Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, August 10, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஐந்து


எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி ஊடே தொடர்மூலம்

செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்

நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.

----------------------------------------------------திருமந்திரம்
857

என் ஆன்மீக நண்பருடன் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தேன். அவர் இன்று இரவு நான் திருவண்ணாமலை செல்கிறேன் என சொன்னதும் எனது உடலில் ஒரு வித தவிப்பு ஏற்பட்டது. எனக்கு கிடைக்க வேண்டிய ஏதோ ஒன்றை அவர் மட்டும் எடுத்து செல்ல இருப்பது போல ஒரு தவிப்பு. தயங்கியபடியே நானும் வரவா என்றேன். அவர் வாருங்கள் செல்லுவோம் என்றார். அவ்வளவுதான் என் சூழல் மறந்து அவருடன் சென்றுவிட்டேன். வீட்டில் சொல்லும் அளவுக்கு மனம் செயல் நிலையில் இல்லை என்பதே உண்மை.

மூன்று தினங்கள் கழித்து திரும்ப வரும்பொழுது அவர்களின் வருத்தத்தை புரிந்துகொண்டேன். என் இளவயது முதலே இப்படிபட்ட செயலை நான் செய்வேன் என எதிர்பார்த்தார்கள். அப்பொழுது நான் இப்படி செய்யவில்லை. அவர்கள் இவன் போகமாட்டான் என நினைக்கும் சமயம் கிளம்பி சென்றதால் அவர்களுக்கு குழப்பமாக இருந்திருக்க வேண்டும்.

இன்றும் கூட நான் சிலநாட்கள் காணவில்லை என்றால் என்னை அவர்கள் தேடும் இடம் திருவண்ணாமலையாகத்தான் இருக்கும். வருடத்தில் பலமுறை நான் செல்லும் இடம் என்றால் அது அருணாச்சலகிரி என்றே சொல்லுவேன்.

எனது ஒன்பது வயதில் ஏற்பட்ட அனுபவம் அதற்கு பிறகும் பலமுறை வெவ்வேறு நிலையில் உலகின் பல்வேறு சக்திவாய்ந்த இடங்களை நோக்கி ஏற்பட்டாலும் முதல் அனுபவம் எப்பொழுதும் ஒரு தனிசுவைதானே?

புனிதபயணம் சென்றுவரும் எனது நண்பர்கள், மாணவர்களிடம் அங்கே இதை பார்த்தீர்களா அதை பார்த்தீர்களா என நான் கேட்கும்பொழுது என்னை மேலும் கீழும் பார்ப்பார்கள். கோவையை விட்டு நகர்ந்ததில்லை ஆனால் 'இது' அளந்துவிடுகிறதே என அவர்கள் சந்தேகப்படுவார்கள்.

நான் சொல்லுவது அனைவரும் நம்பவேண்டும் என கட்டாயம் இல்லை. காரணம் நம்பிக்கையின்மை என்பதும் சில தெய்வீக காரணத்தால்தான். வரும் பகுதிகளில் இது உங்களுக்கு புரியும்.

சில வருடத்திற்கு முன் ஆன்மீக அன்பர்களும் அவர்கள் சார்ந்தவர்களுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது பேச்சு பரமஹம்ஸ யோகானந்தரை பற்றி திரும்பியது. அவர் இந்தியாவின் ஆன்மீக யோகிகளில் சிறந்தவர்.

யோகியின் சுயசரிதை எனும் புத்தகத்தின் மூலம் பலருக்கு ஆன்மீக உணர்வை ஊட்டியவர். தன் வாழ்க்கையில் நடந்த ஆன்மீக விஷயத்தை வெளிப்படையாக அவர் சொன்னது நல்ல விஷயமாக இருந்தாலும் சில நிலையில் அது பிறரை தவறான வழியில் இட்டுச்சென்றது.

ஆன்மீகத்தை அமானுஷத்துடன் தொடர்பு கொள்ள செய்தது எனலாம். இவ்வாறு அந்த புத்தகத்தை பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுது அதில் உங்களுக்கு பிடித்த பகுதி எது என கேட்டார்கள்.

யோகானந்தரின் அண்ணன் அவரை வேலை செய்து பணம் சம்பாதிக்க சொல்லுவார். பணம் வாழ்க்கையில் முக்கியம் இல்லை என்பார் யோகானந்தர். கையில் ஒரு பைசா இல்லாமல் பிருந்தாவனம் செல்ல முடியுமா என அவர் அண்ணன் கேட்க கடவுள் கிருபையால் பணம் இல்லாமல் பிருந்தாவனத்திற்கு செல்லுவார். இந்த பகுதி எனக்கு பிடிக்கும் என்றேன். இதை சொல்லும் பொழுது எனக்கு தெரியாது என் நடுநாக்கில் சனி என்று....!


விவாதம் சூடுபிடித்தது. அவர்கள் சொன்னார்கள் கேட்க சுவாரசியமாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தினார்கள். கடவுள் மேல் ஆழந்த நம்பிக்கை இருந்தால் என்றும் சாத்தியமே என கூறினேன்.

நீங்கள் எங்களுக்கு இவ்வாறு செய்து எங்களுக்கு நிரூபிக்க முடியுமா என்றார்கள்.
எனக்கு எங்கிருந்து அந்த வேகம் வந்ததோ தெரியாது . சரி என்றேன். நான் கடவுளை நிரூபிக்க சரி என சொல்ல வில்லை; எனக்கு இறைவன் மேல் இருக்கும் நம்பிக்கையை நிரூபணம் செய்யவே சரி என்றேன்.

இடம் திருவண்ணாமலை என முடிவு செய்யப்பட்டது. நாள் குறிக்கப்பட்டது. அவர்கள் சொன்ன சவால் இது தான்.

கோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று மூன்று நாட்கள் இருந்துவிட்டு திரும்பி வரவேண்டும். ஆனால் கையில் ஒரு பைசா கொண்டு செல்ல கூடாது.


அந்த நாளும் நெருங்கியது...

நிற்க. என்னடா ஸ்ரீசக்ர புரியை பற்றி எழுத சொன்னால் இவரின் சொந்தகதை சோக கதையை எழுதுகிறாரே என கேட்பவர்களுக்கு.... கையில் பணத்துடன் செல்லுவது ஒரு ரகம், ஒரு பைசா இல்லாமல் பிச்சைக்காரனைவிட மோசமான சூழலில் திருவண்ணாமலை தரிசனம் செய்வது ஒரு தனி சுவை. அவ்வாறு பரதேசியாக நான் திருவண்ணாமலையில் மூன்று தினங்கள் பல இடங்களுக்கு சென்றேன்.

மூன்று தினங்கள் நான் பார்த்த இடங்களை உங்களுக்கு சுற்றிகாட்டுகிறேன். இயல்பான சூழலில் தரிசிக்காத இடங்களும் அதில் அடக்கம். வாருங்கள் திருவண்ணாமலையை தரிசிக்க கிளம்புவோம்... எனக்கு நடந்த இறைவனின் திருவிளையாடலை ரசித்தபடியே...

(தொடரும்)

ஸ்ரீ சக்ர புரி பகுதி 1
பகுதி 2
பகுதி 3

பகுதி 4

16 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி, நீங்கள் போட்டி இருக்கிற படத்துக்கு,

"இராஜ்யமா இல்லை இமயமா எங்கிவன்....எங்கோ போகிறான்"

என்ற பாபா பாட்டு பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன். :)

எம்.எம்.அப்துல்லா said...

//"இராஜ்யமா இல்லை இமயமா எங்கிவன்....எங்கோ போகிறான்"

//

கோவி அண்ணே இமயமும் இராஜ்யத்துலதான் இருக்கு...அந்தரத்தில் அல்ல

மேலே நான் சொன்ன பதிலில் மிகப்பெரிய ஆன்மீகக் கருத்து இருக்கு ( ஏதோ நம்பளால முடிஞ்சது இஃகிஃகிஃகிஃகி )

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.கோவி.கண்ணன்,

தோல்வி கண்ட படங்களை மட்டுமே என் பதிவுடன் ஒப்பிடுவதை கண்டிக்கிறேன் :) சினிமா சினிமா என்ற கட்டுரையில் இந்த படத்தால் எவ்வாறு பாதிக்கபட்டேன் என்றும் எழுதி இருக்கிறேன். :)

வேறு பக்தி படம் நீங்கள் பார்த்ததே இல்லையா ? மாடு காத்த காளி அம்மன்? வீடு காத்த வீரம்மன்? உங்களுக்கு டிவிடி வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

சில சூழ்நிலைக் காரணமாக சிலரின் பின்னூட்டங்களை வெளியிட முடியவில்லை.
அவர்கள் என்னை மன்னிப்பார்களாக.

துளசி கோபால் said...

சரியா நாப்பது வருசம் முன்னே திருவண்ணாமலைக்குப் போயிருக்கேன். அப்போவெல்லாம் கிரிவலம் ஒன்னும் ஃபேமஸ் ஆகலை.(அப்படின்னு நினைக்கிறேன்)

பரபரன்னு கோயிலுக்குள்ளே நுழைஞ்சு சாமி கும்பிட்டதோடு சரி. டூர் க்ரூப் என்ன செய்யுதோ அது.....

இப்போதாயிருந்தால் கொஞ்சம் சுத்திமுத்தியாவதுப் பார்த்திருப்பேன். 40 வருச அனுபவக்குறைவில்லையா அப்போ:-)))

Anonymous said...

ஆகா யோகியின் சுயசரிதை போலவே உங்களுக்கு நடந்திருக்க! மிகவும் சுவராஸ்யமாக உள்ளது. நானும் அந்த புத்தகத்தை படித்துதான் ஆன்மீகத்தால் நீச்சல் தெரியாமல் தோபகடீர் என்று விழுந்தேன். நீங்கள் கூறியபடி "The Last Mimzy" படத்தை பாத்தேன். மிகவும் அருமை. அறிவியலும் ஆன்மீகமும் அற்புதமாக கலந்து எடுத்துள்ளனர். கடவுள் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே போக போக, பல ஆன்மீக புத்தகங்களை படிக்க தோன்றுகிறது. "Living with Himalayan Masters" புத்தகம் மிகவும் அருமையாக உள்ளது.

ஸ்வாமி ஓம்கார் said...

துளசியம்மா..

பல நூற்றாண்டுகளா கிரிவலம் நடக்குது.

எனக்கு தெரிந்தே 250 வருட அளவில் நடந்த சான்றுகள் உண்டு.

தற்சமயம் அது சுயநலத்துடன் செய்யப்படுகிறது.

இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே? ஏன்? :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,

உங்களுக்கு பயனுள்ள தகவலை இங்கே வழங்கப்படுவதில் மகிழ்ச்சி.

senthil said...

நிருதி லிங்கம் முதல் குபேர லிங்கம் வரை என்னை மறந்து நடத்த கதை
நமக்கும் உண்டு சுவாமியோ!!!!!!!!!!

Sanjai said...

//இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே? ஏன்? :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..!//

பௌர்ணமி கிரிவலம் ஏதோ picnic spot போல் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது! அன்று பக்தியும் அமைதியும் குறைந்துள்ளது போலும் தோன்றுகிறது!
சரியா ஸ்வாமி?

என்றும் அன்புடன்!

Mahesh said...

நானும் சிலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் வலம் வந்ததில்லை. செய்ய வேண்டும் என்று தோன்றியதும் இல்லை. வேறு விதமான சுகானுபவங்கள் கிடைத்தன.

Siva Sottallu said...

//இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே? ஏன்? :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..! //

1. கிரிவலம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
2. மலையை சுற்றி இருந்த மூலிகை செடிகளும் மரங்களும் குறைத்து வீடுகள் அதிகமாகி கிரிவலம் செல்வதன் பயனை குறைத்திருக்கலாம்

அது ஒரு கனாக் காலம் said...

இதற்காகத்தான் என்று உறுதியுடன் சொல்ல முடிய வில்லை - ஒரு வேளை , இப்போது புழங்கும் பாதை சரியான பாதை அல்லவோ ???? அப்படி இருக்காது,

இன்னும் உங்கள் ஐந்து பகுதியில் அந்த பாதை வரவில்லை - அதாவது நீங்கள் மலை உச்சிக்கு போனதா இருக்கு, மூன்று நாட்களில் திரும்பி இருக்கீர்கள் , ...ஒரு வேலை இந்த கையில் காசு இல்லாமல் கிரி வலம் போனதை சொல்வதற்காகவோ

சுப்பாண்டி மாதிரி பேசறேன் இல்ல ???!!!!!

துளசி கோபால் said...

//பல நூற்றாண்டுகளா கிரிவலம் நடக்குது.

எனக்கு தெரிந்தே 250 வருட அளவில் நடந்த சான்றுகள் உண்டு.

தற்சமயம் அது சுயநலத்துடன் செய்யப்படுகிறது.//

ஆமாங்க. அதேதான் நானும் நினைச்சேன். முன்பெல்லாம் மனசுலே பக்தியோடு ஓசைப்படாமல் செஞ்ச காரியங்கள் எல்லாம் இப்போ ஏதோ.... ஃபேஷனா ஆகி இருக்கே. அதைப்போலத்தான். பிக்னிக் போறது போலவும் க்ரூப் வாக்கிங் ஆகவும் இருக்குன்னு கேள்விப்பட்டேன்.

சபரிமலைகூடப் பாருங்க. 40 நாள் விரதமுன்னு நியமங்கள் இருந்தாலும் மூணுநாள் விரதம் இருந்து போயிட்டு வந்துடறாங்களே......

மனுஷன் எல்லா சாஸ்த்திரங்களையும் தனக்குச் சாதகமா வளைக்கத் தெரிஞ்ச மன்னன் அல்லவா?

ஸ்வாமி ஓம்கார் said...

எல்லோரு நான் முரண்பட்ட கருத்தை கிரிவலத்தில் சொல்லுவதாக (சொல்லப்போவதாக) நினைக்கிறீர்கள். நல்ல்து.

கிரிவலம் ஒரு நன்மையான விஷயமே. அது தற்சமயம் முழுமையாக கடைபிடிக்கபடுவதில்லை. அதனால் எடுத்தவுடன் கிரிவலம் என ஒரு வார்த்தையில் எழுத முடியவில்லை.

வரும் பகுதிகளில் விரிவாக அனுஅனுவாக ரசிப்போம்.

ஷண்முகப்ரியன் said...

இந்தப் பகுதியைச் ‘சும்மா’ எழுதி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.