Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, April 30, 2009

பழைய பஞ்சாங்கம் 30 - 04 -2009

சைக்கிள் ரிப்பேர் ஷாப்

சமீபமாக தொலைக்காட்சியில் ஒரு பிரச்சார விளம்பரம் பார்த்திருப்பீர்கள். ஒரு சிறுவன் தந்தையுடன் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசலில் தான் சைக்கிள் ரிப்பேர் கடை வைக்கபோவதாக சொல்லுவான். பெட்ரோல் சேமிப்புக்கான உயர்ரக முட்டாள் விளம்பரம் அது. மக்களை பெட்ரோல் சேமிக்க சொல்லும் விளம்பரத்திற்கு செலவு செய்வதை காட்டிலும், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கவோ பயன்படுத்தவோ ஊக்குவிக்கலாம்.

டெல்லியில் அசந்தர்ப்பமாக ஒரு அரசியல்வாதியை சந்திக்க நேர்ந்தது. தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயம் ஆனவர். நீதியைகாக்கும் இருவர்கள் அடித்துக்கொண்டதும் இவரால் தான்.

நீண்ட நேரம் பேசிகொண்டு இருந்துவிட்டு, டெல்லியில் அனைத்து அரசு பேருந்தும் மீத்தேன் வாயுவில் ஓடுகிறது.விஞ்ஞானத்தில் பல யுக்திகள் மாற்று எரிபொருளுக்கு இருக்கிறது. மேலும் சாஸ்திரத்தில் பல விஷயங்கள் பெட்ரோல் போன்ற நீர்ம எரிபொருள் உள்ளன. இதை மக்களிடையே கொண்டு சேர்க்க கூடாதா என எனது ஆதங்கத்தை கேட்டேன். பெட்ரோலியம் வியாபாரிகள் என்பவர்கள் உலக அளவில் மாஃபியா போன்றவர்கள். யாராவது மாற்று எரிபொருளை கண்டறிந்தால் அழித்துவிடுவார்கள் என பீதியை கிளப்பினார்.

பின்னர் என்னிடம் கேட்டார் சாஸ்திரத்தில் ஏதோ இருக்கு என்றீர்களே என்ன அது என்றார். நான் கூற முற்படும் முன் சுப்பாண்டி என்னிடம் குனிந்து காதருகே கிசு கிசுத்தான்..

“ஸ்வாமி இவர் கிட்ட எதுவும் சொல்லாதீங்க. உங்களையும் லவ-குசா ஆக்கிடுவாங்க” என்றார்.
அவன் சொன்னது புரிந்து அமைதியானேன். உங்களுக்கு புரிஞ்சுதா?

--------------------------------------------------------------------------------
சீடி - காம்பேக்ட் டிஸ்க் அல்ல

தமிழ் மொழிக்கு சில சிறப்புகள் உண்டு. வேறு எந்த மொழியிலும் இல்லாத வகையில் சிலேடை அதிகமாக பயன்படுத்த முடியும். சரி தமிழறிஞ்சரே இன்னா மேட்டர் என கேட்பது புரிகிறது.

பொது விழாக்களில் எனது மாணவர் சாஸ்திர ரீதியான சீருடை அணிவார்கள். சிலர் எனது மாணவர்களை பார்த்து இவர்கள் உங்கள் சீடர்களா என கேட்பதுண்டு. எனக்கு சீடர்கள் என யாரும் இல்லை. மாணவர்கள் தான் அனேகம் பேர். இது என்ன புதுக்குழப்பம் என்கிறவர்களுக்கு ஒரு விளக்கம்.

சீடர்கள் என்பவர்கள் குருவை பின்பற்றுபவர்கள். மாணவர்கள் ஆசிரியரை பின்பற்றுபவர்கள். இன்னும நான் யாருக்கும் வெளிப்படையாக குருவாகவில்லை. நான் சொல்ல வந்த விஷயம் வேறு. எனது மாணவர்கள் மத்தியில் சில பெண்களும் இருக்கிறார்கள். அதில் நீண்டகாலம் என்னுடன் இருக்கும் மாணவி தனது கேசத்தை ஆண்கள் போல வைத்திருப்பார். மாணவர்களின் சீருடையில் திடிரென பார்த்தால் அவரை வித்தியாசம் காண முடியாது. எலக்ட்ரானிக் உபரகணத்தை பயன்படுத்துவது என்றால் அவருக்கு அலர்ஜி. அதன் பொத்தான்களை இயக்குவதை கண்டால் ஆயாசம் ஆகிவிடுவார்.

சமீபத்திய விழாவில் ஒரு வயதான பெரியவர் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார். உண்மையை சொன்னால் நேரத்தை தின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகில் எனது மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது எனது மாணவியை காட்டி, இவர் உங்கள் சீடரா என கேட்டார். நான் இல்லை இல்லை இவர் எனது சீடி. கம்ப்யூட்டரில் மட்டும் இவர் வேலைசெய்யமாட்டார் என்றேன்.

ஒன்னும் புரியாத நிலையில், இந்த கூட்டம் விளங்கினாப்புலதான் என அந்த பெரியவர் நடையைக்கட்டினார்.
----------------------------------------------------------------------------------

பாராட்டு பலவிதம்

என்னை சந்திக்கும் சிலர் எனது கட்டுரைகளை புத்தகமாகவோ, மாத இதழ்களிலோ படித்துவிட்டு சொல்லுவார்கள். ஸ்வாமி நீங்க எழுதின அந்த வரி “நச்சுனு இருந்துச்சு” என்பார்கள். இதை எப்படி எடுத்துகொள்வது என்றே எனக்கு தெரியாது. தூய தமிழிலா அல்லது பேச்சுவழக்கிலா என்று.

எனது வலைதள பதிவை படித்துவிட்டு ஒருவர் விடாமல் மின்னஞ்சல் அனுப்புவார்.ஏனோ தெரியவில்லை அவர் பின்னூட்டம் இடுவதில்லை. ஒவ்வொரு முறையும் நிறை குறைகளை சுட்டிகாட்டிவிட்டு, கடைசியில் ”என்னமா எழுதறீங்க” என்பார்.

அவர் எத்தனை திட்டினாலும் அவரின் கடைசி வரி படித்ததும் எனக்கு புல்லரிக்கும்.

ஒரு முறை அவர் தொலைபேசியில் பேசும் பொழுது தான் விஷயம் தெரிந்தது.
நீங்கள் “NHM”-லயா எழுதரீங்க என கேட்பதை என்பதை அவர் அப்படி டைப்பி இருக்கிறார், NHM என்பது தமிழ் எழுத பயன்படும் மென்பொருள்.

உரையாடியில் வரும் கோவியார் கூட கேட்பார், வேடிகையில் ஒன்றும் எழுதவில்லையா என்று.
அப்புறம் தான் தெரிந்தது அது Vedic eye என்று. என்ன ஒரு வேடிக்கை ?
--------------------------------------------------------------------------------------------

எதோ நவீனகவிதையாம் நானும் இன்னைக்கு ட்ரை பண்ணலாம்னு முடிவு பண்ணீட்டேன்.

(உங்க கிரக நிலை அப்படி)

பிரபஞ்சம் எங்கே ?

மண்ணை உண்ட கண்ணன் வாயில் பிரபஞ்சம்
பிரபஞ்சம் காட்டிய கண்ணன் முன்பு தேவகி வயிற்றில்

தேவகிவயிற்றில் இருக்கும் கண்ணன் வாயில்

தேவகியும் இருந்தாளா?

கண்ணன் வாயில் உள்ள பிரபஞ்சத்தில்
தேவகியும் இருந்தாளா?


பிரபஞ்சம் வெளியிலா கண்ணானுக்கு உள்ளேயா?
தேவகி வெளியிலா இல்லை கண்ணனுக்கு உள்ளேயா?

ஆதலால் சொல்லுகிறேன்
தேவகிக்கு கண்ணன் பிறக்கவில்லை.
தோன்றினான்.

27 கருத்துக்கள்:

Mahesh said...

//லவ-குசா// - சுப்பாண்டியை என்னமோ நினைச்சேனே? ராமா ராமா உன் பிள்ளைகள் "ராமர் பிள்ளை"கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அல்லவா?

Mahesh said...

//கண்ணன் பிறக்கவில்லை. தோன்றினான். //

அது.... !!! (நான் அஜீத் அல்ல)

கோவி.கண்ணன் said...

//மேலும் சாஸ்திரத்தில் பல விஷயங்கள் பெட்ரோல் போன்ற நீர்ம எரிபொருள் உள்ளன.//

கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ ஸ்வாமி,

விளக்கு எரிக்க நெய் அல்லது விளக்கெண்ணையையே பயன்படுத்தப்பட்டு வந்தது தான் மின்சாரத்திற்கு முந்தைய வரலாறு. அடுப்புக்கு விறகு. வேறென்ன எரிபொருள் ?

மத்தவா அடிச்சிவிடுவா, ஸ்வாமி பொத்தாம் போக்கில் அடிச்சிவிடலாமோ ?

சில பலருக்கு வயிற்றெரிச்சல் இருக்கும், அதெல்லாம் அசிடிட்டி, அதை எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது :)

கோவி.கண்ணன் said...

//உரையாடியில் வரும் கோவியார் கூட கேட்பார், வேடிகையில் ஒன்றும் எழுதவில்லையா என்று.
அப்புறம் தான் தெரிந்தது அது Vedic eye என்று. என்ன ஒரு வேடிக்கை ?
//

இன்னிக்கு பதிவில் ஒரே வானவேடிக்கையாக இருக்கிறது. வாட் ஐ மீன்.....

பிரபஞ்சம் எங்கே ? கவிதை !

essusara said...

"நச்சுனு" மட்டும் இல்லை சுவாமி "பக்காவா இருக்கு " பதிவு .

essusara

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

இப்படி டக்குனு கண்டுபிடிக்கற மாதிரியா என்னோட கிசுகிசு இருக்கு? நான் என்னை ரொம்ம்ப.. ரகசியமா எழுதறவன்னு நினைச்சேன்.

யார் கிட்டையும் சொல்லாதீங்க :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.கோவி.கண்ணன்,

வேத சாஸ்திரம் என்ற உடன். ஹோம குண்டம் முன் உட்கார்ந்திருக்கும் புரோகிதரை நீங்கள் நினைப்பீர்கள் என எண்ணுகிறேன்.( உங்கள் பாடையில் -(பாஷையில்) பார்ப்பணர் வேதம் ஓதுவது போல).

வேத சாஸ்திரத்தில் ஒரு பகுதி ப்ராமணீயம். ஆதாவது மந்திரங்கள். மற்றவை எல்லாம் மெஞ்ஞானமே.

வேதத்தில் கணிதம் உண்டு (Vedic mathematics).
அதில் அல்ஜீப்ரா, டிரிக்னாமென்ரி, மாட்ரிக்ஸ் என அனைத்தும் உண்டு.

வேதத்தில் எலக்ட்ரானிக்ஸ் உண்டு. இதை எனது ஜெர்மன் மாணவர்கள் ஆராய்கிறார்கள். அவர்களுக்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன்.

வேதத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என ஒரு பதிவு போடுகிறேன்.

(நான் என்ன எல்லாம் பதிவாக போடுகிறேன் என சொல்லுவதை எல்லாம் யாரும் நோட் பண்ணாதீங்கப்பா :) ).

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு essusara,

உங்கள் வருகைக்கு நன்றி.

அது ஒரு கனாக் காலம் said...

வெளுத்துக் கட்றீங்க... அது ( அந்த ரெண்டு பேர் ) நிதியா, நீதியா

எம்.எம்.அப்துல்லா said...

எல்லா மேட்டரும் ”நச்”னு இருக்கு சாமி

:)

yrskbalu said...

your writing style good. pl dont goaway from

your stand point. i think you are going wrong direction . rethink why started this blog and now
where the blog going?

i dont want consider you as a common blogger.

பரிசல்காரன் said...

வய்யாரெஸ்கேபாலு என்ன சொல்றாரு?

ஆனாதுலெனக்குடன்பாடில்ல.

பார்த்தோசிச்சுச்செய்ங்கவெதுவானாலும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்திரராமன்,

நம்ம மகேஷ் உடன் சேர்ந்துக்குங்க. அவர்தான் பிரிலியண்டா எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறார். :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா அண்ணே..

உங்க பின்னூட்டத்தை பார்த்து ஒரு தனிமடல் அனுப்பிச்சுருக்கேன்.:)

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே.பாலு,

என்னை சராசரி வலைபதிவாளராக கருதமாட்டேன் என சொன்னதுக்கு நன்றி.

ஆனால் எனக்கு ஸ்டைல் எல்லாம் இருப்பதாக் நீங்கள் நினைப்பது கொஞ்சம் ஓவர்.

ஆயுர்வேதமும் ஜோதிடமும் என்ற தலைப்பில் நான் இட்ட இடுக்கையில் பின்னூட்டம் இடாமல் இதில் என்னை கண்டித்தமைக்கு மேலும் பல நன்றிகள்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

இது என்ன பின்னூட்டம் ? உங்கள் பதிவில் அனைவரும் மந்திரிச்சதால இங்கே இப்படி ஒரு பின்னூட்டமா?

நீங்க எனக்கு நெருக்கமானவர்னு காட்டிக்க ஸ்பேஸ் விடாம டைப்பீருக்கீங்க.:)

ஜுனூன் தமிழ் சூப்பர்.

உங்கள் வருகைக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

வேதத்தில் என்னென்ன இருக்கு என்று "தெய்வத்தில் குரலில்" காஞ்சிப் பெரியவர் அழகாக விளக்கியுள்ளார்.நீங்களும் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

கிரி said...

//ஒன்னும் புரியாத நிலையில், இந்த கூட்டம் விளங்கினாப்புலதான் என அந்த பெரியவர் நடையைக்கட்டினார்//

ஆனால் உங்கள் சீடர்களும் சீடிகளும் :-) நன்கு ரசித்து இருப்பார்கள்

ஷண்முகப்ரியன் said...

’ஜோதிடம் எனும் சாஸ்திரம் நவீன மக்களின் சுயநலத்தால் சிதறுண்டு கிடக்கிறது. வேதத்தின் கண் என அழைக்கப்படும் ஜோதிடத்தை தெளிவான கண் கொண்டு காணுவதற்கான விழிப்புணர்வை ஊட்டும் நோக்கில் இத்தளம் செயல்படுகிறது - சாஸ்திரோ பிரம்ம ரூபேணாம்.’
நண்பர் yrskbalu குறிப்பிட்டது உங்களுடைய இந்தக் கேப்ஷனைத்தான் தான் என்று நினைக்கிறேன்,ஸ்வாமிஜி.
ஜனரஞ்சகமாக எழுதலாம் தப்பில்லை.ஆனால் அப்போது அதுதான் உங்கள் குறிக்கோள் என்று சொல்லிவிட்டால் படிப்பவர்கள் தயாராகி விடுவார்கள்.
சீரியஸ் படம் என்று ஜனங்களுக்கு சொல்லி விட்டுக் காமெடிப் படம் கொடுத்தால் அது என்ன சூப்பராக இருந்தாலும் தடுமாறும்.
இது என்னுடைய கருத்துத்தான்.வழக்கம் போல, உங்கள் கருத்துப் படியே செயல்படுங்கள்!!

Anonymous said...

அருமையான கவிதை!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்,

தெய்வத்தின் குரல் படித்ததில்லை. கேட்டிருக்கிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி,

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது.
முயற்சி செய்கிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்,

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

Unknown said...

swamiji avargalukku vanakkam.kavidhai arumai

Unknown said...

swamiji ungal emailid indha karuthukkal paguthiyil veliyida vendugiren.

VIKNESHWARAN ADAKKALAM said...

vediceye தான்... :)