Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, December 18, 2009

கோவியார் பவன் - உயர்தர சைவ உணவகம்..!சிங்கையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக நாடுகளால் விமர்சிக்கபட்ட கோவியார் பவனின் வாரம் முழுவதும் கிடைக்கும் உணவுகளின் பட்டியல் கீழே.

திங்கள் கிழமை: வர்ணப் பக்கோடா

நாலு வர்ணங்களில் கலர் கலராய் பக்கோடா கிடைக்கும். இதில் நெய்யும் முந்திரியும் சேர்த்து செய்யப்பட்ட முந்திரி பக்கோடா மட்டும் அதிகமாக வறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.

செவ்வாய் கிழமை: ஜாதிக்காய் பிரியாணி

காய்களில் இருக்கும் ஜாதியை சுட்டிக்காட்டும்படி செய்யபட்ட பிரியாணி. வாரம் ஒருமுறை இதில் இருக்கும் காய்கறிகள் மாறுமே தவிர ஜாதிக்காய் போடாமல் பிரியாணி செய்ப்பட மாட்டாது.

புதன் கிழமை: மத்திய கிழக்கு பொடிமாஸ்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விரும்பு சாப்பிடும் உணவுகள் இங்கே செய்து தரப்படும். அதில் நீங்கள் குற்றம் குறை கூறினால் , சமையல் புத்தகத்திலிருந்து அந்த பகுதி சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்படும்.

வியாழக்கிழமை: தினமலர் கிச்சடி

தினமும் பூக்கும் மலர்களை கொண்டு செய்யபட்ட கிச்சடி. மலரின் ஓரம் மடங்கி இருக்கிறது, அதில் இருக்கும் நிறம் சரியல்ல என சுட்டிகாட்டி உங்களுக்கு கிச்சடி பரிமாறுவார்கள்.

வெள்ளிக்கிழமை : எதிர் வினை பரோட்டா மற்றும் சுய வினை பாயா

அடுத்த ஹோட்டலில் இருக்கும் உணவுப்பொருள்களை கேவலப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட பரோட்டாக்கள். அவற்றை இங்கே வரவழைத்து உங்கள் முன்னால் கொத்து பரோட்டா போடப்படும். அனத்தும் சாப்பிட்டப் பிறகு சுய வினையின் காரணமாக ஏற்படும் அஜீரணத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை. வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் அரசியல் சூப் மற்றும் பெரிய புராணம் வடகறி செய்து தரப்படும். மேற்கண்ட உணவுகள் தயார் செய்யாத சூழலில் பிற ஹோட்டல்களில் பிராய்ந்து கொண்டு வந்த 'கலவை' சோறு கிடைக்கும்.

ஆயிரம் முறை உணவு அளித்த உலக சாதனை உணவகத்தில் நீங்களும் உணவருந்த வேண்டும் என துடிக்கிறீர்களா? எல்லாம் காலக் கொடுமையை காண :) இங்கே செல்லவும்.
-----------------------------------------------------------------------------------
இன்று பிறந்த நாள் காணும் திரு கோவி.கண்ணனுக்கு எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்.
இந்த இடுக்கையை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். இனி வரும் காலத்தில் அவர் மேற்கண்ட பட்டியலில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

27 கருத்துக்கள்:

துளசி கோபால் said...

அப்ப எல்லா நாளும் வயிறு ஃபுல்தானா?

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Kanchana Radhakrishnan said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்துகள்.
TVR and kanchana radhakrishnan

Anonymous said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

sarul said...

நாளொரு வர்ணமும் பொழுதொரு மேன்மையும் பெற்று இன்னும் நிறைய
சாதி.க்க நாம் வாழ்த்தவாக்கும்.
(இறுதி இரு வார்த்தைகளும் யாழ்ப்பாணப் பழந்தமிழ் பேச்சு வழக்கு)

கிருஷ்ண மூர்த்தி S said...

பிறந்த நாள் விருந்து மெனு எல்லாம் சரி! அது உங்களுடையதாக, இருந்திருக்கக் கூடாதா:-))

கோவி கண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் அமுதன் said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

கோவியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! இதற்கெல்லாம் அவர் கோவியார்! :-)

அறிவிலி said...

வாழ்த்துகள் கோவியாரே.

அவரு சைவம்தான் ஆனா,கோவியார் பவன் - சைவம் தானா?

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணன் கோவியார் வாழ்க!

பழக்க தோஷம் :)

கோவி.கண்ணன் said...

கோவியார் பவன் !

போட்டு தாளிச்சிட்டிங்க. :)

பிறந்த நாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் said...

//துளசி கோபால் said...

அப்ப எல்லா நாளும் வயிறு ஃபுல்தானா?//

:)

// பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.//

மி(க்)க நன்றி அம்மா !

கோவி.கண்ணன் said...

//Kanchana Radhakrishnan said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்துகள்.
TVR and kanchana radhakrishnan//

இருவரும் தொலை பேசியில் அழைத்து வாழ்த்து சொன்னதற்கும் மிக்க மகிழ்ச்சி ! நன்றி !!

கோவி.கண்ணன் said...

//
December 18, 2009 8:16 AM
Blogger சின்ன அம்மிணி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் said...

//KS said...

நாளொரு வர்ணமும் பொழுதொரு மேன்மையும் பெற்று இன்னும் நிறைய
சாதி.க்க நாம் வாழ்த்தவாக்கும்.
(இறுதி இரு வார்த்தைகளும் யாழ்ப்பாணப் பழந்தமிழ் பேச்சு வழக்கு)//

'வருண பகவான்கள்' அருள் உலகத்தினருக்கு இருக்கும் வரை கோவியார் உணவகம் நல்லா போகும் !
மிக்க நன்றி !

கோவி.கண்ணன் said...

// கிருஷ்ணமூர்த்தி said...

பிறந்த நாள் விருந்து மெனு எல்லாம் சரி! அது உங்களுடையதாக, இருந்திருக்கக் கூடாதா:-))

கோவி கண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!//

மின் அஞ்சலிலும் வாழ்த்து சொல்லி இருந்தீர்கள். மிக்க நன்றி ஐயா

கோவி.கண்ணன் said...

// ஜீவன் said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி ஜீவன்

கோவி.கண்ணன் said...

//குமரன் (Kumaran) said...

கோவியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! இதற்கெல்லாம் அவர் கோவியார்! :-)//

:) நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள்.

வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் said...

//அறிவிலி said...

வாழ்த்துகள் கோவியாரே.

அவரு சைவம்தான் ஆனா,கோவியார் பவன் - சைவம் தானா?//

கோவியார் சைவம். அதானால் பதிவில் மசாலா கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் சைவம் தான்

கோவி.கண்ணன் said...

//எம்.எம்.அப்துல்லா said...

அண்ணன் கோவியார் வாழ்க!

பழக்க தோஷம் :)//

சந் தோசம் தம்பி ! வாழ்த்துக்கு நன்றி !

நிகழ்காலத்தில்... said...

கோவியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

மிக்க மகிழ்ச்சி

ஸ்வாமி, தங்களது இந்த இடுகையின் படத்தில் ஏதும் உள்குத்து இல்லையே:)))

என்னால முடிஞ்சது :)))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{திங்கள் கிழமை: வர்ணப் பக்கோடா

நாலு வர்ணங்களில் கலர் கலராய் பக்கோடா கிடைக்கும். இதில் நெய்யும் முந்திரியும் சேர்த்து செய்யப்பட்ட முந்திரி பக்கோடா மட்டும் அதிகமாக வறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.
}

வர்ண'ப் பக்கோடா பழையதாகி நூல் விடத் தொடங்கி விட்டது என்றாலும் கேட்கமாட்டார்;அதிலிருந்து கயிறே வந்தாலும் வர்ண'ஐட்டத்தை பட்டியலிலிருந்து நீக்க முடியாது என்று சொல்வார்...வாடிக்கையாளர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒடினாலும் கூட !
:)))

வாழ்த்துக்கள் கண்ணன்.

தமிழ் said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

Unknown said...

கோவியார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்ள் அருமை கோவிக்கு

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோவியாரே!

cheena (சீனா) said...

அன்பின் கோவியாருக்கு - 2010 ல் இன்று இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் -

துளசி கோபால் said...

பிறந்த நாளுககான இனிய வாழ்த்து(க)கள கோவியாரே.

இனறைய விருநதில புளளியிலலா சாபபாடு போடபபடும்:-)))))