பசுவின் சிறுநீரில் அதிக ப்ராண சக்தி இருக்கிறது என்பதை பல்வேறு வகையில் நாம் ஆய்வு செய்ய முடியும். ஏதோ ஒரு கருவியை வைத்து ஆய்வு செய்வதை விட நம் உட்கொண்டு நம் சக்தி நிலையில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் உணர்லாம். ஒரு மணி நேரம் தொடர்ந்து ப்ராணாயாம பயிற்சி செய்த பிறகு மனமும் உடலில் எவ்வளவு புத்துணர்வுடன் இருக்குமோ அத்தகைய புத்துணர்வை கோஅர்க் குடித்தவுடன் உணர முடியும். ஆன்மீக சாதகர்கள் தினமும் அருந்துவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியை மிக விரைவாக அதிகரிக்க உதவும். நம் உடலின் ப்ராண சக்தியை புறப்பொருளான கோ அர்க் கொண்டு தூண்டுவது என்பது ஆன்மீக மரபில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையாகும்.
ப்ராண உடலில் ஏற்படும் தடுமாற்றம் நமக்கு உடலில் நோயாகவும் மனதில் சிந்தனை குறைபாடு மூலமும் வெளிப்படுகிறது. யோக பயிற்சிகளான ஆசனம், ப்ராணாயாமம் போன்றவை செய்வதன் மூலம் ப்ராண உடலை நிர்வகிக்கலாம். ப்ராண உடல் நன்றாக இருப்பதால் நோய் வராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் யோக பயிற்சின் நோக்கம் நோய் இல்லாமல் இருப்பது அல்ல. பதஞ்சலி அஷ்டாங்க யோகத்தில் சொல்வதை போல சமாதி என்ற உயர் ஆன்மீக நிலையை நோக்கி செல்வதே யோக பயிற்சியின் நோக்கமாகும். ஆனால் இங்கே சிலர் யோக பயிற்சியை தெரபி போன்ற நிலையில் மருந்தாக பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். முதுகுவலியா தனுராசனம் செய், ஆஸ்துமாவா ப்ராணாயாமம் செய் என தற்காலத்தில் யோகாவை சிகிச்சை பொருளாக்கி மருந்தாக வியாபாரம் செய்கிறார்கள். உடல் நோய் குணமாவது ப்ராண உடல் சமநிலை அடைவதால் ஏற்படும் நன்மைகளில் ஒன்று, இதுவே யோகத்தின் நோக்கம் இல்லை.
யோக மரபு அறியாமை என்ற நோயை தீர்க்கும் மருந்து , நம் தெளிவற்ற வாழ்க்கை முறையால் உடலில் ஏற்படும் நோய்க்கு மருந்து அல்ல. தற்சமயத்தில் யோக முறை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறதோ அதுபோலவே கோஅர்க் மருத்தாக மட்டும் பார்க்கப்படுகிறது..!
நவீன அறிவியலில் பாக்டீரியா போன்ற ஏதோ ஒன்றை ஆய்வு செய்து கோ அர்கில் எதிப்பு சக்தி அளிக்கும் பாக்டீரியா அதிகம் இருக்கிறது சொல்கிறார்கள். உடலில் இருக்கும் செல்லில் புதிய சக்தியை அளித்து இறந்த செல்களை புதுப்பிக்கிறது என ஆய்வு செய்திருக்கிறார்கள். இதுவா கோ அர்கின் பலன்?
கோ- அர்க் என்ன தான் செய்யும்?
கூறுகிறேன் கேளுங்கள்...
- தினமும் கோ அர்க் அருந்துவதால் உடல் மற்றும் மனம் உயர் அதிர்வு நிலைக்கு செல்கிறது.
- நீங்கள் இயல்பு மனித நிலையில் இருந்து அடுத்த பரிணாமம் கொண்ட மனிதனாக மாற்றம் அடைய துவங்குவீர்கள்.
- சித்தனை திறன் மிகவும் புதிய வடிவில் இயங்கும்
- இயற்கை பகுதிகளான நம்மை சுற்றி இயங்கும் அனைத்தும் நம்மில் ஒரு பகுதியாக உணர்வோம்.
- சோர்வு குறைந்து உடல் மிகவும் ஆற்றலுடன் இருக்கும். தூங்கும் நேரத்தில் ஆழ்ந்த தூக்கமும், பிற நேரத்தில் மிகவும் விழிப்புடனும் இருப்பீர்கள்.
- உடலில் ப்ராண சக்தி அதிகரிப்பதால் கவன சிதறல் இருக்காது, ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- ப்ராண உடலில் விழிப்புணர்வு நிலை உருவாகிறது , இதனால் அதிக நேரம் சுஷ்மணா நாடி வேலை செய்யும்.
இத்தகைக பயன்மிக்க கோ அர்க் எப்படி தயாரிக்கப்படுகிறது?
எங்கே கிடைக்கும்?
அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோம்.
0 கருத்துக்கள்:
Post a Comment