Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, December 29, 2009

தினம் தினம் திருமந்திரம் - புத்தகம் ஓர் அறிமுகம்

திருமந்திரம் என பலராலும் அழைக்கப்படும் சதாசிவ மந்திரம் என்ற நூலுக்கு எளிய விளக்கம் அளித்துள்ளேன். சதாசிவ மந்திரம் என்பது ஆன்மீகத்தின் உயர் நிலையில் எழுதப்படாமல் ஆன்மீக உச்ச நிலையில் எழுத்தப்பட்டது. இந்த நூலுக்கு பல நூற்றாண்டுகளாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவை சைவ சிந்தாந்தம் அல்லது இந்து சமயம் என்ற வட்டத்தின் உள்ளேயே அமைந்திருந்தது.

ஒரு வரையறையில் அடைக்கப்படாமல் தினம் தினம்
திருமந்திரம் ஒரு வித்தியாசமான படைப்பாக அமைந்துள்ளது. ஆன்மீக கண்ணோட்டம் கொண்டு ஒவ்வொரு மந்திரங்களும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் தேவையான விளக்கங்கள் இதில் இருக்கிறது. ஜாதி,மத மற்றும் இனம் கடந்த நிலையில் திருமந்திரம் விளக்கபட்டிருப்பது இந்த நூலில் மட்டுமே என கூறலாம்.

3088 திருமந்திரங்கள் இருப்பதாக கூறினாலும் திருமூலர் காலத்திற்கு பிறகு பல மாற்றங்கள் அதில் செய்யப்பட்டன. திருமூலரின் திருமந்திரத்தில் 3000 திருமந்திரங்களையும் படிக்க வேண்டிய சூழலில் நாம் இல்லை. அதனால் 3000 திருமந்திரத்தில் இருந்து 366 திருமந்திரம் மட்டும் தேர்வு செய்து விளக்கி உள்ளேன். இதனால் தேதி வாரியாக ஒவ்வொரு நாளுக்கு ஒரு திருமந்திரம் என அமைப்பில் வடிவமைக்கபட்டுள்ளது.

3000 திருமந்திரங்களை படிக்க இந்த 366 மந்திரங்கள் தூண்டுகோலாக அமையும் என கூறலாம். திருமந்திரத்தில் யோகம் செய்யும் முறை, சித்துக்கள் அடையும் தன்மை, சமாதி செய்யும் முறை, சன்யாசம் என பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இவை சம்சார வாழ்க்கைக்குள் இருப்பவர்களுக்கு தேவையில்லை. தினம் தினம் திருமந்திர புத்தகத்தில் இயல்பு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உதவும் நிலையில் திருமந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கி பயன்பெறுவது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பரிசளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறைந்த எண்ணிக்கையில் முதல் பதிப்பு அமைகிறது என்பதால் சில நூறு பிரதிகளே வெளி விற்பனைக்கு இருக்கிறது.


இந்த புத்தகத்தை அச்சுடும் பணியை நம் சக பதிவர் திரு வடகரை வேலன் அவர்கள் செய்கிறார். அவருக்கு என் நன்றிகள்.

வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி ஒன்றாம் தேதி “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு நிகழ்சிகள் துவங்கும்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் முகவரி :

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை
பொன்னுரங்கம் சாலை கிழக்கு,
ஆர் எஸ் புரம், கோவை.

தொலைபேசி :99 44 2 333 55

கோவையை சேர்ந்த பதிவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யவில்லை. அதற்கான விளக்கம் விரைவில் கிடைக்கும்.

21 கருத்துக்கள்:

Unknown said...

"தினம் தினம் திருமந்திரம்" புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள். புத்தகம் வெளியானதும் எப்படி பெறுவது என்ற தகவல் வெளியிடவும்.

ரங்கன் said...

அன்பு சுவாமி ஓம்கார்:
சென்னை Giri Trading Company-க்கு சில பிரதிகள் அனுப்பினால் வாங்குவதற்கு சுலபமாய் இருக்கும்.
முடிந்தால் செய்யுங்கள். திருமந்திரத்துக்கு என்னுடைய வணக்கங்கள்.
"வெறும் நமஸ்காரம் மட்டும் போதாதுடா அம்பி - படிச்சத மனசுல ஏத்திண்டு அதும்படி நடக்கணும் " என்று தஞ்சாவூர் சங்கர சாஸ்திரிகள் சொன்னது இன்று நினைவுக்கு வருகிறது. என்ன ப்ரசின்னை என்றால் அப்போதும் சரி இப்போதும் சரி பல நூல்களுக்கு மத சடங்கு அடிப்பதில் மாத்திரம் விளக்கம் கொடுத்துள்ளனர். தங்களது 366 புரியும் விதமாக இருக்கும் என கண்டிப்பாக நம்புகிறேன். (புரிந்தபின் அதன் படி நடப்பது என்பது தனிகதை)

ATOMYOGI said...

ஐயன்மீர் ! புத்தகத்தினை இணையம் வழியாக pay செய்து பெறும் வழி என்ன?

ரங்கன் said...

மத சடங்கு அடிப்படையில் என்று எழுத வந்து "அடிப்பதில்" என்று தவறுதலாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

கோவி.கண்ணன் said...

//தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகத்தை நீங்கள் வாங்கி பயன்பெறுவது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பரிசளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

புத்தகம் இலவசமாக எங்கு கிடைக்கும் ? இ-புத்தகம் இணையத்தில் இருக்கிறதா ?
:)

*********

வாழ்த்துகள். நல்ல முயற்சி !

selventhiran said...

சுவாமி, விழா சிறக்க வாழ்த்துக்கள்! அடியேன் வருகை அவசியம் உண்டு.

sarul said...

உங்கள் சேவைக்கு நன்றிகள்

பலதடவை திருமந்திரத்தைப் படித்துப்பார்த்திருக்கிறேன்,அது வெளிப்படையாக ஒரு பொருள் சொன்னாலும் ஆழமான பொருள் புரிவதேயில்லை ,இதை நான் பின்னூட்டங்களிலும் கூறியிருக்கிறேன்.
உங்கள் சேவை எங்களின் தாகத்தைத் தீர்க்குமா என்பதை வாசித்தே அறியமுடியும்.எனைப்போன்ற பாமரர்களும் புரிந்துகொள்ளுமாறு உங்கள் தெளிவுரை இருக்கும் என்றே நம்புகிறேன்.

அது சரி
சுப்பாண்டிகளுக்கு ஸ்பெஷல் பிரதி உண்டா

இப்படிக்கு
சின்னச் சுப்பாண்டி

sharma.aps said...

சுவாமிஜி,

ஏதாவது ஓரிரண்டு பாடலை விளக்கத்துடன் சாம்பிளாகக் காண்பிக்கலாமே! அதுவும் புத்தாண்டு தினத்தன்று அளிப்பீராயின் படித்து மனத்தில் இருத்துவதற்கு ஏதுவாய் இருக்கும். புத்தகம் எப்படி இருக்கும் என்பதை தொலைதூரத்தில் உள்ளோர் அறிந்து கொள்வதற்கும் வ்சதியாய் இருக்கும். தயவு செய்து ஆவன செய்யவும்.

அன்புடன்
சர்மா

மதி said...

>>>இவை சம்சார வாழ்க்கைக்குள் இருப்பவர்களுக்கு தேவையில்லை<<<

:( :( :( :( :(

அப்படி என்றால் சம்சாரிங்கள் இந்த புத்தகம் வாங்க முடியாதா...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரபு,
திரு ரங்கன்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மாயாவி,

இணையத்தில் விற்பனை செய்யும் அளவுக்கு நாங்கள் செயல்படவில்லை. தபால் மூலமே பெற முடியும்.
உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//புத்தகம் இலவசமாக எங்கு கிடைக்கும் ? இ-புத்தகம் இணையத்தில் இருக்கிறதா ?
:)//

அதில் இருக்கும் இரண்டு மந்திரங்களுக்காவது நீங்கள் பணம் கொடுத்து வாங்குவீர்கள். :)

ஸ்வாமி ஓம்கார் said...

கவிஞர் செல்வேந்திரன்,

உங்கள் வருகைக்காகவும் அதனால் விழா சிறக்கவும் காத்திருக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கேஎஸ்,

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி,

சுப்பாண்டி இதை படிக்கும் அளவுக்கு முட்டாள் அல்ல. சுப்பாண்டிகள் இதை தாண்டி அல்லவா அறிவு பெற்று இருக்கிறார்கள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சர்மா,

முயற்சி செய்கிறேன்.

நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதி,

//அப்படி என்றால் சம்சாரிங்கள் இந்த புத்தகம் வாங்க முடியாதா...//

திருமந்திரங்களில் சன்யாசம் வாங்குவது, சமாதி செய்வது, சிவயோகி ஆவது போன்ற விஷயங்கள் உண்டு. இவை சம்சார வாழ்க்கைக்கு தேவையில்லை என்பதால் அவற்றை நீக்கிவிட்டு.... சம்சார வாழ்க்கைக்கு தேவையான திருமந்திரங்களை தொகுத்துள்ளேன்.


நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

butterfly Surya said...

விழா சிறக்க வாழ்த்துகள்.

சென்னை புத்த்க கண்காட்சியில் கிடைக்குமா..?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

எனக்கு ஒரு பிரதியை ஒதுக்கீடு செய்யவும் .
தபாலில் எவ்வாறு பெறுவது ? பணம் எப்படி செலுத்துவது என விளக்கவும் !
அன்புடன்,
பாஸ்கர் .

மதி said...

>>>சம்சார வாழ்க்கைக்கு தேவையான திருமந்திரங்களை தொகுத்துள்ளேன்.


நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.<<<

உங்கள் அனுமதிக்கு மிக்க நன்றி, புத்தகம் எப்படி பெறுவது? ஏற்கனவே உங்கள் குருந்தகடு பெறுவதற்கு அனுப்பின மின்னஞ்சலுக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை.... :( :( :(

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

புத்துக வெளியீட்டு விழா வெற்ரிகரமாக நடந்திருக்கும்

எனக்கும் ஒரு புத்தகம் வேண்டும் - எப்படிப் பெறுவது - தபாலில் அனுப்ப முடியுமா -பணம் எப்படி எங்கு செலுத்த வேண்டும்

விப்ராம் விளக்கினால் நலமாக இருக்கும்

நல்வாழ்த்துகள்

பாலா said...

அடியேன் பாலசுப்ரமணியம் தாங்கள் உரை எழதிய திருமந்திரம் தனை தினசரி படிக்கிறேன் ....ஆதி பரமபொருள் தருகிற ஊக்கம் நன்றிங்க