Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, December 25, 2009

காசி சுவாசி - பகுதி 2

யஸ்யாமிதம் கல்பிதமிந்த்ரஜாலம்
சராசரம் பாதி மனோ விலாஸம் மி
ஸச்சித்ஸுகைகா பரமாத்மாரூபா
ஸா காசிதாஹம் நிஜபோதரூபா மிமி

இந்திர ஜாலம் போல இந்த உலகமானது நம் மனதில் மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. இவை அனைத்தும் மனம் போன போக்கில் தோற்றுவிக்கபட்டது. பரமாத்மாவின் சத்- சித்- ஆனந்த ரூபமே காசி நகரம். ஆகவே நான் காசியாக இருக்கிறேன்...!

-ஆதிசங்கரர்.

----------------------------------------------

உலகின் புகழ் பெற்ற நகரங்களில் தொன்மையானது என காசியை கூறலாம். காசி என்பது எந்த மதத்திற்கும் சார்ந்த நகரம் அல்ல. இந்த செய்தி உங்களுக்கு சற்று ஆச்சரியமாக இருக்கலாம்.

இந்துக்கள்,ஜைனர்கள்,சமணர்கள்,முகமதியர்கள், சீக்கியர்கள் என ஆசிய கண்டத்தின் அனைத்து மதத்தினருக்கும் ஒருவித இறைவழிபாடு செய்யும் முக்கிய நகரமாக வாரணாசி விளங்குகிறது.

இந்துக்களின் திருமணத்தில் காசி யாத்திரை என்ற ஒரு நிகழ்வு உண்டு. அதாவது ஒருவர் தனது வாழ்க்கையை துறந்து சன்யாசம் பெற்றுக்கொள்ளும் செயலை குறியீடாக சொல்லுவது காசியாத்திரை. பிறகு மணமகனின் மனதை மாற்றி திருமணம் செய்வது போல இந்த நிகழ்வை செய்வார்கள். முன்காலத்தில் உணர்வு பூர்வமாக இருக்கும் ஒரு நிகழ்வு, தற்பொழுது உணர்வற்று வெறும் சடங்காக இருக்கிறது. நம் கோவிலில் முன்பு பக்தியுடன் செய்யும் பூஜைகள் நாளடைவில் இவ்வாறு சடங்காக மாற்றம் கொள்வது உண்டு.

காசி யாத்திரை என்ற இந்த சடங்கை திருமணத்திலிருந்து தப்பிக்க மண மகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு என வேடிக்கையாக சொல்லுவார்கள்.

வாரணாசியின் நகர வடிவமைப்பு சற்று வித்தியாசமானது. நகரம் முழுவதுமே ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கும் சிறுவர்களுக்கான வலைவிளையாட்டு போன்று பல சந்துகள் கொண்டது. சாலைகள் என்பதே கிடையாது. அனைத்தும் சந்துகள் தான். உங்கள் இரு கைகளையும் அகல விரித்துக்கொண்டு நடுவில் நின்றீர்கள் என்றால் உங்கள் உள்ளங்கையில் சலையின் இரு புறமும் தட்டுப்படும். அவ்வளவு குறுகிய சந்துகள். ஒருவிதத்தில் வாரணாசியின் அமைப்பில் சுவாரசியம் கூட்டுவது இந்த சந்துகள் தான்.

ஒரு தூய்மையான காசி தெரு

பழம்பெரும் நகரம் எல்லாம் நாளடைவில் கட்டிட ஆக்கிரமிப்புகளால் குறுகும் என நாம் அறிவோம். ஆனால் காசிநகரம் இதிலும் வித்தியாசமானது. ஆக்கிரமிப்பு இருக்க கூடாது என்பதற்காக இங்கே கட்டிடங்கள் கட்டபட்டது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் காசி குறுகிய சந்துகளால் ஆனது அல்ல.

ஆப்கான் தேசத்தவர்களின் படையெடுப்பால் இந்தியாவில் பல நகரங்கள் கொள்ளையடிக்கபட்டது. அதில் குஜராத்தில் உள்ள சோமநாத் கோவிலும், காசியில் உள்ள விஸ்வநாத் கோவிலும் முக்கியமானது. இவ்வாறு தொடர் கொள்ளையால் கோவில்கள் சிதைக்கபட்டு, அதில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயின. சில முட்டாள் ஆப்கான் அரசர்கள் இஸ்லாமியத்தை கடைபிடிக்கிறேன் என பல கோவில்களில் இருக்கும் மூர்த்தங்களை மூர்க்கமாக சிதைத்தார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன் இந்தியாவின் ஜோதிர்லிங்க கோவில்கள் மிகவும் சிறப்பன செல்வ நிலையில் இருந்தன. இதனால் கோவிலை அழித்த மாதிரியும் ஆயிற்று செல்வம் கிடைத்த மாதிரியும் ஆயிற்று என அத்துமீறல்களை செய்தார்கள்.

காசி என்ற நகரில் விஸ்வநாதர் கோவில் ஜோதிர் லிங்கத்தில் ஒன்று மற்றும் முதன்மையானது. அதனால் அதில் செல்வத்தின் அளவு அதிகமாகவும், மக்கள் வணங்குவது அதிகமாகவும் இருந்தது. இதனால் அங்கே கொள்ளையடிக்க வந்த ஒளரங்க சீப் போன்றவர்கள் முதலில் சிதைக்க நினைத்தது விஸ்வநாதர் கோவிலையும் அதன் உள் இருக்கும் விஸ்வநாதரின் லிங்கத்தையும் தான்.
சுகந்திரமான சன்யாசியும், சட்டத்தில் அடைக்கபட்ட சம்சாரியும்
என்ற தலைப்பில் ஒரு உலகப்புகழ் புகைப்பட கலைஞர் எடுத்த படம். :))


முகமதிய அரசர்களின் படை நெருங்கக் கூடாது என்பதற்கும் எளிதில் அடையாளம் கண்டறியக்கூடாது என்பதற்கும் பல சந்துகள் மற்றும் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து விஸ்வநாதர் இருக்கும் இடத்தை மறைத்தார்கள். காசியின் முக்கியவீதியில் இருந்து எந்த பக்கம்

திரும்பினாலும் சந்துகளாகவே இருக்கும். அனைத்தும் ஒன்று போலவே இருக்கும். மக்கள் தங்கள் கோவிலை காப்பாற்ற செய்த இந்த முயற்சிகள் சில காலம் கைகொடுத்தது. முக்கிய வீதியிலிருந்து கோவில் இருக்கும் இடம் வரை இரண்டு கிமீ தூரம் சந்துகள்தான். சிறிய கார் கூட செல்ல முடியாது. சரக்கு எடுத்து செல்லும் மூன்று சக்கர சைக்கிள் சென்றாலே எதிரில் வருபவர்கள் நடக்க முடியாது.

எனக்கு பிடித்த சந்துகளில் இதுவும் ஒன்று

காசியில் இந்த நகர கட்டமைப்பு உலகின் எந்த பகுதியிலும் இல்லை என்பது சிறப்பு. இந்த வீதிகளில் நடந்தால் இதற்கு முன் எப்பொழுதோ இங்கே வந்தது போன்ற உணர்வு இருக்கும். புதிய இடமாக இருக்காது. இந்த திருப்பத்தில் வலது பக்கம் திரும்பினால் இன்ன இடம் என்பது போல எல்லாம் பழகிய இடமாக இருக்கும். சந்துகள் எல்லாம் வளைவுகளாக இருந்தாலும் இந்த வலையினுள் தான் விஸ்வநாதரும் இருக்கிறார்.

இப்படி மக்கள் பிறரிடம் இருந்து பாதுகாத்து வைத்து புனிதமாக வணங்கி வந்த விஸ்வநாதருக்கு வந்தது ஒரு சங்கடம். ஆறுகால பூஜை நடந்து வந்த லிங்க திருமேனியின் மேல் ஒரு அகோரி என்ன செய்தார் தெரியுமா?

நின்ற வாக்கில் சிறுநீறு கழித்தார்...!

அவரை திட்டிக்கொண்டிருங்கள்..... மீண்டும்....

(சுவாசிப்பேன்...)

19 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

அப்படி அவசரமாக "உச்சா" வரும் போது அந்த அகோரி அங்கு ஏன் போனார்?ஒரு வேளை கூட்டம் அதிகமோ கருவறையில்? வெளியே வரமுடியாவிட்டால் பாவம் அவர் என்ன செய்வார்?
ரவுண்டா யாராவது தட்டாமாலையா சுற்ற விட்டுருப்பார்கள் அது விஷ்வநாதர் மேலேயும் பட்டிருக்கும். :-))

sarul said...

படத்தில் உங்கள் அருகில் நின்றவாக்கில் ----------
( மரியாதை காட்டுகிறாரா அல்லது நீங்கள் இருக்கும் கதிரைக்குச் சொந்தக்காரரா )
இவர்தான் உண்மையான் சுப்பாண்டியா

கோவி.கண்ணன் said...

//ஐநூறு வருடங்களுக்கு முன் இந்தியாவின் ஜோதிர்லிங்க கோவில்கள் மிகவும் சிறப்பன செல்வ நிலையில் இருந்தன. இதனால் கோவிலை அழித்த மாதிரியும் ஆயிற்று செல்வம் கிடைத்த மாதிரியும் ஆயிற்று என அத்துமீறல்களை செய்தார்கள்.//

கோவில்கள் கோவில்களாக இல்லாமல் கொள்ளையரின் கூடரமாக இருந்ததால் தான், திடிரென்று புதிதாக கொள்ளை அடிக்கவருபவர்களை தடுக்க முடியாமல் போயிற்று என்று நினைக்கிறேன். உணர்வுபூர்வமாக இருந்தால் கோவில் என்பது மானப்பிரச்சனையாகி உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றி இருப்பார்கள்.

கோவி.கண்ணன் said...

//நின்ற வாக்கில் சிறுநீறு கழித்தார்...!

அவரை திட்டிக்கொண்டிருங்கள்..... மீண்டும்....//

அத்வைதி இப்படிச் சொல்லலாமா ? எங்கு தான் இல்லை இறைவன் ?
:)

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

நல்ல விளக்கமான இடுகை. சந்துகள் ஏன் அதிகம் இருக்கின்றன எனத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
ஆறுகால பூஜை செய்யப்பட்ட லிங்க மேனிக்கு அகோரி செய்த செயலை பகிரங்கப்படுத்த வேண்டுமா - தவிர்த்திருக்கலாமே

நல்வாழ்த்துகள்

hayyram said...

gud

regards,
ram

www.hayyram.blogspot.com

மதி said...

>>>வந்த லிங்க திருமேனியின் மேல் ஒரு அகோரி என்ன செய்தார் தெரியுமா?

நின்ற வாக்கில் சிறுநீறு கழித்தார்...!>>

நிஜமவா...நம்பவே முடியல....

>>அவரை திட்டிக்கொண்டிருங்கள்.....<<

எதுக்கு வம்பு....

ரங்கன் said...

அகோரிகளைப் பற்றிய உங்கள் கட்டுரைகளைப் படித்தபின்பு திட்டமுடியவில்லை - எதோ ஒரு காரணம் இருந்திருக்கவேண்டும் - தங்கள் விளக்கத்துக் காத்துக்கொண்டிருகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்,
மொத்த கட்டுரையில் உச்சா வரிகள் மட்டும் உங்களை பாதிச்சுருச்சோ :)

திரு கேஎஸ்,

அவர் சுப்பாண்டி அல்ல. என் மாணவர் சீனு ராதா. :) சுப்பாண்டிக்கு விளம்பரம் பிடிக்காது.

திரு கோவி.கண்ணன்,

ஜோதிர்லிங்க கோவில்களை பற்றிய இருள் வரலாறு உண்டு. எத்தனையோ பேர் உயிர் கொடுத்து காத்ததனால்தான் இன்னும் ஜோதிர்லிங்க ஸ்தலங்களை தரிசிக்க முடிகிறது. இல்லை என்றால் அங்கே தரிசு நிலங்கள் தான் இருந்திருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,
//அத்வைதி இப்படிச் சொல்லலாமா ? எங்கு தான் இல்லை இறைவன் ?
:)//

உங்களிடம் நான் எதிர்பார்த்த பின்னூட்டம் வேறு :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சீனா,

//ஆறுகால பூஜை செய்யப்பட்ட லிங்க மேனிக்கு அகோரி செய்த செயலை பகிரங்கப்படுத்த வேண்டுமா - தவிர்த்திருக்கலாமே//

அவர் மறைமுகமாக செய்யவில்லையே. அவரும் பகிரங்கமாக அல்லவா செய்தார். :)

உங்கள் கருத்துக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஹேராம்,

திரு மதி,

திரு ரங்கன்,


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குசும்பன் said...

அருமையாக செல்கிறது காசி சுவாசி!


//அவர் சுப்பாண்டி அல்ல. என் மாணவர் சீனு ராதா. :) //

சீனு ராதான்னு சொல்றீங்க அங்க ஒருத்தர் தான் நிற்கிறார்:)

Unknown said...

i think he is safe from theft of afhan

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\இந்த வீதிகளில் நடந்தால் இதற்கு முன் எப்பொழுதோ இங்கே வந்தது போன்ற உணர்வு இருக்கும். புதிய இடமாக இருக்காது. இந்த திருப்பத்தில் வலது பக்கம் திரும்பினால் இன்ன இடம் என்பது போல எல்லாம் பழகிய இடமாக இருக்கும்.//

உண்மை தான்..
மேலும் அந்த வீதிகளைப் பற்றி என் அப்பா சொல்வாங்க சண்டை போட ஒரு ஒரு குதிரையாகத்தான் உள்ளே நுழையலாம். அப்ப உள்ளே இருக்கவங்க அதை தடுப்பதும் எளிதுன்னு. ஆனாலும் தான் கோயில் இடிக்கப்ப்ட்டு விட்டதே.. ஹ்ம்..

எம்.எம்.அப்துல்லா said...

// ஸ்வாமி ஓம்கார் said...


திரு கோவி.கண்ணன்,

ஜோதிர்லிங்க கோவில்களை பற்றிய இருள் வரலாறு உண்டு. எத்தனையோ பேர் உயிர் கொடுத்து காத்ததனால்தான் இன்னும் ஜோதிர்லிங்க ஸ்தலங்களை தரிசிக்க முடிகிறது. இல்லை என்றால் அங்கே தரிசு நிலங்கள் தான் இருந்திருக்கும்.

//

காப்பாற்ற வேண்டியது வேறு எங்கோ இருக்க வெறும் கட்டிடத்தைக் காப்பாற்ற உயிர் குடுப்பது கேணத்தனம். நான் பாபர் மசூதியையும் சேர்த்துதான் சொல்றேன்.

கோவி.கண்ணன் said...

//ஆறுகால பூஜை நடந்து வந்த லிங்க திருமேனியின் மேல் ஒரு அகோரி என்ன செய்தார் தெரியுமா?

நின்ற வாக்கில் சிறுநீறு கழித்தார்...!//

அந்த அஹோரி, தேவநாதன் அளவுக்கு துணிந்தவர் இல்லை தான்.

கிரி said...

//முன்காலத்தில் உணர்வு பூர்வமாக இருக்கும் ஒரு நிகழ்வு, தற்பொழுது உணர்வற்று வெறும் சடங்காக இருக்கிறது//

பல இப்படித்தான் தற்போது (புரிந்து கொள்ளாமலே)நடைபெறுகிறது

Mahesh said...

//காப்பாற்ற வேண்டியது வேறு எங்கோ இருக்க வெறும் கட்டிடத்தைக் காப்பாற்ற உயிர் குடுப்பது கேணத்தனம். நான் பாபர் மசூதியையும் சேர்த்துதான் சொல்றேன்.//

அப்துல்லா அண்ணனை வழிமொழிகிறேன் !!
(1 மாசத்துக்கு அப்பறம் புது வருஷத்துல என்னோட முதல் பின்னூட்டம் :)