Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, March 23, 2009

பேய் எழுதும் எழுத்து

எச்சரிக்கை :

  • உங்கள் ஊரில் இரவு பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டால் இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.
  • பலவீனமானவர்கள் சேலம் சித்தவைத்தியரிடம் மருந்து சாப்பிட்ட பிறகு படிக்கவும்.


உங்களுக்கு பேய் பிசாசு மேல் நம்பிக்கை உண்டா?
பேய் பார்த்திருகீங்களா?

பேயிடம் பேசி கேட்டிருக்கீங்களா???

உங்கள் வீட்டுக்கார அம்மணியை பற்றி கேட்கவில்லை. (என்ன ஒரு சந்தோஷம் ..!)

பேய் எழுதி பார்த்திருக்கீங்களா? உங்களிடம் நான் பேச போவது "பேய் எழுத்தை" பற்றி.

பேய் எழுத்துக்கு முன் ஆவி எழுத்தில் ஏற்பட்ட எனது அனுபவத்தை சொல்றேன்.

சிலர் ஆவியை கூப்பிட்டு எழுதுவார்கள்.
இறந்து போன அரசியல் தலைவர்கள் எல்லாம் இவர்கள் கூப்பிட்டவுடன் வருவார்கள்.

உயிரோடு இருக்கும் பொழுது யாருக்கும் பதில் சொல்லாத வி.ஐ.பி எல்லாம் இவர்களின் (கெ)கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் நிலை இருக்கிறது.

இவர்கள் கேட்ட கேள்விக்கு எதிர்கால பலன் எல்லாம் வி.ஐ.பி ஆவி சொல்லும். ஆனால் ஆவியிடம் காலையில் நான் என்ன சாப்பிட்டேன் சொல்லு என கேட்டால், ஆவி மலையேறி விடும்.

ஆவியின் “அறைக்கு” பயந்து யாரும் இது போன்ற சின்ன புள்ளத்தனமான கேள்விகளை கேட்ப்பதில்லை.எனது நண்பர் அவரின் உறவினர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “இவர் ஆவி.அமல்ராஜ். எம்.ஜி.ஆர் , ராஜிவ் காந்தியுடன் பேசுவார்” என அவரை அறிமுகப்படுத்தினார்.

ஆனந்த விகடன் -ல இருக்காரா? என்றவாறே “பேசுவார்”-னு சொல்றீங்களே. “பேசினவர்னு” சொல்லுங்க என நான் அவரின் தமிழை வளப்படுத்தினேன். என்னை இருவரும் ஒரு பூச்சி மாதிரி பார்த்து விட்டு , இவர் ஆவி கூட பேசறவர்னு அவர் சொல்ல. எனக்கு அடிவயிற்றில் ஒரு “திடுக்கு” -னு இருந்துச்சு.


இதெல்லாம் சாத்தியமானு அவரை மெல்ல பார்த்தேன். அவரோ தன்னோட மூஞ்சியை பத்ம ஸ்ரீ அவார்டு வாங்கின மாதிரி வைச்சுக்கிட்டார்.

அதெப்படி ஆவியுடன் பேச முடியும்? என நான் கேட்க, மொபைல் போன்ல எத்தனையோ கிலோமீட்டர் அந்த பக்கம் இருக்கறவங்க கிட்ட பேசறோம். வயர் கனெக்சென் இல்லாம கண்ணுக்கு தெரியாத ஒரு ஆற்றல் இருக்கே அதை நம்பரோம் இல்லையா? அது மாதிரி தான் இதுவும் என்றார் அமல்ராஜ்.

இப்படி ஆவி டெக்னாலஜியை, டெலிகம் டெக்னாலஜி கூட லிங்க் பண்ணி சொன்ன உதாரணம் எனக்கு பிடிச்சுருந்துச்சு.

என் நண்பர் (நண்பனா அவன்) சில வெள்ளை பேப்பர்களை அவரிடம் கொடுத்து, “ம்” ஒரு வார்த்தை தான் சொன்னான்.

திருவள்ளுவர் கையில் வைத்திருக்கும் எழுத்தாணி ஸ்டைலில் பேனாவை பிடித்து உறுமலுடன் அந்த வெள்ளை பேப்பரில் கிறுக்க ஆரம்பித்தார் ..... சாரி எழுத்த ஆரம்பித்தார்.

நான் எனது நண்பனை ஒரு பார்வைப் பார்த்தேன். கோவில் கர்ப்ப கிரகத்திற்கு முன் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தனை போல ஆவி மனிதரை பார்த்துகொண்டிருந்தான். திடீரென என்னை பார்த்து திரும்பி “வந்திருச்சு.... வந்திருச்சு...” என சொல்ல. எனக்கிருந்த பதட்டத்தில் டய்லெட்டை காட்டி தொலைத்தேன்.

“சே உனக்கு எப்பவும் விளையாட்டுத்தான் . சார் இப்போ கனெக்‌ஷன்ல இருக்கிறார்” என்றான்.


அவர் கையில் மொபைல் போன் இல்லையே என யோசிக்கும் முன், ஐயா அமல் ராஜ் இல்லை. இல்லை... ஆவி என்னை உறுமலுடன் பார்த்துக்கொண்டிருந்தது.

உனக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேளு என்றான் நண்பன்.


எனக்குள் என்ன கேள்வி கேட்கலாம்னு ஒரே யோசனை.

நம்ம வலையுலகத்தில யாராவது ஜோதிடம் பத்தி எழுதினா, நல்லா நாத்திக பேசரவங்க வந்து “2011ல் யாரு முதல்வர்னு” அறிவுப்பூர்வமா கேட்பாங்களே அது மாதிரி கேட்கலாமா?

இல்லை இன்னைக்கு அரசி சீரியல்ல என்ன நடக்கும்னு கேட்கலாமா? என ஒரே குழப்பம்.

ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு “ஐயா பேரு என்ன”

என் பேரா? ம்ம்ம்ம்ம்... இதில் இருக்கு படி. என சொல்லி அவர் எழுதிய பேப்பரை நீட்டினார்.
அதில் வட்டவட்டமாக பால்வாடி ஸ்கூல் செல்லும் பையனை போல ஏதோ கிறுக்கி இருந்தார்.

ஒன்றும் புரியவில்லை. அவரை ஏக்கமாக பார்த்தேன்.

“என்னை தெரியலே? நான் தான் உன் தாத்தா வந்திருக்கேன்.” என்றார்.

இது என்னடா வம்பு, நான் பிறக்கும் போது பூமியில் இருக்கும் என் தாத்தாமார்களை மேலே அனுப்பிவிட்டுத்தானே வந்தோம். என அமைதியாக அவரை கவனித்தேன்.

எனது நண்பன் நான் யோசிப்பதை பார்த்துவிட்டு, “ஏதாவது கேளு” என்றான்.

“தாத்தா நான் பிறக்கும் போது எங்க இருந்த்தீங்க?”

“வேற எங்கடா என்பேராண்டி ஆஸ்பிட்டல் வாசலில் இருந்தேன்”- எனது தாத்தா சொல்ல, சாரி ஆவி.அமல்ராஜ் சொல்ல.

உஷாரான நான். முடிவுக்கு வந்தவனாக சராமாரியாக சில கேள்விகள் கேட்க, தாத்தா மலையேறினார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அசுவாசமான அமல்ராஜ் என்னை பார்த்து “நீங்க இப்படியா கேள்வி கேட்கறது” என்றார்.

“ஆவி உங்களுக்கு உள்ள இருக்கும் பொழுது நான் கேட்ட கேள்வியை எங்கிருந்து அமல்ராஜ் பார்த்தீங்க? உங்க உடம்பு என்ன கொரியன் மொபைலா இரண்டு சிம் கார்டு போட?” என்றேன்.

என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு சடாரன வெளியே சென்றுவிட்டார் ஆவி.அமல்ராஜ்.


மனுசன் உடம்புல இருக்கும் போதே இன்னொரு மனுசன் கேட்கற கேள்வி கண்ணை காட்டுது. இதில் இவங்க ஆவியை கூப்பிட்டு என்ன சொல்ல முடியும்னு தெரியலை.

ஆவியை வைச்சு ஏமாத்தரவங்கள கூட மன்னிக்கலாம். பேய் வைச்சு எழுதறவங்களை மன்னிக்கவே கூடாது.

அது என்ன பேய்னு கேட்கறீங்களா?


சில பிரபலமானவங்க அவங்க பேர்ல எழுத சில எழுத்தாளர்களை வேலைக்கு வைச்சுப்பாங்களாம்.

உதாரணமா ஒரு அரசியல்வாதியோ, கிரிக்கெட் வீரரோ அவரோட சுய சரிதை எழுதறார்னு வைச்சுக்கோங்க, அவரே அதை எழுத மாட்டாராம். ஒரு எழுத்தாளர் எல்லாம் எழுதி அவரிடம் காட்டினால் அதை சரிபார்த்துட்டு இவங்க பேர்ல அதை வெளியிடுவாங்க. எழுத்தாளர் எழுதினதுக்கு கூலிவாங்கிப்பார்.

இதுக்கு கோஸ்ட் ரைட்டிங்னு பேரு.


அதைத்தான் நான் தமிழ்-ல பேய் எழுத்துனு சொல்றேன்.

பிரபலமானவங்க கிட்ட இருந்த கெட்ட பழக்கம் இப்போ அனேகம் பேருக்கு வந்துடுச்சு. சினிமாவில் அதிகமாம். இசையமைப்பாளரோட டியூன், டைரக்டரோட கதைனு எல்லாம் ஒரே கோஸ்ட் மயம்தானாம்.

பேய் எழுத்து ஆன்மீகவாதிகளையும் விட்டுவைக்கலை.

பிரபலமான பத்திரிகையில் எழுதும் ஆன்மீகவாதிகளுக்கும் அவங்க கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் கோஸ்ட் ரைட்டிங் தான்.

நீங்களும் கோஸ்ட் ரைட்டர் ஆக ஒரு வழி சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க.
என் குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்ன செய்யட்டும்? நான் சந்தோஷமாக வாழ என்ன வழி ?

மாதிரியான சில கேள்விகளை போட்டுவிட்டு அதற்கு அட்வைஸ் சொல்லுங்க, அப்புறம் நடுவில ஒரு ஜென் கதை. மீண்டும் அட்வைஸ் சொல்லுங்க.

அவ்வளவுதான். நீங்களும் ஏதாவது ஒரு ஆன்மீகவாதியின் பேய் ஆயிடலாம். அவங்க உங்க “payee" ஆயிடுவாங்க.

ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்கிட்ட கேட்டார் “ஸ்வாமி உங்க பேர்ல இந்த கட்டுரைகளை வெளியிடலாமா ?”

( இந்த பதிவை அந்த உதவி ஆசிரியர் படிப்பார் என்பது தனி செய்தி).

அந்த கட்டுரைகள் நான் எழுதும் கட்டுரைகளை விட கேவலமாக இருந்தச்சு. கட்டுரையின் கரு மாறாமல் சில மாற்றங்களை செய்து கொடுத்தேன். அவங்க வெளியிடல. பேய் எழுதினாதான் வெளியுடுவாங்களோ ?

கொஞ்ச நாள் முன்னால மாணவர்களுக்காக ஜோதிட பத்திரிகை நடத்திகிட்டு இருந்தோம். அதில மாணவர்கள பெயர் போட்டு நான் கட்டுரை எழுதிடுவேன். :)

பத்திரிகை வெளிவந்தவுடன அதில் இருக்கும் கட்டுரையை படிச்சுட்டு அந்த மாணவர் என்னை பார்த்து மிஸ்டர் மிஸ்டர்னு முழிப்பார். அத்தாங்க திரு திருனு.

இது பத்தாதுனு , சக மாணவர்கள் அவங்க கிட்ட கட்டுரை சம்பந்தமா சீரியசா கேள்வி கேட்க அவங்க நிலை தகறாராயிடும்.

மாணவர்கள் சிலருக்கு நல்ல எழுத தெரிஞ்சாலும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும், அதை இல்லாம பண்ண இந்த டெக்னிக்கை நான் யூஸ் பன்னுவேன். சக மாணவர்களோட பாராட்டை கேட்டதும், நாம் எழுதாத விஷயத்திற்கே இப்படி பாராட்டராங்களே நாம உண்மையா எழுதினா எப்படி பாராட்டுவாங்கனு அவங்க நினைச்சுக்கிட்டு அடுத்த மாசத்தில கட்டுரையும் கையுமா நிப்பாங்க.

இப்படி மாணவர்களுக்கே பேய் எழுத்தாளரா இருந்த அனுபவம் எனக்கு இருக்கு.

பேய் எழுத்தாளர்கிட்டயே வந்து பேய் எழுத்து வேணுமானு கேட்கலாமா?

போய் எழுத்தாளராகர வேலையை பாருங்கையா...டிஸ்கி : இக்கட்டுரையை நான் தான் எழுதினேன்.

45 கருத்துக்கள்:

நாகை சிவா said...

சூப்பர். இது வரைக்கும் ஒரமா நின்னு படிச்சுட்டு ஒடிடுவது. இன்னிக்கு இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமல் இருக்க முடியலை. செம கலக்கல் :)

அப்படியே எழுத்தாளர் ஆவது எப்படினு ஒரு பதிவு போடுங்க, நாங்களும் அதை பிடிச்சு அப்படியே ஜன்னலை திற, திரைசீலை விலக்கு னு தொடர் போட்டு பிக் அப் பண்ணி போயிடுறோம்...

நாகை சிவா said...
This comment has been removed by the author.
நாகை சிவா said...
This comment has been removed by the author.
Mahesh said...

ஸ்வாமிகளே... இவ்வளவு நகைச்சுவையா ஒரு சீரியஸ் பதிவு படிச்சதில்லை.

கடைசில ஒரு டிஸ்கி போட்டிருக்கே... விழுந்து விழுந்து சிரிச்சேன். :)))))))))))))))))

கோவி.கண்ணன் said...

//உங்கள் வீட்டுக்கார அம்மணியை பற்றி கேட்கவில்லை. (என்ன ஒரு சந்தோஷம் ..!)

//

ஸ்வாமி ஏன் பிரம்மச்சாரியத்தை தேர்ந்தெடுத்தார்னு தெரியுது.

ஆவிகள் பற்றிய நகைச்சுவை அருமை.

ஆத்மா சாந்தி அடைந்தவர்களைக் கூட இந்த ஆவி ஆசாமிகள் அழைத்துப் பேசுவார்களா ?

Anonymous said...

உங்க பதிவுல சூப்பர் உங்க டிஸ்கிதான்.

மத்தபடி எழுதாத மாணவர்கள் பெயரில் எழுதும் டெக்னிக் நல்லது. பதிவுலகிலும் நான் புதிதாக வருபவர்களை ஆகா ஓகோ சூப்பர்னு சொல்லி பின்னூட்டம் இடுவேன். அவர்கள் வளர்ந்த பின அவர்கள் தவறுகளைச் சுட்டுவேன்.

மாண்புமிகு பொதுஜனம் said...

//பலவீனமானவர்கள் சேலம் சித்தவைத்தியரிடம் மருந்து சாப்பிட்ட பிறகு படிக்கவும்.//

சேலம் சித்த வைத்தியர் என்ன உங்க ரெப்ரசென்டேடிவா? வேறு வைத்தியரிடம் வாங்கும் மருந்து வேலை செய்யாதா?
அலோபதி மட்டுமே சாப்பிடுவோரின் கதி என்ன?
ஹோமியோபதி கூட சாப்பிடலாமா?

உங்கள் பதிலைப் படித்தபிபுதான் மேற்கொண்டு படிக்க வேண்டும்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வணக்கம் ஸ்வாமி .
டிஸ்கி சூப்பர் !

வினோத் கெளதம் said...

நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
நல்ல வேளை அது டிஸ்கியில் இருக்கு

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நாகை சிவா ,

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

அடிக்கடி பின்னூட்டம் போடுங்கள் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி. :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி. உங்கள் வருகைக்கு நன்றி,

// ஆத்மா சாந்தி அடைந்தவர்களைக் கூட இந்த ஆவி ஆசாமிகள் அழைத்துப் பேசுவார்களா ?
//
உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் முன் உங்கள் கேள்வியில் எனக்கு ஒரு சந்தேகம்...

ஆத்மா ஏன் சாந்தியை அடைய வேண்டும் ? :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வேலவன் அண்ணாச்சி,

அது சரி. அப்போ எனக்கு பாராட்டு சொல்லியிருக்கீங்க.
நீங்க தவறுகளை சுட்டிகாட்டும் அளவுக்கு கூடிய சீக்கிரம் வளர முயற்சி செய்கிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அருப்புக்கோட்டை பாஸ்கர்,


உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பொதுஜனம்,

டீவியில் வரும் ஜோதிடர்களை தான் மக்கள் ஜோதிடர் என ஏற்றுக்கொள்ளும் போது டீவியில் மருத்துவர் என வருபவரை நான் மருத்துவர்கள் என சொல்ல கூடாதா? :))

அலோபதியா, ஹோமியோபதியா அதற்கு முன் உங்களுக்கு வெங்கடாஜலபதி கருணை சரியா இருக்கனும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வினோத் கெளவுதமன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

//ஆத்மா ஏன் சாந்தியை அடைய வேண்டும் ? :)//

வெண்ணிறாடை மூர்த்தி ஜோக்...! சகிக்கலை.

sundaresan p said...

intresting chapter nice, thankyou

sundaresan p said...

வணக்கம் ஐயா

நான் உங்கள் பதிவு வாசகன் ஆனால் பின்னுடம் இட்டத்திலை
இனிமேல் எல்லா பதிவிலும் பின்னுடம் இடுவேன்.

உங்கள் ஜோதிட பாடங்களை தொடர்ந்து படித்துவருகிறேன்.தினமும்
உங்கள் பதிவு வந்திருக்கிறதா என்று பார்ப்பது இப்போது எனக்கு வழக்கம் ஆகிவிட்டது.
ஆகோரிகளை பற்றிய கட்டுரை வியப்பு அளித்தது.உங்களை போன்ற ஞானிகளிடம்
பழகுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜோதிட பாடங்களை தொடர்ந்து எழுதவும்.

மாண்புமிகு பொதுஜனம் said...

//மாண்புமிகு பொதுஜனம் said...
//பலவீனமானவர்கள் சேலம் சித்தவைத்தியரிடம் மருந்து சாப்பிட்ட பிறகு படிக்கவும்.//

சேலம் சித்த வைத்தியர் என்ன உங்க ரெப்ரசென்டேடிவா? வேறு வைத்தியரிடம் வாங்கும் மருந்து வேலை செய்யாதா?
அலோபதி மட்டுமே சாப்பிடுவோரின் கதி என்ன?
ஹோமியோபதி கூட சாப்பிடலாமா?

உங்கள் பதிலைப் படித்தபிபுதான் மேற்கொண்டு படிக்க வேண்டும்.//

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு பொதுஜனம்,

டீவியில் வரும் ஜோதிடர்களை தான் மக்கள் ஜோதிடர் என ஏற்றுக்கொள்ளும் போது டீவியில் மருத்துவர் என வருபவரை நான் மருத்துவர்கள் என சொல்ல கூடாதா? :))

அலோபதியா, ஹோமியோபதியா அதற்கு முன் உங்களுக்கு வெங்கடாஜலபதி கருணை சரியா இருக்கனும்.//

வெங்கடாஜலபதி படம் போட்டு கருணைக் கிழங்கு லேகியம் கிடைக்கிறது.அது மலச் சிக்கலுக்குச் சிறந்த சித்த மருந்து.
நான் அதைக் கேட்கவில்லை.டீவியில் எத்தனையோ மருத்துவர்கள் வரும்போது"சேலம் சித்த வைத்தியரை"பரிந்துரைக்கிறீர்களே.

அவரிடம் அப்படி என்ன சிறப்பு கண்டீர்கள்?

Vishnu - விஷ்ணு said...

மிஸ்டர் மிஸ்டர்ன்னு முழிக்க வைச்சுட்டிங்க ஆரம்பத்தில!!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.கோவிகண்ணன்.
//வெண்ணிறாடை மூர்த்தி ஜோக்...! சகிக்கலை.
//
என்ன செய்ய ஜோதிடம் சம்பந்தமாக அவருடன் பழகிய ”தோஷம்”.

ஆவி எப்பொழுது சீற்றம் கொண்டது சாந்தி அடைய?
எல்லோர் ஆவியும் சாந்தமாக தானே இருக்கு?

ஸ்வாமி ஓம்கார் said...

மாண்புமிகு பொதுஜனம்.

// அவரிடம் அப்படி என்ன சிறப்பு கண்டீர்கள்?
//

அவரிடம் சிறப்போ-மாத்திரையோ எதையும் காணவில்லை. எனக்கு அதன் தேவையும் இல்லை :)

ஜோக் சொன்னா அனுபவிக்கனும்.. கேள்விகேட்கப்பிடாது :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.விஷ்ணு,

உங்கள் வருகைக்கு நன்றி

மாண்புமிகு பொதுஜனம் said...

அப்பாடா!இப்பத்தான் தைரியமே வந்துச்சு.
ஒரே மூச்சில் படித்து ரசித்தேன்.
பதிவு சூப்பர்!டிஸ்கி சூப்பரோ சூப்பர்!!

கனிமொழி said...

பதிவு சூப்பர்!

தமிழ் அமுதன் said...

நகைச்சுவை இழையோட உங்க பதிவு!
அருமை!!

Anonymous said...

ஓம்கார் சுவாமி! அடி பிண்ணி எடுத்துட்டீங்களே... உங்க எழுத்தை யாரும் ரீ ரைட் பண்ணத் தேவையில்லை. பேசாம நீங்க‌ நீங்க ஒரு ஜர்னலிஸ்ட் ஆகிடலாம். பூந்து விளையாடுங்கள். நான்கூட ஒரு நாத்திகன்தான்.

ஸ்வாமி ஓம்கார் said...

மாண்புமிகு பொதுஜனம்,

கடைசியா படிச்சதுக்கு நன்றி. :)

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி கனிமொழி,

உங்கள் கருத்துக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜீவன்,

நீங்க வந்ததும் தான் பதிவுக்கு ஒரு ஜீவனே வந்துச்சுனு சொல்ல வைச்சுடீங்க.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு போட்டோபாலா,

உங்கள் வருகைக்கு நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

படத்துல உள்ள ஆவிய கிலிக் செய்து பெரிதாகி பார்த்தாலும் ஒன்னியும் தெரிய மாட்டுது. அந்த ஆவி புடிக்கிறவர் போன் நம்பர் இருந்தா கொடுங்க யாருனு கேட்டு விசாரிக்கனும்.

//உங்கள் ஊரில் இரவு பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டால் இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.//

இரவு வீட்டுக்கு வெளிய இருக்கு. கடிகாரம் வீட்டுக்கு உள்ள இருக்கு. அது எப்படி இரவு 10மணிக்கு மேல ஆகும். இரவுக்கும் கடிகாரத்துக்கும் கள்ளத் தொடர்புனு பதிவு போட்டால் ஹிட் ஆகுமா :P

//டிஸ்கி : இக்கட்டுரையை நான் தான் எழுதினேன்.//

இதை எழுதிக் கொடுத்தவர் இதை படிச்சா வருத்த பட மாட்டாரா?....

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விக்னேஷ்வரன்,

ஆவி அடிச்ச மாதிரியே கமெண்ட் போட்டிருக்கீங்களே :))

உங்கள் வருகைக்கு நன்றி.

கலியுக சித்தன் said...

OMKAR....I e-mailed u in disguise. Tell me whom i am.......will give u........
if not......."UNNAI YATCHAN KAVANITHU KOLLUVAN"......

kargil Jay said...

Superb comedy Swamiji.....

..
ஆனால் ஒரு முறை ஒரு படிப்பறிவில்லாத, தெலுங்கு மட்டுமே பேசத்தெரிந்த ஒரு 'குறி சொல்பவள்' வந்தார். மஞ்சள் குங்குமம் தடவிய ஒரு கூடையில் கையை வைக்கச் சொன்னார். வைத்தவுடன் என் மனதில் இருப்பது, என் சித்தி, பெரியம்மா பெயர், பெரியம்மா பையன் என்று , எப்படி செத்துப் போனான் என்றேல்லாம் சொல்லிக் கொண்டே போனார்.. வெலவெலத்துப் போய் இரண்டுரூபாய் கொடுத்தேன். அன்று வெலவெலத்தது நான் மட்டுமல்ல, தெருவில் இருந்து அவரின் கூடையில் கைவைத்த சுமார் ஒரு இருபது பேர்..

எம்.எம்.அப்துல்லா said...

கட்டுரை ஸ்டார்னா டிஸ்கி சூப்பர்ஸ்டார் :)

கோவைகத்துக்குட்டி said...

வணக்கம் சுவாமிஜி
ஆவியாளர்களுக்கு இந்த காவியாளர் சொல்வது புரியும், பொதுமக்கள் புரிந்துகொண்டால் சரி.
அன்புடன் செல்லி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கலியுக சித்தன்,

நீங்க யாருனு தெரியலையே. ஆவி கிட்ட கேட்டுதான் சொல்லனும். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கார்க்கில் ஜெய்,

அவங்க தனியா வரலை. யார் கூடையோ வந்திருக்காங்க. அத்தான் அப்படி குறி சொல்லி இருக்காங்க :)

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே.

ரொம்ப நன்றி.

உங்க வலைபதிவு எல்லாம் படிச்சு இது கூட செய்யலைனா எப்படி? :)


உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செல்லி,


உங்கள் கருத்துக்கும் வருகைக்கு நன்றி

kargil Jay said...

யார் கூடையோ இல்ல சாமி.. அவங்க கூடை தான்.. நிசம்மா.. அவங்களுக்கு தமிழே தெர்ல.. அப்றம் என் பெரியம்மா பையன் மறைவு நடந்து ஆறு வருடங்களுக்கு பின்பே 311 கிமீ தள்ளியுள்ள கிராமத்துக்கு குடி பெயர்ந்ததால் அவர் பெயர் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உங்க ஆவியர் போல் இந்தம்மா சீற்றம், உருமல் இதெல்லாம் ஒண்ணும் பண்ணல. கொஞ்சம் இருமல் மட்டும் பண்ணிணாங்க. சாதாரணமாக‌ 'இப்போது உன் இறந்த பாட்டி உனக்கு சீக்கிரமே ..' என்று எதோ அடுத்த வீட்டுக்காரருக்கு சொல்ல அவர் தான் 'வந்துடுத்து' என்று ஓடினார்...சரி விடுங்க.. அப்றம் நான் பொய் சொல்ற, குத்தறிவு இல்லாத பார்ப்பான்னு பேச்சுக் கேட்கவேண்டிருக்கும்...

RAHAWAJ said...

ஓம்கார் அவர்களே, சூப்பரா இருந்தது

Unknown said...
This comment has been removed by the author.