Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, May 20, 2009

'கிராப்'பாலஜி


[தொலைக்காட்சியில் அந்த தொகுப்பாளினியின் முகத்தை நெருக்கமாக காட்டி பின்னோக்கி நகர்த்துகிறார்கள்]

அன்பர்களே வணக்கம்...

நமது தொலைக்காட்சியில் இரவு பத்து மணிக்கு மேல் பல மாமேதைகளை கொண்டு மண்டை காயவைக்கும் நிகழ்ச்சியை செய்து வருகிறோம். உலக மக்களை உய்விக்க எத்தனையோ மாமேதைகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த ஆலஜிகளின் அலறல்கள் அதிகம். பெயரை மாற்றியும், வீட்டை மாற்றியும் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியவர்கள் பலர். தனது பெயரின் கடைசியில் ஒரு A சேர்த்திக்கொண்டு தொடர் 'வெற்றி' பெரும் அரசியல்வாதிகள் கொண்டது நமது தமிழ்நாடு.

அந்த வரிசையில் நம்மிடையே வந்திருக்கும் மாமேதை, மகாபுருஷர் உலகிலேயே முதல் கிராப்பாலஜிஸ்ட் பண்டிட் பரட்டை பக்கிரி சாமி.

[இப்பொழுது திரையில் இருவரும் தெரியும் வண்ணம் காட்சி நகருகிறது. தலையை நூடுல்ஸ் போல வைத்துக்கொண்டு கோட் சூட்டுடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார் ]

அவரின் பிஸி நேரத்திலும் நம்மிடையே உரையாட வந்திருக்கிறார். அவரிடம் நாம் பேசலாம்...

கிராப்பாலஜிஸ்ட் : வணக்கம் எனது புத்திசாலி மக்களே...உங்கள் வாழ்க்கை வளமாக்கவும், வாழ்க்கையில் எளிமையாக வாழைக்காய் வாங்கவும் கிராப்லாஜியை பயன்படுத்துங்கள்.

தொகுப்பாளினி : என்ன சார் நீங்க வாழைக்காய்-னு ஏதோ சொல்லறீங்களே?

கிராப்பாலஜிஸ்ட் : ஒரு ரைமிங்க இருக்கட்டுனு சொன்னேன். கேள்வியை கேளுமா..

தொகுப்பாளினி : கிராப்பாஜினா என்ன சார் சொல்லுங்க..

கிராப்பலஜிட் : முதலில் என்னை சாருனு கூப்பிடாதீங்க. என்னை ஜீ-னு கூப்பிடலாம். உங்க அழகுக்கு பக்கிரினு என் பேரை சொல்லி கூட கூப்பிடலாம்.. ஹி ஹி..

தொகுப்பாளினி : சரிங்க சார் ஜி. சொல்லுங்க...

கிராப்பலஜிட் : [இரண்டு கைகளையும் சினிமா டைரக்டர் போல வைத்துக்கொண்டு தொடர்கிறார் ] கிராப்பாலஜி-னா எல்லாரும் ஏதோ கையெழுத்து வைச்சு சொல்லும் விஷயம்னு நினைச்சுக்கராங்க. இது அப்படி இல்லை... என்னோட பல வருஷ ஆய்வுகளில் சோறு தண்ணி இல்லாமால் கண்டுபிடிச்ச முறைதான் இந்த கிராப்பாலஜி.. ஒருத்தரோட தலைமுடி எப்படி இருக்கோ அதை பொருத்துதான் அவரோட வாழ்க்கை அமையும். இது தான் கிராப்பாலஜி...

தொகுப்பாளினி : ஜீ நீங்க உங்க அளவுக்கு அறிவு பூர்வமா பேசரீங்க.. எங்க அளவுக்கு கொஞ்சம் எளிமையா சொல்லுங்களேன்...

கிராப்பலஜிட் : ஒருத்தர் அவர் தலை எழுத்து சரியில்லைனு சொன்னா அவர் தலை எழுத்த மாத்துர மாதிரி அவர் தலைமுடியின் ஸ்டைலை மாத்திட்டா அவர் வாழ்க்கையே மாறிடும். நீங்க கேட்ட மாதிரி எளிமையா சொல்லனும்னா கிராப்பை மாத்தி வாழ்க்கையில் வெற்றி பெறும் மாபெரும் அறிவியல் தான் கிராப்பாலஜி.

தொகுப்பாளினி : அருமை ஜி, உங்க விளக்கத்தை கேட்டவுடனே எனக்கு புல்லரிக்கிது.. கிராப்பாலஜி யாருக்கெல்லாம் பயன்படும்னு நம்ம நேயர்களுக்கு சொல்லுங்க..

கிராப்பலஜிட் : பிரபஞ்சத்திலிருந்து வர கதிர்வீச்சு மனுஷனுக்கு தலைபகுதியில் நுழையுது. அதனால அந்த கதிவீச்சை நம்ம தலைக்குள் லாவகமா போகிறமாதிரி ஹார் ஸ்டிலை மாத்திட்டா நம்ம் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிதான்... உதாரணமா நமக்கு பிறக்கும் போது ஒரு ஹார் ஸ்டைல் இருக்கும். ஸ்கூலுக்கு போகும்போது அம்மா வழிச்சு சீவி விடும்பொழுது சட்டியை கவித்திய மாதிரி இருக்கும்... காலேஜ்க்கு போகும்போது நாய் சிலிப்பிக்கிட்ட மாதிரி மாறும்... இதிலிருந்து என்ன தெரியுது? [பெருமை பொங்க தொகுப்பாளினியை பார்க்கிறார்..]

தொகுப்பாளினி : தெரியலை ஜி. நீங்களே சொல்லுங்க...

கிராப்பாலஜிஸ்ட் : தலை முடியோட அமைப்பு மாற மாற மனித வாழ்க்கையும் மாறுது...

தொகுப்பாளினி : வாவ்... உலத்துக்கு மாபெரும் தகவலை கொடுத்திருக்கீங்க... கிராப்பாலஜி யாருக்கெல்லாம் பயன்படும்?

கிராப்பாலஜிஸ்ட் : கிராப்பாலஜி எல்லோருக்கும் உதவும். எல்லோருக்கும் மண்டை இருக்கு இல்லையா..?

தொகுப்பாளினி : ஒருத்தர் தனது வாழ்க்கையை எப்படி எல்லாம் கிராப்பாலஜி மூலமா மாத்திக்க முடியும்?

கிராப்பாலஜிஸ்ட் : கிராப்பாலஜி ரொம்ப எளிமையானது... [தலை கோதியபடியே] உங்களுக்கு சினிமா நடிகராகனுமா... அதுக்கு ஒரு ஹார்ஸ்டைல் இருக்கு..[இருபக்க முடியை சுழித்துவிட்டபடி] விஞ்ஞானி ஆகனுமா அதுக்கொரு ஹார்ஸ்டைல் இருக்கு அதுக்கேத்தமாதிரி மாத்திகனும்...கிரிக்கெட் வீரர் தோணியை எடுத்துக்குங்க... அவர் எதுனால பேமஸ் ஆனார்? அவங்க நோக்கத்திற்கு ஏற்ப அவங்க தலை முடியை மாத்தி கிரகங்களோட கதிர் வீச்சை மாத்திடுவேன்...

தொகுப்பாளினி:கிரக கதிவீச்சை கூட பொருத்துக்கலாம் போல இருக்கு.. ஆனா... ஸ்ப்பபா.... அடுத்த ஷோவிற்கு வரும்போது கோட்டை டிரைக்கிளீனிங் பன்னுங்க.. கிராப்பாலஜி பிரகாரம் அதிக முடி இருந்தா நல்லதா இல்லை குறைவா இருந்தா நல்லதா ?

கிராப்பாலஜிஸ்ட் : அதிக முடி இருந்தா கதிர்வீச்சை நம்ம தலைக்குள் போகவிடாம தடுக்கலாம்... இதை எப்படி சொல்லறீங்கனு கேட்பீங்க கரக்டா?

தொகுப்பாளினி : இல்லை நான் கேட்கவே இல்லையே...

கிராப்பாலஜிஸ்ட் : இல்லை எனக்கு தெரியும் அது தான் கேட்கரீங்க... ஒரு பிரபல நடிகர் என்கிட்ட வந்தார் அவருக்கு தலைமுடியே இல்லை. அவருக்கு விக்கு வைச்சு கிராப்பாலஜி செஞ்சேன். இப்போ அவருக்கு விக்கு தலையில இருக்கு அத்னால அவர் படமெல்லாம் நல்லா விக்குதாம்.

தொகுப்பாளினி : தமிழ் நாட்டு பெண்கள் தங்களோட ஹார்ஸ்டைலை அவ்வளாவா மாத்திகறது இல்லை. அவங்களுக்கு கிராப்பாலஜி வர்க் ஆகுமா?

கிராப்பாலஜிஸ்ட் : தமிழ்நாட்டு பெண்கள் பெரிய அளவில் வராம இருக்கிறதுக்கு காரணமே அவங்க தலை தான்.

தொகுப்பாளினி : ஜி என்ன சொல்லறீங்க?

கிராப்பாலஜிஸ்ட் :
(சுதாரித்து..) தலைமுடியோட அமைப்புதான். கிரன்பேடி எடுத்துக்குங்க. அவங்க பின்பாதி பெயர் பயப்படுவது போல இருந்தாலும்,
அவங்க ஹார்ஸ்டைல் தான் அவங்களை ஒரு புதுமை பெண்ணா காமிச்சுது.

தொகுப்பாளினி : முடியல ஜீ. எப்படி எல்லா கேள்விக்கும் இப்படி ஒரு பதில் சொல்லறீஙக?

கிராப்பாலஜிஸ்ட் : என் தலையை பார்த்தீங்களா? முதலில் என் தலையை நான் மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி வைச்சுக்கிட்டேன். அதனால உலக புகழ்
அடைஞ்சேன்...

தொகுப்பாளினி : உலகப்புகழ்..? (மனதுக்குள்...எனக்கே இவரை தெரியாதே) ஜீ மைக்கேல் ஜாக்சன் மாதிரி உங்க தலையை வைச்சுக்கிட்டா நீங்க
மியூஸிக்ல பெரியாளா வராம ஏன் கிராப்பாலஜிஸ் ஆனிங்க...

கிராப்பாலஜிஸ்ட் : (மனதுக்குள் : குடுத்த காசுக்கு ஓவரா கேள்வி கேட்கறது தப்பாச்சே...) நான் மியூஸிக்ல உலக புகழ் பெற்ற ஆளா வரனும்னு தான் இப்படி என்னோட ஹார்ஸ்டைலை மாத்திக்கிட்டேன்.. நான் பெரிய பாப் சிங்கர் ஆனப்பிறகு இந்த மாபெரும் அறிவியல் உண்மையை மக்களுக்கு சொல்ல முடியாது இல்லையா? அத்தான் கிராப்பாலஜிஸ்ட் ஆயிட்டேன்.(அப்பாடா மூச்சுவிடாம பேசியாச்சு)

தொகுப்பாளினி : ஜீ கடைசி கேள்வி நான் சில சீரியல்ல ஹீரோயினா நடிச்சேன்.பலவருஷம் தினமும் எல்லாரு விட்டிலும் நடு ஹாலிலும் ஒப்பாரி வைச்சுருக்கேன். அப்புறம் சான்ஸ் கிடைக்கலை.. என் வாழ்க்கை மீண்டும் முன்னேற என் ஹார்ஸ்டைலை கிராப்பாலஜி பிரகாரம் எப்படி மாத்திகனும் சொல்லுங்க...

கிராப்பாலஜிஸ்ட் : ( மனதுக்குள்.... நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்ன கேள்விங்கிற பேர்ல உனக்கு பலனை கேட்கறியா... இரு உனக்கு இருக்கு). நிச்சயமா சொல்லறேன். உங்க ஹார்ஸ்டைல் தான் உங்க பின்னடைவுக்கு காரணம். வலைபதிவு எழுதும் ஒரு ஸ்வாமி இருக்கார். அவர் பதிவை நான் படிக்கறது உண்டு. நீங்களும் படிக்கறீங்கனு நினைக்கிறேன். அவரோட ஹார்ஸ்டைல் உங்களுக்கு நல்ல இருக்கும். அந்த ஹார்ஸ்டைல் வைச்சுகுங்க அப்பறம் பாருங்க...

திரை மெல்ல இருளுகிறது...

[இது ஒரு பாபா ஹார்லைன்ஸ் பிரசண்டேஷன்]

20 கருத்துக்கள்:

வால்பையன் said...

ஹா ஹா ஹா

நகைச்சுவையிலேயே போட்டு தாக்கிடிங்களே!

மொட்டையடிச்சா என்ன பலன்னு சொல்லவேயில்லை!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:)

நான் எந்த மாதிரி கிராப் வச்சுக்கறது? (கிராப் வைக்க நிறைய முடி வேணும்ல!)

எம்.எம்.அப்துல்லா said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:)

நான் எந்த மாதிரி கிராப் வச்சுக்கறது? (கிராப் வைக்க நிறைய முடி வேணும்ல!)

//

குருஜி(ஜியோராம்),

நீங்கள் கடவுள் இல்லை எனும் கட்சி
சாமியும் கடவுள் என்ற நபர் இல்லை எனும் கட்சி.

இருவ‌ருக்கும் சாதி,ம‌த‌ ந‌ம்பிக்கை இல்லை.

நீங்க‌ள் என‌க்கு ந‌ல்ல‌ ப‌டைப்புக‌ளை
அறிமுக‌ப்ப‌டுத்தும்
குருஜி

ஓம்கார்சாமி அவ‌ர் மாணவர்க‌ளுக்கு குருஜி

அட‌! இப்ப‌டி ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளில் நீங்க‌ ரெண்டு பேரும் ஒரேமாதிரி இருக்குற‌துக்கு உங்க‌
ரெண்டு பேரோட‌ மொட்டை அடித்த‌
கிராப்பால‌ஜிதான் கார‌ண‌மா?

வாழ்க‌ கிராப்பாலஜிஸ்ட் பண்டிட் பரட்டை பக்கிரி சாமி

:))))

எம்.எம்.அப்துல்லா said...

//மொட்டையடிச்சா என்ன பலன்னு சொல்லவேயில்லை! //

தனக்குத் தானே மொட்டையடித்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அடுத்தவர்களுக்கு அடித்தால் தன் வினை தன்னைச் சுடும்.

:))

மதி said...

>>அவரோட ஹார்ஸ்டைல் உங்களுக்கு நல்ல இருக்கும். அந்த ஹார்ஸ்டைல் வைச்சுகுங்க அப்பறம் பாருங்க...<<<


:))))

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருக்கு. கிராப்பாலஜியை இந்த பக்கம் வந்துடப் போறார். இங்கு இவங்களுக்கு தெரிஞ்ச ஒரே கிராப் மொட்டை போடுவது மட்டும்தான்.

கோவி.கண்ணன் said...

//கிராப்பாலஜிஸ்ட் பண்டிட் பரட்டை பக்கிரி சாமி.
//

வழக்கமாக 'சோ' க்கள் தான் பாமர மக்களின் பெயரை காமடி என்ற பெயரில் இழிவு படுத்திப் பார்ப்பார்கள். ஹர்சத் மேத்தாக்களும், கன்னட பிராஷாத்துகளும் செய்த அளவுக்கு பாமரர் பெயரை உடையவர்கள் சுரண்டியதோ, இழிவாக நடந்து கொண்டதோ கிடையாது.

முன்பெல்லாம் சினிமாவில் வரும் காபரே அழகிகளுக்கு 'கிறித்துவர் பெயர்' இருக்கும், ரோஸி, ரீட்டா, ஸ்டெல்லா என்றெல்லாம் பெயர் வைத்திருப்பார்கள். லஷ்மிராய், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களின் கவர்ச்சிக்கு முன் காபரே அழகிகளின் கவர்ச்சி பிச்சை எடுக்க வேண்டும் என்பதாலும், கிறித்துவப் பெயர் கண்டனத்துக்கு ஆளனதும் தற்பொழுது மாற்றிக் கொண்டார்கள் அல்லது உயர்வகுப்புப் பெயரை வைத்தால் பெருமை அடைகிறார்களா தெரியவில்லை. தற்பொழுது திரையில் காபரே அழகிகளுக்கு கிறித்துவப் பெயர் வைப்பது இல்லை.
(நமீதா, முமைத்கான் எக்சப்சன், அது அவர்களே வைத்துக் கொண்ட பெயர்)

*****

அதாவது காமடிக்கு கூட எஸ்வீசேகரின் நாடகம் போல் 'அருக்காணிகளை' இழுப்பது நம் சமூகப் பார்வை பிறரால் ஏற்கனவே மாற்றப்பட்டு இருப்பதாக நினைப்பது அதிலிருந்து மாற்றிக் கொள்ள வழிவகை செய்யும்.

'பக்கிரி' என்ற பெயரைப் படித்த பிறகு கீழே படிக்க மனது வரவில்லை
:(

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வால்பையன்,

பதிலை சுந்தர் ஜியின் பதிலில் காண்க :)
உங்கள் வருகைக்கு நன்றி...

திரு ஜ்யோவ்ராம் சுந்தர்,

வேக்கண்ட் லாண்ட்ல தான் நல்ல சூரிய ஒளி படும் :) நீங்க என் கட்சி.


திரு அப்துல்லா அண்ணே,

பரட்டை பக்கிரி சாமி உங்க ஹார்ஸ்டைலை மாத்தின பிறகு தான் , நல்லா பாடினதா கேள்வி. உண்மையா?

வாழ்த்துக்கள்.

[வாராந்திரி போடரவர் தேசாந்திரி ஆனதால போடலையா?]

திரு மதி,

நன்றி உங்கள் வருகைக்கு.

திரு ராகவன்,

எனக்கு பிடித்த முடியின் வடிவம் அவர்களுடையது. சடை போட்டது போல... :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.கோவி.கண்ணன்,

ஏமாற்றுபவர்கள் எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்.ஏமாறுபவர்களுக்கும் ஜாதி மத பேதம் கிடையாது. இதில் மட்டுமே சமதர்மம் இருக்கிறது.

பெயரை வைத்து அவர் செய்யும் செயலையும் மதத்தையும் நிர்ணயம் செய்யமுடியாது.

எனது நண்பர் பிறசமூகத்தை சார்ந்தவர்,வக்கீலுக்கு படித்துவிட்டு தென்கலை நாமம் அணிந்திருந்தார். காரணம் கருப்பு கோட்டுக்கு இல்லாத மதிப்பு கோர்ட்டில் அதுக்கு இருந்த காலம் அது. பிறரின் முட்டாள்தனம் அவர்களையே ஏமாற்றுகிறது.

//'பக்கிரி' என்ற பெயரைப் படித்த பிறகு கீழே படிக்க மனது வரவில்லை
:(//

நன்று. இதை படித்து உங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. இது அறிவு முன்னேற்ற பதிவு அல்ல.

Unknown said...

சுவாமிஜி ஒரு வாரமாக உங்கள் கருத்துக்களுக்காக காத்திருந்து இது போல நகைச்சுவை செய்து விட்டீர்களே? எப்பொழுதும் போலவே உங்கள் கருத்துக்கள் தொடர கேட்டுகொள்கிறேன்.

ஷண்முகப்ரியன் said...

:))))!

Anonymous said...

ஹி ஹி ஹி ! நல்ல காமெடி சுவாமி! அப்போ வழுக்கை மண்டை உள்ளவர்களுக்கு கதிர்வீச்சு நல்ல பலமா இருக்கும் இல்லியா!

Mahesh said...

அய்யய்யோ... எனக்கு அப்ப கதிர்வீச்சு பட சாத்தியமே இல்லயே :(

பட்டாம்பூச்சி said...

ஹா ஹா ஹா
:))))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

வேறு வழியில்லை எவ்வளவு சொன்னாலும் ஸ்வாமி இப்படித்தான் எழுதுவார் போல என சிரிக்கிறீர்களா :) ?

உங்கள் வருகைக்கு நன்றி

திரு மதுரைவீரன்,
திரு மகேஷ்,
திரு பட்டாம்பூச்சி,

உங்கள் வருகைக்கு நன்றி

புருனோ Bruno said...

ஹி ஹி ஹி

:) :) :)

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

ப்ரியமுடன் வசந்த் said...

ஏன் சார் நீங்க இந்த பதிவு குங்குமத்துல வந்தத பெரிசா எடுத்துகிடலியா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வசந்த்,

//ஏன் சார் நீங்க இந்த பதிவு குங்குமத்துல வந்தத பெரிசா எடுத்துகிடலியா?//

எனக்கு அந்த புத்தகம் படிக்கும் வழக்கம் இல்லை. சில வாரங்கள் கழித்து நண்பர்கள் சுட்டிகாட்டினார்கள்.

அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.

Unknown said...

உண்​மைதான்.
டிவியில் நள்ளிரவு விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் ​​கொடு​மை​யோ ​கொடு​மை!
நல்லாப் ​போட்டு தாளிச்சிட்டீங்க!
குடுமி உங்க ​கையில!