Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, December 17, 2009

யோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா ?

ஆன்மீக வாழ்க்கையில் இருப்பதால் நான் வினை ஆற்றுவதில் கவனமாக இருப்பேன். கர்மாக்களை களைந்து இறை நிலையில் இருக்க முயற்சி செய்வது ஆன்மீக வாழ்க்கையின் ஒரு அங்கம். வினையற்று இருப்பதுவே தியானமும் சமாதியும் என என் ரகசிய எதிரி திருமூலரின் கருத்து.

அப்படி இருந்தாலும் இந்த தலைப்பில் எதிர்வினையாற்றலாமா என யோசித்தேன். என் சுய நலத்திற்காக ஒரு வினையோ, பிறருக்கு செய்வினையோ வைத்தால் தானே தப்பு :) . ஒரு சிந்தாந்தத்தை பற்றி மக்களுக்கு குழப்பம் வரும் பொழுது, அக்குழப்பத்தின் பதில் என்னிடம் இருந்தும் குழப்பங்களை கண்டு சும்மா இருந்தால் அதுவே தீவினையாக மாறுமல்லவா? என்ன ரொம்ப குழப்பமா இருக்கா? மேற்கொண்டு படியுங்கள். :)

யோகம் என்பதும் தியானம் என்பதும் பலர் குழப்பிக்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

அஷ்டாங்க யோகம் என்ற ஒரு முறை உண்டு. அது யாமம், நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு நிலைகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்ற பெயர் பெறுகிறது.


பதஞ்சலி என்பவர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை என்ற அழைப்படுகிறார். அதற்கு முன் பலர் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றினாலும் புத்தக வடிவில் அஷ்டாங்க யோகத்தை வடித்தவர் பதஞ்சலி. இவர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவரை பற்றி கூற பல விஷயங்கள் உண்டு. இருந்தாலும் இவர் கூறும் சில வார்த்தைகளை கொண்டு நம் கேள்விக்கு பதில் தேடுவோம். அவர் கூறும் சூத்திரங்களில் முதலில் எடுத்தவுடனேயே கூறுவது

“யோகா சித்த விருத்தி நிரோதனா”

இதன் பொருள் , யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.

நம் மனநலத்தின் காரணமான சித்தம் மேம்படுகிறது. சித்தம் என்பது உணர்வதற்கு அரிய ஒரு உள் மன கட்டமைப்பு. பதஞ்சலி நம்முள் இருக்கும் மனம் என்ற உள்நிலையை மூன்று கட்டமைப்புகளாக பிரித்து பதஞ்சலி யோக சூத்திரத்தில் ஆய்வு செய்கிறார். அவை மனம், சித்தம், புத்தி என வகைப்படுத்துகிறார்.

பதஞ்சலியின் இந்த அலசல் அசாத்தியமானது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு மனிதன் மனோத்தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் இப்படி அலசமுடியுமா என யோசித்ததால் எனக்கு பல நாள் தூக்கம் கேட்டது உண்டு.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் இறைவன் என ஒருவன் இருக்கிறான் என ஒரே ஒரு இடத்தில் மறைமுகமாக கூறுவதுடன் நிறுத்திவிடுகிறார். வேறு எங்கும் இறைவனையோ வழிபாட்டு முறையை பற்றியோ கூறுவதில்லை.

நீ இருக்கிறாய் உனக்கு கூறுகிறேன் என்ற கட்டமைப்பில் அமைந்தது பதஞ்சலி யோக சூத்திரம். மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறலாம்.மேலை நாடுகளில் தத்துவ பள்ளிகளிலும், பல பல்கலைகழகத்திலும் ஆய்வு நூலாக இருக்கிறது.

நம்
நாட்டில் பதஞ்சலி யோக சூத்திரம் என்பதை ஒரு படித்த மனிதனிடம் கேட்டால் பதஞ்சலியா? - பாஞ்சாலியின் தங்கச்சியா என கேட்கக் கூடும்.

நம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமை அடையும் நோக்கத்தில் செய்யபடுவதே யோக முறைகள். யோக முறை என்பது முன்பு ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கே பயன்பட்டு வந்து.

யோக முறை இருவகையாக தற்காலத்தில் இருவகையாக பயன்படுகிறது. ஒன்று யோக பயிற்சி மற்றொன்று யோக சிகிச்சை.

யோக பயிற்சி என்பது ஆன்மீக பாதையில் நம்மை செலுத்த உதவும் கல்வி. முன்காலத்தில் குருவுடன் இருந்து பயணித்து கற்றதை ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கற்றுக்கொள்ளும் பாஸ்ட் புட் பயிற்சிகள்.

இதை தீவிரமாக முயற்சி செய்தால் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும். இத்தகைய
பயிற்சிகள் ஆன்மீக கிண்டர் கார்டன் என வேடிக்கையாக சொல்லலாம்.

யோக சிகிச்சை என்பது தனி நபரின் உடல் குறைபாடுகள், மனக்குறைபாடுகள் கண்டு அதற்கான பயிற்சியை அளிப்பது. எளிமையாக சொல்ல வேண்டுமானல் அஷ்டாங்க யோகத்தை மருந்தாக கொடுப்பது பலரும் யோக பயிற்சியையும், யோக சிகிச்சையையும் போட்டு குழப்பிகொள்கிறார்கள். யோக பயிற்சியால் நிச்சயமாக நோய் குணமாகாது. எதிர்காலத்தில் வரும் நோயை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால் யோக சிகிச்சையால் குணமாக வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

யோக பயிற்சி மற்றும் யோக சிகிச்சை இரண்டுமே மிகவும் தேர்ச்சி பெற்ற நபர்களால் வழங்கப்பட வேண்டும்.

’தேர்ச்சி பெற்ற’ என்றவுடன் பல்கலைகழக பட்டயம் கேட்டாதீர்கள். பட்டயங்கள் எதுவும் யோகத்தில் வேலை செய்யாது. முழுமையாக உணர்ந்தது நீண்ட நாட்கள் செய்த பயிற்சி மற்றும் அனுபவமே அவர்களுக்கு பயன்படும். பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பானவர்கள் என கூற முடியாது அல்லவா? அது போன்றதே இது.

Yoga therapy research என இணையத்தில் தேடிப்பாருங்கள். பல கோடி மதிப்பில் உலகின் பல இடங்களில் ஆய்வுகள் நடந்துவருகிறது. இந்தியாவில் பூனாவிற்கு அருகில் கைவல்ய தாம் என்ற இடமும், முதல் யோக பல்கலைகழகமான பீஹார் ஸ்கூல் ஆப் யோகாவும் யோக சிகிச்சைக்கான தன் ஆய்வுக்கூடம் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

யோக சிகிச்சையில் எப்படி நோய் குணமாகும் என என்னிடம் கேட்காதீர்கள் அதற்கு மூன்று பதிவுகள் எழுத வேண்டி வரும்.

என்னிடம் யோக பயிற்சி செய்ய வருபவர்களிடம், நோய் குணமாக்குதல், சிகிச்சை என்பது நான் செய்வதில்லை என திட்டவட்டமாக கூறிவிடுவேன். யோக பயிற்சி பற்றிய விளம்பரங்களிலும் அத்தகைய சொற்கள் இடம்பெறாது. அதனால் தான் நான் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த துறையிலும் தவறானவர்கள் இருக்கவே செய்கிறார்கள். நான் வசிக்கும் ஊரில் கூட ஒரு யோக பயிற்சி கழகம் செய்யும் விளம்பரம் மிகவும் வருத்தத்தை கொடுக்கும். நாள் பட்ட ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் இந்த யோக பயிற்சியில் குணமாகும் என சுவரொட்டி அடித்து பயிற்சிக்கு அழைக்கிறார்கள்.

ஹரித்துவாரில் ஒரு ’யோக மன்னன் புலிகேசி’ இருக்கிறார். அவர் தனக்கு மீடியா வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக புற்று நோய் குணமாக்குவேன், எய்ட்ஸை குணமாக்குவேன் என பேட்டிகள் தருவார். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பத்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பார். யோக பயிற்சி அவ்வாறு வழங்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அவரிடம் முகபொலிவுக்காக வாங்கிய ஆயுர்வேத களிம்பை பயன்படுத்தி பலர் பழைய டெலிப்போன் நிறத்தில் திரிகிறார்கள்.

இந்த புலிகேசி மூன்று மாதத்திற்கு முன் ஹோமோ செக்ஸுவல் என்ற நோயை குணமாக்குகிறேன் என பேட்டிகொடுத்தது. இவர் நோயை யார் குணமாக்குவது? கொடுமையின் உச்சம் இவர் வைத்துள்ள யோக மருத்துவ மனைக்கு பதஞ்சலியின் பெயரை வைத்தது தான்.

எத்துறையிலும் கெட்டவர்களும் நல்லவர்களும் இணைந்தே இருக்கிறார்கள். நாம் பதஞ்சலியை போல ப்ரதிபக்‌ஷ பாவனையில் இருந்தால் நமக்கு மேன்மை மட்டுமே ஏற்படும். பதஞ்சலி, யோகமுறை என பல விஷயங்களை நீண்ட தொடராகவோ, கட்டுரையாகவோ அமைக்கலாம் என இருந்தேன். சூழல் கருதி முடிந்த வரை சுருக்கமாக இங்கே எழுதி இருக்கிறேன்.

வலையுலகம் என்பது நாம் நினைத்ததை எழுதும் இடமல்ல. பலர் பார்க்கும் சந்தையில் நடந்து செல்லுவதை போன்றது. நாம் நினைத்த செயலை இங்கே செய்தோமானால் பிறர் நம் மேல் வைத்திருக்கும் பிம்பம் உடைய வாய்ப்புண்டு. அதுவும் ஊரில் ஒரு நல்லவராக காட்சி அளிப்பவர் திடிரென சந்தை மைதானத்தில் பல்டி அடித்தால் என்னை போன்ற பிச்சைக்காரர்கள் எல்லாம் கருத்து சொல்ல வேண்டி வரும்.

எழுதும் முன் நமக்கு ஒரு விஷயம் நன்றாக தெரிந்தால் மட்டும் எழுதுவது நல்லது. இல்லை என்றால் மொக்கை பதிவுகள் , வேட்டைக்காரன் விமர்சனம், தெரியாத பெரியாரிசத்தை நாத்தீகம் என்ற பெயரில் பதிவு ஏதோ ஒன்றை போட்டு ஜோதியில் ஐக்கியமாகிவிடுவது சால சிறந்தது.

38 கருத்துக்கள்:

ஸ்வாமி ஓம்கார் said...

Nice post. Keep writing.

பின்னூட்ட டிஸ்கி : சம்பந்தப்பட்டவர் கூறப்போவதில்லை என்பதால் நானே கூறிக்கொள்கிறேன் ;)

எறும்பு said...

Nice post. Keep writing..

;-))

yrskbalu said...

மொக்கை பதிவுகள் , வேட்டைக்காரன் விமர்சனம்,

- lot of uesless blogs rounding here.

they survived by themselves. thats all.

but like you peoples motivate yourself for writing .

like me some peoples there to support.

Unknown said...

Nice post. Keep writing.

Paleo God said...

முழுமையாக உணர்ந்தது நீண்ட நாட்கள் செய்த பயிற்சி மற்றும் அனுபவமே அவர்களுக்கு பயன்படும். //

வாழ்க்கையில் மனிதனை தவிர மற்றெல்லா ஜீவராசிகளும் கடைபிடிக்கும் சூத்திரம் இது....

தொடரட்டும் உங்கள் பணி.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

Nice post. Keep writing.
:-)

Self Realization said...

Please keep on posting about patanjali yoga sutras swamji..I am very interested in that..Please teach me all the 8 techniques of astanga yoga swamji...since i want to realize myself..Thank you in advance..:))

Siva Sottallu said...

// ஆன்மீக கிண்டர் கார்டன் //

நல்ல தலைப்பு ஸ்வாமி.

அந்த "யோக மன்னன் புலிகேசி" யை நானும் தொலைகாட்சியில் பல தடவை பார்த்திருக்கிறேன் ஸ்வாமி.

எம்.எம்.அப்துல்லா said...

//நாள் பட்ட ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் இந்த யோக பயிற்சியில் குணமாகும் என சுவரொட்டி அடித்து பயிற்சிக்கு அழைக்கிறார்கள்.

//

ஸ்வாமி விவேகானந்தர் தீவிர ஆஸ்மாவால் அவதிப்பட்டவர்

:)

எம்.எம்.அப்துல்லா said...

ராஜகோபால் (எறும்பு) said...
Nice post. Keep writing..

;-))

//

அந்த சம்பந்தப்பட்டவர் நீங்கதானா?

:)))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு எறும்பு-ராஜகோபால்,

திரு பாலு,

திரு ஜெய்சங்கர் ஜகன்நாதன்,

திரு பலா பட்டறை,

திரு அருப்புக்கோட்டை பாஸ்கர்,

திரு செல்ஃப் ரியலைசேஷன்,

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே,

//ஸ்வாமி விவேகானந்தர் தீவிர ஆஸ்மாவால் அவதிப்பட்டவர்
//

விவேகானந்தர் அஷ்டாங்க யோகம் பயின்றவர் அல்ல. அஷ்டாங்க யோகம் பற்றி தெரிந்தவர் அவ்வளவே.

அவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. அதனால் ஆஸ்துமா அதிகமாகியது.

உடல் பயிற்சி தவிர அவர் ஆசன பயிற்சிகள் எதுவும் செய்தது இல்லை.


//அந்த சம்பந்தப்பட்டவர் நீங்கதானா?
//

பழி ஒர் இடம் பாவம் ஓர் இடம் ;)

இங்ஙனம்
போ.சா :)

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்...கடேசில எழுப்பின கேள்விக்கு பதில் சொன்ன மாதிரி தெரியலை. பதிவுகள் ஏதோ சில நிகழ்வுகளை குறித்து போடறீங்களோ? ஒண்ணும் புரியல.
:-|

Siva Sottallu said...

// விவேகானந்தர் அஷ்டாங்க யோகம் பயின்றவர் அல்ல. அஷ்டாங்க யோகம் பற்றி தெரிந்தவர் அவ்வளவே. //

ராஜா யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று பல புத்தகங்களை சுவாமி விவேகானந்தர் எழுதிருக்கிறாரே, இதில் எல்லாம் "தேர்ச்சி பெற்ற" ஒரு யோகி அவர் என்று நான் நினைத்தேன் ஸ்வாமி, நீங்கள் கூறியது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

புன்னகை said...

வணக்கம் ஸ்வாமி

விவேகானந்தரின் ராஜயோகம் படித்துத் திகைக்காதவர்கள் யார்.
எனினும் ஒரு ஆன்மீக நிகழ்வில் ஒருமாணவர் அவர் புகைபிடித்தார் நானும் பிடிக்கலாமா என்ற கேழ்வியை முன்வைத்தார்.

என்னைப்போன்ற ஞானசூனியங்கள் எல்லாம் படிக்கக்கூடும் என்று அவர் ராஜயோகம் எழுதாமல் விடவில்லை.

புல்லிற்குப் பொசியும் என்பதால் நெல்லிற்கு நீர்விடாமல் இருந்துவிடாதீர்கள்.

தயவுசெய்து எழுதுங்கள் , பலர் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ஷண்முகப்ரியன் said...

“யோகா சித்த விருத்தி நிரோதனா”


இதன் பொருள் , யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.//

இது சரியான மொழிபெயர்ப்பா,ஸ்வாமிஜி?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திவா,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,
//
ராஜா யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று பல புத்தகங்களை சுவாமி விவேகானந்தர் எழுதிருக்கிறாரே, இதில் எல்லாம் "தேர்ச்சி பெற்ற" ஒரு யோகி அவர் என்று நான் நினைத்தேன் ஸ்வாமி, நீங்கள் கூறியது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.//

அவர் அதில் தேர்ச்சி பெறவில்லை என நான் கூறவில்லையே? அதை அவர் பயிற்சி செய்ய வில்லை என்றுதான் கூறுகிறேன்.

அந்த புத்தகங்கள் எல்லாம் விவேகானந்தர் எழுதியது அல்ல. அவர் அமெரிக்காவில் செய்த உரைகளை தொகுத்து புத்தகமாக எழுதி இருக்கிறார்கள். உண்மையில் அவர் புத்தகம் எழுதியிருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும்...!

ராஜயோகம் என்ற அவரின் புத்தகம் அடிப்படை பாலபாடம். ராஜயோகத்தில் பல சக்கரவர்த்திகள் இருக்கிறார்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புன்னகை,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,
//இது சரியான மொழிபெயர்ப்பா,ஸ்வாமிஜி?//

இந்த இரு வார்த்தை பன்முக அர்த்தம் கொண்டது. அதில் ஒரே ஒரு அர்த்தத்தை நான் கொடுத்துள்ளேன்.

ஒரு சூத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய புத்தகமே எழுதலாம் என்பது உண்மை. அத்தனையும் ஒரு சிறு பதிவில் கொடுக்க முடியுமா?

உங்கள் வருகைக்கு நன்றி

எறும்பு said...

என்னவோ போங்க... இன்னும் சூடான இடுகைல இந்த போஸ்ட் வரலை.
விவாதம் களை கட்டும். நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன்...

ஆளே இல்லாத கடைல டீ ஆத்துறது கொஞ்சம் கஷ்டம்தான்...
;)))

கிருஷ்ண மூர்த்தி S said...

இதே தலைப்பில் வேறு ஒருவர் எழுதியிருந்ததையும் படித்தேன்!

மனநலம் சரியாக இருந்து எழுதினாரா, அல்லது கொஞ்சம் பிறழ்ந்த நிலையில் இருந்து எழுதினாரா என்பதெல்லாம் கூட அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

அதற்கு வினை, எதிர்வினை எல்லாம் இருக்கட்டும்!

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

//விவாதம் களை கட்டும். நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன்...//

நீங்க ரொம்ப எதிர்பார்க்கறீங்க. நான் அந்த அளவு வொர்த் இல்லைனு எல்லோருக்கும் தெரியும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருஷ்ண மூர்த்தி,

//மனநலம் சரியாக இருந்து எழுதினாரா, அல்லது கொஞ்சம் பிறழ்ந்த நிலையில் இருந்து எழுதினாரா என்பதெல்லாம் கூட அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
//

அப்படி எழுதினார்னு சொல்லையே...


//நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?//

பதிவில் அதைத்தான் சொல்லிட்டேனே :)

யோகம் மூலம் உடல் மற்றும் மன நோய் குணமாகும். ஆனால் தியானம் நோய் குணமாக்கும் மருந்தல்ல. பிறவி நோய் குணமாக்கும் மருந்து.

essusara said...

'ருத்ர' தாண்டவம் ஆடாமல் சரியாக சொல்லி இருகிறீர்கள். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

Dr.Rudhran said...

என் கேள்வி : நோய் தீர்க்குமா யோகா? yoga therapy மட்டுமல்ல flower therapy முதல் பல பற்றியும் கட்டுரைகள் உள்ளன. அவை சரியான ஆய்வுகளின் அடிப்படையில் உள்ளனவா?
பின்னூட்ட டிஸ்கி : சம்பந்தப்பட்டவர் -
i really like this post, as it reaffirms my belief and my experience.
keep writing.

Dr.Rudhran said...

sorry for coming in again, this is to keep track of (even) juvenile responses

Dr.Rudhran said...

நல்லவராக காட்சி அளிப்பவர் திடிரென சந்தை மைதானத்தில் பல்டி அடித்தால்.. எப்படி எல்லாம் தெரிந்த சாமிக்கு நல்லவனா பாவளாவா என்று தெரியவில்லை? முடிவு வரை போகலாமா ?
மைதானத்தில் பல்டி எப்போதும்தான் அடித்துக்கொண்டிருக்கிறேன்..இப்போது நீங்கள் பிச்சை எடுக்கும் எல்லையில் நுழைந்து விட்டேன் ..என்று நினைக்கவில்லை..நீங்கள்தான் வர்த்தகயோகா பண்ணுவாதில்லை என்று சொல்லிவிட்டீர்களே! விவாதம் தொடர எனக்கு விருப்பம், வேலையில்லாததால் அல்ல, இது ஒரு முக்கியமான வேலை என்று நினைப்பதால்

Siva Sottallu said...

// அஷ்டாங்க யோகம் பற்றி தெரிந்தவர் அவ்வளவே.

உடல் பயிற்சி தவிர அவர் ஆசன பயிற்சிகள் எதுவும் செய்தது இல்லை//

// அவர் அதில் தேர்ச்சி பெறவில்லை என நான் கூறவில்லையே? அதை அவர் பயிற்சி செய்ய வில்லை என்றுதான் கூறுகிறேன்.//

ஸ்வாமி, இதனால் நீங்கள் கூறவருவது, ஒருவர் அஷ்டாங்க யோகம் பற்றி தெரிந்து கொண்டு மட்டும் , அதில் அவர் தேர்ச்சி பெற்றவர் ஆகமுடியும் என்கிறீர்களா ஸ்வாமி?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ருத்திரன்,

உங்கள் வருகைக்கும் , கேள்விகள் மூலம் வலைபக்கத்தில் தொடர்பு கொண்டமைக்கும் என் முதல் நன்றிகள்.

//என் கேள்வி : நோய் தீர்க்குமா யோகா? yoga therapy மட்டுமல்ல flower therapy முதல் பல பற்றியும் கட்டுரைகள் உள்ளன. அவை சரியான ஆய்வுகளின் அடிப்படையில் உள்ளனவா?
//

Music நீங்கள் பரிந்துரைப்பது போல ஏனைய விஷயங்கள் மருந்தாக விளங்க வாய்ப்பு உண்டு.

பூனே நகருக்கு அருகில் இருக்கும் கைவல்ய தாம் என்ற யோக கழகத்தில் அறிவியல் ரீதியான ஆய்வுகள் நடத்தி அவற்றை பதிவு செய்திருக்கிறார்கள். யார் சென்றாலும் அவற்றை காணவும், யோகா கற்றவராக இருந்தால் ஆய்வில் கலந்துகொள்ளவும் முடியும்


ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவில் (minnesota) அறிவியல் உபகரணங்கள் கொண்டும் ஆய்வுகள் செய்கிறார்கள்.

விக்கியின் சுட்டி இதோ : http://en.wikipedia.org/wiki/Yoga_as_exercise_or_alternative_medicine

எத்தனையோ ஆய்வு புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. லாண்ட் மார்க் மற்றும் ஹிக்கிம்போதம்ஸ் சென்னையில் அதில் 25% புத்தகமாவது கிடைக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

ஆசனம், ப்ராணாயமம் மட்டுமே சிகிச்சையாக கொடுக்க முடியும்.

தியானம் சிகிச்சையாக கொடுக்க வாய்ப்பு இல்லை.

ஆசனம்,ப்ராணாயாமம் மருந்தாக கொடுத்தாலும் அவற்றை செய்யும் நிலையில் நோய் கொண்டவர் இருக்க வேண்டும் என்ற சிக்கல் உண்டு.

-----------------------------

பின்னூட்ட டிஸ்கி : சம்பந்தப்பட்டவர் -
i really like this post, as it reaffirms my belief and my experience.
keep writing.//

உங்கள் உற்சாகமான பதிலுரைக்கு நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ருத்திரன்,

அக்குபிரஷர் மற்றும் அக்குபஞ்சர் ஆகிய மாற்று மருத்துவ முறைகள் எவ்வளவு தூரம் அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்ய முடியும் என்பது எனக்கு தெரியாது.

ஆனால் யோக ஆசன மருத்துவ முறை கண்டிப்பாக நிரூபணம் செய்ய முடியும்.

உங்களை போன்ற சான்றோர்கள், கற்றவர்கள் திறந்த மனதுடன் கைகோர்த்தால் நான் நிச்சயம் இந்த ஆய்வை செய்து காட்ட விரும்புகிறேன்.

சமூகத்திற்கு நல்ல ஒரு விஷயத்தை கொடுத்த திருப்தியே இதன் நோக்கமாக இருக்கிறது.

இந்திய அரசின் இயற்கை மருத்துவம் என்ற மாற்று மருத்துவ துறையில் யோக பயிற்சி என்பது ஒரு மருந்தாக இருக்கிறது. சுட்டி :-http://punenin.org/index.htm

பூனேயில் இருக்கும் இந்த தலைமை மருத்துவ மனை பரவலாக யோக சிகிச்சையை ஆதரிக்கிறது(மருத்துவம்-அறிவியல் விளக்கத்துடன்)

சூழல் அமைந்தால் இக்கருத்தை மேலும் விரிவாக அலசலாம்.
------------------------------

//எப்படி எல்லாம் தெரிந்த சாமிக்கு நல்லவனா பாவளாவா என்று தெரியவில்லை? முடிவு வரை போகலாமா ?
மைதானத்தில் பல்டி எப்போதும்தான் அடித்துக்கொண்டிருக்கிறேன்..இப்போது நீங்கள் பிச்சை எடுக்கும் எல்லையில் நுழைந்து விட்டேன் .//

எல்லாம் தெரிந்த சாமி அல்ல நான்.
நான் உங்களுடன் விவாதம் செய்யும் அளவுக்கு கற்றவனில்லை. இறையருள் கொடுத்த அறிவுடன் உலகை காண்பவன்.

உங்களை போன்று சமூகத்தில் பிரபலமானவர்கள் கூறும் கருத்து பரவலாக சென்று அடையும். அந்த சமூகத்தில் இருக்கும் ஒரு பிச்சைக்காரன் என்ற நிலையில் உங்களின் கருத்தை சுட்டிகாட்ட நினைத்தேன். அவ்வளவு தான்.

என்னை போன்றவர்கள் தவறான தகவல்கள் கொடுத்தால் எவறையும் பாதிக்காது. காரணம் நான் சமூகத்தில் சிறு குப்பை. நீங்கள் சமூகத்தால் கவனிக்கப்படும் வைரம். வைரத்தில் மாசுக்கள் இருந்தால் தெரிந்துவிடும். குப்பையில் எத்தனை குப்பை இருந்தாலும் மக்கள் குட்பை என அதை வெளித்தள்ளி விடுவார்கள்.

அந்த ஆதங்கத்தில் இட்ட பதிவே இது. உங்களை விமர்சிக்க அல்ல.
திறந்த மனதுடன் என் கருத்துக்களை எடுத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

இறைவன் அருள் இருந்தால் அடுத்த முறை கோவை வரும் பொழுது உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்.

Dr.Rudhran said...

inshah allah

Swami said...

Udal matrum manam patriya vizhippunarvu eerpadutha vendiya kalamidhu. Rudranin kattturai thavarana munmidivugalukku vazhi seyyum.Maruthuvam padikkadhavar idhu pola naveena maruthuvam patry kurutampokkil katturai ezhuthinal Rudran oppu kolvara?Yogavil ethanai kala anubhavam avarukku irukkirathu?

Dr.Rudhran said...

inshah allah, may good things happen

Siva Sottallu said...

ஸ்வாமி, உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.

// அஷ்டாங்க யோகம் பற்றி தெரிந்தவர் அவ்வளவே.

உடல் பயிற்சி தவிர அவர் ஆசன பயிற்சிகள் எதுவும் செய்தது இல்லை//

// அவர் அதில் தேர்ச்சி பெறவில்லை என நான் கூறவில்லையே? அதை அவர் பயிற்சி செய்ய வில்லை என்றுதான் கூறுகிறேன்.//

ஸ்வாமி, இதனால் நீங்கள் கூறவருவது, ஒருவர் அஷ்டாங்க யோகம் பற்றி தெரிந்து கொண்டு மட்டும் , அதில் அவர் தேர்ச்சி பெற்றவர் ஆகமுடியும் என்கிறீர்களா ஸ்வாமி?

நிகழ்காலத்தில்... said...

முதலில் உங்களின் இந்த இடுகையைப் படித்தவுடன் ஒன்றுமே புரியவில்லை.

பின்னர்இந்தஇடுகையைப் படித்தவுடன் புரிந்தது

நல்லதொரு எதிர்வினை

வாழ்த்துகள்

Guna said...

சுவாமி ஓம்கார் அவர்களே
நீங்கள் வசிக்கும் ஊரில் நானும் வசிக்கிறேன், நீங்கள் குறிப்பிட்ட யோகா கழகத்தின் யோகா வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளேன். அந்த மாதிரி விளம்பரம் செய்தால்தான் மக்கள் வருகிறார்கள் என்ன செய்வது. உங்களை உணர்துகொள்ள வாருங்கள் என்றால் ஒரு பய வரமாட்டான். thre is nothing wrong in doing the right thing .
இது குழந்தைகளை நாம் சில சமயம் வேறு ஆசைகள் காட்டி நாம் அவர்களுக்கு தேவையான விஷயத்தை சொல்வது போல. ஆனால் அந்த பயிற்சிகள் பண்ண பண்ண சில நோய்கள் குணமாகிறது சில நோய்களுடன் வேறு வழிஇல்லாமல் வாழ நம்மை தயார்படுத்துகிறது . இரண்டாவது மிகவும் முக்கியம்.

நான் ப்ளாக் உலகில் அந்த யோகா கழகத்தையும் அவர்களது குருவையும் தாக்கி நிறைய படித்திருக்கிறேன் ஆனால் அதற்கு எல்லாம் இரண்டே காரணங்கள்

# அவர்களது வசதியும் பணமும் இவர்களை பொறமை அல்லது எரிச்சல் பட வைக்கிறது , ஆண்மீகம்னாலே இவர்களுக்கு கோவணம்தான் .

ஒரு குடும்பமும் இரு குழந்தைகள் மற்றும் சொந்த தொழில் புரியும் என்னாலும் ஆன்மிக விழிப்புணர்வு அடைய முயற்சி செய்யமுடியும் என்று எனக்குள் ஒரு சிறு தூண்டுதல் ஏற்படுத்தி உள்ளார்கள். இதை எல்லாம் விட்டு விட்டு காட்டிற்குள் செல்லாமல். அவர்கள் காரில் வந்தால் என்ன , ஜீன்ஸ் போட்டால் என்ன, எனக்கு தேவை இந்த உடம்ப சுகமாய் வைத்துக்கொண்டு உண்மையில் நான் யார்னு ஒரு தேடுதலோடு இருக்கணும் .

# அவர்கள் சொல்லும விஷயங்கள் எல்லாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களது தொழிலுக்கு பிரச்சினை. அதனால் குமுறுகிறார்கள்.

என்னுடைய வேண்டுகோள் எல்லாம் அந்த வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள் பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள். அல்லாவிடில் குருடன் யானையை தடவிய கதையாகிவிடும். சுவாமி உங்களையும் சேர்த்துதான் சொல்லுகிறேன். அனால் ஆன்மீகவாதிக்கு மற்றொரு ஆன்மீகவாதி என்றாலே ஏன் ஒத்துகொள்வதில்லை என்று புரியவில்லை. தானருக்க ஆசை இல்லை அல்லது அது என்ன பார்ப்போம் என்ற திறந்த மனசில்லை

அந்த வகுப்புகளில் சொல்லப்படும் வஷயங்கள் மிகவும் நுட்பமானவை.

அவர்களுடைய அணுகுமுறை ஒரு மனிதன் தன்னை உணர்வதற்கு இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்வதுதான் ஒரே வழி.

பதஞ்சலி கொடுத்தது ஒரு நூலைத்தான் ஒருவர் அதில் பூவை கோர்க்கிறார் இன்னொருவர் வைரத்தை கோர்க்கிறார். நூல் இல்லாமல் மாலை இல்லை அனால் வெறும் நூலை மட்டும் அணிய முடியாது . இதுதான் ஒவ்வொரு குருவும் வேறு வேறு மாதிரி இருக்கிறார்கள் . அல்லது அவர்களுக்கு தெரிந்த வழியில் செல்கிறார்கள். போறது என்னவோ பொள்ளாச்சி தான் ஆனால் ஆயிரம் வழிகள்.