Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, October 10, 2009

ஆன்மீகவாதிகள் ஓர் விளக்கம்

ஆன்மீகவாதிகளை நாம் வரையறுக்க முடியாது என முன்பு கூறினேன். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். காட்டாறுகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது இயலாது. பின்பு எப்படித்தான் தெரிந்துகொள்ளுவது?

உங்களுக்கு முன் இருக்கும் விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு உணர்த்துவது உங்கள் புலன்களே. கண்ணாடி உங்களை பிரதிபலிக்கும் என்பது உங்கள் கண்கள் சரியாக வேலைசெய்தால் மட்டுமே கூற முடியும். உங்கள் கண்களில் குறை இருப்பின் நாம் கண்ணாடியே சரி இல்லை என கூறிவிடுவோம். அதனால் ஆன்மீகவாதிகளுக்கு அருகில் நீங்கள் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறுகிறேன். உங்களுக்குள் நான் சொல்லுவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அவர் உயர் ஆன்மீக நிலையில் இருக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்மீகவாதிகளை உணர்வு உறுப்புக்களில் தெரிந்து கொள்ளுவது சாத்தியமா என கேட்கலாம். ஆரம்ப நிலை சாதகர்களுக்கு இது அவசியம். பிறகு அவர் உங்களை உணர்வுக்கு அப்பால் அழைத்துச்செல்வார்கள்.

ஒரு ஆன்மீகவாதியின் அருகில் இருக்கும் பொழுது உங்களுக்குள் எப்படி இருக்கும் என இந்த கட்டுரையின் இறுதியில் கூறுகிறேன்.

அதற்கு முன் ஆன்மீகவாதியில் லட்சணங்கள் என நான் பட்டியலிட்ட விஷயங்கள் ஏற்படுத்திய விபரீதங்களை பார்ப்போம்

1) கண்களில் ஒரு ஒளியுடன், சாந்தமான முகமும் , கண்களில் கருணை வழிந்தோடிக் கொண்டிருக்கும். கைகளில் ஒருவிதமான ஆசி கொடுக்கும் பாவனையில் வைத்திருப்பார்கள். ஆனந்ததின் அடையாளமாக ஒரு புன்சிரிப்பு நிலையாக முகத்தில் இருக்கும்.

இவ்வாறு எதிர்பார்ப்பதால் தங்கள் முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சிலர் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது சொல்லிதெரியவேண்டியது இல்லை. புன்னகையை எதிர்பார்த்த காரணத்தால் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தும் வண்டியில் ஏறும்பொழுது புன்னகைக்கிறார்கள். பலவருடங்களாக புன்னகையை போலியாக சுமந்தவர்கள் எப்படி ஒரு நாளில் அதை விடுவிக்க முடியும்?

மேலே நான் குறிப்பிட்ட விஷயங்களில் ஆசிகொடுக்கும் தன்மையை விடுத்து பிற விஷயங்களை நீங்கள் விமான பணிப்பெண்ணிடம் காணலாம். வரும் வாடிக்கையாளர்களை செயற்கையாக அவர்கள் அனுகும் முறை இது. போலி ஆன்மீகவாதிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை இப்படித்தான் வலைவீசுகிறார்கள்.

2) தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். பசும்பால் மற்றும் பழங்கள் இவர்களின் தின உணவு.

இக்கருத்தை எழுதும் பொழுது நான் மிகவும் வேதனை அடைந்தேன். காரணம் எனக்கு தெரிந்த ஒரு ஆன்மீகவாதி நன்றாக உணவு சாப்பிடுபவர். ஒரு ஊருக்கு செல்லும் பொழுது அந்த மக்கள் உணவு வழங்காமல் பழங்களை கொடுத்து அவரை படுத்தபடுக்கையாக்கி விட்டார்கள். தற்காலத்தில் பால் மற்றும் பழங்களில் அளவுக்கு அதிகமான ரசாயனம் கலக்கப்படுகிறது. நிங்கள் ஒரு வேளை மட்டும் பால், பழம் சாப்பிட்டு பாருங்கள் ஒரு மணி நேரத்தில் உங்கள் ஜீரண உறுப்பு தன் வேலையைக்காட்டும். வயிற்றுப்போக்கால் அவர் பல நாள் எழுந்து நடக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

3) எப்பொழுதும் கைகளில் ஒரு ஜப மாலையோ அல்லது மதம் சார்ந்த பொருளை வைத்து கடவுள் நாமத்தை ஜபம் செய்வார்கள். நமக்கும் ஜபம் செய்ய வேண்டும் என மந்திரத்தை கேட்டால், தீட்ஷை வழங்குவார்கள். நாம் கேட்கும் மந்திரத்தை எந்த தயக்கமும் இன்றி வழங்குவார்கள்.

எல்லா ஆன்மீகவாதிகளும் மதப்பொருட்களை கைகளில் வைத்திருக்கமாட்டார்கள். மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இருப்பவர்கள் மக்கள் எந்த விஷயத்தை பயன்படுத்த வேண்டுமோ அதை அவர்களுக்காக கைகளில் வைத்திருப்பார்கள். காரணம் இவர்கள் பயன்படுத்துவதை பார்த்து அவர்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காக.
மேலும் நமக்கு எந்த மந்திரம் வேண்டும், நாம் ஜபம் செய்ய வேண்டுமா என்று முடிவு செய்பவர் நம் குரு மட்டுமே. ஆன்மீகவாதிகள் அல்ல. குறித்துக்கொள்ளுங்கள் அனைத்து ஆன்மீகவாதிகளும் உங்கள் குரு அல்ல..!

அனைவருக்கும் தீட்சை தருபவர் உங்களுக்கு குருவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலர் மார்கழி மாத பிரசாதம் போல நான் இவரிடத்தில் தீட்சை வாங்கினேன், பிறகு இவரிடத்தில் வாங்கினேன் என பெருமை பேசுவார்கள். தீட்சை என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே ஏற்பட வேண்டிய நிகழ்வு. தீட்சை பலரிடத்தில் வாங்குவது பெருமையல்ல. குறைந்த பட்சம் ஒருவரிடமாவது வாங்கியதை பயன்படுத்தவேண்டும் என்பதே அவசியம்.

ஒருவரிடம் தீட்சை பெற்று பின்பற்ற முடியாத சூழலில் இன்னொருவரிடம் தீட்சை பெறலாம். அதைவிடுத்து பார்ப்பவரிடம் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்ள தீட்சை என்பது தேர்தலில் வழங்கும் வாக்காளருக்கான பணம் அல்ல..!

4) அவர்கள் அதிகமாக தூங்கமாட்டார்கள். 24 மணி நேரமும் கடவுளை நினைப்பதால் தூங்குவது அவர்களின் இயல்பல்ல. அவர்களிடம் எப்பொழுது கேள்வி கேட்டாலும் தெய்வீக ரீதியான விளக்கத்தை கொடுப்பார்கள். அவர்களுக்கு காலம் நேரம் முக்கியமல்ல.

ஆன்மீகவாதிகளை நாம் எப்பொழுதும் எடுப்பார் கைப்பிள்ளையாக வைத்திருக்கிறோம். அவர்களின் உள்ளே தெய்வீக நிலை இருப்பதால் அதற்கு நாம் தக்க மரியாதை செலுத்தவேண்டும். ஒரு கேள்வி கேட்கும் பொழுதோ அல்லது உதவி பெறும் முன்போ அவரிடம் அனுமதி வாங்க வேண்டும். அவரின் உள் நிலையில் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கலாம். அது அவருக்கு பெரும் உபாதையாக அமையும்.

உதாரணம் நானும் ஒரு ஆன்மீகவாதியும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அவர் கொஞ்சம் பிரபலமானவர் கூட. ஆன்மீக விஷயங்கள் இல்லாமல் சில நடைமுறை சங்கடங்களை எனக்கு அவர் விளக்கிக் கொண்டிருந்தார். திடீரென எங்கள் முன் வந்த ஒரு இளைஞர், “ பகவத் கீதையில் மூன்றாம் அத்தியாயத்தில் முதல் ஸ்லோகத்தில் கூறப்படும் விஷயம் இப்படி இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என பெரிய பிரசங்கத்தை நடத்திவிட்டு கேட்டார்.

ஆன்மீகவாதி என்னை பார்த்துவிட்ட ஒன்றும் சொல்லாமல் நடக்கத் துவங்கினார். ஆனால் அந்த இளைஞர் தான் கேட்ட கேள்வியால் அந்த ஆன்மீகவாதி நிலைகுலைந்து சென்றார் என நினைத்து பெருமிதமாக எங்களை பார்த்துக்கொண்டிருந்தார். நான் அந்த ஆன்மீகவாதியிடம் கூறினேன் மக்கள் உங்களை ATM என நினைத்துவிடுகிறார்கள். அதாவது ஆன்மீகம் டெல்லிங் மஷின்...! அவர் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள் விஷயம் புரியும்.


இதனாலேயே அவர்கள் அனேகமாக தொலைபேசியோ அல்லது இணையத்தையோ நேரடியாக உபயோகப்படுத்துவதில்லை. 13ஆவது விஷயத்தில் ( நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.) நான் கூறியது உண்மைதான். பல ஆன்மீகவாதிகள் இதனாலேயே தொலைபேசியை பார்த்தால் ஓடுவார்கள். நம் பக்திமான்கள் பொது தொலைபேசியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு பிரம்மசூத்திரத்தை விளக்குங்கள் என கேட்டால் என்ன செய்ய? நம் சுயநலத்தால் அவர்களை எல்லா நேரத்திலும் பயன்படுத்துவோம். இது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கடினமான உண்மை.

5) உடை விஷயத்தில் பரம எளிமை அவர்களின் அடையாளம். நவீன உடை அணியாமல், வேஷ்டி அல்லது கெளபீணம் அணிந்திருப்பார்கள். அதிக உடை வைத்திருக்க மாட்டார்கள். சேர்த்து வைத்தால் பற்று வரும் என்பதால் இரு உடையுடன் இருப்பார்கள். ஒன்று துவைத்து காயும் பொழுது ஒன்று உடுத்தி இருப்பார்கள். காவி அல்லது வெண்மை என்பது அதன் நிறமாக இருக்கும்.

இவர்கள் உண்மையில் ஆடைகளை விரும்புவதில்லை. நிர்வாணமாக இருப்பதையே விரும்புவார்கள். மஹாவீரர் மற்றும் அனேக அவதூதர்கள் இத்தகைய நிலையை முழுமையாக பின்பற்றுவார்கள். சமூக சூழலுக்காகத்தான் அணிகிறார்கள். சில குறிப்பிட்ட நிறம் அணிவதும் நமக்காகத்தான். உடையின் வேறுபாடு தெரியாத சூழலில் நாம் அவர்களுக்கு பாதகங்களை செய்யலாம். உடையின் காரணத்தால் நாம் அதை தவிர்க்க முடியும். உதாரணம் அவர்கள் முன் காமம் சார்ந்த விஷயங்களை பேசமாட்டோம். ஆன்மீகவாதிக்கு உடல் மேல் ஆடை அணிவது முயல் மேல் பாறையை வைப்பது போல சங்கடமானது. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இதற்கு சரியான உதாரணம்.


பதிவின் நீளம் கருதி ஐந்து விஷயங்களுடன் நிறுத்திக்கொள்கிறேன். சென்ற பதிவு பதினைந்து எண்ணிக்கை வரவேண்டும் என மேலோட்டமாக எழுதபட்டதல்ல. அனைத்தும் விளக்கபட வேண்டிய விஷயங்களே அவை. எண்ணிக்கையில் பதினைந்தையும் கடந்து நிறைய இருக்கிறது.


சரி விஷயத்திற்கு வருவோம்...

ஆன்மீகவாதிகளின் அருகில் இருக்கும் பொழுது நமக்கு எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு உள்ளே ஒருவித பேரமைதி காணப்படும்.
  • அந்த கணத்தை தவிர பிற சிந்தனைகள் எழாது
  • அவரிடம் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என தோன்றினாலும் செயலாற்ற முடியாது.
  • அவரின் கண்களை பார்த்து அதிக நேரம் பேச முடியாது.
  • முதல் முதலாக பார்த்தாலும் பலநாள் பழகிய ஓர் இணக்கம் மனதில் இருக்கும். இருந்தாலும் எல்லை தாண்ட முடியாது
  • பலருடன் நாம் இருக்கும் பொழுது உள்ளுணர்வில் நம்மை மட்டும் அவர் கவனிப்பதை போன்று தோன்றும்.
  • அவரை சந்தித்துவிட்டு வந்த பிறகும் இன்னும் போதவில்லை என தோன்றும்.
  • உங்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தை கேட்ட தோன்றினாலும் செயலற்று நீங்கள் இருக்கும் பொழுது அவர் பிறருடன் உரையாடும் பொழுது உங்களுக்கான விடை அதில் இருக்கும்.
  • உங்களுடன் அவர் மிக நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் மிகவும் அதிக விலகியவாராகவும் உணர்வீர்கள்.

இது மட்டுமல்ல நிறைய உண்டு. நீங்கள் அத்தகையவரை கண்டால் இதை தவிர வேறு என்ன ஏற்பட்டது என கூறுங்கள். முக்கியமாக ஒன்று நிகழும் அதை நான் வேண்டுமென்றே இங்கே குறிப்பிடவில்லை. காரணம் இதை படித்துவிட்டு இது எல்லாம் உங்களுக்கு நடப்பதாக கூட உங்கள் மனம் உங்களை ஏமாற்றக்கூடும். அதனால் அப்படிப்பட்டவரை நீங்கள் சந்தித்தால்/சந்தித்து இருந்தால் அதையும் உணர்ந்து எனக்கு தனிமடலாக கூறுங்கள்.

ஆன்மீகவாதியை நீங்கள் சந்தித்தபோது உங்களுக்குள் நடப்பதும் உங்கள் அன்மீக குருவை சந்தித்தால் உங்களுக்குள் நடப்பதும் ஒன்றல்ல.

அவன் அருளால் அவன் தாள் வணங்கி என கூறுவது போல ஒரு நாள் ஆன்மீக ஆற்றலே உங்களுக்கு அனைத்தையும் உணர்த்தும்.



26 கருத்துக்கள்:

Manohar said...
This comment has been removed by the author.
Manohar said...

சுவாமி

இந்த பதிவை படித்த பின்

'நான் சந்தித்த ஆன்மீகவாதிகளிடம் எனக்கு இது போன்ற எந்த அனுபவமும் ஏற்படவில்லை, மாறாக அவர்களை சந்திப்பதற்காக பட்ட கஷ்டங்களை நினைத்து வேதனை அடைந்துள்ளேன், அனால் அப்படிப்பட்ட ஆன்மீகவாதிகளை கடவுளுக்கு சமமாக வணங்குவது மட்டும் அல்லாமல், அவர்கள் நடத்தும் கல்லூரிகளையும், மருத்துவசேவைகளையும் பாராட்டுவதும், அவர் எனக்கு வெறும் கையிலிருந்து அதை கொடுத்தார் இதை கொடுத்தார் என காண்பிப்பவர்களை பார்த்த போது நமக்கு அது போல கிடக்கவில்லை என ஏங்கியது உண்டு. அதை தற்போது நினைத்தால் மனம் சற்று வலிக்கிறது'.

தாங்கள் கூறியவற்றை அனுபவிக்க வேண்டும் என ஏங்குகிறேன். தங்களை சந்திக்கும் போது அது நடக்கும் என நினைக்கிறேன். மற்றவை தங்கள் செயல்.

*இயற்கை ராஜி* said...

நான் இன்னும் ஆன்மீகவாதி யாரையும் சந்திக்கலைன்ன்னு கன்பர்ம் ஆயிடுச்சி

நிகழ்காலத்தில்... said...

\\நிங்கள் ஒரு வேளை மட்டும் பால், பழம் சாப்பிட்டு பாருங்கள் ஒரு மணி நேரத்தில் உங்கள் ஜீரண உறுப்பு தன் வேலையைக்காட்டும்.\\

ஆமாம் இன்றாவது ஓய்வு கிடைத்தது, என்று, உள்ளிருப்பதை எல்லாம் சுத்தம் செய்து வெளியே தள்ள ஆரம்பித்து விடும் :))

\\குறைந்த பட்சம் ஒருவரிடமாவது வாங்கியதை பயன்படுத்தவேண்டும் என்பதே அவசியம்\\

இடுகை சொல்லும் செய்தியாக நினைக்கிறேன்


\\இதை படித்துவிட்டு இது எல்லாம் உங்களுக்கு நடப்பதாக கூட உங்கள் மனம் உங்களை ஏமாற்றக்கூடும். \\

உண்மைதான்..

ஷண்முகப்ரியன் said...

வரிக்கு வரி ரசித்தேன் ஸ்வாமிஜி.ஆழ்ந்த அனுபவங்களை அழகாக,அருமையாக,அனாயசமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

என்னுடைய ரசனைக்கு ஒன்று தோன்றுகிறது.சொல்லாமல் இருக்க முடியவில்லை.

// * உங்களுக்கு உள்ளே ஒருவித பேரமைதி காணப்படும்.
* அந்த கணத்தை தவிர பிற சிந்தனைகள் எழாது
* அவரிடம் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என தோன்றினாலும் செயலாற்ற முடியாது.
* அவரின் கண்களை பார்த்து அதிக நேரம் பேச முடியாது.
* முதல் முதலாக பார்த்தாலும் பலநாள் பழகிய ஓர் இணக்கம் மனதில் இருக்கும். இருந்தாலும் எல்லை தாண்ட முடியாது
* பலருடன் நாம் இருக்கும் பொழுது உள்ளுணர்வில் நம்மை மட்டும் அவர் கவனிப்பதை போன்று தோன்றும்.
* அவரை சந்தித்துவிட்டு வந்த பிறகும் இன்னும் போதவில்லை என தோன்றும்.
* உங்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தை கேட்ட தோன்றினாலும் செயலற்று நீங்கள் இருக்கும் பொழுது அவர் பிறருடன் உரையாடும் பொழுது உங்களுக்கான விடை அதில் இருக்கும்.
* உங்களுடன் அவர் மிக நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் மிகவும் அதிக விலகியவாராகவும் உணர்வீர்கள்.//

ஒரு பெண்ணை மனப்பூர்வமாக நேசித்து விட்டால் அந்தக் காதலிலும் நீங்கள் விவரித்த இதே அனுபவங்கள் கிடைக்கும்.

எனக்கே இது ஏன்,எப்படி என்று புரியவில்லை.

Unknown said...

//உங்களுடன் அவர் மிக நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் மிகவும் அதிக விலகியவாராகவும் உணர்வீர்கள் //

Swamiji, this is 100% True. Even I have the same experience

sarul said...

சுவாமி

நீங்கள் குறிப்பிட்ட அனுபவங்கள் ஒருவரிடம் எனக்கு ஏற்பட்டன , அவர் அவ்விடம் விட்டகன்றதும் அவருடனிருந்தவர்கள் ஒருநாளேனும் சிறு சிறு ஜோக்குகளுக்கு அதிகமாகச் சிரித்துக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

எலோருக்கும் அவரிடம் ஏற்பட்ட அனுபவம் ஒரேமாதிரியாக இருக்கவில்லை

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மனோ,
உங்கள் எதிர்பார்ப்பு நடைபெற ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை.
//நான் இன்னும் ஆன்மீகவாதி யாரையும் சந்திக்கலைன்ன்னு கன்பர்ம் ஆயிடுச்சி//

நீங்க கண்ணாடி கூடயா பார்த்தது இல்லை :)?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

என்னை இயக்குனராக இருந்தவரா என கேட்டீர்கள் :)

எனக்கு உங்கள் மேல் ஒரு ஐயம். நீங்கள் வக்கீலாக இருந்தீர்களா :) ?

//ஒரு பெண்ணை மனப்பூர்வமாக நேசித்து விட்டால் அந்தக் காதலிலும் நீங்கள் விவரித்த இதே அனுபவங்கள் கிடைக்கும்.

எனக்கே இது ஏன்,எப்படி என்று புரியவில்லை.//

பூடகமாக என் அனுபவத்தை தெரிந்துக்கொள்ளவா இந்த கேள்வி? :)

நான் ஆம் அப்படித்தான் என சொன்னாலும், இது வேறாக இருக்கும் என சொன்னாலும் என்ன அர்த்தம் :) ?

நீங்கள் பைத்தியம் என்பது பிறருக்கு தெரியும் என்பதை ஒத்துக்கொள்வீர்களா என ஒருவரிடம் கேட்டால் என்ன பதில் சொல்லுவார்கள் :))

//உங்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தை கேட்ட தோன்றினாலும் செயலற்று நீங்கள் இருக்கும் பொழுது அவர் பிறருடன் உரையாடும் பொழுது உங்களுக்கான விடை அதில் இருக்கும்.// இந்த விஷயம் காதலரிடம் நடக்குமா என தெரியவில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தம்பிராஜ்,

திரு கேஎஸ்,

உங்களின் அனுபவங்களை மேலும் கூர்மையாக்குங்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மாடல மறையோன் said...

Thiru Omkar

The anmikavaathi paaraattai virumbavaraai urppaar.

avarukku pidikkaathavar avar manthathi puNpaduthtinaal saabam pottuviduvaar

Anmikavaathi inthuvaaka mattumee irukkaveeNdum.

Christians and Muslims are not anmikavaathis.

Only 3 now

In English:

The spiritual gurus prefer praises only.

If anyone hurts his feelings, or questions his convictions, he curses him.

Such gurus should be from Hindu religion only.

Christians and Muslims cant be gurus.

Rajagopal.S.M said...

//அவரின் கண்களை பார்த்து அதிக நேரம் பேச முடியாது// அது என்னமோ உண்மைனாலும் அவர் முகத்த பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும்.. சுத்தி இருக்கிறவங்க கண்ண மூடி த்யானம் செஞ்சுட்டு இருக்கும்போது,, நமக்கு கண்ண திறந்து அவரையே பார்க்க தோணும்...

Rajagopal.S.M said...

//"ஆன்மீகவாதிகள் ஓர் விளக்கம்"//
நாளுக்கு நாள் பதிவின் சுவாரசியம் கூடி கொண்டே.................................................................................. கலக்குங்க.....

Rajagopal.S.M said...

//The spiritual gurus prefer praises only//

Then he is not spiritual guru... he is a business man...

Rajagopal.S.M said...

//Christians and Muslims are not anmikavaathis///

அப்துல்லா அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...

எம்.எம்.அப்துல்லா said...

//ராஜகோபால் said...
//Christians and Muslims are not anmikavaathis///

அப்துல்லா அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...

//

ராஜகோபால் அண்ணே, சில விஷயத்தை கண்டுக்காம விடுறது நல்லது. லூஸ்ல விடுங்க :))

Siva Sottallu said...

// அப்துல்லா அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...//

LOL :-))))

Siva Sottallu said...

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

ஸ்வாமி, இந்த சம்பவம் சம்பவம் என்று சொல்றமாதிரி, நீங்கள் தீட்சை, தீட்சை என்று சொல்லியிருக்கிறீர்களே, தீட்சை என்றல் என்ன ஸ்வாமி? அதை கொஞ்சம் விளக்கமுடியுமா ஸ்வாமி...

Unknown said...

இன்று வரை இன்னும் மீளவில்லை. நீங்கள் கூறிய அந்த உணர்வுகளோடு உங்களை அன்று பார்த்துவிட்டு வந்தேன். இன்னும் அதே நினைவுகளோடு பதிவுகளை படித்து கொண்டு இருக்கிறேன். நன்றி சுவாமிஜி.

ஸ்வாமி ஓம்கார் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

”ஆன்மீகவாதிகள் ஓர் விளக்கம்”

////Christians and Muslims are not anmikavaathis///

அப்துல்லா அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...//

எப்படியோ ஆன்மீகவாதிகளை கண்டறிந்து மேடையேற்ற முயற்சி செய்கிறீர்கள் :)

சீனு said...

அப்படீன்னா...நான் கடைசியா பார்த்த ஆன்மீக வாதி "கிருபானந்தவாரியார்".

மாடல மறையோன் said...

இசுலாமியத்திலும் கிறுத்துவத்திலும் ஆன்மிகவாதிகள் என்று எவரும் இல்லை. அப்ப்டியிருப்பின் அஃது அம்மதங்களின் கொள்கைக்கு எதிரானது. அனைவரையும் இறையுணர்வுடையவராய் ஆக்குவதே அவர்கள் நோக்கம். அப்படிப்பார்க்கும்போது, ஆன்மிகவாதி என்றால் யார்? அனைவ்ருமே.

திரு ஓம்கார் சொல்லும் அடையாளங்கள் இந்து ம்தத்தில் ‘ஆன்மிகவாதிகள்’ என் தங்களை அழைத்துக்கொள்வோரையும், அல்லது அழைக்கப்படுவோரையும்தான் காட்டும். இந்து மதத்தில் ‘குரு’ என்ற ஒரு கொள்கையமைப்பு இருப்பதால், இந்து மதம் ஒன்றே இங்கு பேசப்படுவதாக்க் கொள்ளலாம்.

என் ஆங்கிலக்கேள்விகள் ‘லூசில்’ தள்ளமுடியாது சிந்திக்க விழைவோருக்கு.

நான் said...

தீட்சை பெறுவது என்றால் என்ன?