Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 6, 2009

வேட்டைக்காரன் பாடல்களில் ஆன்மீக அத்துமீறல்

சென்ற வாரம் வாடகைக் காரில் ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். டிரைவர் ஒரு இசை தட்டை ஓடவிட்டார். அதில் இருக்கும் பாடலை கேட்டவுடன் என் நிலை எப்படி இருந்தது என இந்த கட்டுரையின் கடைசி வரியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

தற்சமயம் சினிமா உலகில் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் ஆன்மீக அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் ஆன்மீகத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறார்கள். சிலர் ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியாமல் அசிங்கபடுத்துகிறார்கள்.

இசை என்பது இறைவனின் வடிவம். நாதமே கடவுளின் சத்சொரூபம் என்கிறது அனைத்து புனித நூல்களும். நாதத்தில் லயம் ஆகும்பொழுது இறைவனின் நிலையை சில ஷணங்கள் உணர முடியும் என்பது உணர்ந்தவர்களுக்கு தெரியும். முக்கியமாக திரை இசை இந்த வரம்புகளை மீறி செயல்படுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

வேட்டைக்காரன் என்ற திரைப்படம் நடிகர் விஜய் என்பவர் நடித்து வெளிவர இருக்கிறது. இத்திரைப்படத்தின் இசையை விஜய் ஆண்டனி என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் 'நக்கமுக்க' என்ற தெய்வீக இசையை உலகுக்கு அளித்தவர். படத்தின் நாயகன் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த திரைப்படத்தில் புலி உறுமுது என்று ஒரு பாடல் இருக்கிறது. தன் அரசியல் பிரவேசத்திற்காவும், இலங்கை தமிழருக்காவும் கருத்தில் ஏற்படுத்தபட்ட பாடல் என நினைக்கிறேன். இப்பாடலில் வேத மந்திரங்கள் அத்துமீறி உபயோகப்படுத்தபட்டுள்ளது. எத்தனையோ விஷயங்கள் திரையிசையில் பயன்படுத்த இருக்க இவர்களுக்கு ஒரு தனிமனித துதிபாடலுக்கு வேதமந்திரம் தான் கிடைத்ததா?

அஷத்தோமா சத்க்ரமய
தமசோமா ஜோதிர்கமய
மிர்த்யோமா அமிர்தம் கமய

என்ற வேதமந்திரத்தின் ஆழமும் அர்த்தமும் அந்த இருவருக்கும் தெரியுமா?
இதை கூட கல்நெஞ்சுடன் பொருத்துக்கொள்ளலாம்..பாடலின் ஆரம்பத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளை கத்திவிட்டு ஓம் ஷாந்தி ஓம்ஷாந்தி என கூறி இவர்களின் உளரலையும் வேத மந்திரமாக்க முயற்சி செய்வது கண்டனத்திற்கு உரியது.

திரை இசையில் தமிழ் மொழியை கொன்று குழிதோண்டி மூடியவர்களுக்கு கிடைத்த அடுத்த பலி வேதமந்திரம் என நினைக்கிறேன்.

சில திரைப்படத்தில் மந்திரம் பயன்படுத்தி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். அந்நியன் என்ற படத்தில் கருட புராணத்தின் வரிகளையும், உன்னை போல் ஒருவன் படத்தில் பகவத் கீதையின் வரிகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். (இந்த கட்டுரைக்கு தகவல் திரட்டும் பொழுது தெரிந்து கொண்டேன். மேற்கண்ட கண்றாவியை பார்க்கவில்லை. தெரிந்தவர்கள் கூறவும்..)

பகவத் கீதை ஒரு சமயம் சார்ந்த மத நூல். உங்களுக்கு நான் கூறுவது ஆதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். அதுதான் உண்மை. கிருஸ்துவத்தில் பைபிள், இஸ்லாமில் குரான் போல பகவத்கீதை 'இந்து இஸம்' உருவாக்கியவர்களால் பயன்படுத்தபடும் நூல்.

வேதசாஸ்திரத்தின் மெய்ஞான கருத்துக்கள் அதில் இருப்பதால் பகவத் கீதையை நாம் வணங்கலாம். அனைத்து மதங்களிலும் வேத சாஸ்திரம் பொதிந்திருக்கிறது.

நான்கு வேதமும், உபநிஷத்களும் ஒரு மதம் சார்ந்தது அல்ல. இதை உருவாக்கியவர்கள் கிடையாது. அவை சக்தியின் குறியீடுகள், இறைவனின் அருள் ஆற்றல்கள் அதை திரையிசையில் பயன்படுத்துவது மிக கொடூரமான செயல்.

இந்த படத்தின் நாயகனும் இசையமைப்பாளரும் தெரியாமல் பயன்படுத்தினார்கள் என கூறமுடியாது. காரணம் இருவரும் ஒரு யோக கழகத்தில் யோகம் பயின்றவர்கள். அந்த பயிற்சில் கண்டிப்பாக இந்த வேத மந்திரத்தை கூறி இருப்பார்கள்.

வேத சாஸ்திரம் கூட வேண்டம் கிருஸ்துவமோ,இஸ்லாமோ சார்ந்த மத வாசகங்களை இவர்களின் குத்து பாடலில் சேர்த்தால் இவர்கள் நிலை என்ன?

வேத சாஸ்திரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்கும் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்துவார்கள் போல இருக்கிறது. நானோ நீங்களோ அல்லது ஒரு அமைப்போ வேத சாஸ்திரத்திற்கு உரிமை கொண்டாடி விடமுடியாது. வேதசாஸ்திரமும் தன்னை மனிதன் காப்பான் என காத்திருப்பதில்லை. சுருங்கச்சொன்னால் வேதம் தன்னை காத்துக்கொள்ளும். இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்.


இந்த பாடலை கேட்டவுடன் எப்படி இருந்தது என கேட்கிறீர்களா? அந்த திரைப்படத்தின் அடுத்த பாடல் வரியை போல இருந்தது...

என் உச்சி மண்டையில சுர்ர்ங்குது..............

43 கருத்துக்கள்:

krish said...

நானும் கேட்டேன். இதை இந்து முண்ணனியினர் கேட்க வேண்டும். யோக நித்திரை முடிவில் சொல்லப்படும் மந்திரம் குத்து பாட்டாக கேட்டால் நித்திரை கலைந்து விடும்.

நிகழ்காலத்தில்... said...

\\வேதம் தன்னை காத்துக்கொள்ளும். இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்.\\

நிச்சயம், செயலுக்கு விளைவு வரத்தானே செய்யும்.

தமிழ் சமூகம் முன்னேற்றப்பாதையில் செல்லாமல் தடை செய்பவர்களில் இவர்களும் அடக்கம்.,

:((

Cable சங்கர் said...

haa..haa...சுவாமி.. அது ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது சாமி.. இந்த கொடுமைய கேட்டா எல்லோருக்கும் சுர்ருன்னு ஏறுதுதான்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிருஷ்,

என் பதிவின் வரிகளை நீங்கள் படிக்கவில்லையா?

//நானோ நீங்களோ அல்லது ஒரு அமைப்போ வேத சாஸ்திரத்திற்கு உரிமை கொண்டாடி விடமுடியாது.//

நீங்கள் கூறிய அமைப்பினருக்கு நிறைய வேறுபணிகள் உண்டு. அதை அவர்கள் செய்யட்டும்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் வருகைக்கு நன்றி

Mahesh said...

ஆஹா...அடுத்த ரவுண்டு ஆட்டம் ஆரம்பிச்சாச்சு !! இப்பத்தா உ.போ.ஒ. ஓய்ஞ்சுது. எல்லாம் எந்திரிங்கப்பா....

ஆனா சாமி.... உங்க இடுகை மண்டைல சுர்ர்னு உறைக்கிற மாதிரி இருக்கு :))))))

எம்.எம்.அப்துல்லா said...

//வேத சாஸ்திரம் கூட வேண்டம் கிருஸ்துவமோ,இஸ்லாமோ சார்ந்த மத வாசகங்களை இவர்களின் குத்து பாடலில் சேர்த்தால் இவர்கள் நிலை என்ன

//

அதெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டாங்க. இந்த நடிகரே ஒரு படத்தில் நபிகள் நாயகத்தின் புகழ் பெற்ற போதனையான “இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது. இறைவன் தடுக்க நினைப்பதை மனிதனால் நிறுத்த முடியாது” என்பதை தன்னோட சொந்த டயலாக் மாதிரி பஞ்ச் டயலாக் பேசிருக்காரு.

லூஸ்ல விடுங்க சாமி.நீங்க டென்ஷன் ஆக இன்னும் நிறைய மேட்டர் இருக்கு :)

எம்.எம்.அப்துல்லா said...

//விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்

//

வரலாறாகுறதுக்கு பதிலா வரலாற்று உதாரணம் ஆயிருவாங்க :))))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கேபிள் சங்கர்,

நீங்களாவது என்னை போன்றோரின் வருத்தத்தை களைவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

பாகவதர் அப்துல்லா... :)


//அதெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டாங்க. இந்த நடிகரே ஒரு படத்தில் நபிகள் நாயகத்தின் புகழ் பெற்ற போதனையான “இறைவன் கொடுக்க நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது. இறைவன் தடுக்க நினைப்பதை மனிதனால் நிறுத்த முடியாது” என்பதை தன்னோட சொந்த டயலாக் மாதிரி பஞ்ச் டயலாக் பேசிருக்காரு.
//
பொய்மையில் இருந்து உண்மைக்கும்,
இருள் நிலையில் இருந்து ஒளி நிலைக்கு செல்லவும், மரணத்திலிருந்து மரணமில்லா பெருவாழ்வு வாழவும் என அவர்கள் தமிழ்ப்படுத்தி கூறி இருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அவர்கள் வேதசாஸ்திர மந்திரத்தில் சுருதி என ஒன்று உண்டு, லயம் என ஒன்று உண்டு அதை விடுத்து வேறு பாணியில் உளறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

விஷயமே இல்லாத படத்தை அனேகர் தங்களின் குதர்க்க புத்தியால் கிழித்தார்கள்.

இதற்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். காரணம் தங்கள் மேதாவித்தனம் வெளிப்படுத்த மேதாவித்தனமான படத்தை விமர்சித்தால் தானே பெருமை?

//ஆனா சாமி.... உங்க இடுகை மண்டைல சுர்ர்னு உறைக்கிற மாதிரி இருக்கு :))))))//

எனக்கு அன்று தலையில் சப்பாத்தியே போடலாம் போல இருந்தது.. :)))))))))))

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்களாவது என்னை போன்றோரின் வருத்தத்தை களைவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

//

அண்ணன் கேபிளோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Endhiran Rajini said...

ஹா ஹா..
உங்கள் வேதனை புரிகிறது. விட்டுத்தள்ளுங்கள்.

உன்னைப்போல் ஒருவன் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்நியனில் பகவத்கீதை/கருட புராணம் பற்றி ஏதும் தவறாக சொல்ல வில்லை என்பது என் கருத்து.

கபிலன் said...

மிகவும் நியாயமான கோபம் ஸ்வாமி !

"இந்த படத்தின் நாயகனும் இசையமைப்பாளரும் தெரியாமல் பயன்படுத்தினார்கள் என கூறமுடியாது. காரணம் இருவரும் ஒரு யோக கழகத்தில் யோகம் பயின்றவர்கள். அந்த பயிற்சில் கண்டிப்பாக இந்த வேத மந்திரத்தை கூறி இருப்பார்கள். "


ஆனா, விஜய் ஜோசப் பும், விஜய் ஆண்டனியும் எப்படி வேத மந்திரத்தை கூறி இருப்பார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள் என்று புரியவில்லை.

அதுமட்டுமல்ல, இங்கு நடத்தப்படும் யோகா பயிற்சிகளை, அனைத்து சமூகத்தினரும் கற்கின்றனர் என்பதால், மிகவும் பொதுவாகவே, சமயத்தைச் சம்பந்தப்படுத்தாமல் சொல்லித் தரப்படுவதாக அறிந்திருக்கிறேன் ஸ்வாமி !

இதன் மூலமா, வேதங்கள் சாதாரண எளிய மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்திருந்தால் நல்லது தானே ஸ்வாமி!

raja said...

ஐயா வணக்கம்,

இதுபோன்ற செயல் கடந்த சில
ஆண்டுகளாக நடந்து வருகிறது

திரைதுறையினர் சிலர் இந்து மதத்தினை கேவள படுத்தினால் கேட்க ஆளில்லை என்று நினைக்கின்றனர்

டும் இதனை கண்டுகொள்வதில்லை

களியுகம் அல்லவா!! கடவுள்தான் காக்கவேண்டும்.

நன்றி

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி நாங்களெல்லாம் கேஆர்விஜயா, ரோஜா அம்மனாக நடித்தால் அம்சமாக இருக்குன்னு சொல்கிறவர்கள்.

ஆன்மிகம் சினிமாவினால் பிராபளம் என்று நினைக்காமல் பிரபலம் ஆகுதுன்னு நினைத்துக் கொள்ளுங்கள்

:)

SRI DHARAN said...

//அஷத்தோமா சத்க்ரமய
தமசோமா ஜோதிர்கமய
மிர்த்யோமா அமிர்தம் கமய//
இதே ஸ்லோகத்தை சிலம்பாட்டம் என்ற கேடுகெட்ட படத்தில் அடிக்கடி பயன்படுத்தி உள்ளனர். அதை ஸ்வாமிஜி பார்க்கவில்லை போலும், தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தும் புண்ணியவான்கள் என்று திருந்துவார்களோ தெரியவில்லை. இந்த வரிகளை கைதட்டி ஆராதனை செய்ய ஒரு கூட்டமே காத்துக்கொண்டுள்ளது. இப்போது தகாத வார்த்தைகள் எல்லாம் என் கைகளில் நர்த்தனமாடுகின்றன. என் எண்ணத்தைச் சொல்ல இங்கு முடியவில்லை.......

அக மாற்றம் said...

எனது கருத்தை சொல்ல அனுமதித்தால், அதை இங்கே பதிவு செய்கிறேன்.

இதனால் நான் இது மாதிரியான பாடல்களின் ரசிகன் என அர்த்தம் இல்லை. இத்தகைய பாடல்களை வெறுபவர்களின் முதல் வரிசையில் நான் எபோதும் இருப்பேன்.

நமது கருத்துகளையும், படைப்புகளையும் எவ்வாறு மிக உயர்வானது என எவ்வாறு கருதுகிறோமோ ( மற்றவர்கள் அதை எவ்வாறு கருதினாலும்) அதை போலே இவர்களுக்கும், இவர்கள் படைப்பு என கருதுவதை வெளியிட முழுமையான உரிமை உள்ளது. அது நமது கருத்துகளுக்கு மாறாகவும் இருக்கலாம். அதற்காக நாம் கவலை பட்டால் அது முழுமையாக நமது தவறு ஆகும் - நமது கருத்களின் மேல் தேவையற்ற பிடித்தத்தை (அட்டச்மெண்டு) கொடிருகிறோம். நமது ஆன்மீக கருத்துகளின்படி நாம் எதன் மேலும் (நமது கருத்துகள் உட்பட ) பிடித்தத்தை கொண்டிருக்க கூடாது.

அப்படியானால் இந்த மாதிரியான அத்துமீறல்களை எவ்வாறு எதிர் கொள்வது. நாம் இதற்கு முகியத்துவம் தராமல் இருந்தாலே போதும்!

நன்றி!

Manohar said...

கருவறைலே காமலீலை செய்யும் பூசாரிகள் இருக்கும் உலகில் எதுவும் நடக்கலாம், நீங்கள் சொல்லியது போல் நாம் சாட்சியாவோம்

கோவி.கண்ணன் said...

//இந்த பாடலை கேட்டவுடன் எப்படி இருந்தது என கேட்கிறீர்களா? அந்த திரைப்படத்தின் அடுத்த பாடல் வரியை போல இருந்தது...//

"கற்பூர நாயகியே கனகவல்லி...." பாடலை,

"கருப்பான கையாலே என்னைப் புடிச்சான் ....." என்று கேட்கும் போதும் ரசித்தோம் :)

Jawahar said...

பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிற எந்தக் கருத்துக்கும் மதத்தோடு தொடர்பில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

http://kgjawarlal.wordpress.com

Sanjai Gandhi said...

காக்க காக்க கனகவேல் காக்க வை பதினெட்டு வயசு இளமொட்டு மனசாகவும் கேட்டோமே.. ஃப்ரீயா விடுங்க ஸ்வாமி.. :)

மீறி கேட்டாலும் “ கேளு மகனே கேளூ வாய மூடி கேளு”ன்னு இதே விஜய் அந்தோணி மிரட்டறாரே..

அவ்வையாரின் ஆத்திச்சூடியை சமீபத்தில் தான் இந்த விஜய் அந்தோணி கிழித்து தொங்கவிட்டார்..

ஹ்ம்ம்ம்.. எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயன்றி..... :)

Siva Sottallu said...

உண்மையில் வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதும் தான் ஸ்வாமி.

// "கற்பூர நாயகியே கனகவல்லி...." பாடலை,

"கருப்பான கையாலே என்னைப் புடிச்சான் ....." என்று கேட்கும் போதும் ரசித்தோம் :)//

// காக்க காக்க கனகவேல் காக்க வை பதினெட்டு வயசு இளமொட்டு மனசாகவும் கேட்டோமே..//

இந்த பாடல்கள் எல்லாம் ஒரு இசை அமைப்பாளர் தொகுத்ததை மற்றொரு இசை அமைப்பாளர் வேறு வரிகளுடன் தொகுத்துள்ளார் என்பது என் கருத்து. இதை புனிதமான வேதங்களுடன் ஒப்பிடமுடியாது.

ஸ்வாமி, இதை படிக்கும் பொழுது எனக்கு நேற்று படித்த உங்கள் பதுவு தான் ஞாபகத்துக்கு வருகின்றது.

வேதங்கள் திரைத்துறையினருக்கு வெங்காயம் போல் தெரிகிறதோ என்னவோ...

ஷண்முகப்ரியன் said...

எப்போதும் திரைத் துறையினரை வேறு கிரகத்து மனிதர்களைப் போலச் சித்தரிப்பது வருத்தத்துக்குரிய தவறு ஸ்வாமிஜி.
மட்டமானவை என்று கருதப் படும் படங்களுக்கு உலகம் முழுதும் கோடிக் கணக்கான வசூலைக் கொட்டிக் கொடுக்கும் மக்கள் மட்டும் புனித ஆத்மாக்களா என்ன?
கோவில்களில்,மடாலயங்களில்,ஆசிரமங்களில்,அரசியல் சட்ட திட்டங்களில்,பத்திரிகைகளில்,கலாசாரக் காவலர்களின் நியதிகளில் மாசு படுத்தப் படுவதைப் போலத் திரைத்துறையிலும் கடவுளர்கள் கொச்சைப் படுத்தப் படுகிறார்கள்.

பத்துப் பேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டு நான் பத்தாவது ஆள்தான்,என்னை மன்னித்து விடுங்கள் என்று ஒருவன் சொல்வதைப் போன்ற நியாயம் இது.

புனிதமானது அனைத்துக்கும் போலிகளும் உருவாகும் என்பது சரித்திர உண்மை.
எல்லோரும் செர்ந்து பொறுப்பேற்க வேண்டிய தவறுக்கு ஒரு துறையினரை மட்டும் பலிகடாவாக்குவது நியாயமா,ஸ்வாமிஜி?

கோவி.கண்ணன் said...

சாமிப் பாட்டே குத்துப் பாட்டாகப் போட்டால் சூப்பராக இருக்குங்கிறார் நம்ம கேஆர்எஸ்
:)

MarmaYogi said...

We have to develop a generation without cienema

sarul said...

//பத்துப் பேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டு நான் பத்தாவது ஆள்தான்,என்னை மன்னித்து விடுங்கள் என்று ஒருவன் சொல்வதைப் போன்ற நியாயம் இது.//

ஷண்முகப்பிரியனின் கருத்து உண்மையானது, காத்திரமானது , திரைத்துறையினரின் வீச்சு அதிகம் என்பதால் அதைத் தடுக்க எல்லோரும் முயல்கின்றனர்.

சிறு சிறு தவறுகளை யாரும் எதிர்க்காது விட்டதால் பெரியதவறுகள் ஏற்படுகின்றன.

மக்கள் மத்தியில் தற்போது ஆன்மீகம் சார்ந்த கருத்துகளின் மீதும் சுலோகங்களின் மீதும் ஒரு ஈடுபாடு இருப்பதை உணர்ந்த இந்த வியாபாரிகள் அதை லாப நோக்கோடு பயன்படுத்த முனைகின்றார்கள். இது மிகவும் தவறான முன்னுதாரணமாகும்.

ஆன்மீகக் கருத்துக்களை சற்று அழுத்தமாகச் சொல்ல முற்படும் போது இது போன்ற பின்விளைவுகள் தவிர்க்கமுடியாதனவாகிவிடுகின்றன.

பெருசு said...

//ஸ்வாமி நாங்களெல்லாம் கேஆர்விஜயா, ரோஜா அம்மனாக நடித்தால் அம்சமாக இருக்குன்னு சொல்கிறவர்கள்//

ரம்யா கிருஷ்ணன் இந்த லிஸ்ட்லே விட்டுப்போச்சுங்க கோவி.

பெருசு said...

இதற்கு பாடல்களே இல்லாமல்
தயாரித்த உ.போ.ஒ
எவ்வளவோ பரவாயில்லை.

Anonymous said...

சுவாமி, உண்மையா சொன்னால் ஒன்னும் செய்ய முடியாது! ஆடுகிரவரை ஆடிக்கொண்டே இருப்பார்கள். எங்கே பதிவர்கள் பின்னூட்டம் இட்டது போல், இதற்கு முன் பல பாடலை கிழித்திருக்கிறார்கள். நியூ ஏஜ் ஆத்திச்சூடி பாடல் கேட்டு எனக்கு தலை சுற்றிவிட்டது.

//இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்.//
ஆமாம்! தெரிந்தவர்களுக்கும் தெரிய ஆர்வம் உள்ளவர்களுக்கும் பிரச்னை இல்லை! தெரியாதவர்களும், தெரியவேண்டாம் என்பர்களுக்கும் பிரச்னை தான்!

Also, "asathoma..." lyrics has also been used in an English movie - The Matrix. When Neo fights Smith in the climax of Part 3 of the movie. The whole movie is sort of a loosely based on spirituality, if you think about it.

Siva Sottallu said...

ஒரு ரூபாய் திருடுபவனும் திருடன் தான், நூறு கோடி ரூபாய் திருடுபவனும் திருடன் தான், ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை வேறு என்பது என் தாழ்மையான கருத்து.

அது போல், மதங்களையும் புனித நூல்களையும் கொச்சைபடுத்தி, தனி ஒரு மனிதன் தெருவில் கூவிக்கொண்டு செல்வதற்கும், கோடானகோடி மக்களை சென்றடையும் ஒரு துறை மூலம் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

ஸ்வாமி ஓம்கார் said...

பின்னூட்டத்தில் கருத்து பகிர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் கோபம் நியாயமானது தான். ஆனால் திரைத்துறையாலும் சில பிரச்சனை உண்டு என சுட்டிக்காட்டுவதே நோக்கம். திரைத்துறையில் மட்டும்தான் என சொல்லவில்லை.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

பாட்டின் மெட்டில் எப்படி வேண்டுமானாலும் போடலாம்.

சபரிமலை சாமிகள் திரைஇசை மெட்டில் சாமி பாடல் கேட்பதில்லையா :)

தமிழ்படுத்தியோ அல்லது பொருள் கூறும் தன்மையிலோ பயன்படுத்தலாம்.
ஆனால் வேத வார்த்தைகள் பயன்படுத்தியது தான் எனக்கு வருத்தம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜவஹர்,

///பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிற எந்தக் கருத்துக்கும் மதத்தோடு தொடர்பில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
//

இது நீண்ட விவாதத்திற்குண்டான தலைப்பு.

வேதத்தின் சாரம் இதில் உண்டு என்பதை தவிர அனைத்து விஷயங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

முடிந்தால் எதிர்காலத்தில் ஒரு பதிவு போடுகிறேன். அதுவரை என் முதுகு கொஞ்சம் காயட்டும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன் மற்றும் பெருசு,

(நல்ல வேளை இவர் பெயரை முன்னாடி போடல)...

////ஸ்வாமி நாங்களெல்லாம் கேஆர்விஜயா, ரோஜா அம்மனாக நடித்தால் அம்சமாக இருக்குன்னு சொல்கிறவர்கள்//

ரம்யா கிருஷ்ணன் இந்த லிஸ்ட்லே விட்டுப்போச்சுங்க கோவி.//

இந்த பட்டியலில் மீனாவின் பெயர் இல்லாததற்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//ஒரு ரூபாய் திருடுபவனும் திருடன் தான், நூறு கோடி ரூபாய் திருடுபவனும் திருடன் தான், //

நீங்கதான் அந்த அந்நியனா :)

கோவி.கண்ணன் said...

//இந்த பட்டியலில் மீனாவின் பெயர் இல்லாததற்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் :))//

யோகா செய்கிறவர்களுக்கு (அதைப் பற்றியே அல்ல) நினைவு திறன் உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

:)

நிகழ்காலத்தில்... said...

\\கோவி.கண்ணன் said...

//இந்த பட்டியலில் மீனாவின் பெயர் இல்லாததற்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் :))//

யோகா செய்கிறவர்களுக்கு (அதைப் பற்றியே அல்ல) நினைவு திறன் உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறேன்.\\

கொஞ்ச நாள் சினிமா பார்க்கவில்லைன்னா என்ன என்னமோ நடக்குது பாருங்க..

ஆமா யாரு அந்த யோகா, எந்த படத்துல நடிச்சிருக்காங்க.. :)

அஅவ்வ்வ்வ்வ்வ்.....

Umashankar (உமாசங்கர்) said...

"வேத சாஸ்திரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்கும் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்துவார்கள் போல இருக்கிறது. நானோ நீங்களோ அல்லது ஒரு அமைப்போ வேத சாஸ்திரத்திற்கு உரிமை கொண்டாடி விடமுடியாது. வேதசாஸ்திரமும் தன்னை மனிதன் காப்பான் என காத்திருப்பதில்லை. சுருங்கச்சொன்னால் வேதம் தன்னை காத்துக்கொள்ளும். இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்".

பார்ப்போம் சுவாமி ஜி

கே.பழனிசாமி, அன்னூர் said...

நானோ நீங்களோ அல்லது ஒரு அமைப்போ வேத சாஸ்திரத்திற்கு உரிமை கொண்டாடி விடமுடியாது. வேதசாஸ்திரமும் தன்னை மனிதன் காப்பான் என காத்திருப்பதில்லை. சுருங்கச்சொன்னால் வேதம் தன்னை காத்துக்கொள்ளும். இவ்வாறு வேதமந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா? அதை நானும் நீங்களும் சாட்சியாக இருந்து பார்ப்போம்".

கே.பழனிசாமி, அன்னூர் said...

வேத சாஸ்திரம் கூட வேண்டம் கிருஸ்துவமோ,இஸ்லாமோ சார்ந்த மத வாசகங்களை இவர்களின் குத்து பாடலில் சேர்த்தால் இவர்கள் நிலை என்ன?

Guru said...

என் உச்சி மண்டையில சுர்ர்ங்குது..............