Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, June 9, 2009

பழைய பஞ்சாங்கம் 09-ஜூன்- 2009

எனது சிறுகதை

உரையாடல் :சமூக இலக்கிய அமைப்பு சிறுகதை போட்டி அறிவிச்சவுடன் எனக்கும் சிறுகதை எழுதனும்னு ஒரு வெறி. :) முன்னபின்ன கதை எழுதி பழக்கம் இல்லை. நாம சொல்ல வர செய்தியை கொடுக்க ஒரு மீடியாவா இந்த சிறுகதையை வைச்சுக்கலாம்னு எழுத துவங்கினேன். எந்த வேலை செய்யறதுக்கு முன்னாடியும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட ஒப்பீனியன் வாங்கனும் இல்லையா? அது மாதிரி நம்ம “பிரபல” வலைபதிவாளர் கிட்ட தொலைபேசியில் சிறுகதை எழுதலாம்னு இருக்கேன். அதுக்கு அடிப்படை தேவை என்னானு கேட்டேன்.

ஒரு அரை மணி நேரம் சும்மா பேசினார் பேசினார் பேசிக்கிட்டே இருந்தார். கடைசியாக் கேட்டேன், நீங்க சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லுங்க. நான் சிறுகதைக்கு ஐடியா கேட்டேன், தொடர்கதைக்கு இல்லைனு சொன்னேன். அதுக்கு அவர் “கதை எழுத வாசிப்பு அனுபவம் ரொம்ப முக்கியம்” என்றார்.

நானும் அவருக்கு மின்னஞ்சலில் இந்த போட்டோவை அனுப்பி இந்த அளவுக்கு வாசிச்சா போதுமானு கேட்டேன். துக்கு அப்பறம் எப்போ போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேன்கிறார். சிறுகதைக்கு பின்னூட்டமும் போடலைனா பார்த்துக்குங்க. என்ன கோபமோ... ஒரு எழுத்தாளனை வளரவிட மாட்டாங்களே... :)
---------------

தற்கால MMS

காகிதம் கண்டறியப்படாததற்கு முன் காலத்தில் ஓலையிலும், மரக்கூழ் பட்டையிலும் எழுதுவது என்பது சூழலாக இருந்தது. ஓலை மற்றும் மரக்கூழ் பட்டையில் பூச்சி கரையான் அரிக்க கூடாது என அதில் மஞ்சள் தடவுவது உண்டு. முக்கியமாக முனைபகுதியில்லும் மையத்திலும் தடவுவார்கள். இதை பின்பற்றி பிற்காலத்தில் ஜாதக நோட்டுக்கள், கணக்கு புத்தகங்களிலும் மஞ்சள் தடவ துவங்கினோம். இதற்கு காரணம் மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் மஞ்சள் நிறம் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்மனதை உற்சாகத்தை ஏற்படுத்தும். மஞ்சள் நிறம் குரு என்ற கிரகத்தை குறிப்பதால் சுப நிகழ்ச்சிக்கு அது ஆதாரமாக இருக்கும் என்பது கருத்து. ஒரே நேரத்தில் அனைத்து விஷயத்திற்கும் மஞ்சள் பொடி தீர்வாக இருந்தது.

தற்காலத்தில் இதை அறியாமல் மஞ்சள் ஒரு சடங்காக கொண்டு செயல்படுகிறார்கள். கணக்கு புத்தகங்கள் மற்றும் ஜாதக குறிப்பேடுகளில் மஞ்சள் நிறத்தை அச்சுட்டு தருகிறார்கள். மங்களமாக இருக்க வேண்டுமாம்..! தாத்பரியம் தெரியாமல் இவர்கள் செய்யும் கோமாளித்தனத்தை போல அனேக சம்பிரதாயங்கள் இருப்பது வேதனை. நாளை திருமண தகவலை குறுஞ்செய்தியாக அனுப்புபவர்கள் மஞ்சள் நிறத்தில் செய்தியின் முனையில் வண்ணமாக்கி இருப்பார்கள். MMS என்பதை கூட மஞ்சள் மெசேஜ் சர்வீஸ் என சொன்னாலும் சொல்லுவார்கள்.
---------------
தலை எழுத்து மாறுமா?

ஒரு ஜோதிடர் ஆற்றங்கரையில் நடைபயிற்சியில் இருந்தார். அவர் காலில் ஒரு மண்டை ஓடு தட்டுப்பட்டது. அவருக்கு கபாலத்தில் இருக்கும் தலை எழுத்தை படிக்கும் சாஸ்திரம் தெரிந்தவராக இருந்தார் என்பதால் கபாலத்தை எடுத்து ஆராய்ந்தார். அந்த கபாலத்தில் இருந்த தலை எழுத்தில் “இறப்புக்கு பின் இந்த மனிதனின் தலை சுக்குநூறாகும்” என எழுதப்படிருந்தது. அதை ஆராய நினைத்து தனது வீட்டின் முகப்பில் இருக்கும் மரக்கிளையில் வைத்துவிட்டார். தினமும் வீட்டிலிருந்து கிளம்பும் போதும், வீட்டுக்குள் வரும்பொழுதும் மரக்கிளையில் இருக்கும் கபாலத்தை ஒருமுறை பார்ப்பார்.

இவரின் செயலை தினமும் கவனித்த ஜோதிடரின் மனைவி அவர் மேல் சந்தேகப்பட்டு அடுத்த வீட்டுக்காரியிடம் பேசும்பொழுது இதை பற்றிக் கூறினாள்.அடுத்தவீட்டுக்காரி சும்மா இருப்பாளா?

உன் கணவரின் கள்ளக்காதலி இறந்து போயிருப்பாள் அவளின் கபாலமாகத்தான் இருக்கும் என கூறி அவளின் சந்தேகத்தை வலுப்படுத்தினாள். வீட்டுக்கு வரும்பொழுது மரக்கிளையைல் இருக்கும் கபாலத்தை இல்லாததை பார்த்து குழப்பத்துடன் வீட்டுக்குள் சென்றார் ஜோதிடர்.

மனைவி கோபத்துடன் காப்பியை 'நங்' என வைத்தாள். மனைவி கோபமா இருப்பதை உணர்ந்து அமைதியாக காப்பியை குடித்தார். காப்பி வித்தியாசமான சுவை இருப்பதை உணர்ந்து, கோபமாக இருப்பவளிடம் நேரடியாக் சொல்ல பயந்து, “காப்பி இன்னைக்கு அருமையான டேஸ்ட். அப்படி என்ன இதுல போட்டே?” என்றார். கண்கள் சிவக்க மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மனைவி கோபமாக, “டேஸ்டா இருக்காதா பின்ன? உங்களுக்கு அறிவு வரத்தான் உங்க கள்ளக்காதலியோட மண்டையோட்டை பொடியாக்கி காப்பியில் கலந்தேன்...!” என்றாள்.
---------------
கவிதை கார்னர்

இந்த வாரம் நான் கவிதை எழுதப்போவதில்லை (யாருப்பா அது ...அப்பாடா தப்பிச்சோம் சவுண்ட் கொடுக்கறது?).

திருமூலரின் திருமந்திரத்தில் இருக்கும் நான் ரசித்த ஒரு பாடலை கொடுக்கிறேன். இதை கூர்ந்து படித்து விளக்கம் கொடுக்கவேண்டும். சிறந்த விளக்கத்திற்கு ஒரு பரிசு உண்டு.

இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.

34 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

திருமூலரின் திருமந்திரத்தின் அர்த்தம் தெரியவில்லை சொல்லிய மூன்று விடயங்களும் ரசித்தேன், ருசித்தேன்

*இயற்கை ராஜி* said...

க‌தை சூப்ப‌ர் ஸ்வாமிஜி:-)

..இனிமே காபியைப் பாத்தா ம‌ண்டையோடு நியாப‌க‌ம் வ‌ரும்:-(

Mahesh said...

பேருதான் பழைய பஞ்சாங்கம் :) விஷயங்கள் புதுசு !!

திருமூலர் பாடல் அருமையா இருக்கே.... யோசிக்கிறேன்...

கிரி said...

//நானும் அவருக்கு மின்னஞ்சலில் இந்த போட்டோவை அனுப்பி இந்த அளவுக்கு வாசிச்சா போதுமானு கேட்டேன்//

சுவாமி உங்களுக்கு ரொம்ப குசும்பு தான்

//கணக்கு புத்தகங்கள் மற்றும் ஜாதக குறிப்பேடுகளில் மஞ்சள் நிறத்தை அச்சுட்டு தருகிறார்கள். மங்களமாக இருக்க வேண்டுமாம்.//

தெரியாமல் செய்தாலும் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.

Unknown said...

ரசித்தேன்.சிரித்தேன்.

திருமந்திரம் பாடல் விளக்கம்:-

அறியாமை என்னும் மாயத்திரையில் சிக்கி ஜொள்ளுவிட்டுக் கொண்டிருக்கும் நம் ஆன்மாவை விழிப்படையச் செயவது.(குணம் பல காட்டி = இதுதான் அது.பெஸ்ட் ஒன்)

குமரிதான் புரியவில்லை?

ஷண்முகப்ரியன் said...

மஞ்சளின் அர்த்தம் அருமை. விவேகானந்தரில் இருந்து சட்டென்று விவேக் ஆக மாறும் வித்தை உங்களுக்குத்தான் வரும் ஸ்வாமிஜி:-)!

Unknown said...

சுவாமிஜி பதிவு மிக அருமை. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன். திருமூலர் பாடல் புரியவில்லை.

கோவி.கண்ணன் said...

உங்க வாசிப்பு அனுபவம் "படா தமாஷ் ஹை "

நிகழ்காலத்தில்... said...

\\இந்த போட்டோவை அனுப்பி இந்த அளவுக்கு வாசிச்சா போதுமானு கேட்டேன். \\

இது கூட புரியாம எப்படித்தான் “பிரபல”
பதிவராக இருக்காய்ங்களோ!!

திருமூலர் பாடல் புரிந்ததே...

Sanjai said...

விளக்கம்:-

அறியாமையை இறைவனின் திருவருளால் களைந்து, பிறவிப்பிணியை உணர்ந்து, எல்லா பற்றும் துறந்து இறைவனின் திருவடியை அடைவது!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஞானசேகரன்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை,


உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி.

யோசிங்க யோசிங்க யோசிசுக்கிட்டே இருங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி,

//தெரியாமல் செய்தாலும் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.//

தாத்பரியம் தெரியாமல் உபயோகிக்கும் பொழுது அதை பிறர் கேட்க விளக்க முடியாத சூழல் ஏற்படும். அது சாஸ்திரத்தை குறைவாக மதிப்பிட ஏதுவாகும்.

இவ்வாறு பயன்படுத்தினால் மஞ்சள் துண்டை தலைவன் போட்டிருக்கிறான் என போடும் தொண்டனின் நிலை ஏற்படாதா?

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரவிஷங்கர்,

இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியும்.

வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் பின்னூட்டத்திற்கு ரசிகனாகிவிட்டேன்.:)

//மஞ்சளின் அர்த்தம் அருமை. விவேகானந்தரில் இருந்து சட்டென்று விவேக் ஆக மாறும் வித்தை உங்களுக்குத்தான் வரும் ஸ்வாமிஜி:-)//

இரண்டுக்கும் உள்ளே இருக்கும் வஸ்து ஒன்றுதானே?

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரபு,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்களுக்கு புரிந்ததை எங்களுக்கும் கூறுங்களேன்...

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,


உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு SP.சஞ்சய்,

//அறியாமையை இறைவனின் திருவருளால் களைந்து,
//

இதுவரை ஓக்கே..


பிறவிப்பிணியை உணர்ந்து, எல்லா பற்றும் துறந்து இறைவனின் திருவடியை அடைவது!//

இது சம்பந்தமான வரி இல்லையே..
முயற்சி செய்யுங்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

//எனது பெயரை எப்படி அழைக்க வேண்டும் என சிலர் கேட்டதற்கு நான் கூறிய பதில் ”எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்.பெயரில் என்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை//

இது நீங்கள் போன பதிவில் என் பின்னூட்டத்திற்கு கூரிய பதில்.

பதிலுக்கு நன்றி..

ஆனால் உங்கள் புரோபைலில் ஸ்வாமி என்று இருப்பதை மாற்றி விடுங்களேன்..எனக்காக..

ஸ்வாமி என்று தனக்கு தானே எவன் போட்டாலும் எனக்கு கடும் கோபம் வருகிறது...


நீங்கள் கொடுக்கும் விளக்கம் என் போன்ற அறைகுறைக்கு புரியாது. அதனால் நீங்கள் மாற்றி விடுங்கள் ப்ளீஸ்...

அமர பாரதி said...

//வாசிப்பு அனுபவம்// இவ்வளவு பயங்கரமா கடிக்கறீங்களே.

எம்.எம்.அப்துல்லா said...

இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.

//

அண்டவெளியை உணரும் பொருட்டு
ஆன்மா அடைந்த ஆவல் மிகுந்தே
முயற்சியிலிறங்கி தடைகளை தகர்த்தே
யாவும் ஒன்றென அறிந்தடைந்ததமைதி!

Anonymous said...

மஞ்சளின் விளக்கம் அருமை சுவாமி! நான் இவ்வளவு நாள் மஞ்சள் பார்டர் போடுவர்தற்காக என்று நினைத்துவிட்டேன் ஹி ஹி :)

இவ்வளவு சுலபமான கவிதை யாருக்கும் புரியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. சத்தியமா சொல்லுங்க, இது ஒரு தமிழ் திரைப்படத்தில் வரும் காதல் பாட்டு தானே. அதைத்தானே நீங்கள் மேலே உள்ள உங்கள் வாசிப்பு படத்தில் பாடிய பாடல்? ஹி ஹி :)

எம்.எம்.அப்துல்லா said...

சாமி, மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுத்ததல்ல...நானே சொந்தமாக எழுதியது. எங்க பரிசு?எங்க பரிசு?

:))

நிகழ்காலத்தில்... said...

\\திரு நிகழ்காலம்,

உங்களுக்கு புரிந்ததை எங்களுக்கும் கூறுங்களேன்...

உங்கள் வருகைக்கு நன்றி.\\

\\
இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.\\

கிழவன் கூடல் குறித்து குமரியை மணம் புரிவது இகம்,

குமரி கிழவனை கூடல் குறித்து மணம் புரிவது பரம்.

உற்பத்தி மையத்தில் தேங்குகிற உயிர்சக்தி, உச்சியில் உள்ள மூலத்துடன் இணைவது,ஒன்றாவது,
இதற்கிடையில் அது செய்யும் வித்தைகள்,இவையே இந்தப்பாடல்.

உச்சி குருட்டுகிழவன்,
உயிர்சக்தி குமரி

சுமாராக நெருங்கி வந்துவிட்டேனா.!!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கண்ணா,

ஏதோ குழப்பத்தில் இருக்கிறீர்கள் என தெரிகிறது. முடிந்தால் தனிமடலில் உங்களின் கருத்துக்களை விளக்குங்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமர பாரதி ,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்,

நான் வாசிக்கும்பொழுது பாடியது வேறு. :)

சில சினிமா படங்களை பார்த்தால் எனக்கு வாழ்வியல் காதல் விஷயங்களை தாண்டி அந்த திருமந்திரம் பொருள் நினைவுக்கு வரும்.


உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

ஸ்மைலி இல்லாமல் முதல் பின்னூட்டன் நீங்க போட்டதானு ஒரே சந்தேகம்.


உங்க அடுத்த பின்னுட்டாம்தான் நீங்கனு முடிவுபண்ணிருக்கேன்.

:) அருமையான கவிதை நடை.
அடுத்த பதிவை பாருங்க..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் விளக்கம் ஓரளவு சரி. குண்டலினி யோகத்தை சார்ந்தவர் நீங்கள் என நினைக்கிறேன்.


உங்கள் வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

//திரு கண்ணா,

ஏதோ குழப்பத்தில் இருக்கிறீர்கள் என தெரிகிறது. முடிந்தால் தனிமடலில் உங்களின் கருத்துக்களை விளக்குங்கள்.//

நான் இதுவரை எந்த போலி சாமியாரிடமும் மாட்டவில்லையாதலால் எனக்கு எவ்வித குழப்பமும் இல்லை.


நீங்கள் தனிமடலில் ஸ்வாமி என எழுதியிருந்தால் அதை தனி மடலில் விவாதிக்கலாம். நீங்கள் ப்ளாக் புரோபைலில் குறிப்பிட்டதால் ப்ளாக்கில்தான் விவாதிக்க முடியும்.

என்னுடைய ஒரே கேள்வி...நீங்களே உங்கள் புரொபைலில் ஸ்வாமி என குறிப்பிடுவது ஏன்.?

இதை மாற்ற ரொம்ப நேரம் ஆகாதே...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கண்ணா..

ஒன்று ஸ்வாமி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள முயலுங்கள்.

இல்லையேல் விட்டுவிடுங்கள்.

பிறர் இப்படி செய்யவேண்டும் என கட்டாயப்படுத்தி திணிப்பவர்களுக்கும், தாங்கள் நினைத்தது சரி என இருப்பவர்களுக்கும் ஸ்வாமி என்ற வார்த்தை புரிதல் ஏற்படாது.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஸ்வாமி எனும் சொல்லை தவிர்த்துவிட்டு பிறவற்றை படியுங்கள்.

பிறர்கூறும் நல்ல மற்றும் காரணம் மிகுந்த ஆலோசனை மட்டுமே கேட்கவேண்டும் என்ற கொள்கை எனக்கு உண்டு.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

கண்ணா.. said...

//பிறர் இப்படி செய்யவேண்டும் என கட்டாயப்படுத்தி திணிப்பவர்களுக்கும், தாங்கள் நினைத்தது சரி என இருப்பவர்களுக்கும் ஸ்வாமி என்ற வார்த்தை புரிதல் ஏற்படாது.//

எனக்கு புரிவது புரியாதது இருக்கட்டும்.. நீங்கள் ஏன் உங்களை ஸ்வாமி என அழைத்து கொள்கிறீர்கள்..
அதுதான் என் கேள்வி...

அதற்கு பதில் சொல்ல முயலுங்கள்..