Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, May 10, 2009

கிபி 5503

தனது கதிரியக்க உடையை அணிந்துகொண்டான் இண்டூ என செல்லமாக அழைக்கப்படும் இண்டெலன். தலையில் பறக்கும் கவசத்துடன் தயாராகி வீட்டின் வெளியே வந்தான்.

பேராசிரியரின் வீட்டிற்கு செல்ல முன்பே மனோ தள தகவலை சினேகிதி பார்ப்பிக்கு அனுப்பி இருந்தான். தூரத்தில் சிவப்பு உடையில் தலைபகுதியில் விசிறி பறக்க என்னருகில் வந்தாள் பார்பி.

அவளை பார்த்த பார்வையில் புரிந்து கொண்டாள், “ஏன் தாமதம் என கேட்கிறாயா? என்னை பிரதி எடுத்து கொள்ள சென்றேன். இதோ என் பிரதி” என அவளை போலவே மற்றொரு உயிரை காட்டினாள். இவள் எதற்கு என்றேன்.

"வீட்டில் வேலை செய்ய ஆட்கள் தேவை பட்டது அதனால் பிரதி எடுத்தேன்,அது இருக்கட்டும் இண்டூ,பேராசிரியர் கிழத்திற்கு என்ன வந்தது எதற்காக வ்ரச்சொன்னார்?”

"எதோ ரகசிய ஆய்வு செய்திருக்கிறாராம், நம்மிடம் காட்ட விரும்புகிறார். வா செல்லலாம். நேரம் 45 அணுக்களை தாண்டிவிட்டது. இன்னும் தாமதம் வேண்டாம்.”தனது பிரதியை அனுப்பி விட்டு தயாரானாள் பார்ப்பி. தங்கள் தலை பகுதி விசிறியை இயக்கி இருவரும் பறந்தனர். பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமவெளியாக இருந்தது. வீடுகள் ஈர்ப்பு விசையில்லாமல் அந்தரத்தில் மிதங்கி கொண்டிருந்தது. அதன் குறுக்கே பறந்த பார்பியும், இண்டூவும் பேராசிரியர் வீட்டை அடைந்தனர்.

தங்களை வீட்டின் வாயிலில் இணைத்து கொண்டதும் கதிரியக்க ஆய்வுக்கு பிறகு இருவரையும் வீடு தன்னுள்ளே இழுத்துக்கொண்டது. பேராசிரியர் இருவரையும் வரவேற்று, அரசின் கண்காணிப்பு கருவியை தற்காலிகமாக நிறுத்தினார்.

அவர் உபசரிப்புக்காக வழங்கிய ஆக்சிஜனை முகர்ந்த படியே கேட்டனர், “எங்களை வர சொன்னதன் நோக்கம் என்ன பேராசிரியரே?”

தனது தாடியை சொறிந்தபடியே கூறத்துவங்கினார்.

“பல நூற்றாண்டுக்கு முன்பு மனித இனம் சிலவிதமான கதிரியக்க போரால் அழிந்துவிட்டது. இந்த கிரகம் முழுவதும் அழிக்கப்பட்டு சில எஞ்சிய மனிதர்கள் மூலமே மனித இனம் தழைத்து வருகிறது.இந்த கிரகத்தின் நிலப்பரப்பு தனது முழு சக்தியை இழந்து வெறும் நிலமாக காட்டி அளிக்கிறது. ஈர்ப்புவிசைக்கு எதிராக பழகிய நாம், நிலத்தை தோண்டி பார்க்க அரசு அனுமதிப்பதில்லை. அதையும் மீறி ஒரு நாள் நிலத்தை தோண்டி பல நூற்றாண்டுக்கு முன் மனித இனம் பயன்படுத்திய ஒரு கருவியை எடுத்துவந்தேன். அதில் ஆச்சிரியப்படும் சில செய்திகள் பார்த்தேன். இதோ பாருங்கள்”

அங்கே சதுர வடிவில் ஒரு கருப்பு நிற பொருள் இருந்தது. இரு மடிப்பாக இருந்த அந்த பொருளை திறந்து விசையை அழுத்தினார் பேராசிரியர்.

"windows Xp" என ஒளியை உமிழ்ந்தது...

சில அனுத்துகள் நேரத்திற்கு பிறகு தன் ஒளி பகுதியில் காட்சி மாறியது.

“பார்த்தீர்களா எப்படி வேலைசெய்கிறது- இன்னும் இதற்கு உயிர் இருக்கிறது” என்றார் பேராசிரியர்.

"ஐயா அது என்ன மூலையில் ஏதோ எண்வடிவில் தெரிகிறதே?” என்றான் இண்டூ.


“நமது முன்னோர்களின் கடிகாரம். அதில் 1980 முதல் 2999 வரை எண்கள் இருக்கிறது. ”


"அதற்கு பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது?”


"தெரியவில்லை. ஒருவேலை அவர்கள் வேறுகிரகத்திற்கு பயணித்திருக்கலாம்”


"இதை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்” என்றாள் பார்ப்பி.


“இதில் பல தகவல்கள் உண்டு. அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இதில் அறிந்து கொள்ள முடியும். இதை பயன்படுத்தியவர்
தனது நண்பருக்கு சில தகவலை பரிமாறி இருக்கிறார். அதில் வரும் சில வார்த்தைகளுக்கு என்னால் அர்த்தம் காண முடியவில்லை ஆனால் அகராதியில் தேடிவருகிறேன்.”

"அது என்ன வார்த்தைகள் பேராசிரியரே?”

"மாப்ளே, சும்மா,சினிமா, சாப்பிடுதல் என்ற பல வார்த்தைகள் நடைமுறையில் இல்லை. அந்த மனிதர் பெரிய இலக்கியவாதியாக இருப்பர் என
நினைக்கிறேன். அதனால் தான் கடுஞ்சொற்களை பிரயோகித்திருக்கிறார்”

“இதற்கும் எங்களை வர சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ஆசிரியரே?”

“இண்டூ, இந்த கருவியின் ஓரத்தை கவனித்தாயா? உனது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன் இது ஆலயத்தில் வழிபட்ட
கருவியாக இருக்கலாம். இல்லையென்றால் நம் கடவுள் இண்டல் பெயர் இதில் இருக்குமா? மேலும் இந்த கருவியின் தகவல் களஞ்சியத்தில் பார்ப்பி என்று தேடினால் ஒரு பெண் உருவின் தகவல் வருகிறது. நிச்சயம் அது ஒரு வகுப்பினரால் வணங்கப்பட்ட பெண் தெய்வமாக இருக்கலாம்”

”பேராசிரியரே, தயவு செய்து உங்கள் ஆய்வுகளை நிறுத்துங்கள். நமது மின்னனுக்கடவுள் இண்டல் பல நூற்றாண்டுக்கு முன் கிடையவே கிடையாது”

“உங்களுக்கு எனது ஆய்வு வேடிக்கையாக இருக்கலாம். உண்மையில் அவரிகளிடம் ஒரு சிறிய தகடு இருந்திருக்கிறது. அதை கையில் வைத்துக்கொண்டால் அஷ்டமா சித்தி கிடைக்குமாம்”

“அஷ்டமா சித்தி என்றால்?” என்றனர் கோரசாக.

”தொலைதூரத்தில் இருக்கும் நபரிடம் பேசுதல், அவரின் பிரதியை காணுதல், ஒலி மற்றும் ஒளியை ஏற்படுத்துதல், தகவல்களை பரிமாறுதல், அசைவு படம் எடுத்தல் என பல சித்திகள்.”

“பேராசிரியரே, இது சாத்தியமா? ஏன் வீண் காலவிரயம்? “

”நீங்கள் நம்பவில்லை என்றால் போங்கள் இந்த தகடை வைத்து நான் அஷ்டமா சித்தியை பெருகிறேன்.”

பேராசிரியர் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மொபைல் சிம் கார்ட்டை பிளாஸ்டிக் பூக்களையும், டார்ச்சு லைட்டையும் வைத்து பூஜிக்க துவங்கினார்.

டிஸ்கி : தற்காலத்தில் மந்திர, யந்திரங்களை பயன்படுத்தும் முறையையும் - மாயன் கலாச்சாரம் பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் காட்டுரையையும் படித்ததால் உருவான சிறுகதை.

21 கருத்துக்கள்:

senthil said...
This comment has been removed by the author.
senthil said...

அந்த மனிதர் பெரிய இலக்கியவாதியாக இருப்பர் என நினைக்கிறேன்.


யாருங்க அவரு !!!!! ஆடு தாடி(பிரஞ்ச பியர்) வைச்சுருத்தவரா?

Mahesh said...

நல்ல கற்பனை.... சுவையாக இருந்தது !!

ஷண்முகப்ரியன் said...

தொடக்கம் நன்று.
கதை எழுதும் சித்தி இன்னும் சிறப்பாகக் கைகூட ஸ்வாமிஜிக்கு இறையருள் புரியட்டும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செந்தில்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

எனது நோக்கம் கதை எழுதுவது அல்ல. நோக்கம் அதுவாக இருந்தால் நான் உங்களிடம் பயிற்சி பெற்று இருப்பேன்.

எனது நோக்கம் முட்டாள் தனத்தை சுட்டிக்காட்டுவது.

அதற்கு இதை கருவியாக்கினேன்.

உங்கள் வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி.

Vishnu - விஷ்ணு said...

ஸ்வாமி. நல்லா கற்பனை பண்ணுறீங்க

அடியார் said...

சிந்தனையைத் தூண்டிய பதிவு ஸ்வாமி...

புருனோ Bruno said...

விஞ்ஞான புனை கதையா சாமி

வாழ்த்துக்கள் :)

நிகழ்காலத்தில்... said...

\\எனது நோக்கம் முட்டாள் தனத்தை சுட்டிக்காட்டுவது.

அதற்கு இதை கருவியாக்கினேன்.\\

\\"மாப்ளே, சும்மா,சினிமா, சாப்பிடுதல் என்ற பல வார்த்தைகள் நடைமுறையில் இல்லை. அந்த மனிதர் பெரிய இலக்கியவாதியாக இருப்பர் என நினைக்கிறேன். அதனால் தான் கடுஞ்சொற்களை பிரயோகித்திருக்கிறார்”\\

இடுகை,..! பின்னூட்டம்..! இந்த
வார்த்தைகளெல்லாம்...??? என்ன ஆகி இருக்கும்!

இதற்குப்பின் அப்ப்ப்படியே இன்றைய நடைமுறையில் இருக்கும் உருவவழிபாடு முறை அது மட்டும் மாறவில்லை, நம்ம மக்கள் 15503 லும் இதே கதைதான்....ம்ம்ம்ம்

வழிகாட்டுங்கள் நல் ஆசிரியராக..

வாழ்த்துக்கள்..

எம்.எம்.அப்துல்லா said...

புதுசா டெம்ப்ளேட்டு ! புதுசா கதை !

கலக்குறீங்க சாமி

:)

Geekay said...

நல்ல கற்பனை, கலக்குறீங்க சாமி!!

yrskbalu said...

i am not expected like this from you.

pl dont waste your time to satisfy somethings.

sorry

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.விஷ்ணு,
திரு.அடியார்,
திரு.புருனோ,
திரு.அறிவேதெய்வம்,
திரு.அப்துல்லா அண்ணே,
திரு.Geekey,
திரு.yrskbalu,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

sundaresan p said...

vanakam swami

miga arputhamaga kadai vilakam koduthu,ungal karuthukalai puravaitheergal

Anonymous said...

கதை நன்றாக இருந்தது சுவாமி! நல்ல கருத்து!

மதி said...

ஏதோ சொல்லவரிங்கள்னு நினைச்சேன் ஆனா இப்படினு நினைக்கிலே...ஜோதிடம் பற்றிய பாடம் இனி இல்லயா ஸ்வாமி... :((ஏக்கத்துடன்,
இணைய மாணவன்.

Raju said...

அசத்தலான அறிவியல் கதை...

ஸ்வாமி நீங்கள் வோட்டு போடுவீங்களா?

இது நாள் வரையில் உங்களிடம் கேட்க்க வேண்டி கேள்வி ஒன்று... இசையால் மலை வருவிக்க முடியும் என்கிறார்கள், அதை போல பூஜைகளால் விரும்புவதை அடைய முடியுமா? ( மன பலம - ப்லேசிபோ எப்பக்ட் தவிர...)

சென்னையை சேர்ந்த எ.பி. நாகராஜன் என்ற ஜோதிடர் ( வெஸ்ட் மாம்பலம் ) கால சர்ப்ப தோசம இருப்பதால், ஒரு சனி நிவர்த்தி ஸ்பெசல் பூஜை செய்ய இரண்டாயிரம் கேட்கிறார். ரிசசன் டைம் வேறு, அவர் சொல்வதை போலவே எல்லாம் இதுவரையில் நடந்துள்ளது... நம்பாமலும் இருக்க முடியவில்லை.

Raju said...

என்னுடைய கமன்ட்டில் ... மலை மழை என்று இருக்க வேண்டும். நன்றி.

priyamudanprabu said...

>)