Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, May 23, 2009

நாடி ஜோதிடம்

நாடி ஜோதிடம்
- எதிகாலத்தின் மற்றொரு முகம்

கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை மனிதனுக்கு எதிகாலம் பற்றி அறியும் எண்ணம் இருந்து வருகிறது. இந்த எண்ணம் அதிகரிக்க அதிகரிக்க ஜோதிடத்தின் தேவையும் அதிகரிக்கிறது. துய்மையற்ற எண்ணத்துடனும், சுயநலத்துடனும் தனது எதிர்காலத்தை தெரிந்துகொள்ள ஆசைப்படும் ஒருவனுக்கு, அதைபோன்ற ஏமாற்று பேர்வழிகளே வழிகாட்டியாக அமைகிறார்கள். இந்த செயல்கள் தனிமனித குணத்தை பாழ்படுத்துவதுடன், ஜோதிட சாஸ்திரத்தையே பாழ்படுத்துகிறது.

ஜோதிடத்தின் கண்டுபிடிப்பாளர் என யாரும் இல்லை. ஜோதிடம் வேத சாஸ்திரதின் அங்கம் என்பதால் வேதம் போன்று ஜோதிடமும் அனாதி [தோற்றமும் முடிவும் அற்றது]. வேடிக்கையான கதை ஒன்று ஞாபகம் வருகிறது. பள்ளியில் ஆசிரியர் விஞ்ஞான பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது "ப்ராண வாயுவான ஆக்ஸிஜனை கார்ல் வில்ஹெல்ம் ஷீல் என்பவர் 1773 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்" எனக் கூறினார்.அப்பொழுது எழுந்த ஒரு மாணவன் 1773 க்கு முன் ஆக்ஸிஜன் கண்டுபிடிக்கப்படாத பொழுது மனிதர்கள் எவ்வாறு சுவாசித்தார்கள் என கேட்டான். அது போன்றே ஜோதிடம் எப்பொழுது? யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கேள்வியும் குழந்தைத் தனமானது.


ப்ரபஞ்ச ஆற்றல் காலத்திற்கு ஏற்ப மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கொண்டு ஜோதிட ஒளியை உலகுக்கு பரப்பும் பணியை செய்கிறது.


ஆதிகாலத்தில் சப்த ரிஷகள், பாஸ்கரர், வராகமிகிரர் என வளர்ந்த ஜோதிட பரம்பரை 300 வருடங்களுக்கு முன்பே ஆங்கில மோகத்தாலும், கலாச்சார மாற்றத்தாலும் துண்டிக்கப்பட்டது. 1920 வரை இருந்த ஜோதிட நூல்களின் ஆசிரியர்கள், முன்பு இருந்த ஜோதிட விஷயங்களை வெவ்வேறு வடிவில் வெளியிட்டனர். அதற்கு பிறகு நவீன ஜோதிட முறையின் தந்தைகள் என அழைக்கப்பட்ட B.V. ராமன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தங்களின் முயற்சியால் ஜோதிடத்திற்கு புது பிறப்பை கொடுத்தனர்.

திரு. B.V. ராமன் ஜோதிட சாஸ்திரத்தில் செழித்த பகுதிகளான ப்ரசன்னம் மற்றும் சமிதா எனும் பகுதிகளை இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று சேகரித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் புதையுண்ட நூல்களை சேகரித்த இவரது பணி பல கோடி வருடத்திற்கு முன் புதையுண்ட பொருட்களினால் ஏற்பட்ட வைரத்தை வெட்டி எடுப்பதற்கு சமம் என கூறலாம்.


மண்ணுக்குள் சென்ற புதையலை திரு.B.V. ராமன் அவர்கள் எடுத்தார் என்றால் ஜோதிடத்தை விண்ணுக்கு செலுத்தினார் திரு. K.S. கிருஷ்ணமூர்த்தி என கூறமுடியும். தனது புதிய அணுகுமுறையால் ஜோதிடத்தை தனது வசமாக்கினார். மேலும் அனைவருக்கும் ஜோதிடத்தை வசப்படுத்தினார் என கூறலாம்.


இந்தியாவில் இத்தகைய மாமேதைகள் தோன்ற காரணம் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஜோதிட அறிஞர்கள் நிரம்பிய நாடாக பாரத தேசம் இருந்தது. ஜோதிட யுக்திகளும் அதைச் சார்ந்த ஜோதிட விதிகளும் பாமரன் கூட உருவாக்கும் நாடாக பாரதம் இருந்திருக்க வேண்டும். இத்தகைய ஜோதிட யுக்திகளே [Astrological Techniques] நாடிகள் என அழைக்கப்பட்டது.


நடைமுறையில் நாடி ஜோதிடம் என்றது அனைவரின் மனதிலும் கட்டைவிரல் ரேகையை கொண்டு ஓலை சுவடி மூலம் கூறும் ஜோதிடம் என நினைக்கிறார்கள். மக்கள் ஜோதிடரை நாடி வந்து கேட்பதால் நாடி ஜோதிடம் என வேடிக்கையாக சொல்வதும் உண்டு. உண்மையில் நாடி ஜோதிடம் என்பது வேத சாஸ்திரத்தை உணர்ந்தவர்கள் தங்களின் அறிவாற்றலால் ஏற்படுத்திய நவீன யுக்தி என கூறலாம்.


இதை தவிர்த்து அகஸ்தியரும், பிருகு முனிவரும் உங்கள் வாழ்கை வரலாற்றை எழுதி ஓலையில் வைத்திருக்கிறார்கள் என கூறுவது முட்டள்தனம். வழக்கத்தில் நாடி ஜோதிடர்கள் இதை கூறியே ஏமாற்றி வருகிறார்கள். இவ்வறு கூறுபவர்களிடம் நீங்கள் சில கேள்விகளை கேட்க வேண்டும். அந்த கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதில் கூறும் பட்சத்தில் தற்கால நாடி ஜோதிடத்தை பயன்படுத்தலாம்.


1. ரிஷிகள் கண்டுபிடித்த நாடி ஜோதிடம் மதம், மொழி கடந்ததா? அல்லது இந்தியர்களுக்கும். இந்துக்களுக்கு மட்டுமே பயன்படுமா? இன்னும் எளிமையாக சொன்னால் அன்பழகனுக்கும், ஆறுமுகனுக்கும் ஓலை இருப்பது போல ஆப்ரஹாமுக்கும், அப்துல்லாவுக்கும் ஓலை இருக்கிறதா என கேட்க வேண்டும். ஏன் என்றால் நவ கிரகங்கள் ஜாதி , மத அடிப்படையில் இயங்குவதில்லை.

2. முன் ஜென்ம பலன்களை நாடி ஜோதிடம் மூலம் கூறுபவர்கள், புண்ணிய பலன்களை கூறாமல் கெடுபலன்களை மட்டும் கூற காரணம் என்ன ?

3. தங்களது பெயர் குடும்பத்தார் பெயர் என அனைத்தையும் ஞான நிலையில் எழுதிய ரிஷிகள் தங்களின் குறிப்பில் ஜோதிட அமைப்புகள் ராசி, நவாம்சத்தை பற்றி குறிப்பிட காரணம் என்ன? ராசி கட்டத்தை வைத்தா நமது பெயரை கூறினார்கள்?

இந்த குழப்பத்திலிருந்து விடுபட நாடி ஜோதிடம் மற்றும் ஜோதிட முறைக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் 'பத்ததி' என பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை என பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தது. அதிகமாக மக்களிடையே பிரபலமான சில பத்ததி என்றால்ஸ்ரீ பதி பத்ததி மற்றும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி என கூறலாம்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்தியாசம்?
தொடரும்...

ஜனவரி 2008

21 கருத்துக்கள்:

ஷண்முகப்ரியன் said...

பயனுள்ள பதிவு ஸ்வாமிஜி.தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

ISR Selvakumar said...

நாடி ஜோதிடம் என்பது எப்போதுமே எனக்கு மிகப்பெரிய வசீகரிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. எல்லா விமர்சனங்களையும் மீற, அது என்ன என்று அடிக்கடி யோசிப்பதுண்டு.

ஆனால் இது குறித்து பேசுவதற்கு தகுந்தவர் எவரும் இதுவரையில் எனக்கு பழக்கமாகவில்லை.

உங்கள் பதிவு அந்தக் குறையை போக்கும் என்று நம்புகிறேன்.

அது ஒரு கனாக் காலம் said...

இந்த ஜோதிடம் - ஜாதகம் அவ்வளவாக பர்ர்ததில்லை, எல்லாம் துட்டு தான், ஆனால், ஒரு முறை தனியாக வைதீஸ்வரன் கோவில் சென்று, நாடி ஜோஸ்யம் பார்த்த பொழுது, என்னை என்னால் நம்ப முடியவில்லை. கடந்த காலம் , அப்படியே ஓலையில் , எங்க பிறப்பு, எத்தனை சகோதரம், எங்கு தொழில், பேர், ஊர் , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... அதே சமயம், எதிர் காலத்தை பற்றிய யூகத்தை கொஞ்சம் தள்ளி தான் விட வேண்டும்.... எது எப்படி இருந்தாலும், சில விஷயம் இது இதனால் என்று விளக்க முடியாது - நாடி ஜோஸ்யமும் அப்படிதான் .... உங்கள் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

benza said...

நீங்கள் மேலே குறிப்பிட்ட மூன்றாவது விளங்கவில்லை ---

பின் தொடர்ந்தால் பொருள் கிடைக்கும் போல ---

Mahesh said...

ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு நாடி ஜோதிடம் ஓலைச்சுவடியிலிருந்து சிகரெட் பாக்கெட் அட்டை வரைக்கும் வந்து விட்டதால் மறைந்த என் சித்தப்பா அதை "நாட்டி" ஜோதிடம் என்றே குறிப்பிட்டு வந்தார்... :):)

உங்களின் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.

benza said...

காண்டம் வாசிப்பது என்பார்கள் ---
அதுவும் இதுவும் ஒன்றா சுவாமி ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செல்வக்குமார்,

நன்றி.
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்தர ராமன் ,

90% நாடி ஜோதிடங்கள் போலியானவையே. வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உண்மையானவர்கள் மிகக்குறைவு.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தீர்கள் என்றால் உங்கள் கடந்த காலத்தையும் சரியாக சொல்லி இருக்க மாட்டார்கள். உங்களிடத்திலேயே 'போட்டு' வாங்கிவிடுவார்கள்.

பிடிச்சு வைத்த பிள்ளையார் போல அவர்கள் முன்னால் உட்கார்ந்து இருந்தால் உங்கள் நாடி இல்லை என சொல்லிவிடுவார்கள். இதுவே ஆமாம் / இல்லை சொன்னால் நாடி கிடைத்து விடும்.

எல்லாம் ஒரு டிரிக்தான்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்.

உண்மை தான். இவர்களின் நாட்டித்தனம் தாங்க முடியவில்லை.

அகஸ்தியரும், சுக முனிவரும் இவர்களுக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை “VAT" முதல் கொண்டு எழுதி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு bena,
//
நீங்கள் மேலே குறிப்பிட்ட மூன்றாவது விளங்கவில்லை //

ஞான திருஷ்டியால் ரிஷிகள் எழுதியதாக சொல்லும் நாடிகளில் எதற்கு ராசி மற்றும் கிரக நிலை?

யோசித்தாலே விடைகிடைக்கும் ...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு bena,

//காண்டம் வாசிப்பது என்பார்கள் //

16 முக்கிய பிரிவுகளை கொண்டது நாடி. அதனால் தான் 16 பெற்று வாழ சொன்னார்கள்.

16 பகுதிகள் என்பதைத்தான் காண்டங்கள் என்பார்கள்.

தற்சமயம் இளைஞர்கள் ரிங்டோனாக கூட வைத்துக்கொள்கிறார்கள்.
அப்புறம் எப்படி 16 பெறுவது? :)

benza said...

[[யோசித்தாலே விடைகிடைக்கும்]]
அது தானே ஞான திருஷ்டியால் எழுதும்போது ரசி கிரகம் அவர்களுக்கு தேவை இல்லை தான் ---
சிரமம் தந்துவிட்டேன் மனிக்கவும்

[[16 முக்கிய பிரிவுகளை கொண்டது நாடி. அதனால் தான் 16 பெற்று வாழ சொன்னார்கள்]]
சுவாமி இந்த பதினாறுக்கும் வேறொரு பொருள் உள்ளதாக வாசித்தது ஜாபகம் --- 16 பொருட்களை குறிப்பிட்டுளதாக அடி மனதில் தோன்றுகிறது ---
யாராவது உதவிக்கு வந்தால் பெரும் உதவியாகும் !.

yrskbalu said...

common swamji, shoot it up.

lot of people still beleiving nadi.

nadi nadi thedi thedi - what they founded ?

man searching happiness in outside, outside, outside- still the end he not asking himself.

1. what i am trying ?
2. that trying product is it their in this world?
3. if yes- why not getting?
4. if no - what to do next?
these are to be asked and get answer himself.

benza said...

yrskbalu, சார் இப்படி எழுதி நம்பளை குழப்பாதீங்க
1. what i am trying ?
2. that trying product is it their in this world?
3. if yes- why not getting?
4. if no - what to do next?
these are to be asked and get answer himself.
உங்களுக்கு ஆங்கிலம் அத்துப்படி ஆனால் எனக்கு வராதே --- நா வந்தது நாடி சாஸ்திரம் அறிய ---
நீங்க என்னடான்னா புதுசா ஆங்கிலம் படிபிகிறீங்க --- சும்மா விட்டிரிங்க சாமி

புருனோ Bruno said...

// "ப்ராண வாயுவான ஆக்ஸிஜனை கார்ல் வில்ஹெல்ம் ஷீல் என்பவர் 1773 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்"//

invention / discovery என்று இரு சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன

oxygen was discovered !!

computer was invented !!!

அது போல் ஜோதிட விதிகள் என்பது discovery வகையை சாரும்

புருனோ Bruno said...

// முன் ஜென்ம பலன்களை நாடி ஜோதிடம் மூலம் கூறுபவர்கள், புண்ணிய பலன்களை கூறாமல் கெடுபலன்களை மட்டும் கூற காரணம் என்ன ?//

அப்பத்தானே சாமி பரிகாரம் என்று கல்லா கட்ட முடியும் :)

benza said...

Blogger புருனோ Bruno said...
[[[ அது போல் ஜோதிட விதிகள் என்பது discovery வகையை சாரும் ]]]
அப்படீன்னா, ஜோதிட விதிகள், அதாவது ஜோதிடதினது RULES அல்லது ஜோதிடம் கணிக்கும் கணித முறைகள், ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தன, அவை பின்னர் வேறு நபர்களால் கண்டுபிடிக்கப்பட்டன (Discovered).
நான் விளங்கிக் கொண்டது சரியா சார் ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,

உங்கள் கருத்து சரியானதே.

ஒரு சந்தேகம் டிஸ்கவரி என்பதற்கு தமிழில் வார்த்தை இல்லையா?

/அப்பத்தானே சாமி பரிகாரம் என்று கல்லா கட்ட முடியும் :)//

நாடி ஜோதிடத்தில் மக்கள் எப்படி ஏமாற்றபடுகிறார்கள் என்பதை ஒரு தனி பதிவாகவே போடலாம்.

உதாரணம் ஒரு நாடி ஜோதிடரிடம் ஒருவர் பலன் பார்க்க சென்றார்..
அவரின் கால நிலை மனைவியால் சரியில்லை என பரிகார நாடியில் வந்ததாம். அவர் மனைவியை ஜோதிடரிடத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இப்படியாக அந்த ஜோதிடருக்கு 3 மனைவிகள்.

எப்படி இருக்கிறார்கள் நம் மக்கள் என பார்த்தீர்களா?
மேலும் விவரித்தால் நாடிக்கு நான் எதிரானவன் என நினைத்து எனக்கு அடிதான் விழும்.

உண்மையில் எனக்கு நாடி ஜோதிடம் பிடிக்கும் நாடி படிப்பவர்களை பிடிக்காது.

benza said...

Blogger ஸ்வாமி ஓம்கார் said ::
[[[ உண்மையில் எனக்கு நாடி ஜோதிடம் பிடிக்கும் நாடி படிப்பவர்களை பிடிக்காது ]]]

நாடி சாஸ்த்திரம் சம்பந்தமாக அறிய வந்தேன் --- வாய்ப்பு உள்ளதா என விழங்குதில்லையே ?

yrskbalu said...

dear beena,

everything not able to explain in

just 3-4 lines in comments .

i try to convey some points to readers in all my comments.

if somebody not clear or understand or discuss further -- please search
yourself for answer. if they want me ,i will give my mail id.

because this is swamji blogg. i should not cross my limit