Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 22, 2009

உங்களுக்காக காத்திருக்கிறேன்

எனது ஆன்மாவில் வசிப்பவர்களே... வணக்கம்.

நமது கலாச்சாரமும் சமூகமும் எத்தனையோ விஷயங்கள் கற்றுக்கொடுக்கிறது. சில காரணங்களால் அதன் மேல் நமக்கு புரிதல் ஏற்படுவதில்லை. இளமை, வாழ்க்கை தேடுதல் இல்லாமை என பல விஷயங்கள் இதற்கு தடையாக இருக்கிறது.

முதுமை வரும் பொழுது தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தால் அதற்கு உரிய ஆட்கள் வெகு தொலைவில் இருப்பார்கள். நம்மால் அனுகமுடியுமா எனும் நிராசையே மிஞ்சும்.

எனது வாழ்க்கை பயணத்தில் எத்தனையோ வழிமுறையில் பலருக்கு என்னறிவின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறேன். மூடப்பழக்கங்கள் என தள்ளி வைக்கப்பட்டச் சாஸ்திரங்கள் இறையருளால் பலருக்கு கொண்டு சேர்த்திருக்கிறேன்.

எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ சத்சங்கம் என கடந்தாகிவிட்டது. அத்தனையும் தொகுத்து ஒரு புத்தகமாக வர இருக்கிறது.

எத்தனையோ கேள்விகள் எதிர் கொண்டாலும் , நான் எதற்கும் பதில் சொல்லவில்லை.

ஒலி பெருக்கி எங்கே பேசியது?

மைக்கில் யாரோ பேசியதை தானே ஒலிபரப்பியது?


புத்தகத்தை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. வலையுலக மேன்மக்கள் உங்களின் கைகள் அதில் இல்லாமல் புத்தகம் பூர்த்தி அடையுமா?

உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகிறது.

கேள்விகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

கேள்விகள் ஜோதிடம், யோக சாஸ்திரம் மற்றும் வேத கலாச்சாரம் பற்றியதாக இருக்க வேண்டும்.

உங்கள் கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு பயன்படும் என்பதை நினைவில் கொண்டு கேள்வியை கேளுங்கள்.

தனி நபர் வாழ்க்கை சார்ந்த கேள்விகள் கேட்க கூடாது.

(உதாரணம் : எனக்கு ஏழரை சனி நடக்கிறது. எப்படி இருக்கும்? எனக்கு இரண்டில் செவ்வாய் எனது மணவாழ்க்கை நன்றாக இருக்குமா? ------- யோக பயிற்சியை செய்து வருகிறேன் அது நன்மை கொடுக்குமா? எனது பிராணாயம பயிற்சி சரியா? போன்றவை தவிர்க்கலாம்)

ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

கேள்வி பதில் முதலில் வலையில் வெளியிடப்பட்டு பின்பே புத்தகமாக வெளிவரும்.

கேள்வியை பின்னூட்டமாகவோ அல்லது எனது மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரி : swamiomkar@gmail.com
(சப்ஜக்டில் கேள்வி-பதில் என குறிப்பிடவும்).

எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்....

10 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா said...

//ஒலி பெருக்கி எங்கே பேசியது?
மைக்கில் யாரு பேசியதை தானே ஒலிபரப்பியது?

//

:)

புருனோ Bruno said...

1. ராகு காலம் என்பது வராகர் காலத்திலேயே உள்ளதா, இடைபுகுந்ததா

2. அது எப்படி அனைவ்ருக்க்கும் ஒரே நேரம் கெட்ட நேரமாக அமைய முடியும்

3. நிலவில் ஒரு குழந்தை பிறந்தால் ஜாதகம் கணிக்கும் போது பூமியை ஏதாவது ஒரு கட்டத்தில் போட வேண்டுமா

4. பூமியின் சொந்த வீடு, உச்சம், நீச்சம் ??????

ஆ.ஞானசேகரன் said...

//ஒலி பெருக்கி எங்கே பேசியது?
மைக்கில் யாரு பேசியதை தானே ஒலிபரப்பியது?
//

அது ஒலி பெருக்கிதானே சார்.. ஒலி இல்லையே?...

கேள்வியை யோசிக்கின்றேன்....

Raju said...

Swamiji,

(1) What about Pluto, Neptune and Uranus in predictions? Dont they affect us?

(2) If there is a time for one's marriage, how does one end up getting married to that right person? For e.x., I am not married, but family is trying to arrange, but I want the person I love. Will it work with Astrology?

(3) How does unknown people become celebrities?

(4) How does one time biz based on one's chart?

(5) Politics is the last option one goes into. But how does one gets pulled into it, by not being connected with it anyway? ex PM.

(6) Is there a way to predict one person, from his chart and the place (location) of work? Ex. In Nadi, I found for me that is Chithirai of 2007 ( dunno the Tamil year name) they say, I will be working short distant from birth place (and also own a part of that co. but financial hiccups), North West, a travel of one night. So if I travel from Dindigul to Bangalore (NW of my place, it is 10 hours max). I never expected stocks and that happened, but no salary paid since April 1st.

Thanks.

senthil said...

1)எது வானம்? வான் சாஸ்திரம் உள்ளதா?

2)கை ரேகையும்? ராசி,நட்ச்சத்திர பலன் ஒன்றா?

3)ராசி பலன் முலம் இன்னா நோய் உனக்கு வரும்- என்பது உண்மையா?
(உதா-மீனம்-குடல் புண் நோய்கள்)

Unknown said...

நன்றி. ஒருவாரம் காத்திருந்ததற்கு பதிவு நன்றாக இருந்தது.

ஷண்முகப்ரியன் said...

பொதுவாகத் நாம் செய்யும் தவறுகளுக்குக் கிரஹங்களே காரணம் என்று சொல்லி விட்டால்,நம்மைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விடுமே,ஸ்வாமிஜி?
சோதிடத்தின் மீது எனக்கு இருக்கும் விமர்சனமே ’நான் ‘என்ற அகங்காரத்தை அது ஊக்குவிக்கிறதோ என்றகருத்து எனக்கு எப்போதுமே உண்டு.

மதி said...

இயற்க்கை பேரிடர் பொழுது லச்சக்கனக்கில் உயிரிழப்பு ஏற்படும்வது அந்த அனைவர் ஜதகத்திலும் ஆயுள் ஸ்தானம் கெட்டிருக்குமா?

Senthil said...

எனது கேள்வி வேத கலாசாரம் பற்றியது. வேண்டுதல் ஆனாலும் சரி, மன அமைதி ஆனாலும் சரி, விசேஷ நாட்கள் ஆனாலும் சரி பெரும்பாலானோர் அதிகம் செல்வது கோவில். நம் கோவில் அமைப்புகளின், வழிபாட்டு முறைகளின் (கருவறை, கோபுர, பிரகாரம், தீர்த்தம், தீபாராதனை) தாத்பரியம் என்ன?

Senthil said...

நம் ஹிந்து மத தெய்வங்களின் (உருவ /சிலை) வடிவம், சக்தி நிலைகளோடு தொடர்புடையாதா?