Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, October 17, 2009

வேதகால வாழ்க்கை

நம்மில் பலருக்கு சிலவிஷயங்களில் உள்மன கட்டமைப்பு (Predefined Mind set) உண்டு. உதாரணம் வேதம் என்றாலே மத ரீதியான ஒரு புத்தகம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு.

வேதா என்ற வார்த்தைக்கு சரியான பிற மொழி சொல்லாடல் இல்லை என கூறலாம். தமிழில் மறை என்றும் ஆங்கிலத்தில் sacred text என்றும் கூறப்படுவது நான் அறிந்தவரையில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை. காரணம் இவை அனைத்தும் மதம் சார்ந்த மொழிபெயர்ப்புகள்.

வேதா என்றால் ஒன்றாக இருப்பதன் பல்வேறு பிரிவுகள் என கூறலாம். நீங்கள் மனித உடலாக இருக்கிறீர்கள். உங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியே கூறிக்கொண்டாலும் அனைத்தும் இணைந்தது நீங்கள் மொத்த உருவாக இருப்பீர்கள். உங்கள் உடலில் சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம் என இருக்கும் அல்லவா அது போன்று

பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கும் ஒரு ஒலியை வேறுபடுத்திக் கொள்ளுவது வேதம் என கூறலாம்.

இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் சிலர் வேதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதால் அது ஹிந்துமதம் என்பதன் கீழ் வருவதாக சிலர் சொல்லுகிறார்கள். சில அதிபுத்திசாலிகள் வேதம் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் அது ஏதோ சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதாக சொல்லிகிறார்கள்.

திருமூலர் இயற்றிய திருமந்திரம் தமிழில் இருந்ததால் சைவம் என்ற லேபிள் இட்டு அதை பன்னிரு திருமறையில் கொண்டிணைத்தனர். முடிவு தற்சமயம் திருமந்திரம் தன் சுயத்தை இழந்து வருகிறது.

வேத சாஸ்திரத்தில் இருக்கும் விஷயங்கள் ஒரு மொழி சார்ந்தது அல்ல. வேத சாஸ்திரம் ஒலி சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சரி.. இப்பொழுது யோசிப்போம் ஒலி எந்த மதத்தை சார்ந்தது, எந்த நாட்டை சார்ந்தது , எந்த மொழியை சார்ந்தது?

மாடு “...மா” என குரல் கொடுப்பதால் அது இந்திய மொழிதான் பேசுகிறது என்றும் உலகில் இருக்கும் மாடுகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் சென்றது என்றும் கூற முடியுமா?

வியாசர் என்பவர் வேதத்தை நான்காக பிரித்தார். அதற்கு முன் வேதம் ஒன்றாக இருந்தது. ஒன்றாக இருக்கும் பொழுது வேதம் என கூறப்படவில்லை. பிரிந்த பிறகே அது வேதமாகியது.

வியாசர் என்பவர் இதை பகுத்தார் என்றாலும் அவர் எத்தகையவர் என சரியான தகவல் நம்மிடையே இல்லை. வியாசம் என்றால் தொகுப்பு என பொருள். வியாசர் என்றால் வியாசம் செய்பவர். வேதத்தை வியாசம் செய்வதால் வேதவியாசர் என அழைக்க
ப்பட்டார்.

வேதம் என்பது பிரபஞ்ச ஒலி என்றேன் அல்லவா? அதற்கு பொருள் உண்டா என்றால் எனக்கு தெரிந்தவரை மொழிக்கு மட்டுமே பொருள் உண்டு. ஒலிக்கு பொருள் கற்பிக்க
ப்படலாமே தவிர இயற்கையாக இருக்காது.

வேதகால வாழ்க்கை என்ற தலைப்பில் வேதத்தை பற்றி கூறுகிறேனே என உங்களுக்கு குழப்பம் வரலாம்.

வேதகால வாழ்க்கை என்ற ஒரு காலகட்டம் நம் பூமியில் இருந்தது. வரலாற்று அறிஞர்களாலும், அனேகராலும் பதிவு செய்ய
ப்படாத ஒரு வாழ்க்கை முறை அது.

உலகின் பொன்னான காலம் என்றால் அது வேதகாலம். இந்த வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது என்பதே இந்த தொடரின் நோக்கம்.

என்ன புதிய தொடரா என நீங்கள் கேட்பது புரிகிறது...!

வேதகால வாழ்க்கை என்பதை சிலவரிகளில் கூறிவிட முடியாது. முதலில் வேதம் என்றால் என்ன? காலம் என்றால் என்ன? வேதகாலம் என்றால் என்ன மற்றும் வேதகாலத்தை எப்படி வாழ்க்கை முறையாக்குவது என பலபடிகள் கொண்ட விஷயத்தை குறள் வெண்பா வடிவில் இரண்டு அடிகளில் கூறிவிட முடியாது.

மேலும் விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(வேதம் ஒலிக்கும்..)

31 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

\\இந்த வேதகால வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை சுவைபட அமைத்துக்கொள்ளுவது என்பதே இந்த தொடரின் நோக்கம்\

வாழ்த்துக்கள் நண்பரே

இத் தொடர் நல்ல துவக்கமாக உள்ளது.

பொறுமையாக நிறைவாக வரட்டும்..

அன்பர்களும், நண்பர்களும் பயன்பெற...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

ஒரே மர்ம புன்னகையா இருக்கே...

மு.இரா said...

//”சுவாமி ஓம்கார்”// நான் யாரையும் சுவாமி என்று அழைப்பதில்லை...
ஏன் சுவாமி என்று சொல்லாமல் ஸ்வாமி என்று குறிப்பிடுகிறீர்கள்... உங்கள் முத்திரை இதுதானோ...
வேத கால வாழ்க்கை இந்த கலியுகத்துக்கு எதற்கு அய்யா...
முன்பெல்லாம், மதமும், மத கோட்பாடுகளை தேடி பக்தர்கள் போணார்கள்... இப்போது... பக்தர்களை தேடி மதம் அலைகிறது...
அரசியலிலும் ஆள் புடிக்கிறாங்க... ஆண்மிகத்திலும் ஆள் புடிக்கதான் பாக்குறாங்க... இந்த மக்கள்பாடு கடினமய்யா...
இவன், மு.இரா (புலிமகன்.com)

திவாண்ணா said...

//முடிவு தற்சமயம் திருமந்திரம் தன் சுயத்தை இழந்து வருகிறது.//

கொஞ்சம் விளக்கமா சொல்லறீங்களா?

வடுவூர் குமார் said...

வேத சாஸ்திரம் ஒலி சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பல வேதங்கள் வெறும் ஒலி வழியே இன்று வரை கொண்டுவரப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான ஒன்று.

மாடல மறையோன் said...

நம்மில் பலருக்கு சிலவிஷயங்களில் உள்மன கட்டமைப்பு (Predefined Mind set) உண்டு.//

pre-conditioned mind?

preconceived notion?

For this pre-conditioned mind or pre-conceived notion, the person is not responsible.

Such a mind or such a notion is also called 'Conventional wisdom' or 'Received wisdom'

We are like children whose minds can be prejudiced against a thing or being by clever manipulation of their minds by adults like parents.

Even though we think only minds of children can be manipulated, it is not correct. Conditioning of their minds can be reversed and put in proper course, but, as adults, we allow ourselves to be conditioned permanently; and the effects are harmful to society as a whole. Of the many who indulge in such clever manipulation, the religious people are most prominent.

திரு ஓம்கார் பாளையுங்கோட்டையா? ஜான்ஸா? சேவியரா? ம்.தி.தாவா?

மாடல மறையோன் said...

//தமிழில் மறை என்றும் ஆங்கிலத்தில் sacred text என்றும் கூறப்படுவது நான் அறிந்தவரையில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை. காரணம் இவை அனைத்தும் மதம் சார்ந்த மொழிபெயர்ப்புகள்.//

The correct translation can be possible, and I may try it after reading all that you are going to write on the term Veda.

It is refreshing to find you tending to accept that only non-religious people can do the translation correctly.

Sacred text?

In English, they say, according to my little knowledge, 'scriptures'

But மறை has more than one meaning and, hopefully, you will say about them all soon.

மாடல மறையோன் said...

திருமூலர் இயற்றிய திருமந்திரம் தமிழில் இருந்ததால் சைவம் என்ற லேபிள் இட்டு அதை பன்னிரு திருமறையில் கொண்டிணைத்தனர். முடிவு தற்சமயம் திருமந்திரம் தன் சுயத்தை இழந்து வருகிறது.//

Original thought!

மாடல மறையோன் said...

வேதகால வாழ்க்கை என்ற ஒரு காலகட்டம் நம் பூமியில் இருந்தது. வரலாற்று அறிஞர்களாலும், அனேகராலும் பதிவு செய்யப்படாத ஒரு வாழ்க்கை முறை அது.//

'Indians lack historical sense' இது வெள்ளைக்காரகள் நம்மைப்பார்த்துசொல்வது. மன்னர்களின் வரலாறுகளை மன்னர்களின் அடிப்பொடிகள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் பட்டோலையில் எழுதிவைத்தார்கள்.
’Historical sense' என்பது எனன? அது அவசியமா? என்பதையெல்லாம் வெள்ளைக்காரர்தான் சொல்லிக்கொடுத்தனர். வரலாறு என்பது உள்ளதை உள்ளபடி பதிவு செய்வது. குறை, நிறை இரண்டும் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால்,
இந்துக்கள் தங்கள் மதத்தைப்பற்றி எந்த விமர்சனமும் விரும்புவதில்லை.

வெள்ளைக்காரந்தான் இந்தியர்களின் ப்ண்டைக்காலத்துச் சின்னங்களை தேடிதேடி கண்டுபிடித்து அவைகளைக் வரும் சந்ததியருக்கும் காத்துப்பேணவேண்டும் என்று நமக்குச்சொல்லி, Archealogical Survey of Indiaவை அமைத்துக்கொடுத்தான்.

வேதங்களோ, அல்லது இந்துமத சாத்திரங்க்ளோ, பல்லாயிரக்கான ஆண்டுகளுக்குப் பின் வாழும் மாந்தர்களுக்காக எழுதப்படவில்லை. அங்கே, அப்போதே வாழும் மாந்தருக்காகத்தான் என நான் நினைக்கிறேன். அதன்படி, வரலாறு எழுத வேண்டிய அவசியம் இராமல் போனது என்று நான் நினைக்கிறேன்.

மாடல மறையோன் said...

//உங்கள் முத்திரை இதுதானோ...
வேத கால வாழ்க்கை இந்த கலியுகத்துக்கு எதற்கு அய்யா.//

Here is an excellent example of a preconditioned mind.

இரா வேத கால வாழ்க்கை என்பது நூற்றுக்குநூறு இக்காலத்துக்கு பொருந்தாது என முடிவெடுத்து விட்டார்.

இந்தக்காலம் என்பது திடீரென புத்தம்புதிதாக வானத்திலிருந்து பொத்தென விழ நாமெல்லாரும் அதைக் ‘கப்’பென பிடித்து எடுத்துக்கொண்டு வாழ்வதாக ஒரு விபரீத கற்பனை இது.

காலம் ஒரு தொடர்ச்சி. முன்காலத்தை முற்றும் விடுவது மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை. விரும்பியோ, விரும்பாமலோ, தெரிந்தோ, தெரியாமலா - முன்காலம் இக்காலத்தில் உள்ளே நீக்கமற் நிறைந்து நம்மை வருத்தியோ, உற்சாகப்படுத்தியோ இருந்துதான் வருகிறது.

நாமெல்லாரும் காலத்தின் அடிமைகள்.

இப்படிப்பட்ட இக்காலத்தில் திரு ஓம்கார் விளக்கவிருக்கும் ‘அந்த்க்காலத்தின் கூறுகள் உள்ளன்வா? இல்லயென்றால், ஏன் இல்லை? இருப்பின் அவை ஊறு விளைவிக்கின்றனவா அல்லது உற்சாகப்படுத்துகின்றனவா? என்பதையெல்லாம் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை வைத்துத்துதானே சொல்லமுடியும் திரு இரா?

Mr Ira! Let him speak. As I understand, he appears to possess plenty of original thoughts.

sowri said...

Looking forward.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மு.இரா,

உங்கள் கேள்வி நீங்கள் தமிழ் பற்றாளர் என்பதை காட்டுகிறது.

தமிழ் மேல் பற்றுடன் இருக்க பிற மொழிகளில் தொடர்பு இருக்க வேண்டும். பாரதியை போல.

/வேத கால வாழ்க்கை இந்த கலியுகத்துக்கு எதற்கு அய்யா..//

வேத காலம் என்றால் என்ன என்றே நான் இன்னும் கூறவில்லை. அதற்குள் ஏன் இந்த கேள்வி?

முதலில் உங்கள் தமிழ் அறிவுக்கு ஒரு கேள்வி...

கலி என்பது தமிழ் சொல்லா? கலியுகம் என்பதன் தமிழ் பதம் என்ன?

முதலில் நீங்கள் தமிழை பயன்படுத்த துவங்குங்கள். பிறகு சுவாமிக்கு ’ஸ்’ சரியா சுப்ரமணியத்திற்கு ‘ஸூ” சரியா என ஆராயலாம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திவா,

//கொஞ்சம் விளக்கமா சொல்லறீங்களா?//

திருமந்திரம் மக்களிடையே பரவலாக சென்று சேரவில்லை. தேவாரம், திருவாசகம் போல அதை பக்தி இலக்கியமாக கருதியும், ஒரு சாரர் சைவ இலக்கியமாகவும், சிலர் திருமூலரை சித்தர் என்றும் கூறுவதால் திருமந்திரத்தை திருவின் மந்திரமாக உணர்வதில்லை.

இதற்கு காரணம் திருமந்திரம் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சிக்கி உள்ளது காரணம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜோ அமலன்,

சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.

//Predefined Mind set//

//pre-conditioned mind?//

condition என்பது மாறக்கூடியது.
எப்பொழுதும் ஒன்றுக்கு மேம்பட்ட condition இருக்கும். வேறு கண்டிஷன்களுக்கு மாற வாய்ப்பு உண்டு.

defined என்றால் அங்கே ஒன்று மட்டுமே உண்டு. no other choice to change.

உங்கள் பின்னூட்டம் எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.
அவற்றிக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஷண்முகப்ரியன் said...

வேத சாஸ்திரத்தில் இருக்கும் விஷயங்கள் ஒரு மொழி சார்ந்தது அல்ல. வேத சாஸ்திரம் ஒலி சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.//

இதுபோல வரிக்கு வரி பொருட் செறிவுள்ள பதிவு.
நீங்கள் சொல்லத் தொடங்குவதற்குள்ளேயே எனது கருத்துக்கள் தேவையற்ற ஒன்று.

முதலில் அமைதியாகக் கேட்கிறேன்.

நன்றி ஸ்வாமிஜி.

Unknown said...

புதிய தொடர் இனிதே தொடங்க நல்வாழ்த்துக்கள்.

Mahesh said...

ஸ்வாமி... "பேதம்"னா பிரிவு, "வேதம்"னா ஞானம்னு படிச்சுருக்கேனே... விளக்கம் அடுத்த பகுதியில வரும்னு நினைக்கிறேன்.

மாடல மறையோன் said...

பதிலுக்கு நன்றி.

’வேத காலம் பொன்னானது’ என்று நீங்களும் முடிவை முதலில் சொன்னபிறகே தொடங்கியிருக்கிறீர்கள்.

இரா, ’அது பொருந்தாதது’ என முதலிலேயே முடிவு செய்துவிட்டார்.

முடிவு முதலில்...! இருவருக்குமிடையில் என்ன வேறுபாடு?

அனைத்தையும் சொல்லிவிட்டு இக்காலம் பொன்னானதா? அல்லது பொருந்தாததா? என்று படிப்பவரிடம் விட்டுவிடுவது எவ்வளவு சாலச்சிறந்த்தது?

What is conditioning? Is it permanent or changeable? இக்கேள்விகளை நான் உங்களிடம் வாதிக்க விழையவில்லை.

Your entire blog post consists of categorical statements. வெட்டு ஒன்று. துண்டு இரண்டு. I don't want to think that way.

Conditioning can be permanent. இதற்கு நாம் வாழ்க்கையின் மாந்தர்களை உற்றுப்பார்த்தால் தெரியவரும். இவ்வளவுதான் சொல்லமுடியும் இங்கே.

One point I may like to draw your attention to:

Here, you write all about your belief and thoughts, containing categorical imperatives. Only this. Nothing else.

Your respondents mostly comprise of your regular readers who toto your views. They flatter you. A few may differ, but, as Abdulla wrote about my comments in another post here, லூசுலே விடவேண்டியது. எதை? The dissenting views.

So, you are surrounded by sycophants.

All your arguments should be open to debate. The other side should also be presented to us. Only then, we can come to decide whether your belief and views are valid and acceptable.

In short, you are not open. You should invite people like Ira and many more to your blog and ask them to present their counter views. You can even lend your blog to post their views in detail. Feedback area is restricted, used only by your loyal readers to wish you, to congratulate you, to encourage you - but never question you in the spirit of knowing the truth.

எறும்பு said...

அய்யா ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ.... உங்கள் கமெண்ட் எல்லாம் ஒரே நகைச்சுவையாய் உள்ளது போங்கள்...
//Here, you write all about your belief and thoughts// add this thing also.. he write all about his experience & from his experience.so surely it will be different from others. you can read anything anywhere, but you cant experience all.
//as Abdulla wrote about my comments in another post here, லூசுலே விடவேண்டியது. எதை?// because your comment is like that.. you told christians & muslims are not aanmikavathis... means that you don't know anything about christians & muslims..
லூசுதனமா உள்ளத லூசுலதான் விடனும்

எறும்பு said...

//All your arguments should be open to debate. The other side should also be presented to us///
There is no other side... There is only one. It is TRUTH... your opinion may change but truth remains as truth...

எறும்பு said...

//In short, you are not open. You should invite people like Ira and many more to your blog and ask them to present their counter views. //
vediceye blogspot is open to all.
அய்யா சாமி.. இங்க விவாதம் பண்ணலாம்... விதண்டாவாதம் பண்ண கூடாது... உங்க கருத்த நீங்க சொல்லலாம்... ஆனா அதையே சுவாமி ஓம்காரும் சொல்லனும்னு எதிர் பார்க்க கூடாது ..
//You can even lend your blog to post their views in detail// this blogs belong to omkar.. If you want to post your views... google is open to all.. create a blog & உங்க எண்ணங்களை அள்ளி தெளிங்க...

எறும்பு said...

//திரு ஓம்கார் பாளையுங்கோட்டையா? ஜான்ஸா? சேவியரா? ம்.தி.தாவா?///
உங்கள் நகைச்சுவைக்கு ஒரு example... these are colleges in tirunelveli.. why you ask this question?? In what way you find சுவாமி ஓம்கார் to related with this collage???

எறும்பு said...

// but, as adults, we allow ourselves to be conditioned permanently///

yes after seeing all your comments.. i accept, your mind is conditioned permanently... hope you will recondition it...

எறும்பு said...

அய்யா ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ....

All the above comments are my "ORIGINAL THOUGHT"..

மாடல மறையோன் said...

Thanks a lot to Mr Erumbu.

Erumbu is also the name of a small village on the banks of river Cauvery near Tirchy எறும்பியூர்.

No dis-respect is intended to Thiru Omkaar.

A lot of gurus lend their ears to different persons clarifying and explicating their points which differ with the questioners. In fact, Vedas or Upanishads (me not sure - not being a Hindu myself) are just a question and answer sessions between disciples and gurus. The Q-A sessions between Ramanar and his disciples have been turned into a classical book by one of his English disciples. It has become the corpus containing the spiritual values Ramanar represented or stood for. Spiritual matters are complex, hence elucidation is needed. Without students raising doubts, how does a teacher come to know his points have been fully understood by his students?

That was why, I thought an anmikavaathi should be open to questions and may avail himself of the opportunity to clarify his points to open society. Living in closed quarters surrounded by willing disciples will restrict his views and belief to go only to such closed society of a few persons. Sycophants wont questions or raise doubts.

I respect Hindu religion and its ancient values.


On Truth:

It is an elephant. We are the blind men.

Rest of the story you know, Mr Erumbu!

Perfect truth is known only to God. Men know only its myriad dimensions. If anyone says his is the only Truth, he wants to be a God!

ஸ்வாமி ஓம்கார் said...

யானை காதில் எறும்பா?

அப்பா டக்கர் அமீர்பர் said...

நீண்ட ஆயுள் தாரும் ( ரிக் / 59-11)



அக்கினியே வருக

கவிஞன் நீ

சுத்திகரிப்போன் நீ

முனிபுங்கவன் நீ

முன்னோடி நீ

இன்பம் தருவோன் நீ

ஈந்து காப்போன் நீ

ஒளி வழங்கி நீ

வேள்வியில் திதிக்கப்படுவோன் நீ

திறமையோர் என்றும் போற்றும் நீ ( ரிக் 8/60 )



இந்திரனே நின் வீரச்செயல்கள்

பேசப்படுகின்றன

பகைவனின் பிறப்புருப்பை

வச்சிராயுதத்தால் துணித்தவன் நீ


தேவர்கள் வாக்தேவியைத்தந்தார்கள்

பசுக்கள் அவ் வாக்தேவியை

அம்மா வென்று அழைக்கின்றன
...EDHU ENDHA MADHRIYANO OLI...
.....NEER "CHO MADHRI" KUZHAPUGIRIR...????????

குலவுசனப்பிரியன் said...

பொருள்களுக்கு ஒளி வடிவம் இருப்பது போல அவைகளுக்கு ஒலி வடிவமும் உள்ளது. அந்த ஒலி வடிவம் தான் வேதம். உதாரணமாக நெருப்பின் ஒலி வடிவம் ’ரம்’. இதன் உச்சரிப்பைக் கட்டுப்படுத்தினால் நெருப்பைக் கட்டுப்படுத்தலாம் என்பீர்கள்.

எல்லாம் கேட்ட கதைதான். நடத்துங்கள்.

தாத்தாச்சாரி சொன்ன விளக்கங்களை யார் படித்தார்கள். காவு கொடுத்து, காவு வாங்கிய காட்டுமிராண்டிகள் போதையில் உளரிய வாய்ச் சொல் வீரத்தை யார் போய் சரி பார்க்கப் போகிறார்கள்.

நெருப்பென்றால் நாக்கு வெந்துவிடாது.

nagai said...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ உளவியல் படித்த நபர் என்பதில் சந்தேகம் இல்லை....

நல்ல விவாதங்கள்...அவை மதத்தை மட்டும் காயப்படுத்தாமல் செய்யுங்கள்...கேள்விகள் கேட்க படும்போதுதான் தெளிவு கிடைக்கும்...வாழ்த்துகள்