Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 13, 2009

பழையபஞ்சாங்கம் 13 - 10 - 2009

பழக்கம் ஒரு விளக்கம்

நம்மில் பலருக்கு சில பழக்கம் இருக்கும். ஆளுக்கு ஆள் வேறுபட்டாலும் ஏதோ ஒரு பழக்கத்தை நாம் கொண்டிருப்போம். பழக்கத்தில் நல்லபழக்கம் கெட்ட பழக்கம் என சிலர் வகைப்படுத்துவார்கள். உண்மையில் நல்லது கெட்டது என இவற்றில் எதுவும் இல்லை. பழக்கம் என்பது எப்பொழுதுமே கெட்டது தான். இதை நான் சொல்லவில்லை பதஞ்சலி தன் யோகசூத்திரத்தில் சொல்லுகிறார். தன்னை எதனுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என நினைப்பவர்கள் தங்களுக்கு உள்ள பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

நான் கூறும் இவ்விஷயம் சற்றுக்குழப்பமாக இருக்கலாம். ஒரு வாழ்வியல் உதாரணத்தை பார்ப்போம். சென்ற பழைய பஞ்சாங்கத்தில் சிவா மற்றும் லீலாவை பற்றி எழுதி இருந்தேன். ஒரு வலையுலக நண்பர் நீங்கள் சிவா மற்றும் லீலாவுடன் இருக்கும் படம் வேண்டும் என்றார். அவருக்கு மூன்றையும் ஒன்றாக பார்க்க விருப்பமோ என்னவோ. :)

அவரின் கோரிக்கைக்காக புகைப்படம் எடுக்கத் தயார் ஆனேன். புகைப்படம் எடுக்க உதவியாளர் யாரும் இல்லாததால் சிவா மற்றும் லீலாவை என் அருகே நிற்க வைத்து தானியங்கி கேமராவை தயார் செய்து விட்டு விரைவாக வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தேன். 5..4....3.....2...1 என வினாடிகள் கரைந்தது.....

புகைப்படம் எடுக்கும் நேரத்தில் சிவாவும் லீலாவும் போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்து ஓடி கேமராவை எடுத்து வந்து என் கையில் கொடுத்தனர். க்ளிக்.. க்ளிக்...!

நான் தான் அவர்களை அப்படி பழக்கி இருந்தேன். சில நேரங்களில் பழக்கங்கள் பிரச்சனையாகிவிடும் என்பதற்கு இது ஓர் உதாரணம். ஓஷோ பழக்கம் ஒரு மனநோய் என இதற்கு ஒரு கதை சொல்லுவார். இங்கே வேண்டாம் அப்படிபட்டக் கதைகள். காரணம் இது போன்ற கதைகள் சொல்லி எனக்கு பழக்கம் இல்லை..!

-------------------------------------
நோபல் தரிசு - எழுத்துப்பிழை அல்ல...

சிவாமி சிவானந்தர் பற்றி கேள்விப்பட்டிருப்பீருகள். ரிஷிகேஷத்தில் ஆசிரமம் அமைத்து உலகளாவிய நிலையில் யோக மார்கத்தை பரப்பியவர். பூர்வாசரமத்தில் அவர் தமிழகத்தை சார்ந்தவர். அவர் ரிஷிகேஷ் சிவானந்தா ஆசரமத்தில் வசித்த காலத்தில் அங்கே பல கலைநிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கும். கர்னாடக சங்கீத வித்வான்கள் மற்றும் பல கலை நிபுணர்கள் இவர் முன் நிகழ்ச்சி நடத்துவதை பெருமையாக கருதினார்கள்.

எந்த நிகழ்ச்சியானாலும் சிவானந்தர் மிகவும் ரசிப்பார். தலையை ஆட்டி.. தாளம் போட்டு அவர் ரசிக்கும் பாவனையை பார்க்கும் எவரும் தங்களை அறியாமல் அந்த நிகழ்ச்சியில் ஒன்றிவிடுவார்கள். கலைஞர்களுக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் தன் கையாலேயே பாராட்டு சான்றிதழ் ஒன்றும் வழங்குவார். உண்மையில் எத்தகைய கலைஞராக இருந்தாலும் சிவானந்தர் இதையேதான் செய்வார் என பலருக்கு தெரியாது.

ஒரு நாள் புல்லாங்குழல் இசையை ஆரம்ப கட்டத்தில் பயின்று வந்த ஒருவர் தான் சிவானந்தரின் முன் வாசிக்க விரும்புவதாக கூறினார். சிவானந்தரும் ஆசிரமவாசிகளும் கூடி இருந்த மிகபெரிய அவையில் அவர் வாசிக்க துவங்க அபஸ்வரமாக வெளிப்பட்டது. அனைவரும் நெளிந்தனர். ஆனால் சிவானந்தர் வழக்கம் போல தலையை ஆட்டி ஆட்டி ரசித்து “ பிரமாதம் பிரமாதம் ” என கூறிக்கொண்டிருந்தார். புல்லாங்குழல் கலைஞர் தன் நிலையை சிறிது நேரத்தில் உணர்ந்து தானாகவே நிறுத்திக்கொண்டார்.

சிவானந்தர் அவருக்கு பொன்னாடை அணிவித்து ‘புல்லாங்குழல் மாஹாவித்வான்’ என்ற பட்டத்தை வழங்கினார். அவையோர்களுக்கு அதிர்ச்சி. இதை பெற புல்லாங்குழல் கலைஞருக்கு அளவில்லாத கூச்சம்.

ஒரு வருடம் கழித்து அதே நாளில் ஆசிரமவாசிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கலைநிகழ்ச்சிக்கான மேடையில் அதே புல்லாங்குழல் கலைஞர். ஆனால் இந்த முறை மிகவும் ஆனந்தமான இசையை அவையோர்களுக்கு வழங்கினார். அனைவரில் காதுகளிலும் புல்லாங்குழலால் தேன் நிரப்பினார். நிகச்சியை அவர் நிறைவு செய்து பேசும் பொழுது கூறினார், “ சென்ற ஆண்டு குருநாதர் கொடுத்த பட்டத்திற்கு நான் தகுதி அற்றவன் இல்லை என்பது எனக்கும் , உங்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தே இருந்தது.. பட்டத்திற்கு தகுதியானவனாக என்னை ஆக்கிக்கொள்ள ஒருவருடம் கடினமாக உழைத்து, என் குருநாதரின் வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என்றார்.

இந்த செய்திக்கும் ஒபமாவுக்கு கிடைத்த நோபல் பரிசுக்கும் சம்பந்தம் இல்லை.


-----------------------------------------
மொழிதை

ஒரு தேசத்தின் காலாச்சாரத்தை ரசிக்க வேண்டுமானால் அவர்களின் கவிதையை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மொழிக்கு மொழி கவிதையின் தன்மை மாறுபடும் என்றாலும் கலாச்சாரம் மற்றும் மொழியை தாண்டி கவிதை பிற கலாச்சாரத்தில் ஊடுருவும். இதற்கு காரணம் ரசிப்பு திறன் என்பது கலாச்சாரங்களை கடந்தது.

மரபு, நவீன, பின் நவீன, ஹைக்கூ என நம் மக்கள் கவிதையில் பல வடிவ முயற்சிகள் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கவிதை வகைகளில் ஒன்றுதான் மொழிதை. மொழி+கவிதை - ஒரு மொழியால் எற்படும் கவிதை மொழிதை. அதாவது ஒரு மொழியில் இருக்கும் வார்த்தையின் எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதுவதன் மூலம் சிலவரியில் கவிதையாக எழுதுவது இதன் கட்டமைப்பாகும். உங்களுக்காக என் மொழிதைகளில் சில இங்கே..


பெருகியது வாகனம்
சுருங்கியது வானகம்

-----------------------------

விசாலமான மனம்
கடவுளின் விலாசம்

இவ்வகை கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்வதால் பிற மொழியில் அதே கட்டமைப்பு கொடுக்காது. மொழியை மட்டுமே அடித்தளமாக கொண்டு கவிதையால் ஏற்படும் ரசிப்பை உண்டாக்குவது மொழிதை. ஒரு ஆங்கில மொழிதை இதோ..

Your Pet - Dog
You itself a Pet - God

நீங்களும் மொழிதையை முயற்சி செய்யுங்கள். மொழிதையை உருவாக்கியவர் போன்ற இலக்கியம் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். :)

-------------------------------------------------------------------------
ஞான ஒளி

தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளை கவரும் படி உருவாக்குகிறார்கள் என கேள்விப்பட்டேன். உண்மைதான் போல இல்லையென்றால் என்னை கவருமா :) ?

ஒரு மாணவர் என்னிடம் என்ன விளம்பரங்கள் பிடிக்கும் என கேட்டார். இந்தியன் ஓவர் சீஸ் பாங்க் விளம்பரத்தில் வரும் அந்த நீண்ட முடி சிறுவன்
பிடிக்கும். அவனைபோன்ற இன்னொரு சிறுவன் வேகா லாண்ட் விளம்பரத்தில் வருவான் என்றேன். குறிப்பிட்டு ஏன் இந்த விளம்பரம் பிடிக்கும் என கேட்டார் மாணவர். நான் சொல்லுவதற்குள் சுப்பாண்டி இடைமறித்து “நமக்கு என்ன இல்லையோ அதைத் தானே ரசிப்போம்” என்றான். ஸ்....ப்பா... முடியல...

ஹவெல்ஸ் சிஎப்எல் பல்ப் விளம்பரம் என்னை கவர்ந்தது. திபெத்திய கலாச்சாரத்தை பகடி செய்வதாக இருந்தாலும் இந்த விளம்பரத்தின் கருத்து அனைத்து கலாச்சாரத்திற்கும் பொருந்தும். போலி மதவாதிகள் உருவாக்கும் மக்களின் அறியாமை அனைத்து இடத்திலும் இருக்கிறது அல்லவா?

தொலைக்காட்சியில் சிலவினாடிகளே காண்பிக்கபடும் இந்த விளம்பரம் ஒரு குறும்பட அளவுக்கு இருக்கிறது. உங்கள் பார்வைக்கு இதோ..


28 கருத்துக்கள்:

எறும்பு said...

//இந்த செய்திக்கும் ஒபமாவுக்கு கிடைத்த நோபல் பரிசுக்கும் சம்பந்தம் இல்லை//

Swami Omkar touch....

எறும்பு said...

மீ த first & second...அப்பாடி ரெம்ப நாள் ஆசை... இன்னிக்குதான்
midinchithu...

யாசவி said...

nice one

:))

Ramesh said...

திரு ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு,
தங்களது ஆன்மீக கட்டுரைகள்,கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.தங்களது ஆன்மீக பயணம்(பணி) மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி
அன்புடன்
ரமேஷ்

Rajagopal.S.M said...

//இங்கே வேண்டாம் அப்படிபட்டக் கதைகள். காரணம் இது போன்ற கதைகள் சொல்லி எனக்கு பழக்கம் இல்லை//

இங்க வேண்டாம்..அங்க சொல்லுங்க... எங்க... குரு கீதைல....
Monday, July 27, 2009 நீங்க அங்க கடைசியா பதிவு பண்ணினது... கொஞ்சம் அப்பப்ப அங்கயும் கவனிச்சுக்குங்க....
இப்படிக்கு,படிக்கு.. குரு கீதையை விரும்பி படிக்கு ம்
ராஜகோபால்

நிகழ்காலத்தில்... said...

\\என் மொழிதைகளில் சில இங்கே..

பெருகியது வாகனம்
சுருங்கியது வானகம்\\

எனக்கு இந்த மொழிதை புதிது..

வாழ்த்துக்கள்..

\\தன்னை எதனுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என நினைப்பவர்கள் தங்களுக்கு உள்ள பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும். \\

\\சில நேரங்களில் பழக்கங்கள் பிரச்சனையாகிவிடும்\\

பழக்கம் இருக்கலாம், ஆனால் அது பழக்கமாக,இருக்கக்கூடாது.

அது இல்லைன்னா எனக்கு சரிவராது, எனக்கு இப்படித்தான் உணவு சாப்பிட்டு பழக்கம் என்ற பழக்கத்துடன் பற்று கொள்ளக்கூடாது.

நான் சரியாக சொல்லி இருக்கிறேனா??

SRI DHARAN said...

//உண்மையில் எத்தகைய கலைஞராக இருந்தாலும் சிவானந்தர் இதையேதான் செய்வார் என பலருக்கு தெரியாது//
சில நாட்களுக்கு முன்பு நான் வலையில் புதிதாக எழுத ஆரம்பித்திருந்தேன். அப்போது ஸ்வாமிஜிஇடம் எனது ப்லோக் ஐ பார்வையிடுமாறு வேண்டியிருந்தேன்.பிறகு அவரிடமிருந்து வந்த மெயில் இதோ:
திரு சதிஷ் குமார்.

உங்கள் கடிதம் கண்டு மகிழ்ந்தேன்.

உங்கள் வலைதளம் பல கருத்துகளுடன் சிறப்பாக இருக்கிறது.

உங்களுக்கு என் ஆசிகள்

ஸ்வாமி ஓம்கார்
இப்போதுதான் புரிகிறது ஸ்வாமிஜி ஏன் அப்படி கூறினார் என்று. இன்னும் பயிற்ச்சி வேண்டுமோ ?
-- www.srisathish.blogspot.com

Romeoboy said...

மொழிதை எனக்கு ரொம்ப புதிதாக இருக்கிறது. இதை முதலில் படிக்கும் போது ஹைக்கூ கவிதை போல தோற்றம் வருவதை மறுக்க முடியவில்லை.

சுப்பாண்டியை எப்படி தான் சமாளிகிரின்களோ ..

எம்.எம்.அப்துல்லா said...

உங்க பதிவுக்கு தொடர்ந்து வந்து படிக்கிறது எனக்கு பழக்கமாப் போச்சு. இப்ப என்ன செய்யலாம்??

:))

sowri said...

என்னக்கு blog யும் படிச்சி கமெண்ட்ஸ்களையும் தொடர்ந்து வந்து படிக்கிறது எனக்கு பழக்கமாப் போச்சு. அப்படியே அப்துல்லா அண்ணன் என்ன சொல்லரன்னு தெரிஞ்சிகிளைன மண்டயே வெடிச்சிடும் போல இருக்கு.

ஷண்முகப்ரியன் said...

எம்.எம்.அப்துல்லா said...
உங்க பதிவுக்கு தொடர்ந்து வந்து படிக்கிறது எனக்கு பழக்கமாப் போச்சு. இப்ப என்ன செய்யலாம்??

:))//

இது super!

Siva Sottallu said...

அப்துல்லா அண்ணே, நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிடீங்க...

சுவாமி, TRB rating கொரஞ்சிரபோகுது பாத்துகோங்க... :-)

// அதாவது ஒரு மொழியில் இருக்கும் வார்த்தையின் எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதுவதன் மூலம் சிலவரியில் கவிதையாக எழுதுவது இதன் கட்டமைப்பாகும். //

இதை ஆங்கிலத்தில் Anagram என்பார்கள் என்று நினைக்கிறன் சுவாமி.

POST
STOP
SPOT
TOPS...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு எறும்பு,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு யாசவி,

உங்கள் பெயரே ஒரு மொழிதை தான்.

யாசவி
வியாச
சயாவி


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரமேஷ்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,
//
எங்க... குரு கீதைல....
Monday, July 27, 2009 நீங்க அங்க கடைசியா பதிவு பண்ணினது... கொஞ்சம் அப்பப்ப அங்கயும் கவனிச்சுக்குங்க....
இப்படிக்கு,படிக்கு.. குரு கீதையை விரும்பி படிக்கு ம் //

நீங்க சொல்லீட்டீங்க. குரு இன்னும் கதை எழுத சொல்லலையே :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,
//அது இல்லைன்னா எனக்கு சரிவராது, எனக்கு இப்படித்தான் உணவு சாப்பிட்டு பழக்கம் என்ற பழக்கத்துடன் பற்று கொள்ளக்கூடாது.

நான் சரியாக சொல்லி இருக்கிறேனா??//

நீங்க எப்பவும் சரியா சொல்லும் பழக்கம் உள்ளவர் தான் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்ரீதரன்,

//
ஸ்வாமி ஓம்கார்
இப்போதுதான் புரிகிறது ஸ்வாமிஜி ஏன் அப்படி கூறினார் என்று. இன்னும் பயிற்ச்சி வேண்டுமோ ?//

நான் சிவானந்தர் அளவிற்கு பெரிய ஆள் இல்லை.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரோமியோபாய்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

//உங்க பதிவுக்கு தொடர்ந்து வந்து படிக்கிறது எனக்கு பழக்கமாப் போச்சு. இப்ப என்ன செய்யலாம்??

:))//

ரைட்டு.. இதை வழக்கமா வைச்சுக்குங்க. பழக்கம் தப்பாம் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,
திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

உங்கள் கணினி அறிவில் இது எல்லாம் சாதாரணம் என நினைக்கிறேன்..

Palindrome,Anagram எல்லாம் சொல் விளையாட்டை மென்பொருளாக்கி இருப்பீர்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி.

Mahesh said...

ஐ... மேட்டர் நல்லாயிருக்கே...

மொழிதை... இதுவும் புதுசா இருக்கு !!

கட உள்
கடவுள் !!

இது எப்பிடி இருக்கு??? :))

Anonymous said...

//இந்த செய்திக்கும் ஒபமாவுக்கு கிடைத்த நோபல் பரிசுக்கும் சம்பந்தம் இல்லை.//
ஆகா ஏன்னா வில்லத்தனம்!

//நான் சிவானந்தர் அளவிற்கு பெரிய ஆள் இல்லை.//
சுவாமி, எப்பிடியும் நீங்க என்னைக்காவது ஒரு நாள் பெரிய ஆள் ஆயிடுவீங்க, அப்பறம் என்ன! :)

krish said...

நோபல் பரிசுடன் வயிற்றெரிச்சல் பரிசு ஒன்று கொடுக்கலாம்.இப்படி எல்லோரும் ஆரம்பித்தால் தமிழக அரசு விருதுகள் போல் நோபல் பரிசு ஆயிடும். நீங்கள் The Prize படித்திருக்கிறீர்களா?

மாடல மறையோன் said...

பழக்கம் ஒரு விளக்கம் - ஓஷோ சொன்னது ‘பழக்கம் ஒரு மனவியாதி’ என்பது மனோத்த்துவ நிபுணர்கள் முன்பே சொன்னது.

அவர்கள், அதை ’வியாதி’ என்று சொல்லாமல், conditioning of mind என்று சொல்வ்ர்.

வியாதி என்ற பதம் மிகவும் அபூர்வமாக சொல்ல்வதே இக்கால் ம்ருத்துவக்கொள்கையாகும். எடுத்துககாட்டாக, முன்பு காது கேளாதவரை செவிடர் (deaf) என்பர். இப்பொது செவித்திறன் குறைந்தோர் என்பர்.

பழக்கங்களில் இருவகை. ஒன்று வந்ததுபோல போகும். இன்னொன்று, நிலைக்கும். இரண்டாதில் tics போன்றவை அடங்கும். எது எப்படியிருப்பின் இவைகளை மனவியாதி என்பது ஒரு குறும்புத்தனம்.

ஓபாமாவுக்கு நோபல் - ந்ன்றாக எழுதப்பட்டிருக்கிற்து.

மொழிதை மொழிதையாகவே இருக்கட்டும். கவிதை எனச்சொல்லாதீர்கள்.

மாடல மறையோன் said...

//பூர்வாசரமத்தில் அவர் தமிழகத்தை சார்ந்தவர்//

திருனெல்வேலிக்கு அருகிலுள்ள் பத்தமடைதான் இவர் பூர்வாசிரமத்து ஊர். இது பாய்களுக்கு பேர்போனது. பத்தமடை பாய். இசுலாமியர்கள் நிறைந்தவூர்.

இவர் ஒரு MBBS டாக்டர் திருச்சியில். பின்னர்தான் துறவறம்.

இங்கே திரு ஓம்கார் எடுத்தக்காட்டிய் சிவான்ந்தாவின் இசை ரசிப்பு. ஏற்றுக்கொள்வது கடினம்.
பொய்யாக ஒருவனைப் புகழ்ந்து பின்னர் அதைப்பொய்யென அவன் கண்டுபிடித்து, பின்னர் எத்திறமையில்லையென் மறைத்து வெளிக்காட்டப்பட்டதோ, அதில் திறமையடைவான் என்பது வெகு நீளமான் கற்பனை. அப்படியே உண்மையெனிலும், அஃது ஒரு bad trick.

யாசவி said...

//திரு யாசவி,

உங்கள் பெயரே ஒரு மொழிதை தான்//


புரியவில்லை விளக்கவும்.

நன்றி