Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, June 26, 2009

உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க..!

மக்களின் மூடநம்பிக்கைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் அதில் முதலில் நிற்பது மரணம் பற்றி யாரு ஒருவர் சொல்லும் செய்தி. மனிதன் நல்ல செய்தியை விட கெட்ட செய்தியை அதிகமாக நம்புவதற்கு அவனின் மனோபலம் (பலவீனம்) காரணம். குடுகுடுப்பைக்காரன் நல்ல செய்தியை சொன்னால் இயல்பாக எடுத்துக்கொள்ளும் மக்கள் கெட்ட செய்தியை சொன்னால் மனதில் பயம் ஏற்பட்டுவிடும்.

செய்வினை பற்றி என்னிடம் கேள்வி கேட்கப்படும் பொழுது நான் கூறுவதும் இது தான். இக்காலத்தில் மந்திர மாந்திரீகம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை, ஒருவரிடன் நீங்கள் இறக்க போவதாக சொல்லும் ஒரு வார்த்தை போதும் ஒரு வாரத்தில் அவர் வாழ்க்கை தலைகீழாக்கி விடும்.

உலகின் அனேக மதங்கள் மனிதனை பயத்தின் பிடியின் வைத்து அவனை நல்வழிப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் இந்த யுக்தி எல்லா காலத்திலும் பயன்படாது. மனிதன் தனது ஆன்மீக நிலையில் முன்னேறிவிட்டான் என்றால் அவனிடம் இது செல்லாது.

கைக்குழந்தைக்கு சோறு ஊட்டும் பொழுது நீங்கள் மூணுகண்ணன் வரான் என சொல்லலாம். அவன் இருபது வயது இளைஞன் ஆனதும் அவனிடம் மூணுகண்ணன் என்றீர்கள் எனில் அவன் உங்களை மருத்துவ மனையில் சேர்க்க வாய்ப்பு உண்டு. மதங்கள் மறைமுகமாக செய்த பயமுறுத்தலை சிலர் “யோகிகள்” என்ற பெயரில் நேரடியாக செய்கிறார்கள்.

மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதனால் தான் ஆங்கிலத்தில் அதை “FAITH" என்கிறார்கள். ஆனால் ஞானி, யோகி என கூறிக்கொள்ளும் சிலர் இதை செய்யும் பொழுது முற்றிலும் மனிதன் நம்பிக்கை இழக்க நேரிடும்.

ஒரு தனிநபரை பின்பற்றும் யோக கழகம் மாதப்பத்திரிகை ஒன்று நடத்துகிறது. அந்த தனி நபர் மீதும் அவரின் செயல் மீதும் எனக்கு எப்பொழுதும் அபிமானம் உண்டு. ஆனால் விஷயமோ அதில் சென்ற மாதம் வந்த கட்டுரை பற்றியது.

அந்த பத்திரிகையில் வந்த கட்டுரையின் சாரம் என்னவெனில் “2012ல் டிசம்பர் 12ஆம் தேதி உலகம் அழிந்துவிடும். கருப்பு சூரியன் என்ற ஒன்று தோன்ற இருக்கிறது. இரண்டு சூரியன் உதிக்கும் அன்னாளில் உலகம் அழியும். இதை நாசா விஞ்ஞானிகளுக்கு தெரிந்தும் வெளியிடாமல் இருக்கிறார்கள். பூமியிலிருந்து இடம் பெயர்ந்து செவ்வாய் கிரகத்திற்கோ, சந்திரனுக்கோ செல்ல விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள். உலகம் அழிய இன்னும் சில வருடமே இருக்கிறது என்பதால், புண்ணியம் செய்யுங்கள். எனது யோக முறை உங்களை நல்வழிப்படுத்தும்”.

யோகிகள் என்பவர்கள் யார் என அடையாளம் இன்னும் மக்களிடயே சென்றடையாததால் இப்படி பட்ட முட்டாள்களின் பேச்சை கேட்கவேண்டி இருக்கிறது. அவருக்கு ஆன்மீகமோ, நாசா பற்றியோ துளியும் தெரியவில்லை என்பது அவரின் கட்டுரையே சாட்சி. நவீன வானியலில் நாசாவிடம் பட்டம் பெற்றவனும், அவர்களிடம் பழகியவனும் ஆகிய எனக்கு அவர்களின் செயல் நன்றாக தெரியும். உலகுக்கு ஏதாவது கெட்ட விஷயங்கள் நடக்குமெனில் அதை தீர்க்க ஆராய்வதை காட்டிலும் மக்களிடையே பரப்பி பீதியை உண்டு செய்வார்கள். காரணம் அப்பொழுது தான் அவர்களுக்கு ஆராய்ச்சிக்கான பணம் கிடைக்கும்.

ஆனால் அந்த 'யோகி' சொல்கிறார் பல வருடங்களுக்கு முன்னே நாசா விஞ்ஞானிகளுக்கு
தெரியுமாம். ரகசியமாக ஆய்வு செய்தார்களாம். இவருக்கு மட்டும் அந்த ரகசியத்தை எந்த விஞ்ஞானி சொன்னாரோ...! என்ன கொடுமை இது?

பூமியின் வான்மண்டலத்தில் ஒரு வித காப்பு படலம் உண்டு. நேரடியாக எந்த வான் பொருளும் உள்ளே நுழைய முடியாது. பூமியின் சுற்றும் வேகத்திற்கு (30KM/hr) சுழன்று கொண்டே பூமியை சுற்றினால் வேண்டுமானால் தரை இறங்கலாம். எத்தனையோ செயற்கைகோள்கள் இவ்வாறு பூமியை அடையாமல் வான் வெளியில் சென்றதுண்டு. மேலும் விண் கற்கள் என எதுவும் விழுவதில்லை என்பதன் காரணமும் இதனால் தான். வான்காப்பு படலம் இல்லை என்றால் 24 மணி நேரமும் தலைகவசத்துடன் தான் நாம் உலா வர நேரிடும்.

ஏதோ வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர் மாயன் கலாச்சார நாள்காட்டியை பார்த்து 2012ல் ஏதோ அசம்பாவிதம் என கிளப்பிவிட்டது தான் உருமாறி இப்படி அலைகிறது. இதை கருத்தில் கொண்டுதான் நான் சிறுகதை வடிவில் மேற் சொன்ன கருத்தை பகடி செய்து எழுதினேன். வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர்களின் கற்பனை திறன் அலாதியானது. எகிப்து,இந்தியா மற்றும் சீனா பற்றி அவர்கள் சொன்ன கற்பனை கதைகள் ஏராளம். அவர்கள் சொன்னது தான் சரி என்பதை போன்ற வாதத்தை வைப்பார்கள்.

யுவான்சுவாங் போல ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் தனது பயணகட்டுரையில் இவ்வாறு எழுதினார். இந்தியாவின் தென்பகுதியில் பயணம் செய்யும் பொழுது ஒரு விசித்திரமான தண்டனை பெற்ற மக்களை பார்த்தேன். அவர்கள் ஆறு குளங்களின் அருகே இருக்கும் பாறைகளை துணியால் பிளக்க முயற்சி செய்தார்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் தென் இந்திய மக்கள் என்ன செய்தார்கள் என்பதும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளரின் அறிவு திறனும்...!


முழுமையான ஞானம் பெற்றவர் என கூறிக்கொள்பவர் இவ்வாறு அறைகுறை விஞ்ஞானிகளின் பின் பற்றி இத்தகைய பிரச்சாரம் செய்வது வெட்கக்கேடானது.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் என்னுடன் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு ஆன்மீக அமைப்பில் இணைந்திருந்தான். 2000 வருடம் ஆரம்பித்தவுடன் உலகம் அழிந்து சத்திய யுகம் என ஒன்று துவங்கும். அதில் புண்ணியம் செய்தவர்கள் மஹாராஜா, ராணியாக வாழ்வார்கள் என ஆன்மீக அமைப்பை சார்ந்தவர்கள் சொன்னதை கேட்டு தினமும் புண்ணியம் செய்கிறேன் பேர்வழி என படிப்பை விடுத்து வேறு பணிகளை செய்தான். கடைசியில் உலகம் அழியவில்லை. அவனின் படிப்பு தான் அழிந்தது. இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்கள் புண்ணியம் செய்கிறார்களா என தெரியவில்லை. அவர்களுக்கு சத்திய யுகத்தில் என்ன பதவி கிடைக்கும்?

இங்கே யாரையும் புண்படுத்தவோ கிண்டல் செய்யவோ இக்கருத்தை கூறவில்லை. மக்களை நல்வழிபடுத்த ஆயிரம் வழிகள் உண்டு. உங்களுக்கு ஏன் இந்த வழி என்பதே எனது கேள்வி. ஏதோ ஒரு மாதபத்திரிகையில் வந்த விஷயம் என இதை ஒதுக்க முடியவில்லை. காரணம் முதல் பத்தியில் சொன்னதை போல இத்தகைய விஷயங்கள் தான் விஷம் போல பரவும். உங்களிடம் இக்கருத்து வந்தால் சிந்தியுங்கள்.

இதற்கு மேலும் 2012ல் உலகம் அழியும் என நீங்கள் நம்பினால் எனது வங்கி எண்ணை தருகிறேன் அதில் உங்கள் பணத்தை மாற்றி விட்டு உலகம் அழிய காத்திருங்கள்...!
------------------------------------
யோகி என்பவன் தன்னையும் தன்னை சார்ந்தவைகளையும் அந்த ஷணம் மட்டுமே வாழ வழிகாட்டுபவன். அவனுக்கு அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஒரு ஜென்கவிதை நினைவுக்கு வருகிறது....

நான் சுவாசத்தை உள்ளிழுக்கும்
பொழுது உலகம் உருவாகிறது.

வெளியிடும் பொழுது உலகம் அழிகிறது.

இடைபட்ட நேரத்தில் நான் இருக்கிறேன்.

37 கருத்துக்கள்:

*இயற்கை ராஜி* said...

nalla karuthukkal swamiji..

*இயற்கை ராஜி* said...

இதற்கு மேலும் 2012ல் உலகம் அழியும் என நீங்கள் நம்பினால் எனது வங்கி எண்ணை தருகிறேன் அதில் உங்கள் பணத்தை மாற்றி விட்டு உலகம் அழிய காத்திருங்கள்//

This is swamiji touch:-)))

மணிகண்டன் said...

பேங்க் அக்கௌன்ட் நம்பர் ப்ளீஸ்.

SUNDAR said...

இதற்க்கு முன் இந்த உலகம் எத்தனையோ முறை அழித்து அழிந்து பிறகு உருவாகியிருப்பது என்பது அறிவியாலார் கூறும் உண்மை!
ஒருவர் ஒத்துக்கொல்வதாலோ இல்லை என்று மறுப்பதாலோ எதுவும் நடந்துவிடாமல் போய்விடுவது இல்லை.

சாகும் வரை ஒருவன் "நான் சாகவே மாட்டேன்" என்று சொல்லிவிட்டு கடைசியில் செத்துவிட்டால் அவரை யார் என்ன கேள்வி கேட்க முடியும்?
சிலர் நம்பிக்கையோடு சாவர் சிலர் நம்பிக்கை இல்லாமல் சாவர் அவ்வளவுதான்!

2012 உலகம் அழியுமா இல்லையா என்பது தெரியாது அனால் இந்த உலகில் உள்ள மக்கள் எல்லோரும் ஒருநாள் அழிவர் என்பது மட்டும் நிச்சயம்!

எதற்குமே ஒரு முடிவு நிச்சயம் உண்டு!

மதி said...

>>>>“2012ல் டிசம்பர் 12ஆம் தேதி உலகம் அழிந்துவிடும். கருப்பு சூரியன் என்ற ஒன்று தோன்ற இருக்கிறது. இரண்டு சூரியன் உதிக்கும் அன்னாளில் உலகம் அழியும்.<<<<

என்ன கொடுமை ஸ்வாமி இது....30 வருஷத்துக்கு முன்பு இருந்த அதே புரளி மறுபடியும் தலைதூக்கிஇருக்கு.

Anonymous said...

கடைசியில் வரும் ஜென் கவிதை பிரமாதம் ஜி...

அப்பா டக்கர் அமீர்பர் said...

தலிவா நீ தான் ஜேசீய கிங் ஆச்செ சொல்லு 'இந்த உலகம் எப்போ பாணலாக போறது'

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயோ உலகம் அழிஞ்சாலும் பூமிக்குள்ளதான் போகணுமா... ஆகாயத்துக்கு மேல போக முடியாதா :)

நல்ல கட்டுரை. நன்றி.

துளசி கோபால் said...

ஸ்வாமிஜி,
அருமை.

சுமை கூடாம இருக்க என்னோட வங்கிக் கணக்கு எண் வேணுமுன்னா தரட்டுமா?

நிகழ்காலத்தில்... said...

\\இக்காலத்தில் மந்திர மாந்திரீகம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை, ஒருவரிடன் நீங்கள் இறக்க போவதாக சொல்லும் ஒரு வார்த்தை போதும் ஒரு வாரத்தில் அவர் வாழ்க்கை தலைகீழாக்கி விடும்.\\

மிகச் சரியான வார்த்தைகள்.,

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை,

உங்கள் வருகைக்கு நன்றி..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மணிகண்டன், :)

திரு மதி,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்தர்,

பிறக்கும் பொழுதே நாம் இறப்பது நிச்சயமாகி விடுகிறது.

அதற்காக ஒவ்வொரு நிமிடமும் அழுது கொண்டே இருப்பது முட்டாள் தனம்.

நிலையில்லாத நிலைப்பாட்டை நினைத்து ஏன் கலங்க வேண்டும்.?

வாழும் காலம் ரணமாக இறக்கும் காலத்தை நினைப்பானேன்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு இங்கிலீஷ்காரன்.

உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் பாராட்டை அந்த ஜென் ஞானியிடம் சொல்லுகிறேன். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்பா டக்கர் அமீர்பர் ,


//தலிவா நீ தான் ஜேசீய கிங் ஆச்செ சொல்லு 'இந்த உலகம் எப்போ பாணலாக போறது'//

யாரோ உங்களுக்கு தவறான செய்தியை கொடுத்துவிட்டார்கள். நான் ஜோதிடத்தில் சிப்பாய் (காவலன்). கிங் அல்ல :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜ்யோவ்ரம் சுந்தர்,

//ஐயோ உலகம் அழிஞ்சாலும் பூமிக்குள்ளதான் போகணுமா... ஆகாயத்துக்கு மேல போக முடியாதா :)//

உங்களுக்கும் என் பகடி புரியவில்லையா :(

உலகம் அழிஞ்சா பூமி எங்க இருக்கும் எல்லாரும் உள்ள போக :) ?

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி துளசி கோபால்,

//சுமை கூடாம இருக்க என்னோட வங்கிக் கணக்கு எண் வேணுமுன்னா தரட்டுமா?//

டீச்சரம்மா கிளம்பீட்டாங்க.. எல்லாரும் தள்ளி நில்லுங்க.

:)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் வருகைக்கு நன்றி

Mahesh said...

அருமையான பதிவு...

என்னை மாதிரி பூனையெல்லாம் கண்ணை மூடினாலே பூமி அஸ்தமிடுச்சுடுச்சோன்னு நினைக்கிற ரகம் :)

அது போக... 2012 Globe Future னு ஒரு ப்ராடக்ட் லாஞ்ச் பண்றேன். இன்னிக்கு 10000 இன்வெஸ்ட் பண்ணினா, 2012க்கு அப்பறமும் உலகம் இருந்தா 1 கோடி ரூபா. மினிமம் இன்வெஸ்ட்மென்ட் 10லட்சம். இங்கயே கடை போட்டுக்கலாமா? :))))

Radhakrishnan said...

மிகவும் அருமையான கட்டுரை ஐயா.

நிலையில்லாமை பற்றித் தெரிந்திருந்தும் நிலையில்லாமல் பேசிக்கொண்டேயிருப்போம்.

எழுதப்பட்ட சாசனங்கள் பல அழிந்து போயிருக்கின்றன, பல நமக்குத் தெரியாமலே இருக்கின்றன.

அழியும்னு தெரிந்தா நாம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம். நாம் விதைப்பது எல்லாம் வருங்கால சந்ததிகளுக்குத்தான்.

விதைப்பதை நல்லவையாகவே விதைப்போம், நல்ல சிந்தனைகளை வலியுறுத்துவோம் எனச் சொல்லும் கட்டுரைக்குத் தலைப்போ எதிர்மறை வாதம் ;)

மிக்க நன்றி ஐயா.

அமர பாரதி said...

//எனது வங்கி எண்ணை தருகிறேன் அதில் உங்கள் பணத்தை மாற்றி விட்டு உலகம் அழிய காத்திருங்கள்//

ஸ்வாமி,

தங்களின் சிரமத்தில் தோள் கொடுக்க சித்தமாக இருக்கிறேன். என்னுடைய வங்கி எண்ணையும் தருகிறேன். அதில் பாதியை போட்டு விடுங்கள்.

pt said...

சுவாமிஜியின் பதில்:


ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து சந்திர கிரகணம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று மூன்று கிரகணங்கள் தோன்றுவதால் பூமியில் பேரழிவு ஏற்படுமா என்ற பீதி கிளம்பியுள்ளது.

மூன்று கிரகணங்கள்

வானத்தில் மிகவும் அரிதான காட்சிகள் தோன்றுவது வழக்கம். ஒரே நேர்கோட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் வருவது, பூமிக்கு அருகில் ஏதாவது ஒரு கோள் நெருங்கி வருவது என ஆர்வத்தை தூண்டும் அபூர்வ நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன.

அதுபோல, மற்றொரு அரிய நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஜுலை) மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெற உள்ளது.

அதாவது, ஜுலை 7-ந் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந் தேதி சூரிய கிரகணமும், ஆகஸ்ட் 6-ந் தேதி மீண்டும் ஒரு சந்திர கிரகணமும் தோன்றுகின்றன.

22-ந் தேதி தோன்றும் சூரிய கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம். அதிகாலை 5.30 மணிக்கு சூரிய கிரகணம் தோன்றும்.

புதிய புத்தகம்

ஒரு மாத காலத்துக்குள் அடுத்தடுத்து `மூன்று கிரகணங்கள்’ தோன்றுவது வானியல் சாஸ்திரத்தில் ஆச்சரியம் அளிக்கும் நிகழ்ச்சி. ஆனால், தொடர்ந்து 3 கிரகணங்கள் தோன்றுவதால் பூமிக்கு பேராபத்து ஏற்படலாம் என்று பீதியை கிளப்புகின்றனர், பெங்களூரைச் சேர்ந்த ஹரி மற்றும் ஹேமா ஹரி என்ற தம்பதியினர்.

`பாரத் கியான்’ என்ற அமைப்பை நடத்தி வரும் இவர்கள், `வரலாறு திரும்புமா?…’ என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் பல்வேறு வரலாற்று ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றனர். அந்த புத்தகத்தை, `வாழும் கலை அறக்கட்டளை’ வெளியிட்டுள்ளது.

ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் தோன்றிய சமயங்களில் எல்லாம் என்னென்ன பேரழிவுகள் ஏற்பட்டன என்பதை அந்த புத்தகத்தில் தெளிவாக விளக்கி உள்ளனர்.

முந்தைய பேரழிவுகள்

கி.மு.3067-ம் ஆண்டில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் தோன்றிய சமயத்தில் தான், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருட்சேத்திர போர் (மகாபாரத யுத்தம்) நடந்தது.

அதுபோல, கிருஷ்ணர் ஆட்சி செய்ததாக கருதப்படும் துவாரகை நகரம் கடலுக்குள் மூழ்கிய கி.மு.3031-ம் ஆண்டிலும் மூன்று கிரகணங்கள் தோன்றியதாம்.

இவை எல்லாம் புராண கால உதாரணங்கள் என்று கூறுபவர்களுக்கு சமீப கால உதாரணங்களையும் அந்த புத்தகம் எடுத்துக் காட்டுகிறது.

கடந்த 1910-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை பல்வேறு சமயங்களில் மூன்று கிரகணங்கள் அடுத்தடுத்து தோன்றி இருக்கின்றன.

அப்போது தான், முதல் உலகப் போரும் இரண்டாவது உலகப் போரும் நடைபெற்றன. மேலும், ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டன.

இது போன்று ஏராளமான ஆதாரங்கள் என்னும் குண்டுகளை அந்த புத்தகம் அள்ளி வீசி இருக்கிறது,

12 ஆண்டுக்குள் 6 முÛ
தற்போது, அடுத்த மாதம் முதல் 2020-ம் ஆண்டு வரையிலும் 6 முறை அடுத்தடுத்து `மூன்று கிரகணங்கள்’ ஏற்பட உள்ளன.

அதாவது, 12 ஆண்டுகளுக்குள் தொடர்ச்சியாக இது போன்று நிகழ இருப்பதால், மூன்றாவது உலகப்போர் மூளுமா? அல்லது வேறு வகையில் பூமியில் பேரழிவு ஏற்படுமா? என்று அந்த புத்தகம் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.

இந்த அளவுக்கு `பகீர்’ தகவல்களை கூறியுள்ள ஹேமா, “வானியல் மாற்றங்களையும் அவற்றை தொடர்ந்து நிகழ்ந்த வரலாற்று ஆதாரங்களை மட்டுமே நாங்கள் பதிவு செய்திருக்கிறோம். கோள்கள் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்கவில்லை. இதை எச்சரிக்கையாக கருதாமல், ஒன்றுக்கொன்று இணையான நிகழ்வுகளாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்று அமைதியாக தெரிவிக்கிறார்//
-courtesy-http://www.paristamil.com/tamilnews/?p=17767

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கருத்துகளை படித்த மன மகிழ்வு

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

நாங்க தான் முதல்ல கேம் துவக்கி இருக்கோம். நடுவுல பூந்து விளையாடினா நரகத்தில் கும்பிபாகம் கிடைக்கும்.

:)

நன்றி. உங்கள் வருகைக்கு

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெ.இராதாகிருஷ்ணன்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமரபாரதி,

உங்கள் தோள் கொடுக்கும் தன்மைக்கு தலைவணங்குகிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புரட்சி தமிழன்,

ஏற்கனவே கேள்விப்பட்ட செய்தியாக இருந்தாலும் இதை விளக்க தனிப்பதிவு போட வேண்டிவரும். :)

எனது இரண்டணா...

கிரகணம் கண்டிப்பாக பேரழிவுகளை ஏற்படுத்தும். கிரகணம் எங்கே தெரிகிறதோ அதற்கு நேர்எதிர் பூகோள பகுதியில் இயற்கை சீற்றம் நடைபெறும். இந்த ஆண்டு சூரிய கிரஹணம் இந்தியாவில் தெரிகிறது. எனவே அதற்கு எதிர் பகுதியில் பாதிப்பு இருக்கும்.

ஜூலை 22ஆம் தேதி நடக்கும் இந்த சூரிய கிரகணம் அதற்கு துவக்க புள்ளியாக இருக்கும். அடுத்த சூரிய கிரஹணம் வரை இதன் தாக்கம் இருக்கும்.


பூமியின் ஒரு பகுதியில் இந்த மாற்றமும் இழப்பும் இருக்குமே தவிர பூமியே அழிந்துவிடாது.

மேற்கண்ட தகவல் எனது ஜோதிட மற்றும் வானியல் கருத்துக்களை மட்டும் வைத்து சொன்னவை. இதில் எந்த விஞ்ஞான பின்புலமும் இல்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு .,

//யோகி என்பவன் தன்னையும் தன்னை சார்ந்தவைகளையும் அந்த ஷணம் மட்டுமே வாழ வழிகாட்டுபவன். அவனுக்கு அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை.//

ஓஷோ அவர்கள் கூறியது ...
"ஒவ்வொரு மனிதனும் தான் மரித்து
இருபத்து முப்பது வருடங்கள் கழித்துதான் அடக்கம் பண்ண படுகின்றான்."

அதே போல நிகழ் காலத்தில் வாழாமல் எதிர் காலத்தில் வாழும் மனிதர்களை பற்றி கவலைபடவேண்டாம்.

இந்த விழிப்புணர்ச்சி பதிவு மிகவும் பயன் உள்ளதாய் இருந்தது.

Mahesh said...

ஆஹா... "கபிம்குபாம்"? எனக்கு வேண்டாம்பா... நான் சிங்கப்பூர்லயே கடை போட்டுக்கறேன் !!!

இது மாதிரி புரளியெல்லாம் எங்கிருந்துதான் யார்தான் கிளப்பறாங்களோ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்கள் பகடி புரிந்ததாலேயே அப்படி எழுதியிருந்தேன் :)

senthil said...

ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் வருவதால் பாதிப்பு ஏற்படுமா?









ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

கிரகங்களின் இயல்புநிலை பாதிக்கப்படுவதையே கிரகணம் என்று கூறுகிறோம். இதனை செயற்கையான இருட்டு என்றும் கூறலாம். கிரகணத்தைப் பற்றி ஜோதிடத்தில் வரும் பாடல்,

அருக்கனையும், சோமனையும் ஐமூன்றே நாளில்
நெருக்கியே அரவம் தீண்டினால் மன்னன் மடிவான்
மடியாவிட்டால் அன்னம் அரிதாகும்.

இதில் அருக்கன் என்பது சூரியன், சோமன் என்றால் சந்திரன். ஒருமுறை கிரகணம் ஏற்பட்ட அடுத்த 15 நாட்களுக்குள்ளாக மீண்டும் கிரகணம் ஏற்பட்டால் அரசாள்பவர்களுக்கு கண்டம் உண்டாகும். அப்படி இல்லாவிட்டால் உணவு பஞ்சம் ஏற்படும் என்பதே மேற்கூறிய பாடலின் பொருள்.

அந்த வகையில் பார்த்தால் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லாத நிலையை அடுத்தடுத்து நிகழும் கிரகணங்கள் உருவாக்கலாம். மறைமுகமாக செயல்படக் கூடிய தீவிரவாத அமைப்புகளின் கை ஓங்கும்.


இது மாதிரி புரளியெல்லாம் எங்கிருந்துதான் யார்தான் கிளப்பறாங்களோ?

senthil said...

நவரத்தினக் கற்கள் கொண்ட மோதிரத்தை அனைவரும் அணியலாமா?









ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஜோதிடத்தில் 9ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் செவ்வாய். அதேபோல் இரத்தினக் கற்களுக்கு உரிய கிரகம் சுக்கிரன். எனவே, ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் நன்றாக இருப்பவர்கள் மட்டுமே நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரத்தை அணிய வேண்டும்.

இந்த 2 கிரகங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப்போய் இருந்தாலும் நவரத்தினக் கல் மோதிரத்தை அணிவதை அவர்கள் தவிர்த்து விட வேண்டும்.

இதேபோல் ஓப்பன் செட்டிங் உள்ள நவரத்தினக் கல் மோதிரத்தை அணியக் கூடாது. அது போன்ற அமைப்பு கொண்ட மோதிரத்தை அணிவதன் மூலம் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும்.

சமீபத்தில் என்னிடம் வந்த தம்பதிகளில், கணவரின் ஜாதகத்தைப் பார்த்த போது மிகச் சிறப்பாக இருந்தது. அதனை அவரிடம் கூறிய போது, அவர் நேர்மாறாக பதிலளித்தார். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியதில் சமீபத்தில்தான் அவர் நவரத்தினக் கல் மோதிரம் அணிந்து கொண்டதை அவரது மனைவி தெரியப்படுத்தினார். அந்த மோதிரம் ஓப்பன் செட்டிங் கொண்டது. மீண்டும் ஜாதகத்தை அலசியதில் செவ்வாய் நீச்சமாகி சனியுடன் சேர்ந்து கடகத்தில் அமர்ந்திருந்தது. அதுமட்டுமின்றி சுக்கிரனும், சூரியனுடன் இணைந்து பலவீனமாகி இருந்தது.

இதையடுத்து நவரத்தின மோதிரத்தை கழட்டி விடுங்கள் என்று கூறினேன். இதைக் கேட்ட அவரது மனைவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். காரணத்தைக் கேட்ட போது, அந்த மோதிரத்தை கணவர் அணிந்த நாள் முதல் வீட்டில் சண்டை, சச்சரவுகள் அதிகமாகி விட்டதாகவும், திருமணம் முடிந்து பல ஆண்டு கால வாழ்க்கையில் தன்னை கை நீட்டி அடிக்காதவர், மோதிரம் அணிந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே தன்னை நான்கைந்து முறை அடித்து விட்டதாக வருத்தத்துடன் கூறினார்.

இதன் பின்னர் பேசிய அவரது கணவர், மோதிரம் போட்டதற்கு பின்னர் தனது ரத்த அழுத்தம் அபரிமிதமாக உயர்ந்து விட்டதாகவும், தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சனையெல்லாம் நவரத்தினக் கல் மோதிரம் அணிந்ததால் வந்ததே என்று அவர்கள் இருவரிடமும் விளக்கிக் கூறிய நான், மீண்டும் அதுபோன்ற மோதிரங்களை அணியாதீர்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினேன்.

எனவே, செவ்வாய், சுக்கிரன் வலுவாக இல்லாதவர்கள் நவரத்தினக் கல் மோதிரத்தை அணிவதை தவிர்த்து விட வேண்டும். செவ்வாய், சுக்கிரன் வலிமையாக உள்ளவர்கள் கூட ஓப்பன் செட்டிங் மோதிரத்தை அணியக் கூடாது.

Anonymous said...

2012 பிறகு காலண்டர் போட மறந்திருப்பார்கள், அல்லது தெரிந்திருக்காது. அதை வைத்து, எதோ உலகம் அழியப்போவுது, பூமா தேவி நம்மளை எல்லாம் விழுங்கிவிடும் என்று பீதியை கிழப்புகிறார்கள். கணிப்பொறியில் 1981 இருந்துதான் தேதி இருக்கிறது, அதற்காக கடவுள் 1981 இல் தான் உலகத்தை படைத்தார் என்று சொல்லவா முடியும்!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செந்தில்,

நீங்கள் வெளியிட்ட தகவல்கள் உங்கள் கருத்துக்கள் இல்லை என்ற போது அதை விமர்ச்சிக்க விரும்பவில்லை.

அந்த கருத்துக்கள் அவர் சொன்னது என நிலைப்பாடு இல்லாத காரணத்தாலும் விமர்சிக்க நினைக்கவில்லை.

மேலும் திரு ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் அவர்களின் கருத்துகள் எனும் பட்சத்தில் ....அதிகபட்சம் சாஸ்திர மீறல்கள் உண்டு. இதை ஜோதிட வழி சொன்னார் என ஏற்கமுடியவில்லை. இதை பின்பற்றும் மனிதர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்,

உங்கள் கருத்துக்கள் அருமை.

இதற்கு முன் ஒரு “பிரபல” எழுத்தாளர் 1981ஆம் ஆண்டு கணினியில் இல்லாததை பற்றி கதை எழுதி இருக்கிறார் தெரியுமா ;) ?

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சன்யாசி,

ஓஷோவை நினைவுருத்தியதற்கு நன்றி.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

VIKNESHWARAN ADAKKALAM said...

இத வச்சி ஒரு புத்தகம் போடலாம் 2012-க்குள்... வர பணத்த ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம். :)