புராணங்களில் ஒரு காட்சி வரும். மேரு மலையை மத்தாக கொண்டு பாற்கடலை கடையும் காட்சி தான் அது. ஒரு புறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் கடைந்து அதிலிருந்து அமுதம் எடுப்பார்கள். அமுதம் அல்லது அமிர்தம் என்றால் இறப்பற்ற நிலை என பொருள். அசுரர்களுக்கு அவை கொடுக்கப்பட்டால் இறப்பற்ற நிலையில் பலருக்கு துன்பம் விளைவிப்பார்கள் என அமுதம் தேவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதாக நாம் புராணங்களில் காணலாம்.
புராணங்களில் குறிப்பிடும் விஷயங்கள் மேருண்மையை எளிய வடிவில் குறியீடுகளாக சொல்பவை ஆகும். உதாரணமாக சந்திரனுக்கு 27 மனைவிகள் என்றும் ஒரு மனைவி வீட்டில் ஒரு நாள் இருப்பார் என்றும் கூறுகிறது புராணங்கள். இதன் அடிப்படையை உணராமல் மேலோட்டமாக பார்த்தால் சந்திரன் பல பெண்களை மணந்தவர் என அர்த்தம் கொள்வோம். உண்மையில் சந்திரன் தினமும் ஒரு நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரங்களை வானத்தில் கடக்கிறார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இவ்வகையான பெரும் உண்மைகளை கதை வடிவில் நமக்கு கடத்துவது புராணம்.
இந்த பாற்கடலை கடையும் தன்மை அதுபோல ஒரு குறியீடு என அறிந்துகொள்ள வேண்டும். பெளதீகமான எந்த ஒரு பொருளின் உள்ளேயும் ஒரு சக்தி உண்டு. அந்த சக்தியை சில தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரகிக்கும் திறன் மனித இனம் பெற்றிருந்தது. எந்த ஒரு பொருளையும் நீராவியாக்கி வடிகட்டும் திறனை இந்த பாற்கடல் விஷயத்துடன் ஒப்பிடலாம். இதற்கு அர்க் முறை என பெயர்.
நெருப்பில் ஒரு பொருளை காய்ச்சி அதன் நீராவியை குளிர்வித்து அதன் சத்தை மட்டும் எடுக்கும் முறையை அர்க் செய்தல் என்பார்கள். வேதகாலத்தில் ரிஷிகள் ஒரு பொருளை உட்கொள்ளும் பொழுது அதன் சக்தியை மட்டும் கிரகிக்கும் தன்மையை அறிந்து இருந்தார்கள். அவர்கள் கட்டறிந்த முறையே இந்த அர்க் ஆகும்.
நெருப்பு அசுரர்கள் போன்ற அழிக்கும் தன்மை கொண்டது, குளிர்விக்கும் நீரானது தேவர்கள் போன்றது. இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இரண்டுக்கும் இடையே அமுதம் உருவாகிறது.
பசுவின் சிறுநீரில் பிரபஞ்ச ஆற்றல் எனும் ப்ராண சக்தி அதிகமாக இருக்கிறது. சிறுநீர் ஸ்தூலமான பொருள் , ப்ராணன் சூட்சமமானது. பசுவின் சிறுநீர் (கோமியம்) அர்க் எனும் முறையில் அதன் உட்பொருளான ப்ராணனை மட்டும் தனியே பிரித்தெடுத்து கசடுகளை நீக்கினால் நமக்கு அமிர்தமாக கிடைப்பது கோ அர்க் எனும் திரவம்.
பசுவின் சிறுநீரில் பல நுண்பொருட்கள் மற்றும் உப்புகள் உண்டு அவை அர்க் முறையில் நீங்கி நமக்கு மிகவும் தூய்மையான திரவம் நீர் போன்று அதன் சக்தி மட்டும் கிடைக்கிறது. நவீனமாக சொல்வது என்றால் ஒரு லிட்டர் சிறுநீரில் 10 மில்லி லிட்டர் சக்தி இருப்பதா கொண்டால் தினமும் நமக்கு 30 மில்லி லிட்டர் சக்தி வேண்டும் என்பதற்காக மூன்று லிட்டர் பசுவின் சிறுநீர் குடிக்க முடியாது அல்லவா? அதனால் அந்த 30 மில்லி லிட்டர் அளவு காய்ச்சி அதன் சக்தியை மட்டும் வெளியே எடுத்து வைத்தால் அதுவே கோ அர்க்.
வேதகாலத்தில் அதிகமாக பயன்படுத்தபட்ட கோ அர்க் எனும் இந்த பானம் நாளைடைவில் நம் கலாச்சாரத்தில் இருந்து காணாமல் போனது. மேலும் பல அசுரர்கள் இந்த அமிர்தத்தை குடித்ததும் இந்த திரவம் நம் கலாச்சாரத்திலிருந்து காணாமல் போகக்காரணம் என புரிந்துகொள்ளவேண்டும்.
மனித உடல் ஐந்து தளத்தில் செயல்படுகிறது. ஒவ்வொரு தளமும் கோசங்கள் என அழைக்கப்படுகிறது. அதில் சக்தி உடல் என்ற ப்ராண உடலை கோ அர்க் நேரடியாக தூண்டுகிறது. தினமும் கோ அர்க் குடிப்பதனால் ப்ராண உடல் இயல்பை விட பத்து மடங்கு அதிகமாக வேலைசெய்யும்.
என்ன பசுவின் சிறுநீரை குடிக்கனுமா?
இது குடிச்சா புற்று நோய் குணமாகும்னு சொல்றாங்களே...?
இப்படி பல்வேறு கேள்விகள் நம்மிடம் உண்டு அவற்றை அடுத்த பகுதியில் விளக்குகிறேன்.
0 கருத்துக்கள்:
Post a Comment