Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, March 12, 2009

பழைய பஞ்சாங்கம் 12-03-2009


பஞ்சாங்கம் என்பது கிரக நிலையை காண உதவும் ஒரு புத்தகம். கிழமை, நட்சத்திரம்,திதி,யோகம் , கரணம் என்ற ஐந்து அங்கங்களை கொண்டதால் பஞ்ச- அங்கம் என அழைக்கப்படுகிறது. பஞ்ச அங்கங்களை தவிர கிரகநிலையின் மாற்றம், அதன் நிலை என மேலும் பல தகவல்களை கொண்டது பஞ்சாங்கம். கணிதா எனும் பழமையான ஜோதிட நூல் ஒன்பது ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட கிரகநிலையை ஆதாரமாக கொண்டது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கம் கணிக்கும் ஆற்றலை பாரத நாட்டினர் கொண்டிருந்தார்கள். நாள் காட்டியை போல தினமும் பயன்படக்கூடியது பஞ்சாங்கம். ஜோதிடர்கள் அல்லாதவர்கள் கூட பயன்படுத்துவார்கள். ஆனால் பழைய நாள் காட்டியை யாராவது பயன்படுத்துவார்களா? அது போல பழைய பஞ்சாங்கம் என்ற சொல்லாடல் கூட எதற்கும் பயன்படாதவர்களை குறிக்கிறது.

நாள்காட்டி புதியதாக இருந்தாலும் அதில் இருக்கும் எண்களும், தலைவர்களின் பிறந்த நாள் பற்றிய செய்தியும் பழையதாக தானே அமையும்? அது போல பஞ்சாங்கம் பழையதாக இருந்தாலும் பலவருடங்களுக்கு முன்பு பிறந்தவர்களின் ஜாதகத்தை கணிக்கவும், குறிப்பிட்ட நாளின் நட்சத்திரம் தெரிந்தி கொள்ளவும் பழைய பஞ்சாங்கம் தேவை.


எதற்கு இந்த் செய்தி என கேட்கிறீர்களா? சுவையான நிகழ்வுகள் என்ற தலைப்பில் வந்த செய்திகள் இனி பழைய பஞ்சாங்கம் எனும் தலைப்பில் வர இருக்கிறது.

பழைய தகவலாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு சுவையாக இருப்பதால், இனி மேல் இது பழைய பஞ்சாங்கம் என அழைப்போம்.
இந்த மாற்றத்தை கொடுக்க உதவிய கோவிகண்ணன், பரிசல்காரன் இருவருக்கும் நன்றி.

-------------------------------------

ப்ரம்மச்சரியமா அல்லது கிரகஸ்தமா?

எனது ரயில் பயணம் நாக்பூர் எனும் ஊரிலிருந்து சென்னையை நோக்கி அமைந்திருந்தது. என்னுடன் இளைஞர் ஒருவர் பயணமாகி கொண்டிருந்தார்.

ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லாமல் சக பயணிகளுடன் சப்தமாக பேசியபடியே வந்தார். திருநெல்வேலிக்காரர்களின் சொல்லாடலில் சொல்லுவார்களே ஓலைபாயில் என்னவோ என்று அது போல இருந்தது அவரின் பேச்சு. சாப்பிடும் பொழுது கூட சப்தமாக பேசியும் சகபயணிகள்,அரசியல், சினிமா என அனைவரையும் பகடி செய்தபடியும் பயணம் செய்தார் அவர்.


ஜன்னலோர இருக்கையில் நான் வெளியே முகத்தை காட்டியபடி உட்கார்ந்திருந்ததால் என்னை அவர் வம்புக்கு இழுக்கவில்லை.

ரயில் பயணங்களில் சிலர் பொழுதுபோகாமல் ஏதாவது கேள்வி கேட்டவண்ணம் வருவதை பார்த்திருக்கிறேன். கேள்வியை கேட்டுவிட்டு வேறு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்கள். உயிரை கொடுத்து பதில்சொன்ன நாம் முட்டாளாகி இருப்போம் :)

விதியாரை விட்டது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம் பேச முயன்றார். தான் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி என்றும், ஓர் ஊரில் உப ஆட்சியராக சேரப்போவதாக சொன்னார். என்னிடம் பேச்சை துவங்கியதும் பிற பயணிகள் என்னை பார்க்க துவங்கினார்கள்.


ஸ்வாமி ஜீ உங்களை பார்த்தால் பிரம்மசாரி போல தெரிகிறதே, நான் நினைப்பது சரியா? நான் ஆமாம் என்றேன்.

உடனே முகத்தில் பெருமிதத்துடன், "பிரம்மசரியம் சிறந்ததா அல்லது திருமணம் செய்து குடும்பம் நடத்தும் கிரகஸ்த வாழ்க்கை சிறந்ததா?" - சொல்லுங்கள் ஸ்வாமி என்றார்.

ஒரு நிமிடம் மெளனமாக பார்த்துவிட்டு சொன்னேன்.


கிரகஸ்தம் தவறு என்றால், நான் பிறக்க காரணமாக எனது தந்தை செய்த செயல் தவறாகிவிடும். பிரம்மசரியம் தவறு என்றால் நான் செய்வது தவறாகிவிடும்.

பிரம்மச்சரியம் சரி என்றால், கிரகஸ்தம் எனும் தவறிலிருந்து பிறந்த நான் எப்படி சரியானதை செய்ய முடியும்?

என்னை சரி என்றோ அல்லது எனது தந்தையை சரி என்றோ என்னால் சொல்ல இயலாது. தந்தை என சொன்னதில் உங்கள் தந்தையும் அடங்குவார் என்றேன்.


பயணம் முடியும் வரை அவர் யாரிடமும் பேசவே இல்லை. என்ன காரணம் என்றே தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்ததா?

--------------------------------------------------------------------------------

ரமணரும் மேற்கத்திய திருவண்ணாமலையும்


பகவான் ரமண மகரிஷியை பற்றி பல சம்பவங்கள் வியக்க வைப்பது உண்டு. தனது 16ஆம் வயதில் திருவண்ணாமலை வந்த மஹான் அதற்கு பிறகு வேறு எங்கும் சென்றதில்லை. திருவண்ணாமலையே தனது குருவாக கொண்டு தன்னை அருணாச்சலமாக்கியவர்.

ஒரு முறை ஒரு வெளிநாட்டு பெண்மணி ரமணரிடம் திருவண்ணாமலை இந்தியாவில் இருப்பதால் ஆன்மீக ஆற்றல் இருப்பதாக் சொல்லுகிறீர்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் நாங்கள் பல தூரம் பயணம் செய்து வர வேண்டி இருக்கிறது. எங்கள் பகுதியில் இதை போன்ற ஆற்றல் கொண்ட மலை இல்லையா என கேட்டார்.


இந்தியாவை விட்டு வேறு எங்கும் செல்லாத பகவான் ரமணர் ஞானம் நிறைந்த முகத்தில் தெய்வீக புன்னகையுடன் கூறினார். திருவண்ணாமலையை அமைப்பிலேயே பூமியின் மற்றொரு பகுதியில் ஒரு மலையுண்டு. திருவண்ணாமலைக்கு சரியாக பூமியின் பின்பகுதியில் வரும். அதற்கும் திருவண்ணாமலையை போன்ற சக்தி உண்டு என்றார் மகரிஷி.

இந்த செய்தியை படித்ததும் எனக்கு வியப்பாக இருந்தது. ( google earth ) கூகுள் எர்த் எனும் மென் பொருளை கொண்டு திருவண்ணாமலையை அடைந்தேன். அதன் அட்சாம்சம் ரேகாம்சம் (latitude ,longitude) எடுத்து அதை பூமியின் மறுபக்கம் சரிபார்த்தேன். தென்அமெரிக்காவின் வடபகுதியில் ஓர் தீவில் திருவண்ணாமலை போன்ற அமைப்பில் ஓரு மலை இருந்தது.

"Ho! lord Arunachalaa..! "

20 கருத்துக்கள்:

ஷண்முகப்ரியன் said...

//கிரகஸ்தம் தவறு என்றால், நான் பிறக்க காரணமாக எனது தந்தை செய்த செயல் தவறாகிவிடும். பிரம்மசரியம் தவறு என்றால் நான் செய்வது தவறாகிவிடும்.//

அருமையான கருத்து.

//தென்அமெரிக்காவின் வடபகுதியில் ஓர் தீவில் திருவண்ணாமலை போன்ற அமைப்பில் ஓரு மலை இருந்தது.//

அற்புதங்களையும் ஆச்ச்ர்யங்களையும் எவ்வளவு இயல்பாக நடத்துகிறார்கள் பெரியவர்கள்.நன்றி ஸ்வாமி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

நன்றி. உங்கள் வருகைக்கு. இன்று நீங்கள் தான் முதல்வர் :)

முதலில் பின்னூட்டம் இட்டதை சொன்னேன்.

krish said...

You have given a nice expalanation for this difficult question. We are expecting your experiences in the Delhi conference.

Mahesh said...

ஸ்வாமிஜி... தலைப்பு அட்டகாசம்...

அந்த "பேச்சாளர்" வாயை கப்புன மூடிய உங்க திறமை கண்டு வியந்தோம்.. சிரித்து மகிழ்ந்தோம்... [என்ன வரம் வேணும்னெல்லாம் கேக்க மாட்டேன் :) ]

பரிசல்காரன் said...

நன்றி ஸ்வாமிஜி!

நல்ல பகிர்தல். ரயில் மேட்டர் கலகல. சிந்திக்க வைத்த கலகல!

Sri Ram Jaya Ram Jaya Jaya Ram said...

will be pleased to know the latitude ,longitude of the island where the similar mountain is located
thanks

VIKNESHWARAN ADAKKALAM said...

அந்த இடத்தையும் மாயன்ஸ் வாழ்ந்த பகுதியையும் குறிப்பிட்டு சொல்வார்கள்.

கோவி.கண்ணன் said...

//அதை பூமியின் மறுபக்கம் சரிபார்த்தேன். தென்அமெரிக்காவின் வடபகுதியில் ஓர் தீவில் திருவண்ணாமலை போன்ற அமைப்பில் ஓரு மலை இருந்தது//

புது அண்ணாமலையில் போய் ஒரு குகையை கண்டிபிடித்து துண்டு போடனும், இங்கே மலைவலக் கூட்டம் மிகுதியாகிவிட்டது.
:P)

முன்னாடி போனால் எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்க

ஸ்வாமி ஓம்கார் said...

திரு க்ரிஷ், திரு மகேஷ்

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

எனது பதிவுக்கு பெயர்வைத்த மாமன்மார்கள் கோவியாரையும், பரிசல்காரரையும் குழந்தைக்கு தங்க சங்கிலி ”முறை” செய்ய அழைக்கிறேன் :)

திரு பரிசல், திரு கோவி.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விக்னேஷ்வரன்,

நீங்கள் குறிப்பிடுவது மத்திய அமேரிக்க நாடுகளான மெக்சிகன், கோதிமாலா பகுதிகள்.

நான் குறிப்பிடுவது பெரு நாட்டின் கடற்கரையை ஒட்டி உள்ள தீவு. தென் அமேரிக்கா.

கடவுளை பற்றி உணராமல் கொண்டதே வாழ்க்கை என வாழும் நபர்கள் இருக்கும் வரை, உலகின் எல்லா பகுதியிலும் ”மாயன்” தான் வாழ்கிறார்கள் என சொல்லலாம். மாயையால் கட்டுண்டவர் அனைவரும் மாயர்கள் தானே?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு, ஸ்ரீ ராம்.

அந்த தீவு Isla San Lorenzo,Peru என்பதாகும்.

12.14 வடக்கு, 79 கிழக்கு என்பது திருவண்ணாமலை.
12.05 தெற்கு, 77 மேற்கு என்பது Isla San Lorenzo தீவின் நிலை.

நன்றி.

Mani - மணிமொழியன் said...

//12.14 வடக்கு, 79 கிழக்கு என்பது திருவண்ணாமலை.
12.05 தெற்கு, 77 மேற்கு என்பது Isla San Lorenzo தீவின் நிலை.//

Correct me if I am wrong.
I think you should be using 12 14.20'S and 100 56.60'W. This is because there has to be 180 degrees separation.

கோவைகத்துக்குட்டி said...

வணக்கம் சுவாமிஜி,

//பழைய தகவலாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு சுவையாக இருப்பதால், இனி மேல் இது பழைய பஞ்சாங்கம் என அழைப்போம்.//

எந்த ஒரு நிகழ்விலூம் ஒரு படிப்பினையை
கற்றுக்கொள்ளாம்.

பழைய பஞ்சாங்கம் - பஞ்சாமிர்தம்

அன்புடன் செல்லி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மணி மொழியன்,

100 பாகை வருவதற்கு வாய்ப்பில்லை.

180 டிகிரி பிரிவு சரியான வட்டத்திற்கே பொருந்தும்.
பூமி கோளம் சரியான வட்டமல்ல என்பது உங்களுக்கே தெரியும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செல்லி,

உங்கள் வருகைக்கு நன்றி.

Mani - மணிமொழியன் said...

If we imagine a top view, then irrespective of earth's imperfection, the total angle will be 360 degree. Then the opposite side of 79 E degree will lie around 101 W degree.

Just my honest thought. I do not intend it as anything to lower your efforts.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவர்கள் விளையாடும் பட்டாம்பூச்சி விருது உங்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கு சுவாமிகளே! வந்து, வாங்கி, விருதைப் பெருமைப்படுத்த வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! :)

http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html

கோவி.கண்ணன் said...

பேரு வச்சதுக்குத்தான் சோறு (பின்னூட்டம்) போட்டாச்சு இல்லே. அதுக்கப்பறம் முறை செய்வது என்ன முறை ?

Jig said...

12.05 S 77 W - Hoyle,Lima,Peru is the location that Swamiji has mentioned. I can see the similar "Sree Shakra puri" Terrain map there using google map.Its Amazing.