Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, October 28, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 6

மனிதனின் புத்தி விசித்திரமானது. காஸ்மிக் கதிர்கள் தொடர்ந்து பூமியில் விழுகிறது என்றும் அதை அளக்க கருவிகள் கூட கண்டறிந்துவிட்டார்கள் என்றாலும் பலர் நம்புவதற்கு தயாராக இல்லை. எச்.ஐ.வி கிருமியை கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கி கொண்டு மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அதை நம்புகிறோம். காரணம் உயிர் பயம். அது போல கடைசி துளி பிரபஞ்ச ஆற்றல் இல்லாமல் உயிர்வாழ முடியாது என்ற நிலை வந்தால் தான் பிரபஞ்ச சக்தியை நம்புவோம்.

பிரபஞ்ச சக்தி நம்மை வந்து அடையவில்லை என்றாலும் நம்மால் உயிர்வாழ முடியாது என்பதே உண்மை. நாகரீக மாற்றம் என்ற பெயரில் காஸ்மிக் கதிர்களின் ஆற்றலை திசை திருப்பும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பெருகிவருகின்றன. உதாரணமாக நம் அலைபேசிகள் மற்றும் செயற்கை கோள்களின் அலைகள் பிரபஞ்ச ஆற்றலை நீர்த்துப்போக செய்கின்றன. இதை விட அனுக்கதிரியக்கம் பிரபஞ்ச சக்தியை வளிமண்டலத்திலேயே தடுக்கும் ஆற்றல் கொண்டது.

பிரபஞ்ச ஆற்றல் கிடைக்காமல் போனால் என்ன பிரச்சனை என எதிர்கேள்வி எழலாம். 1980ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட அனுக்கதிரியக்க செயல்களாலும் அதிகமான அனுஆயுத சோதனையாலும் உலகலாவிய அளவில் குழந்தையின்மை மற்றும் புற்றுநோய் பெருகி வருகிறது. விவசாயத்தில் தொய்வு, மனசிதைவு நோய் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதில் நகைமுரண் என்னவென்றால் இந்த புள்ளிவிவரத்தை கணிப்பது அதே செயற்கைக்கோள்கள் தான்.

மரங்கள் பெருகி நம்மை வாழவைக்கும் என சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். மழை பெறுவதற்கு மரம் நடுவோம் என்கிறார்கள். உலகில் பொழியும் மலையில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான அளவே மரத்தினால் ஏற்படுகிறது. உண்மையில் பிரபஞ்ச ஆற்றல் உலகில் முழுமையாக பரவுவதற்கு மரம் அவசியமாகிறது.

தாவரங்கள் பிரபஞ்ச ஆற்றலை ப்ராணனாக மற்றும் வேலையை மட்டும் செய்வதில்லை. ப்ராண சக்தியால் உங்களுக்குள் நடக்கும் செயலை மீண்டும் பிரபஞ்ச சக்திக்கு கொண்டு இணைக்கிறது. உங்கள் செயல், எண்ணம் எல்லாம் ஆகாயத்தில் பதியப்படுகிறது என்பதை நீங்கள் நம்புவதற்கு தயாரா?

இக்கருத்தை பரிட்சித்து பார்க்க ஒரு பயிற்சி செய்வோமா?

நன்கு வளர்ந்த ஒரு மரத்தின் அருகில் செல்லுங்கள். சிறிது வினாடிகள் மெளனமாக இருங்கள். பிறகு உங்களுக்கு பிடித்த ஏதோனும் ஒருவிஷயத்தை பற்றி மரத்திடம் பேசுங்கள். மனதிக்குள் பேசினால் போதும். இல்லை உங்களை பிறர் வேறுமாதிரி நினைக்கக்கூடும். :)

உதாரணமாக நீங்கள் கிரிக்கெட் ரசிகர் என்றால் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட்
வீரரை பற்றியோ அல்லது குறிப்பிட்ட கிரிக்கெட் போட்டியை பற்றியோ விலாவாரியாக விவரிக்கவும். பிறகு அங்கிருந்து வந்து விடுங்கள். சில மணி நேரம் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ அந்த மரத்தின் கீழே உங்கள் நண்பரை அழைத்து செல்லுங்கள். சிறிது நேரத்திலேயே அவர் அன்று நீங்கள் மரத்திடம் பேசிய விஷயங்களை உங்களுடன் பேச ஆரம்பிப்பார்....!

உங்களின் எண்ணத்தை பிரபஞ்ச சக்தியாக மாற்றி மீண்டும் உங்களுக்கே திருப்பு அனுப்புகிறது இந்த இயற்கை எனும் பிரம்மாண்டம்.

இந்த பயிற்சி செய்வதற்கு முன் உங்களுக்கு பல கேள்விகள் வரும். அதற்கு நானே விளக்கிவிடுகிறேன்.

1) மரம் அதே மரமாக இருக்க வேண்டுமா? பிரபஞ்ச சக்தி பொதுவானது என்பதால் வேறு மரத்திற்கு சென்றாலும் இது நடக்கும் அல்லவா?

ஆம். அதே மரமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதே வகை மரமாக இருந்தாலும் இது செயல்படும். அரச மரத்தின் அடியில் இப்பயிற்சியை செய்கிறீர்கள் என்றால் அதே அரசமரத்தின் அடியிலோ அல்லது வேறு அரச மரத்தின் அடியிலோ சென்றாலும் இது நடக்கும்.

2) நாம் நண்பர்களுடன் சென்றால் நம் எண்ண அலைகள் நாம் பேசிய விஷயத்தையே நினைப்பதால் இது நடக்கும் சாத்தியம் உண்டே?

உங்கள் நண்பரை தனியே அதன் அடியில் சென்று நிற்க சொல்லுங்கள். பிறகு வேறு ஒரு நாள் சந்தித்தால் முதலில் நீங்கள் மரத்திடம் பேசியது பேசுவார். அதனால் ஆரம்பத்தில் பிரபஞ்ச சக்தியை உணரவே இந்த பயிற்சி. இது பல நிலையில் வேலை செய்யும்.

3) நம் எண்ண அலைகள் பிரபஞ்ச சக்தியில் தான் பதிகிறது என்பது என்ன நிச்சயம்? மரத்தில் கூட பதியலாம் அல்லவா?

அதனால் தான் அதே வகை வேறு மரங்களில் சோதித்து பார்க்க சொல்லுகிறேன்.

FAQ இவ்வளவு தான். :)


சரி...நீங்கள் ரெடியா? பயிற்சி செஞ்சுட்டு எனக்கு சொல்லுவீங்களா?

நீங்கள் நினைப்பதை கூற வைக்கும் பிரபஞ்ச சக்தியிடம் அடுத்த நிலையில் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் பெற முடியும். இதற்கு நம்பிக்கையுடன் ஆழ்ந்த பயிற்சி தேவை.

அந்த நிலையை நீங்கள் அடைந்தால் அந்த மரத்தின் பெயர் கற்பக விருட்சம். உங்கள் பெயர் யோகி...!

உங்களுக்கு கூறிய பயிற்சியை நான் மிகவும் விஞ்ஞான பூர்வமாகவும் செய்து விட்டேன். அந்த வேடிக்கையை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

(...வேதம் ஒலிக்கும்)

27 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா said...

அந்த நிலையை நீங்கள் அடைந்தால் அந்த மரத்தின் பெயர் கற்பக விருட்சம். உங்கள் பெயர் யோகி...!

//

சாமி உங்களை அல்லாமல் வேறு யாராவது இதை எழுதி இருந்தால் " அந்த நிலையை நீங்கள் அடைந்தால் அந்த மதத்தின் பெயர் ஹிந்துமதம்/இஸ்லாம் மதம்/கிருத்துவ மதம் என்று பெயர். உங்கள் பெயர் ஹிந்து/முஸ்லிம்/கிருத்துவ‌ர்...!" என்று எழுதி இருப்ப‌ர். நீங்க‌ உண்மையான‌ ஆன்மீக‌வாதி. உங்க‌ளை ந‌ண்ப‌ராய் அடைந்த‌தில் க‌ர்வ‌ம் கொள்கின்றேன்.

புன்னகை said...

வணக்கம் ஸ்வாமி

//இதில் நகைமுரண் என்னவென்றால்//

உங்களின் தமிழுக்கு நான் தலைவணங்குகிறேன்.

இந்தப் பயிற்சி ஆச்சரியமானதாக இருக்கிறது , முயற்சித்துப்பார்க்கப்போகிறேன்.

உங்களுடைய அரும்பணி தொடரட்டும்.

எனக்கு இப்போது 5 ஆம் அதிபதி திசை நடக்கின்றது ,ஞானிகளின் தொடர்பு கிடைக்கும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.

பிரபஞ்ச சக்தியை தாவரம் பெற்றுத் தருவதுபோல் நீங்களும் எங்களுக்குப் பெற்றுத்தருகிறீர்கள்.

நன்றி.

sowri said...

Its' full of surprise. Mee too try and give the feedback.

Sabarinathan Arthanari said...

என் தந்தையும் இதை (மரமுடன் உரையாடல்) அடிக்கடி கூறுகிறார். இதனால் தான் புனித தலங்களில் தல விருட்சம் உள்ளதாகவும், மக்கள் தங்களது வேண்டுதல்களை வைப்பதாகவும் விளக்குவார்.

மேலதிக விளக்கங்களுக்கு நன்றி சுவாமி.

யாசவி said...

முயற்சித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

மிகவும் ப்ராக்டிக்கலான விளக்கம். உங்களை பார்க்கவேண்டும் போல இருக்கிறது.

என்ன செய்ய சிங்கையிலிருந்து வரவேண்டுமே :(

Manohar said...

சுவாமி

மிகவும் அற்புதமான விசயம்,

யாசவி

சிங்கையில் உள்ள மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சுவாமியை இங்கு வரவழைக்கலாமே.

Subbaraman said...

Vilakkam Nandraga ulladhu, Swamiji..Namma receiver ozhunga irundha thane prapanja sakthi velai seyyum..illati maram koduthalum onnum theriyadhu :)

Sivakumar said...

ஸ்வாமி

பிரபஞ்ச சக்தியை நாம் பெறுவது எப்படி?
எவ்வகையான பயிற்சியைச் செய்தால் அதை அடையலாம்?

ஷண்முகப்ரியன் said...

அந்த நிலையை நீங்கள் அடைந்தால் அந்த மரத்தின் பெயர் கற்பக விருட்சம். உங்கள் பெயர் யோகி...!//

அல்லது ஸ்வாமி ஓம்கார்!

ஜே.கிருஷ்ணமூர்த்தி தனது அடையாறு வசந்த பவன் மாளிகையில் பூக்காத ஒரு மரத்துடன் பேசி அதனைப் பூக்க வைத்தார் எனறு அவரது வாழ்க்கைக் குறிப்பில் படித்ததை இங்கே நினைவு கூர்கிறேன்,ஸ்வாமிஜி.

சரணங்கள்,ஸ்வாமிஜி.

yrskbalu said...

like kovikannan friends are there.

what we do?

their deepmind opposing means?

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

கர்வம் கொள்ளும் நாள் விரைவில் வரும். அதுவரை கர்வத்தை பாக்கெட்டில் ஒரு விதையாக வையுங்கள். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புன்னகை,

உங்கள் கருத்துக்கு நன்றி. மகிழ்ந்தேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,
திரு சபரி நாதன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு யாசவி,
திரு மனோ,

அருகில் இருக்கும் மரத்திடம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். அனைத்து மரமும் கற்பக விருட்சம்தான். உங்கள் எண்ணம் ஈடேறும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்புராமன்,
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு சிவக்குமார்,

சில யோக பயிற்சிகள், சில யாக பயிற்சிகள் என உண்டு என்றாலும் சரியான குருவின் வழிகாட்டுதல் இருந்தால் எதுவும் இல்லாமல் அடையலாம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

சரியான உதாரணம் கொடுத்தீர்கள்.

பல மஹான்களின் வாழ்க்கையில் தாவரம் முக்கிய பாத்திரமாக இருந்திருக்கிறது. பதிவின் நீளத்தை கருதி அதை எழுதவில்லை. உதாரணம் புத்தர் - போதி மரம்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

மனிதனின் அஹங்காரம் தான் அவர் சிந்தித்து செயல்படுகிறார் என நினைக்கிறது. உண்மையில் பிரபஞ்ச சக்தி சில காரண காரியத்தால் மனிதனை அங்கனம் இயக்குகிறது.

உங்கள் நண்பர் எப்படி பட்டவராக இருப்பினும் இச்செயல் செவ்வன நடக்கும்.

Siva Sottallu said...
This comment has been removed by the author.
Siva Sottallu said...

இதனால் தான், திருமணம் வேண்டி மரத்தில் தாலிகட்டுவதும், குழந்தை வேண்டி தொட்டில்கட்டும் வழக்கமும் இருக்கிறதோ...


// உங்கள் செயல், எண்ணம் எல்லாம் ஆகாயத்தில் பதியப்படுகிறது என்பதை நீங்கள் நம்புவதற்கு தயாரா? //

நம்புவது கடினம் தான் என்றாலும், படிப்பது மிகவும் பிரமிப்பூட்டுகிறது ஸ்வாமி.

முயற்சிசெய்து பார்த்துவிட்டு உங்களுக்கு தெரிவிக்கின்றேன் ஸ்வாமி.

நான் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் பல, ஆனால் நேரம் கிடைக்கும் பொழுது பதிவிர்கேற்ப உங்களின் பதிலை தெரிந்துகொள்ள ஆசைபடுகின்றேன் ஸ்வாமி.

மரங்களின் வளர்ச்சி/தோற்றம் காலத்திற்கேற்ப மாறுபட்டு காணபடுகின்றது. வசந்த காலத்தில் பொலிவுடனும் இலையுதி காலத்தில் வறண்டும் காணபடுகின்றனவே , நீங்கள் கூறும் இந்த ஆற்றல் மரத்திடம் எப்பொழுதும் மாறலாம் இருக்குமா அல்லது காலத்திற்கேற்ப மாறுமா?

Anonymous said...

சுவாமி, சிவா கேட்ட கேள்வி எனக்கு எழுந்தது. பனி காலத்தில் இங்கு (அமெரிக்காவில்) மரங்கள் வாடி வறண்டு பொய் இருக்கும். இலையில்லாத மரங்களிடம் பேச முடியுமா. அல்லது அந்த மரங்களிடம் இருந்து பிரபஞ்ச சக்தியை பெற முடியுமா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//மரங்களின் வளர்ச்சி/தோற்றம் காலத்திற்கேற்ப மாறுபட்டு காணபடுகின்றது. வசந்த காலத்தில் பொலிவுடனும் இலையுதி காலத்தில் வறண்டும் காணபடுகின்றனவே , நீங்கள் கூறும் இந்த ஆற்றல் மரத்திடம் எப்பொழுதும் மாறலாம் இருக்குமா அல்லது காலத்திற்கேற்ப மாறுமா?//


இலையுதிர் காலத்தில் என நீங்கள் கேட்டதிலேயே பதில் இருக்கிறது. இக்காலத்தில் இலைகள்தான் உதிர்கின்றன. மரம் உயிருடனே இருக்கும்.

ப்ராண சக்தியை வெளிப்படுத்தும் திறனை புதுப்பிக்கும் நோக்கில் இயற்கையாகவே தாவரத்திற்கு இருக்கும் மறுசுழற்சி முறை இது.


என் புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள். என் தலை எப்பொழுதும் இலையுதிர்காலமாக இருக்கும் அதனால் நான் பயன்படாதவனாக இருப்பேனா :) இலை இல்லை என்றாலும் அது வளரும் ஆற்றல் அம்மரத்திடம் உண்டு.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,

//சுவாமி, சிவா கேட்ட கேள்வி எனக்கு எழுந்தது. பனி காலத்தில் இங்கு (அமெரிக்காவில்) மரங்கள் வாடி வறண்டு பொய் இருக்கும். இலையில்லாத மரங்களிடம் பேச முடியுமா. அல்லது அந்த மரங்களிடம் இருந்து பிரபஞ்ச சக்தியை பெற முடியுமா?//

பனிகாலங்களில் குளிர் பிரதேசங்களில் இலைகள் தாக்குபிடிக்காது. ஆனாலும் மரங்கள் சக்தியை கொடுக்கும். முழுமையான ஆற்றல் கொடுக்காது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தன்னை மேம்படுத்த அது பல போராட்டம் செய்யும். குளிர் பிரதேசங்களில் ப்ராண சக்தி குறைவே.

ஹிமாலய மலையில் அப்பொழுது எப்படி சக்தி இருக்கும் என்ற கேள்வி எழலாம். ஹிமாலயாவில் மேலைநாடுகளை போல பனிமொழிவு இருக்காது.அதிகப்படியான பனிப்புயல் இருக்கும். சிம்லா, டார்ஜலிங், நைனிடால் போன்ற பிரதேசத்தில் பனி மொழியும். அதனால் அவை சக்திவாய்ந்த இடங்களாக மஹான்கள் உணர்வில்லை.

Anonymous said...

அருமையான உவமை சுவாமி ... ஹி ஹி :)

Anonymous said...

//குளிர் பிரதேசங்களில் ப்ராண சக்தி குறைவே.//
நீங்கள் சொல்வது சரிதான் சுவாமி. குளிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பிக்கும் பொழுது, மனதில் ஒரு தனி ஆனந்தம் ஏற்படும்!

Siva Sottallu said...

// இலை இல்லை என்றாலும் அது வளரும் ஆற்றல் அம்மரத்திடம் உண்டு. //

நன்கு புரிந்தது ஸ்வாமி, மிக்க நன்றி.

பிரபஞ்ச ஆற்றலை பெற்று ப்ராணனாக மாற்றி வெளியிடுவதற்கு மரத்திற்கு இலைகள் அவசியம் (like satellite receiver) என தவறாக நினைத்துவிட்டேன்.

// ஒரு மரத்தின் இலைகள் சிறியதாக இருக்க இருக்க அதில் ப்ராணன் குறைவு என்று அர்த்தம். பெரிய இலைகள் மூலம் ப்ராணன் அதிகமாக வெளிப்படும் என அர்த்தம். //

மரத்தின் ஆற்றல் சக்தியை அறிய இலைகள் ஒரு அளவுகோலே என்பது இப்பொழுது புரிகின்றது ஸ்வாமி.

seethag said...

ஸ்வாமி , ஏன் சிலரால் செடி எல்லாம் வளர்க்க முடிவதில்லை. சிலருக்கு மட்டும் green thumb?

வடுவூர் குமார் said...

இம்முறையை நான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.உண்மையா? இல்லையா? யோசித்துக்கொண்டிருக்கும் போது ....
4 நாட்களுக்கு முன்பு நானும் மனைவியும் வெளியில் போக தயாராக இருந்தோம்.முதலில் நான் கீழிறங்கி ஸ்கூட்டியில் உட்கார்ந்துகொண்டு பக்கத்து Flat ஐ பார்த்து இங்கு ஒரு இடம் கிடைத்தால் வாங்க முயற்சிக்கலாம் என்று மனதுக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன்.5 நிமிடங்கள் கழித்து மனைவி வந்து வண்டியில் உட்கார்ந்துவிட்டு நான் பார்த்த பிளாட்டில் ஒரு வீடு காலியாக இருப்பதாக சொன்னார்.சிரித்துக்கொண்டே இப்போது தான் நினைத்தேன் நீ சொல்லிவிட்டாயா என்றேன்.ஒரு வேளை பக்கத்தில் உள்ள மரம் தான் காரணமா?