Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, December 10, 2009

பழைய பஞ்சாங்கம் 11-12-2009

”ஸ்ஸ்...ப்பா இவனை வைச்சுக்கிட்டு....”

மாணவர்களுடன் கோவிலுக்கு பயணமாகி இருந்தேன்.எல்லோரும் கோவில் நுழை வாயிலில் செல்லும் முன்னால் என் காது அருகில் கிசு கிசுத்தான் சுப்பாண்டி.

“ஸ்வாமி நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை. எல்லோரும் சமம்னு சொல்லி தத்துவம் மட்டும் பேசரீங்க. ஆனா கோவிலுக்கு வந்தா எல்லா தகவலும் நீங்களே விளக்கறீங்க. இந்த ஒருமுறை நான் விளக்கவா? நானும் நீங்களும் சமம் தானே?” என்றான்.


திடீரென இப்படி கேட்க எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. சுப்பாண்டியை பார்த்து ’சரி’ என தலையாட்டினேன்.

கோவில் முன் பிரகாரத்தில் நுழைந்தவுடன் மாணவர்கள் அனைவரும் என்னை சூழ்ந்து நின்றார்கள்.. கோவிலின் உள் நுழைந்ததும் நான் தல வரலாறு கூறி கோவிலின் விஷேஷங்களை கூறுவேன். அதற்காக காத்திருந்தார்கள். சுப்பாண்டி என்னை புரியாமல் பார்க்க... நான் அவன் காதருகில்.. “தல வரலாறு...ம்ம்ம்ம்” என்றேன்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு...”முதலில் பிரேம புஸ்தகம் தான் தெலுங்கில வந்துச்சு.. அதுக்கு முன்னாடியே அமராவதியில் வர்க் பண்ண ஆரம்பிச்சுட்டார்...” என துவங்க.. எனக்கு புரிந்து அவன் கால்களை மிதித்து... நான் கோவிலின் தல வரலாறு கூறத் துவங்கினேன்.

-------------------------------------------------
ப்ரணவச் சுற்று

கோவிலுக்குள் வலம் வரும் பொழுது சண்டிகேஸ்வரர் என்ற சன்னிதி கருவறை பார்த்து இருப்பதை கண்டும் சிலர் அதில் கைத்தட்டி வணங்குவதை கண்டு மாணவர்கள் ஏன் இந்த சன்னதி அப்படி இருக்கிறது? ஏன் கைத்தட்டுகிறார்கள் என கேட்டார்கள்.

மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என கண்களில் கெஞ்சிய சுப்பாண்டி கூறத்துவங்கினான்.

“கிழக்கு பார்த்து இருக்கும் கோவில் கருவறை முன் நின்று வணங்கிவிட்டு, இடப்புறமாக வலம் வந்து கருவறையின் புன்புறமாக வரும் பொழுது நாம் அரைவட்டம் அடித்திருப்போம். சண்டிகேஸ்வர் சன்னிதியில் வணங்கிவிட்டு தீபஸ்தம்பத்தில் சுற்றை நிறைவு செய்தால், நாம் வலம் வந்த பாதை தமிழில் ’ஓ’ என வந்தது போல இருக்கும். உடலால் ப்ரணவம் சொல்லும் முறைதான் கருவறையை வலம் வருதல். இங்கே கைத்தட்டுவது எல்லாம் தப்பு. அமைதியா கடவுளை வணங்கனும். புரிஞ்சுதா?” என்றான் சுப்பாண்டி. எல்லோரும் அவனை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

சில மாணவர்கள் கேட்டார்கள், “எப்படி சுப்பு இப்படி கலக்குற? இதையெல்லாம் யார் சொல்லித்தந்தா?” என கேட்டனர். என்னை பார்த்தவாறே...கூறினான். “அதெல்லாம் தானா பொங்கும்...”

“பட்”... இது நான் தலையில் அடித்துக்கொண்ட சத்தம் தான். :)

------------------------------------------------------------
தமிழு வாலுக

இணையத்தில் தமிழ் வளர்த்துகிறேன் என சிலர் செய்யும் அளவு கடந்த மொழிபெயர்ப்பு தாங்க முடியவில்லை. தூய தமிழில் பேசுவது என்பது சாத்தியம் என்றாலும் அதில் பேசியே தீருவேன் என சத்தியம் செய்தது போல இவர்கள் செய்யும் கலாட்ட கொஞ்ச நஞ்சமல்ல.

500 வருடங்களுக்கு முன் தமிழ் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது என வித்தியாசத்தை உணர்ந்தாலே தமிழ் தன்னை மாற்றிக்கொண்டே வளர்ந்து கொண்டும் இருக்கிறது என புரியும்.

என் பேச்சிலும், எழுத்திலும் பிற மொழி கலப்பு உண்டு. (கோவியார் கூட நான் எழுதிய இடுக்கையின் வரிகளை தமிழில் மொழிபெயர்ப்பார் :) .) ஆனால் எனக்கு உருப்படியாகவும் முழுமையாகவும் தெரிந்த மொழி என்றால் அது தமிழ் மட்டுமே.

திருமந்திரம் துவங்கி சித்தர்கள் பாடல்கள் வரை நான் மிகவும் நேசிக்கும் பாடல்கள் இருப்பது தமிழில் தான். ஆனால் இணையத்தில் சிலர் பொருட்களின் பெயர்களை தமிழ் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

மென்பொருள், விசைப்பலகை என கணினி சார்ந்த பொருட்களை தமிழாக்கினால் நான்றாக இருக்கும். ஆனால் இவர்கள் அந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவன பெயர்களை தமிழாக்கம் செய்வது தான் வேடிக்கை. பிரவுசர் என்பதை உலாவி என மொழியாக்கலாம். ஆனால் firefox என்பதை செந்தழல் நரி என்றும் நெருப்பு நரி என்றும் மொழி பெயர்ப்பது கொஞ்சம் கூடுதல் (ovar - என்பதன் தமிழ் சொல்). இப்படியே போனால்...

சோனி நிறுவனத்தில் கணினியை சத்தில்லா மடிக்கணினி என சொல்லுவார்களா?
நுண்மெல்லிய ஜன்னல் ஏழு என Mircosoft windows 7 சொல்லுவார்களா?

இதை எல்லாம் கூட பொருத்துக்கொள்ளலாம். you tube - இதை மொழிபெயர்த்தால் அபத்தமாக இருக்கிறது. - you tube -யை கண்டேன். இதை தமிழ் படுத்திப்பாருங்கள் கஷ்டம் புரியும்...! பொருட்களை தமிழாக்கலாம். நிறுவனபெயர்களை தமிழ் “படுத்த”க்கூடாது என்பது இந்த தமிழ் சூழ் சில்வண்டின் வேண்டுகோள்.

---------------------------------------------------------------------------------

ஜென் கவிதை

பார்வைக் கோளாறு

கண் பார்வை மங்கியதால்
கண் கண்ணாடி அணிந்தேன்.
பார்க்கும் காட்சிகள் தெரிந்தது.
எங்கு பார்த்தாலும்
கண்ணாடி தெரியவில்லை.

13 கருத்துக்கள்:

SRI DHARAN said...

//you tube - இதை மொழிபெயர்த்தால் அபத்தமாக இருக்கிறது. - you tube -யை கண்டேன். இதை தமிழ் படுத்திப்பாருங்கள் கஷ்டம் புரியும்...!//

சும்மாவா சொன்னாங்க மெல்லத் தமிழ் இனிச்சாகும்னு. ரைட், ஏதோ சில பல காலங்களுக்கு முன்பு வந்த ஆங்கில மொழி இன்று இவ்வளவு செல்வாக்கோடு இருப்பதற்குக் காரணம் பிறமொழி சொற்களை தன்பால் ஈர்த்துக்கொண்டதுதான் ( லாடின்னிலிருந்து , பிரெஞ்சுலிருந்து, ஏன் நம்ம தமிழிளிருந்து கூடத்தான்....... ) ஆனால் தொன்று தொட்டு விளங்கிவரும் தமிழ் மொழி சாகும் என்று நினைக்கும் அளவிற்கு சென்றதுக்கு என்ன காரணம் ? ( என்னமோ சொல்லவந்தேன் ஆனா...... )

ஷண்முகப்ரியன் said...

'Interesting' என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன ஸ்வாமிஜி?
அப்படி இருந்தது இந்தப் பதிவு.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிரிதரன். (வடமொழி கூடாதாம் :) )

பிற மொழி சொற்களை பயன்படுத்தலாம் டவறல்ல அதற்காக 50% பயன்படுத்துவது தவறு.

கீழ்கண்ட வாக்கியத்தை பாருங்கள் :

”நான் லேட்ட வருவேன்.பை “
இதில் 50% ஆங்கிலம் இருக்கிறது. இவ்வாறு பிற மொழிகள் இணைந்தால் தமிழுக்கு சிரமம் தான்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்பிரியன்,

தற்காலத்தில் இண்ட்ரஸ்டிங் என்பது தமிழ் வார்த்தையாகிவிட்டது :)
உங்கள் வருகைக்கு நன்றி.

பாவா ஷரீப் said...

“தல வரலாறு...ம்ம்ம்ம்”

செம காமெடி சாமி

creativemani said...

சுப்பாண்டியின் "தல" வரலாறும் , பிரணவச் சுற்றின் விளக்கமும் அருமை ஸ்வாமிஜி..

Shakthiprabha said...

'பார்வை கோளாறு' கவிதை மிக நுண்ணிய பொருள் உணர்த்தும் அருமைக் கவிதை.

sarul said...

//உருப்படியாகவும் முழுமையாகவும் தெரிந்த மொழி என்றால் அது தமிழ் மட்டுமே.//

அவையடக்கம் இருக்கலாம் அதற்காக இப்படியா
ப்ரணவபீடத்தில் இந்தக்கல்லக்கு கலக்குறீங்க,சமஸ்கிருதம் அத்துப்படி
இதெல்லாம் ரொம்பவே “அதிகம்”

(over இன் தமிழாக்கம் ,இதிலிருந்து எனக்குத் தமிழும் சுத்தமாகத்தெரியாதென்பது தெரிந்திருக்கும்.)

“அதெல்லாம் தானா பொங்கும்...”
இதிலும் சுப்பாண்டி தன் குருவை காப்பி அடித்த்ருக்கலாம்-:)) ஹி ஹி
(சும்மா ஜோக்குக்குத்தான்)

சுத்தத் தமிழ் என்று புலம்புபவர்கள் ஏதாவது technical subject படித்துப்பார்க்க வேண்டும் ,அப்போது தெரியும் சேதி.

இவர்கள் காட்சியைப்பார்ப்பதை விட்டு விட்டு கண்ணாடியை நோண்டுகிறார்கள்.

இப்படிச் சொல்லலாம்

காட்சியை ஆராயமல் கண்ணாடியை ஆரய்ந்தேன்
காட்சியும் தெரியவில்லை கண்ணாடியையும் காண்வில்லை

இப்படிக்கு
சின்னச்சுப்பாண்டி

சிவகாசி ராம்குமார் said...

swamy eppo "KASI SWASI" ..............i am waiting this post because i am going to varanasi 23dec. i like to read before my tour program atleast one post about "KASI SWASI"

கிரி said...

// பொருட்களை தமிழாக்கலாம். நிறுவனபெயர்களை தமிழ் “படுத்த”க்கூடாது என்பது இந்த தமிழ் சூழ் சில்வண்டின் வேண்டுகோள்.//

சுவாமி ஏற்றுக்கொள்ளும்படி தான் உள்ளது :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

மொழி பெயர்த்து தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் தீவிர எலக்கியவாதினு சொல்லிக்குவாங்க.... ;-)

கோவி.கண்ணன் said...

//”நான் லேட்ட வருவேன்.பை “
இதில் 50% ஆங்கிலம் இருக்கிறது. இவ்வாறு பிற மொழிகள் இணைந்தால் தமிழுக்கு சிரமம் தான்.

//

பேச்சு - இருவருக்குமிடையிலேயான உரையாடல், பரவல் விழுக்காடு குறைவே. ஆனால் எழுத்து பரவலாக சென்று அடையும், உரையாடலில் இருக்கும் ஆங்கிலக் கலப்பிற்கும், எழுத்தில் எழுதும் ஆங்கிலக் கலப்பிற்கும் இது தான் வேறுபாடு. பேச்சு வழக்கில் ஆங்கிலம் அல்லது பிற மொழிக் கலப்பை குறைக்க அதை எழுத்தில் பழகிக் கொள்ளும் போது நடைமுறைக்கு வந்துவிடும். 60 ஆண்டுக்கும் முன்பு இருந்த உரை நடை, பேச்சு ஆகியவற்றையும் தற்போது உள்ளவற்றையும் ஒப்பிட்டால் உங்களுக்கு அந்த வேறுபாடு விளங்கும் என்று நினைக்கிறேன்.

////you tube - இதை மொழிபெயர்த்தால் அபத்தமாக இருக்கிறது. - you tube -யை கண்டேன். இதை தமிழ் படுத்திப்பாருங்கள் கஷ்டம் புரியும்...!//

நீங்கள் tube என்பதை குழாய் என்ற மொழிப் பெயர்ப்பில் மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறீர்கள் !

Main Entry: duct
Part of Speech: noun
Definition: channel, pipe
Synonyms: aqueduct, canal, conduit, course, funnel, passage, tube, vessel, watercourse
Main Entry: flue
Part of Speech: noun
Definition: pipe
Synonyms: channel, chimney, duct, exhaust pipe, passage, smoke duct, tube, vent
Stainless Steel Tubes
Singapore Supplier of Stainless Steel Tubes and Fittings
www.chuankok.com.sg

Send Money To India Free
Fast, Safe & Secure. A Times Group Company. Indians Register Now!

Sponsored ResultsRemit2India.com/FreeMoneyTransfer

Main Entry: gutter
Part of Speech: noun
Definition: ditch
Synonyms: channel, conduit, culvert, dike, drain, duct, eaves, fosse, funnel, gully, moat, pipe, runnel, sewer, sluice, spout, sulcation, trench, trough, tube, watercourse
Main Entry: railroad
Part of Speech: noun
Definition: train line
Synonyms: elevated railway, line, metro, monorail, rail line, railway, streetcar line, subway, tracks, trolley line, tube, underground railway
Main Entry: television
Part of Speech: noun
Definition: visual and audio entertainment transmitted via radio waves
Synonyms: TV, TV set, audio, baby-sitter, boob tube, box*, eye*, idiot box, receiver, small screen, station, telly, tube, vid, video
* = informal/non-formal usage
Main Entry: trench
Part of Speech: noun
Definition: ditch, channel dug in earth
Synonyms: arroyo, canal, cut, depression, dike, drain, drill, dugout, earthwork, entrenchment, excavation, fosse, foxhole, furrow, gorge, gulch, gully, gutter, hollow, main, moat, pit, rut, sink, trough, tube, waterway

http://thesaurus.reference.com/browse/tube

******

பெயர் சொல்லை மொழிப் பெயர்க்கலாம், நிறுவனப் பெயரை மொழிகளின் சொல் அமைப்பு ஏற்றவாறு மாற்றி வழங்கலாம், தவறே இல்லை, செருமானிய / மற்றும் இதர மொழிகளின் நிறுவனப் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றி எழுதப்படும் போது குளறுபடிகள் நடப்பது உண்டு. ஆனாலும் செய்தே வருகிறார்கள். அவரவர் மொழியில் அழைத்துக் கொள்ளவே அவரவர் விரும்புவர். உங்களுக்கு சீன மாணவர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள்.

Unknown said...

This topic is very super i am expect next post thank you.