Jayashree said...

"எங்கே ஆன்மீகம் மத வடிவம் எடுக்கிறதோ அங்கே இசை என்ற நாதம் தன்னை விடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறது என்பது என் புரிதல்"
அப்படின்னா சொல்லறீங்க? இளம் காலையில் மசூதியிலிருந்து வரும் தொழுகை ஓசையில், தேவாலய மணியின் ஓசையில், வேத உச்சாடனத்தில், பிக்குக்களின் பிரித்திலிருந்து இசை வெளீயேவா நடந்துவிட்டது என்கிறீர்கள்? எல்லா மதங்களும் அந்த இசைக்கு ஆரம்ப படி இல்லையா? அந்த இசையின் ஸ்ருதி வளர அந்த மதத்திலிருந்தும், மனப்பிடியிலிருந்தும் மேலெழும்பவேண்டியது ஒரு சாதகனின் பயிற்சி / முயற்சி அல்லவா? BE BORN IN A CHURCH YET DON'T DIE IN IT இல்லையா? மதமும் ஆன்மீகப்பாதைக்கு வழி வகுக்கும் கருவி தான். ஆனால் ஆன்மீகம் மதம் ( மட்டுமே ) இல்லை என்கின்ற கூற்று ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்றே. இசை தெய்வீகம் என்னும்போது மதங்களிலும் உறைபவன் இறைவன் தானே? லா இலாஹா இல்லல்லா, சர்வம் ப்ரஹ்மம் எங்கிறபோது இசையாகிய இறைவன் எங்கிருந்து எங்கே செல்வான்? மனிதரின் மனப்பிழைகளுக்கு தெய்வமும் மதமும் தவறு என்றாகுமோ? எனக்கு இப்படி படுகிறது.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி ஜெயஸ்ரீ,

உங்களின் மேன்மையான புரிதல் என்னை ஆச்சரியம் கொள்ள செய்கிறது.

நீங்கள் சொல்வதை வரிக்குவரி ஆமோதிக்கிறேன்.

ஆனால்....
/லா இலாஹா இல்லல்லா, சர்வம் ப்ரஹ்மம் எங்கிறபோது இசையாகிய இறைவன் எங்கிருந்து எங்கே செல்வான்?//

இதில் தான் மாறுபடுகிறேன்.

சர்வம் ப்ரஹமம் என்பவரிடம் லாஹி இலாஹா இல்லல்லா என்றும் லாஹி இலாஹா இல்லல்லா என்பவரிடம் சர்வம் ப்ரஹமம் என்று கூறி ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள். ஏற்றுக்கொள்கிறார்களா என பார்ப்போம்.

தன் மதத்தின் புனித வரிகள் மட்டுமே உயர்ந்தது என்ற நிலை வரும் பொழுது மதத்தில் எப்படி இறைவன் இருக்க முடியும். அனைத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்பவர்கள் மிகவும் குறைவு.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி சக்திபிரபா,

உங்கள் வருகைக்கு நன்றி.

Mahesh said...

"இசை"க்கு கிட்டத்துல வர வார்த்தை "harmony".

அருமையான இடுகை.....

இசை - எந்த வடிவத்திலும் அதில் இருப்பது இறை.

நிகழ்காலத்தில்... said...

//சான்றோர்கள் பிறருக்கு தானம் செய்து பெருமை தேடிக்கொள் என கூறி இருக்கமாட்டார்கள்.//

என்ன சொல்ல வர்றீங்க..புரியலயே

sarul said...

வணக்கம் ஸ்வாமி

ஆரம்பத்தில் இந்து சமய மந்திரங்கள் ஒலிப்பது போலவும் பின் இஸ்லாம் மத வாக்கியங்கள் போலவும் தென்படுகிறது.

எனினும் இரண்டும் ஒரே ஏகாந்தத்தைத் தொட்டு நிற்பதுபோல் தோற்றுகிறது.

அர்த்தம் தெரியாத தெளிவற்ற ஓசையே ஒலிப்பதால் இது எம்மத உச்சாடனமாகவும் அல்லது மத தொடர்பற்ற உச்சாடனமாகவும் இருக்கச் சந்தர்ப்பம் உள்ளது.

உங்களின் கருத்தின் ஆளம் என்க்குப் புரியவில்லை என்பதே உண்மை.

( குரு ஜகி வாசுதேவ் அவர்களின் ஜோதிர் லிங்கமும் மதத்திற்கு அப்பாற்பட்ட தியான நிலைக்கு இட்டுச்செல்லும் அருவுருவமாகவே சொல்லப்பட்டாலும் அதுவும் எனக்குப் புரியவில்லை என்பதே உண்மை )

எதையும் பூரணமாக விளங்கிக் கொள்ளாமலே வாள்வின் எல்லையைத்தொட்டுவிட்டேன் என்பது என் கவலை.

திவாண்ணா said...

Svaami,இந்து மதங்களில் அனேகமாக அனைத்தும் இதையெல்லாம் சரியாகவே எடுத்துக்கொள்கின்றன. சரியாக மதத்தை புரிந்து கொள்ளாதவரே வாதங்களில் இறங்குவர். ஒலி உலகம் தனி உலகம். பெயர் ரூப சாயம் பூசாதவருக்கும் எல்லாமே சரியாகவே தோன்றும். அவர்கள் நீங்கள் சொல்வது போல குறைவான சதவீதமே. ஆனால் அதற்காக மதங்களை குறை சொல்ல முடியாது.

ஒலி பதிவை கேட்டேன். பல சம்ஸ்க்ருத வார்த்தைகள் கண்டுபிடிக்க முடிந்தது. வேத ஒலியாக இருக்காது என்று "கெஸ்"இன் அடிப்படையில் சமணம் சார்ந்த மந்திரமாக இருக்கலாம். இரண்டாவது திபேத்திய மந்திரமாக இருக்கலாம். சும்ம ஒரு ஊகம்தான்.

Self Realization said...

swamiji the four lines of thiruvasagam gives me good spiritual power and realization in me.

swamji you blogs are great.
i accepted your words all are one.all religion are one.

Music is common to all the people in this world irrespective of religion.

Music is a good medicine for our mind and soul...

Thank you swamji for your great writings..

Jayashree said...

இலாஹியும் ப்ரஹ்மமும் அப்படி ஒத்துகொள்ளாமலா இருப்பார்கள்? . நீங்கள் மதத்தின் பெயரில் மதம் கொண்டிருக்கும் மனித மனத்தை பற்றி சொல்கிறீர்கள்.அது சமயமும் அன்று இல்லையா? அந்த கதியிலும் தழைந்து எந்த மனம் தன் மறையின் பொருளை உணர்ந்து தன் பக்கம் வரும் என்று இறைவன் காத்துக்கொண்டிருப்பார் என்பது என் நம்பிக்கை.அந்த கோர தாண்டவத்திலும் குணம் இல்லாதவனாயினும், வருந்தும் தெய்வம் உண்டு என்று எனக்கு தோன்றும். கிடைக்கும் ஒளி அவரவர் முந்தைய வளர்சியைப் பொருத்தது அல்லவோ? அடுத்ததும் இறைவன் என்று உணரவும் அருள் வேண்டும் இல்லையா? அப்படி உணரும் மனத்தையும் அவனன்றோ ஆன்மீக பாதையில் நடத்தி ஒளி பெறச்செய்வது!!இது என் சின்ன அறிவுக்கு தோன்றியது. உங்கள் திருவண்ணாமலை பற்றிய பகுதிகள் மனதை நிறைத்தது. திரும்பவும் போக அருள் இருக்க வேண்டுகிறேன். மிகவும் நன்றி

ceylonstar said...

Great topic. my guess is ISLAM...

ஷண்முகப்ரியன் said...

எங்கே ஆன்மீகம் மத வடிவம் எடுக்கிறதோ அங்கே இசை என்ற நாதம் தன்னை விடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறது என்பது என் புரிதல்.//

DISCUSSIONS CORRUPT INTO ARGUEMENTS.THIS IS THE CURSE OF SMAAL COMMENTS OVER LARGE ISSUES.
நீங்கள் சொல்லவரும் உணர்வின் மேன்மை புரிவதால், இங்கு விவாதங்களைத் தவிர்த்துக் கொள்கிறேன்,ஸ்வாமிஜி.

cheena (சீனா) said...

//சான்றோர்கள் பிறருக்கு தானம் செய்து பெருமை தேடிக்கொள் என கூறி இருக்கமாட்டார்கள்.//

என்ன சொல்ல வர்றீங்க..புரியலயே - சிவசு மறுமொழியில் கூறியது

நானும் படிக்கையில் சடாரென சிந்தனை தடைப்பட்டது. அடுத்த வரி படிக்க சில நிமிடங்கள் ஆயிற்று. தானம் செய் என்பதைத்தான் சான்றோர்கள் கூறி இருப்பார்கள் என்பது என் எண்ணம். தாங்கள் கூறுவதற்கு விளக்கம் அளித்தால் நலமாக இருக்கும்

நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா மற்றும் சீனா,

இசைபட வாழ்ந்தல் என்றால் பிறர் துதிக்கவும் போற்றவும் வாழ்வது என அர்த்தம் கற்பிக்க படுகிறது.

நம் முன்னோர்கள் பிறர் உன்னை துதிக்கவேண்டும் என்பதற்காக தர்மம் செய் என சொல்லி இருப்பார்களா? தர்மாத்தால் ஆன பயன் வேறு அல்லவா என கேட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கேஎஸ்,
திரு திவா,
திரு சிலோன்ஸ்டார்,
திரு ஜெயஸ்ரீ,
திரு மகேஷ்,
திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

நாதம் பிரம்மம்

:)

எம்.எம்.அப்துல்லா said...

இசை எதையும் மறந்துவிட்டு அதில் மூழ்கிவிடச் செய்யும்.வணக்க நேரத்தையும்கூட. அதனால்தான் நபிகள் இசை வேண்டாம் என்றார்கள்.

உலகின் முதல் சூஃபி ஞானியும் அவர்கள்தானே! பின் ஏன் மக்களுக்கு இசை வேண்டாம் என்றார்கள்??

நான் நேரடியாக விளக்கம் சொல்லாவிட்டாலும் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கின்றேன் :))

கோவி.கண்ணன் said...

//இசை என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய அர்த்தம் உண்டு. சராசரியாக இசை என்ற வார்த்தையை ஒலி என்றும் பாடல்கள் என்றும் பயன்படுத்துகிறோம். இசை என்பதன் மூல அர்த்தம் இணங்குவது, ஆனந்தம் கொள்வது என்பதாகும்.//

இசை என்ற தமிழ் சொல்லுக்கு நிறைய பொருள்கள் உண்டு. இசை என்ற சொல் ஒலி என்றும் பாடல்கள் என்றும் பயன்படுத்துகிறோம். இசை என்பதன் வேர் பொருள், இசைவது அதாவது இணங்குவது, மகிழ்வு கொள்வது என்பதாகும்.
:)

கோவி.கண்ணன் said...

//தன் மதத்தின் புனித வரிகள் மட்டுமே உயர்ந்தது என்ற நிலை வரும் பொழுது மதத்தில் எப்படி இறைவன் இருக்க முடியும். அனைத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்பவர்கள் மிகவும் குறைவு.//

:) ரிப்...Beat.........u

bala said...

//தன் மதத்தின் புனித வரிகள் மட்டுமே உயர்ந்தது என்ற நிலை வரும் பொழுது மதத்தில் எப்படி இறைவன் இருக்க முடியும். அனைத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்பவர்கள் மிகவும் குறைவு.//

excellent swamiji.

ambi said...

ஸ்வாமிஜி,
பக்தி மார்க்கமாக இறைவனை அடைய இசையும் ஒரு பாலம். இந்த பதிவு சும்மா ஒரு ட்ரெயிலரா? (இப்படி தான் கொக்கி போடனும்) :))

ஸ்ரீசக்ர புரி தொடர் முழுதும் படித்து அன்பவித்தேன்.

Siva Sottallu said...

A child is conceived in the womb,
The child grows, but the child cannot breath,
the mother breaths for him,
and for nine months continuously he hears the beating of the mothers heart, it is the first meeting with music and rhythm, that is the first trump on encounters.

ஓஷோ வின் வரிகள் ஞாபகத்திற்கு வந்தன... மிக்க நன்றி ஸ்வாமி.