Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, June 5, 2009

பதிவுலக மேனியாமேனியா என்ற வார்த்தையை பார்த்ததும் ஏதோ மனோதத்துவ விஷயம் என நீங்கள் நினைத்தால் , நீங்கள் தப்பான இடத்திற்கு வந்ததாக அர்த்தம்.


மேனி என்ற தமிழ் வார்த்தைக்கு உடல் என அர்த்தம். பதிவுலகின் உடல் முழுவதும் இந்த விஷயம் பீடித்திருப்பதால் இதை “மேனியா” என கூறிகிறேன். கடந்த பத்து நாட்களாக பன்றிக்காய்ச்சலை விட ஒரு மகாவியாதி பதிவுலகை ஆட்டிப்படைக்கிறது. ஆம் அது தான் தொடர்பதிவு காய்ச்சல்.

யாரோ ஒரு மஹானுபாவலு இதை தொடங்கி வைத்தாலும் வைத்தார் நம் மக்கள் அதை பொங்கல் கரும்பு போல கடித்து மென்று சுவைக்கிறார்கள்.

ஆரம்பித்தது சில எளிய பதிவர்களிடம் என்றாலும் அது பரவிய வேகம் அதிகமே. மெல்ல பிரபல பதிவர்களை வந்து அடைய துவங்கி உள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகள். உதாரணம் வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? பதில் எழுதும் பொழுது என்ன நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள்.

என்ன கேள்வி இது சாமி? முடியல. இதை தெரிஞ்சு என்ன செய்ய போறாங்களோ.

ஒன்று இரண்டல்ல 32 கேள்விகள். ஸ்ப்ப்பா....

அலுவலகத்தில் ரொம்ப பிஸி பதிவு போடவே வரமுடியரது இல்லை என்ற பதிவர்கள் எல்லாம்... இரவு இரண்டு மணிக்கு உட்கார்ந்து இதற்கு பதில் எழுதுகிறார்கள். இது என்ன IAS எக்ஸாமா?

தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை இவர்களிடமிருந்து தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் உச்சக்கட்டம் ஒரு பதிவர் மூன்று பேரை அழைக்கவேண்டுமாம். இதில் MLM வேறு.

சிலர் யாரையும் அழைக்கவில்லை. அதற்கு ஒரு பதிவர் பின்னூட்டத்தில்
“நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு நான் எழுதவா என்கிறார்” :)

இதற்கெல்லாம் மேல் ஒருவர் சாதனை செய்திருக்கிறார். 32 கேள்விக்கும் ஒரு முறை பதில் சொன்னாலே கண்ணை கட்டும். அவர் இரண்டு முறை வெவ்வேறு விதமா பதில் சொல்லி தனது பதிவு வறட்சியை தனித்துள்ளார்.

(நேற்று) இப்பொழுது ஒரு பதிவரை சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு சென்னையிலிருந்து அழைப்பு. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் மறக்காம பதில் சொல்லுங்க என்று. இரண்டு பதிவர்களும் அரோக்கியமான நல்ல விஷயங்களை நீயா நானா என போட்டி போட்டு பதிய கூடியவர்கள். இவர்களுக்கு எதற்கு இந்த விளையாட்டு ?

இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.

கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.

இன்று உலக சுற்றுசூழல் தினம். இவர்களின் தொடர்பதிவுகள் அச்சு பிரதியாக வந்திருந்தால் இவர்களை போட்டுத்தாக்கும் மாவோயிஸ்ட் தலைவனாக மாறி இருப்பேன். காரணம் அத்தனை மரங்களை அழித்து காகிதம் உற்பத்தி செய்து அதில் தொடர்பதிவு எழுதினால் பூமி சூடாகாதா?

வலையில் எழுதினாலும் கணினி மின்சாரம் இதனால் பூமி சூடாகும். என்ன செய்வது யாரும் தொடர்பதிவு வேண்டாம் என சொல்லுவதில்லையே..

நீ மட்டும் இதற்காக ஒரு பதிவு எழுதி பூமியை வெப்பமடைய வைக்கவில்லையா என கேட்கலாம். இதையெல்லாம் படித்து எனது தலை சூடாவதை காட்டிலும் இந்த பதிவு ஏற்படுத்த போகும் சூடு குறைவுதான். :)

எழுத்து வறட்சி கேள்விபட்டு இருக்கிறேன் அதற்காக இப்படியா..

இப்படிக்கு
ஆரோக்கியமான வலைபதிவுகளை ஏதிர்பார்த்து

ஏமாந்த சாமானியன்

டிஸ்கி 1 : இந்த இடுக்கையில் குறிப்பிட்ட பதிவர்கள் யார் என கிசுகிசுக்க வேண்டாம் :). அவர்களாகவே பின்னூட்டம் இடுவது நல்லது :)

டிஸ்கி 2 : என்னை பற்றி “அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.”
என்று சொன்ன நண்பர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இந்த மொக்கச்சுவை பதிவை சமர்ப்பிக்கிறேன். (மொக்கை+ நகைச்சுவை = மொக்கச்சுவை) :)

27 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//விளக்கம் தொடர்பதிவு கண்டனம், பதிவர் வட்டம், மொக்கச்சுவை //

:)

இதன் மூலம் தாங்கள் சொல்லவருவது யாதெனில் தொடர் பதிவு எழுதினால் மறக்காமல் அழைப்பு அனுப்புங்கள் என்பதை !
:)))))))

கோவி.கண்ணன் said...

//"பதிவுலக மேனியா"//

என்ன ஸ்வாமி,

இன்னிக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பதிவு கடை போட்டு இருப்பவங்களும் இருக்காங்க, மேட்டர் கிடைப்பது பெரும் பாடாக இருக்கு. அப்படி எழுதிட்டுப் போகட்டுமே.

போனியாக வேண்டாமா ?

கோவி.கண்ணன் said...

//இன்று உலக சுற்றுசூழல் தினம். இவர்களின் தொடர்பதிவுகள் அச்சு பிரதியாக வந்திருந்தால் இவர்களை போட்டுத்தாக்கும் மாவோயிஸ்ட் தலைவனாக மாறி இருப்பேன்.//

கொல வெறி !!!!!!!!!!!!

ஸ்வாமி ஓம்கார் said...

வாங்க மொ.ப. சங்க தலைவரே..

//போனியாக வேண்டாமா ?//
போனியான தப்பில்லை மேனியா ஆனா தப்பு.

இன்னைக்கு எனக்கு மேட்டர் கிடைக்கல.. பதிவு போடாமலா இருக்கோம் :)

Raju said...

:))))

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...

நம்ப முடியவில்லை.

உங்களுக்கு பதிவு போட கிடைக்கும் அளவுக்கு எனக்கு கிடைப்பதில்லை.

அதனால் தான் நீங்கள் ஸ்வாமியாக இருக்கின்றீர்கள்... நாங்க எல்லாம் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டு இருக்கின்றோம்...

வால்பையன் said...

நீங்கள் கண்ணாடி அணிபவரா என்ற கேள்வியெல்லாம் இருக்கு?

விட்டா தூரப்பார்வையா, கிட்டப்பார்வையான்னு கேட்பாங்க!

ஒருவேளை நமக்கு பொண்ணு கிண்ணு கொடுப்பாங்களோ!
ஒன்னும் புரியல!

வால்பையன் said...

//இன்னிக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் பதிவு கடை போட்டு இருப்பவங்களும் இருக்காங்க, மேட்டர் கிடைப்பது பெரும் பாடாக இருக்கு. அப்படி எழுதிட்டுப் போகட்டுமே.//

அம்புட்டு தானே இவரும் அதை தானே பண்ணியிருக்கார்!

எழுதனும் இல்லைன்னா மறுப்பு சொல்லனும்

எப்படியோ ஒரு பதிவு ஆச்சுல்ல!

♫சோம்பேறி♫ said...

ஸ்வாமி! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. தமிழ் மணம் வெட்டு ஒட்டுகளுகளுக்கு தடா போட்டு விட்ட நிலையில், பதிவோமேனியா தொடரோமேனியாவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மருத்துவர் ருத்ரன், குளோபனைத் தொடர்ந்து நீங்களும் பதிவோமேனியாவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். உங்களைத் தொடர்ந்து நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு பதிவோமேனியாவைப் பற்றி நான் எழுதவா? :-)

(சும்மா லுலுலாகாட்டிக்கும்.. சீரியஸா எடுத்துக்காதீங்கோ)

/* தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை */

கலை எவ்வடிவில் இருந்தாலென்ன.. ரசனைக்குரியதாக இருந்தால் சரி..

வாழவந்தான் said...

//
இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.

கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.
//
போச்சுடா இனி என்னத்த சொல்ல?
இப்ப மேனியாவ பத்தி எழுத அரம்பிப்பாங்களே...

இரும்புத்திரை said...

//கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.//

கோபத்திற்கு பதில் சிரிப்பு வந்தது என்றால் - இப்படி துவங்கி இருந்தால் எனக்கு பொருந்தும் .

//இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.//

இந்த வாக்கியம் பொருந்த எனக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ தெரியல .

//தங்களின் சுயசரிதையை கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் எழுதும் கலையை இவர்களிடமிருந்து தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.//

சுவாமி இப்பவாது உண்மைய சொல்லுங்க அந்த 32 கேள்விக்கு பொய் சொல்ல முடியாம தானே இந்த தொடர்பதிவ போட்டு இந்த தாக்கு தாக்குறிங்க ?

//சிலர் யாரையும் அழைக்கவில்லை. அதற்கு ஒரு பதிவர் பின்னூட்டத்தில் “நீங்க அழைச்சதா வைச்சுக்கிட்டு நான் எழுதவா என்கிறார்” :)//

அப்படியாவது ஒரு உருப்படியான பதிவு எழுதனும் என்ற ஆசையில் கேட்டு இருப்பார் .
நீங்க டிஸ்கி 1ல சொன்னபடி நான் பின்னூட்டம் போட்டாச்சு

பயங்கரம் + மொக்கை = பயங்கரமொக்கை ஆனா நல்லா இருந்துச்சு .

வெற்றி-[க்]-கதிரவன் said...

பிடித்த நிறத்தை வைத்து அவரது குணத்தை ஓரளவுக்கு சொல்லமுடியும் என்பது என் கருத்து

//இதை நான் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தொடர்பதிவு எழுதியவர் என்று அர்த்தம்.

கோபம் வரவில்லை என்றால் நம்மையும் யாராவது கூப்பிடுவார்கள் என்ற ஆர்வத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதற்கெல்லாம் பதிவு எழுத வத்துட்டாரு என நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வலையில் ஏதோ உருப்படியாக தேடுகிறீர்கள் என அர்த்தம். வாழ்த்துக்கள்.
//

-:)-:)-:)

நிகழ்காலத்தில்... said...

//என்னை பற்றி “அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.” என்று சொன்ன நண்பர் சிவசுப்ரமணியம் அவர்களுக்கு இந்த மொக்கச்சுவை பதிவை சமர்ப்பிக்கிறேன். (மொக்கை+ நகைச்சுவை = மொக்கச்சுவை) :)//

சமர்ப்பணத்தை மிகுந்த மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன்.

நான் சொன்னதை நிரூபித்ததற்க்கும்
நன்றி :)

தீப்பெட்டி said...

:)))

Anonymous said...

சுவாமி, பலமுறை எனக்கும் தொடர்பதிவு அழைப்பு வரும். விருப்பம் இருந்தால் அதை நகைச்சுவையோடு மாத்தி எழுதுவேன், இல்லாவிட்டால் அமைதியாக மறுப்பு தெரிவித்து விடுவேன். இதுதான் இந்த காலத்து பதிவு உலக கலாசாரம்.

selventhiran said...

ஹா.. ஹா சுவாமிஜி நீங்கள் இப்படிப் போட்டுத் தாக்குவீர்கள் என்று தெரிந்திருந்தால் போனையே எடுத்திருக்க மாட்டேன்.

'தொடர்பதிவுத் தொற்று' இன்று நேற்றல்ல... வெகுகாலமாக வெவ்வேறு பெயர்களில் பரவுவதுதான். என்னதான் உடன்பாடு இல்லையென்றாலும் அன்பானவர்களிடத்தில் அடங்கிப் போவதுதானே முறை. அதாங்.

சென்ஷி said...

சோம்பேறி பின்னூட்டம் போட்ட வரைக்கும் ஓக்கே.. அடுத்ததா உங்களை கலாய்ச்சு பதிவை போட்டுடப் போறாரு :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு டக்ளஸ்,
திரு இராகவன்,
திரு வால்பையன்,
திரு சோம்பேறி,
திரு வாழவந்தான்,
திரு அரவிந்த்,
திரு பித்தன்,
திரு நிகழ்காலம்,
திரு தீப்பெட்டி,
திரு மதுரைவீரன்,
திரு செல்வேந்திரன் - அப்படிவாங்க வழிக்கு.. :)
திரு ஷென்ஷி,

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

//இப்படிக்கு
ஆரோக்கியமான வலைபதிவுகளை ஏதிர்பார்த்து
ஏமாந்த சாமானியன்//

நன்றி மீண்டும் வருகின்றேன்...

புருனோ Bruno said...

சாமி

எனக்கு இது (தொடர் பதிவு) ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமாக தெரியவில்லையே !!

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் - நான் பதிவு போட்டுட்டேன் - ஏன்னா கூப்டது ஒரு அன்பான நட்பான பையன் - வன் மனசு கோணக்கூடாது என்பதற்காக - வேறு காரணம் ஒன்றுமில்லை.

புரிகிறது - தேவையா என்று - தேவை இல்லைதான் - ஆனால் கடைகாத்தாடக்கூடாதே ! ஏதாவது எழுதுவோம் - ஒரு 20 / 30 மறுமொழி வரட்டும் - ம்ம்ம்ம்ம்

இருப்பினும் சிந்திக்க வேண்டியதுதான்

Sanjai Gandhi said...

அட என்ன ஸ்வாமி.. இதெல்லாம் நண்பர்களுக்காக எழுதறது தான். உங்களைப் போன்ற சிலருக்கு எழுத நெறைய விஷயம் இருக்கு. ஆனா என்னை மாதிரி மொக்கை பார்ட்டிங்களுக்கு? :)

எங்களுக்கெல்லாம் வலைபப்திவு என்பது ஓரளவு நம்பிக்கையான சோசியல் நெட்வெர்கிங் தளம். :) அவ்வளவே. நாங்க எல்லாம் இப்படித் தான் ஒப்பேத்துவோம். எவ்ளோ பேர் இதை குறை சொன்னாலும். :)

நாங்கள் நட்பு வளர்க்கும் தளத்தில் போடும் மொக்கைகளை எல்லாம் உங்களை போன்ற ஆக்கப் பூர்வமாக எழுதுபவர்கள் கண்டுக்கவேண்டாம் ஸ்வாமி.

நாங்க எல்லாம் எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வலைப்பூ ஆரம்பிக்கவில்லை. முழுக்க முழுக்க நட்ப்புக்காக மட்டுமே. ஆகவே, எங்களையும் எழுத விடுங்கள்.. :))

கடைசில என்னையும் பெரிய பின்னூட்டம் போட வச்சிட்டிங்களே ஸ்வாமி.. :((

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சஞ்சய்,

ஏன் டென்ஷன்? வை டென்ஷன் :) ?

நானும் சீரியசாய் பதிவு போட்டு போரடிச்சு ஒரு மொக்கை பதிவு போட்டால். அதுக்கு இவ்வளவு சீரியசான பின்னூட்டமா :)

குளிர் மனிதனே.. :) (cool man ;) )

Sanjai Gandhi said...

என்னாது சீரியசா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

நல்லா பாருங்க ஸ்வாமி.. வரிக்கு வரி ஸ்மைலி போட்டிருக்கேன்.. நிஜமா நான் சீரியசா பதில் சொல்லலை.. வழக்கம் போல ஜாலியா தான்.. :(((((((((((((((((((

Guna said...

சுவாமி, என்ன யாரும் கூப்பிடவேஇல்லையே!!!
'பதிவு வரச்சியால்' பதிக்க படுபவருக்கு, நல்ல(?) முதலுதவி இல்லையா.

இதேபோல் 'வருகையாளர் வரச்சிக்கும்' ஏதேனும் முதலுதவி(?) இருந்தால் நன்றாக இருக்குமே.

blogya.in

Guna said...
This comment has been removed by the author.
Guna said...

இதேபோல் 'வருகையாளர் வரச்சிக்கும்' ஏதேனும் முதலுதவி(?) இருந்தால் நன்றாக இருக்குமே.

Here is a solution:

http://www.blogya.in/paid-readers-to-increase-traffic-to-blog