Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, March 28, 2009

சக வலைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்

சக வலைப்பதிவாளர்களுக்கு,

சமூக ரீதியாக பல கருத்துக்களை வெளிப்படுத்தியும், உங்கள் எழுத்தாற்றல் மூலமாக சமூக கருத்துக்களை கூறும் வலைபதிவாளர்களா நீங்கள்?

எங்கள் சமூக பணியில் கலந்து கைகோர்க்க விருப்பமா?

ஆன்மீக விழிப்புணர்வு கொடுக்கும் நோக்கில் ப்ரணவ பீடம் எனும் அமைப்பை தோற்றுவித்து செயல்பட்டுவருகிறோம். அதன் செயல் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் நோக்கில் பல பொது நிகழ்ச்சிகள் செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி (சித்திரை 1ஆம் தேதி) கோவையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த நிகழ்ச்சி ஐந்தாவது ஆண்டாக இந்த வருடம் கோவை - சன்மார்க்க சங்க கட்டிடத்தில் நடைபெறுகிறது.

ஜோதிட உற்சவம் எனும் தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக மற்றும் சாஸ்திர விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. இந்நாளை பயன்படுத்தி நமது கோவையை சேர்ந்த வலைபதிவாளர்களை சந்திக்கும் சூழலை ஏற்படுத்தலாம் எனும் எண்ணம் உண்டு.


நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக ”ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையா -விஞ்ஞானமா?” எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. சமூக அக்க்றை கொண்ட உங்களை போன்ற வலைபதிவாளர்கள் இதில் பங்கு கொண்டு உரையாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.

மேலும் அன்று ஒரு வலைபதிவு சார்ந்த ஒரு கருத்தாய்வை தனி சூழலில் கலந்துரையாடவும் விருப்பம் உண்டு.

கோவையை சார்ந்த வலைபதிவாளர்கள் மட்டுமல்ல அனைவரும் இதில் வரவேற்கப்படுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களையும் வருகையையும் எனது மின்னஞ்சலிலோ அல்லது தொலைபேசியிலோ கூறவும்.

தியானிக்கும்

ஸ்வாமி ஓம்கார்

டிஸ்கி : திரு பரிசல்காரன், திரு சுப்பையா போன்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளேன். பிற பதிவர்களின் மின்னஞ்சல் தெரியவில்லை, இந்த பதிவை பொதுவான வெளியீடாக கருத்தாமல் தனி விண்ணப்பமாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

19 கருத்துக்கள்:

Mahesh said...

ஆஹா... நல்ல களமாக இருக்குமே.

நிகழ்ச்சி சிறப்புற அமைய இறைவன் துணைபுரிவானாக.

ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்வ்வ்... நல்ல முயற்சி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

உங்கள் ப்ரார்த்தனைக்கு நன்றி


திரு ஞானசேகரன்
உங்கள் வருகைக்கு நன்றி.எந்த பதிவுக்கும் இல்லாதது போல ஆயிரக்கணக்கான மின்னஞ்சலும், பின்னூட்டங்களும் வந்தவண்ணம் இருக்கிறது. (எல்லாம் ஒரு ஏதிர்பார்ப்புதான் :)) )

எந்த பதிவர்ரும் இன்னும் இதை படிக்கவில்லை என்பதை பார்த்தால் சங்கடமாகத்தான் இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//எந்த பதிவர்ரும் இன்னும் இதை படிக்கவில்லை என்பதை பார்த்தால் சங்கடமாகத்தான் இருக்கிறது.//

மீண்டும் பதிவாக போடுங்கள், வந்த வேகத்தில் மறைந்திருக்கலாம், அதனால் பலர் கண்ணில் படமால் இருந்திருக்கும்.

முயற்சி முக்கியம், வள்ளலார் சொன்னதில் எனக்கு பிடிக்காத ஒன்று 'கடைவிரித்தேன் கொள்வார் இல்லை' என்பது. அவ்வளவு விரக்தி தேவை இல்லை

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

உங்கள் யோசனைக்கு நன்றி.

கடைவிரித்தேன் கொள்வார் இல்லை என சொன்னவர் பட்டினத்தார் என நினைக்கிறேன். காரணம் அவர் பிறந்த குலம் அத்தகையது.

வள்ளலாருக்கு கடையும் தெரியாது.காசும் தெரியாது. காரணம் அவர் பிறந்த சூழல்.

supersubra said...

மிக்க நன்றி. கோவை ரூட்ஸ் நிறுவனத்தில் கணினி துறை மேலாளராக பணிபுரிகிறேன். அலுவலகத்தில் விடுமுறை கிடைத்தால் கட்டாயம் வருகிறேன். எனக்கு ஜோதிடம் மிக குறைந்த அளவே தெரியும் என்றாலும் வாழ்க்கை அனுபவத்தால் அது உண்மை என்ற நம்பிக்கை உள்ளவன் நான்.
view these postings.
New Planents discovery will not change astrology predictins why?
http://yennottam.blogspot.com/2006/05/blog-post.html
What is Horoscope?
http://yennottam.blogspot.com/2006/03/blog-post.html

கும்க்கி said...

தங்களின் மேலான முயற்சி நோக்கம் ஈடேறவும்,எல்லோர்க்கும் புரியாத விஷயங்களை புரிந்துகொள்ள இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் எனது நல்வாழ்த்துக்கள்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஒரு துண்டு போட்டு வைங்க சாமியோவ்.. :)

கே.பழனிசாமி, அன்னூர் said...

I WILL ALSO TRY TO ATTEND THE UTSAV

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.சூப்பர் சுப்ரா,

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

நிகழ்ச்சியில் சந்திப்போம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கும்க்கி,

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சஞ்சய்,

வாங்க வாங்க உங்களுக்கு துண்டு என்ன வேஷ்டியே போட்டு வைக்கிறோம்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.பழனிசாமி,

உங்கள் ஆதரவுக்கு நன்றி,
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சி செய்யவும்.

அதிஷா said...

நானும் அன்றைய தினம் கோவையிலிருப்பேன் என எண்ணுகிறேன் சாமி.. முடிந்தால் கலந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறேன்.

உங்களையும் சந்தித்தது போலிருக்கும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நிகழ்ச்சி இனிதே வெற்றி பெற வாழ்த்துகிறேன் ஸ்வாமி..

OSAI Chella said...

சோதிடம் நிச்சயம் விஞ்ஞானப்பூர்வமானதல்ல என்பது வாதிட தேவையற்ற விசயம். அதுவும் கோப்பர்நிகஸ், கலீலியோ என்று வானவியல் முன்னேறியபின்பு இன்னும் சூரியனைக்கோள் என்றும் நிலவை கோள் என்றும் வைத்து அடிப்படைத்தவறோடு ஆயிரம் கூட்டல் கழித்தல் போட்டாலும் அது சரியான அறிவியல் முறை என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும் மக்களை சமமற்றவர்கள் ஆக்கும் வர்ணாசிரமம் இருக்கிறவரை கோட்பாடு ரீதியாகவே சாத்திரங்கள் சூத்திரங்கள் அனைத்தும் காலத்திற்கு ஒவ்வாதவையே என்பது எனது மாற்றுக்கருத்து! ஆனாலும் கோவைப்பதிவர் என்ற முறையில் தங்கள் அழைப்பை ஏற்று வரமுயற்சிக்கிறேன்!

அன்புடன்
ஓசை செல்லா, ரத்தின சபாபதிபுரம், கோவை

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அதிஷா,

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஓசை செல்லா,

உங்கள் கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.

உங்கள் வருகை சக பதிவர் என்ற முறையில் வரவேற்கிறேன்.

அன்புடன்
ஸ்வாமி ஓம்கார், அதே ரத்தின சபாபதி புரம் கோவை

ராஜ நடராஜன் said...

குறுகிய கால அறிவிப்பு.ஜோதிடம் விவாதத்திற்குள்ளாக்க வேண்டிய ஒன்றே.கருத்தரங்கம் சிறப்புறட்டும்.