Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, March 30, 2009

யந்திர சக்தி - பகுதி 2

யந்திர சக்தி
- வரி வடிவில் ஆற்றல்.

யந்திரங்கள் அதிக அளவில் வட்டங்களை அடித்தளமாக கொண்டது. முக்கோணங்கள், கோடுகள் குறைந்த அளவே பயன்பட்டாலும் அவற்றின் உபயோகம் மிக முக்கியமானது. வரைகலை வடிவங்கள் இயற்கையிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றை சற்று விளக்கமாக பார்ப்போம்.

யந்திரங்கள் என்பது ஏதோ ஒரு மந்திரவாதி படிக்கவேண்டிய விஷயம் நாம் ஏன் இதை தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்.


ஒரு குறிப்பிட்ட வரிவடிவத்தை பார்த்ததும் நமது மூளையின் ஞாபக அடுக்குகளில் ஒரு சலனம் ஏற்படுகிறது. உள்நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த வரிவடிவமே யந்திரம் என்கிறோம்.

உண்மையில் யந்திரங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுதினமும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. எந்திரத்தின் எளிய உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒரு நிறுவனம் அல்லது அரசு சார்ந்த அமைப்பின் சின்னம் (logos) நவீன கால யந்திரமாகும். அசோக சக்ரம் தாங்கிய சிங்க வடிவங்கள் பார்த்ததும் உங்களுக்கு இந்திய அரசின் ஞாபகம் வருகிறது அல்லவா?

யந்திரங்கள் மொழி,மதம் என அனைத்தும் கடந்த ஒரு மெய்ஞானம். வாகனத்தில் பயணமாகி கொண்டிருக்கிறீர்கள். வழியில் இந்த சின்னத்தை பார்க்கிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? இதில் மொழி மதம் எனும் அடையாளம் ஏதேனும் உண்டா? அது போல யந்திரங்கள் வரிவடிவில் ஒரு தனியொரு உயிரை மேல் நிலைக்கு கொண்டு செல்லும்.

வட்ட வடிவம் :

வட்டம் என்பது சாதாரணமாக ஒரு வரிவடிவமாக நினைத்துவிட கூடாது. பிரபஞ்சத்தின் அனைத்து பொருளுக்கும் வட்டமே ஆதாரம். இயற்கையில் எந்த ஒரு வஸ்து உண்டானாலும் அது வட்டத்தின் அடிப்படையில் அமையும்.

இந்த அண்டத்தின் வடிவம் வட்டம், பிரபஞ்சத்தின் இந்த வடிவத்திலிருந்து தோன்றும் அனைத்தும் அவ்வடிவத்தையே மூலமாக கொண்டுள்ளது. அண்டத்தின் வடிவமே அதன் பிண்டங்களில் பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள் வட்டத்தின் முழு வடிவமான கோள வடிவத்தை கொண்டது. சூரியனும், சந்திரனும் மற்றும் பிற கிரகங்களும் வட்ட வடிவங்கள். அதன் சுற்றும் பாதைகளும் வட்ட வடிவமானது. பூமியில் தோன்றும் இயற்கையான முத்து, கற்கள் மற்றும் நீர்துளி அனைத்தும் கோள வடிவத்தை கொண்டது.

உயிர் பிறக்க சூல்வடிவம் எடுக்கும் கரு வட்ட வடிவத்தை எடுத்த பிறகே உருபெறுகிறது. அணுவும் அணுக்கருவும் வட்டத்தை அடிப்படையாக கொண்டது. சக்தியும் அதிர்வும் பரவுகின்ற வடிவம் வட்ட வடிவமாக கொண்டு விரிவடையும். நீரில் ஒரு கல்லை வீசும் பொழுது அதில் ஏற்படும் வட்டத்தை கவனித்தால் அந்த சக்தி அதிர்வு எத்தகையது என உணரலாம். இயற்கை வடிவான லிங்கமும் ஆவுடையாரும் தெய்வீகத்தை உணர்த்தும் வட்ட வடிவங்கள்.


இயல்பாகவே நமது ஆன்மாவுக்கு வட்ட வடிவில் ஓர் ஈர்ப்பு உண்டு. குழந்தை மாயையால் பீடிக்கப்படாமல் ஆன்மாவினால் இயங்கும் தன்மை கொண்டது. சதுர வடிவத்திலும், வட்ட வடிவத்திலும் ஆன இரு பொருட்களை குழந்தையின் முன் வைத்துவிட்டு கவனியுங்கள். அந்த குழந்தை முதலில் வட்ட வடிவ பொருளை எடுத்து விளையாட துவங்கும். பிற பொருள்களை காட்டிலும் பந்து வைத்து விளையாடுவதை குழந்தைகள் பெரிதும் விரும்புவதை அனைவரும் அறிவோம். எனவே ஆன்மாவால் ஈர்க்கப்படும் வட்ட வடிவம் யந்திர வடிவங்களில் முதன்மையாகின்றது. நடைமுறை வாழ்க்கையில் இந்த வட்ட வடிவம் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்குகிறது.

பிரபலமான சில நிறுவனங்களின் சின்னங்களை [ Logos ] கவனித்தால் அந்த சின்னங்களில் வட்ட வடிவம் பிரதானமாக இருக்கும். அந்த அடையாளமாக சின்னத்தை பார்த்தாலே அந்த நிறுவனத்தை பற்றிய எண்ணங்கள் மனதில் வெளிப்படும். எனக்கு தெரிந்த வகையில் சில உலக நிறுவனங்களின் சின்னம் யந்திர கோட்பாடுகளை போன்று உள்ளது. அந்த நிறுவனங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தமைக்கு அந்த கோட்பாடும் ஒரு முக்கிய காரணம். உங்களுக்கு தெரிந்த ஐந்து பிரபல நிறுவனங்களை பட்டியலிடுங்கள். அதில் நான்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வட்டவடிவத்தை அடிப்படையாக கொண்ட சின்னங்களை வைத்திருப்பார்கள். காரணம் உங்கள் ஆன்மா வட்டவடிவத்தை கண்டால் ஈர்க்கப்படுகிறது.

உங்கள் பார்வைக்கு சில நிறுவனங்களின் சின்னத்தை கொடுக்கிறேன்மேற்கண்ட சின்னங்களை பார்த்ததும் உங்களுக்கு அந்த நிறுவனம் ஞாபகம் வந்துவிடுகிறது அல்லவா? .
இது தான் வட்ட வடிவ யந்திரத்தின் வெற்றி .

வட்ட வடிவத்திற்கும் இறைதன்மைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நிலைத்தன்மை, முழுமை, ஆரம்பம் முடிவு அற்ற நிலை, மையத்தை கொண்டு விரிவடைதல், மையத்தில் ஒடுங்குதல், பிற வடிவங்களுக்கு மூல காரணமாக இருத்தல் என வட்ட வடிவத்தையும் பரம்பொருளையும் தொடர்பு படுத்தும் இலக்கணங்கள் மனித மூளைக்கு அப்பாற்பட்டது. இதன் மூலம் வட்டவடிவம் என்பது இறைத்தன்மையின் முழுமையான வரி வடிவம் என்பதை உணரலாம்.

எனது பணியில் ஒன்றாக சில ஆண்டுகளாக மந்திர சாஸ்திர முறையில் நிறுவனங்களுக்கு பெயரையும், யந்திர சாஸ்த்திர முறையில் சின்னம் அமைத்து கொடுப்பதுண்டு. சாஸ்த்திரம் அறிந்து இப்பணிகளை செய்தால் சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் நன்மை ஏற்படும்.


அடுத்த பகுதியில் முக்கோணம் ..


7 கருத்துக்கள்:

Mahesh said...

எளிமையான விளக்கங்கள் மூலமா பெரிய விஷயங்கள் புலப்படுது.... நல்ல விளக்கம் ஸ்வாமி...

மதி said...

பயனுள்ள தகவல்கள், நன்றி ஸ்வாமி.

ஆ.ஞானசேகரன் said...

//வட்டம் என்பது சாதாரணமாக ஒரு வரிவடிவமாக நினைத்துவிட கூடாது. பிரபஞ்சத்தின் அனைத்து பொருளுக்கும் வட்டமே ஆதாரம்.//

உண்மைதான்... நாகரிக வளர்ச்சியின் ஆதரமும் வட்டமே... நெம்புகோல் தந்துவத்தின் ஆதராமும் வட்டமே.. நன்றி நல்ல கரு..

VIKNESHWARAN ADAKKALAM said...

எளிமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,
திரு மதி,
திரு ஞானசேகரன்,
திரு விக்னேஷ்வரன்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

ஷண்முகப்ரியன் said...

வழக்கம் போல அருமையான விளக்கம் ஸ்வாமிஜி.உங்கள் அடுத்த பதிவில் ஏதோ வைரஸ் சிக்கல் இருக்கிறது என நினைக்கிறேன்.எனது கணிணியில் DEBUG என்றே வருகிறது.கவனிக்கவும் ஸ்வாமிஜி.நன்றி.

sundaresan p said...

vanakam swami

vattathai patriya pala vishayangalai engalidam pakirndamaiku nandri.ithai pola
innum niraya pathipugalai ungalidam ethirpaakirom