Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, April 2, 2009

ஆன்மீகவாதியின் பின்நவீனத்துவம்

உங்களின் நிலை புரிகிறது. என்னடா நல்லா எழுதிக்கிட்டு இருந்த (அப்படியா ?) ஸ்வாமி திடீருனு பின்நவீனத்துவம் பத்தி எழுதராறே ஏதாவது பிரச்சனையானு. கடந்த ஆறு மாதமா இணைய வலைதளத்தில் உலாவுகிறேன். அனேகருக்கு பின்நவீனத்துவ மோகமும், புதிதாக எழுத்து அமைப்பு இருக்கவேண்டும் என்றும் எழுதுகிறார்கள்.

ஒருவருக்கும் உதவாத புனைவு, கட்டுடைத்தல் எனும் பெயரில் ஆபாசமே எஞ்சி நிற்கிறது. பின்நவீனத்துவம் என்றால் என்ன ? என ஒரு சில வரிகள் அத்தகைய எழுத்தாளர்களிடம் கேட்டால் சரியான விளக்கம் கொடுக்க முடியுமா என தெரியவில்லை. இதில் உச்சகட்டம் நான் லீனியர் ரைட்டிங் எனும் பெயரில் கோர்வை இல்லாமல் பத்தியாக எழுதுகிறார்கள். கேட்டால் இது தான் போஸ்ட்மார்டன் ...புரியலையே என்றால்...உனக்கு பத்தாது என்கிறார்கள்.

நவீனமாக எழுதுகிறோம் என இவர்கள் நினைப்பதும், சமூகம் முற்போக்காக இல்லை என நினைத்து கட்டுடைப்பதாக நினைக்கிறார்கள். உண்மையில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் பின்நவீனத்துவ எழுத்தை எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை படித்ததும் எனக்கு இரண்டு நாள் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. ஒருவித பரிதவிப்பு நிலைக்கு சென்றேன். அந்த புத்தகத்தை என்னால் கீழே வைக்கவும் முடியவில்லை. பின்நவீனத்துவம் என்றவுடன் பாலியல் சார்ந்தும், பால் உறவு சார்ந்தும் தான் எழுத வேண்டும் என்ற நிலையையும் கட்டுடைத்து அவர் ஆன்மீகத்தில் பின்நவீனமாக்கி எழுதி உள்ளார். தற்கால புதிய தலைமுறை பின்நவீனர்கள் இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்.

உங்களுக்காக அந்த புத்தகத்திலிருந்து சில பத்திகள்....


கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது....

இல்லாத ஒரு நகரில் நல்ல வீரர்களாகிய மூன்று ராஜகுமாரர்கள் இருந்தனர். அந்த மூவரில் இரண்டு பேர் பிறக்கவே இல்லை; மூன்றாமவர் கர்ப்பத்திலே வாசம் செய்யவில்லை. மிகவும் சிறப்பான பொருளை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் வெளிக் கிளம்பினர். அப்போது ஆகயத்தில் பழங்கள் நிறைந்த மரங்கள் கண்டனர். சுவை மிகுந்த அக்கனிகளை புசித்து பசி ஆறிய பிறகு, கரையில் அலைகள் மோதிக்கொண்டிருந்த மூன்று நதிகளை கண்டனர். அவற்றில் இரண்டு நதிகளில் சிறதளவும் தண்ணீர் இல்லை. மற்றதோ வறண்டு கிடந்தது. அங்கு குளித்த, விளையாடி, தாகம் தீர நீரை பருகினார்கள். பிறகு அந்த நாளின் முடிவில் இனிமேல் நிறுவப்பட போகின்ற நகரத்தை அடைந்தனர்.

அங்கே மூன்று அழகிய இல்லங்களை கண்டனர். ஒரு வீடு சுவரும்,தூண்களும் இல்லாது இருந்தது; மீதி இரண்டும் கட்டப்படவே இல்லை. அவர்கள் குடிபுகுந்த வீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட மூன்று பாத்திரங்களை கண்டனர். இரண்டு துண்டு துண்டாக உடைந்து இருக்க, மூன்றவது பொடிப்பொடியாக இருந்தது.
அந்த பாத்திரத்தில் மூன்று படி குறைந்த மூன்று படி அரிசியை எடுத்து உணவு சமைத்தனர். அந்த அன்னத்தை வாய் இல்லாத அந்தணர் அனேகருக்கு அளித்து, மிகுதி இருந்ததை உண்டனர். பிறகு மூவரும் புறப்பட்டு....

இப்படியாக செல்லுகிறது கதை. கண்ணை கட்டுதா? ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் நானூறுக்கும் மேற்பட்ட கதைகள். வெறும் மனக்கிளர்ச்சிக்காகவோ, வேடிக்கை விடுகதைக்காகவோ சொல்லப்பட்ட கதைகள் அல்ல. ஒவ்வொன்றும் ஞானம் வழங்கும் கருத்துக்கள் நிறைந்தது.

மேலும் இந்த கதை ஒரு தாய் தனது மகனுக்கு சோறு ஊட்டும் பொழுது சொன்னாளாம். இப்படியாக பின்நவீனம் சொல்லுகிறது அந்த புத்தகம். பின்நவீனத்துவம் எப்படி இருக்கிறது?

படித்துவிட்டீர்கள் அல்லவா உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

இது என்ன புத்தகம் ? யார் இயற்றியது?

என தேதி இல்லாத நாளில், மணி இல்லாத நேரத்தில் சொல்லுகிறேன்.

25 கருத்துக்கள்:

அருண் said...

ஒன்னுமே புரியல சாமி. பின்நவீனத்துவம் எல்லாம் ஆன்மீகவாதிகளுக்கு வேண்டாம். :(

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அருண்,

எதாவது புரிந்தால் அது பின்நவீனத்துவம் அல்ல. :)

பயப்படாதீங்க அடுத்த பதிவு இயல்பா இருக்கும் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அம்புலி மாமா கதைகளைக் கூடப் பின்நவீன எழுத்து என்று சொல்லலாமா :)

Indira said...

S.J.சூர்யா மாதிரி என்னை COMPUTER முன்னால் புலம்ப வைத்து விட்டீர்கள்... புரியுது ஆனா புரியல,,,, புரியல ஆனா புரியுது... வேண்டாம் சாமி நீங்க எப்பவும் போலவே எழுதுங்க...

கோவி.கண்ணன் said...

நானும் மேலே மூன்று பின்னூட்டம் போட்டு இருக்கிறேன், இரண்டில் எழுத்தே இல்லை, மற்றொன்று எங்கே சென்றது எனத் தெரியல

:))))))

கோவி.கண்ணன் said...

முள்ளு முனையில் மூன்று குளம் வெட்டிவெச்சேன்
இரண்டு குளம் பாழு, ஒண்ணுல தண்ணியே இல்லை,
தண்ணியில்லா குளத்துல மண்ணெடுத்தான் மூனுபேரு
இரண்டுபேரு முடம், ஒருத்தனுக்கு கையே இல்லை
கையில்லா குயவன் செய்த பானை மூணு, அதில்
இரண்டு பானை ஒடைஞ்சிடுச்சு, ஒண்ணு வேகவே இல்லை
வேகாத பானையில் போட்ட அரிசி மூணு
இரண்டு அரிசி பச்சை, ஒண்ணு வேகவில்லை, அந்த
வேகத சோத்துக்கு விருந்துக்கு வந்தவங்க மூவர்...- இப்படி போய்கிட்டே இருக்கும். எல்லா காலத்திலும் கற்பனையாளர்கள் இருக்கிறார்கள், கம்பராமயணத்தில் இருக்கும் புதுக்கவிதை சாரம் இந்த காலத்தில் கூட இல்லை

Vishnu - விஷ்ணு said...

வாசகர்கள் இல்லாதா பிரபல எழுத்தாளர் தமிழே படிக்காம தமிழ் கவிதை எழுதி பேப்பர் இல்லாத புத்தகத்தில் மை இல்லாமல் அச்சடிச்ச மாதிரி இருக்கு.


பின்நவீனத்துவம் சில பல சமயங்களில் பின்னால் நகைத்துவமாகிறது. ஆனலும் சமுகத்தில் உள்ள பல குறைகளை எடுத்து சொல்லத்தானே செய்கிறது.

:)

எம்.எம்.அப்துல்லா said...

சாமி என்னாச்சு??? நல்லாத்தானே இருந்தீக???

:))

sundaresan p said...

வணக்கம் சுவாமி

கிராமங்களில் கூட இதுபோல கதைகள் சொல்லப்படுவது உண்டு.

VIKNESHWARAN ADAKKALAM said...

நாளைக்கு எழுதிய உங்களின் நேற்றய பதிவு ஆஹா ஓஹோ...

ஜீவா said...

இல்லாமல் இருந்துகொண்டிருந்தது , இல்லாதது இருந்துகொண்டிருப்பது, இருந்தது இல்லாமல் இருந்துகொண்டிருப்பது ஆனால் அது என்னனு தெரியல , சாமிக்கு ஒரு கேள்வி, குருவும் கேதும் ஜாதகத்தில் ஒம்பதாமிடத்தில் சேர்ந்து இருந்தால் என்ன பலன் உண்டாகும், தயவு செய்து சொல்லவும்
அன்புடன்
ஜீவா

திங்கள் சத்யா said...

எனக்கு நன்றாகவே புரிகிறது. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. வாழ்த்துகள், நன்றி.

ஷண்முகப்ரியன் said...

இதைப் படித்த பின் நானே இங்கில்லாத போது பதில் எங்கே எழுதுகிறது?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.ஜ்யோவ்ராம் சுந்தர் ,

உங்களை போன்ற இலக்கியவாதிகள் இங்கே வருகைதருவதற்கு எழுதிய பதிவுதான் இது :)

அம்புலிமாமா கதையை கண்டிப்பாக பின்நவீனத்துவம் ஆக்கலாம். ஆனால் என்ன...
வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேள்வியை பாரில் கேட்கவேண்டும். கேள்வி வில்லங்கமானதாக இருக்க வேண்டும் :)

அப்படி எழுதினால் அய்யனார் சாமியாக இலக்கிய உலகம் சுவீகரிக்கும், அடுத்த இலக்கிய கூட்டத்தில் காது கிழிக்கப்பாடும் :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இந்திரா,
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு.கோவி.கண்ணன்,
என்ன புத்தகம் என ஓரளவு கண்டுபிடித்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.

திரு.விஷ்ணு,வருகைக்கு நன்றி.

திரு.அப்துல்லா அண்ணே, (என்ன செய்ய சூடு ஜாஸ்தி..!)

திரு.சுந்தர்,
திரு.ஜீவா,
திரு.விக்னேஷ்வரன்,
திரு.திங்கள் சத்யா,
திரு.ஷண்முகப்ரியன்,

வருகைக்கு நன்றி.

பரிசல்காரன் said...

அது எந்த புக்னு எனக்கு மட்டும் சொல்லுங்க ஸ்வாமிஜி...

மதி said...

இப்படி கூடா யோசிக்கலமா..?

அது சரி ஸ்வாமி அது என்ன படம்?இந்த பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்மந்தம்?

Unknown said...

swamiji avargalukku vanakkam

Swami Omkar said...

திரு பரிசல்,

உங்களுக்கு மட்டும் என்ன. அனைவருக்கும் அடித்த பதிவில் சொல்லிவிடுகிறேன் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதி,

திரு மதி - இடைவெளி இல்லை என்றால் திருமணம் ஆகிய பெண்.

திரு மதி - திரு இல்லை என்றால் மலையாளத்தில் போதும்.

திரு மதி - இப்படியே இருந்தால் தெய்வீக புத்தி..

ஆமாம் இப்படி கூட யோசிக்கலாம். :)


பின்நவீனத்துவம் என்றால் கட்டுரைக்கும் படத்திற்கும் சம்பந்தம் இருக்க கூடாது :)

SEKAR70 said...

சில மனிதர்கள் நான் உலகில் உழைப்பது என் சுகத்திற்காக வல்ல பிறர் நலத்திற்க்காக உழைக்கிறேன்,பிறர்காக வாழ்கின்றேன்,என்று சொல்வார்கள் ஆனால் அந்தசொயலின் தன்மையே ஆழ்ந்து நோக்கினால் உதாரனமாக ஓருவன் தன் குழந்தையின் பராமரிப்புக்காக, கல்வி முதலியவற்றிற்காக தன் வாழ்வு முழுவதும் சிரமங்களை ஏற்க முன் வருகிறான் என்று வைத்துக்கொள்வேம் அப்படிச் செய்வதால்,தன் மகன் அடையும் நலத்தை காண்பதால் அவன் திருப்தியடைகிறான் இந்த்த் திருப்திக்காகவே அவன் பாடுபட்டான் இந்த்த் திருப்தி இவனுக்கேயல்லவா. இதில் ஏர்படும் தன்திருப்திக்காகவே மகனுக்கு பரேபகாரம் செய்துள்ளான்.அதேப்போல சுவாமிஜி எந்த திருப்திக்காக இந்த வலைப்பகுதி கர்மாவைச் சொய்கின்றாறோ.....பரநலமா, சுயநலமா..பதில் சுவாமிஜி.

SEKAR70 said...

தாங்கள் எழுதியதை படிக்கமுடியவில்லை எழுத்துறு தவறா என் கணணி தவறா பதில் எழுதவும் ,வலைபகுதி படிக்க ட ுத ி இப்படித்தொரிகிறது அதை சரியாக படிக்க என்னசொய்ய வோண்டு் பதில் சாமி,,,

SEKAR70 said...

“பலனில் இச்சையற்றுக் கர்ம்ம் புரி” என்கிறது கர்மயோகம்,
“இதரப் பொருள்களை விரும்பாதே கடவுளை விரும்பு” என்கிறது பக்தியோகம்.
“இறைவனிடமிருந்து பிரிந்து நீ ஜீவனாகிச் சிறுமைப் பட்டு விட்டாய் அவனிடம் மீண்டும் போய்ச் சேர்” என்கிறது இராஜ யோகம்.
“நீ அவனை அறி” என்கிறது ஞானயோகம்.
இந்த நான்கிலும் “நான்” ஓருவன் இருந்துக் கொண்டே நிஷ்காமிய கர்ம்ம் புரிய வேண்டும் “நான்” ஓருவன் இருந்துக் கொண்டே இறைவனை நேசிக்க வேண்டும்,பிரிந்து வந்தவனாகிய நான் ஓருவன் இருந்தே அவனைப்போய்ச் சேரவேண்டும் இறைவனை அறியாத “நான்” ஓருவன் இருந்தே அவனை அறியமுற்படவேண்டும்,இவ்வாறு இந் நான்கு யோகங்களிலும் “நான் இவன்”

அல்லது ‘நான்இது’ என்ற ஓரு தனிப்பட்ட (ஜீவ) இருப்பு அவசியப் படுகிறது.இந்த நான் இல்லாமல் எந்த யோகமும் செய்ய முடியாது
“இந்த நான் யார்? பதில் சுவாமிஜி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பின் நவீனத்துவம் என்ற பெயரில்,
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் என்றும், கட்டுடைக்கிறேன்,உள்ளிருத்துகிறேன், சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன் என்றும் வெகுசன மக்கள் நம்பத்துணியாத கதையை எடுத்துக்காட்டாகப் பயன் படுத்தியதற்கு பதிலாக வேறொரு கதையைப் பகிர்ந்திருக்கலாம். இது ஆங்கிலப் படங்களில் வரும் நம்பத்தகாத விடயம் போல் வெளிப்படுகிறது.
இருப்பினும் பதிவின் தொடக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அதற்கு மிக்க நன்றி!

sakthi said...

சுவாமி முடியலை