Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, April 6, 2009

பழைய பஞ்சாங்கம் 06-04-2009

ராமநவமியும் ஐய்யங்கார் மாமியும்


இரு தினங்களுக்கு முன் ராம நவமிக்காக ஒரு அறக்கட்டளை சார்ப்பாக சொற்பொழிவுக்கு சென்றிருந்தேன். சமயம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ளுவதை அனேகமாக நான் விரும்புவதில்லை. சமூக தொண்டுடன் ஆன்மீக வளர்ச்சி செய்யும் அறக்கட்டளைகள் மற்றும் குழுக்கள் அழைத்தால் மட்டும் செல்லுவதுண்டு.

சிறிய குழுவாக இருக்கும் என நினைத்து சென்ற எனக்கு பெருங்கூட்டம் காத்திருந்தது. ஸ்ரீராமரை பற்றியும், ராம நாமத்தை பற்றியும் விளக்கினேன். சிவன் பார்வதிக்கு ராம நாமத்தை உபதேசித்தார், மேலும் இறைவன் வேதத்தை உலகிற்கு அளித்தபோது மக்களின் வேண்டுதலுக்கு இணங்க இரு எழுத்தில் வேதத்தை படைத்தார் அது ரா-ம எனும் நாமம் என கூறினேன்.

விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை கூறும் செயலை காட்டிலும் ராமா என
ஒரு முறை கூறினால் அதன் பலன் கிடைக்கும் என பொருள் கொண்ட விஷ்ணு சகஸ்ர நாமத்தை விளக்கினேன். கடவுளை காட்டிலும் கடவுளின் நாமமே மேன்மையானது என்பது தான் எனது சொற்பொழிவுன் சாரம்.

சொற்பொழிவு முடிந்து கூடியிருந்தவர்கள் என்னை சூழ்ந்து பேச துவங்கினார்கள். அப்பொழுது ஒரு ஐய்யங்கார் மாமி என்னிடம், “ஸ்வாமி சிவனே ராம நாமம் சொல்றதா சொன்னேளே, சிவன் வைஷ்ணவரா? தென்கலையா வடகலையா?”என்றார். நம் மக்கள் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.

நானும் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு , “ஆமாம் மாமி, சிவன் வைஷ்ணவர்தான். இராமேஸ்வரத்தில் ராமர் சிவனை பூஜிக்கிறாரே? அப்போ ஸ்ரீராமர் சைவமா?” என கேட்டேன்.

கலவரத்தை தடுக்க அந்த மாமியை அனைவரும் தனியே அழைத்து சென்றனர். :)

இதை மனதில் அசைபோட்டுக்கொண்டே வாகனத்தில் என் இருப்பிடம் வரும் பொழுது ஹிட்லர் காலத்து ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது. அது உங்களுக்காக கீழே..
-------------------------------------------------------------------------------------

ஏசு கிருஸ்து எந்த மதம்?

ஹிட்லர்காலத்தில் அவரின் நாஜி படைகள் யூதர்களை தேடி தேடி கொன்று குவித்தார்கள். அந்த சமயத்தில் ஐந்து யூதர்களை கொல்ல நாஜி படையினர் துரத்தினார்கள்.

ஐந்து யூதர்களும் ஒரு சர்ச்சில் அடைக்கலம் புகுந்தனர். ஞாயிறு என்பதால் அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்களை தேடிவந்த நாஜி படையினர் சர்ச்சின் முன்பகுதிக்கு வந்து சப்தமாக கூறினார்கள், “ஐந்து பேரும் இங்கே தான் இருக்கிறீர்கள் என தெரியும். இது எங்கள் தேவாலயம் இங்கே அசுத்தம் செய்ய விரும்பவில்லை. மூன்று எண்ணுவோம்...யூதர்களே அனைவரும் சர்ச்சுக்கு வெளியே வந்துவிடுங்கள்.”

ஒன்று
இரண்டு
மூன்று...

யூதர்கள் அனைவரும் வெளியே வரிசையாக நின்றார்கள். ஆனால் மொத்தம் ஆறுபேர் இருந்தார்கள். முதலில் ஏசு கிருஸ்து நின்றிருந்தார்.

ஜாதி மத துவேஷங்கள் செய்பவர்கள் எப்படி கண்மூடித்தனமாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வேடிக்கை கதை ஒரு உதாரணம். இந்த கருத்தை கிருஸ்துவ மதத்தை நான் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஒரு இருண்ட வரலாற்றின் அறியாமையை மீண்டும் நடக்காத வண்ணம் இருக்க கூறுகிறேன்.

தற்காலத்தில் அந்த மாமி போல சில நாஜிகள் நம்மிடையே உண்டு.

-------------------------------------------------------------------------------------
அடுத்த வாரம் வறீங்களா?

சில பதிவுகள் முன்னாடி கோவையில் நடக்கும் நிகழ்சியான “ஜோதிட உற்சவம்” பற்றி சொல்லியிருந்தேன். நமது வலைபதிவாளர்கள் கிட்ட இருந்து குறைவான அளவே பதில் வந்தது.

இன்னும் ஒரு வாரம் இருக்கு. உங்களுக்கு கலந்துக்கர எண்ணம் இருந்தா இப்பவும் தொலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ உறுதிபடுத்துங்க. மக்களுக்கு பயன்படும் நிகழ்சிக்காக வலையுலகம் சார்பா ஆதரவு இருக்கும்னு நினைக்கிறேன்.

என் மாணவர்களும் நானும் இரத்ததானம் செய்யரதா இருக்கோம். அன்னைக்கு தனிப்பட்ட ரீதியா வலைபதிவாளர்கள் கூட சந்திக்கலாம்னு நினைக்கிறேன்.

ஏனுங் வரீங்களா?
-----------------------------------------------------------------------------------------
அடுத்து யார் வரப்போறா?

தேர்தல் பற்றிய எனது கணிப்பை அடுத்த பழைய பஞ்சாங்கத்தில் சொல்லுவதாக சொல்லி இருந்தேன். அதை படிச்சவுடன் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒரு கடிதம்.(நெனப்பு தான் :) ).

தேர்தல் முடிவுகளை முன்னாடியே கணிக்க கூடாதுனு சட்டம்
இருக்காம். கருத்து கணிப்பு மாதிரி ஜோதிட தகவலும் மக்களை திசை திருப்பிடுமாம். (இல்லைனா மட்டும் மக்கள் சரியான ஆளை தேர்ந்தெடுத்துடுவாங்களக்கும் :) ).

இதனால் ரொம்ப சிந்திச்சேன் (சரி சரி விஷயத்துக்கு வா..:) ).

பல நூற்றாண்டுக்கு முன்னாடி நம்ம நாட்டில் இருந்த ஜோதிட மாமேதை மித்ர ஜோதி பாவணா பாரதி எழுதிய அரிச்சுவடியை எடுத்து பார்த்தேன்.
(நம்பிட்டோம்..:) )

அதில் நம்ம தேர்தல் 2009 பத்தி கணிச்சுருக்கார்.
அவர் சொன்னதையாவது இங்கே சொல்லுவோம்னு முடிவு பண்ணிட்டேன்.அந்த ஏட்டில் என்ன எழுதி இருந்தது தெரியுமா?

ஜெய மத்யே ஹஸ்தகா ; துவாஅங்குலி தக்‌ஷிணா பரத:

அப்படினு சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கு. எனக்கு ஒண்ணும் புரியலை. உங்களுக்கு?
-----------------------------------------------------------------------------------------
ஒரு கவிதை

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்

குப்பைதொட்டியில்
நாத்திகர்கள்

கவிதை (ப)சிலருக்கு புரியவில்லை என்பதால் கவிதைக்கு பரிகீழ்அழகர் எழுதிய உரையை இத்துடன் இணைக்கிறேன்.

முதல் கடவுள் தாய் தந்தைதான் என்கிறார்கள் சான்றோர். ஆனால் குப்பை தொட்டியில் குழந்தைகளை வீசும் பெற்றோர் தெய்வமாக இருப்பார்களா? அதனால் பெற்றோர் மேல் வெறுப்பு கொண்ட குழந்தைகள் அதிகமாகிறது இந்த சமூகத்தில் என சுவைபட சொல்லுகிறார் பாடல் ஆசிரியர். :)

டிஸ்கி : இதெல்லாம் ஒரு கவிதையா என பழிப்பவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து
அவை அனைத்தும் என்னை போல கவிதை சொல்லும்.

27 கருத்துக்கள்:

ஷண்முகப்ரியன் said...

நான் சென்னையில் இருப்பதால் தங்கள் உற்சவத்தில் பங்கேற்க இயலாமைக்கு வருந்துகிறேன் ஸ்வாமிஜி.இல்லாவிட்டால் உங்களைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பை இழக்க மாட்டேன்.மற்றபடி I could more enjoy your serious writngs rather than your lighter side,even though it is relaxing.Thank you Swamiji.

கோவி.கண்ணன் said...

//அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்

குப்பைதொட்டியில்
நாத்திகர்கள்
//

:) லொள்ளு ! கூப்பைத் தொட்டியில் வீசியவர்கள் போலி ஆத்திகர்கள் என்று இருக்க வேண்டும் !

கோவி.கண்ணன் said...

ஐயங்கார் மாமி ராமன் வடகலையா தென்கலையான்னு கேட்டிருந்தால் இன்னும் தமாஷாக இருக்கும்.

ராமகுமரன் said...

சூசகமாக கைச்சின்னம் ஜெயிக்கும் என்று சொல்கிறீர்கள் :) , அடுத்த வரி தென்னிந்தியாவை பற்றி ஆனால் என்னவென்று புரியவில்லை

VIKNESHWARAN ADAKKALAM said...

தேர்தல் கணிப்பு இப்படி தான் சொல்விங்கனு அப்பவே மனசுக்குள்ள பட்சி சிறகடிச்சிச்சு...

கோவி.கண்ணன் said...

//VIKNESHWARAN said...
தேர்தல் கணிப்பு இப்படி தான் சொல்விங்கனு அப்பவே மனசுக்குள்ள பட்சி சிறகடிச்சிச்சு...
//

விக்கி, பட்சிக்கு சீக்கிரமாக தீனி போட்டு திரும்பவும் அடைச்சிடு, இல்லாட்டி அந்த பட்சியை யாரும் சுட்டு திண்ணுடுவாங்க

ஆ.ஞானசேகரன் said...

//அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்

குப்பைதொட்டியில்
நாத்திகர்கள்//

குப்பைதொட்டியில் நாத்திகர்கள்...இதுதான் உதைக்கின்றது.. மாமி போல ஆத்திகர்கள் இருக்கும் பொழுது... நாத்திகர்களை ஏன் குறை சொல்வானேன்...
என் அனுபவதில் ஆத்திகர்களை விட நாத்திகர்கள் மானுடத்தை மதிப்பவர்கள் என்ற நம்பிக்கையுள்ளது... பதிவு சூப்பரா இருக்கு சார்...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

ஒரு மனிதன் தனது ஆசையை கற்பக விருட்சத்தின் கீழ் நினைத்து கடைசியில் ,புலிவந்தால் என ஆசைபடும் கதையை கேள்விபட்டிருப்பீர்கள்.

அது போல உங்கள் விபரீத ஆசை ஒரு மாதத்திற்குள் நிறைவேற போகிறது :)

கூடிய விரைவில் சென்னை வருகிறேன். சந்திபோம்.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,
உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.விக்னேஷ்வரன்,

எனது அடுத்த பதிவு என்ன என்று உங்கள் பட்சியை கேட்டு சொல்லுங்கள் :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராம்குமார்,

எனக்கும் அந்த சுலோகம் புரியவில்லை :)

விளக்கம் கிடைத்தால் சொல்லவும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஞானசேகரன்,

உங்கள் கவிதை பற்றிய கவனிப்பு தவறு.

கவிதைக்கு பரிகீழ்அழகர் உரையை படிக்கவும் :)

supersubra said...

ஜெய மத்யே ஹஸ்தகா ; துவாஅங்குலி தக்‌ஷிணா பரத:
In central victory for hand
In Tamilnad two fingers

who ever wins
பராஜய ஜன

VIKNESHWARAN ADAKKALAM said...

கேட்டேன் சொல்ல மாட்டுது... கோவி அண்ணா சுட்டு சாப்பிட்டாரு போல :))

ஆ.ஞானசேகரன் said...

//திரு ஞானசேகரன்,

உங்கள் கவிதை பற்றிய கவனிப்பு தவறு.

கவிதைக்கு பரிகீழ்அழகர் உரையை படிக்கவும் :)//

மிகவும் நன்றி... மீண்டும் கொடுக்கும் புரிதலுக்கும் நன்றி

Unknown said...

swaamiji avargalukku vanakkam.kavidhai arumai.

essusara said...

ஜோதிட உற்சவத்தில் பங்கு கொள்ள ஆவல் உள்ளது, அனால் பனி நிமித்தம் வர இயலவில்லை.

நானும் சென்னை வாசி தான். உங்களை சென்னையில் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

anbudan,
essusara

Indira said...

சுவாமி,

நீங்கள் எனக்கு தந்த பதிலை படித்தேன்... மிகவும் நன்றி....
///////////குருவை சார்ந்து என்னும் உங்கள் சொல்லாடலில் ஒருவித ”அடிமைத்தனமாக இருக்கவேண்டுமா” எனும் கருத்து வெளிப்படிகிறது. குரு என்பவறை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் எண்ணங்கள் மாறும்///////////////////
ஒரு நல்ல குருவுக்கு அடிமையாக இருபதில் எந்த கஷ்டமும் எனக்கு இல்லை...என் கேள்வி உங்களை கோவமடைய செய்திருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும்...
குருவினால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கேடிர்கலானால் நான் ஏன் இப்படி கேட்டேன் என்று உங்களுக்கு தெரிய வரும்????
நான் பதில் தெரியாமல் இருக்கிறேன்...உங்களிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என்றே...... கேட்டேன்... இது என்னோட Mail ID:indria_rk25@webdunia.comஉங்களுக்கு mail IDஇருந்தால் எனக்கு தெரிய படுத்தவும்... நான் அதில் சொல்கிறேன்...பிறகு என் மீது கோபம் கொள்ளவும்..

Mahesh said...

//ஜெய மத்யே ஹஸ்தகா ; துவாஅங்குலி தக்‌ஷிணா பரத: //

கையும் ரெண்டு விரலும் இருந்தா வாய்சூப்ப வசதிதான் :)))))

யதா ராஜ: ததா ப்ரஜ: !!

நிகழ்காலத்தில்... said...

\\டிஸ்கி : இதெல்லாம் ஒரு கவிதையா என பழிப்பவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்து அவை அனைத்தும் என்னை போல கவிதை சொல்லும்.\\

கவிதை அருமை...!!!

வாழ்த்துக்கள்...

எம்.எம்.அப்துல்லா said...

//துவாஅங்குலி தக்‌ஷிணா பரத: //

//


என்னாது...தட்ஷிணபாரத பிரதமரா கங்குலி வருவார???

எம்.எம்.அப்துல்லா said...

//யதா ராஜ: ததா ப்ரஜ: !! //

நாட்டுல 110 கோடி பேரும் திருடனாவா இருக்கான்??? அந்தப் பழமொழி மேல் எனக்கு முழுமையாக நம்பிக்கை இல்லை.

எம்.எம்.அப்துல்லா said...

சாமி சென்னை வரும் போது மறக்காம எனக்குத் தெரியப்படுத்துங்க.

pudukkottaiabdulla@gmail.com

பரிசல்காரன் said...

ஸ்வாமி..

உங்கள் மின்னஞ்சல் ஸ்பாமில் மாட்டிக்கொண்டதால் இரண்டு தினம் முன்னர் தான் பார்க்க முடிந்தது. உங்களுக்கு அழைத்தேன். வேறுயாரோ எடுத்த்தார்கள். நேற்றும் அழைத்தேன். இன்றும் அழைக்கிறேன்....

புருனோ Bruno said...

//அதில் நம்ம தேர்தல் 2009 பத்தி கணிச்சுருக்கார். அவர் சொன்னதையாவது இங்கே சொல்லுவோம்னு முடிவு பண்ணிட்டேன்.அந்த ஏட்டில் என்ன எழுதி இருந்தது தெரியுமா?

ஜெய மத்யே ஹஸ்தகா ; துவாஅங்குலி தக்‌ஷிணா பரத:

அப்படினு சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கு. எனக்கு ஒண்ணும் புரியலை. உங்களுக்கு?//

கோச்சாரத்தில் ஜன்மத்தில் சனியும் ஆறில் குருவும் இருக்கும் போது ஒன்றும் உருப்பாடு என்று புரிகிறது

ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்பதும் புரிகிறது

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புரூனோ,

//பல நூற்றாண்டுக்கு முன்னாடி நம்ம நாட்டில் இருந்த ஜோதிட மாமேதை மித்ர ஜோதி பாவணா பாரதி எழுதிய அரிச்சுவடியை எடுத்து பார்த்தேன்.//

//ஜெய மத்யே ஹஸ்தகா ; துவாஅங்குலி தக்‌ஷிணா பரத://


அந்த அறிஞர் சொன்னதில் பாதி தான் சரி. மீதி தவறு.

இதனால்தான் பழைய அரிச்சுவடியை படிக்க கூடாது என்கிறேன் :))

அஷ்டமத்து சனி மக்களுக்கு என மட்டும் தெரிகிறது :)

புருனோ Bruno said...

//அஷ்டமத்து சனி மக்களுக்கு என மட்டும் தெரிகிறது :)//

மன்னிக்கவும் சாமி

அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில் அஷ்டமத்து சனி வர முடியாது

வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் 8 சதம் மக்களுக்கு (100/12) அஷ்டம சனி என்று வைத்துக்கொள்ளலாம்

எல்லாம் அவன் செயல் :) :)

--

நீங்கள் மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் ஏறத்தாழ அனைத்து ஜோதிடர்களும் ஜோதிட சாஸ்திரத்தை ஒதுக்கிவைத்து விட்டு கிரகங்கள் கூறுவதற்கு மாற்றாக தங்கள் விருப்பத்தையே பலனாக கூறியிருந்தது எனக்கு வருத்தமே

--

உங்களிடம் மட்டுமே உரிமையுடன் இதை கூறுகிறேன்