Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, August 7, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி இரண்டு


அருணாச்சலம் என்ற வார்த்தை அருணன் + அசலம் என்ற வார்த்தையின் இணைவு. அக்னி என்பதன் வடமொழிச்சொல் அருணம். அக்னிக்கு ஒரு இயற்கையான குணம் உண்டு. அக்னி எப்பொழுதும் நிலைத்தன்மை அற்றது. தீபம், தீப்பந்தம், சூரியன் என எங்கு அக்னியின் தன்மையை பார்த்தாலும் அது நிலையற்று சலனத்துடன் காணப்படும். நெருப்புக் கனலை கூட உற்று பாருங்கள் ஒரு சலனம் தெரியும்.

சலனத்திற்கு எதிர் நிலை அசலம். அதாவது நிலையாக இருப்பது என பொருள்படும். தனது இயல்பு நிலையான சலனப்படாமல் அசலமாக இருப்பதால் அருணாச்சலம் என அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தில் அக்னி இயற்கைக்கு மாறாக நிலைபெற்று சலனமற்று இருக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மட்டுமே. ஏன் அக்னி அவ்வாறு இருக்கிறது என்றால் அதற்கு சில பத்திகள் கடந்து இருக்கும் புராண கதையை படித்துக்கொள்ளுங்கள்.

பாரத தேசத்தில் பல புண்ணிய ஸ்தலங்கள் உண்டு. ஒரு ஒப்புமைக்காக வட தேசம் மற்றும் தென் தேசம் என பிரித்துப்பார்த்தால் நம் தேசத்தின் தென் பகுதியில் இயற்கையாக உருவான புண்ணிய ஸ்தலங்கள் குறைவு.

வாரணாசி (காசி), ரிஷிகேஷ், பத்ரி,கேதார் கைலாஷ் மானசரோவர் என எத்தனையோ இடங்கள் வடக்கில் உண்டு. இந்த புண்ணிய இடங்களை உருவாக்கியவர் என்றோ தோன்றிய வரலாறு என்றோ எதுவும் நம்மிடம் இல்லை. புராணங்களில் கூட காசி மற்றும் கைலாசம் பற்றி குறிப்பிடுவதால் அதன் தோற்றம் மிகவும் பழைமையானது தனி மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

நம் நாட்டின் தென் மாகாணத்தில் இயற்கையாக உருவான புண்ணியத்தலங்கள் என பட்டியலிடும் அளவிற்கு ஒன்றும் இல்லை. திருவண்ணாமலை என்றும் அருணாச்சலம் என அழைக்கப்படும் ஸ்ரீசக்ர புரி மட்டுமே இயற்கையான ஸ்தலமாக இருக்கிறது.

தென் இந்திய புனித ஸ்தலங்கள் கோவில்கள் சார்ந்தே இருக்கிறது. இறைசக்தியை உணர்ந்து ஒரு அரசனோ அல்லது பக்தர்களோ ஒருவாக்கிய இடங்கள் நம் நாட்டில் அதிகம். திருவண்ணாமலையில் மட்டுமே இயற்கையான இடத்தில் சக்தியை உணர்ந்து, சக்தியை அனைவரும் உணர கோவில்கள் நிர்மாணம் செய்யப்பட்டது.

நமது ஆன்மீக கலாச்சாரத்தில் புராணங்கள் அதிகம். இறைவனின் அருளை உணர புராண வடிவில் எழுதிவைத்தார்கள். கந்த புராணம், சிவ புராணம், விஷ்ணு புராணம் மற்றும் தேவி புராணம் என இறைவனுக்கான புராணங்கள் ஏராளம். ஆனால் ஒரு ஸ்தலத்திற்கு அதாவது பூமியின் ஒரு இடத்திற்கு புராணம் உண்டு என்றால் அது திருவண்ணாமலைக்கு மட்டுமே உண்டு. அருணாச்சல புராணம், அருணாச்சல மஹாத்மியம் என்ற புராணங்கள் ஸ்ரீசக்ரபுரியை பற்றி விரிவாக அலசுகிறது. மேலும் அருணாச்சல மகிமைகளை பிற புராணங்களும் தங்களுக்குள் ஒரு பகுதியாக வைத்திருக்கிறது.

அருணாச்சல மலை எப்படி உருவானதாம்? புராண கதை என்ன சொல்லுகிறது என பார்ப்போம்.

ஒரு நாள் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவன் என்ற ஆணவ சண்டை வந்ததாம். இந்த பிரச்சனையை தீர்க்க நடுவராக இருக்க சிவனிடம் அனுகினார்கள் இருவரும். இருவரையும் புன்னகையுடன் பார்த்த சிவபெருமான், உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் பெரியவர் என கூறினார். பிரம்மாவும் விஷ்ணுவும் அதற்கு தயாரானார்கள்.

இருவரையும் பார்த்து சிவபெருமான் கூறினார் நான் விஸ்வரூபமாக நிற்கிறேன்,. யார் எனது அடி அல்லது முடியை முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என கொள்வோம் என்றார். அதன்படி சிவ பெருமான் அக்னி ரூபமாக பிரம்மாண்டமாக உயர்ந்து நின்றார்.


பிரம்மன் அன்னப்பறவைகாக உருமாறி சிவனின் முடியான தலைப்பகுதியை காண பறந்தார். விஷ்ணு வராகமாக (பன்றியாக) மாற்றம் அடைந்து கால்பகுதியான அடியை காண ஓடினார். சென்றார்கள் சென்றார்கள் சென்று கொண்டே இருந்தார்கள். விஷ்ணுவுக்கு அடியும் வரவில்லை பிரம்மனுக்கு முடியும் வரவில்லை. பிரம்மா தனது இயலாமையை ஒப்புக்கொண்டு தான் பெரியவனில்லை என தோல்வியை தழுவ மனமில்லை. அதனால் முடியை கண்டதாக பொய் சொல்ல முடிவெடுத்தார். சிவனின் தலையிலிருந்து தாழம்பூ ஒன்று கீழ் நோக்கி விழுந்த கொண்டிருந்தது அதை பொய் சாட்சியாக அழைத்துக்கொண்டார். விஷ்ணு தான் அடியை காணவில்லை என ஒப்புக்கொண்டு தன்னைவிடவும், பிரம்மனைவிடவும் சிவனே பெரியவர் என உணர்ந்தார்.

சிவன் யார் உயர்ந்தவர் என நடுவராக சொல்லாமல் தானே அனைத்திலும் உயர்ந்தவர் என சொல்லாமல் சொல்லிவிட்டார். விஷ்ணு தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மன் பொய் சொன்னதை சிவன் கண்டறிந்து பிரம்மனுக்கு கோவில்களே பூமியில் இருக்கக்கூடாது என சாபமிட்டார். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என பூவையும் சபித்தார்.

பிறகு அக்னி சொரூபமாக விஸ்வரூபம் எடுத்த சிவபெருமான் அப்படியே குளிர்ந்து மலையாக உருமாறினார். அத்தலமே அருணாச்சலம். இந்த புராண நிகழ்வுகளை உணர்த்தும் வகையில் அனைத்து சிவன் கோவிலின் கருவறைக்கு பின்புறமும் லிங்கோத்பவர் என்ற விக்ரஹம் இருக்கும்.

விக்ரஹத்தின் ஓரத்தில் கவனியுங்கள் அன்னப்பறவையும் பன்றி ரூபமும் தெரியும்.

பக்தி நிலையில் இக்கதைகளை நாம் ஏற்றுக்கொண்டாலும், மூளை இக்கதையை ஏற்றுக்கொள்ளாது.

மூளை கேள்விகளை கேட்க துவங்கும். உங்கள் மூளை கேட்கவில்லை என்றால் அதை நான் கேட்கவைக்கிறேன்..

1 ) விஷ்ணுவும் பிரம்மனும் கடவுள்களாக இருந்தும் போட்டி பொறாமை ஏற்படுமா?
2) சிவன் அக்னியாக மாறி விஸ்வரூபம் எடுத்தபிறகு அந்த தாழம்பூ கருகாமல் இருக்குமா?
3) ஏன் சிவன் பெரியவர் என தன்னை நிரூபணம் செய்ய வேண்டும்?
4) அடிமுடியை காண பிரம்மா அன்னமாகவும், விஷ்ணு பன்றியாகவும் ஏன் மாறினார்கள்? அவர்களாகவே சென்று பார்க்க முடியாதா? மிருகமாக மாற்றமடைய வேண்டுமா?

இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். ...

அப்படியானால் இக்கதை பொய்யா? நம் மனதை மயக்க சொன்ன கதையா?
என்றால் இல்லை என்பதே எனது பதில்.


லிங்கோத்பவராக அருணாச்சலத்தில் மட்டுமல்ல தினம் தினம் நம்மில் அருணாச்சல நிலை ஏற்படுகிறது என்பதே உண்மை.


மேற்கண்ட புராண கதை நம்மில் நடக்கு அறிவியல் மாற்றத்தை பற்றிய ரகசிய குறிப்பாகும். இந்த அருணாச்சல புராணத்தை விளக்க வேண்டுமானால் உங்களில் நடக்கும் சில ரகசியங்களை நான் சொல்லியாக வேண்டும்.

அதை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்....

தொடரும்.

29 கருத்துக்கள்:

புன்னகை said...

vanakkam

புன்னகை said...

ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரின் மொழியிலுள்ள ஆளுமை உங்களூடைய எழுத்தில் தெரிகிறது
( கிணற்றுத் தவளை கிணற்றின் அகலத்தை வைத்துத்தான் உலகை அளக்க முறபடும் ,பிழைதான் மன்னித்துவிடுங்கள் ),

தெளிவான வார்த்தைகளின் கோர்ப்பு கவருகிறது, இதைப் படிக்கும் போது அருணாச்சலத்தையும் உங்களையும் பார்க்கும் ஆவல் மேலிடுகிறது.
(இருதடவை முதலாவது பின்னூட்டம் இட்டது என் பாக்கியம்)

நிகழ்காலத்தில்... said...

\\புராண கதை நம்மில் நடக்கு அறிவியல் மாற்றத்தை பற்றிய ரகசிய குறிப்பாகும். இந்த அருணாச்சல புராணத்தை விளக்க வேண்டுமானால் உங்களில் நடக்கும் சில ரகசியங்களை நான் சொல்லியாக வேண்டும்.\\

சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.,

அழுத்தமாக விவரிக்கவும் (வேண்டுகோள்):))

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//1 ) விஷ்ணுவும் பிரம்மனும் கடவுள்களாக இருந்தும் போட்டி பொறாமை ஏற்படுமா?
2) சிவன் அக்னியாக மாறி விஸ்வரூபம் எடுத்தபிறகு அந்த தாழம்பூ கருகாமல் இருக்குமா?
3) ஏன் சிவன் பெரியவர் என தன்னை நிரூபணம் செய்ய வேண்டும்?
4) அடிமுடியை காண பிரம்மா அன்னமாகவும், விஷ்ணு பன்றியாகவும் ஏன் மாறினார்கள்? அவர்களாகவே சென்று பார்க்க முடியாதா? மிருகமாக மாற்றமடைய வேண்டுமா?//

நான் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் நீங்களே கேட்டுக் கொண்டு, என்னை வாளாதிருக்க சதி செய்ததற்கு கடுமையான கண்டனங்கள்.

ஷண்முகப்ரியன் said...

சலனத்திற்கு எதிர் நிலை அசலம். அதாவது நிலையாக இருப்பது என பொருள்படும். தனது இயல்பு நிலையான சலனப்படாமல் அசலமாக இருப்பதால் அருணாச்சலம் என அழைக்கப்படுகிறது.//

அருணாசலத்துக்குப் புதிய விளக்கம் ஸ்வாமிஜி.நன்றி.
குறியீடுகளால் ஆன்மீகத்தை விளக்கும் அந்தப் பழைய முறைகள் இன்னும் வேண்டுமா ஸ்வாமிஜி?

பழைய குறியீடுகள்.அதற்குப் புதிய முறை விஞ்ஞான விளக்கங்கள்.இந்த விளையாட்டை நமது ஆன்மீக அன்பர்கள் இந்தத் தலை முறையில் தாண்டி விட்டார்கள் என நினைக்கிறேன்.அதற்கான கால அவகாசமும் இளைஞர்களுக்கு இல்லை.

சொல்ல வருவதைச் சுருக்கமாகத், தெளிவாக, விரைவாகச் சொன்னாலே நாம் புரிந்து கொள்வோம்.

புராண,காவிய காலங்களைத் தாண்டிச் சிறுகதை,ஹைக்கூ காலத்தில் இருப்பதால் ஆன்மீகமும் சூத்திரங்களாகவே வந்து விடலாம்.

மனிதர்களின் புரியும் தன்மையின் மீது இனித் தாராளமாக நம்பிக்கை வைக்கலாம் என்ற தருணம் வந்தே வந்து விட்டது ஸ்வாமிஜி.

Raj said...

மிக ஆவலாய் காத்திருக்கிறேன்...பதில்களுக்கு!

Rajagopal.S.M said...

//உங்களில் நடக்கும் சில ரகசியங்களை நான் சொல்லியாக வேண்டும்.\\
ரகசியம் என்னனு சீக்கிரம் சொல்லுங்க

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புன்னகை,

விட்டால் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுப்பீர்கள் போல...

எனக்கு தெரிந்ததை(தெரிவிக்கப்பட்டதை) பிறருடன் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவே...

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் கோரிக்கைக்கு நன்றி.
அடுத்த பகுதிகள் உங்களுக்கு பிடித்தாத இருக்கும்:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//நான் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் நீங்களே கேட்டுக் கொண்டு, என்னை வாளாதிருக்க சதி செய்ததற்கு கடுமையான கண்டனங்கள்.//

அனைவரையும் மனதில் கொண்டுதானே இத்தொடர் எழுதுகிறேன் :)

பதில் மாட்டுமே கேட்க முடியும். கேள்விக்கு இடமே இருக்காது :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

//குறியீடுகளால் ஆன்மீகத்தை விளக்கும் அந்தப் பழைய முறைகள் இன்னும் வேண்டுமா ஸ்வாமிஜி?
//

பழைய முறை அல்ல என்றும் தேவையான முறை. மனிதர்கள் தங்களின் அறியாமையால் இன்றும் புராணத்தின் குறியீடுகளை புரிந்துகொண்டதாக தெரியவில்லை.

கிருஷ்ணர் பெண்களுடன் சல்லாபம் செய்தார் என்றே புரிந்துகொள்ளும் இவர்களிடம் என்ன சொல்லுவது?

அதில் இருக்கும் நுனுக்கமான உள்குறியீட்டை விளக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆகிறேன்.

உங்களை போன்று கற்றவர்களுக்கு அது தேவையில்லை. நீங்கள் அப்பத்திகளை கடந்து செல்லுங்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜ்,

திரு ராஜகோபால்,

உங்கள் வருகைக்கு நன்றி.

துளசி கோபால் said...

இப்போ அந்த மலையின் உச்சி கூகுள் மூலம் தெரியுதே.

முடி தெரியாத அளவு விஸ்வரூபம் எடுத்த சிவன் அதே அளவிடமுடியாத உசரம் உள்ள மலையா ஆகி இருக்கலாமுல்லே?

(நம்ம மூளையும் வேலை செய்யுது.அதான் கேள்வி கேட்டுட்டொம்லெ)

ஸ்வாமி ஓம்கார் said...

திருமதி துளசிகோபால்,

உங்கள் வருகைக்கு நன்றி.

உங்கள் கேள்விக்கான விஷயத்தை இங்கேயே சொல்ல முயற்சிக்கிறேன். :)

விஷ்ணு பிரம்மனும் முயற்சி செய்தே பார்க்க முடியாததை மனிதனால் பார்க்கமுடியுமா? அதனால் மனிதர்களுக்கக தன் முடி(வை) காண்பித்தார் இறைவன். :)

Raghav said...

ஸ்வாமிக்கு என் நமஸ்காரம் முதலில்.

அருமையாக உள்ளது முதல் இரு பகுதிகளும். ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக (கவனிக்கவும் வீரவைஷ்ணவன் அல்ல :) ) இத்தொடரை படிக்க ஆரம்பிக்கிறேன்.. கேள்விகள் கேட்கலாம் என்றும் நினைக்கிறேன் ஸ்வாமி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகப் பட்டால் தலையில் குட்டவும் :)

Raghav said...

// திருவண்ணாமலையில் மட்டுமே இயற்கையான இடத்தில் சக்தியை உணர்ந்து, சக்தியை அனைவரும் உணர கோவில்கள் நிர்மாணம் செய்யப்பட்டது.//

திருமலை திருப்பதி?

Raghav said...

//பொய் சாட்சி சொன்ன தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என பூவையும் சபித்தார்.//

பூஜைக்கு பயன்படுத்தாவிட்டாலும் காஞ்சி வரதன் தன் திருக்கைகளில் தாழம்பூவுடன் காட்சி தருகிறாரே அதன் தார்ப்பர்யம் என்ன ஸ்வாமி ? சிவன் கோவில்களில் அலங்காரத்துக்கு பயன்படுத்துவது உண்டா ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராகவ்,

/ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக (கவனிக்கவும் வீரவைஷ்ணவன் அல்ல :) ) இத்தொடரை படிக்க ஆரம்பிக்கிறேன்.. கேள்விகள் கேட்கலாம் என்றும் நினைக்கிறேன் ஸ்வாமி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகப் பட்டால் தலையில் குட்டவும் :)//

வைணவர் சைவர் என்பது நம் கற்பிதம். அப்படி ஒன்றும் கிடையாது.

ஸ்ரீ இருந்தால் அங்கே அனைத்தும் இருக்குமாம். கேள்விப்பட்டிருக்கிறேன்.

தலையில் குட்டலாம் குட்டினால் நீங்கள் கணபதியமா என கேட்ப்பார்கள்.

சிலருக்கு பிரித்து பார்ப்பதில் அலாதி ஆர்வம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராகவ்,

/திருமலை திருப்பதி?//

திருமலை திருப்பதி இயற்கையான ஸ்தலமல்ல. திருப்பதி ராமானுஜர் காலத்திற்கு பிறகே திருப்பதியானது.

மேலும் திருவண்ணாமலையை இயற்கை என கூறகாரணம் அங்கே மலைமேல் கோவில்கள் மத சின்னம் கிடையாது. கார்த்திகை தீபம் மத அடையாளம் அல்ல.

திருவண்ணாமலை போன்ற சக்தி வாய்ந்த மற்றொரு இயற்கை இடம் என்றால் அகோபிலத்தை சொல்லலாம்.

நீங்கள் விடாப்பிடியாக நாராயணன் வசிக்கும் இடத்தை சுட்டி கேட்ப்பதால் சொல்லுகிறேன்.

மற்றபடி அனைத்தும் ஒன்றே.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராகவ்,

சக்தி வழிபாட்டில் சில விஷேஷ நாட்களில் தாழம்பு பயன்படுத்துவதுண்டு.

சிவ வழிபாட்டில் பயன்படுத்தமாட்டார்கள். சில சிவன் கோவில்களில் இதிலும் விதிவிலக்கு உண்டு.

அதன் தாத்பரியத்தை வரும் பகுதியில் தெரிந்து கொள்வீர்கள்.

கோவி.கண்ணன் said...

//சிவ வழிபாட்டில் பயன்படுத்தமாட்டார்கள். சில சிவன் கோவில்களில் இதிலும் விதிவிலக்கு உண்டு.//

(பொய்யான!) ஒரு கதையைச் சொல்லி ஒரு பூ வையே விலக்கி வைத்துவிட்டார்களா ?

தாழம்பூ விலக்கப்பட்டதற்கு வேறெதும் காரணங்கள் உள்ளனவா ?

Raghav said...

//வைணவர் சைவர் என்பது நம் கற்பிதம். அப்படி ஒன்றும் கிடையாது.
//

ஸ்வாமி, அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது. அடியேன், சிறுவயதில் எனது ஊரில், என் தாத்தா பெருமாள் கோவில் அர்ச்சகர், நான் சில நாட்கள் சிவன் கோவிலில் அபிஷேகம் முதலான பூஜை கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ளேன்..அப்போதெல்லாம் தெய்வம் என்ற அளவிலே மட்டும் தெரியும்.. இப்போதோ குழப்பம் தான் அதிகமாக உள்ளது :)

Raghav said...

//திருமலை திருப்பதி இயற்கையான ஸ்தலமல்ல. திருப்பதி ராமானுஜர் காலத்திற்கு பிறகே திருப்பதியானது./

என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்.. ஆதிசேஷனே மலையாக இருப்பதால் அல்லவா ஸ்வாமி இராமானுசர் காலத்திற்கும் முன்பே ஆழ்வார்கள் திருமலை மீது ஏறாமல் கீழிருந்து பாடினர்.

Raghav said...

//நீங்கள் விடாப்பிடியாக நாராயணன் வசிக்கும் இடத்தை சுட்டி கேட்ப்பதால் சொல்லுகிறேன். //

குரங்குக் குட்டி சம்ப்ரதயம் ஆயிற்றே என்னுடையது.. நாராயணனை எளிதில் விடுவேனா :)

Raghav said...

//மற்றபடி அனைத்தும் ஒன்றே//

பெரியவர் நீங்கள் சொல்லலாம்.. அடியேன் சொன்னால் என் ஆசார்ய கோபத்துக்கு ஆளாக நேரிடும் :)

நிகழ்காலத்தில்... said...

\\அதில் இருக்கும் நுனுக்கமான உள்குறியீட்டை விளக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆகிறேன்.\\

நிச்சயம் நிர்பந்தம் அல்ல,

காலத்தின் கட்டாயம், இறை விருப்பம்,

நீங்கள் கருவி,

மழைபோல் வாருங்கள், எந்த நிர்பந்தமும் இன்றி

மனிதர் தன் தேவைபோல் பயன்படுத்திக் கொள்ளட்டும்

Siva Sottallu said...

"அருணன் + அசலம்" நன்கு ரசித்தேன் ஸ்வாமி.

//பொய் சாட்சி சொன்ன தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என பூவையும் சபித்தார்.//

தாழம்பூ என்ன தவறு செய்தது ஸ்வாமி. சிவனே என்று கீழே விழுந்து கொன்று என்னை பிரம்மன் சாட்சியாக பயன்படுத்தினார். அது தாழம்பூவின் குற்றம் அல்லவோ. மேலும் இறைவனுக்கு கூட சாட்சி தேவையா.

அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிரிகிறேன்.

Anonymous said...

இந்த கதைய என்னால் அப்படியே ஏற்று கொள்ளமுடியவில்லை. யார் பெரியவர் என்ற சண்டை படிததுமை "என்னடா இது" என்று எனக்கு ஆகி விட்டது. உள்ள்கருதுக்காக காத்திருக்கிறேன்!

omvijay said...

vanakkam Guruji,
your allround talent makes me so proud to be a Tamilan

keep feeding