Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, March 17, 2009

எனது குருவை பற்றி சில ரகசியங்கள்


நம் ஆட்களுக்கு ஒரு பழக்கம்...

ஒர் அலுவலகம் சென்றார்கள் என்றால் அங்கே இருக்கும் நபரிடம் வேலை விஷயமாக பேசி முடித்தவுடன் என்ன செய்வார்கள்?

கொஞ்ச நேரம் அங்கே இருக்க வேண்டும் என வைத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

அந்த நபர் தீர்ந்தார்...

அந்த நபரிடம் நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தையோ, புத்தி பூர்வமாகவோ பேச மாட்டோம்...

என்ன சார், நீங்க எங்கிருந்து வரீங்க?

தினமும் அந்த வழியாதான் வருவீங்களா?

எத்தன வருஷமா சார் இங்கே வேலை பார்க்கறீங்க?

இதே இருவரும் பெண்ணாக இருந்தால்..

உங்க சேலை நல்லா எடுப்பா இருக்கு. எந்த கடையில எடுத்தீங்க?


இதையெல்லாம் கேட்டு என்ன செய்ய போகிறார்கள்? ( இல்லை...என்ன செய்ய போகிறீர்கள் :) )

சிலரிடம் இதை நேரடியாக கேட்டதுண்டு. “சும்மா ” கேட்க கூடாதா? என்பார்கள்.

இதையெல்லாம் விடுங்கள் பொருத்துக்கொள்ளலாம். என்னை போன்ற ஆட்கள் இவர்களிடம் சிக்கினால் தொலைந்தோம்..

பின்வரும் கேள்வியை சராமாரியாக கேட்பார்கள்.

ஸ்வாமி உங்க குரு யாரு ?

தினமும் சாப்பிடுவீங்களா?

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

சினிமா பார்க்கிறது ..... உண்டுங்களா?

ஒரு குறிப்பிட்ட ஆன்மீகவாதி (வியாதி) பெயரை சொல்லி.. அவரை பத்தி என்ன நினைக்கிறீங்க?

இந்து மதம் மாதிரி வேற எங்கையுமே கிடையாது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

சமாதி-னா என்ன ஸ்வாமி?

குண்டலினி எனக்கு எந்த சக்ரத்தில இருக்குனு சொல்லுங்க..


எஃசெட்ரா..
எஃசெட்ரா..
எஃசெட்ரா.....

ஆன்மீகமாக வாழ்வதால் தேவலாம். இல்லையென்றால் மன அழுத்தத்தில் மன நல மருத்துவ மனைக்கு ஒரு நல்ல நோயாளி கிடைத்திருப்பார்.

எந்த கேள்வியை வேண்டுமானால் சகித்து கொள்ளலாம்.

உங்க குரு யாரு ? என கேட்கப்படும் கேள்விக்கு என்னால் உண்மையாக உணர்வுகளை காட்ட முடியாது.

அவ்வாறு காட்டினால் கேள்வி கேட்டவர் தாங்க மாட்டார் என்பதே உண்மை.

எனது குரு யாராக இருந்தால் என்ன? அதை தெரிந்து கொண்டு இவர் என்ன செய்ய போகிறார்?
இல்லை எனது குருவிடம் சென்று கற்று என்னை போல ஆகவேண்டும் என நினைக்கிறாரா?
அல்லது என்னை பற்றி எனது குருவிடம் புகார் சொல்ல போகிறாரா?

புகழ் பெற்றவரின் பெயரை சொல்லி இவர்தான் என் குரு என சொன்னால் என்னையும் நல்லவர் என முடிவு செய்வாரா?

“கொல்லிமலை ஒத்த வேர் சித்தர்” என ஒருவரை சொல்லி இவர் தான் எனது குரு என சொன்னால் என்ன செய்ய போகிறார்?

-என எனக்குள் பல கேள்விகள் எழும்.

எனது ஒரு கேள்வியை பற்றி சில விஷயங்களை சொன்னதற்கே இத்தனை குழப்பம் உங்களுக்கு இருக்கிறதே. என்னை சிந்தித்து பாருங்கள்..!

இளம் பெண்ணிடம் வயதையும், ஆண்களிடம் சம்பார்த்தியத்தையும் கேட்க கூடாது என்பார்கள்.

இதில் இன்னொன்றையும் சேர்த்திக்கொள்ளுங்கள், ஆன்மீகவாதிகளிடம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள்.

பரசுராமர் தனது குருவிடம் தனது குருவின் குருவை பற்றி கேட்டார். பரசுராமரின் குரு தத்தாத்ரேயர், அவர் தனக்கு 24 குருமார்கள் இருக்கிறார்கள் என்றும் எறும்பு, சிலந்தி,கடல், நரி என விளக்கி கொண்டே போனார். அது போல எனக்கும் நிறைய குருமார்கள் இருக்கிறார்கள்.

எனது குரு பிரம்மாண்டமானவர் அவர் இந்த பிரபஞ்சத்தின் எல்லையை உணர்ந்தவர். அப்படிப்பட்டவரை சிறிய மூளையால் உணர்ந்து, சின்னஞ்சிறு வாய் கொண்டு கூற முடியுமா?

இருந்தாலும் எனது ஒரு குருவை பற்றி கூறுகிறேன்.

எனது குரு பட்டாம்பூச்சி.

பட்டாம்பூச்சி தனது பிறப்பால் புழுவாக இருந்தாலும், தனது அறிய முயற்சியால் வண்ணம் கொண்ட இறகு பெற்று உலா வருகிறது.

இதன் மூலம் பிறப்பால் எப்படி பட்டவனாக இருந்தாலும், ஆன்மீக சாதனையால் உன்னை விடுதலையாக்கு என்பதை வண்ணத்துப்பூச்சி எனக்கு குருவாக இருந்து கற்றுக்கொடுத்தார்.

தினமும் ஒரு பூவில் அமராமல் பல இடங்களுக்கு சென்று வருவது எனது குருவின் இயல்பு. இதன்மூலம் உனக்கு நிரந்தரமான உடல், வீடு, பந்தம் என்பது இல்லை என்பதை கற்றுகொடுத்தார்.

பூக்களுக்கு சுயமாக மற்றொரு பூவை உருவாக்கும் தன்மை இல்லை. வண்ணத்துப்பூச்சிகளே பூக்களை எங்கும், என்றும் மலர காரணமாக இருக்கிறது.
எங்கு எல்லாம் உயிர்கள் உயிர்பற்று இருக்கிறதோ அங்கே சென்று உயிரை மலரசெய் என எனது குரு கற்றுகொடுத்தார்.

தனது தோற்றம் கூட பிறரை கவர்ந்து ஒரு ஷணம் என்னில் அனைவரும் தியானித்து இருக்க செய்ய வேண்டும் எனும் பழக்கத்தை ஊட்டியவர்தான் எனது குரு.

வண்ணத்து பூச்சி என எனைவராலும் அழைக்கப்ப்ட்டாலும்
எனது குரு வண்ணங்களால் மட்டுமல்ல
எனது வாழ்க்கையின் எண்ணங்களால் நிர(ற)ப்பபட்டவர்.

----------------------------------------------------------------------------
எதற்கு இந்த குரு புராணம் என்று தானே கேட்கிறீர்கள்?

திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்கள் என்னை பட்டாம்பூச்சி விருது வழங்கி தொடர் பதிவு எழுத சொன்னார். நமக்கு தான் ஜனரஞ்சகமாக எழுத தெரியாதே, அதனால் எனது குருவை பற்றி சில வார்த்தைகள் எழுதினேன்.
ஆன்மீக பதிவுகள் எழுதினாலும் மக்கள் படிப்பார்கள் என எனக்கு நம்பிக்கையூட்டியவர்களில் திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களும் ஒருவர்.

MLM போல இதை மூன்று பேருக்கு வழங்கி தொடர செய்ய வேண்டுமாம்.

சரி எனக்கு தெரிந்த மூவரை அழைக்கிறேன். அவர்கள் பின் தொடர்வார்களா என தெரியாது.
ஆன்மீகத்தில் கூட என்னை பின் தொடர வேண்டும் என யாரையும் நிர்பந்தித்தது கிடையாது.
இருந்தாலும் அவர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

என்னை கவர்ந்த வலைபதிவாளர்களை அழைத்தால் கண்டிப்பாக உதைப்பார்கள். காரணம் அவர்கள் பெரிய தலைகள் :)

ஆனால் என்னை கவர்ந்த நல் உள்ளங்களுக்கு விருதுகளை வழங்க இருக்கிறேன்.

திரு கோவி.கண்ணன். இவரை பற்றி தனி பதிவே எழுதி விட்டேன். இருந்தாலும் சில வார்த்தைகள். மேலே சொன்ன எந்த கேள்வியும் என்னிடம் கேட்காமல் பழகும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

திரு.எம்.எம் அப்துல்லா - இவரை இது வரை சந்தித்ததில்லை. ஆனால் உள்ளுணர்வு இவரை பற்றி சில நற்கருத்துக்களேயே சொல்லுகிறது. இவரின் கட்டுரைகள் எனக்கு பிடிக்கும் என்பதாலோ என்னவோ சமீபமாக எதையும் எழுதுவதில்லை. :)

திரு.ரவிசங்கர் - இவரின் பதிவுகள் சில கவிதையும், சிறுகதையும் “அட” போட வைக்கும். நல்ல வாசிப்பு அனுபவம் உள்ளவர் என நினைக்கிறேன்.பலதளங்களில் பதிவு செய்வது இவரின் பலம் என நினைக்கிறேன்.

எனக்கு விருது வழங்கியவரும், நான் தொடர சொன்னவர்கள் இருவரும் தமிழ்மண விருதுவாங்கியவர்கள். மோதிர கையால் குட்டு வாங்க வேண்டும் என்பார்கள். என் தலை தாங்காது சாமி :).


------------------------------------------------------------------------------------
பட்டாம் பூச்சி பறக்கும் முறை:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

32 கருத்துக்கள்:

essusara said...

namaskar swami omkar,

Yes You are right.

sarasari indhiyanin mano nilai ippadithan irukirathu.

Aduthuvar visayathil mookai nullaithu enna nadakirathu enpathai theirnthu kolvathil avvalavu arvam.

pattampoochi virudhu petratharku vazhthukal.

Naan ungal blogirku puthiyavan.

jothida padangal arumai ,niraya santhegangal irukirathu varum natkalil ketu therinthu kolkireyn.



anbudan
essusara

Neela Narayanan Venkataram said...

Dear Sir,
May I know your predictions for the forthcoming parlimentary election (tamilnadu). I am interested in knowing the analysis method rather than results of your analysis.

With Regards,
Neelanarayanan V

கோவி.கண்ணன் said...

ம்.....குருவைப் பற்றி முன்பு கூட எங்கோ ஒரு இடுகையில்.....நீங்கள் குருவை தேடவேண்டாம்...குரு உங்களைத் தேடிவருவார் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.

பட்டாம்பூச்சு பற்றி என்ன எழுதுவது என்று ஒரே படபடப்பாக இருக்கிறது :) முயற்சிக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வேண்டுகோளையும் விருதினையும் ஏற்றுக் கொண்டமைக்கு சுவாமிகளுக்கு அடியேன் நன்றி!

//பட்டாம்பூச்சி தனது பிறப்பால் புழுவாக இருந்தாலும், தனது அறிய முயற்சியால் வண்ணம் கொண்ட இறகு பெற்று உலா வருகிறது//

தங்களுடைய குருவின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்! சூப்பர் குருவாச்சே இவர்! சீர்வளர்சீர் பட்டாம்பூச்சியார்! :)

அனந்தாழ்வான் என்னும் இராமானுசரின் சீடர், உங்களைப் போலவே சிலரைக் காட்டுவார்! நீங்க பட்டாம்பூச்சியாரைக் குருவாகக் காட்டியது போல, அவர் கொக்கு, கோழியைச் சீடனாகக் காட்டுவார்!

நல்ல சீடன் - கொக்கு போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பு போல இருப்பான்

* கொக்கு போல = நல்ல விஷயங்களை பொறுமையை விடாமல், காத்திருந்து அறிவான்.
* கோழி போல = உலகக் குப்பையே ஆனாலும், கிளறி, தனக்கு வேண்டிய ஆன்ம விஷயத்தை அதிலிருந்து கொள்வான்
* உப்பு போல = நீரில் 'தான்' என்பதே இன்றி இறைவனுடன் கலந்து விடுவான்...உப்பு சேர்த்ததால் நீரின் அளவு கூடியது என்றே சொல்ல முடியாத அளவுக்கு அந்தக் கூடல்...

பட்டாம்பூச்சி குருவைப் படித்த போது, இந்தக் கொக்கு கோழி சீடர்களும் நினைவுக்கு வந்தார்கள், சுவாமி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
ம்.....குருவைப் பற்றி முன்பு கூட எங்கோ ஒரு இடுகையில்.....நீங்கள் குருவை தேடவேண்டாம்...குரு உங்களைத் தேடிவருவார் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்//

கோவி அண்ணா
When the student is "ready", the teacher "arrives"! :)

//இளம் பெண்ணிடம் வயதையும், ஆண்களிடம் சம்பார்த்தியத்தையும் கேட்க கூடாது என்பார்கள்//

இப்போதெல்லாம் ரெண்டு பேரிடமும் ரெண்டுத்தையும் கேட்கக் கூடாது! :))

//இதில் இன்னொன்றையும் சேர்த்திக்கொள்ளுங்கள், ஆன்மீகவாதிகளிடம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள்//

சரியாகச் சொன்னீர்கள்! சினிமா நடிகை, நடிகர்கள் பேட்டி படித்து படித்து, பல பேர் எல்லாரிடமும், அதே போலவே கேட்க ஆரம்பித்து விட்டாங்க போல! :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு essusara. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நீலா நாராயணன்,

அரசியல் ரீதியான பலன்களை நான் கூறிவதில்லை.
”தேர்தல் 2009 ஐ முன்பே கணித்து சொன்னவர்” எனும் அடைமொழி எனக்கு பிரயோஜனம் இல்லை.

எனக்கு ஆய்வு செய்வதில் விருப்பம் இல்லை.
தேர்தலை கணிக்கும் வழிமுறை கேடபதால் அதை கற்று கொடுக்கிறேன்.

பிரசன்ன ஜோதிடம் மூலமே இதற்கு வழி உண்டு. தனிபட்ட தலைவர்களின் ஜாதகம் பார்த்து சொல்ல வாய்ப்பு இல்லை.

குறிப்பிட்ட கூட்டணிக்கு பிரசன்ன ஜோதிடம் கணித்து அதன் லக்னாதிபதி 1,6,11ஆம் பாவக இணைப்பு இருந்தால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என கூறலாம்.

பிரசன்ன கணிக்க தெரியவில்லை என்றால், சிறந்த ஆசிரியரை நாடி கற்றுக்கொள்ளுங்கள்.
இதற்கு மேல் இந்த விஷயத்தை பற்றி கூறுவதை நான் விரும்பவில்லை.

Unknown said...

குருவைப் பற்றி உங்கள் பதிவு அருமை குருஜி(?)
பட்டாம பூச்சி விருதுக்கு நன்றி.என்னை மதித்து கொடுத்ததற்க்கு.எழுத்துப் பொறுப்பு அதிகமாகிறது.

எல்லாப் புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே.

//பட்டாம் பூச்சி பறக்கும் முறை//

மன்னிக்கவும்.
தொடர விருப்பம் இல்லை.இந்தப்)பட்டாம் பூச்சியை சுதந்திரமாக பறக்க விடுங்கள்.

பட்டாம் பூச்சியை ஏன் வண்ணத்துப் பூச்சி என்று சொல்வதில்லை. இந்த வட்டார வழக்குச் சொல்
(பட்டாம் பூச்சி)இதற்கு முன்(வண்ணத்துப் பூச்சி) புழக்கத்தில் வந்து விட்டதோ?

பட்டாம் பூச்சி - பட்டம் போல் பறப்பதால்? ஒரு குழந்தைத்தனமான சொல் வழக்கு.
வண்ணத்துப் பூச்சி - கலை நயமான வழக்கு. இப்போது வழக்கு - butter fly - கொடுமை.

விக்ரமாதித்தியன் கவிதை ஒன்று:-


நீர் விழ்ச்சி என்று சொல்லாதீர்கள்
உடம்பு நடுங்குகிறது
அது அருவி

நன்றி

பத்மஸ்ரீ பட்டாம் பூச்சி கே.ரவிஷங்கர்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவியார்,

உங்கள் படபடப்பு முதல் பதிவு எழுதும் புதியவரை போல் அல்லவா இருக்கிறது?

உங்களுக்கு எழுத சொல்லியா தரவேண்டும்?

பட்டாம்பூச்சி திராவிடர்களுடையதா அல்லது பார்பணர்களுடையதா என்றோ....
பட்டாம்பூச்சி கோவிலுக்கு செல்வதில்லை அதற்கு பாவம் ஏற்படுமா புண்ணியமா என்றோ எழுதலாம் ;) :))))


உங்களுக்கு நான் சொல்லிதர வேண்டுமா ? :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கண்ணபிரான் ரவிசங்கர்,

எனது பதிவில் சுவைகூட்ட “உப்பு” சேர்த்ததுக்கு நன்றி :).

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

kargil Jay said...

Swami Omkar,
It is funny and mean that you have generously awarded your friend with butterfly. Your friend is a person who compares Ramalinga Adigalar to EVR ( a fraud, a begger, miser, lazy, indisciplined, arrogant, racist, who cheated and exploited SC/STs, who visited prostitutes in his teen ages and who married teenage girl when old, who promoted Islamic terrorism despite muslim chief rejected EVR as Kafir, a liar )

kargil Jay said...

I meant your friend கோவியார்

கோவி.கண்ணன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவியார்,

உங்கள் படபடப்பு முதல் பதிவு எழுதும் புதியவரை போல் அல்லவா இருக்கிறது?

உங்களுக்கு எழுத சொல்லியா தரவேண்டும்?

பட்டாம்பூச்சி திராவிடர்களுடையதா அல்லது பார்பணர்களுடையதா என்றோ....
பட்டாம்பூச்சி கோவிலுக்கு செல்வதில்லை அதற்கு பாவம் ஏற்படுமா புண்ணியமா என்றோ எழுதலாம் ;) :))))


உங்களுக்கு நான் சொல்லிதர வேண்டுமா ? :)
//

ஸ்வாமி, ஐடியா......? இட் ஈஸ் டு லேட்....ஏற்கனவே எழுதியாச்சு இன்னும் வெளி இடல :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கார்கில் ஜெய்,

பதஞ்சலி யோக சூத்திரத்தில் ஒரு பதம் உண்டு.
“ப்ரதிபக்‌ஷ பாவனா” என்பார்கள்.
அனைத்திலும் நல்லதை காண் என ஓரளவு மொழிபெயர்க்கலாம்.

எந்த ஒரு மனிதனுக்குள்ளும் இறையாற்றல் உண்டு.

நீங்கள் ஆன்மீகத்தை பின்பற்றுபவராக இருந்தால் இறைவன் படைப்பில் உள்ள அனைத்தையும் நிறைவானது என்றே பார்ப்பீர்கள்.

குறை வள்ளாலாரிடமோ, பெரியாரிடமோ இல்லை.
உங்களிடமும் கோவியாரிடமும் கூட இல்லை.

நிறைவை உணராதது தான் உங்கள் குறை.

கோவி.கண்ணன் said...

//kargil Jay said...
Swami Omkar,
It is funny and mean that you have generously awarded your friend with butterfly. Your friend is a person who compares Ramalinga Adigalar to EVR
//

அடிக்கடி காலத்திற்கு வந்து செல்வதற்கு மகிழ்ச்சி.
அச்சா அச்சா....பெரியார் தன்னை கிரகஸ்தன் என்று சொல்லிக் கொண்டார், அவர் 'செய்தார்' தாம் பிரம்மச்சாரி பெண்களை ஏறிட்டும் பார்க்கமாட்டேன் என்று சொல்லும் 'பெரியவா, சின்னவா'க்களின் லட்சனம் இணையம் தோறும் நாறுகிறது. அடுத்தவம் முதுகை பார்க்கும் முன், அடுத்தவர் துணையுடனோ, நிலைக்கண்ணாடியிலோ தன் முதுகைப் பார்த்துக் கொள்ளலாம்.

தான் திருடன் என்று ஒப்புக் கொண்டு திருடுபவன், நான் நல்லவன் என்று சொல்லிக் கொண்டே திருடுபவன், இருவருமே திருடுகிறார்கள் என்றாலும், திருடுவதை ஒப்புக் கொள்ளும் நேர்மையாளன் யார் என்பதை ஒப்பு நோக்குக !

வரட்டா ....

Neela Narayanan Venkataram said...

Dear Sir,
Thank you for your response. My name in Tamil is நீல நாராயணன்.

With regards,
Neelanarayanan V

எம்.எம்.அப்துல்லா said...

சாமி தாங்கள் அளித்த விருதிற்கு என் மனமார்ந்த நன்றி. ஏதோ உள்ளுணர்வு சொன்னதாச் சொல்றீங்க!! நான் அந்த அளவிற்கெல்லாம் ஒர்த் இல்லை சாமி :)

அப்புறம் எனக்கு முன்பே இந்த விருது கிடைத்து மூன்று பேருக்கு அளித்தும் விட்டேன்(என்னுடைய ஹேக் செய்யப்பட்ட வலைப்பூவில்). இப்போ வேற யாருக்கெல்லாம் குடுக்கலாம்னு பாக்குறேன்.
மீண்டும் மீண்டும் நன்றிகள்.

MarmaYogi said...

Swamiji

Even Parusamar asked his GURU about his GURU, how can we expect a lay man should not ask this question.

As you know well everyone cannot become "ANMEEGA VATHI".
Some people wish to become "Anmmegavathi"
Some people try to become "Anmeegavathi"
and few people can only reach that stage.

Even these things are also, if I am not wrong, predefined in thier Horoscope. (Hope you would agree with me).

People are struggling with so many problems and the main reason for thier problems is nothing but IGNORANCE.

The worst thing is that they are not even aware of their ignorace.

So we cannot expect them that they should not ask the questions like what you have mentioned in your post.

Some times the questions raised by the people may be irracible, but it is only because that they are in a quagmire of ignorance.

It is duty of all the responsible people to share their contribution to eradicate the ignorance among the people.

As the UPANISHAD says they are not different from us. They are another form of us.

This is my humble view.

I have been a regular visitor of your blog, but this is the first time I give my comment as there was an intution inside urged me to write this comment immediately.

Thanks

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே

ஏன் இந்த அடக்கம் :)

சரி சரி இருக்கறது தானே :)

உங்கள் வருகைக்கும் எனது விருதை ஏற்றுக்கொண்டமைக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மர்மயோகி,


ஒரு பெண்ணிடம் அவர் அழகாக இருக்கிறார் என அவர் கணவன் சொல்லுவதற்கும் நாம் சொல்லுவதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா?

அவர் கேட்கும் கேள்விகளில் உண்மை இருந்தால் எனக்கு பதில் சொல்லுவதில் என்ன கஷ்டம்?

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பின்னூட்டம் எப்பொழுதும் இடுங்கள் உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.



பரசுராமர் கேட்டர் என்றால் உபதேசம் முடிந்து உண்மையான குருவிடம் கேட்டார். இவர்கள் டைம் பாஸுக்கு கேட்கிறார்கள்.

மற்றபடி அவர்களின் அறியாமையை மேம்படுத்துவது என்பது இறைவனின் சித்தம். நான் என்ன செய்ய முடியும் ?

Mahesh said...

ஸ்வாமி.... அருமையானதொரு பதிவு. நன்றி.

தன்னிலே இறைவனைக் காண முடியாதோர் எதிலுமே காண முடியாது...

எதிலும் இறைவனைக் காண்பவர் இறைவனே !!

எங்கோ படித்தது. உங்களின் இந்தப் பதிவைப் படித்ததும் நினைவுக்கு வந்தது.

kargil Jay said...

//, திருடுவதை ஒப்புக் கொள்ளும் நேர்மையாளன் யார் என்பதை ஒப்பு நோக்குக !
//
EVR is by no means honest and open. You are lying man. Even Jinnah clarified and called press meet specifically to explain that EVR is saying lie. This happened when EVR claimed support by Jinnah depite the fact that he received letter stating otherwise. EVR lied from his birth to death, when plucking flowers for garland, he lied to his wife, he lied to SC/STs. He lied everywhere.

Also don't talk irrelevantly and waste my time. You compared vallalar with EVR. So tell when Vallalar had sex with women and when he lied this much like EVR.

The person who openly says his theft is shameless that is all. Praising him is your personal problem.

kargil Jay said...

//குறை வள்ளாலாரிடமோ, பெரியாரிடமோ இல்லை.
உங்களிடமும் கோவியாரிடமும் கூட இல்லை.

நிறைவை உணராதது தான் உங்கள் குறை.//

Swamiji
my prostrations and thanks for your enlightening answer.
1) When did I say I found fault in Vallalar ?

//நிறைவை உணராதது தான் உங்கள் குறை//
2) How do you find fault in my behaviour/character of failure to understand 'completeness of periyar' in just one action i took, when you are so perfect enough not to find fault?

3) If you praise and support lying of your friend Koviyar and EVR, can I too lie : 'Swamiji, I did not mean to blame you, I just praised your music skills in performing jalra?'

4) Your action of providing such certficate indirectly implies that you also support his hatred views on Sekkizhar, Hinduism etc. Why do find fault in my character just for my action of pointing it out to you?

ராமகுமரன் said...

இதற்குத்தான் நதி மூலம் ரிஷி மூலம் விசாரிக்க கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் போல.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கார்கில் ஜெய்,

நான் கூறியதை புரிந்து கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை. பிறரின் குறையை மட்டுமே கண்டு பழகி இருப்பீர்கள் போலும்.

ஒருவர் தனது வலைதளத்தில் கருத்து கூறுகிறார் என்பதை வைத்தே அவரின் குணங்களை முடிவு செய்யும் நபர் நான் இல்லை.

கொஞ்சம் விசாலமான பார்வை உங்களுக்கு தேவை என்பதே எனது கருத்து.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராம் குமார். உண்மை..தான்.

தலைகாவேரியில் காவேரி சிறிய குட்டை போன்று இருக்கும். கங்கோத்திரியில் கங்கை சிறிய சுனைவடிவில் இருக்கும்.

அதனால் தான் ரிஷி முன்பு சிறியவனாக இருந்தாலும் தற்சமயம் பிரம்மாண்டமானவன். அவனில் மூழ்கி அக தூய்மை பெறு வீணாக ஆராயாதே என்றார்கள்.

MarmaYogi said...

Swamiji

My view is that we have to accept the people as they are. Why should we expect that the other people should behave as we expect? If we start accepting everyone as they are, then we need not to struggle to reach the God and we would have the mindset to see everyone as a part of our own soul.

Then we will not have conroversial discussion about EVR and Vallalar.

They had also executed their duty what they were supposed to do in this incarnation and nothing else.

It is simply a drama what we are playing, but the best thing in this drama is no one knows the next scene except the Director.

கோவி.கண்ணன் said...

//Also don't talk irrelevantly and waste my time. You compared vallalar with EVR. So tell when Vallalar had sex with women and when he lied this much like EVR. //

என்னால் சாதிப் பற்றுள்ள (ஆ)சாமிகளுடன் வள்ளலாரை ஒப்பிட முடியவில்லை என்பதே சரி. பாலியல் உறவை வைத்து ஒப்பிடும் கீழ்தரமான கற்பனை எனக்கு இல்லை. பொதுவாழ்க்கையில் தன்னலமின்மை இதைத்தான் ஒப்பிட்டு இருக்கிறேன். வள்ளலார் பற்று உள்ளவர்களே அதை மறுக்காத போது பார்பனர்களின் மறுப்புகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வடலூரில் பார்பனர் ஆதிக்கம் மேலோங்கிவிட்டதாம், வள்ளார் மீது பற்று இருந்தால் அதை தடுக்க முயற்சி செய்யவும்.

பெரியவாக்களின் யோக்கிதைகளைப் பற்றி சொல்லி இருக்கிறேன் அதற்கு பதிலே வரவில்லை

//Also don't talk irrelevantly and waste my time.
//

என்னைப் பற்றி கருத்து சொல்ல நானும் அழைக்கவில்லை. விளங்காதவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நான் வள்ளலாரையும் பெரியாரையும் சேர்த்துப்பார்க்கிறேன், எல்லோரும் அப்படி பாருங்கன்னு வழியுறுத்தலையே

kargil Jay said...

ஸ்வாமிஜி,
நமஸ்காரம்.
நிறைவுக்கும், நிறைக்கும் வித்தியாசம் உண்டு. எப்படி கிரகங்களின் சிறிய வித்தியாசம் கதையையே மாற்றிவிடுமோ அப்படி. நான் தமிழில் என்ன பொருள் வருகிறதோ அதைத்தானே எடுத்துக்கொள்ளமுடியும்?

ராமரின் மேல் குறை கண்டுபிடித்து செருப்புமாலை போட்ட பெரியாரை, தென்னையின் மேல் குறைகண்டு வெட்டிய பெரியாரை, கோவில்களை இடிக்கச் சொன்ன பெரியாரை, தமிழை காட்டுமிராண்டியின் மொழி என்று சொன்ன பெரியாரை உங்களால் நிறை மட்டுமே காணமுடிகிறது. ஆனால் உங்கள் செயலுக்கு எதிராக ஒரே ஒரு கருத்து சொன்ன என் குணத்தில் குறை காண முடிகிறது. இதற்குக் காரணம் என்ன? தனக்கெதிராக செய்யாததினால் பெரியார் நல்லவர். தனக்கு எதிராக சொன்னதினால் கார்கில் ஜெய் கெட்டவன் என்ற சுயநலமோ என்றே தோன்றுகிறது. என் அஞ்ஞானத்தைப் போக்குங்களேன்.

kargil Jay said...

//என்னால் சாதிப் பற்றுள்ள (ஆ)சாமிகளுடன் வள்ளலாரை ஒப்பிட முடியவில்லை என்பதே சரி. பாலியல் உறவை வைத்து ஒப்பிடும் கீழ்தரமான கற்பனை எனக்கு இல்லை. பொதுவாழ்க்கையில் தன்னலமின்மை // -- பரவாயில்லை.. போனமுறை பெரியார் கோல்டு, டைமண்டு , நேர்மை என்று சொன்னீர்கள். நான் இல்லை என்று சில சான்றுகளை அவர் வாழ்க்கையில் இருந்தே கொடுத்தவுடன் அப்படியே ட்ராக்கை மாற்றிவிட்டீர்கள். திராவிடர் கழக நேர்மை உங்களுடையது. :-D....
சொன்ன வார்த்தைக்கே விளக்கம் கொடுக்கக் கண்ணியமில்லாத நீர், எனக்கு சம்பந்தமில்லாத, நான் எப்போதுமே பாராட்டாத, விஷயத்துக்கு என்னை பதில் சொல்லச் சொல்லுகிறீரா?



திராவிடர் கழகத்தலைவர்களுக்கு பலருடன் பாலுறவு வைத்துக் கொள்ளுதல் பகுத்தறிவு வழியே. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. திருவள்ளுவர் 'வரைவின் மகளிர்' அதிகாரத்தில் விலைமாதருடன் கொள்ளும் பாலுறவு, அழுகிய பிணங்களுடன் கொள்வதற்குச் சமம் என்கிறார். அதையும் செய்தவர் பெரியார். அவருடன் வள்ளலாரை சமன் செய்து பேசிய நீர் சிறியார்.

உங்கள் சாதி வெறி உங்கள் சுய பிரச்னை. உங்கள் பார்ப்பன எதிர்ப்பு உங்கள் வெறி. நீங்கள் எழுதியதுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை என்றால் தோல்வியை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இழிவற்ற நிலையில் இருந்து மீண்டுவிட இல்லை திராவிடர் கழகத்தவர். ஆதலால் உங்களுக்கு தேச துரோகி ஈவேரா வைப் பாராட்டத்தான் முடியும். பதில் சொல்ல முடியாது. நீங்கள் சொன்னது பொய் என்றேன். அது உங்களுக்கு உவகையே அளித்துள்ளது போலும். ஆகவே பதில் இல்லை.
நான் எப்போது உங்களிடம் கேள்வி கேட்டேன்? ஸ்வாமிஜியைக் கேள்வி கேட்டபோது தேவையில்லாமல் பேசி உங்கள் சாதி வெறியைக் காண்பித்தீர்கள்.

நான் எதை எழுதினேனோ, எதைச் செய்தேனோ அதைப்பற்றி கேள்வி கேளுங்கள். பதில் சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறேன். கடமை உணர்வில்லாமல் இருக்க நான் என்ன தி.க. காரனா? எதற்கு நான் சம்பந்தப் படாத விஷயத்தைக் கேட்கிறீர்கள்? என் நேரத்தை வீண் செய்கிறீர்கள் ?

கோவி.கண்ணன் said...

//பரவாயில்லை.. போனமுறை பெரியார் கோல்டு, டைமண்டு , நேர்மை என்று சொன்னீர்கள். நான் இல்லை என்று சில சான்றுகளை அவர் வாழ்க்கையில் இருந்தே கொடுத்தவுடன் அப்படியே ட்ராக்கை மாற்றிவிட்டீர்கள். திராவிடர் கழக நேர்மை உங்களுடையது. :-D....
சொன்ன வார்த்தைக்கே விளக்கம் கொடுக்கக் கண்ணியமில்லாத நீர், எனக்கு சம்பந்தமில்லாத, நான் எப்போதுமே பாராட்டாத, விஷயத்துக்கு என்னை பதில் சொல்லச் சொல்லுகிறீரா?
//

//

பெரியார் மீது இருக்கும் பார்பனர்களின் வெறுப்பு வழி அறிந்து கொள்ளும் அளவுக்கு தமிழர்களே யாரும் கிடையாது. பெரியார் மீது குறையை யாரும் காது கொடுத்து கேட்கப் போவதும் இல்லை.
பெரியார் தமிழை ஏன் காட்டுமிராண்டி பாசை என்று சொன்னார் என்பதற்கான விளக்கம் பதிவிலேயே சென்ற ஆண்டு எழுதி இருக்கிறேன். பெரியார் பற்றி இந்துத்துவா வாதிகளின் புரட்டுகள் எப்போதும் எடுபட்டது இல்லை. பெரியாரின் தமிழ் எழுத்துக்களையே பெரியார் தூற்றிகளும் வேறு வழியின்றி பயன்படுத்தும் படி தான் நிலைமையே இருக்கிறது. பிறகென்ன ? இன்றைய தேதியில் பார்பன விதவைகள் கூட மொட்டை அடித்துக் கொள்வதில்லை, இதற்கெல்லாம் காரணம் யார் என்பதை பெண்கள் அறிவார்கள்.

//திராவிடர் கழகத்தலைவர்களுக்கு பலருடன் பாலுறவு வைத்துக் கொள்ளுதல் பகுத்தறிவு வழியே. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. திருவள்ளுவர் 'வரைவின் மகளிர்' அதிகாரத்தில் விலைமாதருடன் கொள்ளும் பாலுறவு, அழுகிய பிணங்களுடன் கொள்வதற்குச் சமம் என்கிறார். அதையும் செய்தவர் பெரியார். அவருடன் வள்ளலாரை சமன் செய்து பேசிய நீர் சிறியார். //

பாலுறவு, பாலியல் வேட்கை இவையெல்லாம் தனிமனித விருப்பம், யாரையாவது கட்டாயப்படுத்தினால் மட்டுமே குற்றம், நீர் தெய்வமாக போற்றும் இராமனின் தகப்பன் கூட 64 மனைவிகளை உடையவன் தான். ஏன் இராமனுக்கே பல மனைவிகள் உண்டு என்று வட இந்திய இராமயணக்கதைகள் சிலவற்றில் சொல்லப்படுகிறது. இராம காதையின் மையமான ஒருவனுக்கு ஒருத்தியை சிறப்பித்துக் கூறியது கம்பனிட்ட பிச்சை.


//உங்கள் சாதி வெறி உங்கள் சுய பிரச்னை. உங்கள் பார்ப்பன எதிர்ப்பு உங்கள் வெறி. நீங்கள் எழுதியதுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை என்றால் தோல்வியை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இழிவற்ற நிலையில் இருந்து மீண்டுவிட இல்லை திராவிடர் கழகத்தவர். ஆதலால் உங்களுக்கு தேச துரோகி ஈவேரா வைப் பாராட்டத்தான் முடியும். பதில் சொல்ல முடியாது. நீங்கள் சொன்னது பொய் என்றேன். அது உங்களுக்கு உவகையே அளித்துள்ளது போலும். ஆகவே பதில் இல்லை.
நான் எப்போது உங்களிடம் கேள்வி கேட்டேன்? ஸ்வாமிஜியைக் கேள்வி கேட்டபோது தேவையில்லாமல் பேசி உங்கள் சாதி வெறியைக் காண்பித்தீர்கள். //

ஸ்வாமிஜியிடம் கேள்வி கேட்டிருந்தாலும் என்னை குறித்து தானே கேட்டீர், ஸ்வாமிஜி பதிவில் நீங்கள் வேறொருவரை சுட்டி அல்லது நான் உங்களைச் சுட்டி ஒரு கிறுக்கன் பின்னூட்டி இருக்கானே என்று கேட்டால் அது சரியா ?
//நான் எதை எழுதினேனோ, எதைச் செய்தேனோ அதைப்பற்றி கேள்வி கேளுங்கள். பதில் சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறேன். கடமை உணர்வில்லாமல் இருக்க நான் என்ன தி.க. காரனா? எதற்கு நான் சம்பந்தப் படாத விஷயத்தைக் கேட்கிறீர்கள்? என் நேரத்தை வீண் செய்கிறீர்கள் ?

//

நான் தி.க காரன் என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா ? எதுக்கு திக மீது இருக்கும் வெறுப்பை என்னிடம் தேவையின்றி காட்டுகிறீர்.

கோவைகத்துக்குட்டி said...

வணக்கம் சுவாமிஜி,
நான் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொ(ன்ரையும்)ருவரையும் குருவாக நினைத்துக்கொள்வேன் (நினைவுளை அசைபோட்ட பிறகு) குரு பற்றி நல்ல விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி(பதிவு).
நன்றி
அன்புடன் செல்லி