Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, April 17, 2009

உலகின் ”யோக”மான வியாபாரம்

தொழில் செய்ய தனம் தேவை. உலகில் தொழில் செய்ய இருவகையான தனம் தேவை. சிலருக்கு தொழில் செய்ய மூலதனம் தேவை, சிலருக்கு மூளைத்தனம் தேவை. இந்த இரு நிலைகள் தாண்டி பிறரை ஏமாற்றும் நிலை எனும் நயவஞ்சகத்தனம் என்பதும் உண்டு. நாளாக நாளாக மூளை மற்றும் மூல தனம் குறைந்து பிறரை ஏமாற்றி பொருள்சேர்க்கும் தன்மை அதிகரித்து வருகிறது.

ஏதோ தொழில் புரட்சி பற்றி சொல்ல போகிறேன் என நினைக்கவேண்டாம். பொருளாதரம் எனும் தலைப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம். தற்காலத்தில் யோகசாஸ்திரத்தை மக்கள் எப்படியேல்லம் சீரழிக்கிறார்கள் என்பதைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.

யோகா (yoga) எனும் வார்த்தை தற்சமயம் மிகவும் குழப்பமாகவே பயன்படுத்தப்படுகிறது. கூகுளின் இந்த வார்த்தையை தேடிப்பாருங்கள். 90,900,000 எண்ணிக்கையில் தளங்களை காட்டுகிறது.“யோகா செய்யப் போகிறேன்”, “யோக பயிற்சி கற்றுத் தருகிறார்கள்” என நாம் கூறும் ”யோகா” எனும் வாசகம் கூறும் பொருளும் , நாம் மனதில் வைத்திருக்கும் அர்த்தமும் வேறு வேறு.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என அர்த்தம். யோக சாஸ்திரம் மதம், கலாச்சாரம் கடந்த ஒரு மெய்ஞானம். ஒன்றிணைதல் என்றால் இரு விஷயங்கள் ஒன்று சேருதல் என கொண்டால் பரமாத்மாவுடன், ஜீவாத்மாவா என ஆத்திகர் நினைக்கலாம். மனமும் உடலும் என நாத்திகர் நினைக்கலாம். யோக சாஸ்திரம் முழுவதும் கடவுள் என்ற கோட்பாடு இல்லை. நீ, உனது, உன் உள்நிலை என மூன்று தன்மையை பற்றியே யோகசாஸ்திரம் கூறுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் யோக நூல் கடவுள் கொள்கையை கொண்டிருந்தாலும், இன்ன கடவுள் இன்ன உருவ நிலை என சொல்லாமல். இறைவன் எனும் சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறது.

யாமம்,நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. என யோக சாஸ்திரத்தில் எட்டு நிலைகள் இருக்கிறது. இதில் எட்டாவது நிலையை நீ அடைந்தால் இறைவனை காணலாம் என்றே பதஞ்சலி கூறுகிறார்.

உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது. சில யோக பயிற்சி பள்ளிகள் வெறும் ப்ராணாயமத்தையோ, ஆசனத்தையோ சொல்லி கொடுத்துவிட்டு அதை யோகா என பிரச்சாரம் செய்கிறார்கள்.

யோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது.

பாரத தேசத்தில் யோகாவின் பரிதாப நிலை :

நமது நாட்டில் யோக பயிற்சி பள்ளிகள் யோகாவை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)ஒரு சினிமா நடிகையையோ அல்லது நடிகரையோ ”திடீர்” யோக பயிற்சி ஆசிரியர் ஆக்கி அவர்களை கொண்டு பிறருக்கு யோகம் போதிக்கிறார்கள். யோக பயிற்சி ஆசிரியர் ஆவது என்பது சாதாரண காரியம் அல்ல. பள்ளி ஆசிரியர் என்றால் அவர் மாணவனின் அறிவு எனும் தளத்தில் செயல்படுபவர். இவர் இல்லை என்றால் இன்னொருவரிடம் அறிவு பெறலாம். யோக ஆசிரியர் என்பவர் மாணவனின் ஆன்மா எனும் தளத்தில் வேலைசெய்பவர். ஒரு முறை தவறு நிகழ்தால் அந்த ஆன்மாவை பிறகு விழிக்க செய்வது சிரமம்.

சினிமாக்காரர்கள் யோகா சொல்லி கொடுக்க கூடாதா? அதை எதிர்க்கவேண்டும் என் சொல்லவில்லை. எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் குறைந்த பட்சம் 5 முதல் 6 வருட பயிற்சி மூலமே யோகாவை ஆசிரியர் பயிற்சியாக கற்று ஆசிரியர் ஆக முடியும். கையை தூக்கு, மூச்சு விடு என சொன்னால் அது யோகா ஆகிவிடுமா?

சில தினங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் வந்த துணுக்கு, ஒரு நடிகையின் பெயர் ஒரு யோக பயிற்சி பள்ளியின் பெயரை போல இருக்கிறது என்பதால் அவரை யோக ஆசிரியர் ஆக்கிவிட்டார்களாம். இது எவ்வளவு கீழ்தரமான செயல் ? அந்த நடிகையின் பெயர் எனது மனைவியின் பெயரை போல இருந்தால் அவரை மணந்து கொள்ளலாமா? இது எப்படி கீழ்தரமான யோசனையோ அது போலவே அவரை யோக ஆசிரியர் ஆக்குவதும்.

கவர்ச்சியான உடையை உடுத்தி நடத்த அந்த நடிகை ஒரு வாலிபன் முன் வந்து நின்று யோக பயிற்சியை துவங்கினால், அந்த வாலிபனுக்கு மனதில் என்ன தோன்றும் ? யோகபயிற்சி செய்ய எதற்கு இத்தகைய கீழ்தரமான விளம்பர யுக்தி?

எனக்கு தெரிந்த ஒரு மாபெரும் மார்டன் “குரு” தனது ஆசிரமத்தை துவக்கும் பொழுது ஆசனம் செய்வது ஒரு வீண் வேலை. எனது தியான பயிற்சியே போதும் என பிரசாரம் செய்தார். நாளடைவில் அதில் இருக்கும் வியாபர நோக்கம் தெரிந்ததும் தனது பெயரில் ஆசனங்களை அமைத்து பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டார். அவரை சந்திக்கும் பொழுது இதைக் கேட்டேன். உடனே அவர் சொன்னார் “மக்கள் கேட்கிறார்களே”.

இதை கூட பொருத்துக்கொள்ளலாம், சிலர் யோக ஆசனங்களையும் யோக முறைகளையும் தாங்களே கண்டுபிடித்ததாக சொல்லுகிறார்கள். ஸ்வாத ராம என்பவர் கொடுத்த ஹதயோக பரதீபிக்கா எனும் நூல் யோக ஆசனங்களின் என்சைக்ளோபிடியா. இதற்கு மேல் புதிதாக எழுத ஸ்வாத ராம ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. இவர்கள் இந்த நூல்களை வாசித்தார்களா என்றே சந்தேகம், இல்லையென்றால் நான் கண்டுபிடித்தேன் என சொல்லுவார்களா?

குண்டலினியும் குருட்டுவித்தையும் :

எந்த யோக பயிற்சிக்கு சென்றாலும் அங்கே ஏழு புள்ளி கோலம் வரைந்திருப்பார்கள். அது என்ன ஏழு புள்ளி கோலம் என்றால் அதன் பெயர் குண்டலினி.ஏழு ஆதாரசக்கரங்கள் உண்டு அதில் ஒரு பாம்பு இருக்கிறது என சொல்லி ஒரு மனிதனை இப்படித்தான் குழப்பவேண்டும் என்பதில்லை அளவு கடந்து குழப்பி விடுகிறார்கள். குண்டலினி உண்டா இல்லையா என்ற தலைப்புக்கு நான் வரவில்லை. (அதை தனிபதிவாக இடுகிறேன்)

மாயை எனும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒருவன் மேலே வர யோக பயிற்சிக்கு சென்றால் அங்கே அவனை குண்டலினி எனும் பெயரில் மாயை எனும் மாபெரும் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள்.

குண்டலினி என்பதை குரு ஒருவர் தனிப்பட்ட சிஷ்யனுக்கு போதிக்க வேண்டியது. ஆனால் தற்சமயம் ஒரு விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்து பல்லாயிர கணக்கான பேருக்கு சொல்லிகொடுப்பதால் அதன் தாத்பரியம் கெட்டுப்போய் விடுகிறது.

இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.

எனக்கு தெரிந்து இது போன்ற யோகபயிற்சியில் மனநிலை தவறியவர்கள் அதிகம். ஒரு குருவிடம் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு நேரும் மாற்றத்தை கவனித்து வழிநடத்துவார். இவர்கள் யோக பயிற்சியில் ஒரு மணி நேரம் கற்றுக்கொண்டு பிறகு குருவை வந்து சந்திர்ப்பதே இல்லை.

அவர்களுக்கு நேரும் சுகதுக்கங்களை குரு எப்படி மேம்படுத்த முடியும்?

மேலை நாடுகளில் யோக சாஸ்திரம் :

விவேகானந்தர் காலத்திற்கு பிறகு மேலை நாட்டில் நமது யோக சாஸ்திரம் மிகவும் பிரபலமானது. விவேகானந்தர் யோகபயிற்சி செய்பவர் அல்ல, அவர் காலத்திற்கு பிறகு பலர் இந்தியாவிற்கு வந்தும், சில இந்திய குருமார்கள் மேலைநாட்டிற்கு சென்றும் யோக பயிற்சியை மேம்படுத்தினர்.

நாளடைவில் யோகபயிற்சி என்பது ஒருவித பேஷனாக மாறிவிட்டது. தற்காலத்தில் யோகபயிற்சியை இப்படித்தான் அசிங்கபடுத்த முடியும் என இல்லாமல் அவர்கள் அசிங்கபடுத்தி வருகிறார்கள்.யோகா எடுக்கும் இடம் பெயர் ஸ்டுடியோ, உடையின் பெயர் யோகா சூட் என அங்கே யோகா தடம் பாமாறி சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. அமெரிக்காவில் ஒரு படி மேலே சென்று யோக முறைக்கு காப்பிரைட் வாங்கிவிட்டார்கள். இனி நானோ நீங்களோ பயிற்சி செய்தால் அமெரிக்க யோகத்தைதான் செய்தோம் என சொல்ல வேண்டும்.

Power Yoga, Simple Yoga, Brain Yoga, Dynamic Yoga, Wellness Yoga, Beach Yoga என புது புது பெயரிகளில் மக்களை ஏமாற்ற துவங்கிவிட்டார்கள். இதன் உச்ச கட்டம் nude yoga, நிர்வாணமாக யோகா செய்தால் மஹாநிர்வாணம் கிடைக்குமாம். இந்த யோகா ஸ்டுடியோவில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. இரு ஆண்கள் இணைந்து தான் யோகா செய்ய வேண்டுமாம். என்ன கொடுமை இது?

இவர்கள் பாலியல் இச்சைக்கான வடிகாலாக ஏன் யோக பயிற்சியை கொண்டு வரவேண்டும்?

நம்மை காட்டிலும் இவர்களுக்கு குண்டலினி என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது நீங்கள் இந்த சக்கரத்திற்காக இன்ன ஆசனம் செய்கிறீர்கள் என சொல்ல அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஒரு அமெரிக்கர் என்னுடம் ஆசனம் கற்க வந்தார். கற்று முடித்ததும் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? “In your yoga teaching there is no spicy things"

குண்டலினி, தந்த்ரா என சொல்லியிருந்தால் அவருக்கு தேவையான மசாலா கிடைத்திருக்கும், அதை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு நூறு டாலர் என அவரும் ஒரு ஸ்டுடியோ திறந்திருக்கலாம். என்ன செய்ய? அவர் அனுகிய யோகப்பயிற்சியாளர் அப்படி.

அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் யோக பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் இமாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்.

வாருங்கள்.....நாமும் கேப்பையில் நெய் வடியச் செய்வோம்...!

27 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

:)

என்னத்தச் சொல்லி என்னத்த...

மூன்று நாட்களில் சமாதி நிலை அடைய நாடுங்கள் -என்ற அறிவிப்புகளெல்லாம் இன்னும் வரவில்லை :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு என்னத்த கோவி.கண்ணய்யாவுக்கு, :))

தபால் மூலம் குண்டலினியை தூண்டிவிடும் யோக கழகங்கள் உண்டு. உங்கள் கனவு நினைவாகும் நாள் வெகு அருகில் இருக்கிறது.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சுவாமி,
ராமச்சந்திர மிஷன் ஐ பற்றி தங்களின் மேலான கருத்தினை அறிய ஆவலாய் உள்ளேன்.
அவர்கள் நேராக ராஜ யோக பயிற்ச்சி தருகிறார்களாமே !? எப்படி ?
தயவு செய்து தங்கள் கருத்தினை தெரிவிக்கவும் .

எம்.எம்.அப்துல்லா said...

நாட்ல எத்தனையோ கிறுக்கு...அதுல இது ஒன்னு. ஆனா ஒன்னு சாமி, இத தப்பா பண்ணி யாரும் கிறுக்காயிராம இருந்தாச் சரி

:)

Guna said...

ஷில்பா ஷேட்டியீன் யோகா குருந்தகுடு பார்த்து உண்டா. பரவச நிலை உடனே கிட்டும் யோகா செய்யாமலே. :)

கவர்ச்சியும் யோகாவும் கலந்த கலவை. :)


இந்த கலியுகத்தில் யோகாவும் வேண்டாம். குண்டலினியும் வேண்டாம்.

யமம் , நியமம் ஆகியவற்றின்படி வாழ்தலே போதும். யோகத்தின் ஆரம்ப நிலை யமம் , நியமம் ஆகும். இதற்கு அப்புறமே ஆசனமும் அடுத்த கட்டங்களும் பயல வேண்டும்.

யமம் , நியமம் என்பது வாழ்கை முறையாகும். யமம் , நியமம் இல்லாமல் யோகங்கள் பலனிக்காது, குண்டலினியும் கிட்டாது.

எந்த யோகா ஆசிரியர் யமம் , நியமம் ஆகியவற்றை வலியுறுத்துகிறார்.

யமம் , நியமம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆன்மிகவாதிகள்/யோகவதிகள் முற்றிலும் மறந்துவிட்டனர்.

http://blogya.in

Joe said...

ஒரு சில எழுத்துப் பிழைகளை தவிர்த்து பார்த்தால், நல்லதொரு பதிவு.

நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால், இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

ஷண்முகப்ரியன் said...

SWAMIJI,I NEVER READ SUCH AN ANGRY ARTICLE FROM YOU.THE CHEATERS OF YOGA SPOILED EVEN YOUR NATURAL HUMOUR.MY TAMIL FONT IS NOT AVAILABLE.

Geekay said...

“In your yoga teaching there is no spicy things"

:-))

RAHAWAJ said...

ஓம்கார் அவர்களே,நல்ல விளக்கம்,யோகாவிற்க்கும்-ஆசனத்திற்கும் வேறுபாடு தெரியாமல் எவ்வளவு தவறுகள் நடக்கிறது,நான் வசிக்கும் இடத்தில் கூட சீனர்கள் யோகா என்ற பெயரில் ஆசனம் சொல்லிதருகிறார்கள்,யோகத்தின் தந்தை பதஞ்சலி சூத்திரத்தில் கூட அவர் இறைவன் என்று சொல்லும் இடங்களில் அது நாம் தான் என்ற எண்ணம் வேண்டும்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அருப்புக்கோட்டை பாஸ்கர்,

ராமச்சந்திர மிஷன் மட்டுமல்ல அனேக யோக கேந்திரங்கள் ராஜயோக பயிற்சி அளிக்கிறார்கள்.

தனி ஒரு யோக பயிற்சி பள்ளியை விமர்சிப்பது எனது நோக்கமல்ல.

எங்கே பயிற்சி எடுத்தாலும் அவர்களின் சூழலை ஆராயவும். சரியாகப்பட்டால் பயிற்சி எடுக்கவும்.


திரு அப்துல்லா அண்ணே,

கோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...!

இதை எழுதும் பொழுது எனக்கு பரிதாபமே வருகிறது.

திரு குணசீலன்,

இந்த பதிவுக்கு நீங்கள் சொன்ன ஷில்பா ஷெட்டி ஒரு காரணம்.

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு Joe,
உங்கள் கருத்துக்கு நன்றி. எழுத்து பிழையை பொருத்தருள்க.

திரு ஷண்முகப்ரியன்,

எனது கோபம் என்பதை காட்டிலும் நல்ல ஒருவிஷயம் அசிங்கப்படுகிறதே எனும் ஆதங்கம் தான் இந்த கட்டுரை. மேலும் நான் சொல்ல நினைத்தவைகளில் 10% தான் கூறி இருக்கிறேன். சில தவறான யோக முறைகளை சுட்டிகாட்டி தவறானவற்றிக்கு எதற்கு விளம்பரம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

திரு Geekay,
உங்கள் வருகைக்கு நன்றி


திரு ஜவஹர்,

இவர்களின் முக்கிய இடமே, யோகத்தை பற்றி தெரியாத மக்கள் தான்.

முஹமதியர்களும், பெளத்தர்களும் வழக்கமாக வழிபடும் பொழுது இருக்கும் நிலையே வஜ்ராசனம் தான் அதற்கு மேல் ஆசனம் தேவை இல்லை என சொன்னால் என்னை முட்டாள் என்பார்கள் :)

Indira said...

யாரைத்தான் நம்புவது, எப்படித்தான் கற்று கொள்வது...?

TKB காந்தி said...

உங்கள் சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன் நல்ல முயற்சி. கூகிளில் yoga new york என்று தேடிப்பாருங்கள். முதலில், Local business results for yoga near New York, NY என்றுதான் வருகிறது.

உங்களின் நகைச்சுவை அருமை “Age: 108”

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இமாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்//

அவர் பக்த கோ(கே)டிகள் ஆட்டோ அனுப்பப் போகிறார்கள்.
இன்றைய உண்மை நிலை பற்றி அருமையாகக் கூறியுள்ளீர்கள்.இங்கே இப்போ
அமோகமாக விற்பனையாகிறது.
அதுவும் நம்ம கோவில்களிலும் பக்க(பக்கா) வியாபாரமாக்க முயற்சிகள்
நடக்கிறது.

graphpapersurvey said...

idhai ungalaal seya mudiyaadhu http://tinyurl.com/ctnoky

Mahesh said...

கல்வி, மருத்துவத்துக்கு அப்பறம் நல்ல லாபகரமான தொழில் "யோகா"

நாலு யோகாசனங்களை rehash பண்ணி package பண்ணினா பவர் யோகா, ஸ்பீட் யோகா, ப்ரெய்ன் யோகா, ட்ருயோகா........ என்ன கஷ்டகாலம்டா சாமி?

அமர பாரதி said...

யோகா மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது என்பது உண்மைதான்.
ஹதயோக பரதீபிக்கா நூல் எங்கு கிடைக்கும் என்று கூற முடியுமா?

நிகழ்காலத்தில்... said...

தங்கள் இடுகையில் எனக்கு பல ஆட்சேபனைகள் உள்ளன. நாளைக்கு இடுகையாகவே இட்டுவிடுகிறேன்.
இப்போதைக்கு வாழ்த்துக்கள்.

அறிவே தெய்வம்

கோவி.கண்ணன் said...

//அறிவே தெய்வம் said...
தங்கள் இடுகையில் எனக்கு பல ஆட்சேபனைகள் உள்ளன. நாளைக்கு இடுகையாகவே இட்டுவிடுகிறேன்.
இப்போதைக்கு வாழ்த்துக்கள்.

அறிவே தெய்வம்
//

நண்பர் அறிவே தெய்வம், நான் எதிர்பார்த்தேன் !
:)

குடுகுடுப்பை said...

அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் யோக பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் இமாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்.

வாருங்கள்.....நாமும் கேப்பையில் நெய் வடியச் செய்வோம்...!

//
இங்கே நல்லா வியாபாராம் ஆகுது,
பயங்கர கோபமா இருப்பீங்க போல பேசமா என்னோட யோகா கிளாஸ்ல சேந்து கோபத்தை குறைக்கவும்
ஜெய் ஜக்கம்மா

புருனோ Bruno said...

//இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.//

ஹி ஹி ஹி

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி பதிவில் 100 ஆவது பாலோயர்.......
வாழ்த்துகள் ஸ்வாமி.

sundaresan p said...

வணக்கம் சுவாமி

//இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.//

அமாம் சுவாமி புதிதாக யோகா ,தியானம் செய்தல் இப்படி தோன்றும்
வெகுளி தனமாக பேசினால் உங்களுக்கு கோவம் வந்துவிடுகிறது .

Vishnu - விஷ்ணு said...

//எனக்கு தெரிந்து இது போன்ற யோகபயிற்சியில் மனநிலை தவறியவர்கள் அதிகம். ஒரு குருவிடம் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு நேரும் மாற்றத்தை கவனித்து வழிநடத்துவார். இவர்கள் யோக பயிற்சியில் ஒரு மணி நேரம் கற்றுக்கொண்டு பிறகு குருவை வந்து சந்திர்ப்பதே இல்லை. //

அவர் தான் வேறு ஒரு நாட்டுக்கு சொல்லி குடுக்க போயிருவாரே அப்ப எப்படி பாக்குறது. யோகவினால் மனநிலை பாதிக்கபட்டவர்களை காட்டிலும் பொய்யான ஜோதிடர்களினால் கிறுக்கு பிடித்து அலைபவர்கள் அதிகம்.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இந்திரா

சரியான வழிகாட்டியை அணுகிவிட்டோம் என உங்கள் உள் நிலையே சொல்லும். யாரும் தேவை இல்லை.

திரு TKB காந்தி,

எந்த விஷயத்தை போட்டாலும் பிசினெஸ் என்றே காட்டும் அது கூகுளின் அமைப்பு.
உங்கள் வருகைக்கு நன்றி

திரு யோகன் பாரிஸ்,

வேறு மீடியாக்களில் அவர்களை நான் வாரிய வாருக்கு இன்நேரம் அவர்கள் லாரியே அனுப்பவேண்டும். :)
உங்கள் வருகைக்கு நன்றி

திரு மகேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி

திரு அமர பாரதி,

விவேகானந்தா கேந்திரா, பீகார் ஸ்கூல் ஆப் யோகா போன்ற அமைப்புகள் ஹதயோகா பரதீப்பிக்காவை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அதன் மூல உரையை படித்தீர்கள் என்றால் மட்டுமே சிறப்பு. காரணம் விளக்க உரையில் மொழிபெயர்ப்பாளரின் சரக்கும் கலந்திருக்கும்.

திரு அறிவே தெய்வம்,
உங்கள் ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் வருகைக்கு நன்றி

திரு குடுகுடுப்பை,

என்னிடமே தொழிலா :)
உங்கள் வருகைக்கு நன்றி

திரு கோவி.கண்ணன்,
கவனப்படுத்தியதற்கு நன்றி. :) சதம் அடித்தாகிவிட்டது.

திரு சுந்தர் ,

வெகுளியாக அவர்கள் கேட்பதில்லை. தங்களுக்குள் ஏதாவது நிகழ வேண்டும் என தங்களையே ஏமாற்றி கொள்கிறார்கள். அதற்கு நான் துணை போகக்கூடாது அல்லவா?

“ஒருவருக்கு ஏதாவது நிகழ்தால் அவர் சொல்லாமலே குருவுக்கு தெரிந்துவிடும். ”

திரு விஷ்ணு,

ஒரு ஜோதிடரிடம் அதிகபட்சம் ஒரு நபர் மட்டுமே பேச முடியும். யோக வகுப்பில் ஒரே நேரத்தில் நூற்றுக்கனக்கானவர்கள் இருக்கிறார்கள். புள்ளிவிபரப்படி யோகாவில் எண்ணிக்கை அதிகம் :)

உங்கள் வருகைக்கு நன்றி

Ramachandranusha said...

தெரிஞ்சவங்க, ஒருத்தர் முதல்ல டீவி புகழ் ஆசிரியரிடம் ஆசனங்கள் கற்றுக் கொண்டார்.
பிறகு மனைவியும் கற்றுக் கொள்ள இருவரும் சேர்ந்து இப்பொழுது "யோகா கிளாஸ்" ஆரம்பித்து
விட்டார்கள். ஐயா வேலைக்கும் சென்று கிளாசும் எடுக்கிறார். அம்மா வி ஆர் எஸ் வாங்கி
முழு நேர யோகா கிளாஸ் பிசினஸ். இதில் கூத்து என்னவென்றால் பன்னிரெண்டு வயது பெண் அவர்களுக்கு இருக்கிறது. தாயும் தந்தையும் பிசி என்றால், இந்த பெண் அன்று யோகா டீச்சராகிவிடும் . என்னத்த சொல்ல :-(

Anonymous said...

மக்களுக்கு எல்லாமே எளிதாக உடனடியாக வேண்டும், அதிலும் அமெரிக்காவில் இருப்பவர்குளுக்கு ஒரு நொடியில் எல்லாம் வேண்டும். அமெரிக்காவில் நான் இருக்கும் ஊரில், ஒரு ஹிந்து கோவில் உள்ளது. அங்கே, இலவசமாக யோகா ஆசனங்களை கற்று தருகிறார் குரு ஒருவர். அதே ஊரில் ஒரு சித்தி யோகா ச்டுடயோ என்று ஒன்று உள்ளது. இதில் எது பிரபலமாக இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். They call it the Spirituality industry here with an annual turnover of 1.6 billion dollars almost. Apparently, people here think that something that is free is always of low quality and the more expensive it is, with all the additional facilities like Steamed rooms, personal locker, spa and other luxuries is always better. I can't help but laugh.

sakthi said...

ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.

இதே கேள்வி தான் சுவாமிஜி

அடிக்கடி